நீயின்றி நிழலும் துணையில்லை 15 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நீயின்றி நிழலும் துணையில்லை 15

New updates

LATEST
Joined
Aug 21, 2026
Messages
38
Reaction score
58
Points
18
அத்தியாயம் 15

"நீயில்லாம நான் நானா இல்லைடி பஞ்சாரே! என்னை மீட்டுக்கொடேன். ஒரு கிஸ்" என்ற விருபாட்சன், "ஞான் நின்னெ ஸ்நேஹிக்குன்னு பஞ்சாரே" என்றான்.

"ஞான் நிங்கள ஹேட் செய்து!"

"இருக்கட்டும். நம்ம சேர்ந்து வாழ என்னோட லவ் மட்டும் போதும். நீ ஹேட் பண்ணிக்கோ" என்றவனை முடிந்த மட்டும் முறைத்து வைத்தாள்.

"நான் சொன்னதை இப்போ நீங்க சொல்றீங்களா?"

"அப்படியே வச்சுக்கோ... எனக்கு லவ் பண்ண சொல்லிக்கொடேன் பஞ்சாரே" என்றவன், "இத்தனை வருஷம் வாழ உன் காதல் மட்டும் போதுமா இருந்தது. இப்போ என் காதல் போதும். உன்னால முடிஞ்சா என்னை நீ அதிகமாவே ஹேட் பண்ணலாம்" என்று கண்ணடித்தான்.

"முடியாதுன்னு நினைப்பா?" அவனுக்கு வலிக்க வைக்க வேண்டுமென்றே கேட்டிருந்தாள்.

"நோ... ஒரு செக்கெண்ட் கூட என்னைத்தாண்டி நீ எதுவும் யோசிக்கமாட்டேங்கிற என்னோட நினைப்பெல்லாம் ஆறு வருஷத்துக்கு முன்னவே தலைக்குப்புற கவுந்தாச்சு. வீம்புக்குன்னாவுது உன்னால முடியும்னு செய்து காட்டுவ நீ" என்ற விருபாட்சன், "ஹேட் பண்றதுன்னு முடிவு பண்ணாலும் என்னை உன் பக்கத்துல வச்சிக்கிட்டே பண்ணுன்னு சொல்றேன். இனியும் உன்னைவிட்டு என்னால இருக்க முடியாதும்மா" என்று இரு கைகளையும் உயர்த்தி வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருந்தான், நீயின்றி நானில்லை என்பதை உணர்த்தியவனாக.

அப்பட்டமான அவனின் காதல் வெளிப்படுத்தலில் அவள் தான் உறைந்திருந்தாள்.

"நம்ப முடியலையா?"

அவளின் தலை தன்னைப்போல் ஆமென்று அசைந்திருந்தது.

"என்னாலே என்னை நம்ப முடியல... அப்போவே லவ் உன் மேல. நீ கொடுத்து பழக்கிட்ட, அதனால எனக்கு உன்கிட்ட காட்டணும் தெரியாமப்போச்சு" என்றான்.

"நான் ஒத்துகிறேன்... உன்னை அதிகத்துக்கும் லவ் பண்றேன். என்ன சொல்லத் தெரியல. டீனேஜ் பையன் மாதிரி அட்ராக்டிவ்வா எப்படி எக்ஸ்போஸ் பண்ணனும் சுத்தமா தெரியல. வயசெல்லாம் கடந்துட்டதாலோ என்னவோ இப்பவும் என்னோட லவ்வை உனக்கு சரியா கன்வே பண்றனான்னு டவுட்டாவே இருக்கு" என்றான்.

அவன் இத்தனை இறங்கி மனதை ஒப்புக்கொள்வான் என்பதிலெல்லாம் சுத்தமாக நம்பிக்கையற்று இருந்தவளுக்கு, மனதிற்குள் இடியும் மழையுமாய் குளிர்ந்தது.

"இருக்கிற இடம் என்னன்னு கூட பார்க்கமாட்டேன். அசையாம பார்க்குற ரெண்டு கண்ணையும் விழுங்கி வச்சிடுவேன்... பார்த்து டெம்ப்ட் பண்ணாதடி!"

"விரூப் கூட்டிட்டுப் போலான்னுதான் வந்தேன்." உதடு சுளித்தாள்.

"அப்போ நான் வர வேண்டாமா?"

"உங்க இஷ்டம்" என்றவள், "விரூப் போவோம்" என்றழைத்தாள்.

"தேங்க்ஸ் ஆண்ட்டி" என்று மரியா அவனுடன் விளையாடியதற்கு நன்றி சொல்லியவனாக கீழிறங்கிய விரூப்,

"டாட் வரந்ந்னு" என்றான்.

விருபாட்சனை அழுத்தமாகப் பார்த்த விதுஷிகா பார்வையை மாற்றாது விரூப்பின் கையை பிடித்து அழைத்துச் சென்றவளாக வண்டியிலேறி அமர்ந்திருந்தாள்.

வண்டியை உயிர்ப்பித்தப் பின்னரும் அவளின் பார்வை மாறவில்லை. விருபாட்சனின் இதழ் தவழ்ந்த புன்னகையும் தீரவில்லை.

"வன் செக்" என்ற விருபாட்சன், காவல் நிலைய வாகனத்திலிருந்து தன்னுடைய பையை எடுத்து வந்தவனாக, விதுவின் வண்டியில் பின்னிருக்கையில் வைத்தான்.

என்னோட வாசம் உன்னோடுதான் என்பதை சொல்லாது சொல்லியிருந்தான்.

அவளமர்ந்திருந்த ஓட்டுநர் இருக்கையின் பக்கம் வந்தவன், அவளின் முகமருகே குனிந்து,

"நேத்து நைட் ரயில்வே ஸ்டேஷன் வந்து இறங்கினதும் சாப்பிட்டது. இப்போவர சிங்கிள் டீ கூட இல்லை. இந்த ஊர்ல எது எங்க இருக்குன்னும் தெரியல. பசிக்குது... மேடம் குக் பண்ணி வைக்கிறீங்களா?" எனக் கேட்டான்.

"வண்டியிலேறு..."

"ஹான்..."

"ஏறுடா!"

"என்னடி அதட்டுற?"

"அதட்டினதே இல்லையா என்ன?" என்றவள், "இப்போ உனக்கு வொர்க் இருக்கா?" என்றாள்.

"இல்லையே..." என்ற விருபாட்சன், "இருந்தாலும் இல்லைதான். பொண்டாட்டி கூப்பிடும்போது வேலையா முக்கியம்" என்றவனாக, காவல்துறை வண்டியின் அருகே சென்றான்.

"வேலையா முக்கியம்" என்று விருபாட்சன் சொன்னதை, உண்மைக்கும் நம்ப முடியாது அவனையே வெறித்திருந்தாள் விதுஷிகா.

"நான் போகணும் விது." எதுவொன்றாக இருந்தாலும் விருபாட்சனின் ஒரே பதில் இது மட்டுமாகத்தான் இருந்திருக்கிறது. வேலை ஒன்றே அவனது தலையாய கடமையாக இருந்துள்ளது.

ஆனால் இன்று அவன், அந்த வேலையே உனக்கு அடுத்தென சொல்லியதில், எப்படி இதனை ஏற்க வேண்டுமென்றே அவளுக்குத் தெரியவில்லை.

'பிடிச்சிருக்கு.' அவள் காத்துக் கிடந்த அவனது காதல். கிடைக்காதென ஏங்கி விலகி வந்த ஒன்று. சிறு சிறு வார்த்தைகளிலும் அவன் காட்டிடும்போதும் அன்றைய வலிகளெல்லாம் மாயமாவதை உணர்ந்தாள்.

'லவ் யூ சக்கரக்குட்டா!'

அவளின் அகக்குரல் கேட்டதுபோல் திரும்பிப் பார்த்து கண்ணடித்திருந்தான்.

டேஷ்போர்டில் எதையோ தேடியவனாக, நிமிர்ந்து நின்று இடையில் கைகளைக் குற்றி உதடுகளை மடித்தவனாக அங்கேயே நின்றிருந்த மரியாவையும், உள்ளே சரவணனுடன் பேசிக் கொண்டிருந்த தேஜாசையும் ஒரு பார்வைப் பார்த்தவனாக புன்னகைத்தவாறே,

"எமர்ஜென்சின்னா கால் பண்ணுங்க மரியா" என்றான் விருபாட்சன்.

"ஓகே சாரே!"

விதுஷிகாவின் வாகனத்தை நோக்கி அடி வைத்த விருபாட்சன், நின்று திரும்பி...

"என்கிட்ட எதுவும் சொல்லணுமா மரியா?" எனக் கேட்டான்.

அவள் இல்லையென குழம்பிய முகத்தோடு தலையசைக்க,

"என்னை நம்பினா நிச்சயம் கைவிடமாட்டேன்" என்றவனாக நகர்ந்திட்டான்.

மரியா புரியாது பார்த்திருந்தாள்.

விரூப்பை தனது மடியில் அமர்த்திக் கொண்டவனாக விதுஷிகாவின் பக்க இருக்கையில் அமர்ந்தான்.

"என்னாச்சு?"

விருபாட்சனின் நெற்றி சுருங்கியிருக்கவே வண்டியை இயக்கியவளாக அவனின் முகம் பாராது கேட்டிருந்தாள்.

"இப்பவும் என்னை புரியுதா?" என்ற விருபாட்சன், "அப்போ நான் உன்னை நிறைய லவ் பண்றேங்கிறது ஏன் உனக்கு புரியல?" எனக் கேட்டான்.

"நான் எதுவுமே கேட்கல" என்றவள், "நானா எல்லாம் புரிஞ்சிக்கனும்னா, கொஞ்சமாவது வெளிய காட்டியிருக்கணும்" என்று கடுகடுத்தாள்.

"நான் கொடுக்கிறதை வாங்கிட்டு மட்டுமே இருக்காதடா மடையா? எனக்கு உன்கிட்ட வேணுங்கிறதை கொஞ்சமாவது திருப்பிக் கொடுன்னு மண்டையில நாலு தட்டியிருக்கலாமே" என்ற விருபாட்சன், "நீ என்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்றன்னே தெரியாமப்போச்சுடி என்டெ பஞ்சாரே!" என்றான்.

விதுஷிகாவின் விழிகள் இரண்டும் கலங்கி படபடத்தன.

"எல்லாத்துக்கும் சாரி விது" என்ற விருபாட்சன், "நீ என்கிட்ட டூ டைம்ஸ் தான் கேட்ட... நான் உன்னை மாதிரி ரொம்ப சீன் போடாம மேரேஜ் பண்ணிக்கிட்டேன்ல. இப்போ நான் கேட்கும்போது எதுக்கு இவ்ளோ வீராப்பு உனக்கு" என்றான்.

"ஏதாவது பேசின கொன்னுடுவேன் உன்னை. கொஞ்சம் வாய் மூடிட்டு வாடா" என்றவள், மகனை பார்த்தாள்.

"கார் மூவ் ஆனதுமே தூங்கிட்டான்."

"என்னைவிட்டு எப்படி இத்தனை வருஷம் இருக்க முடிஞ்சுது உன்னால? எனக்கு புரியவே இல்லை. நான் இல்லாம ரெண்டு நாள் கூட இருக்க முடியாதுன்னு திரும்பி வந்திடுவேன்னு ரொம்ப நம்பினேன். அந்த நம்பிக்கை கொடுத்த ஏமாற்றம் கோவமாகிடுச்சு. நீயா வந்த, நீயா போயிட்டன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு என் கோபத்தையும் குறையவிடாம இழுத்துப் பிடிச்சு... என்னைவிட்டுப் போனவளை நான் தேடிப்போகணுமான்னு ஈகோ. இருந்திட்டேன். ஆனால் சத்தியமா நீயில்லாம இருக்க முடியலடி. உனக்கு மொத்தமா என்னை பழக்கிவிட்டிருக்க நீ! உன்னை உள்ளுக்குள்ள எவ்ளோ தேடினேன் தெரியுமா?" என்றவன் அவள் மீதான மொத்த காதலுக்கும் வார்த்தையால் வடிவம் கொடுத்தான்.

அவளுக்கு எப்படி இருக்கிறதாம்... வறண்ட மனமெங்கும் பூ பூக்கும் உணர்வு.

ஸ்டியரிங்கை பிடித்திருந்த உள்ளங்கைக்குள் குளிர்ந்திட, தேகம் முழுக்க சிலிர்த்து அடங்கியது.

"நிறைய பேசுறேன்ல" என்ற விருபாட்சன், "என்னவோ தெரியல... மொத்தமா உன்கிட்ட கொட்டிடனும். முழுசா உன் கால்ல விழுந்திடனும் போலிருக்கு. உன்னோட லவ், என்னோட பஞ்சாரேவை ரொம்பவே மிஸ் பண்றேன். என்னோட லவ்வை பொறுமையா காட்டுற பொறுமையெல்லாம் எனக்கில்லை. மொத்தமா காட்டி, உன் கைக்குள்ள அடைஞ்சிக்கணும், உனக்குள்ள சுருண்டுக்கணும்" என்றவனாக இருக்கையின் பின்னால் தலை சாய்த்து முகம் உயர்த்தியவனாக இமைகள் மூடியிருந்தான்.

அவனது மூடிய விழிகளுக்குள் வலி கரைக்கும் வழியாய் ஊத்திட்ட நீர் ஓரமிறங்கியது.

விருபாட்சனின் அத்தோற்றம், கண்ணீர், அவனது பஞ்சாரேவின் ஏக்கம், எதிர்பார்ப்புகள் யாவற்றையும் பூர்த்தி செய்திருக்க...

"சக்கரக்குட்டா" என்று ஓசையின்றி மொழிந்தவளாக, அவனின் கன்னத்தில் கை வைத்து அழுத்தம் கொடுத்தாள்.

வெகு வருடங்களுக்குப் பின்னர், தன்னவளின் ஆதுரமான தீண்டல். பட்டென்று இமைகள் திறந்திட, தேங்கிய நீர் கரையுடைத்து கன்னம் வழியும் முன்னர் பெருவிரலால் துடைத்திருந்தாள்.

"பஞ்சாரே!"

அவளோ இருபக்கமும் தலையசைத்தவளாக வண்டியிலிருந்து இறங்கி வேகமாக வீட்டிற்குள் சென்றிருந்தாள்.

அதன் பின்னரே வீடு வந்தது, வண்டி நின்றதென நிகழ் புரிந்த விருபாட்சன், மகனை தூக்கிக்கொண்டு இறங்கினான்.

விருபாட்சன் வீட்டிற்குள் வர,

மூடிய அறைக்குள்ளிருந்து விதுஷிகாவின் கதறல்.

வீட்டைச் சுற்றிப் பார்த்த விருபாட்சன் மற்றொரு அறை திறந்திருக்க, விரூப்பை அவ்வறையில் படுக்க வைத்து வெளியில் வந்தான்.

அன்று போலவே இன்றும் அவனது விதுவின் அழுகை உயிரை வதைத்திட, மூடியிருந்த அறையின் முன் சென்று கதவில் சாய்ந்தவனாக அமர்ந்திட்டான்.

அவளின் மன உணர்வுகளை அவனால் விளங்கிக்கொள்ள முடிந்தது.

கடந்த ஆறு வருடங்களாக அவளின்றி தான் அனுபவித்த வலியை, மூன்று வருடங்களாக அவளுடன் இருந்துகொண்டே அவளுக்கு அளித்திருக்கிறோம் எனும் பிரிவில் உண்டான புரிந்துணர்வு இக்கணம் அதிக வலியைக் கொடுத்திட்டது.

"பஞ்சாரே!" தொண்டை அடைத்திட, இதயத்தை நீவிவிட்டுக் கொண்டான்.

"இப்போ வந்து இவ்ளோ சொல்றவன் அப்போவே உன்னோட லவ்வை நான் அலட்சியமா நினைக்கல, நானும் உன்னை லவ் பண்றேன் சொல்லியிருக்கலாம்ல" என்று உள்ளிருந்து கத்தியவள், கதவின் மீது எதையோ தூக்கி எறிந்த சத்தம். அதனைத் தொடர்ந்து அவளும் கதவின் மீது சாய்ந்து சரிந்து தரை அமரும் ஓசை.

"இன்னும் எவ்ளோ விளக்கம் கொடுத்தாலும் முடிஞ்ச எதுவும் சரியாகாது தெரியும். என்னை அப்படியே ஏத்துக்கோடி. இனி நான் இப்படித்தான் இருப்பேன்னு உனக்கு எந்தவொரு உறுதியையும் பொய்யா சொல்ல எனக்கு மனசில்லை. என்னோட இப்படியெல்லாம் வாழணும்னு நீ எதிர்பார்த்ததையெல்லாம் ஃபுல்ஃபில் பண்ண எனக்கொரு சான்ஸ் கொடு" என்றான்.

வாழும் வாழ்வில் வாழ்ந்த வாழ்வின் வலிகளெல்லாம் மறைக்கப்படலாம். அழிக்க முடியாதே! எப்போதும் தீரா ஏக்கம் தானே அது. அதிலும் விருபாட்சன் காட்டிய அலட்சியமெல்லாம்... கண்களை இறுக மூடியவள் கால்களைக் கட்டிக் கொண்டவளாக,

"லவ் யூ ஏட்டா" என்று மூச்சு விடாது முணுமுணுத்தாள்.

ஆழ்ந்த அமைதியில் அவளின் அரட்டல்கள் செவி நுழைந்திட,

"கதவு திற விது" என்றான்.

"உன்னை அழ வச்சிட்டேனா! என்டெ சக்கரக்குட்டா எனக்காக அழுவன்னு தெரியாதே! தெரிஞ்சிருந்தா வலிக்க வச்சிட்டு வந்திருக்கமாட்டேன். எவ்ளோ வலியா இருந்திருந்தாலும் உனக்காகத் தாங்கிட்டு உன்னோடவே இருந்திருப்பேன் ஏட்டா. நான் இல்லைன்னாலும் உனக்கு ஒன்னுமில்லன்னு நினைச்சிட்டேன். சாரி... சாரி டா சக்கரக்குட்டா."

"டேய்... விது... டோர் ஓப்பன் பண்ணுடி."

"எனக்கு என்மேலயே கோபமா வருது ஏட்டா!"

"ம்ப்ச்... பஞ்சாரே!" அவனின் குரலின் உடைதல் அவளை மேலும் அழ வைத்தது.

"உன்மேல நீயே கோபப்படுற அளவுக்கு நீ எந்த தப்பும் பண்ணலடி. எல்லாம் நான் தான். கதவ திறடா."

கதவிற்கு அந்தப்பக்கம் அவள் துடித்திட, இந்தப்பக்கம் அவனுக்கு மூச்சடைக்கும் உணர்வு.

"விது..."

அவளின் இந்த அழுகையும் அவனுக்கு கொடுத்திட்ட வலியால் அல்லவா, இப்போதும் அவளின் காதலில் அவனது மனம் சுகமாய் கரைந்தது.

"ஏன் டி என்மேல இவ்ளோ லவ்?"

விருபாட்சன் கேட்டு முடிக்க, வேகமாக கதவை திறந்தவள், காற்றுக்கும் இடமின்றி அவனுள் புதைந்திருந்தாள்.

"பிகாஸ், ஐ லவ் யூ ஏட்டா!"

விருபாட்சனின் கன்னம் ஏந்தியவள், கண்ணீர் தடத்தோடு, அவனது இதழோடு இதழ் பொருத்தியிருந்தாள்.

அழுத்தத்தின் அதீதமாய். ஜீவன் இணையும் பந்தமாய்.

இருவரின் உயிர்த்தீண்டும் பயணம், அவர்களது வாழ்வின் பயணத்தின் முதல் அடிக்கு பயணித்திருந்தது.

இன்பமாய் தொடங்கி, மகிழ்வின் ஆர்ப்பரிப்பில் நெருக்கம் கொண்ட பந்தம்... அவனது அலட்சியத்திலும், அவளது எதிர்பார்ப்புகளிலும் சிறுக சிறுக உடைதல் கொண்டிருந்தது.
 

shasri

Member
Joined
Jul 16, 2025
Messages
77
Reaction score
57
Points
18
Fantastic epi 😍😍 விதுவின் காதல் அசத்தல் 👌🥰 பார்த்து அளவா லவ் பண்ணுங்க டா அப்பறம் பிரிச்சுவிட உடனே வில்லனை எறக்கீடுவாங்க
 
Joined
Aug 21, 2026
Messages
38
Reaction score
58
Points
18
Fantastic epi 😍😍 விதுவின் காதல் அசத்தல் 👌🥰 பார்த்து அளவா லவ் பண்ணுங்க டா அப்பறம் பிரிச்சுவிட உடனே வில்லனை எறக்கீடுவாங்க
🤣🤣🤣🤣 Thank you sis 😍
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,345
Reaction score
3,210
Points
113
அருமையான பதிவு

விரூப் மனசுக்குள்ளே காதலை வச்சிருக்கான்

இவள் வெளிப்படையாக

நிறைய இடங்களில் இப்படி தான் நடக்குது

3 வருடம் கூட சேர்ந்து வாழ்ந்தா 6 வருடம் பிரிவா?
 
Joined
Aug 21, 2026
Messages
38
Reaction score
58
Points
18
அருமையான பதிவு

விரூப் மனசுக்குள்ளே காதலை வச்சிருக்கான்

இவள் வெளிப்படையாக

நிறைய இடங்களில் இப்படி தான் நடக்குது

3 வருடம் கூட சேர்ந்து வாழ்ந்தா 6 வருடம் பிரிவா?
அதான
 
Top Bottom