நீயின்றி நிழலும் துணையில்லை 13 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நீயின்றி நிழலும் துணையில்லை 13

New updates

LATEST
Joined
Aug 21, 2026
Messages
30
Reaction score
46
Points
18
அத்தியாயம் 13 (a)

வழக்கு ஒன்றின் தகவல்கள் அறிந்திட, குற்றப்பத்திரிகை பெறுவதற்காக சென்று கொண்டிருந்த விதுஷிகா, தனக்கு எதிர்ப்பட்ட தேஜாஸ் குட்டியின் பேச்சால் உண்டான கடுகடுப்புடன் வேலையை முடித்துக்கொண்டு தன்னுடைய சேம்பரில் வந்தமர்ந்தாள்.

நேசன் கணினியில் வழக்குகளை பதிவு செய்து கொண்டிருந்தான்.

கண்களை மூடி அமர்ந்திருந்தவளின் தோற்றம் கவனித்தவன்,

"அங்க கிடந்த பாடியோட போட்டோஸ் பார்த்தேன். கொஞ்சம் கொடூரமாதான் இருக்கு. அதுக்கா இப்படி கடுப்பா இருக்கீங்க?" எனக் கேட்டான்.

"ம்ப்ச்..." என்று சலித்தவளாக கண்களை திறந்த விதுஷிகா, "என்டே தேஷ்யத்தின்டே (கடுப்பு) காரணம் ஆ எஸ்.ஐ. ஆணு. ஆயாளே எங்ஙனே ஒழிவாக்கணமென்னு (அவாய்ட்) போலும் அறியில்லேடா" என்றாள்.

அவள் டா என்றதுமே நேசனும் பணியை ஒதுக்கியவனாக, அவளது நண்பனாக பேசத் துவங்கியிருந்தான்.

"உன்னால முடிஞ்சளவுக்கு நீ சொல்லியாச்சு. புரிஞ்சிக்காம உன் பின்னாலே சுத்துறதுக்கெல்லாம் நீ பொறுப்பாக முடியாது. அவனோட டாபிக்கையே இக்னோர் பண்ணு" என்றான்.

"வர வர ரொம்ப போர்ஸ் பண்றான்."

"மாம்ஸ் மேல உனக்கு நிறைய லவ். ரொம்பவே லேட்டானாலும் நீ எதிர்பார்த்த மாதிரி வந்துட்டார். அப்புறமும் என்ன? தேஜாஸ் அவன் லவ்வை ஏத்துக்க சொல்லி கேட்க காரணமா சொல்றது, உன்னோட மாம்ஸ் இல்லங்கிறதுதான. ஒருமுறை அவரை கூட்டிட்டுப்போய் அவன்கிட்ட என்டெ பர்த்தாவ் அப்படின்னு இன்ட்ரோ கொடு. பய அமைதியாகிடுவான்" என்ற நேசன், "தேஜாஸ் மோசமான ஆளில்லை. உன்கிட்ட லவ் சொன்னதுக்கு பிறகு இத்தனை வருஷமா தன்மையாதான இருந்தான். இப்போ அவனுக்கு வீட்ல மேரேஜ் நெருக்கடி. உன்னை விட்டுடக்கூடாதுன்னு தொல்லை பண்றான்" என்று.

"மனஸ்ஸிலாகுன்னு."

"அப்புறம் என்ன? சில்" என்றவன் மீண்டும் கணினியில் கண் பதித்திட,

"நான் அவங்க இங்க வந்துட்டாங்கன்னு உன்கிட்ட சொல்லவே இல்லையே! உனக்கு எப்படித் தெரியும்?" என புருவத்தூக்கலோடு கேட்டிருந்தாள் விதுஷிகா.

நேசன் என்ன பதில் வழங்குவதென்று தடுமாற,

"நீ அவரோட டச்ல தான் இருக்க... ரைட்?" என்றாள்.

"நிஜமா இல்ல விது!" நேசன் கழுத்தை இரு விரலால் பிடித்துக்கொண்டு வேகமாகக் கூறினான்.

"நடிக்காதடா... இத்தனை வருஷமா என்னை ஏமாத்திட்டு இருந்திருக்க நீ" என்று கோபமாகப் பார்த்தாள்.

"நைட்டு லோக்கல் நியூசில் பார்த்தேன்னும் உருட்டாத" என தனது விழிகளை உருட்டினாள்.

