நீயின்றி நிழலும் துணையில்லை 22 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

ஆனந்த ஜோதி நாவல்கள்

Where every page opens a new world
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நீயின்றி நிழலும் துணையில்லை 22

New updates

LATEST

Priyadharshini S

Active member
Joined
Aug 21, 2026
Messages
50
Reaction score
103
Points
33
அத்தியாயம் 22

விருபாட்சன் கை காட்டிய திசையில் பருத்த மரங்களுக்கு நடுவில் அடர்ந்த உயர்ந்த புதர்கள் மண்டியிருந்தன.

இருளில் பார்ப்பதற்கு பெரிய யானை ஒன்று படுத்திருப்பதைப்போல் தோற்றம் கொடுக்க...

"ஆனை வந்தோ" என்று நெஞ்சில் கை வைத்த அதுல் இரண்டடி பின்னால் நகர்ந்திருந்தான்.

"என்டெ அளியா பேடிக்குன்னு" என்று சிரித்த விருபாட்சன், "நன்னாயிட்டு நோக்காம் மச்சான்" என அதுலின் தோளில் கையிட்டு புதர் நோக்கி நடந்தான்.

எலும்புக்கூட்டிற்கு அருகில் நின்றிருந்த பாலி, எலும்புக்கூட்டை ஒரு பார்வை பார்த்தவராக,

"சாரே, நான் கூட வந்து" என்று இருவரின் பின்னால் சென்றிருந்தான்.

"நீ மட்டும் எப்படி வல்லிய தைரியத்தோடு இருக்காம்?" அதுல் கேட்க, விருபாட்சன் பதில் சொல்லாது தோள்களை உயர்த்தி இறக்கினான்.

அருகில் சென்றதும் குகை போன்று தோற்றம் கொண்டிருந்த புதருக்குள் ஏதோ இருப்பது தெரிந்தது.

கையிலிருந்த டார்ச்சை உள்நோக்கி அதுல் அடித்திட,

"இது எந்தா வாகனம்?" என்றான்.

"இன்னும் கொஞ்சம் நல்லா லைட் அடி அதுல்" என்று அவனின் கைப்பிடித்து புதரின் முன் பகுதியை ஒதுக்கி வாகனத்தின் உள்ளே வெளிச்சம் பாயுமாறு காட்டினான் விருபாட்சன்.

பார்த்த கணம் அதுலுக்கு குமட்டிக்கொண்டு வர, பாலி பின்னால் சென்றிருந்தார்.

"காணாமல் போன பாடியோ?"

"ரண்டு பாடி உண்டு... நன்னாயிட்டு நோக்காம்" என்ற விருபாட்சன், "இந்த வேலையெல்லாம் எப்போ முடியும்?" எனக் கேட்டான்.

"நீ காட்டுனன்னது பாயசமில்லைடா, பாடி... முழு ரிப்போர்ட் ரெடி பண்ண ஒரு நாளாவது ஆகும்."

"இது யாரா இருக்கும்னு நீ தேடி ரிசர்ச் பண்ண வேண்டியதில்லை" என்ற விருபாட்சன், "கிட்ட வாங்க பாலி" என அவனை பக்கம் அழைத்திருந்தான்.

"வண்டிக்குள்ள இருக்க ரெண்டு பாடியும் யாருன்னு பாலி அடையாளம் காண்பிப்பார்" என்ற விருபாட்சன், "அங்க மரத்துல சாய்ந்து போஸ் கொடுத்திட்டு இருக்கவர் யாருன்னு உனக்கே தெரியும்... சோ ரிப்போர்ட்ஸ் சீக்கிரம் ரெடி பண்ணு. இப்போ எந்தவொரு சத்தமுமில்லாம இதெல்லாம் உன் ஆபீஸ்க்கு டிரான்ஸ்பர் பண்ணு" என்றதோடு விக்டரையும் அந்நேரத்திற்கு அங்கு வரவழைத்திருந்தான்.

விக்டரும் விருபாட்சன் கேட்டுக் கொண்டதற்காக தனது வேலையை விரைந்து முடிக்க முயன்றான்.

