Priyadharshini S
Active member
- Joined
- Aug 21, 2026
- Messages
- 50
- Reaction score
- 103
- Points
- 33
அத்தியாயம் 16
இரவு பதினோரு மணியளவில் விருபாட்சன் வீடு வந்திருந்தான்.
எப்போதும் போலான வழக்கமாக தானே பூட்டினை திறந்துகொண்டு உள் நுழைந்தவன், தாழ்வாரப்பகுதியில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து ஷூவினை கழட்டி அதற்குரிய இடத்தில் வைத்து நிமிர்ந்த பின்னரே வீட்டின் உள்பகுதியில் இந்நேரத்தில் மின் விளக்குகள் ஒளிர்வதை உணர்ந்தான்.
"கோமு தூங்கலயா?" என்றவனாக கூடம் வர, கோமதி முறைப்போடு அமர்ந்திருந்தார்.
"என்ன கோம்ஸ் பாசமா பார்க்குற?" என்ற விருபாட்சன், "சாப்பிட்டியா? இந்நேரத்துக்கு தூங்கியிருப்பியே நீ! எனக்காகவா வெயிட் பண்ற?" எனக் கேட்டதோடு, "செம பசி... ட்ரெஸ் மாத்தலாம் டைம் இல்லை" என்றவனாக உணவு மேசை அருகே இருக்கும் குழாயில் கையை நன்கு தேய்த்து கழுவி உதறியவனாக இருக்கையில் அமர்ந்தான்.
"என்ன கோமதி சைலண்ட்டா இருக்க? என்ன சாப்பாடு? பிளேட் இல்லையே" என்று உணவு பாத்திரங்களை திறந்துப் பார்த்தான்.
கோமதி பதில் சொல்லாது தன்னிலையில் மாற்றமில்லாது அவனையே முறைத்திருக்க...
"ம்மா என்னாச்சு உனக்கு?" என்றான். சற்று கடுப்புடனே!
"கோவம் வருதோ ஆபிசருக்கு" என்ற கோமதி, "இதுதான் வர நேரமாடா?" எனக் கேட்டார்.
"எப்பவும் வர நேரந்தான? இன்னைக்கு என்ன புதுசா விசாரணையெல்லாம்" என்றான்.
"உன்னை தலையிலே கொட்டணும் போல வருதுடா" என்று பற்களைக் கடித்த கோமதி, "இன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு உனக்கு கொஞ்சமாவது நினைப்பிருக்காடா?" என்றார்.
"என்னாச்சு மம்மி? ஒய் யூ சோ ஆங்கிரி?" என்றான்.
"விருபா... சப்புன்னு அறைஞ்சிடுவேண்டா உன்னை."
"என்னன்னு சொன்னாதாம்மா தெரியும்!"
"சொல்லி நினைவிருக்க விஷயமாடா?" என்ற கோமதி, "காக்கி போட்டா எதுவும் மண்டையில நினைவிருக்காதா?" என்றார்.
"கோமு சும்மா சிடுசிடுன்னு முகத்தைக் காட்டாத! என்னன்னு சொல்ல முடியாதுன்னா அமைதியா போங்க. சாப்பிடவாவது செய்வேன் நானு" என்றான்.
"ஆமா, இப்போ நீ சாப்பிடறதுதான் ரொம்ப முக்கியம்" என்றவர் மேற்கொண்டு என்ன சொல்லியிருப்பாரோ,
"அம்மாயி" என்ற விதுஷிகாவின் விளிப்பில் வாயினை மூடிக்கொண்டார்.
விதுஷிகா தனது அறை வாயிலில் நிற்பதை கண்ட பின்னரே விருபாட்சனின் நடு மண்டையில் நச்செனக் கொட்டியது உண்மை.
"அடடா விருபா... வெட்டிங் ஆகி ஒரு நாள் முடியல. இப்படி சொதப்பிட்டியேடா... உனக்கு மார்னிங் தான் மேன் மேரேஜ் ஆச்சு" என்று சத்தமின்றி முணுமுணுத்தவனாக, விதுஷிகாவையும் கோமதியையும் மாற்றி மாற்றிப் பார்த்தான். அத்தனை அசட்டுத்தனம் அவனின் பாவனையில்.
