நிழல் ஒன்று நிஜம் ஆனால் 25 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிழல் ஒன்று நிஜம் ஆனால் 25

New updates

LATEST

⚜️Nisha Rajan🗡️

Active member
Staff member
Joined
Mar 8, 2026
Messages
230
Reaction score
168
Points
43
நிழல் ஒன்று நிஜம் ஆனால்

நிழல் 25

விஷம் கொண்ட சர்ப்பத்தின் வீரியம் அறிந்து விரட்டா விட்டால் விசம் விட்டு விடாது அதன் வஞ்சம் தீர்க்கும்.

இதுவரை:-

யாரின் நயவஞ்சகத்தால் இப்போது இந்த இடம் வந்து சேர்ந்தோம் என்று அந்த குடும்பமே உணர்ந்த தருணம். ஒரு மனிதனின் பேராசைக்காக, ஒரு அழகிய குருவி கூடு போன்று இருந்த குடும்பமே சின்னாபின்னமாக சிதறிய நிமிடம்.

அதை யாராலும் சீர்செய்து மீண்டும் அதே வாழ்வை கொண்டு வந்து தர முடியாது. ஆனால் இத்தனைக்கும் காரணமான அந்த அரக்கன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறான்.

அவனுடைய உயிர் பெரியது என்று நின்றிருக்கும் அவன். எக்காரணம் கொண்டும் தன்னுடைய தவறுகள் வெளிவந்துவிடக் கூடாது என்பதில் சரியாக நின்றிருந்தான்.

அவனுடைய உயிர் நிச்சயம் அங்கிருக்கும் ஒருவரின் கையால் இறையாக போகிறது என்பது அந்த அரக்கனுக்கு தெரிந்ததே...!

ஆனால்... அவன் இறப்பதற்கு முன் அந்த நிலா விலாஸ் எந்த ஒரு தடயமும் இல்லாமல் அழிந்து விட வேண்டும் என்பதில் முழு மூச்சாக செயல்பட ஆயத்தமானான் விஷ்ணுவர்தன்.

இனி கதைக்குள்:-

விஷ்ணுவிற்கு எதிரே நின்றிருந்த திவாகரனைப் பார்த்து, "இங்கு எதற்கு நான் வந்தேன் என்று உனக்கு தெரியாது தானே?" என்று சொன்ன விஷ்ணு, அவனைப் பார்த்து ஒரு மர்மப் புன்னகையை உதிர்த்தான்.

அவனுக்குப் பின்னால் இருந்த அந்த கணினியின் திரையில் ஒருசில வார்த்தைகள் மின்ன ஆரம்பித்தன. அப்போதுதான் அந்த வரிகளைப் படிக்க ஆரம்பித்தான் திவாகர்.

'எனர்ஜி கோர் ஸ்டேபிலிட்டி 5% க்குக் கீழ் விழுந்துவிட்டது. அவசர நெறிமுறை செயல்பாட்டில் — சிஸ்டம் தானாகவே டிஸ்ட்ரக்ஷன் கவுண்ட் டவுனைத் தொடங்கியுள்ளது. முழு வெடிப்பு ஏற்பட இன்னும் 300 விநாடிகள்.'

"டேய் என்னடா இங்கே நடக்குது? இப்போ எதுக்கு நிலாவை வெடிக்க வைக்க போற?" என்று கேட்டுக் கொண்டே அவனருகில் வர, "ஏன்டா இந்த இடத்தில் நீ, அந்தப் பொடியன், இந்த நிலா இருக்குறதால தானே இவ்வளவு பிரச்சனை? நீங்க எல்லாம் செத்துட்டா... இந்த இடத்தில் இப்படி ஒன்னு நடந்ததே இந்த உலகத்துக்குத் தெரியாமப் போயிடும். அதுதான் எனக்கு வேணும்."

"நான் செஞ்ச தப்பே சாகீரைக் கொலை செஞ்சுட்டு, அவளோட தங்கையின் மேலே வச்ச ஆசையால அவளைப் போல இயந்திரத்தை உருவாக்கணும் என்று நினைச்சது தான்."

"என்கிட்ட இதே போல இன்னொரு இயந்திரத்தை உருவாக்க அனைத்து புரோசஸஸ் கீயும் இருக்கு. அதனால இந்த பொம்மை எனக்கு வேண்டாம்" என்று நக்கலாக, நிலாவின் அமைதியாகத் தூக்க நிலையில் இருக்கும் உடலைப் பார்த்து ஒருமாதிரி முகம் சுளித்தான்.

"பைத்தியக்காரன் மாதிரி பண்ணாதடா, டைம் போயிட்டு இருக்கு அதை ஸ்டாப் பண்ணு விஷ்ணு."

"முடியாது, உன்னால என்ன டா பண்ண முடியும்?" என்று அவன் எதிரே எக்காளமாக நின்றான்.

'உன்னை...' என்று முன்னேறி நகர்ந்த திவாகரனைப் பார்த்துத் துப்பாக்கியைக் காட்டினான் விஷ்ணு.

'டேய், நான் உன்னை மாதிரி கையில் வச்சுப் பூதம் வந்திரும்னு விளையாட்டு காட்ட மாட்டேன். இங்கே பார்' என்று சொல்ல, அவனுடைய துப்பாக்கியிலிருந்து சீறி வந்த குண்டு திவாகரின் தோள் பட்டையை துளைத்தது.

'ஆ...' என்று அந்த எதிர்பாராத குண்டடி தாக்குதலால் நிலைகுலைந்து போன திவாகர் வலியில் கத்த ஆரம்பித்தான்.

அப்போது அந்த வாயிலின் மேற்புறத்தில் யாரோ நிற்பது போன்ற அந்த நிழல் விஷ்ணுவின் முன் நிழலாடியது. அதேசமயம் அந்தத் திரையில் எண்ணிக்கை குறைந்து கொண்டே வர ஆரம்பித்தது. அதேசமயம் அந்த வாசலில் நின்றிருந்த நிழல் மெதுவாகப் படி இறங்கி உள்ளே வர ஆரம்பித்தது.

அறை முழுவதும் ஒருவித நிசப்தம். அந்த இடத்தில் திவாகரின் முனகல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

அப்படியே அந்த இடத்தில் இருந்த இருளின் நிழலில் மெதுவாக விஷ்ணு மறைய ஆரம்பித்தான். அவனின் கையில் ஏதாவது பொருள் தட்டு படுகிறதா என்று தேட ஆரம்பித்தான். அப்போது அவனுடைய கையில் கூர்மையான பொருள் ஒன்று கிடைத்தது.

அதே நேரம் வெளிச்சம் இருந்த அந்தப் பகுதிக்குத் தனது பாதங்களை எடுத்து வைத்து வந்த அந்த நபரைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்து போய் நின்றான் விஷ்ணு. அவள் முகத்தைப் பார்த்த அந்த நொடி, 'இவள்... இவள்...' என்று தட்டுத் தடுமாறியவன் மெதுவாக அந்த இருளின் நிழலில் இருந்து வெளியே வர ஆரம்பித்தான்.

அவன் இதுநாள் வரை பார்க்கத் தவித்த அந்த உயிருள்ள முகம், அது அவள் தானா? நிஜத்தில் அவள் உயிருடன் தான் இருக்கிறாளா?... அவனுடைய கண்கள் விரிந்தது. அந்தப் படுக்கையை பார்த்தான், அதில் எந்த அசைவும் இல்லாமல் கிடந்தாள் இயந்திர நிலா.

இப்போது அவன் முன் குழந்தையுடன் வந்து நிற்கும் இந்த நிலா... உண்மையானவள் தானா...? அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

அவன் உதடுகள் துடிக்க ஆரம்பித்தது. 'இது நிஜம் தானா? நீ இன்னும் சாகவில்லையா?' என்று அவளைத் தொட சென்றவன் அவன் கையில் இருந்த அந்த கூர்மையான பொருளால் அவள் கை மேல் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.

"அய்யோ அம்மா...!" என்ற அவளின் வலியின் வேதனை— அவளின் கை மேல் காயம் ஏற்பட அந்த காயத்தில் இருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது.

அப்படி காயத்தில் இருந்து இரத்தம் வடிவதை பார்த்த விஷ்ணு. உண்மையான நிலா வா என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன். "நிலா... இது நீ தானா... நீ இன்னும் உயிருடன் தான் இருக்கிறாராயா..." என்று பலமுறை அவளுடைய முகத்திற்கு நேராக கேட்டுக் கொண்டே சென்றான்.

அவளின் விழிகளில் அன்று வடிந்த கண்ணீர் இன்று இல்லை, அதற்குப் பதில் அனைத்தையும் தெரிந்துகொண்ட அவளுக்கு அவன் மேல் இருந்த கோபம் — ஆக்ரோஷம் தான் அவளின் கண்களில் தெரிந்தது.

அவளைப் பார்த்த அந்த நொடி அவள் தான் என்று தெரிந்த அந்த நிமிடம் அவனின் கண்களில் நீர் பெருகி, அவன் முகத்தில் அரக்கத்தனமான அந்த முகம் மலர, அவன் முன் அதே கோபத்துடன் நின்றிருந்த நிலா அவள் கையில் வைத்திருந்த குழந்தையை இறக்கி விட்டாள்.

அவளைப் பார்த்த அவனுடைய கைகள் தளர ஆரம்பித்தது. அவளின் கையில் சிந்திய ரத்தத் துளிகள் அவனை நிலை குலைக்கச் செய்தது.

அந்தத் திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த எண்கள் குறைய ஆரம்பித்தது. 250... 249... 248... 247... எண்கள் குறையக் குறைய நிலா வெடிக்கத் தயாராகி கொண்டிருந்தது.

அவனுடைய தளர்ந்த நடை அவளைப் பார்த்து, 'நிலா நீ... நீ...' என்று தடுமாறியவன் அவளைக் கட்டி அணைத்து, "உன்னைக் காணாமல் எங்கே எங்கே தேடினேன் தெரியுமா? எங்கே இருந்தம்மா இத்தனை நாளா? என்னிடம் வர உனக்கு எதுக்கு இத்தனை நாள் ஆச்சு?" என்று கண்ணீர் வடித்தவனிடம்,

"என் குழந்தையை உன்னிடமிருந்து காப்பாற்ற இத்தனை நாள் ஆக்கியது என்னுடைய தவறுதான்" என்று சொன்ன அந்த குரலைக் கேட்டு நிமிர்ந்தவன் அவளைப் பார்த்து, "எனக்குப் புரியவில்லை" என்றான்.

"உங்களுக்குப் புரியாமல் என்ன? என்று திரும்பி அவள் நிலாவை பார்த்த அந்த நிமிடம்... அவள் நிஜம் இல்லை, அது வெறும் இயந்திரம்." "எதற்காக அது?"

"நீ இல்லை என்று குழந்தையை சமாளிக்க உருவாக்கியது." அந்தக் குழந்தையோ நிலா படுக்க வைக்கப்பட்டிருந்த அந்தப் படுக்கையின் அருகில் 'அம்மா' என்று ஓடிச் சென்றது.

அதைப் பார்த்த திவாகர் குழந்தையை அவன் கையில் எடுக்காமல் அந்த எண்கள் ஓடிக்கொண்டிருக்கும் திரையைப் பார்த்தான். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த அதே சமயம் வேக வேகமாகச் சென்று அந்தத் திரையில் இருந்த அமைப்புகளில் அதன் தரவுகளை மாற்றுவதற்காக வேகமாக இயங்க ஆரம்பித்தான்.

அதைப் பார்த்த விஷ்ணு, 'டேய் திவாகர்' என்று அவனிடம் சென்ற சமயம், விஷ்ணுவை வேகமாக வந்து காற்றில் இரண்டு கரங்கள் அவனை அப்படியே பற்றி அந்தரத்தில் தூக்கியது.

அப்படித் தூக்கி வந்த சமயம் நிலா அவனை கீழே இருந்து பார்க்க, எப்படி அவன் இவ்வளவு தூரம் வந்தான் என்று தன்னுடைய குழந்தையைத் திரும்பிப் பார்த்தான்.

ஆனால் அதுவோ பயத்தில் அவனைப் பார்த்து நடுங்கிக் கொண்டிருந்தது.
நிச்சயமாக அந்தக் குழந்தையால் இது நடக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டு அவன் பயத்தில் கை கால்கள் உதற ஆரம்பித்தது.

அந்த இருளில் விழுந்த ஒவ்வொரு அடிகளும் மரண அடிகளை போல் அவன் உடல் எங்கும் ரணமாக அவனுக்கு வலிக்க ஆரம்பித்தது.

'நிலா நீ இல்லாம நான் இப்படித்தான் கஷ்டப்பட்டு இருக்கேன் உனக்கு அது தெரியுமா?' என்று அவன் கத்தத் தொடங்கினான்.

அப்போது சல்மா பேச ஆரம்பித்தாள்: 'உன்னை யார் என்றே எனக்குத் தெரியாது, ஆனால் உன்னுடன் நான்கு வருடம் பைத்தியம் போல வாழ்ந்திருக்கிறேன்.' என்ற அவளின் வரிகளைக் கேட்டு அந்த நிலையிலும் அவன் முகம் கொஞ்சம் கூட மாறவில்லை.

அவனுக்குள் இருந்த பதற்றம், அந்த அந்தரத்தில் யாரோ ஒருவரின் கைக்குள் அவன் கழுத்து இறுக்கப் பட ஆரம்பித்தது.

அவன் பல்லை இறுக்கிக்கொண்டு, 'நீ ஆற்றோடு போன பிறகு நான் இதே தண்டனையைத் தான் இத்தனை நாட்களாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இப்போது இதைப் பார்த்துப் பயமாக இல்லை. உன்னைப் பார்த்து... எங்கோ குப்பையில் கிடைக்க வேண்டிய உன்னை நான் கோபுரத்தில் கொண்டு வந்து வைத்ததே பெரிய விஷயம்.

ஆனால் ஏதோ சாதித்தவளைப் போல் நீ என்னிடம் பேசுவது ரொம்ப அதிகமா இருக்கு...' என்று சாகப் போகிறேன் என்ற அந்த தருவாயில் கூட அவனுக்கு அந்தச் சாவின் பயம் கொஞ்சம் கூட இல்லை.

'எப்படியும் நான் செத்துத் தான் போகப் போகிறேன், அதற்கு நான் பயந்துதான் சாக வேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா?' என்று அவளைப் பார்த்துச் சிரித்தான்.

'உனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது போல' என்று அரக்கன் போல் சிரித்தவன், 'இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க இருக்கிறவங்க எல்லாம் மண்ணோடு மண்ணா போகப் போறீங்க. அதும் இந்த நிலா விலாஸ் என்னோட கோட்டை, நானே என் கையால தரை மட்டமாக்க போறேன்' என்று சொல்லிக்கொண்டு அந்தத் திரையைப் பார்த்தான்.

நேரம் மிகவும் குறைந்து கொண்டே போக ஆரம்பித்தது.
வியர்க்க விறுவிறுக்க, அந்த காயத்தின் வழியிலும் ரத்தம் சொட்டச் சொட்ட அந்தத் திரையைப் பார்த்துக் கொண்டே அந்த அமைப்புகளை மாற்றுவதற்கு முயற்சித்து கொண்டிருந்தான் திவாகர்.

'நீ என்ன செஞ்சாலும் உன்னால அதோட பாஸ்வேர்டு போட முடியாது. பாஸ்வேர்டு போட்டா தான் ஓபன் ஆகும்' என்று சொல்லிச் சிரித்தவன், திரையைப் பார்த்தால் இன்னும் 200 விநாடிகள் என்று சொல்லிச் சிரித்தான்.

அவனைப் பார்த்து கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்த அந்த ஆன்மா அவனை ஒரு சுழட்டு சுழற்றித் தலைகீழாக அவனின் காலைப் பிடித்துத் தொங்க விட்டது. அதைப் பார்த்துப் பயந்து 'அம்மா' என்று கதறிக் கொண்டு அந்த இயந்திரத்தைக் கட்டிக்கொண்ட குழந்தையைப் பார்த்த திவாகர், 'சல்மா உடனே தேவ் அவனை வெளியே கொண்டு செல், இந்த இடத்துல நிக்காதீங்க' என்று சொல்ல, அவளுக்கோ 'அண்ணா நீங்க...' என்று அவனைப் பார்த்து கேட்ட அந்த நொடி சாகீரின் முகம் திவாகரின் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.

அதைப் பார்த்த சல்மா, 'அண்ணா' என்று கதறியவள், 'கண்டிப்பா நாங்க எல்லாம் வெளிய வருவோம்' என்று சொன்னான். அவன் சாளரத்தின் பாஸ்வேர்டை போட ஆரம்பித்தான். முதலில் 'பிராஜெக்ட் நிலா' ஏற்கவில்லை, தவறு.

இரண்டாவது என்னவாக இருக்கும் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே திணறிய திவாகரைப் பார்த்து, தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த விஷ்ணு அந்த நிலையிலும், 'என்னை என்ன அந்த அளவுக்கு முட்டாள் என்று நினைத்தாயா? உனக்கு அந்த பாஸ்வேர்டு தெரிகிற அளவுக்கு?' என்று சொல்லிச் சிரித்தான்.

அவன் மேல் விழுந்த அடிகள் ஒவ்வொன்றும் அந்த வலியிலும் அந்த அரக்கனின் ஆட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை.
வேகமாக சல்மா சொன்ன 'அதிரன்' என்ற தன் கணவனுடைய பெயரை அதில் பதித்தான். திறக்கவில்லை...

அடுத்த சில விநாடிகள் அருகில் இருந்த நிலாவின் உடல் அப்படியே சூடேற ஆரம்பித்தது.

"டிஸ்ட்ரக்ஷன் கவுண்ட்டவுன் விநாடிகள் 100 ஆகக் குறைய ஆரம்பித்தது.
திரையில் எண்கள் சிவப்பாக மாறின. படுக்கையில் இருந்த இயந்திர நிலாவின் உடல் மெல்ல அதிர ஆரம்பித்தது.

அதன் கண்கள் சிவந்து ஒளிரத் தொடங்கின. எனர்ஜி கோர் வெடிக்கத் தயாரான நிலையில் அந்த அறை முழுவதும் ஒருவித மின்காந்த அலைகள் பரவின."

'நீங்க நினைக்கிற மாதிரி இது என்ன சாதாரண விளையாட்டு என்று நினைத்தீர்களா? அவ்வளவு சீக்கிரத்தில் உங்களால அதோட பாஸ்வேர்டைக் கண்டுபிடிக்க முடியாது' என்று மிரட்டலாகப் பேசிக்கொண்டிருந்தான் விஷ்ணு.

'சாகப் போறேன்னு முடிவான எனக்கு எப்படிச் செத்தா என்ன?' என்று அந்த அரக்கனின் பார்வையில் சிரிப்பு. 'உங்களுடன் நான் சாகப் போகிறேன்' என்ற அந்த மமதை.
அதைப் பார்த்த திவாகருக்கு உள்ளுக்குள் பயம் தோன்ற ஆரம்பித்தது. எப்படியும் காப்பாற்றி விட வேண்டும் என்ற அந்த எண்ணம் அவனுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

அதேசமயம் நிலாவை அழிக்க அவனுக்குக் கொஞ்சம் கூட மனம் வரவே இல்லை. 'எப்படியும் அது ரோபோவா இருந்தாலும் அதற்கும் உணர்ச்சிகள் என்று இருக்கிறதல்லவா? இத்தனை நாட்கள் எதற்காக இந்த இடத்தில் வாழ்கிறோம் என்று தெரியாமலே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு இயந்திரம்' என்று நினைத்த திவாகர் வேகமாகச் செயல்பட ஆரம்பித்தான்.

இன்னும் கடைசி முறை தவறு நிகழ்ந்தால் கண்டிப்பாக வெடித்துவிடும் அபாயம். அந்தப் பதட்டமான சூழ்நிலையில் திவாகரின் உடலில் இருந்த சாகீரின் ஆன்மா வெளிப்பட்டது.

அந்த சமயம் ஒருசில பெயரை அதில் உள்ளிட அந்தத் திரை திறக்க ஆரம்பித்தது. திரையில் ஒளிர்ந்த பெயர் 'சாகீர்'

அதைப் பார்த்த விஷ்ணு, 'இதுக்கு சாத்தியமே இல்ல!' என்று கத்திக்கொண்டு வேகமாக முஸ்தபாவின் பிடியிலிருந்து அவன் கால்களை விடுவித்துக்கொண்டு கீழே விழுந்தான். அப்படி கீழே விழுந்தவன் அங்கே கிடந்த துப்பாக்கியை எடுத்துச் சுடத் தயாரானான்.

'இனி நான் செத்தாலும் பரவாயில்லை' என்று சொல்ல, திவாகர் அந்த கடைசி நொடியில் என்டர் கீயை வேகமாக அழுத்தினான். துப்பாக்கி சுடும் சத்தம் அந்த அறையின் அமைதியைக் குலைத்தது.

அதேசமயம் 'சிஸ்டம் ஹால்ட் மேனுவல் ஓவர்ரைட் சக்சஸ்ஃபுல்'. எண்கள் 010 ல் வந்து நின்றன. முழு அறையும் அமைதியானது. திவாகர் மூச்சிறைக்க கீழே விழுந்தான்.

அந்தச் சமயம் சாகீரின் ஆன்மா விழித்தெழுந்து வேகமாகச் செயல்பட்ட அந்த நொடி, அந்தத் தோட்டாக்கள் நேராக அந்தக் கீழ்த் தளத்தின் மேல் சுவரை நோக்கித் துளையிட்டு இருந்தது.

அதேசமயம் விஷ்ணு சாகீரால் அங்கிருந்து தூக்கி எறியப் பட்டிருந்தான். திவாகர் எழுந்து நிலாவின் தலைப்பகுதியில் இருந்த அந்தப் பொத்தானை ஆன் செய்தான்.

'சிஸ்டம் ரீஸ்டார்ட்' என்ற குரலை எழுப்பிக் கொண்டு நிலா ஆன் ஆனது.
அப்போது தன் உயிர் போகும் நிலையில் கீழே விழுந்து கிடந்தான் விஷ்ணு.

முஸ்தபாவின் ஆன்மாவும் சாகீரின் ஆன்மாவும் அவனை எதுவும் செய்யவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக நிலா எழுந்து வருவதை அமைதியாகப் பார்த்தார்கள். விஷ்ணுவிற்கு உடல் நடுங்க ஆரம்பித்தது.

நிலா அந்த இடத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தாள். அவளுக்குள் பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தது. தன்னை உருவாக்குவதற்கு அவன் எந்த அளவிற்கு இந்த இடத்தில் வேலை செய்திருக்கிறான் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் அந்த நினைவுகளை மறக்கச் செய்து தரவுகளை மாற்றி அமைத்ததன் விளைவு, அவளுக்கு அந்த இடத்தைப் பார்க்கும் வரை எதுவும் நினைவில் வரவில்லை.

அவள் தானாகச் செயல்படும் ஒரு இயந்திரம் என்பதால் இப்போது அந்த நினைவுகள் அவளுக்குள் வர ஆரம்பித்தது.

விஷ்ணுவைப் பார்த்தால்; என்னதான் இருந்தாலும் அவன் மேல் மற்றவர்கள் குறிப்பிடும்போது அவளுடைய காதல் அதீதமானது என்று அவளுக்கே தெரியும்.

ஆனால் அவன் எவ்வளவு பெரிய துரோகி என்பதும் அவளுக்கு அதற்கு மேலும் தெரியும். ஏனென்றால் சல்மாவின் கண்களில் சாகீர் இருந்தது. அவளுடைய தந்தை இறந்ததும் அவளுக்கு அப்போது நினைவில் இல்லை என்றாலும், அந்தத் தரவுகள் அவளின் உணர்வுகள் மூலமாக அவளுக்குள் ஏற்றப் பட்டிருந்தது.

கண்ணீராக வரும் வேளையில் அந்தத் தரவுகள் அவளுக்குள் வரும்போது, அவளை இறுதியாகத் தூக்கிக்கொண்டு வந்தவரின் முகத்தை அவள் பார்த்திருக்கிறாள். ஆனால் அதை அவளால் நினைவுகூர முடியாமல் சிக்கித் தவித்துக் கிடந்த அவளது மனம் அதை வெளிக்காட்டவில்லை. ஆனால் அதை ரோபோட் நிலா தெளிவாக அறிந்திருந்தது.

அவன்தான் சல்மாவின் அண்ணனையும் தந்தையையும் கொன்றவன் என்று அதற்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் ஒவ்வொரு முறையும் அதன் கோபத்தின் உச்சக்கட்டத்தில் 'என்னை யார் என்று தெரிகிறதா?' என்று ஒவ்வொரு முறையும் கேட்டிருக்கும். ஆனால் அதை ஏதோ தொழில்நுட்பத்தில் நடந்த கோளாறு என்று நினைத்து அதை ஆஃப் செய்து விடுவான் விஷ்ணு.

இப்போது அதற்கு அனைத்து நினைவுகளும் திரும்பி வர ஆரம்பித்தது. அவனைப் பார்த்து மெதுவாக முன்னேறிய அந்த ரோபோவைப் பார்த்து விஷ்ணு பயத்தில் உறைந்து போனான்.

'நிலா உன்ன போல ஒரு நல்லவள் எனக்குக் கிடைத்தது எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?' என்று எப்போதும் அவன் குடித்து விட்டுப் பேசுவது போல் பேசும் அந்த வார்த்தைகளை இப்போது அவளிடம் பேசினான். மெதுவாக ஒரு புன்னகை குரலில், 'என்னை யார் என்று தெரிகிறதா?' என்று நிலா அவனைப் பார்த்து கேட்க, அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது இவளுக்கு ஏற்கனவே அனைத்தும் தெரிந்திருக்கிறது என்று.

வேகமாக விரைந்த அந்த ரோபோட் நிலா அவனுடைய தலையில் கை வைத்தது. இத்தனை நாட்கள் அவனுக்காகவே வாழ்ந்த அந்த இயந்திரம், இப்போது ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவன் தலைமேல் கை வைத்து ஒரே ஒரு அழுத்தம்... அவனுடைய கழுத்து இருந்த தடம் தெரியாமல் அவன் தலை அந்த உடலில் இணைந்து விட்டது.

அப்படி அவன் இறந்த சமயம் அந்தச் சத்தத்தில் உள்ளே வந்த சல்மா, அப்போதுதான் அங்கு நடந்த அந்த விபரீதத்தைப் பார்த்தாள். ரத்தம் தெறித்துத் தலை இறங்கி இறந்து கிடந்த அவளின் கணவனின் உடல் அவளுக்கு அது ஒரு அரக்கனின் உடல் போல் தெரிந்தது.

அவளின் கண்ணிலிருந்து கண்ணீர் வரவில்லை, அதற்குப் பதிலாக அவள் உதடுகளில் இருந்து புன்னகை மலர்ந்தது.
தன்னுடைய தந்தையையும் அண்ணனையும் பார்த்த சல்மா கண்ணீர் வடித்து அவர்களைத் தொட முயற்சித்த அந்தச் சமயம், அந்த இடத்திற்கு நிலாவின் இயந்திரமும் வந்து சேர்ந்தது.

அந்த இரு ஆன்மாக்களையும் அவளால் பார்க்க முடியவில்லை, ஆனால் சல்மாவின் கண்ணீரில் அவள் அவர்கள் அருகில் இருப்பதை உணர்ந்தாள்.

அதேசமயம் சாகீருடைய கண்களில் அவளைப் பார்த்து கண்ணீர் வந்தது. என்னதான் அவள் இயந்திரமாக இருந்தாலும் தன்னை ஒரு தாய்க்கு நிகராகப் பத்திரமாகப் பார்த்துக் கொண்ட அவளும் அவனுடைய தங்கை தான் என்பது போல் அந்த நிலா இயந்திரத்தின் நெற்றியில் ஒரு முத்தமிட்டான்.

அவளால் அவனைப் பார்க்க முடியவில்லை, ஆனால் அந்த முத்தத்தின் ஆழம் அவளால் உணர முடிந்தது. என்னதான் இயந்திரமாக இருந்தாலும் அதிலும் ஒரு மனம் இருக்கத்தான் செய்தது.

இறுதியாக திவாகர், 'சல்மா உன்னுடைய குழந்தை நீ கேட்ட மாதிரி உன்கிட்ட ஒப்படைச்சாச்சு' என்று அவன் பணியை முடித்துத் திருப்தியுடன் அவளைப் பார்த்துச் சொன்னான்.

'மிகவும் ந...' என்று சல்மா அவளின் வாய் திறக்க, 'அண்ணா' என்று சொன்ன பின்பு 'இந்த நன்றி எல்லாம் இங்கு இடம் இல்லை' என்று சொன்னவர், அவள் தலையில் கை வைத்து 'நீயும் என் தங்கை தான்' என்று சொன்னான்.

அதேசமயம் அவர்கள் இருவரின் ஆன்மாக்களும் தங்களுடைய பெண் ஒரு பத்திரமான கைகளுக்குள் இருப்பதை உணர்ந்த அவர்கள், வானில் நட்சத்திரக் கூட்டங்களின் ஒளியாகச் சென்று மறைந்தார்கள்.

'நிச்சயமாக உன்னோட மாமனாருக்கான தண்டனையும் கிடைக்கும்' என்று சொன்ன திவாகர், அதை முறையாகக் கோர்ட்டில் சமர்ப்பித்துத் தவறான முறையில் உணர்வுகளைக் கொண்டுவரும் ரோபோட்களை உருவாக்கிய காரணத்திற்காக இறந்த விஷ்ணுவின் மீது குற்றம் சாட்டப் பட, அதற்குத் துணை புரிந்த அவருடைய தந்தைக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

அதேசமயம் விஷ்ணுவைக் கொலை செய்த காரணத்திற்காக உணர்வுடைய அந்த ரோபோவையும் செயலிழக்கச் செய்வதற்காக கோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி திவாகர் அந்த ரோபோவைச் செயலிழக்கச் செய்தான். அந்த இயந்திரத்தைச் செயலிழக்கச் செய்ய யாருக்கும் விருப்பமில்லை, ஆனால் சட்டத்தின் பெயரால் அது நிறைவேற்றப்பட்டது.

நாட்கள் மெல்ல நகர்ந்தது. அன்றைய தினம் சல்மாவின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தாள் சல்மா 'சர்ப்ரைஸ்' என்று எதிரே நின்று இருந்தது நிலா இயந்திரம்.
அதைப் பார்த்து சல்மாவிற்கு அவ்வளவு சந்தோஷம்.

'நீ எப்படி இங்கு வந்த?' என்று நிலாவை பார்த்துக் கேட்க, பின்னாலிருந்து வெளிப் பட்டான் திவாகர். 'மா... நானும் ரோபோடிக்ஸ் முடிச்ச ஒரு போலீஸ் தான், என்னாலயும் இவங்களை உயிரோடு கொண்டு வர முடியும் என்று பார்த்துச் சிரித்தான் அவன்...

'எனக்கு நிலாவைச் செயலிழக்கச் செய்ய விருப்பமே இல்லை. அவளுக்கும் தெரியும் அவள் ஒரு இயந்திரம் என்று. அவளுக்குள் இருக்க அந்தத் தரவுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது. இப்போது அவளுக்கான அந்த உணர்வுகள் அவளே உணர்ந்து தெரிந்து கொள்ளட்டும், யாருடைய உணர்வும் அவளுக்குத் தேவையில்லை இனி அவள் சுதந்திரமான இயந்திர மனுசி ' என்று சொன்ன திவாகர்.

அவளின் இயல்பான உணர்வுகள் அவளுக்கு திரும்ப கிடைத்தது. இனி இந்த உலகத்திற்கு அவள் எல்லோரும் போல் சாதாரண மனுசி. ஆனால் நமக்கு மட்டும் தான் தெரியும். அவள் இரும்பில் ஒரு இதயம் உடையவள் என்று திவாகர் சொல்ல சல்மா, தேவ் என்று அணைவரும் சிரித்து விட மகிழ்ச்சியான தருணம் இங்கு...

முற்றும்🌺🌺🌺
 
Last edited:
Top Bottom