நான் தேடும் காதல் நிலவே
Active member
- Joined
- Jun 15, 2026
- Messages
- 175
- Reaction score
- 134
- Points
- 43
காதல் நிலவே
2
"மருமகளே! அடுப்புல பால் வெச்சுட்டு வந்தேன். நான் போய் அரிசி போட்டுட்டு வரேன்..."
"தம்பி, அது 'உலையில' தான் போடுவாங்க..."
"ஆமா ஆமா... அது உலையில தான் போடுவாங்க. நான் போயிட்டு நாளைக்கு வரேன்..."
"யோவ் மாமனாரே! தனியா விட்டுட்டு போகாதய்யா... இப்பதான் உம்ற புள்ள கையை உடைச்சான்!"
"நீதானம்மா கண்டுக்க மாட்டேங்கிறான்னு ஃபீல் பண்ண? அவனே பாசமா பாக்குறான், பேசி கரெக்ட் பண்ணிடு. அடுத்த மாசம் முகூர்த்த தேதி பாக்குறேன், வரட்டா..."
மனிதர் அறுபது வயதிலும் குடுகுடுவென ஓடிவிட்டார்.
இவள் 'இஇஇ' என இளிக்க... ஒற்றை விரல் நீட்டி, "வா" என்றான் அருகில்.
"எதுவா இருந்தாலும் இங்க இருந்தே கேட்டுக்கிறேன் சார், சொல்லுங்க ," என்றாள் கைகட்டி பணிவாக.
எழுந்து அவள் உயரத்திற்கு குனிந்தவன்... (ஐயோ! கடிச்சு குதறப் போறானோ?) - இவள் பின்னால் சாய...
"மேடம், தலைகீழா குதிச்சாலும் என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது. திரும்பவும் சொல்றேன், உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கலடி. அது மட்டும் காரணமில்லை, என் அப்பாவை கைக்குள்ள வச்சு என்ன ஆட்டம் போட்டாலும் சரிதான், நான் ரேஷ்மாவைதான் மேரேஜ் பண்ணிப்பேன்..."
"யூ நோ... நாங்க அஞ்சு வருஷமா சின்சியரா லவ் பண்றோம். அடுத்தவ சாப்பிட்ட எச்சிலுக்கு ஆசைப்பட மாட்டேன்னு நினைக்கிறேன். சூடு, சொரணை, மானம், ரோஷம் உனக்கு இல்லைன்னு தெரியும்... உன்கிட்ட கொஞ்சம் ஒழுக்கமிருக்கு..."
"அதுக்காக சொல்றேன்... 'டோன்ட் க்ராஸ் மை வே'..."
கண்கள் சிவக்க அவன் பேசியது வெறும் வாய் வார்த்தைகள் இல்லை; அடிநெஞ்சில் இருந்து பேசுகிறான்... புரியாமல் இல்லை!
"காலேஜ் வந்து என் இமேஜை ஸ்பாயில் பண்ண நினைச்சா... உயிரோட புதைச்சிடுவேன், ஜாக்கிரதை!"
விரல் நீட்டி எச்சரித்தவன், ஆக்சிலரேட்டரை முறுக்கியதில் பைக் எகிறி சீறிப் பாய்ந்தது.
'அப்படி என்ன என் மேல கோபம்? இதற்கு முன் நிறைய அடி, திட்டு வாங்கி இருக்கிறாள். ஆனால் இன்று ஏன் இவ்வளவோ உக்கிரம்?
அவளுக்கு இன்னும் புரியவில்லை. விளையாட்டு வேறு; அவன் சேர்த்து வைத்திருக்கும் 'நல்லவன்' என்ற இமேஜோடு விளையாடுவது வேறு என்று. அதைத்தான் சொல்லிவிட்டுப் போகிறான்.
எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வான்... தன் ஒழுக்கம், தகப்பனின் கௌரவத்திற்கு இழுக்கு நேர்ந்தால், உயிரை எடுக்கவும் தயங்கமாட்டான் இந்த முரடன்! அவனைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவள்...
இதையே ஆயுதமாக்கித் தன்னை மிருகமாக்கப் போவதை அறியாது...
'நீ மிரட்டுனா நான் பயந்திடுவேனா? - அசட்டு தைரியம்! காதலித்தவனை நெஞ்சில் சுமந்து, வாழ்க்கையை வெறுத்து, தினம் கதறப்போவதை அறியாத மடந்தையோ...
'போடா! நான் வாங்காத திட்டா? நீ போ முன்னால, நான் வரேன் பின்னால... பாட்டிக்கிட்டே!
அழகர் வீட்டிற்கு எதிர் வீடுதான் இவள் வீடு. மாடி அறைக்கு வீட்டில் பெரும் போராட்டமே செய்து பிடுங்கியிருந்தாள்.மாடியில் தான்அவள் அறை நேர் எதிர் அவன் அறை..!
"ஆத்தாஆஆ..."
"ப்ச்... இவ ஒருத்தி!" - டிவி ஒரு பக்கம், ஃபேன் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, ஒரு கையில் போனை வைத்து வெப் சீரியலில் மூழ்கியிருந்த மீனாட்சி, சலிர்த்தபடி எழுந்து வந்தாள்.
"அடேய் பச்சைக்கிளி! ஊட்டி வளர்த்த உடன்பிறப்புனு கூட பார்க்காம, ஆள் வச்சு போட்டுக் கொடுக்குறியா?"
'நங்கு நங்கு' என நடுமண்டையில் இரண்டு கொட்டு வைக்க...
"ஆஆ... சனியனே! நைட்டு அப்பா வரட்டும்டி, உன்னை பெல்ட்ல அடி வாங்க வைக்கிறேன் பாரு!"
"ஓஹோ! அடி வாங்க வைக்கப் போறியா? பச்சைக்கிளி... பக்கத்து தெரு ஷர்மிக்கிட்ட உனக்கு என்னடா பேச்சு?"
"அது... அது... கிரிக்கெட்ல டவுட் கேட்டுட்டு இருந்தேன். ச்சீ இல்ல இல்ல... கெமிஸ்ட்ரி... கெமிஸ்ட்ரி டவுட் கேட்டுட்டு இருந்தேன் அக்கா..."
"அக்காவா? அடடடா... காதுல தேன் வந்து லிட்டர் கணக்குல பாயுதே ராசா! ஆனா பாரு ராசா, உன் அக்காகாரி உன்னை விட க்ரைம் வில்லி! அங்க இளிச்சு இளிச்சு பேசினீல? 'என் தம்பி இளிச்சவாயனா'அப்படியே ஷார்ட் ஃபிலிம் எடுத்து வச்சிருக்கேன்.
நான் பண்றது, பேசுறது எல்லாம் உம்ற அப்பன் காதுக்கு போச்சு... உன்னோட ஷார்ட் ஃபிலிமை நைனாக்கு மட்டும் இல்லடி, ஊரு முழுக்க ரிலீஸ் பண்ணி விட்டுடுவேன்!"
"இல்ல அக்கா, இல்ல அக்கா... இனி வாயையே திறக்க மாட்டேன்!"
"ம்ம்... அது! சாயங்காலம் வரும்போது முட்டை பப்ஸ் வாங்கிட்டு வரணும், புரிஞ்சதா? அப்புறம் அங்க இங்கனு நின்னு பொம்பளைங்ககூட பேசுறது என்ன பழக்கம்? நைனா மான மரியாதை என்னத்துக்கு ஆகுறது?"
"ஆமா! நீ வாங்காத மானத்தைதான் நான் வாங்கிட்டேன், பாரு..."
"என்னடா சொன்ன?"
"ஹான்... பப்ஸ் வாங்கிட்டு வரேன்னு சொன்னேங்கா..."
இதுக்கு மேல இங்க நின்னா, ஒன்னு கடையே வாங்கிட்டு வர சொல்லுவா; இல்ல அட்வைஸ் பண்ணியே கொல்லுவா... என்று சைக்கிளைத் தள்ளிக்கொண்டே ஓடிவிட்டான் அவன்.
"ஆத்தாஆஆ..."
"ப்ச்... வந்தாச்சு! என்னடி காலங்காத்தால கத்திக்கிட்டே வர?"
"ஆத்தா! நான் பாஸாயிட்டேன்..."
"க்கும்... நேத்துதானே அதுக்கு கேக் கொடுத்த?"
"அட ஆமா இல்ல... என் ஆளுகிட்ட குட் நியூஸ் சொல்லவே இல்லையே மம்மிஜி! சோ, இது செகண்ட் இன்னிங்ஸ்... ஸ்வீட் எடு, கொண்டாடு!"
