நீயின்றி நிழலும் துணையில்லை 23 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

ஆனந்த ஜோதி நாவல்கள்

Where every page opens a new world
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நீயின்றி நிழலும் துணையில்லை 23

New updates

LATEST

Priyadharshini S

Active member
Joined
Aug 21, 2026
Messages
50
Reaction score
103
Points
33
அத்தியாயம் 23

(வசனங்கள் யாவும் தமிழில்.)

கூண்டிற்குள் தேஜாஸ் குட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான். அவனுக்கு அரணாக சரவணனும், குட்டனும் நின்றிருந்தனர்.

நீதிமன்ற அறை முழுவதும் ஒருவிதமான அமைதி நிலவியது. வழக்கறிஞர்களின் மெல்லிய பேச்சொலிகளும், காகிதங்கள் புரட்டப்படும் சத்தமும் மட்டுமே அந்த அமைதியைக் கலைத்துக் கொண்டிருந்தன.

குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்தவனின் முகத்தில் பதற்றம் துளியும் இல்லை. தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பொய்யென நிரூபித்துவிட முடியும் என்ற இறுமாப்பு அவனது பார்வையில் தென்பட்டது.

நீதிபதி அமரும் இருக்கைக்கு அருகிலிருந்த கதவு திறக்கப்படவும், அங்கிருந்தவர்கள் அனைவரும் சட்டென்று எழுந்து நின்றனர்.

அடுத்த நொடி நீதிபதி உள்ளே நுழைந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார்.

"உட்காரலாம்."

அவரது உத்தரவைத் தொடர்ந்து அனைவரும் அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர்.

நீதிமன்ற ஊழியர் வழக்கின் விவரங்களை வாசிக்கத் தொடங்கினார்.

"மாண்புமிகு நீதிபதி அவர்களே, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் வழக்கு, குற்றம் சாட்டப்பட்டுள்ள திரு.தேஜாஸ் குட்டி என்பவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள கொலைகள் தொடர்பான வழக்காகும்."

நீதிபதி சமர்ப்பிக்கப்பட்டிருந்த வழக்குக் கோப்பைப் புரட்டிப் பார்த்துவிட்டு, கண்ணாடியைச் சற்றே உயர்த்தியபடி அரசு வழக்கறிஞர் விதுஷிகாவை நோக்கினார்.

"குற்றவாளிக்கு ஆதரவா வக்கீல் இல்லையா?"

"எதிர்த்து வாதாடி தன்பக்கம் நியாயம் இருக்குன்னு சொல்ற அளவுக்கு குற்றவாளி பக்கம் ஸ்ட்ராங்கான காரணம் எதுவுமில்லை மை லார்ட்" என்றாள் விதுஷிகா.

"உங்களுக்கு லாயர் யாரும் இல்லைன்னா பரவாயில்லை. வேண்டும் அப்படின்னா கோர்ட் ரெடி செய்யும்" என்றார் நீதிபதி.

தேஜாஸ் வேண்டாமென தலையசைத்திட்டான்.

"ஃபைன்... வழக்கின் விசாரணையைத் தொடங்கலாம். அரசுத் தரப்பு வழக்கறிஞர், உங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கலாம்."

அடுத்த கணம், அரசுத் தரப்பு வழக்கறிஞர் விதுஷிகா தனது இருக்கையிலிருந்து எழுந்தாள்.

கையிலிருந்த கோப்பைத் திறந்து, அதிலிருந்த ஆவணங்களை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டவள், நீதிபதியை நோக்கி ஓரடி முன்னே நகர்ந்தாள்.

"குட்மார்னிங் மை லார்ட்!" என தொடங்கியவளின் குரலில் உறுதியும், வார்த்தைகளில் அழுத்தமும் நிறைந்திருந்தன.

"இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் வெறும் அனுமானங்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டவை அல்ல. சம்பவம் நடைபெற்ற நேரம், அங்கிருந்த சூழ்நிலைகள், கிடைத்துள்ள ஆதாரங்கள் என அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருக்கின்றன. இந்த வழக்கின் உண்மையான பின்னணியை நீதிமன்றத்தின் முன் நிரூபிக்கத் தேவையான சாட்சியங்களும் ஆவணங்களும் எங்களிடம் உள்ளன."

குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த தேஜாஸ் குட்டியின் முகம் இறுகியது.

விதுஷிகா அடுத்த ஆவணத்தை எடுத்தபடி தொடர்ந்தாள்.

"இந்த வழக்கை மேலோட்டமாக அணுகாமல், ஒவ்வொரு ஆதாரத்தையும் விரிவாகப் பரிசீலித்து விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென அரசுத் தரப்பு சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்" என்றவள், "இந்த வழக்கின் துவக்கம் முதல் முடிவு வரையிலான நிகழ்வுகள், ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றவை, குற்றவாளியை கண்டறிந்ததென அனைத்தையும் இவ்வழக்கை கையாண்ட கூடலூர் துணை கண்காணிப்பாளர் விருபாட்சன் அவர்கள் விவரிப்பார். அவரை அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றாள்.

நீதிபதி அனுமதி வழங்கிட, விருபாட்சனின் பெயர் அழைக்கப்பட்டது.

கம்பீரமானத் தோற்றத்தில் மிடுக்காய் வந்து நின்ற விருபாட்சன், வணக்கம் வைத்து தொடர்ந்தான்.

"கூடலூர் ஸ்டேஷனில் பத்து மாதங்களுக்கு முன்னாடி இன்ஸ்பெக்டரா புரமோட் ஆன எஸ்ஐ தனுஜ் காட்டுக்குள்ள தூக்கிட்டு தற்கொலை செய்துகிட்டார்... ஒரு மாதத்துக்கு பிறகு, அந்த வழக்கை கையிலெடுத்த, தனுஜுக்கு அப்புறம் அவரோட இடத்துக்கு வந்த ஓமன் காணாமல் போயிட்டார். இங்க டிரான்ஸ்பர் வேணும்னு நான் கேட்டப்போ, எனக்கு கொடுக்கப்பட்ட வழக்கு ஓமனுக்கு என்னானதுன்னு கண்டுபிடிக்கனும். ஆனால் நானே எதிர்பாராம என் கைக்கு வந்த ஒரு வழக்கு, ஓமன் வழக்குக்கு பதில் கொடுக்கும்னு நான் எதிர்பார்க்கல" என அதுலைப் பார்த்தான்.

அதுல் அன்று கிடைத்த மண்டையோட்டை கண்ணாடி பெட்டியில் கொண்டுவந்து கொடுத்தான்.

ஒரு நொடி அவ்விடம் பரபரப்பிற்குள்ளானது.

"ஆர்டர்... கீப் சைலன்ஸ்." நீதிபதி சொல்லிடவே மீண்டும் அமைதி நிலை உண்டானது.

"இதென்ன தலையோடு?" நீதிபதி கேட்க,

"இந்த வழக்கு ஆரம்பமானது, கிடைச்ச இந்த மண்டையோட்டை வச்சுதான்" என்றான் விருபாட்சன்.

"மண்டையோட்டை காட்டுக்குள்ளிருந்து ரோட்டுக்கு தூக்கிட்டு வந்தது ஒரு நாய். தலையிருக்கு, அப்போ பாடி எங்கன்னு எழுந்த கேள்வியோட தேடலுக்கு பதிலா கிடைச்சது கை எலும்பும், அழுகிய நிலையிலிருந்த இறந்த உடம்பும். உடம்பு அந்த நைட்டே காணாமல் போயிடுச்சு. அந்த இடத்தில் எங்களுக்கு கிடைச்சது, அதாவது பாடியை இழுத்திட்டுப்போன தடத்தில் கிடைச்ச புட் பிரிண்ட் தேஜாஸ் உடையது" என்று விருபாட்சன் நிறுத்திட,

"தேஜாஸ் உங்க டீம்... நீங்க அந்த இடம் முழுக்க தேடியிருக்கீங்க. அப்போ அவரோட புட் பிரிண்ட் அங்க கிடைச்சதுல எப்படி அவரை அக்யூஸ் பண்ணுவீங்க?" எனக் கேட்டார் நீதிபதி.