"ஹலோ சீனியர்" என்று அழுத்தமாக அவளைப் பார்த்தவன், "நீங்க வீட்டை விட்டு கிளம்பின ரெண்டு நாள்ல... உன் சீனியர் இங்க இருக்காள். துணையா இருன்னு கால் பண்ணார். என்னைப்பற்றி பேச்சே கூடாது. உன்னையும் அவாய்ட் பண்ணிடுவாள். அவளைப்பற்றி எனக்கு நீ எந்த தகவலும் கொடுக்க வேணாம். பார்த்துக்கோ அப்படின்னு வச்சிட்டார். அதுக்கு அப்புறம் இத்தனை வருஷத்தில் ஒரு கால் கிடையாது. சென்னை போகும்போது வீட்டுக்குப் போனாலும் அத்தையை மட்டும்தான் பார்க்க முடியும். அப்படியே அவரைப் பார்த்தாலும் என்னை யாரோங்கிற மாதிரி போயிடுவார் தெரியுமா? ஒரு வாரத்துக்கு முன்னதான் கால் பண்ணார். நான் வர்றேன், இப்போ உன்னோட மனநிலை எப்படி இருக்குன்னு கேட்டார். அவ்ளோதான். உன்னோட இருந்தும் நான் அவருக்கு துணையா இருந்திருக்கேன்னு நீ நினைச்சிடக் கூடாதுன்னு, என்கிட்டயும் பேசாமதான் இருந்தார்" என படபடவென சொல்லியிருந்தான்.

விதுஷிகா எதுவும் பேசாது பார்த்திருக்க...

"நீ எதிர்பார்க்கிறதையும் விட உன்னை மாம்ஸ் நிறைய லவ் பண்றார். என்ன எக்ஸ்போஸ் பண்ணத் தெரியல அவருக்கு. உன்னை மாதிரி லவ்ல பிஎச்டி இல்லை அவரு. உன்னை போக விட்டதுக்கூட, உன் மேல இருக்க லவ்வாலதான். இதை எப்போ நீ புரிஞ்சிக்கப்போறியோ" என்றவன், "எனக்கொரு கேஸ் ஹியரிங் இருக்கு" என வெளியேறியிருந்தான்.

மீண்டும் கண்களை மூடி இருக்கையில் பின் சாய்ந்தவளின் நினைவுகள் தன்னவனுடனான வாழ்வு தொடங்கிய நாட்களுக்குப் பயணித்தது.

பதிவாளர் அலுவலகம்.

விருபாட்சன் அவளுடைய காதலுக்கு சரியென்றானோ இல்லையோ? அவளுடனான திருமணத்திற்கு மனமுவந்து சம்மதம் வழங்கியிருந்தான். அதுவே அவள் மீதான அவனின் பிடித்தம் என்பதை அவன் உணர்ந்திட, அவளுக்கும் அக்கணம் அதுவே போதுமானதாக இருந்தது.

அன்று இரவு எட்டு மணிக்கு மேல் விருபாட்சனிடமிருந்து அவளுக்கு அழைப்பு. நம்ப முடியாதுதான் ஏற்றிருந்தாள்.

திருமணத்திற்கு சரி என்றவனை பத்து நாட்களாகியும் அவளால் பார்க்க முடியவில்லை. ஒரு வழக்கின் கலந்தாய்விற்காக கன்னியாகுமரி சென்றிருந்தான். எதிர்பாராத விதமாக அந்த வழக்கை அவனே உடனிருந்து முடித்து வைத்தால் நன்றாக இருக்குமென்று ஆணையர் கேட்டிட அவனால் மறுக்க முடியாது போனது. இரண்டு நாள் பயணம் பத்து நாளாகியிருந்தது.

"போன் பண்ணா திட்டுவாரோன்னு பயமா இருக்கு அத்தை" என்று அவனை காண முடியாதது, அவனுடன் பேச முடியாததற்கெல்லாம் கோமதியிடம் புலம்பித் தள்ளியிருந்தாள்.

"உனக்கு அவன்கிட்ட பயம் சொன்னா நான் நம்பனுமா?" எனக் கேட்ட கோமதி, "பழகிக்கோ" என்றிருந்தார்.

விருபாட்சன் திருமணமத்திற்கு சம்மதமென்றதுமே அவனிடம் சிறு சிறு விஷயங்களில் அவளிடத்தில் எதிர்பார்ப்புகள் முளைக்கத் துவங்கியிருந்ததோ? இருக்காது என்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் சூழ ஆரம்பித்ததை, எப்போது திருமணம் செய்து கொள்வானென்ற நாள் குறித்து அவள் கொண்டிருந்த ஏக்கம் அவளை உணர விடவில்லையோ? அவளுமே தன்னையறியாது அவனிடம் சிலவற்றை எதிர்பார்க்கத் துவங்கியிருந்தாள். இருக்காதென்ற சில நாட்களிலே!

"உங்க மகன் மனசுக்குள்ள நான் நினைவிருப்பேனா அத்தை?"