"புலிகள் நடமாட்டம், மோகினி வனப்பகுதி... இங்க யாரும் வரமாட்டங்க அப்படிங்கிறது கில்லருக்கு வசதியா போயிடுச்சு" என்ற விக்டர், அவ்விடம் சேகரிக்க வேண்டிய சாம்பிள்கள் அனைத்தையும் தனித்தனியாக சேமித்தான்.

எலும்புக்கூட்டின் மீது சிறு சிறு தாவரங்களெல்லாம் முளைத்திருக்க... அதனையும் சேகரித்துக் கொண்டான்.

"இந்த கூடு எத்தனை காலமா இங்கிருக்குன்னு, இது மேல வளர்ந்திருக்க தாவரங்களோட கார்பன் வயது வச்சு ஈசியா கண்டுபிடிச்சிடலாம்" என்றான்.

"ஹ்ம்ம்..." என்ற விருபாட்சன், பாலியிடம் திரும்பினான்.

"இவங்க ரெண்டு பேரும் அவங்க வேலையை முடிக்கிற வரை இந்தப்பகுதியில் எந்த மாற்றமும் நடக்கக்கூடாது. யாரும் வரவும் கூடாது. புலி வர வாய்ப்பிருக்கு... பார்த்துக்கோங்க" என்ற விருபாட்சன், "உங்க வேலையை சரியா செய்திருந்தா எட்டு மாசத்துக்கு முன்னவே இந்த எலும்புக்கூடு இங்க வந்த கதை தெரிஞ்சிருக்கும். மேலும் ரெண்டு உயிர் போகாம இருந்திருக்கும். நிச்சயம் இதுக்கான தண்டனை உங்களுக்கு கிடைக்கும். இதுல நான் ஹெல்ப் பண்ண முடியாது" என்றான்.

பாலிக்கும் வருத்தம் தான். புலிகள் வாழும் பகுதிக்குள், மர்மங்கள் நிகழும் பகுதியாக சொல்லப்படும் மோகினி வனத்திற்குள் யார் வரப்போகின்றனர் என்ற வனத்துறையினரின் மெத்தனம் மூன்று உயிர்களை காவு வாங்கியுள்ளது. அதற்கான தண்டனையை பெறத்தான் வேண்டும்.

"சோரி சாரே..."

"என்கிட்ட சொல்லாதீங்க" என்ற விருபாட்சன், "இன்னைக்கு ஒரு நாளாவது ஒழுங்கா வேலையைப்பாருங்க" என்று அதுலின் அருகில் நகர்ந்தான்.

"என்னடா முடிஞ்சுதா?"

"அவனோட பிங்கர் மார்க் எதுலயும் கிடைக்கலையேடா!"

"ஸ்டியரிங்கில் இருக்கா பாரு... காட்டில் கிடைச்ச வெறும் புட் மார்க் மட்டும் வச்சு அவன்தான்னு கோர்ட்டில் நிறுத்த முடியாது" என்ற விருபாட்சன், "ஓமன் டிஎன்ஏ, அந்த கை எலும்போட மேட்ச் தானே?" எனக்கேட்டான்.

"ஹண்டரட் பெர்சென்ட்."

"ஹ்ம்ம்... விடியப் போகுது. நான் ஸ்டேஷன் போயிட்டு அவனை லாக் பண்ணி வைக்கிறேன். ரிப்போர்ட் எல்லாம் பக்காவா ரெடியானதும் அரெஸ்ட் பண்ணிட்டா கேஸ் முடிஞ்சிடும்" என்று கைகள் உயர்த்தி சோம்பல் முறித்த விருபாட்சன், "அப்புறம் தான் ஃபிரியாயிட்டு என்டெ பாரியாளை லவ் பண்ணனும்" என்றான்.

"ம்க்கும்... அந்த லவ்வை காட்ட வேண்டிய நேரம் சரியாயிட்டு காட்டியிருந்தால்... இங்கென இந்த சீனே இல்லா" என்றான் அதுல்.