கோமதி ஏதோ சொல்லிட வாய் திறக்க...
"அம்மாயி உறங்க போவாம்" என்றிருந்தாள் விதுஷிகா.
"அவனை நான் ஒண்ணும் சொல்லல" என்ற கோமதி, "உனக்கு ஒன்னு சொல்லிக்கிறேன். இப்போவே அவனை அடக்கி உன் கைக்குள்ள வச்சிக்க. இல்லைன்னா இப்படித்தான் கல்யாணம் ஆனதை அன்னைக்கே மறந்த மாதிரி உன்னையும் மொத்தமா மறந்திடுவான். நான் மட்டும் எப்படித்தான் அவன் நினைப்பில இருக்கனோ" என்றதோடு, "ஒரு மணி நேரத்தில் வந்துடுறேன் சொல்லிட்டுப்போனவன்... ஒரு நாள் முடிஞ்சு வர்றான்" என்று முனகியவராக அறைக்குள் நுழைந்து கதவினை சாற்றியிருந்தார்.
உணவு உண்ண அமர்ந்திருந்தவன் எழுந்து அமைதியாக அறைக்குள் நுழைய முற்பட,
"ஏட்டா நிக்காம்" என்று தடுத்தவள், உணவு மேசை அருகே சென்று தட்டினை எடுத்து வைத்து, "கழிக்கான் வரூ" என்றாள்.
எதுவும் பேசாது அமைதியாக அவள் வைத்த உணவை உண்டு முடித்தவனுக்கு அவளின் முகம் பார்க்கவே சங்கடமாக இருந்தது. விளக்கம் கொடுக்கவோ, சிறு மன்னிப்பு வேண்டவோ தோன்றவில்லை. மன்னிப்பு கேட்கும் சூழலில் அவன் இருந்ததே இல்லை. இன்றைய சூழலும் புதிது. எப்படி எதிர்வினை புரிய வேண்டுமென்றும் தெரியவில்லை.
உணவை முடித்த பின்னரும், அமைதியாக அமர்ந்தே இருக்க, அவனின் மனம் புரிந்தவளாக,
"எனக்கு புரியுது. நோ கில்ட் ஃபீல்" என்றவள், "நான் எதுவும் எதிர்பார்க்கல. எதிர்பார்த்தாதான ஹர்ட் ஆகும்" என்றாள். அக உணர்வுகளை மறைத்தவளாக.
எதையும் எதிர்பார்க்கக்கூடாதென மனதிற்குள் அழுத்தமாக பதிய வைத்த கணம் தான், கட்டுப்பாடுகளெல்லாம் தானாக அவளறியாது தளர துவங்கியது. நிதர்சனத்தை கட்டுக்குள் வைக்க முடியா இயல் நிலையில் சின்ன சின்ன விஷயத்திலும் அக்கணம் முதல் தோன்றும் வலியை அவனுக்காக மறைக்கக் கற்றுக்கொண்டாள்.
சிறு கடிதல், சிறு பார்வை... ஏதோ ஒன்றின் மூலமாக தனது ஏமாற்றத்தை, எதிர்பார்ப்பை காட்டியிருக்கலாம். முதல் தவறிலே தன்னைத் திருத்திக்கொள்ள முயன்றிருப்பானோ என்னவோ! அவன் வருந்துவது பிடிக்காது மறைக்க முயன்றவள்... இத்தகைய தொடர்தல் அவளின் மன அமைதிக்கும் மகிழ்விற்கும் பாதகமென்பதை அறிந்திருக்கவில்லை.
மாலை கவிழும் வரை அவளுக்கும் ஒன்றும் தெரியவில்லை. அவளுக்கு அங்கு வந்ததும் செய்திட வேலைகள் இருந்தன. விடுதியிலிருந்து நேசனின் உதவியோடு தனது உடமைகளை வீட்டிற்கு கொண்டு வந்தவள், கோமதியின் உதவியோடு, இனி தனக்குமான விருபாட்சனின் அறையில் சீர்படுத்தி வைத்தாள். அதன் பின்னரான நேரம் கோமதியுடன் கலகலப்பாக நகர்ந்திட, அவர் சற்று ஓய்வெடுப்பதாக சென்ற நேரம் தான், விருபாட்சனின் வருகையை அவளின் மனம் வெகுவாக எதிர்பார்க்கத் தொடங்கியது.