"அம்மா என்னையே நினைக்கிறானான்னு தெரியாது." கோமதி சாதாரணமாக சொல்லியிருந்தார். அவருக்கு மகனிடத்தில் பழகியதெல்லாம், அவளுக்கு இனிதான் பழக வேண்டும். முழுவதும் பழகுவதற்குள் அவளின் மனம் பிளவுராதிருந்தாலே பிரிவென்பது இல்லாதிருக்கும்.

"யோவ் சக்கரக்குட்டா... உன்னை லவ் பண்ண வைக்கிறேன்" என்று விடுதியில் தனதறை படுக்கையில் படுத்திருந்தவள், அலைபேசியில் அவனது புகைப்படம் பார்த்து காதல் செய்து கொண்டிருந்தாள்.

"ஒரு இடம் போனா... இப்போ இங்க இருக்கேன்... இந்த நேரம் அங்க வருவேன்... அப்படின்னு நல்ல பிள்ளையா சொல்லத் தெரியாதா? என்கிட்ட வேணாம்... அத்தைக்கிட்ட கூட சொல்ற பழக்கம் இல்லை போல" என்றவள், அவனின் கன்னத்தில் கிள்ள, அவனிடமிருந்து அழைப்பு வருவதற்கான அடையாளமாக சக்கரக்குட்டா என்று அவனது எண்ணை பதிந்து வைத்திருந்த பெயர் திரையில் குதித்தது.

"எந்தா அதிசயம்?" என்று விழிகள் விரித்தவள், ஒருமுறை தன்னை கிள்ளிப் பார்த்து வலிக்கவே நிஜம் தானென்று அழைப்பை ஏற்றிருந்தாள்.

"ரிஜிஸ்டர் ஆபிசில் சப்மிட் பண்ண உன்னோட ஐடிஸ் வேணும்? எடுத்துட்டு வா!"

ஒரு ஹலோ, ஹாய் எதுவுமில்லை. நேரடியாக விஷயத்திற்கு வந்திருந்தான்.

விதுஷிகா புரியாது மௌனித்தாள்.

"சொன்னது கேட்டுச்சா?"

"ஆங் ஏட்டா... பக்ஷே ஈ நேரத்துல... எப்படி ஞான் வருன்னது?"

"உன் பிஜி வெளியதான் நிக்கிறேன்."

அவன் சொன்னதும் நொடியும் தாமதிக்காது, பத்து நாட்களாக அவனை பார்த்திராத ஏக்கத்தினை தீர்க்கும் மார்க்கமாக மின்னலே அறையைவிட்டு ஓடி வந்திருந்தாள்.

மூன்றாவது மாடியில் அவளது அறை. இமைக்கும் நேரத்தில் அவன் முன் மூச்சிரைக்க கால் முட்டியில் கைகளை வைத்தவளாக குனிந்து நின்றிருந்தாள்.

தன்னுடைய இருசக்கர வாகனத்தில் இரண்டு பக்கமும் காலிட்டு அமர்ந்தவாக்கிலே நின்றிருந்தான் விருபாட்சன்.

"ஓடி வந்தியா?" மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியிருந்தவன், பக்கவாட்டில் தலையை திருப்பி, விழிகள் மட்டும் தாழ்த்தியவனாகக் கேட்டிருந்தான்.

அவளோ இருந்த நிலையில் மாற்றமில்லாது, கால் முட்டிகளில் வைத்திருந்த கைகளில் ஒன்றை தனது நெஞ்சிலும், மற்றொன்றை தன்னைப்போல் அவனது தொடையிலும் வைத்து மூச்சிரைத்தவள்...

"பார்த்து பத்து நாளாச்சு. உங்ககிட்ட லவ் சொல்றதுக்கு முன்ன கூட இவ்ளோ நாள் பார்க்காம இருந்ததில்லை. இப்போ நீங்க வரலன்னா, நாளைக்கு நானே கன்னியாகுமரி வந்திருப்பேன்" என்று மூச்சை இழுத்து இழுத்து வெளியேற்றியவளாக, வார்த்தைக்கு வார்த்தை இடைவெளிவிட்டு, காற்றாய் கூறிட, அவனது ஒற்றை புருவம் நெற்றி தவழும் முன்னுச்சியைத் தொட்டது.

அவனது இதயம் மெதுவாய் அவளின் காதலில் தத்தளிக்கத் துவங்கியது.

அவள் வெளிப்படையாக சொல்லிவிட்டாள். அவனுக்கு ஏனோ சொல்ல முடியவில்லை.

முன்னென்றால் இந்த பத்து நாட்களில் விருபாட்சனின் சிந்தை முழுக்க வழக்கும், குற்றவாளிகளும் மட்டுமே நிறைந்திருந்திருப்பர். ஆனால் தற்போது, "நான் கொடுக்கிற லவ்வை நீங்க வாங்கிகிட்டா மட்டும் போதும்" என்றவளின் காதல் ததும்பும் முகம் அவ்வபோது மனதிற்குள் அலைப்புற வைத்தது.