"என்ன பண்றது... எனக்கு வாய்ச்ச மச்சான் சரியில்லை. தங்கச்சி புருஷனை விட்டு வந்தா, சேர்த்து வைக்கிறேன் வான்னு கூட்டிட்டு வந்து புருஷன்கிட்ட விடணும். தனியா வீடு எடுத்து தங்க வைக்கக்கூடாது" என்றான்.

அதுல் தலைக்குமேல் கையெடுத்து கும்பிட்டிருந்தான்.

"அது..." என்ற விருபாட்சன், வெள்ளி முளைக்கவே, "பார்த்துக்கோங்க. கவனம். கொஞ்ச நேரத்தில் சரவணனும், சண்முகமும் வருவாங்க" என வலியுறுத்திவிட்டு காவல் நிலையம் சென்றான்.

விருபாட்சன் காவல் நிலையம் வந்த நேரம், பொழுது நன்கு புலர்ந்திருந்தது.

தேஜாஸ் உள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

பவானி அவனை கண்காணித்தவராக இருக்கையில் அமர்ந்திருந்தார்.

விருபாட்சனை கண்டதும் அவர் எழுந்து சல்யூட் வைத்திட,

"எந்தா சாரே சீக்கிரம் வந்து?" என்றான் தேஜாஸ்.

"காட்டுக்குள்ள வேலையிருக்கே பட்டு குட்டி. அதான் உன்னை கூட்டிட்டுப்போக வந்தேன்" என்ற விருபாட்சனின் பார்வை பவானியின் மீது அர்த்தமாக விழுந்தது.

"வனத்திற்குள்ளா... ஞான் வரல சாரே! ரா முழுக்க உறக்கம் கெட்டு. ஞான் வீடு போவாம்" என்ற தேஜாஸ் நகர, "சரி காட்டுக்குள்ள வேணாம். என் ஃபிரெண்ட் ஒருத்தனை பார்க்கப்போகணும். இங்க ரூட்டெல்லாம் இன்னும் பழகல. என்னை கூட்டிட்டு போங்க" என்றான்.

"ஓகே சாரே" என்று தேஜாஸ் முன்னால் செல்ல, "நைட் வெளிய எங்கயும் போனானா?" பவானியிடம் வினவினான் விருபாட்சன்.

"இல்லை சார். நான் விடல. அவன் நீங்க போயிருக்க நேரம் காட்டுக்குள்ள வந்துட்டா மொத்தமா சொதப்பிடுமே! அதான் ஏதேதோ காரணம் சொல்லி வெளியவே போகவிடல" என்றார் பவானி.

"குட்" என்ற விருபாட்சன், "குட்டாவை கோர்ட் போயிட்டு பிபி'யை மீட் பண்ண சொல்லுங்க. அவரோட கண்காணிப்பில் பாடி காணாம போனதுக்கு வாரண்ட் வாங்க சொல்லுங்க. எனக்கு அரைமணி நேரத்துக்கு ஒருமுறை கால் பண்ணுங்க" என்று வெளியேறினான்.

கூடலூரிலிருந்து இரண்டு மணிநேர பயணத்திற்கு அப்பால் உள்ள பகுதியில் ஒரு ஹோட்டலிற்கு தேஜாஸ் குட்டியை அழைத்து வந்தான் விருபாட்சன்.

"இத்தனை லாங்காயிட்டு..."

"எனக்கு இவ்ளோ தூரமின்னு தெரியாதே குட்டி... உன்கிட்ட நான் சொன்னப்போவே ரொம்ப தூரம் சொல்லியிருந்தா வராமல் இருந்திருக்கலாம்" என்ற விருபாட்சன், "என் ஃபிரண்டும் எவ்வளவு தூரம் சொல்லல. அவன் மீட் பண்ணலாம் கேட்டதும் வரேன்னு சொல்லிட்டேன். இப்போதான் வந்தாச்சே பார்த்திட்டு போயிடுவோம்" என்றான்.

நேரம் செல்ல செல்ல, விருபாட்சனுக்கு அவனது நண்பன் போல் அவ்வபோது அழைப்பு விடுத்தார் பவானி.

"இப்போ வரேன், அப்போ வர்றேன்னு போன் தான் போடுறான். ஆள் வந்ததை காணோம்" என்ற விருபாட்சன், "ஆம்பியன்ஸ் நல்லாயிருக்குல. அப்படியே சுத்திப் பார்த்திட்டு வருவோம்" என்று எழுந்து மேலும் நேரத்தை ஓட்டினான்.

"சாரே என்டெ பொறுமை போயி... நாம் போவாம்" என்றான் தேஜாஸ்.

அந்நேரம் பவானி அழைக்க, பெயருக்கு ஏற்று பேசி வைத்த விருபாட்சன்...

"வீட்ல ஏதோ எதிர்பாராம சண்டையாகிடுச்சாம். இன்னொரு நாள் மீட் பண்ணலாம் சொல்றான்" என்றான்.

"அப்போ கிளம்பலாம் சாரே!"

"ம்ம்... ஒரு காஃபி குடிச்சிட்டு போலாம்" என்று மேலும் ஒருமணி நேரம் கடத்திட, அதுலிடமிருந்து தகவல் வந்தது.

"ஆல் டன்."

"போலாம் பட்டர் குட்டி" என்று விருபாட்சன் இருக்கையை விட்டு எழுந்திட்டான். அவனே வாகனத்தை ஓட்டவும் செய்தான். அத்தனை விரைந்து வந்திருந்தான்.

"எந்தா வேகம் சாரே... ஞான் பேடிச்சிப்போயி" என்ற தேஜாஸ், "வீடு போய் வரந்ந்னு" என்றான்.

விருபாட்சனுக்கு அதுல் மற்றும் விக்டர் தயார் செய்திருக்கும் அறிக்கைகளை பார்வையிட வேண்டும். ஆதலால் அக்கணம் அவனை செல்ல அனுமதித்தான்.

காவல்நிலையம் விட்டு வெளியில் வந்த தேஜாஸ் குட்டிக்கு, ஒருமுறை தனது ரகசிய இடமான புலிகள் பகுதிக்கு சென்று பார்த்துவர வேண்டுமெனத் தோன்றியது. இருப்பினும் இரவு முழுக்க தூங்காதது, அன்றைய நாளின் அலைச்சலெல்லாம் சோர்வை கொடுத்திட வீட்டிற்குச் சென்று, அங்கிருந்து செல்வோமென வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் கண்டுகொண்டான்... யாரோ அங்கிருப்பதை.

"யாரானு?" என்று கேட்டுக்கொண்டே மெல்ல அடி வைத்துச் சென்றவன், சுவற்றுக்கு பின்னால் யாரோ நின்றிருப்பதை நிழல் வைத்து தெரிந்தவனாக தாக்க முற்பட்டான்.

நொடியில் சுதாரித்து அவனைத் தள்ளிவிட்டு மறைவிலிருந்து வெளிவந்த நபர், அருகிலிருந்த பொருள் ஒன்றை எடுத்து அவனைத் தாக்கினாள்.

"மரியா நீயா?"

"ஆமா நான் தான்" என்ற மரியா, "எதுக்குடா என் அண்ணனை கொன்ன?" என்று அவன் முன்பு வனத்துறை அலுவலகத்திலிருந்து எடுத்த ஹார்ட் டிஸ்க்கை அவன் மீது தூக்கெறிந்தாள்.

"சேட்டனோ? யாரானு அதி" என்ற தேஜாஸ், "ஞான் மூனு கொலை செய்து. அதில் உன் சேட்டன் யாரானு அறிஞ்சிட்டுல்லா மோளே" என்று மரியாவின் அருகில் நெருங்கி அவளின் கழுத்தினைப் பிடித்திருந்தான்.

அவனிடம் போராடி உதைத்து தள்ளி தப்பிக்க நினைத்து வெளியில் வந்தவள், அவன் பின்னாலே வரவும் காட்டுப்பகுதியில் ஓடியிருந்தாள்.

"ஆ ஆண்டி வனத்துக்குள்ள ஓடுன்னு. தேஜாஸ் அங்கிளும் ஓடிப்போயி" என்று அப்போதுதான் நேசனுடன் வந்திறங்கிய விரூப் கண்டுவிட்டு, இருவரும் எதற்கோ ஓடுகிறார்களென பின்னால் ஓடியிருந்தான்.

