நீயின்றி நிழலும் துணையில்லை : 12 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நீயின்றி நிழலும் துணையில்லை : 12

New updates

LATEST

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,345
Reaction score
3,210
Points
113
அத்தியாயம் 12

கூடலூர் நீதிமன்ற வளாகம்.

தனக்கு முன்பு அமர்ந்திருந்த பெண்ணிடம் முடிந்தவரை பொறுமையாக வலியுறுத்திக் கொண்டிருந்தாள் விதுஷிகா.

"டிவோர்ஸ் நேடுன்னது ஈஸிதன்னே. பக்ஷே ஜீவனாம்ஷம் வேண்டி இல்லாத்த குற்றம் சுமத்தான் ஞான் தயாரல்ல" என்ற விதுஷிகா, "நிங்கள்டெ ஹஸ் வேண்டாம் பரயுன்னுண்டல்லே?" என்றாள்.

"டிவோர்ஸ் வேணும் மேம்." அப்பெண் அத்தனை திடமாக மொழிய,

"அதிகமா லவ் பண்றார், ஓவரா புரோடெக்ட் பண்றார் அப்படிங்கிறதையெல்லாம் காரணமா சொல்ல முடியாது" என்ற விதுஷிகா, "கள்ளம் பரைய ஞான் ஒப்புக்கொள்ளாம் இல்லா" என்றாள்.

"எனி அதர் வே மேம்?"

"வேற லாயர் காணாம்!"

"மேம்..."

"பிளீஸ்..." விதுஷிகா வாயிலை காண்பிக்க, அப்பெண் எழுந்து சென்றிடவே, "அதிகமா லவ் பண்றதும் டிவோர்ஸ்க்கு காரணமாகுமா என்ன?" என்று தனக்கு முன்னிருந்த தன்னுடைய உதவியாளரிடம் கேட்டவள், "நாளைக்கே இந்த லவ் கிடைக்கலன்னு இந்த மனுஷி ரொம்ப ஃபீல் பண்ணுவாள்" என்றாள்.

"இங்க எதுவுமே அதிகமானா கஷ்டம் தான் மேம்" என்ற உதவியாளர் நேசன், "அந்த திருட்டு கேசுக்கு இன்னைக்கு ஜட்ஜ்மெண்ட் மேம்" என்றான்.

"நீங்களே பார்த்துக்கோங்க நேசன்" என்றவள், "நான் அந்த பாரஸ்ட் கேஸ் என்னன்னு பாக்குறேன்" என வெளியில் செல்ல, அவளுக்கு எதிர்ப்பட்டான் தேஜாஸ் குட்டி.

"ஹாய் விது..." தேஜாஸ் குட்டி நீண்ட பல் வரிசையோடு அவள் முன் வந்து நின்றான்.

மனதில் மூண்ட எரிச்சலை முகத்தில் காட்டிடாமல் இருக்க பெரும் பிரயத்தனப்பட்டாள்.

"ஹாய் மிஸ்டர் தேஜாஸ்" என்றவள், " முக்கிய ஜோலி உண்டு" என்று நகர, "மோளே சோதிச்சோ?" என்று நிறுத்தியிருந்தான்.

"ஞான் முதல்லே பரஞ்சு தேஜாஸ். சுத்தமாயிட்டு விருப்பமில்லா." விருப்பமில்லை என்பதை அதிக அழுத்தத்துடன் மொழிந்தாள்.

"ஆறு வருஷமாய் சிங்கிலாயிட்டு இருந்து... எனக்கு ஓகே சொல்லாம் மோளே" என்றவன், "நீ கவர்மென்ட் அட்வகேட். ஞான் சாதாரண எஸ்.ஐ. அதுதன்னே என்னை ரிஜெக்ட் செய்யாம்" என்றான்.

"லுக் தேஜாஸ்..." என்று அவன்முன் விரல் நீட்டியவள், "எனக்கு மேரேஜ் ஆகி பத்து வருஷமாகுது. ஒன்பது வயசில ஆண் குட்டி உண்டு. என்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணிட்டு நிக்கிறது நன்னாயில்ல" என்றாள்.

