- Joined
- May 4, 2024
- Messages
- 5,390
- Reaction score
- 3,231
- Points
- 113
அத்தியாயம் : 20
விக்ரம் வருகிறான் என்றதும் அவனிடம் கதையடித்து மகிழலாம். கூடவே ஊர் சுற்றிப் பார்க்கலாம். வெளிநாட்டுப் படிப்பு, தோழிகளைப் பற்றிப் பேசலாம் என்று நினைத்திருக்க, அவனோ சதா பீ.ஏவின் புகழ் பாடுவது கண்டு கடுப்பாக இருந்தது சாதனாவுக்கு!
"ஏன் லாயர் சார், உங்களுக்குப் பீ.ஏவாக வந்துட்டு இத்தனை நாளாய் சமையல்காரி வேலை தான் செஞ்சுட்டு இருந்தாங்களா? அப்போ, இனிமேல் அவங்களை எங்க வீட்டுக்கு நிரந்தர சமையல்காரியா ஏற்பாடு செஞ்சுடலாம்! அம்மாவுக்கு மட்டுமல்ல அடிக்கடி இங்கே வர்றப்போ உங்களுக்கும் சாப்பிட ஏதுவா இருக்கும்!"
அவளது கிண்டலான வார்த்தைகளைக் கேட்ட விக்ரமின் முகம் மாறியது. நந்தினி, சாதனாவின் பேச்சில் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் குழப்பத்துடன் காணப்பட்டாள்.
"சாதனா, நீ சாப்பாடெல்லாம் தயாரா இருக்கா பாரு! நான் விக்ரமை அழைச்சுட்டு வரேன்!" என்று இடையிட்டார் மகாலெட்சுமி.
தாயாரின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாமல் அவள் அகலவும், பிரசாத் விக்ரமை நெருங்கினான்.
"சாரி விக்ரம், அவள் ஏதோ தமாசுக்கு பேசுறா! தவறா நினைக்க வேண்டாம்!"
அவன் நந்தினியைப் பார்த்தான்.
விழிகளில் பொங்கிய நீர் எப்போது கன்னத்தில் பாய்ந்து தன்னைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று பயந்து அங்கிருந்து அகல முயன்றாள் நந்தினி. அப்போது அவளின் கைகளைப் பற்றினார் மகாலெட்சுமி!
பெற்ற தாயவளின் விரல் தீண்டலில் அவள் உடல் வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்கியது! விழிகள் இரண்டும் மதகு உடைந்த வெள்ளத்தைப் போலக் கடகடவெனப் பாய்ந்தன. நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்க்க முடியாமல் மனதிற்குள்ளேயே மருகினாள்.
'அம்மா'ன்னு உங்களை வாய் திறந்து கூப்பிட முடியாத பாவி ஆகிட்டேனே! பெத்த தாய் கண் எதிரில் இருந்தும் என்னால் வாய் திறந்து பேச முடியலையே! உங்களைப் போலவே இருப்பதாகச் சொல்றீங்களேம்மா, நான் உங்க வயித்துல பிறந்தவ, உங்களைப் போல் இல்லாமல் வேற யாரைப் போலம்மா இருப்பேன்? தாத்தா… தாத்தா ஞாபகத்தில் பேசும் நீங்க, உங்களுக்குப் பிறந்த என்னை இத்தனை வருஷமா பார்க்க வராம இருந்துட்டீங்களேம்மா! நான் உங்களை நினைக்காம ஒரு நாளுமே இருந்தது கிடையாதும்மா! இனிமேலும் உங்களை நினைக்காம என்னாலே எப்படி இருக்க முடியும்?' மனதிற்குள் நினைப்பதை வார்த்தைகளாகக் கோர்க்க முடியாமல் தத்தளித்தாள் நந்தினி!
அவளது கண்ணீர் மகாலெட்சுமியின் காலில் பாய்ந்ததும், அவர் முகம் பதற்றமாக மாறியது! அவசரமாக அவளைத் தூக்கி நிமிர்த்த முயன்றார். நந்தினி எங்கே, தன்னையறியாமல் 'அம்மா'வெனக் கதறி விடுவோமோ என்று பயந்து தன்னைக் கட்டுப்படுத்த முயன்றாள். முடியாமல் போனதும் விக்ரமைப் பார்த்து விழிகளால் தன்னைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்தாள்!
அவன் நந்தினியை நெருங்கினான்.
"இங்கே பாரம்மா, சாதனா கொஞ்சம் செல்லமா வளர்ந்துட்டா. அதான் இப்படிப் பேசி உன் மனசையும் காயப்படுத்திட்டா! அவளுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன். அழாதம்மா!" என்று பரிவுடன் கூறினார்.
அவருடைய வலது கை விரல்கள் நந்தினியின் கூந்தலை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தன.
அவள் தன்னை நிலைப்படுத்த முயன்றாள்.
"இந்தக் காலத்தில் இத்தனை அடக்கமான, ஒரு சின்ன வார்த்தையில் கண்ணீர் வடிக்கும் பெண்ணைப் பார்ப்பது ஆச்சரியமா இருக்கு!! இனிமேல் சாதனா எதுவும் சொல்லாம நான் பார்த்துக்கறேன். கவலைப்படாதே! முகத்தைக் கழுவிட்டு வா சாப்பிடப் போகலாம்" என்று ஆறுதலாகக் கூறினார்.
நந்தினி தலையசைத்தாள்.
அருகில் இருந்த குளியலறைக்கு அழைத்துச் சென்றார். அங்கேயே முகம் கழுவித் துடைத்த நந்தினி, பெற்றவளின் நினைவில் இருந்து மீள முடியாமல் கண்ணீர் வடித்தாள்.
மகாலெட்சுமி நாற்பதுகளைக் கடந்தவர் பார்ப்பதற்கு அத்தனை எளிமையாகக் காணப்பட்டார். விழிகளில் பொருந்திய கண்ணாடி, அதன் வழியே பிறர் மனதைப் படிக்க முற்படும் சாதுர்யம். சாந்தமான முகம், வசீகரமான சிரிப்பு, காட்டன் புடவையில் தெரிந்த கம்பீரம், கையில் மாட்டப்பட்ட பிரேஸ்லெட், காப்பு என எளிமையின் மறு உருவாகத் திகழ்ந்தார்.
தான் இப்படி கண்ணீர் வடித்துக்கொண்டு நின்றால் அவர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்? வந்த உடனே அம்மாவுக்கும் மகளுக்கும் இடையில் பிரச்சனையை உருவாக்க முயன்றது போல் ஆகிவிடுமே... பிறகு, சாதனாவின் அன்பைப் பெற முடியாமல் போய்விடும் என்று கருதி, மனதை ஒருமுகப்படுத்த முயன்றாள் நந்தினி.
முயன்று தன்னை அடக்கிக்கொண்டு கதவைத் திறந்து வெளியேறியதும், அங்கு கலங்கிய முகத்துடன் நின்றிருந்த விக்ரமின் விழிகளை எதிர்கொள்ள முடியாமல் மறுபடியும் கண்ணீரை உகுத்தாள்.
அவளை இழுத்து அணைத்தான். மனபாரம் தீரும் வரை ஆறுதலாக வருடிக் கொடுத்தான். உதட்டால் கன்ன மேடுகளில் சாமரம் வீசினான். விக்ரமின் வார்த்தைகளற்ற ஆறுதலும், அரவணைப்பும் பெண்ணவளைப் புத்துயிர் பெற உதவியது.
"நாம கெஸ்ட் ஹவுஸுக்குப் போயிடலாம். இங்கே அப்பப்போ வந்து பார்த்துக்கலாம். நீ இப்படி வாய் திறந்து பேச முடியாம கலங்குவதைப் பார்த்துட்டுருக்க என்னால முடியாது! சாதனா பேசியது எனக்கே வருத்தமளிக்க, பாவம் நீ எத்தனை வேதனைப்பட்டிருப்பேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது! சீக்கிரமா இங்கேர்ந்து நம்ம ஊருக்குக் கிளம்பிடலாம். அதுவரை என் பேச்சைக் கேட்டு நட!" அவளிடம் அறிவுறுத்தினான் விக்ரம்.
சிறு விக்கலுடன் விலகினாள் நந்தினி.
"நான் அதுக்காக அழல. சாதனா என் உடன் பிறவா சகோதரி! அவள் கூறும் ஒற்றை வார்த்தையில் உடைந்து போக நான் ஒண்ணும் அந்த அளவுக்குப் பலகீனமானவள் கிடையாது. ஆனால் அம்மா... அம்மா …" என்றவள் மறுபடியும் அழுதாள்.
அவள் முதுகை ஆதூரமாக வருடினான். ஜக்கில் இருக்கும் நீரைக் கண்ணாடி கப்பில் கவிழ்த்து உதட்டருகில் கொண்டு சென்றான். விக்கலும், கண்ணீரும் கொஞ்சமாகக் குறைந்ததும், அவளைத் தன் மார்பில் சாய்த்து மென்மையாக அணைத்தான்.
"அம்மா... அம்மாவைப் பார்த்ததும் என்னால அடக்க முடியல. என்மேல அவங்க கை விரல் பட்டதும் அப்படியே காற்றோடு கரைஞ்சு போயிட்ட மாதிரி இருந்தது! ஏங்க, எனக்கு மட்டும் அம்மாவோடு சேர்ந்து வாழ கொடுத்து வைக்கல? ஏன் அம்மாவின் அன்பையும், அக்கறையான வார்த்தைகளையும் கேட்டு, அவரோட கையால் பசியாறும் பாக்கியம் அமையல? நான் மட்டும் என்னங்க பாவம் செஞ்சேன்? இத்தனை வருஷமா உயிரோடு இருந்தவங்களை இறந்துட்டதா நினைச்சுத் தனியா வாழ்ந்து வந்திருக்கேன்! காலம் பூரா எங்க அம்மாவின் பேச்சைக் கேட்டுட்டு அவங்களோடவே இருக்கணும்னு ஆசையா இருக்குங்க! 'நந்தும்மா, உன்னோட அம்மா வந்திருக்கேன் பாருடா! இனிமேல் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்! இத்தனை வருஷமா உனக்குத் தராத பாசத்தை எல்லாம், ஒட்டு மொத்தமா கொட்டி என் அன்பில், பாசத்தில் குளிரச் செய்வேன்'னு சொல்ல மாட்டாங்களான்னு ஏக்கமா இருக்குங்க!
அம்மா, என்னைத் தொட்டதும் என்னால தாள முடியலங்க! அப்படியே அவங்களைக் கட்டிக்கிட்டு கதறணும் போல இருந்தது! ஆனால், ஊமையாகிப் போயிட்ட என்னால் அழுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? அதான், இப்படி ஒரு தாயோடு சேர்ந்து வாழ முடியாம போயிட்டதேன்னு நான் செஞ்ச பாவத்தை என் கண்ணீரால் கழுவ நினைச்சேன். அம்மா… அம்மா ரொம்ப அழகா இருக்காங்க இல்லங்க? அவங்களைப் பார்த்து 'அம்மா'ன்னு வாய் திறந்து கூப்பிட முடியாத பாவி ஆகிட்டேனே!
அன்னைக்கு நான் செத்து என் தாய்க்கு நேர இருந்த அவப்பெயரில் இருந்து காப்பாத்தியிருக்க மாட்டேனான்னு என்னால நினைக்காம இருக்க முடியல. எப்படிங்க அவங்க கிட்டே பேசி இயல்பா பழக முடியும்? எப்படி என் கையால் சமைத்து அவருக்குப் பரிமாற முடியும்? எப்படிங்க அவங்களை நேர்ல பார்த்தும் பேசாம இருக்க முடியும்? தாத்தா, இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் என்னை தவிக்க விட்டுட்டுப் போயிட்டாங்களே!" என்று விசும்பினாள்.
விக்ரமின் அணைப்பு இறுகியது. நாடி அவள் உச்சியில் புதைந்தது. அவளின் ஏக்கமான வார்த்தைகளுக்கு அவனிடம் பதில் இல்லை. ஆனால், நந்தினியின் மென்மையான உள்ளம் எந்தக் காரணத்தைக் கொண்டும் புண்பட்டு விடக்கூடாது; மறுபடியும் விழிகளில் இருந்து கண்ணீர் வரக்கூடாது என்று மட்டுமே அவனால் நினைக்க முடிந்தது.
"ரதிமா! அத்தைக் கிட்டே நேரடியா பேசினா எல்லாம் சரியாகிடும்டா! நான் வேணா பேசட்டுமா?"
அவ்வளவு தான்! பதறியடித்துக் கொண்டு விலகினாள் நந்தினி.
"ஏண்டா! ஏன் இப்படிப் பயப்படுறே? அப்படி எதுவும் ஆகாம நான் பார்த்துக்கறேன். நீ இப்படி ஏக்கப்பட்டு கண்ணீர் வடிப்பதை பார்த்துட்டுருக்க என்னால முடியலடா! அதைவிட நேரடியா பேசிட்டா நல்லது! நாளை ஒருநாள் இப்படிப் பொய்யாக நடித்து யாரோ மாதிரி வந்துட்டுப் போனது நீதான்னு தெரிய வந்தா, அவங்களால் தாங்க முடியுமான்னு யோசிச்சுப் பாரு! அன்னைக்கு என்னைப் பார்த்து குற்றம் சுமத்துனியே, 'பணத்துக்காக வந்து காதலிக்கிற மாதிரி வேஷம் போட்டே! நேரடியா விசயத்தைச் சொல்லி கேட்டிருந்தா, அந்த கையெழுத்தைப் போட்டுக் கொடுத்துட்டு விலகிப் போயிருப்பேனே'ன்னு... இப்போ நீ செய்றதுக்கு பெயர் என்னடா? என்னை மட்டும் குற்றவாளியா கருதி ஒதுக்கி வச்சுக்கிட்டு, இப்போ நீயும் அதே தவறை தானே செய்றே ரதி?" என்று கேட்டான்.
அவள் பதில் கூறமுடியாமல் விக்கித்துப் போனாள்.
விக்ரமின் கேள்விக்கான பதிலைக் கூற முடியாமல் திணறலுடன் காணப்பட்டாள் நந்தினி. அவன் அதைக்கண்டு கொள்ளாமல் மேலும் தொடர்ந்தான்.
"ரதி, உன்னைக் குற்றம் சொல்றதா நினைக்காதே, எப்பவும் 'ஆழம் தெரியாமல் காலை விடும் பழக்கம்' எனக்கு கிடையாது. ஒரு வழக்காக இருந்தாலும், பிறர் கூறும் விசயமா இருந்தாலும், அதைப்பற்றி அலசி ஆராயாம பேசுவது எனக்குப் பிடிக்காது. உன் வழக்கில்... ஆம்! மிஸ்டர் சங்கரன் என்கிட்டே பாதிதான் சொன்னார். ஆனால், நான் அப்போதிலிருந்து உன்னைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து, சாதக பாதகங்களை ஆராய்ந்த பிறகே உங்க ஊருக்கு வர தீர்மானிச்சேன்.
உன்னைப் போட்டோவில் பார்த்ததை விட நேரில் ரொம்ப அழகா இருந்தே! உன் கையால் வயிறாற பசியாறி, உன்னைப் பற்றி முழுவதுமாய் அறிந்த பின், சிறு வயதிலிருந்து நீ பட்ட கஷ்டங்கள் என் கண் முன்னே வந்து நின்று நிம்மதியைப் பறித்தன. அப்பத்தான் முடிவு பண்ணினேன். எந்த ஊர் மக்கள் உன்னை அவதூறாகப் பேசுறாங்களோ, அவங்க முன்னாடியே வாழ்ந்து காட்டணும்; உன்னைப் பற்றிப் பெருமிதமா பேசணும்னு! அதுக்கு விக்னேஷ் உடனான கல்யாண பந்தம் தடையா இருந்தது. நான் ஒண்ணு நினைச்சு நடக்க, அது என்னையே குற்றவாளியா மாத்திடுச்சு...
உன்கிட்டே இதைப் பற்றிப் பேசணும்னு எத்தனையோ முறை முயற்சி செஞ்சும் அதுக்கான வாய்ப்பை நீ எனக்குத் தரல. முதல்ல அத்தையோடு சேர்ந்து கொஞ்ச நாள் சந்தோஷமா இரு! நம்ம விசயத்தைப் பற்றிப் பிறகு பேசலாம். தேவையில்லாம எதையாவது நினைச்சு உன்னைக் கஷ்டப்படுத்தாதே! அறைக்குள்ளே வந்து ரொம்ப நேரமாகுது; அவங்க தவறா நினைக்கலாம்.
ரதி, நீ உன் தாத்தாவின் வளர்ப்பு; கோழையில்லை! எந்த இடத்துல எப்படி நடந்துக்கணும்னு தெரியாத அறிவிலியும் அல்ல! உன்கிட்டே இருக்கும் பாசத்தைக் கொட்டி என்னை உன்மீது உண்மையான நேசத்தைப் பொழியச் செய்தது போல, மற்றவர்களிடமும் நடந்துக்கோ. அதுதான் என் விருப்பம்; உன் தாத்தாவும் ஆசைப்படுவார்" என்றான்.
விக்ரமின் பேச்சில் இருந்த உண்மை புரிபட்டது. தங்களுடைய விசயத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் தாய் மகாலெட்சுமி மனம் வருந்தும் விதமாக நடக்காமல், சாதனாவின் அன்பையும் பெற வேண்டும். அவள் என்ன சொன்னாலும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.
முகத்தைத் துடைத்து மெல்லிய புன்னகையை இதழ்களில் அரும்ப விட்டாள் நந்தினி. உதடுகள் விரிய அதை ரசித்துக்கொண்டே கதவைத் திறந்து வெளியேறினான் விக்ரம்.
வெகுநேரமாகியும் அறைக்குள் சென்ற இருவரையும் காணாத தவிப்பில் இருந்தான் பிரசாத்.
"என்ன லாயர் சார், இவ்வளவு நேரமா உங்க பீ.ஏவோடு சேர்ந்து ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தீங்களா? பசி உயிரை எடுக்குது. வாங்க சீக்கிரமா சாப்பிடலாம்" என்றான் விவேக்.
அவனைப் பார்த்து முறைக்க முயன்று முடியாமல் புன்னகையைச் சிதற விட்டான் விக்ரம். "பிரசாத், சரியான சாப்பாட்டு ராமனைத் தான் அழைச்சுட்டு வந்திருக்கே... அங்கிளோட மொத்த சம்பாத்தியத்தையும் தின்னு தீர்க்காம விடமாட்டான் போலிருக்கு?" என்று கேலியாகக் கூறினான்.
விவேக், "சம்பாதிக்க மூணு பேர் இருக்க, அதைத் தின்னு தீர்க்க யாராவது ஒருத்தர் வேண்டாமா? அந்த வேலையை நான்தான் பார்க்குறேன்" என்று கண் சிமிட்டினான்.
உடனே சாதனா, "அப்படி எல்லாம் சும்மா சாப்பிட விட மாட்டேன் லாயர் சார். மாசா மாசம் பாக்கெட் மணிங்கிற பெயர்ல அவர்கிட்டே இருந்து ஒரு தொகையை அடிச்சுட்டு தான் விடுவேன்" என்றாள்.
சாதனாவின் குறும்புத்தனமான வார்த்தைகளில், அந்த இடமே சற்று நேரம் புன்னகை தேசமாக மாறியது.
விக்ரம் அருகில் நந்தினி அமர, மறுபக்கம் சாதனா அமர்ந்து கொண்டாள். பிரசாத் நந்தினியின் அருகில் அமர்ந்தான். விவேக் அடுத்தாற்போல் காணப்பட்டான். மகாலெட்சுமியும் பணியாளும் நிற்பதைக் கண்டு எழுந்து சென்று உதவினாள் நந்தினி.
அவரது மறுப்புகளை இன்முகமாகச் செவி சாய்த்து, அனைவருக்கும் தானே இறால் புட்டு, இட்லி, இறால் குழம்பைப் பரிமாறினாள்.
சிரிப்புனூடே கலகலத்தபடி உண்டு கொண்டிருக்க, நந்தினியின் அமைதியான முகமும், அடக்கமும் பிரசாத்தை வெகுவாகக் கவர்ந்தது. 'அண்ணா' என்ற அழைப்பும், பசியறிந்து உணவுப் படைத்த விதமும், அவள் மீது மரியாதையையும், பாசத்தையும் அதிகப்படுத்தியது.
சாதனாவின் குணத்திற்கு நேர் எதிராக இருப்பதாக எண்ணினான்.
"அண்ணா, இன்னும் கொஞ்சம் வைக்கட்டுமா? அம்மா, உங்களுக்கும் வைக்கட்டுமா? என்னங்க உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்டுக் கேட்டு அவர்கள் வயிறார அருந்தச் செய்தாள்.
இனிய சுவையுடன் கூடிய உணவு வயிற்றை நிரப்ப, அதை இன்முகத்துடன் வழங்கியவள் அவர்களின் மனதையும் நிறைத்தாள்.
"உன்னைப் பெத்தவங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க. நீ நல்லா இருக்கணும்" என்று கூறிய மகாலெட்சுமியின் விழிகள் அடிக்கடி கலங்கின. அதை கண்ணாடி எனும் பெட்டகத்திற்குள் பிறர் அறியாமல் மறைத்து வைத்தார்.
அனைவரும் ஹாலுக்கு வந்தனர்.
விக்ரம், கெஸ்ட் ஹவுஸிற்கு கிளம்புவதாகக் கூறித் தனது உடைமைகளுடன் தயாரானான். நந்தினி, மகாலெட்சுமியை விட்டுப் பிரிய மனமின்றி தயங்கியபடி நின்றாள்.
அவள் முகத்தைப் பார்த்த மகாலட்சுமி, "நீ இங்கேயே தங்கி இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். ஆனால், காலையிலேயே ஃப்ளைட் ஏறி வந்ததும், ராத்திரி சரியா தூங்காததும் உடம்புக்கு அசதியா இருக்கும். கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு மதியம் வாம்மா... உனக்காக நான் காத்திருப்பேன்" என்றார்.
அவருக்கு நந்தினியை மிகவும் பிடித்து விட்டது. அவளுடனேயே அமர்ந்து பேசிக்கொண்டிருக்க ஆசையாக இருந்தது. ஆனாலும், அவர்களைத் தொல்லை செய்ய மனமின்றி இருவரையும் அனுப்பி வைத்தார்.
ஐந்து நிமிடத்தில் கெஸ்ட் ஹவுஸிற்குள் நுழைந்தார்கள்.
மாடிப் பகுதி, கீழ்ப்பகுதி, வீட்டைச் சுற்றிலும் உள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட பின்னர், பால்கனியின் வழியாகத் தெரிந்த சமுத்திரத்தின் அழகைப் பார்த்துக்கொண்டே இருந்தாள் நந்தினி.
"கெஸ்ட் ஹவுஸ் ரொம்ப அழகா இருக்குல்ல?" கேட்டுக்கொண்டே வந்த விக்ரமைப் பார்த்தாள்.
அதற்குள் குளித்து உடை மாற்றி இருந்தான்.
அவளுக்குக் கூசியது. நாணத்துடன் திரும்பி கொண்டாள்.
"நீ குளிக்கலயா?"
"ம்ஹூம்..."
"ஏன்?"
"நான் காலையிலே குளிச்சிட்டேன்"
"நானும்தான்... இருந்தும் குளிக்கலயா?"
அவள் பதில் கூறாமல் முறுவலித்தாள்.
"இப்படி புன்னகையால் பதில் கூற மறுப்பது நியாயமில்லை ரதிதேவி! எனக்குப் பதில் வேணும்!"
விக்ரமின் சீண்டலில் அவள் முகம் சிவந்தது.
"இப்படி கடற்கரை பக்கமா ஹோட்டல், வீடெல்லாம் வச்சுருக்காங்களே! சுனாமி, ஆழிப்பேரலை, கடல் நீர் உள்ளே புகுந்து கிராமமே அழிந்து போயிட்டதா செய்திகள் வந்தும், நேரில் பார்த்தும் இவர்களால் எப்படிப் பயப்படாம தங்க முடியுது?"
அவன் சிரித்தான்.
"கடலில் நிறைய உயிரினங்கள் உயிர் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்ல, கடலுக்குள் பில்டிங் கட்டுவது, அதன் அருகில் செய்வதெல்லாம் தவறில்லையா? பூமியில் எவ்வளவோ இடமிருக்க, அதை எல்லாம் விட்டு நான்கில் ஒரு பாகம் உள்ள சமுத்திரத்தை ஆக்கிரமித்து, பல லட்சம், கோடி செலவில் இரசாயணம் கலந்த கட்டிடங்களைக் கட்டுவது அதன் கொந்தளிப்புக்கு காரணமா?" என்று கேட்டாள்.