'உடனே வர்றேன் போனாங்க!' அமைதியான சூழல் அவளின் மனதை நிறைய நினைக்க வைத்தது.
'எதிர்பார்ப்பு இருக்காதுன்னு சொல்லிட்டு, மேரேஜ் ஆன அன்னைக்கே எதிர்ப்பார்க்கிறியே விது' என்று மனதை தட்டியவளுக்கு, காதலில் இல்லாதுபோகும் பல எதிர்பார்ப்புகள் திருமணப் பந்தத்தில் ஏக்கம் கொள்ளும் என்பதை அக்கணம் உணர்ந்தாள்.
"பெரிய வீரப்பா என் லவ் போதும். உங்ககிட்ட எதுவும் எக்ஸ்பெக்ட் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, இப்படி முதல் நாளே என்ன பண்ணிட்டு இருக்க நீ?" என்றவள் வழக்கு கோப்பு ஒன்றினை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
கோப்பும், மடிக்கணினியுமாக இருந்த போதும்,நேரம் செல்ல செல்ல விருபாட்சனின் வருகையை எதிர்ப்பார்க்கத் துவங்கி நொடிக்கு ஒருமுறை வாயிலை பார்த்து மீண்டாள்.
அவளை கவனித்த கோமதியும் மகனுக்கு பலமுறை அழைத்துவிட்டார். அவன் தான் அழைப்பை ஏற்கவேயில்லை.
அவனது சூழலும் வழக்கு விசாரணை ஒன்றில் அத்தனை நெருக்கடியில் தான் இருந்தது. வேண்டுமென்றே அழைப்பினை எடுக்காது இருக்கவில்லை அவன்.
பத்து மணிக்கு மேல்தான் விசாரணை முடித்து ஆசுவாசமாக அமர்ந்தான். விசாரணையின் போது அலைபேசியை தனது மேசை இழுவையில் வைத்துச் சென்றிருக்க, அழைப்புகள் வந்ததே அவனுக்கு தெரியவில்லை.
நேரத்தைப் பார்த்தவன், அலைபேசியை எடுத்து திறந்துகூட பார்க்காது, பசியின் காரணமாக வீடு வந்து சேர்ந்திருந்தான்.
தனது முகம் பார்த்து, தனக்காக யோசித்து அவள் பேசுவது புரிகிறது. அவனுக்கு அக்கணம் அவளை அதிகத்துக்கும் பிடிப்பதை உணரவும் செய்தான். ஏனோ இதுதான் காரணமென விளக்கம் சொல்ல வரவில்லை.
இதுவரை கோமதியிடம் எதற்கும் விளக்கம் சொல்லியதில்லை அவன். அவன் வேலை காரணமாக எப்போது வேண்டுமானாலும் செல்வான், வருவான். அவனது வேலை, அதன் மீதிருக்கும் ஈடுபாட்டினை அறிந்திருக்கும் கோமதிக்கு, வேலை சம்மந்தமாக அவனிடம் கேள்விகள் கேட்பதும் பிடிக்காதென தெரியுமென்பதால், இதுபோலான சூழல் அவனுக்கு உருவானதே இல்லை.
ஆனால் அன்னைக்குத் தேவைப்படாத விளக்கங்கள், காரணங்கள், எதிர்பார்ப்புகள் மனைவியிடத்தில் தோன்றுமென்பது இயல்பானதென அவனுக்கும் தெரியவில்லை. அவளும் உணர்த்திடவில்லை.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப்போலத்தான், முதல் முறையே காரணங்கள் கேட்டு அவனது தவறை சுட்டிக்காட்டி வருத்தம் கொள்ள வைத்திட வேண்டாமென அவள் நினைத்திட, அவனுக்கோ அவள் அத்தனை எளிதாகிப்போனாள்.
