அனைவருக்கும் வணக்கம்,
தாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நாவல் போட்டியின் வெற்றியாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
முதலில் நிறைவுற்ற 25 போட்டிக் கதைகளில் மதிப்பிற்குரிய கெஸ்ட் ரைட்டராக கலந்து கொண்டு சிறப்பித்த
திருமதி வத்சலா ராகவன் (நிலாவில் பார்த்தது), தேவி ஸ்ரீனிவாசன் (அரியணை அறிவான், நந்தினி சுகுமாரன் (காதல் அரங்கேறுதே) மூவருக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்து அவர்களுக்குப் பரிசு கோப்பையுடன், சான்றிதழ்கள் அளித்து கெளரவிக்கப்படுகிறார்கள்


அடுத்ததாக போட்டியில் முதல் இடத்தைப் பெற போவது,
நான் போட்டி அறிவிப்பு விடும் போது சொன்னது தான்… அதாவது, நான்கு அல்லது மூன்று பிரிவுகளில் உள்ள கதைகளின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும்.
மர்மம், திகில், கிரைம் திரில்லர் - 2 பிரிவுகளும் சேர்ந்து தான் மொத்தம் 6 கதைகள் வருவதால் அவைகளை ஒன்றாக இணைத்து பரிசுகள் வழங்கப்படுகிறது.
முதல் பரிசு பெறும் கதைகள் :
1. கிரைம் திரில்லர் - மரண முத்திரை (பார்கவி முரளி)
2. காதல், குடும்பம் - காமுற்றேன் யான் (அனிதா குமார்)
3. ஆன்ட்டி ஹீரோ / ஹீரோயின், கோபக்காரன், முரடன் -
செந்தணலும் வெண்பனியும் (மிருதுளா அஸ்வின்)
மூவருக்கும் ஒரே போன்ற பரிசு கோப்பையும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
சிறப்பு பரிசுகள் :
கிரைம் திரில்லர் - நிமிடம் நழுவி தொலையுதே (ஆஷா சாரா)
காதல் குடும்பம் - வல்லினம் அவனின் மெல்லினம் அவள் ( R.J. Novels)
இருவருக்கும் ஒரே போன்ற பரிசு கோப்பையும், சான்றிதழும் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.
வாசிப்பு போட்டியில் கலந்து கொண்டவருக்கான பரிசுகள் :
சிறந்த வாசிப்பாளர் :
சரண்யா (25 போட்டிக்கதைகளையும் வாசித்து தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு, முகநூலிலும் கருத்துக்களை தெரிவித்து எழுத்தாளர்களை ஊக்குவித்த அவரது நல்ல மனதைப் பாராட்டி, பரிசு கோப்பையும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள்.
சிறந்த பங்களிப்பாளர் :
ரம்யா அம்மு (25 போட்டிக்கதைக்கான வீடியோ செய்ய உதவியது, வாசிப்பு, விமர்சனம், முதல் முறையாக வரலாற்று நாவல் யாழினி பெயரில் எழுதியிருப்பது (
நெஞ்சம் கிழித்த நேசம்) ... போன்ற பல பிரிவுகளில் அவரது சிறப்பான செயல்பாடுகளை பாராட்டும் விதமாக பரிசுகோப்பையும், எனது புத்தகமும், சான்றிதழும் வழங்கி கெளரவிக்கப்படுகிறார்கள்.
சிறந்த விமர்சகர்கள் :
1. அப்சரஸ் பீனாலோகநாதன் ( போட்டிக் கதைகளை வாசித்து கவிதை வடிவில் விமர்சித்தல், தளத்தில் கருத்துக்களை பதிவிடுதல், கெஸ்ட் ரைட்டர்களை கண்டுபிடித்தல், முகநூலில் வீடியோ பதிவிட்டு ஊக்குவித்தல் … என்று நடந்து கொண்ட அவரது அளப்பரியாத செயல்பாடுகளை பாராட்டி அவருக்குப் பரிசு கோப்பையும், எனது புதிய புத்தகமும், சான்றிதழும் வழங்கி கெளரவிக்கப்படுகிறார்கள்.
2. Nisha spm ( போட்டிக் கதைகளை வாசித்து விமர்சித்தல், கதைகளை நிறைய பேரிடம் கொண்டு செல்ல உதவுதல், மீம்ஸ் போட்டு எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துதல் … போன்றவற்றிற்காக பரிசு கோப்பையும், எனது புதிய புத்தகம், சான்றிதழும் வழங்கி கெளரவிக்கப்படுகிறார்கள்.
சிறந்த வாசகர் பரிசுகள் :
சுவாதி மோகன்
ஈஸ்வரி
Sivagnana Lakshmi
இவர்கள் மூவருக்கும் பரிசுகளும், சான்றிதழும் அனுப்பி வைக்கப்படுகிறது. வெற்றி பெற்ற அனைவரும் தங்களின் முகவரி, கைப்பேசி எண்ணை அனுப்பி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியில் தேர்வாகிய எழுத்தாளர்கள் அனைவரும் எழுத்து நடை, கதையோட்டம், காட்சி நகர்வுகள், அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண்கள், பிழையில்லா எழுத்துக்கள்… பலவற்றின் அடிப்படையில் ஜட்ஜஸ், விமர்சகர், என்னால் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
காதல் பிரிவில் மொத்தம் 14 போட்டிக் கதைகள் பதிவாகி இருந்தன. அவற்றில் இரண்டாவது இடத்திற்கு இரண்டு கதைகள் வந்து அதில் பிழை இல்லா எழுத்துக்கள், தெளிவான நடையில் வல்லினம் தேர்வாகி உள்ளது.
அதேபோல கிரைம் திரில்லர் 6 போட்டிக் கதையில் அதிக மதிப்பெண் பெற்று எழுத்து நடை கதையோட்டத்தில் நிமிடம் கதை தேர்வாகி இருக்கிறது.
போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்துப் போட்டியாளர்களுக்கும், குறித்த நேரத்தில் எழுதி முடித்தவர்களுக்கும், போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும், கெஸ்ட் ரைட்டராக பங்கு பெற்று சிறப்பித்த அன்பு உள்ளங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளும், வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்