"ஒன்பது வயஸ்ஸுள்ள பையனுண்டாயிட்டும் என்னா? நின்னே காணுந்ந ஆரும் முப்பது வயஸ்ஸாகாராயி என்னு பரயாணில்லா" என்ற தேஜாஸ், "சிங்கிள் மதராயிட்டு இருக்கிறது வளர கஷ்டமானு" என்றான்.

"நான் சிங்கிள் மதரில்லன்னு நிறைய முறை பரஞ்சு மிஸ்டர். தேஜாஸ்" என்று விதுஷிகா பற்களைக் கடிக்க,

"டிரை டூ அண்டர்ஸ்டேண்ட் மை பிரேமம் மோளே" என்றான்.

"என்டெ ஹஸ் அதர் ஸ்டேட்டில் டியூட்டி செய்து. அதுதன்னே ஞான் இவ்விட தனியாயிட்டு இருக்க காரணம்."

"ஆறு வருஷமாயிட்டா? ஒரு திவசவும் இவிடெ வந்து நோக்கியிட்டில்லல்லோ."

"ஓ காட்" என்றவள் தலையை பிடித்துக்கொண்டாள்.

"இத்தனை வருஷங்களாயிட்டு ஞான் பொறுமையா வெயிட் செய்து. இப்போ என்டெ அம்மை விவாஹம் கழிக்க சீரியசானு. அதுதன்னே ஞான் ஃபோர்ஸ் செய்து" என்றான் தேஜாஸ்.

விதுஷிகா பதிலேதும் சொல்லாது அமைதியாக நகர,

"ஞான் பிரேமம் கொண்ட காலத்தில் நினக்கு விவாஹம் கழிஞ்ஞென்னு அறியில்லா. நினக்கு ஒரு குட்டியன்டெ அம்மையான்னு அறிஞ்ஞப்போள் ஞான் ஒருபாடு வேதனிச்சு. அதுகொண்டாணு ஞான் அகன்னு (விலகி) நின்னது. பக்ஷே நீ நிண்டெ பர்த்தாவினொப்பம் (கணவர்) ஜீவிக்குன்னில்லான்னு அறிஞதில் நின்னில் நின்னு அகன்னு நிக்கான் எனிக்கு இயலா. மனஸ்ஸிலாக்கணம் (புரிஞ்சிக்கோ)." மன்றாடி வேண்டினான்.

"என்டெ பர்த்தாவி வந்து" என்று அழுத்தமாக உரைத்தவள், தேஜாசின் முகம் காட்டிய அதிர்வையும், வேதனையையும் காணாது வேகமாக சென்றிருந்தாள்.

உண்மையாக நேசித்துவிட்டான் போலும், வலி ஒன்று உயிர் உருவுவதை உணர்ந்தவன் கலங்கிய விழிகளோடு அவ்வளாகம் விட்டு சென்றான்.

************

சண்முகத்திடமிருந்து அழைப்பு வரவே, அதுலிடம் பேசிக்கொண்டிருந்த விருபாட்சன் விரைந்து அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

"விரூப் இவ்விட என்கூட நிக்காம்" என்று அதுல் சொல்லியபோதும், வேண்டாமென மறுத்து தன்னுடனே அழைத்துச் சென்றிருந்தான் விருபாட்சன்.

விரூப்பிற்கும் எங்கு செல்கின்றோமென்ற கவலையெல்லாம் இல்லை. தந்தையுடன் சுற்றுவதில் அலாதி மகிழ்வு கொண்டான்.

நேராக காவல் நிலையம் வந்திறங்கிய விருபாட்சன்,

"ஸ்டேஷன் உள்ள வர்றியா பேபி?" எனக் கேட்டான்.

"நோ டாட். ஞான் இவ்விட வண்டிக்குள்ளே இருக்காம்" என்ற விரூப், "கிவ் மீ யூர் மொபைல்?" என்றான்.

"நோ மொபைல்... நோ வீடியோஸ்" என்ற விருபாட்சன், "வெயிட் அ மினிட்" என்றவனாக, இன்னமும் வண்டியிலே இருந்திடும் தனது பையிலிருந்து மகனுக்காக வாங்கி வந்திருந்த பாக்கெட் சதுரங்க அட்டையை எடுத்துக் கொடுத்தான்.