நேசன் வண்டியை நிறுத்தி இறங்குவதற்குள் பல அடிகள் முன்னேறியிருந்தனர்.

வண்டி சத்தம் கேட்டும் இருவரில் ஒருவரும் உள்ளே வராததால், வெளிவந்த கோமதி கண்டது நேசன் காட்டிற்குள் செல்வதைத்தான்.

"டேய் குழந்தை எங்க? நீ எதுக்கு அங்க ஓடுற?" என்று அவர் கத்திக் கேட்க,

"விரூப் காட்டுக்குள்ள ஓடிட்டான். நான் கூட்டிட்டு வர்றேன். ஒரு பொண்ணுக்கு ஏதோ ஆபத்து. நீங்க போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணுங்க" என்று சொல்லிக்கொண்டே நேசன் காட்டிற்குள் மறைந்திருந்தான்.

"என மகனே போலீஸ் தான்டா" என்று சொல்லிக்கொண்ட கோமதி விருபாட்சனுக்கு அழைத்து சொல்லியதோடு விதுஷிகாவுக்கும் சொல்லியிருந்தார்.

முக்கிய சாலை வழியாக சென்றால்தான் தூரங்கள் நீளும், இடைவெளிகள் கூடுமென்பதால், மகனுக்கு ஏதும் ஆபத்து நேர்ந்திடுமோ? விரைந்து செல்ல வேண்டுமென நினைத்த விருபாட்சன், காவல் நிலையம் பின்னாலிருக்கும் காட்டுப்பகுதி வழியாக குறுக்கில் சென்றான்.

சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்து மகனையும், மரியாவையும் காப்பாற்றியிருந்தான்.

அதேநேரம் வழக்கின் முக்கிய குற்றவாளியை கைதும் செய்திருந்தான்.

*********************

நீதிமன்ற வளாகம்.

"என்ன இங்கவே நின்னுட்டு இருக்க?" என்று வந்த நேசனின் புறம் திரும்பிய விதுஷிகா, "உன் மாம்ஸ்காக வெயிட்டிங் டா" என்றாள்.

"அவர்தான் அக்யூஸ்டை கூட்டிட்டு வருவாரே... நாம உள்ள போகலாம்" என்றான்.

"நேத்து வீட்டுக்கே வரலடா! பார்க்கணும்" என்ற விதுஷிகா, "தேஜாஸ் குட்டியை ஞான் எக்ஸ்பெக்ட் செய்திட்டில்லா" என்றாள்.

"நானுமே!"

"அவன் ரொம்ப மோசமில்லன்னு சொன்ன ஆளுதன்னே நீ" என்றவள், அதுல் வரவே, விருபாட்சன் வருகின்றானா என அவனுக்குப் பின்னால் பார்த்தாள்.

"உன் ஆளு அவ்வட" என்று அதுல் கை காண்பிக்க, ஜீப்பில் சாய்ந்து நின்றபடி அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் விருபாட்சன்.

விதுஷிகா அவனைப் பார்த்திட, ஒற்றை கண்ணடித்து காற்றில் முத்தத்தை பறக்க விட்டிருந்தான். கவனித்த நேசன் பட்டென்று வேறுபுறம் திரும்பிக்கொண்டான்.

"என்னால சத்தியமா நம்ப முடியல. மாம்ஸ் தானா இவரு?"

"நீ நம்பலனாலும் இதிதன்னே சத்தியம்" என்ற விதுஷிகா, விருபாட்சனை நோக்கி அடி வைக்க, அருகில் வரவேண்டாமென்று தலையசைத்திருந்தான் விருபாட்சன்.

"உள்ள போவாம்... இதி பாரன்சிக் ரிப்போர்ட். சப்மிட் செய்யாம்" என்ற அதுல், "ஞானும் விசாரணையில் வந்தோ?" என்றான்.

"மோஸ்ட்லி விருவே எல்லாம் எக்ஸ்ப்ளைன் செய்திடுவார். எனக்கே வேலையிருக்காது நினைக்கிறேன்" என விதுஷிகா கூற, அதுல் நகர்ந்திட்டான்.

விதுஷிகா விருபாட்சனுக்கு அழைத்தாள்.

"லவ் பண்ணிட்டு சீக்கிரம் வந்து சேரு" என்று வழக்கு சம்மந்தப்பட்ட அனைத்து கோப்புகளையும் எடுத்துக்கொண்டு நேசன் சென்றிருந்தான்.

"சொல்லுடி பஞ்சாரே!"

"என்ன அங்கவே நின்னு?"

"என்டெ பஞ்சாரே ஈ ட்ரெஸ்ஸில் வளர சுந்திரியாயிட்டு... கிட்ட வந்தா என் வாயும் கையும் சும்மா இருக்காது. அதான் டிஸ்டென்ஸ் மெயின்டெய்ன் பண்றேன்."

"அவ்வா... எங்க நின்னுட்டு என்ன பேச்சு?" வார்த்தையில் தெரிந்த கண்டிப்புக்கு மாறாக அவளின் முகம் நாணம் கொள்வதை ரசித்தவனுக்கு ஜில்லென்ற உணர்வு.

"டெம்ப்ட் பண்ற நீ!"

"பண்ணிட்டாலும்" என்றவள், "நைட் ஸ்டேஷன்லே இருந்தோ?" என்றாள்.

"இவன் எங்க விட்டான்... ஹாஸ்பிடல்ல இருந்தே இரண்டு முறை தப்பிக்க டிரை பண்ணி, ஓட விட்டுட்டான்" என்ற விருபாட்சன், "இன்னைக்கு எப்படியாவது முடிச்சு விட்டுடு. லவ் பண்ணலாம் வந்த என்னை நிறையவே டைம் வேஸ்ட் பண்ண வச்சிட்டான்" என்றவனிடம் அத்தனை கடுப்புகள்.

விதுஷிகா இருக்குமிடம் மறந்து சிரித்திட...

"லவ் யூ டி பஞ்சாரே" என்றான்.

"சக்கரக்குட்டா" என்று கீழ் உதட்டை அழுந்த கடித்தவள் வார்த்தைகளற்று மௌனிக்க, தனதருகில் பவானி வரவே,

"ஹேர் லூஸ் பண்ணி விடுடி" என்றவனாக வைத்திருந்தான்.

மொத்த குழலையும் ஒரே பேண்டில் கற்றையாக இறுக்கிக் கட்டியிருக்க, அவனை பார்த்தவாறே, குழல் சுருளை உருவியவள், தலையை சிலுப்பியவளாக நகர்ந்திருந்தாள்.

குழலின் அசைவுக்கு அவனது இதயமும் அசைந்திட, தொண்டையை செருமியவனாக பவானியிடம் கவனத்தைத் திருப்பினான்.

"உள்ள கூட்டிட்டுப் போகலாம் சார். "

"யாப்... சரவணன், சண்முகம் எங்க?"

"குட்டனோடு கோர்ட் ஹால் போயாச்சு" என்ற பவானி, ஜீப்பிற்குள்ளிருந்த தேஜாஸ் குட்டியை எட்டிப் பார்த்தார்.

"கூட்டிட்டு வாங்க" என்ற விருபாட்சன், கைவிலங்கின் சாவியினை அவரிடம் கொடுத்தான்.
 

Administrator

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,559
Reaction score
2,936
Points
113
Location
Chennai
Website
jothinovels.com
எதுக்காக தேஜஸ் இப்படி செய்து

இத்தனை கொலைகாரனாக இருந்து லாயரையும் விரும்பியா
 

shasri

Active member
Joined
Jul 16, 2025
Messages
174
Reaction score
95
Points
28
அடேய் பட்டர் கொலை கேஸ் மற்றும் காதல் செய்ய விடாத கேஸ்னு இரண்டு கேஸ் போடணும்
 

kumarsaranya

Well-known member
Joined
Oct 3, 2024
Messages
1,563
Reaction score
713
Points
113
தேஜு ஏன் இந்த கொலை???
 
Top Bottom