எல்லாவற்றிற்கும் மேலாக போட்டியை நடத்த என்னுள்ளே இருந்து உத்வேகத்தை அளித்து வரும் இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்


சரியாக இந்த மாத இறுதி அன்று நள்ளிரவு 12:00 மணிக்கு போட்டிக்கதைகள் அனைத்தும் தளத்தில் இருந்து நீக்கப்படுகிறது. அதற்கு முன்பு வாசித்து பார்த்து எப்படி இருக்கிறது சொல்லுங்கள்.
போட்டி எழுத்தாளர்களில் யாருக்காவது தளத்தில் இருந்து இப்போது கதையை நீக்க வேண்டாம் என்றால் முதலிலே தகவல் தந்து விடுங்கள்.
மீண்டும் ஒரு போட்டி அறிவிப்புடன் வெகு விரைவில் உங்களை சந்திக்கிறேன்.
ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள்.


போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த எழுத்தாளர்களின் பெயர்கள் :
1. கனவின் கர்மா (மகாராஜா பரமேஸ்வரி) கிரைம் திரில்லர்
2. முரண்படாத கவிதைகள் (ஆனந்தஜோதி) ஆன்ட்டி ஹீரோ, கோபக்கார நாயகி
3. அகத்தியனின் அமுதமானவள்! (கனி சுரேஷ்) குடும்பம் காதல்
4.மௌனம் போலொரு மெல்லிசை ( ரித்தி) குடும்பம் காதல்
5. நிமிடம் நழுவி தொலையுதே (ஆஷா சாரா) கிரைம் திரில்லர்
6. மரண விடுதி (எழுத்தாளர் நாகா) திகில், மர்மம்
7. நிலாவில் பார்த்தது (வத்சலா ராகவன்) குடும்பம் காதல்
8. அரியணை அறிவான் தேவி ஸ்ரீனிவாசன் (காதல், குடும்பம், கிரைம்)
9. மரண முத்திரை (பார்கவி முரளி ) கிரைம் திரில்லர்
10. ஆரண்ய வதம் (கவிதாஞ்சலி) கிரைம் திரில்லர்
11. நெஞ்சம் கிழித்த நேசம் (ரம்யா அம்மு) குடும்பம் காதல்
12. வல்லினம் அவனின் மெல்லினம் அவள் (Junaitha / Rj novels) காதல் குடும்பம்
13. நான் அவள் இல்லை ( சுதா சுரேஷ்) ஆன்ட்டி ஹீரோ
14. அந்தி மழை சாரல் (Rezvana begam / Nasima Banu) குடும்பம் காதல்
15. காற்றில் கரைந்த புன்னகை (ஆனந்தஜோதி) ஆன்ட்டி ஹீரோ
16. காமுற்றேன் யான் (அனிதா குமார்) கோவக்கார நாயகன்
17. நிஜத்தை தேடும் பாவை இவள் ( விஜி ப்ரியா) குடும்பம், காதல்
18. செந்தணலும் வெண்பனியும் (மிருதுளா அஸ்வின்) ஆன்ட்டி ஹீரோ
22. தாலாட்டும் தாழம்பூவே ( ஸ்வேதா ஸ்வே) காதல் குடும்பம்
23. தேடிய தேடல்கள் (சாலிஹா அலி) திகில் மர்மம்
24. அயலவனின் வெண்ணிலவே! (சௌஜன்யா) காதல் குடும்பம்
27. என்னைத் தாலாட்டா வருவாளா? (கவிராகுல்) குடும்பம் காதல்
28. கணவாய் காணாத காதல் (ஷண்மதி) குடும்பம் காதல்)
30. காதல் அரங்கேறுதே (நந்தினி சுகுமாரன்) காதல் குடும்பம்
33. உன் மென்மையில் தொலைந்தேனடி (லதா சுந்தரம்) ஆன்ட்டி ஹீரோயின்