"வாவ்... டாட் அறியுமோ?"

"அறியும்... அறியும்... என்டெ குட்டானுக்கு செஸ் வளர இஷ்டம்" என்ற விருபாட்சன், விரூப்பில் நெற்றியில் முட்டி விலகிட, சிறுவனிடத்தில் முகம் கொள்ளா மலர்ச்சி.

"மேக்னட் மூவபுல்... ஈசி டூ ஹேண்ட்லிங்" என்ற விருபாட்சன், "குட்டி பிளே செய்திட்டு இருக்கான். ஞான் வேகம் வரனுண்டு" என்றான்.

"அச்சன் மலையாளம் சம்சாரிக்குன்னு..."

"நினக்கு அதுதன்னே ஈசி" என்ற விருபாட்சன், "உன் அம்மா சொல்லிக்கொடுத்த நாலு வார்த்தையை வச்சு ஓட்டுறேன்" என சிரித்தான்.

"டாட்... இவ்விட வரு" என்று தனது முகம் அருகே விருபாட்சனை தாழ்ந்திட அழைத்த விரூப், அவனது கன்னத்தில் முத்தமிட்டு, "சிரிக்கும்போ நல்ல அழகாயிட்டு உண்டு" என்றான்.

"உன்னைவிடவா?" என்று மகனின் கன்னம் தட்டிய விருபாட்சன், "வண்டியைவிட்டு இறங்கக்கூடாது" என்றான்.

விரூப், "டன் டாட்" என்க, விருபாட்சன் காவல் நிலையத்திற்குள்ளே சென்றான்.

அங்கு சண்முகம் நின்றிருக்க, அவனுக்கு அருகிலிருந்த இருக்கையில் பாலி அமர்ந்திருந்தான்.

விருபாட்சனை கண்டதும் எழுந்து நின்ற பாலி, "ஹலோ சாரே" என கரம் நீட்டிட, விருபாட்சன் முறுவலோடு பற்றி விடுத்தான்.

"பவானி மேம்?" என்று விருபாட்சன் சண்முகத்தை ஏறிட, "கோர்ட் போயி" என மரியா பதில் வழங்கினாள்.

"இஃப் யூ டோண்ட் மைண்ட்... என்னோட சன் வெளியில் இருக்கான். கூட இருக்க முடியுமா?" என விருபாட்சன் தன்மையாகக் கேட்டிட, அவனை முதல்முறை கண்டதும் தோன்றிய கோபம் கூட மரியாவுக்கு விலகியது.

சரியென தலையசைத்தவளாக வெளியேறியவளுக்கு, காட்டில் நடப்பவற்றைப் பற்றி பேசுவார்களோ என்று சிந்தை முழுக்க அங்குதான் இருந்தது.

"சரவணன், குட்டா ரெண்டு பேரும் எங்க?" என்ற விருபாட்சன், பாலியின் அருகே இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்தான்.

"ஸ்பாட்டில் கிடைத்த டை டேக்கில் நெம்பர் முப்பத்திரண்டுன்ணு இருந்தது சார். அதான் எந்த கேஸ் ஃபைலோடதா இருக்கும்ன்னு ரெண்டு பேரும் டாக்குமெண்ட் ரூமில் தேடிட்டு இருக்காங்க" என்றான் சண்முகம்.

"குட்..." என்ற விருபாட்சன், "சம்பவம் காட்டில் நடந்திருக்கு. எலும்புகள் யாரோடது, காணாமல் போன பாடி யாரோடது எதுவும் தெரியாது. இப்போவரை கேசை எப்படி கொண்டுபோகலாம் அப்படிங்கிறதுக்கு சின்ன வே கூட என்கிட்ட இல்லை. உங்க ஆபிசிலிருந்து எடுத்த ஹார்ட் டிஸ்க் இனிதான் என்னன்னு திறந்து பார்க்கணும்" என பாலிக்கு வேண்டிய தகவல்களை, அவர் கேட்கும் முன்பே அளித்திட்டான்.

"ஞான், கேஸ் பற்றி கேட்காம் உங்களை காண்கின்னு சொல்லல சாரே" என்ற பாலி, "வனத்தில் கண்டிட்ட பாடி காணாம் போயி சொன்னுதே சாரே? அதி எங்களென்டெ ஒபீசரா இருக்காம் டவுட் சாரே!" என்றான்.

"எப்படி சொல்றீங்க?" எனக்கேட்ட விருபாட்சன், "ஒய்ஃப் டெலிவரிக்காக போனவரிடமிருந்து எந்த தகவலும் இல்லைன்னு சொன்னீங்க. அதுக்காக அது அவர்தான்னு முடிவுக்கு வரதா?" என்று, இருக்கையின் பின்னால் சாய்வுப்பகுதியின் ஒரு முனையில் கை முட்டி பதித்தவனாக கால்களை அகட்டி தளர்ந்து அமர்ந்தான்.

"ஆ ஆளு இல்லா சாரே" என பாலி கூற, விருபாட்சனின் புருவங்கள் சுருங்கின.

"இவ்விட ஆ ஆளுக்கு உதவியாயிட்டு இருந்த ஓபீசர் காணாமல் போயி. டெலிவரிக்கு ஊருக்குப்போன ஆளு, ஞான் இவ்விடெ வருன்னதினு முன்னே கால் செய்து. ஆ ஆளு சேஃபாயிட்டு உண்டு சாரே" என்ற பாலி,

"செக்யூரிட்டியும் மிஸ்ஸிங்!" என்றான்.

"சூப்பர்" என்று இரு தொடைகளிலும் கைகளைத்தட்டிய விருபாட்சன், எழுந்து நின்று கைகளை தலைக்குமேல் உயர்த்தியவனாக சோம்பல் முறித்தான்.

"இந்த கேஸ் இன்னும் எவ்வளவு சிக்கலாகுமோ ஆகட்டும்" என்ற விருபாட்சன், "அவர்தான்னு நீங்க சொல்ல காரணம் என்ன?" எனக் கேட்டான்.

"டெலிவரிக்கு போன ஆளின்ட பேரு கார்த்திக் சாரே! அவர் போன கொஞ்ச காலத்திலே இன்னொரு ஓபீசர் மேனன் எனிக்கு கால் செய்து. ஏதோ எமர்ஜென்சி அவசரமாயிட்டு என்டெ நாட்டுக்கு போவாம் வேண்டி கேட்டு. ஆ ஆளிடம் வல்லிய பதட்டம். ரண்டு மூணு நாள் இருக்காம். கார்த்திக் வந்ததும் போவாம் சொல்லி ஞான் பரஞ்சு" என்ற பாலி, " ஞான் போவாம் சாரே! இவ்விட செக்யூரிட்டி நோக்கிக்கொள்ளாம் பரஞ்சு. ஞான் பெர்மிஷன் கொடுக்கும் முன்னே மேனன் போன் வச்சு" என்றார்.

"ஓகே... அவர் ஏதோ எமர்ஜென்சின்னு சொல்லிட்டு தான போயிருக்கார். அவர் வீட்டுக்குக் கூப்பிட்டு கேட்டுப்பாருங்க" என்றான் விருபாட்சன்.

"ஸ்டேஷனில் நாலு நாளாயிட்டு ஆளில்லைன்னு நீங்க சொன்னப்பவே, மேனனின்டெ வீட்டுக்கும், செக்யூரிட்டின்டெ வீட்டுக்கும் கால் செய்து விசாரிச்சு சாரே! ரண்டு பெரும் மிஸ்ஸிங்" என்றான் பாலி.

இங்குமங்குமாக ஒரு நிமிடத்திற்கும் மேலாக நடந்த விருபாட்சன், தனது அலைபேசியை எடுத்து பாலியின் கையில் கொடுத்தான்.

"காட்டில் கிடந்த உடலை எடுக்கப்பட்ட போட்டோஸ் இருக்கு. பாருங்க. மேனன் ஆர் செக்யூரிட்டிங்கிறதுக்கு ஏதாவது அடையாளம் இருக்கா சொல்லுங்க" என்றான்.

பாலி ஒவ்வொரு புகைப்படமாக தள்ளிட, அவரின் அருகில் நின்றிருந்த சண்முகமும் பார்வையிட்டான்.

"தேஜாஸ் எங்க?" என்று சண்முகத்திடம் கேட்ட விருபாட்சன், அவனது கவனம் தன்னிடமில்லையென்பதை உணர்ந்து விரூப்பை காண்பதற்காக சன்னல் அருகே சென்று நின்று, அங்கிருந்து பார்வையிட்டான்.

விரூப் வண்டிக்குள்ளாகவே அமர்ந்திருக்க, மரியா அவன் பக்கம் கதவுக்கு வெளியில் நின்றபடி, அவனுடன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அந்தநொடி முகம் வாடியவனாக தனது இருசக்கர வாகனத்தில் வந்து சேர்ந்தான் தேஜாஸ் குட்டி.

விரூப் அமர்ந்திருக்கும் வண்டிக்கு அருகில், மரியாவுக்கு எதிர்பக்கம் தனது வண்டியை நிறுத்தி இறங்கிய தேஜாஸ், வண்டிக்குள் அமர்ந்திருக்கும் விரூப்பை முதலில் மகிழ்வுடனும், பின்னர் யோசனையுடன், அதனைத் தொடர்ந்து அதிர்ச்சியுடனும் காண்பதை தனது லேசர் விழிகளால் உள்வாங்கிய விருபாட்சனுக்குள் அவனிடத்தில் ஏனிந்த பல்வேறு உணர்வு மாற்றங்களென சிறு யோசனை.

தேஜாஸ் மரியாவின் பக்கமாக விரூப்பின் அருகில் செல்ல, விருபாட்சனும் என்னவாக இருக்குமென்று வெளியில் செல்ல முனைய,

"சார்..." என்று பெரும் அதிர்வோடு கத்தியிருந்தான் சண்முகம்.

என்னவென்று விருபாட்சன் வெளியில் செல்லாது நடையை நிறுத்தி திரும்பிப் பார்க்க,

அப்போதுதான் ஆவணங்கள் பாதுகாக்கும் அறையிலிருந்து வெளியில் வந்த சரவணனும், குட்டணும் கூட விருபாட்சன் இருப்பதைக் கண்டு...

"சார் இந்த டை டேக்" என பதற்றத்தோடு முன்னால் வந்தனர்.

பாலியின் கையிலிருந்த அலைபேசியையே அதிர்வுடன் பார்த்துக் கொண்டிருந்த சண்முகத்தையும், சரவணன் கையிலிருந்த பழைய கோப்பினையும், மாற்றி மாற்றிப் பார்த்த விருபாட்சன், அவர்களின் பதற்றத்தையும் குறித்துக் கொண்டவனாக...

"இந்த கேஸ்... அடுத்தக்கட்ட நகர்வு படு பயங்கரம் போலயே!" என இதழ்களை குவித்து ஊதினான்.
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,345
Reaction score
3,210
Points
113
இருக்குமோ

தேஜு குட்டி நீ பிரேமித்த ஆளு விரூபின்ட பொண்டாட்டியாயிட்டுன்டு

அச்சோ பாவம்

அம்மாடியோ இந்த மலையாளம் சிலது புரிய மாட்டேங்குது சாமி
 
Last edited:

shasri

Member
Joined
Jul 16, 2025
Messages
77
Reaction score
57
Points
18
Already case idiyapa sikalaaitu undu cheychi 😵‍💫😵‍💫 ithula intha thejas love 🤣🤣 sema ponga ..orutharayum micham vidurathu illa all suspect list tha
 
Joined
Aug 21, 2026
Messages
38
Reaction score
58
Points
18
இருக்குமோ

தேஜு குட்டி நீ பிரேமித்த ஆளு விரூபின்ட பொண்ணாயிட்டுன்டு

அச்சோ பாவம்

அம்மாடியோ இந்த மலையாளம் சிலது புரிய மாட்டேங்குது சாமி
இனி அதிகமில்லாம பார்த்துக்கிறேன் அக்கா
 
Joined
Aug 21, 2026
Messages
38
Reaction score
58
Points
18
Already case idiyapa sikalaaitu undu cheychi 😵‍💫😵‍💫 ithula intha thejas love 🤣🤣 sema ponga ..orutharayum micham vidurathu illa all suspect list tha
டெபனெட்லி 🤣🤣🤣🤣
 
Top Bottom