"இப்போ என்னாச்சு ஏட்டா? ஏன் டல்லடிக்கிறீங்க" என்றவள், "உங்க மூட் மாத்தலாமா?" எனக் கேட்டு புருவம் உயர்த்தினாள்.
"உனக்கு நிஜமா வருத்தமில்லையா?"
"ம்ப்ச்..." கண்கள் சிமிட்டியவள், "நீங்க இப்படித்தான்னு எனக்குத் தெரியுமே! சோ வருத்தமெல்லாம் இல்லை" என்றாள்.
விருபாட்சனுக்கு என்ன சொல்ல வேண்டுமென்று தெரியவில்லை... அமைதியாக எழுந்து கையினை கவிழுவிவிட்டு அவளைப் பார்த்தான்.
"பூஸ்ட் வித் காஃபி வேணுமா?"
அவன் பதில் சொல்லாதிருக்க...
"நீங்க நைட்ல சாப்பிட்டதும் குடிப்பீங்கன்னு அம்மாயி சொல்லியிருக்கு" என்றாள்.
"ஹோ..." என்றவன், அவளை நெருங்கி உரசிவிடும் தூரத்தில் நின்று, "என்னைப்பற்றி எல்லாம் தெரியுமா?" என்றான்.
"ம்ம்... அறியும்" என்றவள், "அறியாததை உங்க மூலமாவே கொஞ்சம் கொஞ்சமா அறிஞ்சிக்கலாம்" என்றாள்.
"குட்" என்று அவளின் கன்னத்தில் தட்டியவன், "வைஃப் அப்படின்னாலே என் பிரண்ட்ஸ்லாம் அலறுவானுங்க. நீ ஸ்மூத்தா இருக்கியே" என்றான்.
"பிகாஸ் ஐ லவ் யூ ஏட்டா!"
உள்ளுக்குள் உடைதல் கொள்ளும் பனிப்பூவின் ஈரம் அவளின் வார்த்தைகளில் சில்லிட வைத்தது.
"அப்போ மேடமுக்கு என்கிட்ட எந்த ஹர்ட் ஃபிலும் வராதா?"
"வராது."
"கோவம்?"
"வராது."
"வெல்" என்றவன், "தேங்க் யூ" எனக்கூறி அறைக்குள் நுழைந்திருந்தான்.
அவளின் புரிதல் பிடித்திருக்கிறது. மெலிதான நாணம் கூட அவளின் காதலால் அவனிடம் தோன்றியிருந்தது.
'ரொம்ப பிடிக்குதுடி!' அகம் நனைக்கும் புன்னகையோடு ஆடை மாற்றி கட்டிலில் விழுந்தான். புத்தகம் ஒன்றை கையிலெடுத்துக்கொண்டு சாய்ந்தமர, விதுஷிகா அறைக்குள் வந்தாள்.
அவள் வந்த பின்பே, இனி அவளின் வாசமும் தன்னோடு என்பதே விளங்கிற்று அவனுக்கு. கூடுதலாக அன்றைய இரவுக்கான சூழலும்.
'பத்து நாளா அவள் நினைப்போட சுத்திட்டு... இன்னைக்கு என்னடா இப்படி சொதப்பி வைக்கிற? லவ் பண்ண உனக்கு இன்னும் பயிற்சி வேண்டுமோ?' என்றவனுக்கு, 'இனி அவள் உன்கூடவே இருக்கப்போறாளே! அதான் அவளைப்பற்றி நினைக்க நேரமில்லை உனக்கு' என அவனின் மனமே குட்டு வைத்தது.
விதுஷிகா அவனைப் பார்த்தவாறே நின்றிருக்க...
'எதுவும் பேசுடா!' என மீண்டும் அவனின் மனம்.
"ஃபர்ஸ்ட் நைட்ல..." என்றவன், "லவ் சேப்டர்லாம் திங்க் பண்ணதே இல்லை. அதுவும் மேரேஜ்... பிக் க்வெஸ்டின் தான். சோ, ரிஜிஸ்டர் ஆக மாட்டேங்குது" என்றான்.
அவனின் பேச்சில் அவள் தான் தனது பொறுமையை இழுத்துப் பிடிக்க வேண்டியிருந்தது.
'அவங்களை நீ நிறைய நிறைய லவ் பண்ற விது. இதெல்லாம் பெரிய விஷயமில்லை. உன்னோட லவ் அவங்க மனசுல உன்னை பதிய வைக்கும். அவங்களுக்கு டைம் கொடு. இப்போதைக்கு அவங்ககிட்ட நீ சொன்ன மாதிரி எதையும் எதிர்பார்க்காதே!' தனக்குத்தானே வலியுறுத்தியவளாக கதவினை சாற்றி தாழிட்டாள்.
"வந்து படுத்துக்கோ. நான் உருள மாட்டேன். எனக்கு சிங்கிள் ஸ்பேஸ் போதும்" என்று மெத்தையின் நடுவில் படுத்திருந்தவன் ஒரு ஓரம் தள்ளி படுத்தவனாக அவளுக்கான இடத்தை சுட்டினான்.
அவனுக்கு மறுபுறம் வந்து அவள் படுத்திட,
"எனக்கு புக் படிச்சாதான் தூக்கம் வரும்" என்று கையிலிருந்த புத்தகத்தில் கண்ணாகினான்.
அவனுக்கு முதுகுக்காட்டிப் படுத்தவளுக்கு, அவனின் அருகில் அவனது வாசத்தில் தானென்ற எண்ணமே அகமும் புறமும் சிலிர்க்க வைத்திட, மெல்ல அவன் முகம் பார்க்க திரும்பிப் படுத்தாள்.
மிடுக்கானத் தோற்றம். பார்த்ததும் அதன் ஈர்ப்பில் தானே அவனிடம் தொலைந்திருந்தாள். இக்கணமும் அவனில் மொத்தமாக லயித்திருந்தாள்.
வரிகளுக்கு ஏற்ப அவனின் கருவிழிகள் ஊர்ந்திட, அதனின் அசைவுக்கு இவளின் விழிகள் அவனில் பந்தாடியது.
வெகு நேரத்திற்குப் பின்னரே அவளின் பார்வையின் சூட்டை உணர்ந்தவன்,
"தூங்கலயா?" எனக் கேட்டான். அவளின் முகம் பார்த்து.
'உன் லவ்வை பதிய வைக்கணும்னா நீதான் என்னவும்... எல்லாம் பண்ணனும் விது. லெட்ஸ் டூ இட். லவ் பண்ற பையனுக்கு லவ்வை ஃபீல் பண்ண வைக்கிறதுதான் கஷ்டம். பட் நொவ், ஹீ இஸ் யுவர் ஹஸ். நீயே அப்ரோச் பண்ணிடு.'
"வரல... உங்களை பார்த்துட்டே இருக்கணும் போலிருக்கு" என்றவள், அவனை ஒட்டி, அவனது நீண்டிருந்த மடியில் தலை வைத்தாள்.
"விது..." அவனுள் உணர்வுகள் நழுவின.
"இன்னைக்கு நமக்கென்ன?" நிமிர்ந்து படுத்தவளாக அவனின் கையிலிருந்த புத்தகத்தை வாங்கி வைத்துக் கேட்டிருந்தாள்.
"என்ன என்ன?"
"நேத்து முத்தம் கொடுக்கான் போது நன்னாயிட்டுத்தன்னே இருந்தீங்க. இப்போ என்ன உங்க பாடி ஃப்ரீஸ் மோடுக்கு போயி?" என்றாள்.
"டக்குன்னு இப்படி வந்து மடியில படுத்தா வேறெப்படி ரியாக்ட் பண்றது?" அவனது தடுமாற்றம் அவளை முன்னேற வைத்தது.
"ஞான் இவ்விட வந்ததும்... சக்கரக்குட்டா ஏதோ சொல்லி... என்னது?" என்று எழுந்தமர்ந்தாள்.
அவனிடம் சீரான மூச்சு. அடுத்த கணம் மூச்சடைக்க வைத்திருந்தாள். அவனே எதிர்பாராத விதமாக அவனது மடியில் அமர்ந்து, கழுத்தினை கைகளால் கட்டிக்கொண்டிருந்தாள்.
இருவரின் முகமும் அத்தனை நெருக்கமாய். மூக்கும் மூக்கும் தீண்டிட நூலிழை இடைவெளியே!
"என்ன பண்ற நீ?" இத்தனை வயதிற்கு இதுவரை உணர்ந்திடாத, அறிந்திராத மாற்றங்கள் எல்லாம் அவனுள் நிகழ்ந்தது அக்கணம்.
"நான் கேட்டதுக்கு பதில் பரயும் என்டெ சக்கர மோனே" என்றவள், அவனது நெற்றியில் முட்டினாள்.
"என்னவோ ஆகுதுடி. கீழிறங்கு!"
"நான் உங்களுக்கு யாரு?"
"என்னடி கேள்வி இது?"
"ஓபிசர் மறந்தோ?"
"ஒய்ஃப்!"
"குட்... அப்போ இந்த நெருக்கம் கூட இல்லாம எப்படி ஏட்டா?" என்றவள் அவனின் கன்னங்களை கைகளில் ஏந்தியவளாக மூக்கு நுனி கொண்டு அவனது முகம் தீண்டினாள்.
"டெம்ப்ட் பண்ற நீ?"
"இன்னுமா ஆகல" என்றவள், "எல்லாம் நார்மலத்தானே இருக்கு?" என்க,
"அடியே!" என்று பக்கவாட்டில் அவளை சுழற்றித் தள்ளியவனாக அவளுக்கு மேல் வந்திருந்தான்.
"வாய்... வாய்..." என்று அவளின் உதட்டிலே மெல்ல அடி போட்டவன், "என்ன பேச்சு பேசுது இந்த வாய்" என்று கிள்ளி வைத்தான்.
"இன்னைக்கு முழுக்க என் நினைவே இல்லதான உங்களுக்கு?" என்றவள், "ரிஜிஸ்டர் ஆகல சொல்லுச்சு. அதான் ஆழமா ரிஜிஸ்டர் பண்றேன். என்னோட லவ்வை... என்னை" என்று அவனின் மார்புச்சட்டையை சுருட்டி இழுத்துவளாக தன்மீது அவனை விழ வைத்தவள் அவனது இதழோடு இதழ் பொருத்தியிருந்தாள்.
அழுத்தமாக, ஆழமாக.
விதுஷிகாவிடம் இத்தகைய அதிரடியை எதிர்பார்க்காத விருபாட்சனின் விழிகள் அகண்டு விரிந்திட, அவனது பார்வைக்குள் தனது பார்வையை உட்பகுத்தி, களவாடத் துவங்கியிருந்தாள்.
அவனும் கொள்ளைப்போக நினைத்துவிட்டான்.
சிறு சிறு தீண்டலிலும், வார்த்தைகளிலும் அதீத காதலை காட்டிடும்போது, அவனால் எப்படி விலகியிருக்க முடியும்.
உண்மைக்கும் அவளருகில் அவனால் தள்ளியிருக்க முடியவில்லை என்பதே உண்மை. மனதாலும், உடலாலும் அவளுடன் கலந்துவிட அவனின் ஆன்மாவில் ஜீவன் துடித்திட்டது.
அவளது விரல்கள் செய்த செயல்களையெல்லாம் அவன் திருப்பிக் கொடுத்திட முயன்றிருந்தான்.
"சக்கரக்குட்டா" என்றவளின் காற்றான அழைப்பில், சுயம் தொலைத்து அவளுக்குள் கரைந்தான். அவளின் அவ்வழைப்பே அவனை அடக்கிட போதுமானதாக இருந்தது.
விதுவின் இதழ் தீண்டும் இடமெல்லாம் அவனது அணுக்கள் சிதை கொண்டு, உயிர்த்திட்டது. அவளின் காதலில் ஒரு நாளுக்கே பித்து பிடித்து, மீண்டும் மீண்டுமென அவளுள் மூழ்கித் திளைத்து, தவித்து, நீக்கமற நிறைந்தான்.
பேரின்பத்தின் தடமாய் அவள் வழிகாட்டிட, பயணித்தவனின் ஊர்வலம் முடிவிலியாய்!
"இவ்ளோ லவ் தினம் தினம் கிடைக்குமா?"
விருபாட்சனின் அக்கேள்வியே அவனுக்கு தன்னிடத்தில் பிடித்தம் ஏற்படுகிறது என்பதற்கு சான்றாக விளங்க... அவனை இறுகக் கட்டிக்கொண்டாள்.
ஆனாலும் அவளின் மனம் அவனிடம் வேண்டுவது வெளிப்படையான காதலை.
'ஒரே நாளில் எப்படி விது!' மனம் எடுத்துரைக்க...
"என்டெ லவ் மாயம் செய்யும்" என்று முணுமுணுத்தவளாக தனக்குள் சுவீகரித்தவனை மொத்தமாய் ஜீவித்திருந்தாள்.
"விது..." செவி நுழைந்த விளிப்பில், அவனின் முதுகில் தட்டிக் கொடுத்தவள், "பஞ்சாரே பரயும் ஏட்டா" என்றாள்.
"அப்படின்னா?"
"சக்கரக்குட்டாக்கு டிரான்ஸ்லெட் செக் பண்ணீங்களே! இதுக்கும் பண்ணுங்க" என்றவளின் இறுதி வார்த்தையை முடிக்க விடாது, அவளின் உதட்டில் அழுத்தமாக முத்த வைத்தவன், "அதை அப்புறம் தெரிஞ்சிக்கிறேன். இப்போ உன்னை முழுசா தெரிஞ்சிக்க வை" என்றான்.
"இன்னுமா?" என்று இருவரின் நிலையை அவள் பார்வையால் சுட்டிக்காட்ட,
"எஸ்... ஐ வான்ட் மோர் என்டே பஞ்சாரே!" என்றவன், "உன் லவ் மட்டும் போதும் சொன்னியே! அப்போ, லெட்ஸ் டூ இட்" என கண்கள் சிமிட்டினான். நீண்ட இதழ் விரிப்போடு.
காதலில் மட்டுமல்ல, அதனின் உச்ச வெளிப்பாட்டிலும் அவளே கொடுக்கும் இடமாக, அவன் பெறுதலாய்! அன்று தொடங்கியதே தொடரானது.
அவளின் கொடுத்தலுக்கு அவனை முழுதாய் பழக்கியிருந்தாள். ஏற்பதில் இன்பம் கண்டவனுக்கு, கொடுத்தலில் அமுத சுரபியாகியிருந்தாள்.
தான் காதலை காட்டிடும் நேரம், தனது உடனிருத்தலில், அவனுடன் பேசும் பொழுதுகளில், அவனுடனான தனது இருத்தலில் அவன் பேரின்பம் கொள்கிறான் என்பதை அவனின் முக உணர்வுகளில் நிறைவு கொள்பவளுக்கு, அவனின்றிய தருணங்களில் தான், அவன் கொடுத்து தான் பெறுதல் வேண்டுமென்ற ஏக்கம் எதிர்பார்ப்பு கொள்ளும்.
அடுத்த கணம் அவன் அண்மையில் அவனது மகிழ்வில் தனது எதிர்பார்ப்புகளை சுருக்கிக் கொள்வாள். இல்லையேல் மொத்தமாக உள்ளுக்குள் அடக்கிடுவாள்.
தான் காட்டும் காதலில் அவன் மகிழ்வு கொள்கிறான் என்பதாலேயே... அதீத காதலை வெளிப்படுத்த வேண்டுமென, அவனது சிறு சிறு செயல்களிலும் அதிக மெனக்கெடல் செய்து, அவனுக்கான அனைத்தும் தன் மூலமாக நடக்குமாறு அவனை பழக்கியிருந்தாள்.
அவனது எண்ணவோட்டத்திற்கும் செயல் வடிவம் கொடுத்திடுவாள்.
அவளின்றி அவனின் நிழலும் அசைந்திடாது எனும் நிலை.

Last edited: