- Joined
- May 31, 2025
- Messages
- 214
- Reaction score
- 339
- Points
- 63
அத்தியாயம் 3
தன் உடமைகளை அலமாரியில் வைத்துவிட்டு, ஒரு டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் சென்றாள் அதிதி. உள்ளே நுழையும்போதே, அறையின் மெல்லிய குளுமை அவளது உடல் வலியையும், மனச்சோர்வையும் லேசாகத் தணித்தது. சூடான நீரின் கீழ் நின்றவள், புது விதமான நிம்மதியை உணர்ந்தாள். சில நொடிகள் கழித்து ஷவரை ஆஃப் செய்துவிட்டு டவலை கட்டிக்கொண்டு வெளியே வந்த அதிதியின்,. உடலோ புதிதாய்ப் பூத்த ரோஜாவைப் போல பேபி பிங்க் நிறத்தில் சிவந்திருக்க, அதே நிறத்தில் இருந்த ஒரு மெல்லிய இரவு உடையை அணிந்துகொண்டாள்.
பின் கிச்சனுக்குள் சென்று பார்த்தாள். சமைப்பதற்கான அடிப்படைப் பொருட்களும், பிரிட்ஜிக்குள் (Fridge) தேவையான காய்கறிகளும் பாலும் இருக்கவே, ஒரு பெருமூச்சு வெளியிட்டாள்.
“நல்ல வேளை, முன்னாடியே தேவையான பொருட்கள் வாங்கி வைக்கச் சொன்னோம். இல்லைன்னா, இந்தத் தெரியாத புது இடத்துல இந்த நேரத்துல அங்க இங்க அலைஞ்சுட்டு இருக்கணும்,” என்று தனக்கு தானே கூறிக் கொண்டவள்.
ஒரு கப் திக் காபி போட்டு எடுத்துக்கொண்டு, மீண்டும் தன் அறைக்கு வந்தாள். அந்த அறையைச் சுற்றி ஒரு பார்வை பார்த்தவளின் கண்கள், மூலையில் தூசி படிந்திருந்த, ஒரு பழைய மியூசிக் சிஸ்டம் மீது பதிந்தது. காபியை ஓரமாக வைத்துவிட்டு, அந்த மியூசிக் சிஸ்டத்தை செக் செய்து பார்த்த அதிதியின் இதழ்களில் மெல்லியதொரு புன்னகை பூத்தது. அதைத் தன் ஃபோன் ப்ளூடூத் மூலம் இணைத்தாள். தன்னுடைய ப்ளேலிஸ்ட்டில் இருந்த பாடலை மெதுவாக ஒலிக்கச் செய்தவள், காபியை எடுத்துக் கொண்டு பால்கனிக்குச் சென்றாள்.
தான் எடுத்து சூடான காபி கையில் இருக்க, ரசித்து ருசித்துக் குடிக்க ஆரம்பித்தாள். அப்போது, சரியாக லேசாக மழைத் தூறல் ஆரம்பமானது.
மெல்லத் தூறல் ஆரம்பித்த மழை, ஜன்னல் வழியே நுழைந்த தென்றல் காற்றோடு சேர்ந்து, சற்று வேகம் எடுக்க ஆரம்பித்தது. சூடான காபி, இனிமையான தனிமை, புதிய இடம், மெல்லிய பாடல்கள், தனக்குப் பிடித்த மழை... இந்த இனிமையான சூழலை முழுமையாக ரசித்தவாரே, மெல்லக் கண்களை மூடி அந்தக் காபியைக் குடித்தாள்.
‘கண்டிப்பாக இந்த அமைதியான சூழல் தன்னையும் தன் வாழ்க்கையையும் மாற்றும்’ என்று நம்பியவள், ஒரு நிம்மதிப் பெருமூச்சு இழுத்துவிட்டாள். அமைதியில் ஆழ்ந்தவளின் விழிகள் மெல்லச் சொருக, ஒரு கட்டத்தில் அப்படியே பால்கனியின் நாற்காலியில் உறங்கியும் போனாள்.
