- Joined
- Mar 8, 2026
- Messages
- 240
- Reaction score
- 169
- Points
- 43
நிழல் ஒன்று நிஜம் ஆனால்
அத்தியாயம் 20
கொஞ்சம் கொஞ்சமாக இருளின் அடர்த்தி குறைய ஆரம்பித்தது. ஆதவன் அந்த காலைப்பொழுதில் மிகவும் பிரகாசமாக வானில் உதித்து கொண்டு இருந்தான்.
அவனுக்கு தெரியாது—மீண்டும் அந்த இடம் இருள் சூழப் போகிறது என்று.
கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தில் பசுமை, அந்த சூரிய ஒளியை கண்களுக்கு மிகவும் இதமாக தோன்ற ஆரம்பித்தது.
அப்போது குழந்தையாக இருந்த தேவ், தன் தாய் நிலாவிடம் கேட்டான்,
“அம்மா… நம்ம எங்க இருக்கோம்? நம்ம வீட்ல தானே இப்ப இருக்கணும்…?” என்று அவன் கேட்க,
அதே சமயம் விஷ்ணு அவர்களை பார்க்க, அந்த குழந்தையோ விஷ்ணுவை பார்த்து பயப்பட்டு நிலாவின் சேவை தலைப்பில் ஒளிந்து கொள்ள பார்த்தான்.
இப்போது விஷ்ணுவின் மனதில் தோன்றியது ஒன்று மட்டும் தான்—
“நான் எதற்காக இந்த வீட்டிற்கு வரக்கூடாது என்று நினைத்தேனோ… ஆனால் இப்போது இந்த இடத்திற்கு நான் வந்தது உங்களுக்கு தான் பிரச்சனை ஆரம்பமாக போகிறது…” என்று அவனுக்குள் எண்ணங்கள் ஓட ஆரம்பித்தது.
அவனுக்கு இப்போது தெரியும்—குழந்தை பயப்படுகிறான் என்றால், நிச்சயம் அந்த ஆன்மா அவனின் உடலில் இல்லை என்று.
இரவு முழுவதும் தன் தந்தையுடன் மிகவும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்த தேவ், இப்போது எதனால் பயப்படுகிறான் என்பது விளங்காமல், நிலா,
“என்னாச்சுடா தங்கம்…?” என்று கேட்க,
“ஒன்னும் இல்லம்மா… நாம இப்ப எங்க வந்திருக்கோம்…?” என்று மழலை மாறாமல் கேட்டான்.
“நம்ம இப்போ நிலா விலாஸ் வந்திருக்கோம்… உனக்கு நினைவு இருக்குதா…?” என்று அதைப் பற்றி கேட்க, அவனுக்கோ அதை பற்றி எதுவும் தெரியாமல், தலையசைத்து “தெரியல” என்றான்.
அது நிலாவுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அந்த கார் கேட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டது.
அவன் போகும்போது, அந்த இடத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காவல்துறை வாகனம்—அதுவும் “தமிழக காவல்துறை” என்று பெயர் போட்டிருந்தது—அதை பார்த்தவுடன் அவனுக்கு புரிந்து விட்டது.
“நிச்சயம் நம்மைப் பற்றி தெரிந்த யாரோ தான் இங்கு உள்ளே வந்திருக்கிறார்கள்…” என்று. ஆனால் அது யார் என்பது தான் அவனுக்கு அந்த முதன் நாள் இருளில் அந்த சிசிடிவி காட்சியில் சரியாக தெரியவில்லை.
அந்த வீட்டிற்குள் காரை கொண்டு செல்ல கார் பார்க்கிங் வீட்டின் பின்னால் இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே கேட் இருப்பதால், அவர்கள் இருவரையும் அந்த தேயிலைத் தோட்டத்திற்கு முன்பாக இறக்கிவிட்டு, அவன் காரை கொண்டு போய் ஷெட்டில் நிறுத்துவதற்காக செல்ல ஆரம்பித்தான்.
“எப்படியும் இன்று எல்லாம் முடிந்துவிடும்…” என்று யோசித்து, விஷ்ணு ஏதோ ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு, வேகமாக அந்த கார் ஷெட்டில் கொண்டு போய் காரை நிறுத்தியவன்.
அந்த இடத்திற்கு அருகில் ஒரு மறைவான இடத்தில் சிலை ஒன்று இருப்பதை பார்த்தான். அதைப் பார்த்து மர்ம புன்னகை உதிர்த்த விஷ்ணு அந்த சிலையின் கையை மெதுவாக திருப்பினான்.
அந்த இடத்தில் தடதடவென்று ஒரு கதவு திறக்கும் சத்தம் நன்றாக எதிரொலிக்க ஆரம்பித்தது.
அது அந்த வீட்டில் தாழ்வாரத்திற்கு செல்லும் வழிப் போல இருந்தது. அந்த வழி முழுவதும் இருளால் நிறைந்திருக்க அவன் ஒவ்வொரு படியாக இறங்க ஆரம்பித்தான்.
கீழே இருக்கும் அந்த இருள் இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று அவனை விழுங்கிக் கொண்டே இருந்தது… மேலே என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல்.
விஷ்ணு ஒவ்வொரு படியையும் இறங்கிக் கொண்டிருந்தான். அந்த அடுக்குக் கிடங்கின் காற்றே பழைய ரகசியங்களை சுமந்து கொண்டது போல கனமாக இருந்தது.
சுவர்களில் ஒட்டிக் கிடந்த ஈரப்பதம், சில இடங்களில் பச்சை பூஞ்சை, எங்கோ தூரத்தில் சொட்டும் நீரின் ஒலி—அவை எல்லாம் சேர்ந்து ஒரு உயிருள்ள இடம் போல அந்த அறையை மாற்றியிருந்தது.
அவன் இறுதிப் படியை தொட்டவுடன்…
"டக்…" என்று எதிரொலி.
அவன் காலடி பட்ட தரை சற்று அதிர்ந்தது.
முன்புறம் நீண்ட பாதை. இரு பக்கங்களிலும் பழைய ஆய்வு கருவிகள்—சில உடைந்திருந்தது, சில இன்னும் வேலை செய்ய காத்திருப்பது போல அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது.
விஷ்ணு மெதுவாக சிரித்தான்.
“நான் மீண்டும் வந்து விட்டேன்…” என்று தன் சுவாசத்தை அந்த புழுதி காற்றில் இன்பமாக சுவாசிக்க ஆரம்பித்தான்.
அதே சமயம் அந்த காபி தோட்டத்தின் நுழைவாயில் அருகே அதன் எல்லையில் இருந்து உள்ளே வர முடியாமல் தவித்து நின்றது சாகீரின் ஆன்மா.
ஆனால் அது மிகவும் ஆக்ரோசமாக சாகிரீன் ஆன்மா அந்த வீட்டிற்குள் வர முடியாமல் தகித்து அதனுடைய மரண ஓலத்தை எழுப்பி நின்றது. அது யாரின் காதுகளுக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை.
தன் தந்தையின் ஆன்மா அந்த வில்லாவிற்குள் கட்டப்பட்டு வெளியே வர முடியாமல் தவித்து நின்றது.
சாகீரின் ஆன்மா உள்ளே வர முடியாமல் நின்று போனதை உணர்ந்த முஸ்தபாவின் ஆன்மா.
அவன் இங்கு வந்து விட்டான் என்பதை உணர்ந்த முஸ்தபா ஆக்ரோசத்தில் கத்த ஆரம்பித்தார்.
“சல்மா, அந்த சைத்தான் இங்கே வந்துட்டான். உன் அண்ணாவால் இந்த எல்லைக் குள்ள வர முடியாத அளவிற்கு ஒரு கட்டை கட்டி வச்சிருக்காங்க.
அதே போல என்னாலும் இந்த வீட்டை விட்டு வெளியே போக முடியாது.”
“அவனை உள்ளே கொண்டு வர ஒரே ஒரு வழி மனித ரத்தம்,” என்று சொன்ன விநாடிகள், “அப்பா, நான் போய் அண்ணாவை கொண்டு வரேன்,” என்று வேகமாக அவள் கதவைத் திறக்க, அப்போது அங்கே வந்து நின்றார்கள் நிலாவும் தேவ் இருவரும்.
அவர்கள் இருவரையும் பார்த்த அந்த நொடி, அதுவரை அந்த இடத்தில் அமைதியாக நின்றிருந்த விருதுனன் திடீரென உயிர் பெற்றவன் போல நகர்ந்தான்.
“என்னை தாண்டி உன்னால இந்த இடத்தை விட்டு வெளியே போக முடியுமா?” என்று தன்னுடைய இடது கை ஆட்காட்டி விரலால் உதடுகளில் ஒரு வித மந்திர வார்த்தைகள் மௌனமாக துடிதுடிக்க,
முஸ்தபாவை நோக்கிய அந்த விரல் அவன் நெற்றி பொட்டில் அழுந்தி வைக்க, அப்படியே ஒரு மூலையில் அடைபட்டு நின்றது அந்த ஆன்மா.
தன்னுடைய மறு கையால் சல்மாவின் பின்னந்தலை முடியை ஒரு தரதரவென்று பிடித்து, பின் வாசலில் தூக்கி எறிந்தான்.
அப்போது தான் உள்ளே வந்த நிலா, சல்மாவை நேருக்கு நேராக பார்க்கவில்லை. ஆனால் அவள் பார்த்தது திவாகரின் முகம். அங்கே ஏற்பட்ட சத்தத்தில் எதுவும் அறியாமல் உள்ளே வந்தவர்கள், அங்கு நின்றிருந்த திவாகரை பார்த்து பதறிப் போனார்கள்.
அதற்குள் சுதாரித்த திவாகர், திறந்த கதவின் வழியாக முன்னால் நின்றிருந்த தேவ்வை தூக்கிக் கொண்டு வெளியே ஓட ஆரம்பித்தான்.
“நிலா, நீங்க எப்படி இங்கே வந்தீங்க அண்ணா?” என்று கேட்டு நிற்க, பதில் எதுவும் சொல்லாமல் பாய்ந்து ஓட ஆரம்பித்தான்.
“என்ன ஆனாலும் தேவ் அவன் குழந்தை தான்,” என்று அவனைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தான்.
அப்படி ஓட நினைத்தவனை துரத்தப் போன விருதுனனை பார்த்த நிலா, “எப்படி எல்லாம் உள்ளே வந்தீங்க?” என்று கத்தியவளாக, துரத்திக் கொண்டு ஓடிய விருதுனனின் காலை தன்னுடைய காலால் தட்டினாள்.
அப்படி கீழே விழுந்த விருதுனன், நிலாவைப் பார்த்த உடன் பயத்தில் நடுங்கி போனான்.
“நான் கேட்டு கொண்டு இருக்கிறேன், எப்படி உள்ளே வந்தாய்?” என்று கோபத்தில் சீறிய நிலாவைப் பார்த்து, “தெரியாம வந்துட்டேன்… என்னை விட்ருங்க… என்னை எதுவும் செய்யாதீங்க…” என்று கதறியவனை பார்த்து, தன்னுடைய கண் சைகையிலேயே அங்கேயே நிற்க வைத்தாள்.
நகர்ந்தால் அவன் உயிர் அவன் கையில் இல்லை என்பது அவனுக்கு தெரியும்.
அதே சமயம், அந்த காபி தோட்டத்தின் செடிகளுக்குள் புகுந்து ஓடிக்கொண்டிருந்த திவாகரின் கையில் செடியின் கிளைகள் கீறி காயம் ஏற்பட்டு, அதிலிருந்து வேகமாக இரத்தம் வெளிப்பட ஆரம்பித்தது.
அப்படி இரத்தம் வடிய வடிய, அவன் வேகமாக அந்த கதவை நோக்கி ஓட ஆரம்பிக்க, அந்த ரத்தம் வடிவதை பார்த்த சாகீருக்கு தனக்கான உடல் ஒன்று கிடைத்துவிட்டது என்று மனதில் நினைத்தான். அவன் அந்த எல்லையைத் தாண்டி, திவாகரன் ரத்தம் சிதறி விட, அதுதான் சாகீருக்கான ஒரு வழிப்பாதை என்று திவாகரின் உடலுக்குள் வேகமாக நுழைய ஆரம்பித்தான்.
அந்த சமயம் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் நின்றிருந்த திவாகர், இப்போது சாகீரின் ஆன்மாவுடன் கலந்திருந்தான்.
அவனுடைய பாதம் அந்த நிலா விலாஸின் எல்லைக்குள் அடி எடுத்து வைத்தது.
அந்த சமயம் உள்ளுக்குள் அடைப்பட்டு கிடந்த முஸ்தபாவின் ஆன்மாவிற்கு உயிர் வந்தது போல ஒரு உணர்வு ஏற்பட ஆரம்பித்தது.
வேகமாக கீழே விழுந்த சல்மா எழுந்து வெளியே வர, அவளை பார்த்த நிலாவிற்கு தன்னையே நேரில் பார்ப்பது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.
“யார் நீ? இங்கே எப்படி வந்தாய்?” என்று சல்மாவை பார்த்து நிலா கேட்க, சல்மாவிற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே விக்கித்து நின்று போனாள். சல்மாவிற்கு தெரியும் அது இயந்திரம் என்ன நிலையில் இருக்கிறது என்று,
அந்த சமயம் அவர்களுக்கு தெரியாமல் அந்த இடத்தில் விருதுனன் நகரத் தொடங்க,
அவனுடைய பாதம் தரையில் படாமல், அப்படியே சாகீரின் சக்தியால் அவன் உடல் மேலே இழுக்கப்பட்டது; அந்தரத்தில் பறக்க ஆரம்பித்தான்.
“ஐயோ! என்னை யாராவது காப்பாத்துங்க… தயவு செய்து என்னை கீழே இறக்கி விடுங்க…” என்று கதறினான் விருதுனன்.
அந்த இடத்தில் ஒரு மர்ம புன்னகையை உதித்து கொண்டு வந்த திவாகர், அவனின் கையில் இருந்த குழந்தையை பார்த்தவள், “அண்ணா, எப்படி நீங்க இங்க வந்தீங்க? யார் இந்த பொண்ணு? பார்க்க அப்படியே என்ன மாதிரியே இருக்காளே… முதலில் குழந்தையை கொடுங்க... உங்களால் எப்படி இதை செய்ய முடிந்தது...” என்று ஒன்றும் புரியாமல் பிரமித்து போய் கேட்டாள் அந்த இயந்திரப் பெண்மணி,
“இங்கே என்ன நடக்குது? எப்படி இவன் இப்படி அந்தரத்தில் பறந்துட்டு இருக்கான்?” என்று அனைத்து கேள்விகளையும் ஒரே அடியில் கேட்டு தீர்த்தாள் நிலா.
“நீ கேக்குறது எல்லாத்துக்கும் முதல் உன்னோட கணவர் கிட்ட தான் பதில் இருக்கு. இப்போ அவன் எங்க போயிட்டான்?” என்று திவாகர் உருவத்திலிருந்து சாகீர் கேட்டான்.
“வீட்டுக்கு பின்னாடி காரை நிறுத்திட்டு வரேன்னு சொல்லி போனாரு…” என்று பதட்டத்தில் நிலா சொல்லவும்.
அந்த இடத்தில் தலையில் கால் வைக்காமல் அந்தரத்தில் நின்றிருந்த விருதுனன், அவனுடைய அந்த ஒரு விரலை சுழற்ற, அதை பார்த்த சாகீர், “இது இருந்தா தானடா எங்களை கட்டுவ?” என்று அந்த விரலை பட்டக் என்று பின்னால் திருப்பி உடைத்தான்.
“அய்யோ அம்மா!” என்று கத்தியவனை, அங்கிருந்த தூணோடு தூணாக கட்டியவன், வேகமாக, “நிலா, நீங்க என்னோட வாங்க. சல்மா, நீங்க குழந்தையை தூங்க வைங்க,” என்று குழந்தையை எடுத்து சல்மாவிடம் கொடுத்தான்.
எத்தனை வருடங்கள் தன் குழந்தையை தீண்டாமல் இருந்த சல்மாவிற்கு, அவளின் கண்கள் மௌனமாக அழுகையை வெளிப்படுத்தின.
“அண்ணா, நான் இவங்க யாருன்னு கேட்டேன், ஆனா எந்த பதிலும் சொல்லல… என்னை எங்கே கூட்டிட்டு போறீங்க?” என்று அவள் கேட்க ஆரம்பித்தாள்.
அதை கேட்ட திவாகர், “இது உன்னுடைய அக்கா. உனக்கு நினைவிழந்த போது அவளையும் நீ மறந்து விட்டாய் என்று நினைக்கிறேன்,” என்று அவன் சொல்வதை கேட்டு, ஒன்றும் புரியாமல் சரி என்று தலையசைத்து விட்டு அவனுடன் செல்ல ஆரம்பித்தாள்.
தன்னுடைய மகனை பல வருடங்கள் கழித்து கையில் வாங்கிய சல்மாவிற்கு, பல நூறு முத்தங்களை ஒரே நிமிடத்தில் தந்துவிட முடியுமா என்பது போல, அந்த குழந்தைக்கு அத்தனை முத்தமிட்டாள்.
“என் தங்கம்… என் ராஜா…” என்று செல்லம் கொஞ்ச, தேவ் தன் தாயின் ஸ்பரிசத்தை உணர்ந்தது போல அவளுடன் நன்றாக ஒட்டிக் கொண்டான்.
அதே சமயம் உள்ளே சென்றிருந்த சல்மாவிடம் சென்ற குழந்தையை பார்த்து நிலாவிற்கு ஒருவகை நிம்மதி தான். இதுவரை யாரிடமும் செல்லாத அந்த குழந்தை இப்போது அவளிடம் சென்றிருக்கிறது. தனக்கும் ஒரு சொந்தம் இருக்கிறது என்பதை மனதில் நினைத்து சந்தோஷம் அடைந்தாள்.
“சரி தேவ், நீ இவங்களோட இரு. நான் போய் அப்பா எங்க இருக்காருன்னு பாத்துட்டு வரேன்,” என்று வஞ்சையாக சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்வதை பார்த்த அவர்கள் இருவருக்கும், ஒரு இயந்திரத்திற்குள் இவ்வளவு தாய்ப்பாசம் இருக்க முடியுமா என்பது போல பிரமிப்பாக இருந்தது.
அந்த இடத்திலிருந்து மெதுவாக வீட்டின் பின் கட்டை நோக்கி அவர்கள் நகர ஆரம்பித்தார்கள்.
குழந்தையை எடுத்துக் கொண்டு சல்மா உள்ளே சென்றாள்.
அதே நேரத்தில், விருதுனனின் விரல்கள் ஒன்றன்பின் ஒன்றாக உடைக்கப்பட்ட அந்த கொடூர தருணத்தில், முஸ்தபாவை கட்டியிருந்த மந்திரக் கட்டுகள் திடீரென சிதறின. பல ஆண்டுகள் அடக்கி வைக்கப்பட்ட கோபம் வெடித்தது போல, அவன் ஆன்மா அந்த இடத்திலிருந்து பாய்ந்து வெளியே வந்தது.
"நீ மறுபடியும் மாந்திரீக எண்ணத்தோட உள்ளே வந்தாயா…? உனக்கு இன்னும் உள்ளே வர தைரியம் இருக்கா…?"
என்று ஆக்ரோஷமாக முழங்கினான் முஸ்தபா.
அவனது குரல் அந்த இடத்தை முழுவதும் அதிரச் செய்தது.
கட்டுகளால் சிக்கியிருந்த விருதுனன், உடைந்த விரல்களால் வலி தாங்க முடியாமல் திகைத்து நின்றான். எதையும் எதிர்க்க முடியாத நிலையிலிருந்த அவனை நோக்கி, முஸ்தபாவின் ஆன்மா மெதுவாக முன்னேறியது.
ஒரு கணத்தில், தனது முழு சக்தியையும் திரட்டிய முஸ்தபா, விருதுனனை அப்படியே கட்டுகளுடன் மேலே தூக்கினான். தலைகீழாக ஆகாயத்தில் தூக்கி வைத்து, எந்த இரக்கமும் இன்றி தரையில் பலமாக வீசியெறிந்தான்.
அந்த தாக்கத்தில் விருதுனனின் தலை நசுங்கி, இடுப்பெலும்புகள் சிதறி நொறுங்கின. சில நொடிகளில் அந்த இடம் முழுவதும் இரத்த வெள்ளமாக மாறியது.
அவன் அங்கேயே உயிரிழந்தான்.

Last edited: