- Joined
- Mar 8, 2026
- Messages
- 240
- Reaction score
- 169
- Points
- 43
நிலா சொல்வதை கேட்ட திவாகரின் உடல் நடுங்க ஆரம்பித்தது.
“இது உண்மையா…? இல்லை… இவளுக்கு ஏதாவது ஆகி, நினைவுகள் கலங்கி இருக்கா…?” என்று அவன் ஒரு நொடி யோசித்தான்.
ஆனால், அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஏதோ ஒரு மறைக்கப்பட்ட உண்மையை மெதுவாக வெளிச்சத்துக்கு கொண்டு வருவது போல அவனுக்கு இருந்தது.
அது சாதாரண பேச்சு இல்லை… ஒரு முக்கியமான வாக்குமூலம்.
அதை இழந்துவிடக் கூடாது என்று நினைத்த திவாகர், தனது தனிப்பட்ட அலுவலக ரெக்கார்டரை ஆன் செய்து, அவள் பேசுவதை பதிவு செய்ய ஆரம்பித்தான்.
அவளுடைய நினைவுகள்… ஆறு வருடங்களுக்கு முன் நடந்த அந்த இரவுக்குள் மெதுவாக சென்று கொண்டிருந்தது.
“அந்த ‘நிலா’ன்னு சொல்லப்பட்ட அந்த பொம்மை… அது ஒரு இயந்திரம் தான்… அப்போ தான் எனக்கு புரிந்தது…” என்று சல்மாவின் குரல் உடைந்தது.
“நான் தூங்குற மாதிரி நடித்து… அங்கே நடக்குறதெல்லாம் கவனிக்க ஆரம்பிச்சேன்…”
“நான் தூங்கிட்டேன்னு நினைச்ச அவர்… என்ன ஒரு திரையால மறைச்சார்…
அடுத்த பக்கம் என்ன நடக்குது எனக்கு தெரியாது னு நினைச்சார்…”
“அதுக்கப்புறம்…”
அவள் மூச்சை ஆழமாக இழுத்தாள்.
“என்னோட தலையில சில wires பொருத்தப் பட்டது…”
“என் தலையின் மேல இருந்த computer screenல ஒரு வரி ஓடிக் கொண்டிருந்தது…”
‘Nila Memory Transfer to Project Nila…’
“நிலாவின் நினைவுகள்… Project ‘Nila’க்குள் செல்கிறது…”
“அப்போ தான் நான் முழுசாக அதிர்ந்தேன்…”
“என்னோட நினைவுகள்… அது கூட… ஒரு பொம்மைக்குள்ள போகுது…”
“அது… பொம்மை இல்லையா…?” என்று அவள் தன்னக்கு தானே பேசுவது போல பேசினாள்.
அவளுடைய கைகள் நடுங்க ஆரம்பித்தது.
“நான் எழுந்து வர முயற்சி பண்ணேன்…”
“அப்போ…”
அப்போது அந்த குரல் என் உயிரை உடைய செய்தது.
“என் குழந்தையின் அழுகுரல் அந்த அறைக்குள்ள கேட்டுச்சு…”
“இங்கே என்ன நடக்குது…?” என்ற பயம் என்னை முழுக்க பிடிச்சுக்கிட்டது…
என்னுடைய குழந்தையும் இந்த ஆய்வு அறையில் அழுகையின் சத்தத்தில் உள்ளே வர
“அங்கே பாரு அம்மா…” என்ற குரல் கேட்டது.
“அவர் என்னை தான் கூப்பிடுறார்னு நினைச்சேன்…”
“ஆனால்…” அவள் குரல் மெதுவாக உடைய ஆரம்பித்தது.
“எனக்கு முன்னாடி…”
“என்னோட குரல்… அந்த திரைக்கு அப்புறம் இருந்து கேட்டுச்சு…”
ஒரு நொடிக்கு அமைதி.
“அது நான் இல்லை…”
“ஆனா… என்ன மாதிரி பேசுது…”
அவளுடைய குரல் முற்றிலும் உடைந்து போனது.
அதை கேட்ட திவாகரின் இதயம் படபடவென்று துடிக்க ஆரம்பித்தது.
'உண்மையான நிலா இருக்கும் போது அவளை உறங்க வைத்து விட்டு இயந்திரத்தை செயல்படுத்திக் கொண்டு இருந்திருக்கிறான்...' திவாகரின் மூளைக்குள் விஷ்ணுவை வெட்டி போட வேண்டும் என்ற கோபம் உள்ளே உருவானது.
“என்ன டா தங்கம்… அம்மா வந்துட்டேன்… எதுக்கு அழறீங்க…” என்று அந்த குரல் என்னுடைய உயிரையே நடுங்கச் செய்தது.
என் குழந்தையும் இதற்கு முன்னால் அந்த இயந்திரம் பழக்கப் பட்டது போல அவளிடம் விளையாட ஆரம்பித்தது.
அப்போது இது பொம்மை இல்லை… இங்கு என்னவோ நடக்கிறது என்று புரிந்தது. மெதுவாக அந்த குரல் அறையை விட்டு வெளியே சென்றது.
அவரும் உடன் சென்றார்.
நான் அந்த அறையில் ஏதோ நிர்க்கதியாக தவிர்க்க விட்டது போல் உணர்ந்தேன்.
அறை கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. இப்போது நான் யார் என்றே தெரியாத நிலையில், அவர் மட்டும் தான் என் உலகம் என்று இருந்தேன்.
இந்த சமயத்தில் நான் ஏதாவது பிரச்சினை செய்தால் அது எனக்கு மட்டும் இல்லை, என் குழந்தைக்கும் ஆபத்து என்று புரிந்துகொண்டேன்.
பழைய நிலைக்கு, உறங்குவது போல் வந்து படுத்து கொண்டேன்.
நிமிடங்கள் மணி நேரங்களாக மாற ஆரம்பித்தது.
ஏதோ அவர் எனக்கான ஓய்வு என்று, டாக்டர் பெயரை சொல்லி இத்தனை நாள் தருகிறார் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் அப்போது தான் புரிந்தது. நான் அவரின் ஏதோ ஒரு தேவைக்காக இங்கு படுக்க வைக்கப்பட்டுள்ளேன் என்று.
எனக்கு எந்த ஒரு பழைய நினைவுகளும் இல்லை. இப்போது அதுவரை அந்த நிலா விலாஸ் மட்டும் தான் என் உலகம்.
பசுமையான அந்த ரம்மியமான அந்த பூமி என்னுடைய சொர்க்கம்… இதுதான் என் சுதந்திர பூமி என்று நினைத்தேன்.
ஆனால் அப்போது தான் எனக்கு புரிந்தது — என்னை கட்டாயம் செய்யாமல், ஒரு பசுமையான சிறைக்குள் என்னை அடைத்து வைத்திருக்கிறார் என்று அவள் சொல்லச் சொல்ல, திவாகரின் உடல் குளிர்ச்சி அடைய ஆரம்பித்தது.
அங்கிருந்து தப்பிக்க வழி தேடினால், என்னுடைய குழந்தை என்ன ஆகும் என்று எனக்குள் ஒரு பயம் பிடிக்க ஆரம்பித்தது.
நான் இப்போதும் எப்போதும் போல அமைதியாக இருக்க வேண்டும். இல்லை என்றால் ஏதாவது விபரீதத்தில் முடிந்து விடுமோ…? என்னுடைய கணவர் உண்மையில் நல்லவர்தானா என்று எனக்குள் ஒரு வித பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது.
நான் அமைதியாக அந்த அறையிலேயே இருந்தேன். நேரம் செல்ல ஆரம்பித்தது. மீண்டும் அவருடைய குரல் கேட்க ஆரம்பித்தது.
“என்னடா… எதுக்கு வந்து நீ தேவையில்லாம கவலைப்படுற…? உனக்கு ரெஸ்ட் தேவைப்படுது இல்ல… அதனால தான் டாக்டர் உன்னை இந்த ட்ரீட்மென்ட் எடுத்துக்க சொல்லி இருக்கார்… நீ கவலைப்படாம வந்து படு… எல்லாம் சரியாகிடும்…”
என்று அவர் பேசினார்.
அது எப்போதும் என்னிடம் சொல்லும் அதே வார்த்தைகள்… ஆனால் இப்போது என்னிடம் சொல்லவில்லை.
நான் அமைதியாக கண்களை மூடி, என்ன நடக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தேன்.
அந்த ரோபோ, அவளுடைய பழைய இடத்தில் படுக்க வைக்கப்பட்டது. இப்போது அந்த உடலில் எந்த ஒரு அசைவும் இல்லை.
மெதுவாக அவர் நான் இருந்த திரையின் பக்கம் வந்தார்.
“என்னோட அழகான ராட்சசியே… தூக்கம் எப்போதும் போல பத்தலையோ…” என்று அவர் என்னிடம் பேசிக் கொண்டே வந்தார்.
எனக்குள் ஒருவித மருந்து ஒன்றை அவர் செலுத்தினார். இப்போது நடக்கும் இந்த நிகழ்வை பார்த்த பிறகு, அவர் செலுத்திய ஊசி எனக்கு பெரிதாக எதுவும் தோன்றவில்லை.
கண்களை மூடி அதை ஏற்றுக் கொண்டேன்.
இங்கு நடப்பது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.
“நிலா… நிலா… என்ன… உங்களுக்கு இன்னும் தூக்கம் தெளியலையா…?” என்று ஏதோ ஒரு குழந்தையிடம் பேசுவது போல் என்னிடம் அவர் பேசினார்.
அதை கேட்கவே எனக்கு மிகவும் பயமாக இருந்தது.
அது எப்போதும் போல அன்பான வார்த்தைகள் தான்… ஆனால் அந்த சமயத்தில் அந்த வார்த்தைகளில் இருக்கும் ஒரு வித சூட்சமம் எனக்கு அந்த நொடிகளில் தான் புரிய ஆரம்பித்தது.
நான் வலுக்கட்டாயமாக ‘நிலா விலாஸ்’ எனும் சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறேன் என்பது உறக்கத்தில் இருந்து கண் விழிப்பது போல எனக்கு மெதுவாக புரிந்தது.
நான் மெதுவாக கண் திறந்தேன்.
என்னை பார்த்த அவர்… மிகவும் மெல்லிய புன்னகையுடன் இருந்தார். எப்போதும் அவருக்குள் இருக்கும் அதே புன்னகை.
இப்போது நான் பயப் பட்டால்… என்னுடைய குழந்தையை என்னால் காப்பாற்ற முடியாது.
அது மட்டும் தான் என்னுடைய ஒரே குறிக்கோள்.
எப்படியாவது நாங்கள் அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன்.
அவர் என் தோள்மேல் கை வைத்து அந்த இடத்திலிருந்து அழைத்து சென்ற விதமே, நான் ஏதோ ஒரு கூண்டிற்குள் அடைக்கப்பட்ட கிளியைப் போல உணர வைத்தது.
நாட்கள் மெதுவாக கடந்தன. இது தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு நிலைக்கு மேல் அதை நான் ஏற்க முடியவில்லை.
அதனால், நான் அவரிடம் வேறொரு முறையில் பேச ஆரம்பித்தேன்.
“என்னால இந்த ட்ரீட்மென்ட் எடுத்துக்க முடியல… ரொம்ப பதட்டமா இருக்கு… பயமா இருக்கு… அதனால கொஞ்ச நாளைக்கு இது வேண்டாமே…” என்று சொல்லி, அந்த நிலைமையிலிருந்து தப்பிக்க முயன்றேன்.
அவர் என் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டது போல, மீண்டும் அந்த அறைக்குள் என்னை அழைத்துச் செல்லவில்லை. அந்த இயந்திரமும் உயிர்ப் பிக்கப் படவில்லை.
ஆனால் அதற்குப் பதிலாக நடந்தது வேறு…
குழந்தைக்கு இரண்டு வயது வந்தவுடன், அடுத்த குழந்தையைப் பற்றி அவர் யோசிக்க ஆரம்பித்தார்.
அது எனக்குள் இன்னொரு பயத்தை விதைத்தது.
ஏற்கனவே ஒரு குழந்தையை காப்பாற்ற நான் எவ்வளவு பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்…
இப்போது இரண்டாவது குழந்தைக்காக அவர் என்னை நெருங்க நினைப்பது, உள்ளுக்குள் என்னை நடுங்கச் செய்தது.
அவர் முன்னர் என்னிடம் நடந்துகொண்ட விதமும், அந்த இயந்திரத்தை பார்த்த பின்பு எனக்குள் உருவான அந்த விளங்காத பதட்டமும்—இவை அனைத்தும் சேர்ந்து ஒரு தெரியாத பயமாக மாறின.
ஆனால், அந்த பயத்தை வெளியில் காட்டாமல் மறைத்துக் கொண்டேன்.
எப்போதும் இருப்பது போலவே, அமைதியான ‘நிலா’வாக நான் நடிக்க ஆரம்பித்தேன்…
அந்த நாட்களை நினைத்துக் கொண்டிருந்தாள் சல்மா.
ஆனால் அதற்கு எதிர்மாறாக, அந்த நாளில் நடந்தது முற்றிலும் வேறுபட்டது.
அந்த வீட்டின் பக்கத்தில் அமைதியாக ஓடிக் கொண்டிருந்த ஆற்றங்கரை, அன்றே ஒரு பேராபத்தை நிகழ்த்தியது.
என்னிடம் அவர் ஆசையுடன் “அடுத்த குழந்தை” பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
அவரின் அந்த அன்பான நிர்பந்தத்திலிருந்து தப்பிக்க, நான் சிரித்தபடியே விளையாட்டாக ஓரமாக நகர்ந்தேன்.
அந்த ஒரு நொடியில் தான் அது நடந்தது.
எங்கிருந்து வந்தது என்று கூட புரியாமல், ஒரு காட்டாற்று வெள்ளம் என்னை மோதியது.
ஒரு கணத்தில் நான் நிலையை இழந்தேன்… அடுத்த கணத்தில், அந்த வெள்ளம் என்னை இழுத்துச் சென்றது.
எவ்வளவு நேரம் அப்படியே அடித்துச் சென்றது என தெரியவில்லை.
கண்கள் திறந்தபோது, நான் முற்றிலும் அறியாத ஒரு இடத்தில் இருந்தேன்.
அது ஒரு சிறிய குக்கிராமம்.
புது ஆட்கள் எளிதில் வர முடியாத, உலகத்திலிருந்து வெட்டிப் போனது போல ஒரு பகுதி.
அந்த கிராமத்தில் நான் கண் திறந்த அந்த தருணத்தில்…
எனக்கு என்னைப் பற்றிய எந்த நினைவுகளும் இல்லை.
ஆனால் அங்கு கண்விழித்த நான் நிலா-வாக இல்லை. சல்மா- வாக என்று சொல்ல திவாகரின் முகத்தில் ஏதோ கேட்க கூடாத ஒன்றை கேட்ட ஒரு அதிர்ச்சி உடலெங்கும் பரவியது