"இம்சை" என்று அவளை செல்லமாக அவன் திட்டுமளவிற்கு, அவனுள் நிறைந்து அவனை ஆட்டம் காண வைத்திருந்தாள். அதனின் தாக்கமே இக்கணம் அவன் அவள் முன் நிற்க காரணம்.

குனிந்திருந்தவள் விழிகளை மட்டும் உயர்த்தி அவனது கேள்விக்கு பதில் வழங்கிட, அவளின் கண்களுக்குள் ஊடுருவி தொலைந்தவன் தன்னை நிதானித்து பார்வையை இறக்கிட, சட்டென்று விழிகளை மாற்றை முகத்தை சாலையில் நேர்கொண்டு வைத்திருந்தான்.

"என்னாச்சு?"

"முதல்ல நேரா நில்லு" என்றவன், அவள் பக்கம் திரும்பவில்லை.

அவள்தான் அவனின் முகத்தை முழுமையாக காண அவன் முன் வந்து நின்றாள். இருவருக்குமிடையில் வண்டியின் முன்பகுதி தடையாய்.

"என்னடி டி சர்ட் இது?" அவளணிந்திருந்த ஓவர் சைஸ் டி சர்ட், அவள் ஓடிவந்து குனிந்து நின்றதில் கழுத்துக்கு கீழ் நன்கு சரிந்திருக்க, அவளின் முகம் தாண்டி பயணிக்க தன்னை ஆட்டி வைக்கத் துடிக்கும் கருவிழிகளை கட்டுப்படுத்த பெரும் பிரயத்தனப்பட்டவன், அடக்குதலின் சீற்றத்தை அவளிடம் காண்பித்திருந்தான்.

"உங்களோடது... அதான் பெருசா இருக்கு" என்றவள் பின்னிழுத்து சரி செய்தாள்.

அப்போதுதான் அவனுக்குமே அது தன்னுடையதென்று கருத்தில் பதிந்தது.

"ஹேய்..." என்றவன், "கோமதி..." என பற்களைக் கடித்தான்.

"அத்தைக்கு தெரியாம சுட்டுட்டு வந்தேன்." அவள் பாவமாக முகம் வைத்து சொல்ல, குவிந்து நின்ற அவளின் இதழ்களை பிடித்து கொஞ்ச வேண்டுமெனத் தோன்றிய வேகத்தில் கையை அவள் முகம் நோக்கி நீட்டியவன், அவள் உணரும் முன்பு சுதாரித்து இறக்கியிருந்தான்.

தன்னை பித்துப்பிடிக்க வைப்பவளின் மேல் கோபக்காதல் ஊற்றெடுக்க, "கழுட்டுடி" என்று அதட்டியவன், 'என்னையே கட்டிக்கிட்ட மாதிரி ஃபீலாவுது' என அவளுக்கு கேட்காது முணுமுணுத்திருந்தான்.

"வாய்க்குள்ள என்னவோ சொல்றீங்க" என்றவள், வண்டியின் தலைப்பகுதியில் கை வைத்தவளாக அவனை நெருங்கியிருந்தாள்.

இரவு நேர குளிர் காற்றோடு உயிர் நிறையும் அவளின் வாசம் உள்ளுக்குள் சிலிர்க்க வைத்திட, அக்கணம் அவனுக்கு காதலாய் பிதற்றிடத் தெரியவில்லை. பார்வையாலும் காட்டிடும் வித்தை அறிந்திருக்கவில்லை. மாறாக, தனது நிலையில் தானே அவளும் இருப்பாள் தன்னருகே எனும் எண்ணத்தில் கூச்செறிந்தான். அகத்தில் மகிழ்வு கொண்டான்.

காதலிக்கப்படுகிறோம் எனும் உணர்வில் சுகமாய் மிதந்தான்.

"நேரா என்னைப்பார்க்க வந்தீங்களா?"

விருபாட்சன் காக்கி உடையிலே வந்திருக்கக் கேட்டிருந்தாள்.

"உன்னை பார்க்க வரல. உன்கிட்ட வாங்கிட்டுப் போகலாம் வந்தேன்."

"எது? இந்த டி சர்ட்டையா?" என்றவள், "விட்டா நீங்களே கழட்டிப்பீங்க போல" என்றதோடு, "உங்களை நல்ல போலீஸ்ன்னுதான் லவ் பண்ணேன்" என்றாள்.

"அடியே" என்று அவளின் நெற்றியில் ஒற்றை விரல் வைத்து தள்ளியவன், "உன்னோட ஐடி ப்ரூஃப் பேப்பர்ஸ் கேட்டனே" என்றான்.

"அச்சோ, சோரி" என்று தற்போது தானே நெற்றியில் தட்டிக்கொண்டவள், "உங்களை பார்க்கணும் ஓடிவந்ததில் நீங்க கால்ல என்ன சொன்னீங்கன்னே நினைவில்லை. எடுத்திட்டு வர்றேன்" என்று உள்ளே செல்லத் திரும்பிட...

"மெதுவா நடந்து போயிட்டே வா! வெயிட் பண்றேன்" என்றான் விருபாட்சன்.

தொடர்ச்சி கீழே👇🏻
 
Joined
Aug 21, 2026
Messages
30
Reaction score
46
Points
18
தலையை மட்டும் திருப்பிப் பார்த்து புன்னகைத்தவள் சரியென தலையசைத்துச் சென்றாள்.

வண்டியின் கண்ணாடியில் தன் முகம் பார்த்தவன், மீசை நுனி பிடித்து முறுக்கியவனாக,

"ரொம்பப் பிடிக்குதா?" என தன்னிடமே கேட்டான்.

"நிறைய லவ் பண்றாள். இதயத்துல புதுசா அடிக்கடி அவள் நினைப்பு வந்து சில்லாக்குது. அப்போ பிடிக்குதுதான" என்று பதில் சொல்லியவன், "எக்ஸ்பிரஸ் பண்ண வர மாட்டேங்குது. அவளுக்கு என்னை புரியும்ல?" என்றான்.

அவளால் அவனது இத்தகையக் காதலை புரிந்துகொள்ள முடியாததனாலே அவர்களின் பிரிவு உண்டாகியிருந்தது.

விதுஷிகா சில நிமிடங்களில் அவன் கேட்டதை கொண்டு வந்திருந்தாள்.

அவள் கொடுத்தவற்றை வாங்கி பார்வையிட்டவனாக இருக்க...

"மேரேஜ் பண்ணிக்கப்போறோமா?" என்றாள். துள்ளலோடு.

"ம்ம்... மார்னிங் வெட்டிங்" என்றான்.

"டேட்?" சந்தோஷத்தின் ஆர்ப்பரிப்பாய் அவள் கேட்டிட, அவளின் முகம் பார்த்தவன்...

"டுமாரோ மார்னிங் வெட்டிங்" என்றான்.

அவள் அதிர்வுகொள்வாளென அவன் நினைக்க அவளோ, அதீத சந்தோஷத்தோடு, "ஆமாவா?" எனக் கேட்டிருந்தாள்.

"உனக்கு ஷாக்கிங்கா இல்லையா?"

"எதுக்கு? எனக்கு இந்த நிமிஷமேன்னாலும் ஓகேதான். பிகாஸ் ஐ ஹேவ் அன் ஸ்டாப்பபுல் லவ்" என அவன் கன்னத்தில் முத்தம் வைத்திருந்தாள்.

முத்தமிட்டு விலகிய பின்னரே, அடித்து விடுவானோ என அவள் தன்னிரு கன்னங்களிலும் கைகளை வைத்தவளாக இரண்டடி தள்ளி நின்றாள்.

"உன்னோட லவ் எப்பவும் இப்படியே இருக்குமா?"

அவன் கேட்ட உணர்வில் அவள் தத்தளித்திருக்க, விழிநீர் கோர்த்தவளாக ஆமென்ற மென் தலையசைப்போடு,

"லவ் யூ டூ த எண்ட் ஆஃப் மை லைஃப்" என்றாள்.

"அதிகத்துக்கும் பிடிக்குது. உன்னோட லவ்" என்றவனுக்கு ஏனோ ஐ டூ லவ் யூ என்று சொல்லத் தோன்றவில்லை.

"நம்ம வாழ்க்கைக்கு என் லவ் மட்டும் போதும்" என்று அவள் சொல்லிவிட்டதாலோ என்னவோ, அவளது காதல் வழி வாழ்ந்துபார்க்க நினைத்துவிட்டான்.

"மார்னிங் எயிட் ஓ க்ளாக். ரெடியா இரு" என வண்டியை உயிர்ப்பித்தவன் இயக்காது, "உன் சைட் யாரெல்லாம் வரணும்?" எனக் கேட்டான்.

"யாருமில்லா?"

"உன்னோட பிரதர்?"

"ஹீ இஸ் நாட் மை வோன் பிரதர்" என்றவள், "அச்சனின்டெ ஃபர்ஸ்ட் வைப் சன் ஆணு. அதிகம் பேசிக்கிட்டதில்லை. அவங்க அம்மே இறந்த உடனே அச்சன் என்டெ அம்மேவை விவாஹம் கழிச்சு. அந்த கோபம் இப்போ வரை சேட்டனுக்கு உண்டு. ரண்டு பேரும் முறைச்சிட்டே இருப்பாங்க. அப்படி ஏதோ சண்டையில, அவள் என்டெ பெண் குட்டியானு. நீ அவளோடு அடுப்பம் காணிக்கேண்டா (பழக வேண்டாம்) அச்சன் சொல்லி. அப்போ இருந்து, நானா பேசினா பேசுவாங்க. ஹெல்ப் கேட்டா செய்வாங்க. பக்ஷே அச்சன் முன்ன காணிக்கில்லா" என்றாள்.

"ஹ்ம்ம்..."

இவ்விடத்தில் நானிருக்கேன் உனக்கென்று அவன் சொல்ல வேண்டுமென அவளின் மனம் எதிர்பார்த்தது. தட்டி அடக்கி வைத்தாள்.

'முழுசா உன்கிட்ட வரட்டும் விது... உன்னை நிறைய லவ் பண்ண வச்சிடலாம்.'

"எதுவும் சொன்னியா?"

இல்லையென இட வலமாக தலையசைக்க...

"உன் அப்பாவுக்கு தெரிய வேண்டாமா?"

"நான் லா படிக்க ஜாயின் பண்ணப்போவே அவர் என்னை மகள்ன்னு மறந்து" என்றாள்.

"லா படிக்கிறதுல என்ன இருக்கு?"

"அம்மே லாயர் தான். அவங்களால தண்டனை வாங்கி, ஜெயிலிலிருந்து வெளிவந்தவன், அம்மேயே கொன்னு."

"உன்னோட சேஃப்டி நினைச்சு வேணாம் சொல்லியிருக்கார். அவர் பேசலன்னா என்ன? நீ அப்பான்னு நெருங்க வேண்டியதுதான?"

"அதுக்கு அவர் உயிரோட இருக்கணுமே!"

"காட்" என்றவன், "இதை முதல்லே சொல்லியிருக்கணும் நீ" என்றான்.

"அப்போ நான் என்னைப்பற்றி முழுசா உங்ககிட்ட எப்படி சொல்றதாம்?"

"நல்லா சொன்ன போ! வர்றேன்" என்றவனை, "வன் செக்" என்று நிறுத்தியிருந்தாள்.

"என்ன?"

விருபாட்சன் கேட்க, அவள் சாலையின் இருமங்கிலும் இருளில் யாரேனும் இருக்கின்றனரா என்று பார்த்தாள்.

அவளின் பார்வைக்கு அவனது பார்வையும் உலாவியது.

"இருட்டுக்குள்ள என்ன தேடுற?"

"ஒரு ரைட் கூட்டிப்போறீங்களா?" அவள் கண்கள் சுருக்கிக் கேட்ட விதத்தில் தன்னைப்போல் சரியென்றிருந்தான்.

"தேங்க் யூ சக்கரக்குட்டா!"

"பைக்ல போன்தில்லையா?"

"உங்களோட போனதில்லையே!"

'கரைய வச்சிடுவாப்போல.'

அவன் பின்னால் வண்டியில் அமர்ந்திட முயன்றவள்,

"உங்க ஷோல்டரில் கை வச்சா கோவப்படுவீங்களா?" எனக் கேட்டாள்.

"நடு ரோட்ல வச்சு முத்தமே கொடுத்தாச்சு. இப்போ இந்த கேள்வி அவசியமா? அநியாயம் பண்ற நீ!"

"ஓகே ஓகே... கூல்" என்றவள், அவனின் தோள் மீது கை வைத்து, வண்டியின் இரு பக்கமும் கால்களைப் போட்டவளாக அவனின் முதுகு உரச இடைவெளியின்றி அமர்ந்தாள்.

"விட்டா தலைக்கு மேல உட்கார்ந்துப்ப போல..."

"அது நாளைக்கு உங்க நேம் பக்கத்துல என் நேம் எழுதினதுக்கு அப்புறம்."

கன்னம் சுழிந்த முறுவலை இதழ்கள் குவித்து மறைத்தவன், உதடுகள் மடித்து வெட்கம் விலக்கினான்.

இதுபோன்ற இனிமையான தருணங்களெல்லாம் உள்ளதென்று அறிந்திராதவனுக்கு அவள் காட்டும் நொடிகளெல்லாம் தித்திப்பாய் அவனுள் சுவை சேர்த்தது.

அவளிடமிருந்து பெறப்படும் காதலின் சுவை கண்டவனுக்கு, தன்னால் காட்டப்பட வேண்டுமென்று தெரியாது போனது.

பெறுதலில் பழகியவனுக்கு, கொடுத்தலின் சுகம் அறியாது போனது.

மறுநாள் இருவரின் பந்தமும் ஒன்றென்றானது. அவளது பெயரோடு இணைந்து எழுதப்பட்ட அவனது பெயரால்.

"ஸ்மைல் பண்ணிட்டு கையெழுத்துப் போடலாமே!"

இவர்களை முன்பே பதிவாளர் அலுவலகம் அனுப்பி வைத்த விருபாட்சன், கால தாமதமாகவே அங்கு வந்து சேர்ந்தான். அதுவும் காக்கி உடையிலே!

"வந்ததும் லேட்டு... இதுல இந்த காக்கி வேற" என்று கோமதி மகனை அர்ச்சிக்க,

உள்ளுக்குள் வருத்தம் எழுந்த போதும், "அதான் வந்துட்டாங்களே அம்மாயி. முக்கியமான பணியா இருக்கும்" என்று அவனுக்கு பரிந்து நின்றாள்.

அங்கு தொடங்கிய அவளின் பரிந்து நிற்றல்... அனைத்திலும் தொடருமென்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

அவனுக்கு சாட்சியாக நேசன் கையெழுத்திட, கோமதி அவளுக்காகக் கையெழுத்திட்டிருந்தார்.

"உங்க பையன் நானு!"

"இருந்துட்டுப்போகட்டும். அதனாலென்னடா? உன்னையே ஓகே சொல்ல வச்சு கல்யாணம் பண்ணியிருக்க என் மருமகள் தான் எனக்கு முக்கியம். என்னால உன்னை சம்மதிக்க வைக்க முடிஞ்சுதா?" என்ற கோமதி, விதுஷிகாவின் கன்னம் வழித்து உதட்டில் ஒற்றிக்கொண்டார்.

"மாமியாரும் மருமகளும் சேர்ந்து உங்களை டீல்ல விட்டுடுவாங்க சார்" என்று நேசன் சிரித்தான்.

நேசன் கல்லூரியில் விதுஷிகாவின் ஜூனியர். அவளுக்கு இருக்கும் ஒரே நட்பும். அவள் சார்பாக அவன் மட்டுமே வந்திருந்தான்.

"இன்னும் என்னடா சார். மாமா சொல்லு" என்ற விதுஷிகா, "உங்களுக்கு ஓகேவா?" என விருபாட்சனிடம் கேட்டாள்.

"நீ சொன்னதுக்கு அப்புறம் அவன் ஓகே இல்லை சொல்லிடுவானா?" என்ற கோமதி... "இங்க ஒரே புழுக்கமா இருக்கு. அவன் மத்ததை முடிச்சிட்டு வரட்டும். நாம கார்ல ஏசியில உட்காருவோம்" என விதுஷிகாவைப் அழைத்துக்கொண்டு வெளியில் சென்றான்.

"நீ போகலையா?"

"அது வந்து சார்... விதுக்கு என்மேல பாசம் அதிகம். அதனால அப்படி சொல்லிட்டா, நீங்க எதுவும் நினைச்சிக்காதீங்க" என்றான்.

நேசனின் தோளில் கைப்போட்ட விருபாட்சன், "அவள் உனக்கு சிஸ்டர் அப்படின்னா நான் மாமா சரிதான. எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை. உனக்கு நாட் ஓகே அப்படின்னா நீ சார்ன்னே சொல்லலாம்" என்றான்.

அவள் மீது உருவாகியிருந்த காதலாலே, யாரென்று தெரியாது முதல்முறை பார்த்திட்ட நேசனையும் உறவாய் ஏற்றவனுக்கு, தனது உறவின் ஆழத்தை தன்னவளிடம் சேர்ப்பிக்கத் தெரியாது போனது.

"இப்போதான் நிம்மதியா இருக்கு மாம்ஸ்" என்ற நேசன், "உங்களை லவ் பண்றேன்னு என் காதை தினமும் பஞ்சராக்கிட்டு இருந்தாள். இனி நான் தப்பிச்சேன்" என்றான்.

"அதான் மொத்தமா நான் மாட்டியிருக்கேனே" என்ற விருபாட்சன், பதிவாளரிடம் சென்று,

"தேங்க்ஸ் மிஸ்டர்.வினோத். நைட் தான் சொன்னேன். அப்ளை டேட் அட்ஜஸ்ட் பண்ணி மார்னிங்கே முடிச்சுக் கொடுத்ததுக்கு" என்று கரம் பற்றி குலுக்கி விடுத்தான்.

"எதுக்கு மாம்ஸ் தேங்க்ஸ் சொன்னீங்க?"

"நைட்டு அவளை பார்க்கணும் தோணுச்சு. பிஜி முன்னாடி போய் நின்னுட்டேன். என்ன காரணம் சொல்றது தெரியாம ஐடிஸ் கொண்டுவர சொல்லிட்டேன். அப்ளை பண்ணா வன் மந்தாவது ஆகும். மேரேஜ் பண்ணிக்கப்போறோமான்னு கேட்டப்போ, அவள் முகத்துல" என்று இதயத்தில் கை வைத்து நீவிய விருபாட்சன், "சொல்லத் தெரியலடா! பட் உடனே பண்ணிக்கணும் தோணிச்சு. நைட்டே வினித்கிட்ட பேசிட்டேன். ஒரு நாள்ல முடியுற விஷயமில்லை இது. அதுக்குதான் தேங்க்ஸ். லாயர் உனக்குத் தெரியாதா புரோசிஜர்" என்றான்.

"புரோசிஜர் அவளுக்கும் தெரியும்ல."

"டெஃபனட்லி."

"நீங்க சொல்லாம வச்சிருக்க உங்க லவ் அவளுக்கு புரியும் நினைக்கிறீங்க?"

"புரியணும்" என்ற விருபாட்சன், "என்னவோ உள்ளுக்குள்ள இருக்கிற அளவுக்கு இந்த லவ்வை அவகிட்ட காட்ட வரமாட்டேங்குது" என்றான்.

"இப்போதான லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணியிருக்கீங்க. போகப்போக சரியாகிடும்" என்றான் நேசன்.

"பார்ப்போம்" என்ற விருபாட்சன்,

"ஒரு கேஸ் விசாரணை... பாதியில விட்டுட்டு வந்தேன். நீங்க வீட்டுக்குப் போங்க. நான் மதியம் வந்துடுறேன்" என்று இரு பெண்களுக்கும் பொதுவாய் கூறி, மனைவியின் முகம் காட்டும் வாட்டத்தை உணராதவனாக சென்றிருந்தான்.

திருமணமான தருணம். ஒன்றாக இணைந்து வீடுவரை வந்திருக்கலாமென்ற அவளின் எதிர்பார்ப்பின் ஏமாற்றம் மனதின் ஆழத்தில் படியத் தொடங்கியது.

"இன்னும் என்ன அப்படியே உட்கார்ந்திருக்க?" என்று வந்த நேசனின் குரலில் நிகழ் மீண்டிருந்தாள்.

"நான் கிளம்புறேன்."

"வீட்டுக்கா?" என்று நேசன் கேட்க,

"விரூப் அவரோட இருக்கான். ஸ்டேஷன் போயிட்டு கூட்டிட்டுப் போகணும்" என்றாள் விதுஷிகா.

"அப்போ மாம்ஸ்?"

"அவரா வந்தா வரட்டும்."

"இன்னும் என்ன கோவம் உனக்கு?" என்ற நேசன், "காரணமே இல்லாம பிரிஞ்சி வந்து... இப்பவும் அதையே பிடிச்சிக்கிட்டு நிக்கிற உன்மேல மாம்ஸ் தான் கோவப்படணும்" என்றான்.

"ஒருத்தரோட காரணம் மத்தவங்களுக்கு எப்போ பெருசா தெரிஞ்சிருக்கு" என்றவள், "அக்செப்ட் பண்ணிக்கிட்டனா தெரியல. ஆனால் இதுக்கு அப்புறம் அவங்கக்கூட இருக்கணும் தோணுது. விரூப்க்காக. அப்பாவையும், பிள்ளையையும் பிரிச்சிட்டேன்னு கில்டியா இருக்கு" என்றாள்.

"இது உனக்கு எப்பவோ புரிஞ்சிருக்கணும்" என்ற நேசன், "பாரஸ்ட் கேஸ் மாமா தான் டீல் பண்றார். அதுக்குதான் தேஜாஸ் வாரண்ட் சப்மிட் பண்ண வந்திருக்கான்" என்றான்.

"ஹோ... இன்ஸ்பெக்டர் யாரும் டீல் பண்ணுவாங்க நினைச்சேன்" என்றவள், "அப்போ கேஸ் டீடெயில்ஸ் உன் மாமாகிட்டவே வாங்கிக்கலாம்" என்று கூடலூர் காவல் நிலையம் செல்ல புறப்பட்டிருந்தாள்.
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,323
Reaction score
3,196
Points
113
இவ்வளவு காதலிச்சு பின்னே சுத்தி என்ன பிரயோஜனம்

அவன் மனசு புரிஞ்சு நடந்துக்காம வீம்பா மகனயும் கூப்பிட்டு வந்துட்டியே
 

shasri

Member
Joined
Jul 16, 2025
Messages
73
Reaction score
57
Points
18
என் காதல் மட்டும் போதும்னு எப்போ சொன்னாளோ அப்போவே அவனோட காதலையும் எதிர்ப்பார்க்க ஆரம்பிச்சிட்டாள்
 
Top Bottom