அதே நேரம், இங்கு குளியலறையில் அதிதி குளித்து முடித்துவிட்டுச் சரியாக ஆஃப் செய்துவிட்டு வந்த ஷவர், ஆன் ஆகி, ஷரிலிருந்து சுடுநீர் அருவியாகக் கொட்ட ஆரம்பித்தது. சுடுநீர் என்பதால், அதன் ஆவி மெல்ல அந்த அறை முழுக்கப் பரவி, ஒரு மர்மமான மூடுபனியை உருவாக்கியது. அங்கிருந்தப் பெரிய கண்ணாடியிலும் அந்த ஆவி படர்ந்தது. ஒரு விதமாக மங்கலான தோற்றத்தை கொடுக்க, அந்த மங்கலான பிம்பத்தில் யாரோ விரலால் எழுதியது போல, "SAVE ME" என்ற ஒரு வாக்கியம் எழுதப்பட்டது.
இதைப் பற்றி அறியாத அதிதி, உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.
நள்ளிரவைக் கடந்துச் சென்ற நேரம். அதிதி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, மழையோ விடாமல் இன்னும் பெய்துகொண்டே இருந்தது. அப்போது பெண்ணவளின் தூக்கத்தைக் கலைக்கும் விதமாக, க்ரீச்…. என்ற காதுகளை கூச செய்யும் விதமாக ஒரு விதமான வித்தயாசமான சத்தம் அந்த இடமெங்கும் எதிரொலித்தது. ஆரம்பத்தில் அந்தச் சத்தம் அவள் காதுகளில் விழாமல் போகவே, நேரமாக ஆக அந்த சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அதிதியின் காதுகளை அந்தச் சத்தம் கூச செய்தது. அதில் புருவங்கள் சுருங்கத் தூக்கத்திலிருந்து கண் விழித்த அதிதி.
“என்ன சத்தம் அது?” என்று சலிப்புடன் முணுமுணுத்தவள், அரைத் தூக்கத்தில் கஷ்டப்பட்டு கண் விழித்துப் பார்த்தாள். அந்த பழைய மியூசிக் சிஸ்டத்தில் இருந்து தான் எதோ வித்தியாசமான சத்தம் வந்து கொண்டிருந்தது.
“ஓஹ்… இது தானா? நானும் அப்போவே என்ன டா இவ்வளவு பழைய சிஸ்டம் நல்ல இருக்கேனு பார்த்தேன்.?” என்று நினைத்தவள், அரை தூக்கத்தில் எழுந்து சென்று அந்த மியூசிக் சிஸ்டத்தை ஆஃப் செய்துவிட்டு, இம்முறை தன் பெட்டி சென்று படுத்து உறங்கினால்.
ஆனால், அப்போது மீண்டும் ஒரு விசித்திரமான சத்தம் கேட்க, அதோடு ஏதோ தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்க, அதில் மீண்டும் பெண்ணவளின் தூக்கம் கலைந்தது.
“ம்ச்சீ... என்ன சத்தம் இது?” என்று எரிச்சலோடு எழுந்து அமர்ந்தவள். அப்போதே அந்த மியூசிக் சிஸ்டம் மீண்டும் தானாக ஆன் ஆகி, அதிலிருந்து தான் காதுகளை கூச செய்யும் அளவிற்கு சத்தம் வருகிறது என்பதை உணர்ந்தவள்.
“என்னது இது? நான் இப்போ தானே இதை ஆஃப் பண்ணினேன். அப்புறம் எப்படி இது திரும்பவும் ஆன் ஆச்சு?” என்று குழப்பத்தோடு யோசித்தவள்.
“ஒருவேளை தூக்கக் கலக்கத்துல சரியா ஆஃப் பண்ணலையோ” என்று நினைத்தவள் தன் தலையில் அடித்துக் கொண்டு, மீண்டும் எழுந்து சென்று அதை ஆஃப் செய்துவிட்டு, மீண்டும் படுக்கையை நோக்கி செல்ல, அப்போது பாத்ரூமிலிருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் அதிகமாகக் கேட்டது, அதில் கடுப்பான அதிதி, “ச்சே... நிம்மதியா தூங்கக்கூட முடியல!” என்று கோபத்தோடு எழுந்து பாத்ரூம் கதவைத் திறந்தாள்.
அங்கு, ஷவரிலிருந்து தண்ணீர் வீணாக வழிந்தோடிக்கொண்டிருந்தது.
“நா... நான் ஷவரை ஆஃப் பண்ணிட்டுத்தானே வந்தேன். அப்புறம் எப்படி இது? ” என்று நினைத்தவளுக்குள் சிறிது பயம் ஏற்பட்டது.
“அதிதி, நீ தேவையில்லாம யோசிச்சு பயப்படாத. இது கொஞ்சம் பழைய பில்டிங். அதனால ஏதோ லூஸ் கனெக்ஷன் ஆகி இருக்கும்,” என்று அவசரமாகத் தனக்குத் தானே சமாதானம் கூறிக்கொண்டவள். ஷவரை ஆஃப் செய்துவிட்டுத் திரும்பியவளின் கண்கள், எதிரே இருந்த கண்ணாடியைப் பார்த்ததும் பயத்தில் விரிந்தன.
குளியலறையின் கண்ணாடி முழுவதும் மூடியிருந்த ஆவியில், யாரோ அழுத்தி எழுதியதைப் போல், சற்று மங்கலாக "SAVE ME" என்ற வார்த்தை இருக்க,
“இது... இது என்ன? இதை யார் எழுதுனது?” என்று குரல் நடுங்க, பயத்தோடு அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்த அதிதிக்குள், மெல்ல பயம் என்னும் அரக்கன் பரவ தொடங்கினான். இந்த வீட்டில் தன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உணர்ந்தவள்.
கைகள் நடுங்க, அந்த வார்த்தையை அழித்தாள். ஆனால், அடுத்த நொடியே, அதே போல் "SAVE ME" என்ற வாக்கியம் மறுபடியும் தோன்றியது. அதைக் கண்டு மேலும் பயந்துபோன அதிதி, மீண்டும் மீண்டும் அதை அழிக்க முயல, அந்த வாக்கியமும் மீண்டும் மீண்டும் தோன்றியது.
அவளது உடல் பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்க, அப்போது வெளியிலிருந்து மீண்டும் அந்த மியூசிக் சிஸ்டத்தில் இருந்து ஏதோ சத்தம் கேட்டது.
“இ… இங்க… எ... என்ன நடக்குது?” என்றவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிய, மெல்ல பயத்தோடு அந்தச் சத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அப்போது அந்த பழைய மியூஸிக் சிஸ்டத்திலிருந்து,
“என்னைக் காப்பாத்துங்க... ப்ளீஸ் சேவ் மீ...” என்று அழுகையோடு ஒரு பெண்ணின் குரல் மீண்டும் மீண்டும் அதிதியை அழைத்தது.
நேரமாக ஆக, அழுகையோடு ஒலித்த அந்தப் பெண்ணின் குரல், திடீரென… “ஏய்… என்ன இங்க இருந்து காப்பாத்து டி… காப்பாத்து…” என்று கோபமான மற்றும் ஆக்ரோஷமான அலறலாக மாறியது.
அதைக் கேட்ட அதிதியின் இதயம் பயத்தில் வேகமாக துடிக்க, கண்களோ நடக்கும் எதையும் நம்ப முயாமல் அகல விரிந்தது.
“நீ தப்பு பண்ணிட்ட… நீ… இங்க வந்து பெரிய தப்பு பண்ணிட்ட… நீ இங்க வந்திருக்கவே கூடாது… இனி உனக்கு எங்களோட நிலைமை தான்… நீ சாகப் போற, நீ கூடிய சீக்கிரம் சாகப்போற…” என்று இம்முறை வேற பெண்ணின் குரலும் அவளின் மிரட்டலும் அந்த சிஸ்டத்தில் எதிரொலிக்க, பயந்துபோன அதிதியோ ஓடிச் சென்று அந்த மியூசிக் சிஸ்டத்தின் சுவிட்சை ஆஃப் செய்துவிட்டு, அவசரத்தில் அதன் ப்ளக் ஒயர்களை எல்லாம் பிடுங்கி எறிந்தாள். அடுத்த நொடியே அந்த இடம் முழுக்க திடீரென அமைதியில் நிறைந்தது.
ஆனால், அந்த நிசப்தம் கூட அவளைப் பயமுறுத்தியது. பயத்தில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றிருந்தவள், அடுத்த நொடி அதிர்ச்சியில் உறைந்துபோனாள்.
ப்ளக் பிடுங்கப்பட்டிருந்த அந்த மியூசிக் சிஸ்டத்திலிருந்து, கீச்… க்ரீச்… என்ற பயங்கரமாக, செவிகளைக் கிழிக்கும் உலோகச் சத்தம் தானாக ஒலிக்க ஆரம்பித்தது.
“ஆ…. ஆ….!” என்று அலறியவள், அடித்துப் பிடித்துக்கொண்டு, கைகளால் நெஞ்சைப் பிடித்தபடி, தன் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தாள்.
முகம் முழுக்க வேர்வைத் துளிகள் முத்து முத்தாக வேர்த்திருக்க, பயத்தில் மூச்சுக்கூடச் சீராக விட முடியாமல் நடுங்கிக்கொண்டிருந்தவள். பால்கனியின் நாற்காலியில் அமர்ந்தே தூங்கியதால், கழுத்து வலித்தது.
சில நொடிகளுக்குப் பின்னே நடந்த அனைத்தும், நிஜமல்ல அதெல்லாம் வெறும் கனவு மட்டுமே என்பதை உணர்ந்தவள், வேகமாகச் சென்று குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து, அதில் இருந்த குளிர்ந்த நீரை மடமடவென்று குடித்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். மெல்ல மூச்சை இழுத்து விட்டு, அந்த அறை முழுக்க சுற்றிப் பார்த்தாள். நேற்று இரவு அப்படி ஒரு சம்பவம் நடந்துக்கான எந்த ஒரு தடயமும் இல்லை… இன்னும் கூட அந்த மியூசிக் சிஸ்டத்தில் இருந்து இதமான இசை ஒலித்துக் கொண்டுதான் இருந்தது.
“அதிதி, இதுல நீ பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்ல, எப்பவும் போல எல்லாம் வெறும் கனவு மட்டும் தான்... வேற ஒண்ணும் இல்ல,” என்று தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டவள்.
மீண்டும் சென்று படுக்க, ஏனோ அவளுக்குத் தூக்கம் வந்தபாடில்லை. புரண்டு புரண்டு படுத்தவள், நேரத்தைப் பார்க்க, அதுவும் காலை மணி 7 என்று காட்டியது.
“இதுக்கு மேல தூங்கி என்ன பண்ணப்போறோம்? எழுந்து வேலைக்குக் கிளம்புவோம்,” என்று முடிவெடுத்தவள், எழுந்து பாத்ரூமிற்குள் சென்றாள்.
முகம் கழுவுவதற்காகக் பைப்பை திறக்க, ஆனால் அதிலிருந்து தண்ணீர் வராமல் ‘க்ரீச்’ என்ற ஒரு சத்தம் மட்டும் எழுந்தது. புருவம் சுருங்கி யோசித்தவள், தன் கண்களை நன்றாகத் தேய்த்துவிட்டுக்கொண்டு, மீண்டும் அந்தக் குழாயைத் திறந்து தண்ணீர் வருகிறதா என்று பார்த்தாள்.
ஆனால்... தண்ணீர் சுத்தமாகக் கசியவில்லை.
அதிதியின் மூளைக்குள் நேற்று இரவு கண்ட கனவின் மிச்சங்கள் மீண்டும் மெல்ல மெல்லப் பரவ ஆரம்பித்தன.
அதிதிக்கு வந்தது கனவா? இல்லை நிஜமா? உண்மையில் இங்கு அப்படி என்ன தான் இருக்கிறது? அதிதி தன் பயத்தை போக்குவாளா? இந்த கேள்விக்கான விடையங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
உள்மாய நிழல்…
A Psychological Horror Thriller
நிழல் தொடரும்….
என்னைக் காப்பாத்துங்க... ப்ளீஸ் சேவ் மீ...

Last edited: