- Joined
- Aug 24, 2025
- Messages
- 664
- Reaction score
- 462
- Points
- 63
- Age
- 44
.
பந்தயம் - 15 (நிறைவு பகுதி)
அன்று பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் ஞாயிற்றுக்கிழமை. வாக்கு எண்ணிக்கையைப் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. இடைவேளையின் போது, தேர்தல் முடிவுகளின் விளைவுகள் மற்றும் 'அரசியல் களம் முக்கியஸ்தர்கள் சந்திப்பு' போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன என்று மாற்றி மாற்றி அறிவித்துக் கொண்டே இருந்தனர்.
காலை 8 மணிக்குத் தொடங்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கையை எதிர்பார்த்து, பெரும்பாலான குடும்பங்கள் தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்து 'உள்ளிருப்புப் போராட்டமே' நடத்திக் கொண்டிருந்தன.
சொன்னபடி 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சரவணன் குடும்பத்தில், அவனும் சங்கரனும் டிவியின் முன்பு ஆவலோடு அமர்ந்துவிட்டனர். லட்சுமியும் பூமிகாவும் சமையல் கட்டில் சமைத்துக் கொண்டே, அவ்வப்போது டிவியையும் கவனித்து வந்தனர்.
ஆரம்பத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் பின்னடைவைச் சந்திக்க, யாரும் எதிர்பாராத வண்ணம் மூன்றாவது கட்சி முன்னிலை பெற்று முன்னேறிச் சென்றுகொண்டிருந்தது.
பூமிகா சமையலறையில் இருந்தபடியே, "நம்மள மட்டும்தான் அவங்க நோகடிச்சிருக்காங்கன்னு நினைச்சேன். நாடு முழுக்க எல்லாத்தையும் இப்படித்தான் பண்ணியிருப்பாங்க போல இருக்குங்க!" என்று சரவணனிடம் ஆதங்கத்தோடு கூறினாள்.
சரவணன் புன்னகையுடன், "ஜனங்க போன முறை வேற வழி இல்லாம ஓட்டு போட்டுட்டாங்க. இந்த முறை என்ன ஆகுதுன்னு ஒரு கை பார்த்துடலாம்னு இறங்கி அடிச்சுட்டாங்க போல இருக்கு!" என்றான்.
சங்கரனோ தன் நம்பிக்கையை விடாமல், "இன்னும் முதல் சுற்றே முடியலப்பா... கடைசி நேரத்துல நம்ம கட்சி கூடி வந்துடும், பார்த்துக்கிட்டே இருங்க" என்றார்.
லட்சுமி சமையலறை வாசலில் வந்து நின்றுகொண்டு, "இன்னும் அவர் அந்தக் கட்சியைப் பெருசா நம்புறார் பார்த்தியா? அதான் மனசுக்கு வேதனையா இருக்கு" என்று தன் மகன் சரவணனிடம் சலித்துக் கொண்டார்.
சரவணன் தந்தையிடம், "அப்பா, நம்ம காலகாலமா இந்தக் கட்சியிலயே இருந்துட்டோம். நீங்க உங்க வாழ்நாள் முழுக்க இதுக்காக உழைச்சிருக்கீங்க. அந்த ஒரே காரணத்துக்காகத்தான், மனசே இல்லாட்டியும் நானும் இதுக்கே ஓட்டுப் போட்டுட்டு வந்தேன். நான் ஓட்டுப் போட்ட கட்சி தோத்தாலும் பரவாயில்லைன்னு இப்போ உக்காந்திருக்கேன். ஏன்னா, இவங்க தங்களோட அரசியல் சித்துவிளையாட்ட நம்மகிட்டயே காட்டிட்டாங்களேப்பா!" என்றான்.
சங்கரன், "நிர்மல், சந்திரன் மாதிரி ஆளுங்க மட்டுமே கட்சி கிடையாது சரவணா... கட்சி ரொம்பப் பெருசு. அதுல நம்மள மாதிரி நல்ல ஆட்களும் இருக்காங்க" என்றார்.
"நம்மள மாதிரி ஆட்கள் இருக்கப்போய்தான் இந்த அளவு ஓட்டாவது விழுந்திருக்குப்பா. கடைசி வரைக்கும் துரோகம் பண்ணக் கூடாதுன்னு நினைக்கிற நல்லவங்க மட்டும்தான் இதுக்கு ஓட்டுப் போட்டிருக்காங்க. மீதி எல்லாரும் நிர்மலும் சந்திரனுமாதான் சுத்திக்கிட்டு இருக்காங்க. அதனாலதான் கட்சி இன்னைக்கு இப்படி ஒரு பின்னடைவைச் சந்திக்குது" என்றான் சரவணன்.
லட்சுமி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார், "என் பேரன் சதீஷ், விபரம் தெரியாத வயசுல 'அரசியல்னா என்ன பாட்டி?'ன்னு கேட்டான். அதுக்கு நல்லா விளங்குற மாதிரி, இவங்க நம்ம வீட்டிலேயே அரசியல் பண்ணிக் காட்டிட்டாங்க இல்ல?"
சங்கரன் சட்டென, "எதுலதான் அரசியல் இல்லை லட்சுமி? நீங்களுமே சந்திரனும் நிர்மலும் ஒரே கட்சிக்குள்ள இருந்தாலும், நிர்மலுக்கு ஆதரவாப் பேசுனீங்களே... அதுக்குக் பேர் என்ன? நம்ம முத்து அண்ணன்-தம்பி பங்காளி சொத்தைத் தம்பிக்கு வித்தா தரைமட்ட விலைக்குக் கேட்பான்னு, இன்னொருத்தனை வெளியிலிருந்து கூட்டிவந்து விலை பேசி விற்க்கல? அதுக்குக் பேர் என்னப்பா? நமக்குச் சாதகமாச் செயல்பட்ட காலமெல்லாம் அரசியல் வேணும், ஒரு நாள் அவங்களுக்குச் சாதகமா நடந்துக்கிட்ட உடனே அரசியல் வேண்டாம்னு சொல்றது எந்த வகையில நியாயம்டா?" என்று நியாயம் கேட்டார்.
சரவணன் நிதானமாக, "சரிப்பா, நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான். ஆனாலும் நம்மள வீதியில நிப்பாட்டி கேவலப்படுத்தின இவங்களுக்கு, நாமும் ஒரு பாடம் கத்துக் கொடுக்கணும்னு நினைக்கிறது தப்பாப்பா?" என்றான்.
"அவங்க பணமும் படைபலமும் இருக்கிறவங்கடா. அவங்களோட நம்மள மாதிரி ஆளுங்க மோதணும்னு நினைக்கிறது தப்பு. 'துஷ்டனைக் கண்டால் தூர விலகு'ன்னு சொல்வாங்க இல்ல, அதுபோல விலகிப் போயிடணும்னுதான் நான் சொல்றேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து கொண்டார் சங்கரன்.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகின. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மூன்றாம் இடத்தில் இருந்த புதிய கட்சி ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றி பெற்றது!
புதிய கட்சியின் தலைவர் முதல்வராகப் பொறுப்பேற்றார். அமைச்சர்களும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். அடுத்தடுத்துப் புதிய திட்டங்களும், அதிரடி மாற்றங்களும் அரசியல் மேடையில் அரங்கேறின. அதன் பின்னர், பழைய ஆட்சியாளர்களும், அவர்களின் அடிவருடிகளும் இருந்த இடம் தெரியாமல் அரசியலை விட்டே விலகினர்.
இரண்டு ஆண்டுகள் உருண்டோடின...
நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. திடீரென ஒரு நாள், மயிலூர், மானூர், கடம்பூர், இடும்பூர் போன்ற தொகுதிகளை உள்ளடக்கிய 'புவனம்' நாடாளுமன்றத் தொகுதிக்கு, புதிதாக ஆட்சி அமைத்த கட்சியின் சார்பில் வேட்பாளராகச் சங்கரனின் மகன் சரவணன் அறிவிக்கப்பட்டான்!
ஒரே வீட்டுக்குள் இருந்து கொண்டு, தன் தாய்க்கும் தந்தைக்கும் கூடத் தெரியாமல் விருப்ப மனுவை அவன் எப்படி அனுப்பினான்? புதிய கட்சித் தலைமை அவனை எவ்வாறு வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தது? என்பது எதுவும் புரியாமல் சங்கரன் திகைத்துப் போய் நின்றார். ஆனால், அவரது மனது பெருமையால் நிறைந்து வழிந்தது.
தேர்தலும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. புவனம் தொகுதியில் சரவணன் அமோக வெற்றி பெற்று, புதிய கட்சியின் சார்பில் மக்களின் பிரதிநிதியாகத் டெல்லியை நோக்கித் தன் புதிய பயணத்தைத் தொடங்கினான்!
-முற்றும்-