நீயின்றி நிழலும் துணையில்லை விமர்சனம் | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

ஆனந்த ஜோதி நாவல்கள்

Where every page opens a new world
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நீயின்றி நிழலும் துணையில்லை விமர்சனம்

New updates

LATEST

Administrator

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,559
Reaction score
2,936
Points
113
Location
Chennai
Website
jothinovels.com
inbound1222030411483899637.jpg

#ஜோதி_ரிவ்யூ

கதையின் பெயர் : நீயின்றி நிழலும் துணையில்லை

எழுத்தாளர் : பிரியதர்ஷினி S

பிரிவு : கிரைம் திரில்லர்

ஏசிபி விருபாட்சன் சென்னையில் இருந்து கூடலூருக்கு இடமாற்றல் கேட்டு செல்லும் போது, நாய் ஒன்று மண்டை ஓட்டை கவ்விக் கொண்டு வருகிறது. அந்த இடத்தில் அவன் வழக்கு விசாரணையை ஆரம்பிக்க சற்று நேரத்தில் தோண்ட தோண்ட புதிர் போல, ஒரு கை மற்றும் மொபைல் கவர் பின்னர் ஒரு பிணத்தின் உடல் கிடைத்து விசாரணை துரித கதியில் நடக்கிறது.

இந்த கொலைகள் மற்றும் மர்மத்தின் பின்னே மறைந்திருப்பது யார்? விருபாட்சனின் இடமாற்றலுக்கான காரணம், அவனது குடும்ப வாழ்க்கை என களம் விறுவிறுப்பாக நகர்கிறது.

விருபாட்சன் பெயர் தான் புதுசா இருக்குதே நினைச்சா ஆளும் அப்படி தான் ... சும்மா சொல்ல கூடாது, பேச்சுலயே வசியம் செய்து விடுகிறான். ஆளு முரட்டு சிங்கிள்னு நினைச்சா, ஒரு மகனும் மனைவியும் இருக்காங்க

அவனது பேச்சும், குறும்புத்தனமான நடவடிக்கையும், உடன் வேலை செய்பவர்களிடம் நடந்து கொள்ளும் முறையும் நல்லா இருக்கு

அதுபோல அவ்வளவு சின்சியர் போலீஸ் ஆபிஸரா இருந்துட்டு தன் மனைவி மகனிடம் தாழ்ந்து போகும் இடமும், தனது நிலையை வெளிப்படுத்தி மனைவியின் மன்னிப்பு, மன மாற்றத்திற்காக கெஞ்சுவதும் மனதை பறிக்கிறது.

ஏம்மா லாயரு சும்மா இருக்கிறவன் பின்னாடி அலைஞ்சு " நீ காதலிக்கா விட்டால் என்ன உனக்கும் சேர்த்து நான் செய்வேன்"னு சொல்லி, அவனைப் பார்க்கவே தவம் இருந்தது போல சுத்தி சுத்தி வந்து காதல் செய்து, அவங்க அம்மாவையும் அப்படி ஐஸ் வச்சு கவுத்துட்டு இப்படி இடையிலே விட்டுட்டுப் போவது கொஞ்சமாவது நியாயமா இருக்கா?

அதிலும் இவள் அவனை விட்டுப் போகும் நேரம், என்ன மாதிரி ஒரு சூழ்நிலையில் இருந்தான் என்பது தெரிஞ்சும் கொஞ்சம் யோசித்து இருக்கலாம்

இதைதான் மனம் விட்டுப் பேசாமல் உள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டு இருப்பது அவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் என்பது...

பட்டர் குட்டி ஒன் சைட் லவ் பண்ணிட்டு அவகிட்ட பேசுவதும், காரில் இருக்கும் பையனை கண்டதும் திகைப்பதும் எதிர்பார்க்கலடா பட்டரு

அதுல் அருமை

போலிஸ் விசாரணை, புலிகாட்டு ரகசியம், மர்ம மரணம், காணாமல் போனவர் பற்றிய விபரம், பாரன்ஸிக் டிபார்ட்மென்ட், தாவரவியல் ஆய்வு என நிறைய விஷயங்களை மிகவும் அழகாக சொல்லி இருக்காங்க

அப்பா மகன் முதல் சந்திப்பு மனதை கொள்ளை கொண்டது

சக்கரக்குட்டா, பஞ்சாரே, என்ட மோளே ... என்னால சில வரிகளை இன்னும் மறக்க முடியல.

எழுத்து நடை அபாரம்

மலையான வாசனை மனதை மயக்கியது

போட்டிக்கதை வாசிக்க பிரமாதமா இருக்கு, நீங்களும் வாசித்து பார்த்து எப்படி இருக்கு சொல்லுங்க

எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்

 
Top Bottom