"பாடியை பார்த்த இடத்தோட தேஜாஸ் வந்தது சரிதான்... ஆனா பாடியைத் தாண்டி காட்டுக்குள்ள அவர் போகல. அதுக்கு முன்னவே பாடி இருந்த நிலை பார்த்து பயந்து ஓடிவந்தார். வாமிட்டா இருக்கு அப்படின்னு சொல்லவே வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டேன். ஆனால் அந்த இடத்தில் தான் அவர் என்னோட சந்தேகத்துக்குள்ள வந்தார்" என்ற விருபாட்சன், "இத்தனை வருஷ போலீஸ் எக்ஸ்பீரியன்ஸில் முன்னாடியிருக்க ஆளோட சின்ன சின்ன அசைவுக்கும் உள்ள அர்த்தத்தை கணிக்க முடியும். தேஜாசோட அதிகப்படியான பயம், என்னை கவனிக்க வச்சது. அவரோட அந்த பயத்துக்குப் பின்னால் ஏதோ காரணமிருக்குன்னு எனக்குள்ள ஒரு இண்டியூஷன்" என்றான்.

"யூகத்தின் அடிப்படை எல்லா நேரத்திலும் சரியா இருந்திடாதே விருபாட்சன்."

"கரெக்ட்தான் லார்ட்" என்ற விருபாட்சன், "குற்றவாளி உடலை இழுத்துக்கிட்டு போனதுக்கான அடையாளம் வரியா தரையில் நல்லாவே தெரிந்தது. அந்த வழி பின்தொடர்ந்து பாட்டனி டீம் கலெக்ட் செய்த புட் பிரிண்ட்சில், அந்த நேரத்துக்கு அந்த இடத்திலே இல்லாத தேஜாஸ் குட்டியின் புட் மார்க் இருந்தது" என அதுலை ஏறிட்டான்.

"காட்டுக்குள்ள கிடைச்ச அத்தனை புட் ஃபிரிண்டும் விக்டர் டீமால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது" எனத் துவங்கிய அதுல், சில புகைப்படங்களை நீதிபதியிடம் அளித்தான்.

"காட்டுப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் இருக்கிறதால், மக்கள் நடமாட்டம் அங்க இருக்கிறதில்லை. அந்த நிலையில், குற்றவாளி மற்றும் போலீஸ் டீம் உடைய புட் பிரிண்ட்டாக இருக்கத்தான் வாய்ப்பிருக்கு. அதனால் அங்க கிடைச்ச எல்லா புட் பிரிண்டும் சாம்பிள் எடுக்கப்பட்டது. குற்றவாளியின் தடமாக இருக்கலாமென நினைத்தது தேஜாஸ் குட்டியின் தடத்தோடு ஒத்துபோனது. அதோட, பெண்ணோட நடமாட்டமே இருக்க வாய்ப்பில்லாத அப்பகுதியில் ஒரு பெண்ணோட தடமும் கிடைச்சது. அது யாரா இருக்கும் ஐடென்டிஃபை பண்ண முடியல" என்ற அதுல், விக்டரை பார்த்தான்.

"கிடைச்ச எலும்பு, மண்டையோடு, பாடி... இருந்த மூணு இடத்தையும் மண்ணோடு தொடர்புப்படுத்தி ஆய்வு செய்தப்போ, மண்டையோடு இருந்த எக்ஸாக்ட் லொக்கேஷன் கண்டுபிடிக்க முடியல. ஆனால் கை எலும்பு சில நாட்களுக்கு முன்னதான் அந்த இடத்திற்கு வந்திருக்கு. அதைச்சுற்றி வளர்ந்திருந்த சின்ன சின்ன புற்களை வைத்தும், அதில் படிந்திருந்த மண்ணை வைத்தும் உறுதி செய்ததற்கான அறிக்கை" என்று சில தாள்களை நீதிபதியின் முன்னிலையில் விக்டர் சமர்ப்பித்தான்.

"மண்டையோட்டை நாய் தூக்கிட்டு வந்து ரோட்ல போட்ட மாதிரி, சில நாட்களுக்கு முன்னவே கையையும் தூக்கிட்டு வந்து போட்டிருக்கலாம்" என்ற விக்டர், "அடுத்து அந்த இறந்த உடல்... அது கிடந்த இடத்திலே தான் மரணம் நிகழ்ந்திருக்கு. பாடிக்குள் இருந்த புழுக்கள், பூச்சிகள் மற்றும் அவற்றிற்க்கிடையே இனப்பெருக்கம் நடத்தப்பட்டதற்கான அடையாளமான கருமுட்டைகளின் வளர்ச்சி, சுற்றியிருந்த மண்ணின் ஈரத்தன்மை, தாவரங்களின் வளர்ச்சி எல்லாம் கணக்கிட்டுப்பார்த்ததில் உறுதியானது" என்றான்.

"உடலை இழுத்துச்சென்ற தடத்தை ஆய்வு செய்தபோது, ஒடிந்த தாவரத்தின் முனையில் கண்டெடுக்கப்பட்ட மனித நியூட்ரான்களை ஆய்வு செய்ததில் கிடைக்கப்பெற்ற டிஎன்ஏ அதுலிடம் கொடுக்கப்பட்டது. அவர் செய்த பரிசோதனையில் தேஜாஸ் குட்டியோடு முழு சதவிகிதம் ஒத்துப்போனது" என்ற விக்டர், "என்னோட வேலை முடிந்தது" என்றான்.

"யூ மே கோ" என்ற நீதிபதி விருபாட்சினைப் பார்த்திட, மேற்கொண்டு அவன் தொடர்ந்தான்.

"உங்க முன்னால் வைக்கப்பட்டிருக்க மண்டையோடு, உண்மையான மண்டையோடே இல்லை லார்ட்" என்ற விருபாட்சன், "நான்கு பேருடைய எலும்புகளை வைத்து முப்பரிமாண அமைப்பில் உருவாக்கப்பட்ட போலி மண்டையோடு" என்றான்.

"வாட்?" நீதிபதி முதற்கொண்டு அங்கிருந்த அனைவரிடமும் அதிர்ச்சி. தேஜாஸ் உட்பட... அவனுக்குமே அதிர்ச்சி. அந்த மண்டையோட்டால் தானே அவன் மாட்டியிருப்பது. தற்போது அதுவே போலியென்றால் அவனின் மனநிலை என்னவாக இருக்கும்?

"ரொம்ப ஷாக் ஆகாதீங்க தேஜாஸ் குட்டி" என்ற விருபாட்சன், நீதிபதியைப் பார்த்து, "இவரை கண்டுபிடிக்க இறந்து போன ஓமனனின் ரத்த சொந்தமுள்ள ஒருவரால் இந்த மண்டையோடு உருவாக்கப்பட்டு, காட்டிற்குள் போடப்பட்டிருக்கிறது" என்றான்.

"கேன் யூ எக்ஸ்ப்ளைன்?"

"தனுஜ் வழக்கை விசாரிக்க வந்துதான் ஓமன் காணாமல் போனார். தனுஜ் இறந்தது காட்டில். ஓமனும் காட்டில் தடயம் கண்டுபிடிக்கப் போனப்போ தான் காணாமல் போனார். அதனால் அங்கு மீண்டும் தேடுதல் துவங்கினால் தான் உண்மை வெளிவரும் நினைச்சு, இப்படியொரு செயலை செய்திருக்காங்க. மண்டையோடு அங்கிருந்து கிடைக்குது அப்படின்னா, கவனம் அதிகமாகும், அங்கு என்ன உள்ளது, மண்டையோடு மட்டும் எப்படிங்கிற ஆய்வு தீவிரமாகும் நினைத்து சரியா மூவ் பண்ணியிருக்காங்க" என்றான் விருபாட்சன்.

"அவங்க யாரு?"

"மிஸ்.மரியா" என்ற விருபாட்சன், "ஒரு பெண்ணோட புட் பிரிண்ட் கிடைச்சது சொன்னேனே... அது அவங்களோடதுதான். மண்டையோட்டில் ஸ்டேஷனில் பயன்படுத்தக்கூடிய டை டேக் லீடா கிடைச்சது. அதுவுமில்லாமல் காட்டில் கிடைத்த மொபைல் கவர். டை டேக் கேஸ் ஃபைல் 32 அப்படிங்கிறது குறிப்பிட்டது. அந்த ஃபைல் என்ன கேஸ் அப்படின்னு சரவணன் மற்றும் குட்டன் தேடினப்போதான் அது தனுஜ் தற்கொலை வழக்குடையது தெரிய வந்தது. அந்த வழக்கு விசாரணை செய்தது ஓமன். ஓமன் காணாமல் போயிருக்கார். கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு மேலாகிடுச்சு. மொபைல் கவர் ஓமனோடதுங்கிறது பிசி சண்முகம் சொல்லி கன்பார்ம் பண்ணோம். இது ஓமனின் புகைப்படம்" என்று புகைப்படத்தை முன் வைத்தான்.

"போட்டோவில் அவர் கையிலிருக்கும் மொபைல் கவர் அண்ட் எவிடென்சில் கிடைச்ச கவர் சேம்" என்ற விருபாட்சன், "காட்டுக்குள்ள போன அவருக்கு அங்கதான் ஏதோ நடந்திருக்குன்னு கன்பார்ம் பண்ணோம். அப்போதான் அந்த மண்டையோடு காட்டுக்குள்ள போன ஓமனுடையதா ஏன் இருக்கக்கூடாது டவுட் வந்துச்சு. ஆனால் ரிசர்ச்சில் மண்டையோடு போலியானது தெரிந்தது. அப்போ அந்த கை எலும்பு? அதோட ஓமனுடைய டிஎன்ஏ மேட்ச் ஆகுதா செக் பண்ண சொன்னேன். அதுக்கு சாம்பிள் தேவைப்பட்டது. ஓமனோட பேமிலியை சண்முகம் தேடிப்போனப்போ தான், மிஸ்.மரியா ஓமனுடைய தங்கைன்னு தெரிய வந்தது. ஓமனோடா மனைவியிடம் நாங்க வந்து போனது இப்போதைக்கு மரியாவுக்கு தெரிய வேண்டாம் கேட்டுக்கிட்டோம். மரியா ஓமனின் தங்கை அப்படிங்கிறது ஸ்டேஷனில் யாருக்கும் தெரியல. மறைக்க வேண்டிய அவசியமென்ன? அதனால் பவானி மேடம் மூலமா மரியாவுடைய டிஎன்ஏ சாம்பிள் எடுத்தோம். கிடைச்ச கை எலும்போட ஹண்டரட் பெர்சென்ட் மேட்ச் ஆனது" என்ற விருபாட்சன், "மரியாவை விசாரணை செய்தால் தெளிவாகும்" என்றான்.

மரியா கூண்டிற்குள் அழைத்து நிறுத்தப்பட... விதுஷிகா விசாரணை செய்தாள்.

"நீங்க ஓமனோட தங்கையா?"

"ஆமா!"

"அவர் வேலை செய்த ஸ்டேஷன்லே சில வாரங்களுக்கு முன்னதான் ஜாயின் பண்ணியிருக்கீங்க... என்ன மோட்டிவ்?" என்றாள்.

"ஓமன் என்னோட அண்ணா. அப்பா அம்மா கிடையாது. எல்லாமே அவங்கதான். நமக்குன்னு இருக்க ஒரு உறவை இழந்து தனியா நின்னிருக்கீங்களா மேடம்?" என்று மரியா கேட்க, விதுஷிகாவின் பார்வை தன்னைப்போல், அங்கு விரைத்து நின்றிருந்த கணவனின் மீது படிந்து மீண்டது.

"நமக்குன்னு இருந்த ஒரு உறவுக்கு என்னாச்சுன்னு தெரியாம வாழுறதெல்லாம் நரகம் மேம்" என்றவள், "நானும் கமிஷ்னர் வரை போய் பார்த்துட்டேன். தேடிட்டு இருக்கோம். தகவல் கிடைச்சா சொல்றோம்... இதைத்தாண்டி அவங்ககிட்ட வேற பதிலில்லை. அண்ணன் பொண்ணு அப்பா எப்போ வருவாங்கன்னு கேட்டு அழும்போது..." என்று நிறுத்திய மரியா, அழுகையை கட்டுப்படுத்தியவளாக, "அவகிட்ட சொல்லவாவது உண்மையான காரணம் தெரிஞ்சுக்கணும் நினைச்சேன். ஏழு மாதம் ஆகிடுச்சு. பதில் இல்லைங்கிறதுக்காக இவங்களை மாதிரி என்னால அப்படியே விட முடியாதே! நானும் போலீசில் ட்ரெய்னிங்கில் தான் அந்த நேரம் இருந்தேன். போஸ்டிங் போடும்போது கூடலூர் வேணும்னு கேட்டு வாங்கினேன். இங்க பிசி'யா வந்தேன். வந்த பிறகு தான் தெரிந்தது, தனுஜ் கேஸ் தான் மூலம்ன்னு. காட்டுக்குள்ள காணாமல் போயிருக்கார். அப்போ அங்கதான் தேடனும். புலி, மோகினி வனம்னு அங்க போகாமலிருக்க நிறைய காரணமிருந்தது. இதையெல்லாம் தாண்டி அங்க தேட வைக்கணும்னா என்ன பண்ணலாம் யோசிச்சேன். நானே ஒரு மண்டையோட்டை தயார் பண்ணேன். அதுல தனுஜ் கேஸ் ஃபைலோட டேக் வச்சு, தனுஜ் தற்கொலை செய்துகிட்ட இடத்தில் போட்டுட்டு வந்துட்டேன். அடுத்தநாள் எங்க ஆளுங்களை எப்படியாவது அந்த இடம் கூட்டிட்டுப்போய் மன்னடையோட்டை பார்க்க வச்சிடனும் பிளான் பண்ணேன். அதுக்கு வேலையே இல்லாம என் வேலையை நாய் ஈசியாக்கிடுச்சு" என்றாள்.

"தட்ஸ் ஆல் யுவரானர்" என்ற விதுஷிகா, "யூ மே ப்ரோசிட் மிஸ்டர்.விருபாட்சன்" என்றாள்.

"மண்டையோடு ஓமனோடது இல்லை, ஆனால் கை எலும்பு அவரோடதுன்னு கன்பார்ம் ஆகியாச்சு. அப்போ அவரோட பாடி? நிச்சயம் காட்டுக்குள்ளதான் இருக்கணும். வனப்பகுதியோட சிசிடிவி புட்டேஜ் செக் பண்ணலாம் தோணுச்சு. அதை எடுக்க முயற்சி செய்தப்போதான், ஃபாரஸ்ட் ஹெட் பாலி மூலமா ரேஞ்சர் மேனன் அண்ட் வாட்ச்மென் காணலன்னு தெரிஞ்சது. வீடியோ செக் பண்ணதில் தேஜாஸ் குட்டியின் நடமாட்டம் புலிகள் பகுதியில் அதிகம் தென்பட்டது. ஆனால் எந்தவொரு இடத்திலும் தேஜாஸ் முகம் காமிராவில் தெளிவா விழவே இல்லை. சில இடங்களில் உண்மையிலே அது தேஜாஸ் தானான்னு எனக்கு டவுட் வந்தது. அதை கன்பார்ம் பண்ணிக்க, அவரோடப் பார்வையில் ஹார்ட் டிஸ்க் படுற மாதிரி வச்சேன். குற்றவாளி அவர்தாங்கிறப்போ, நிச்சயம் தடயத்தை அழிக்க நினைப்பாங்க. அதனால் ஹார்ட் டிஸ்க்கை தேஜாஸ் எடுப்பாங்க... அரெஸ்ட் பண்ணலாம் நினைச்சேன். ஆனால் ஹார்ட் டிஸ்க்கை எடுத்தது மரியா! அவங்க ஏன் எடுத்தாங்கன்னு அந்த நேரத்தில் உண்டான குழப்பம், அதுக்கு அப்புறம் தான் தெளிவானது. அதுக்கான பதில் கொஞ்ச முன்னதான் மரியாவே சொல்லியிருந்தாங்க" என்றான்.

நீதிபதியிடம் பெரு மூச்சு. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள தண்ணீர் எடுத்துப் பருகினார்.

தான் எப்படி எதனால் மாட்டிக்கொண்டோம் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொண்ட தேஜாஸ் மெல்ல மெல்ல தனது சுயத்தை இழந்து கொண்டிருந்தான். தப்பிக்க வழியேயில்லை. அனைத்து பக்கமும் விருபாட்சன் சுவர் எழுப்பியிருந்தான். தகுந்த ஆதாரங்களுடன். கூண்டில் வந்து நின்றபோதிருந்த இறுமாப்பு அவனிடத்தில் மெல்ல தகரத் துவங்கியது.

"வண்டியிலிருந்த பாட்டனிக் ரிப்போர்ட்டை தேஜாஸ் எடுத்ததை நானே பார்த்தேன். நான் கேட்கும்போது அவர் மறுத்திட்டார். நான் கேட்டதை வச்சு எனக்கு அவர் மேல சந்தேகம் வந்திடுச்சுன்னு கண்டுபிடிச்சிடக் கூடாதுன்னு நான் யோசிச்ச நேரம், பவானி மேம் என்னை புரிஞ்சிக்கிட்டு, அந்த சிட்டுவேஷனுக்கு ஏத்தமாதிரி பேசி சமாளிச்சாங்க. ஸ்டேஷனில் தேஜாஸ் அண்ட் மரியாவை தவிர்த்து மற்ற எல்லாருக்கும் குற்றவாளி யாருங்கிறது தெரியும். நான் தெரியப்படுத்தியிருந்தேன்" என்ற விருபாட்சன், "வெறும் கை எலும்பை வைத்து, மரியா டிஎன்ஏ மேட்ச் ஆகுதுன்னு ஓமன் இறந்திட்டார்ன்னு கன்பார்ம் பண்ணிக்கலாம். ஆனால் அவரோட பாடி, காணாமல் போன ரெண்டு பேர் என்ன ஆனாங்க... தெரியணுமே! காணாமப்போன பாடி டைகர் ஏரியா பக்கம் தான் இழுத்துச்செல்பட்டிருந்தது. அப்போ அங்கதான் எல்லா கேள்விகளுக்கும் பதிலிருக்குன்னு தோணுச்சு. அதனால் அங்க போக முடிவு செய்தேன். ஆனால் தேஜாஸ் குட்டிக்கு தெரியக்கூடாது. நைட் டியூட்டி கொடுத்து ஸ்டேஷனில் உட்கார வச்சு, பவானி மேமை காவலுக்கு வச்சிட்டு காட்டுக்குள்ள போனேன். ஒதுக்கப்பட்ட பகுதி, மக்கள் யாரும் வரமாட்டாங்க அப்படிங்கிற காரணம் தேஜாஸ்க்கு தான் செய்த கொலைகளை மறைக்க ரொம்ப உதவியிருக்கு. இதில் பெரிய உதவி, ரேஞ்சர்ஸ் தங்களோட வேலையை சரியா செய்யாதது. ஓமனோட எலும்புக்கூடு, அவர் அப்போ ஓட்டிச்சென்ற வாகனம் அங்கதான் இருந்தது. புலிகளுக்கு ஒரு பழக்கமிருக்கு. எவ்வளவுதான் பசியா இருந்தாலும், தான் வேட்டையாடாம, இறந்து கிடக்கிற உயிரை சீண்டியும் பார்க்காது. அதனால்தான் புலிகள் பகுதியில் மூன்று உடல்களை இவரால் பதுக்க முடிந்தது. காட்டுக்குள்ளிருந்து கொண்டுவரப்பட்ட வாகனம், எவிடென்ஸ் டிபார்ட்மெண்டில் ஒப்படைச்சாச்சு. அந்த வண்டியில் தேஜாஸ் கை ரேகை, இறந்து கிடந்த இருவரில் ஒருவர் ரேஞ்சர் மேனன், மற்றொருவர் செக்யூரிட்டி என்பதற்கான ஆதாரங்கள் மற்றும் ஃபாரஸ்ட் ஹெட் பாலியின் ரிப்போர்ட்ஸ்" என்று அவற்றிற்குரிய அனைத்து அறிவியல் பூர்வமான அறிக்கைகளையும் நீதிபதியின் முன் சமர்ப்பித்தான் விருபாட்சன்.

"அங்க காட்டுக்குள்ள பாரன்சிக் ரிசர்ச் நேரம் தேஜாஸ் போயிடக்கூடாதுன்னு அவரை பொய் சொல்லி வெளியில் கூட்டிப் போயிருந்தேன்" என்ற விருபாட்சன், "மரியா என்கிட்ட இருந்து எடுத்த ஹார்ட் டிஸ்க்கை வச்சு தேஜாஸ் குற்றவாளின்னு தெரிஞ்சிக்கிட்டாங்க. அவன் ஏன் தன்னோட அண்ணனை கொலை செய்யணும் தெரிஞ்சிக்க நினைச்சவங்க, அவன் இடத்தில் பார்த்தால் எதுவும் கிடைக்கும்னு வீட்டுக்கே போய் மாட்டிக்கிட்டாங்க. மரியாவை கொலை செய்யவும் தேஜாஸ் முயற்சி பண்ணார். இதுவும் அவர் மீதான வழக்குகளில் அடங்கும்" என்று ஹார்ட் டிஸ்கையும் முன் வைத்தான்.

"தனுஜ் வழக்கை விசாரிக்க வந்ததால் தான் ஓமனை தேஜாஸ் கொலை செய்திருக்கார் என்பது என்னுடைய யூகம். தனுஜ் கேஸ் என்ன ஏதுன்னு தேஜாஸ் உண்மையை சொன்னால் தெரிஞ்சிக்கலாம். தனுஜ் மனைவி ஒரு மாதத்துக்கு அப்புறம் தான் தற்கொலைக்கு வாய்ப்பில்லை, அவரோட மரணத்தில் சந்தேகம் இருக்குன்னு புகார் கொடுத்திருக்காங்க. ஏன் இந்த தாமதமுன்னு அவங்களை விசாரிச்சோம். வெளிநாட்டில் இருப்பதால் வீடியோ காலில் விசாரணை நடத்தப்பட்டது. கணவர் இறந்த சோகத்தில் வெளிவரவே ஒரு மாதமாகிடுச்சு சொன்னாங்க. அப்புறம் ஏன் அந்த வழக்கைப் பற்றி அதுக்கு பிறகு எதுவும் கேட்கலங்கிற கேள்விக்கு, உன் கணவனோட இறப்பை பற்றி தெரிஞ்சிக்க முயற்சி பண்ணா, உன் பிள்ளையை கொன்னுடுவேன் மிரட்டல் கால் வந்ததாகவும், அந்த கால் தினமும் தொடர்ந்ததாகவும், நான் மிரட்டுவது போலீசுக்கு தெரிந்தாலும் நான் சொன்னதை செய்வேன் அப்படின்னு தொடர் மிரட்டல் விட்டதாகவும், அதற்கு பயந்தே அவங்க புதிதா திருமணம் செய்துகொண்ட நபருடன், அவரின் வேலையா காரணமாக வைத்து வெளிநாடு சென்றுவிட்டதா சொன்னாங்க. அந்த ரெக்கார்ட் வீடியோ" என்று அதற்குரிய ஆவணத்தை முன் வைத்தான்.

"அவங்க சொன்னது எந்தளவுக்கு உண்மைன்னு ஆராய்ந்ததில், குறிப்பிட்ட தேதிகளில் அவங்க கால்ஸ் நெட்வொர்க்கில் பேக்கப் எடுத்து செக் பண்ணோம். மிரட்டல் செய்த குரல் தேஜாஸ் குட்டியின் குரல்" என்று பதிவு செய்யப்பட்ட அலைவரிசைக்கான ஆவணத்தையும் முன் வைத்தான்.

நீதிபதி அனைத்தையும் பார்வையிட,

"இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட்ஸ் ஆர் ஓவர் லார்ட். இனி, இந்த கொலைகளெல்லாம் ஏன் செய்தாங்கன்னு தேஜாஸ் தான் சொல்லணும்" என்ற விருபாட்சன் தனதிருக்கையில் சென்றமர்ந்தான்.
 
Last edited:

Administrator

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,559
Reaction score
2,936
Points
113
Location
Chennai
Website
jothinovels.com
ஆமாம்

ஏன் பட்டர் குட்டி

பன்னி குட்டி இப்படி செய்தே

வல்லிய கொலைகாரன் ஆகிட்டு உண்டு போலவே

என்ட குருவாயூரப்பா
 

shasri

Active member
Joined
Jul 16, 2025
Messages
174
Reaction score
95
Points
28
அப்பாடா எனக்கும் சேர்த்து பல விஷயங்கள் கிளயர் பண்ணீட்டீங்க சிஸ் 👌
 

kumarsaranya

Well-known member
Joined
Oct 3, 2024
Messages
1,563
Reaction score
713
Points
113
பட்டர் குட்டி இத்தனை வல்லிய கொலைகாரனோ 😱
 
Top Bottom