சாக்லேட்டை பிரித்து, மீனாட்சியின் வாயில் வைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
எல்லார் வீட்டிலும் அப்பாவுக்கு மகளைத்தான் பிடிக்கும். இந்த வீட்டில் அது தலைகீழ்! சோமசுந்தரம் பத்திரிகை ஆபீஸில் எடிட்டராக வேலை பார்க்கிறார்; சின்சியர் சிகாமணி. சிறுவயதில் இருந்தே இவளின் இயல்பான குறும்புகள் அவருக்கு அலர்ஜி.
சிறு தவறுக்குக் கூட அடி பின்னி விடுவார்; மகனுக்கும் அதேதான்.
பெண் குழந்தை என்றதும் அவர் முகம் சுருங்கியது. மீனாட்சிக்கு மனம் வலித்துப் போனது. பத்திரிகையில் வேலை செய்யும் மனிதருக்கு இப்படி ஒரு குணமா? ஆச்சரியப்படத்தான் வேண்டும்.
குறும்புகளின் இளவரசி; எத்தனை அடி அடித்தாலும் கொஞ்சூண்டு பாசம் காட்டினால் போதும், அவர்களிடம் ஓடும் மழலை மனம் கொண்டவள் தான் இந்த நிலா.
அப்பனின் அகராதிக்கு எதிராக நிலாவின் குறும்புகள் இருக்க, "அடித்து வளர்க்கிறேன்" என மிகக் கண்டிப்பான தகப்பனாக இருந்தவர், முதல் முறை அரக்கனாக உருமாறி பயமுறுத்தியது.
10-இல் ஜஸ்ட் பாஸ். 11-இல் முதல்முறை ஃபெயில் ஆனபோது, தெரு என்று பாராது பெல்டால் அடி வெளுத்து விட்டார். தடுக்க வந்த நல்லதம்பியை அசிங்கமாக பேசிவிட, அந்த நேரம் காலேஜ் படித்துக் கொண்டிருந்த அழகர் பைக்கில் வர... தகப்பனை பேசியவரை சும்மா விடுவானா? கை நீட்டி அடித்துவிட்டான்!
அன்று பற்றிக்கொண்டது இரு வீட்டிற்கும் பகை! "எல்லாம் இவளால்!" - தெருவில் தன் மானம் போகக் காரணமானவளை அடிக்க கொலைவெறியோடு திரும்ப, மயங்கி விழுந்து கிடந்தவள்.
ஐசியூ (ICU) வரை போய்விட்டாள். அது போலீஸ் கேஸ் வரை போனது. அதன் பிறகு, மகளை முற்றிலுமாக வெறுத்துவிட்டார் அம்மனிதர்.
நிலாவுக்கோ படிப்பு வேப்பங்காய்! "அது கூட சாப்பிடுவேன், படிப்பு வேண்டாம்" என்பாள். படிப்பு சுத்தம்! அவளைச் சுற்றி எல்லாம் கேலி, கிண்டல், அவமானம்தான். எதற்குமே கலங்கியதில்லை. மரண அடி வாங்கினாலும் ஒரு சொட்டு கண்ணீர் விட்டதில்லை; அவள் அழுது இதுவரை யாரும் பார்த்ததில்லை.
தொடர்ந்து ஃபெயில், படிப்பு ஏறாது, ஊர் வம்பை இழுத்து மானத்தை வாங்கும் இவளைப் 'பார்சல்' பண்ணவே தரகர் வைத்து மாப்பிள்ளை தேட...
அழகுக்கு ஒரு குறையுமில்லை. போட்டோவில் பார்த்து பிடித்துப்போய் வந்தவர்கள், ஊருக்குள் இவளைப் பற்றி விசாரிக்க...
"எதிர் வீட்டு பையன் இவளோட டாவு... நைட்டு சுவரெறி குதிச்சு போய், அந்த அசிங்கத்தை எப்படி சொல்ல? அந்த பையன் ரூம்ல தான் இவ தூங்குவா!"
"ரெண்டும் ரோடுனு கூட பார்க்காம சின்னதுல இருந்து அடிச்சுட்டு உருளும். ஏம்மா, உன் பிள்ளைக்கு ஏதாவது குறையா, இந்த பொண்ணைக் கட்ட வந்திருக்கீங்க?"
என பல் போன கிழவியில் ஆரம்பித்து, மிட்டாய் பிடுங்கித் தின்ற கோவத்தில் , பல் முளைக்காத நேத்து பிறந்த பிள்ளை வரை வன்மக் குடோனை கக்கி வைக்க... வந்தவர் வீட்டு வாசலைக் கூட மிதிக்காமல் அப்படியே வந்த வழியே ஓடி விட்டனர!
பாவம், இப்படி ஒன்னு நடந்ததே நம்ம நிலாவுக்குத் தெரியாது. சோமசுந்தரம் தான் மண்டையைப் போட்டு பிச்சுக் கொண்டது. வரும் வரனெல்லாம் இப்படி ரிப்பீட்டாகிப் போக, கடுப்பாகி ஜாதகம் பார்க்க...
"இந்த ஜாதகத்தோட பொண்ணுக்கு அப்பன்தான் எமன்!"
"யோவ் ஜோசியரே! கல்யாணமாகி எப்போ தொலையும்னு பாருயா..."
"பொண்ணுக்கு 24 வயசுல கல்யாண யோகமிருக்கு. பொண்ணு ஆசைப்பட்டவனோட சேர்த்து வைங்க... உங்களுக்கு நூறு ஆயுசு கெட்டி! பொண்ணோட கிரக பலன்தான் உங்க ஆயுளைக் கூட்டுது. நீங்க பாக்குற வேலையில உங்களைச் சுத்தி ஆயிரம் எதிரிங்க... பொண்ணோட கிரக பலனால்தான் இப்போ உயிரோட உட்கார்ந்திருக்கீங்க!"
என்று பேசிய வாய்ல் அலகை குத்திவிட, 'இதுக்கெல்லாம் நான் அசருவேனா? அவ கிரக பலனால்தான் நான் உயிர் வாழணுமா? அதுசரி, பிடிச்சவனோட எதுக்கு சேர்த்து வைக்கணும்?'
நிலாவுக்கு அழகரைப் பிடிக்குமென ஊரு உலகத்துக்கே தெரியும், இவருக்குத் தெரியாதா என்ன? தோலை உரித்து தொங்கவிட்டால் கூட நாய் எலும்பைத் தேடிப் போவது போல அவனைத் தேடிப் போய் பல்லை இளிப்பாள்!
அவனுக்குத்தான் இவளைப் பிடிக்காதே! சீக்கிரம் பிச்சைக்காரன் கையிலாவது பிடித்துக் கொடுத்து விட வேண்டும். உயிரை எடுக்கவே பிறந்துட்டு ஆயுளைக் கொடுக்குதாம் சனியன் ...
இவரும் ஜாதகத்தை நம்பாமல் தீவிரமாக வரன் பார்த்தார். அத்தனையும் தட்டிப் போனது. எரிச்சலில் உட்கார்ந்தவர் காதுக்கு 'மகள் பாஸ்' என்ற செய்தி வர... 'கழுதை, படிச்ச மாப்பிள்ளை கிடைக்குமோ என்னவோ...' என காலேஜ்ல சீட் போட்டு விட...
"போகவே மாட்டேன்" என அடம்பிடிக்கத்தான் நினைத்தாள். அது அவள் 'டாவு' அழகர் காலேஜ் என தெரிந்ததும், நாளைக்கு காலேஜ் போக இன்னைக்கே ஆளு பட்டாசு வெடித்து கொண்டாட ஆரம்பித்துவிட்டது!
"ஏண்டி! சந்தோஷத்துல தலைகால் புரியாம ஆட்டிட்டு கிடக்க? காலேஜ் போனா இன்னும் அதிகமா படிக்கணும்டி. அந்த ஆளு உன்னை வசமா கோத்து விட்டுருக்கான்...
இது தெரியாம பட்டாசு, மேளத்துக்கு எல்லாம் துட்டு கரியாகிட்டு வந்திருக்கியே! நான் பெத்த எருமைக்குட்டி... அம்மாவுக்கு ஒரு சிக்கன் பிரியாணி வாங்கிட்டு வர தோணுச்சா உனக்கு ?"
"அம்புட்டுதானா? அஞ்சரடி வைரச் சிலையா, இந்த நிலவை பெத்த தாய்குலத்துக்கு சிக்கன் பிரியாணி என்ன, மட்டன் பிரியாணியே வாங்கித் தரேன்!"
"அப்படியா என் பட்டுக் குட்டி?" - அவள் கன்னம் வழித்து திருஷ்டி முறிக்க...
"ஆமா, ஆர்டர் பண்ணி ஆன்லைன்ல பே பண்ணி காசு கொடுத்துடு... பிரியாணி வந்ததும் நா வாங்கிட்டு வந்து தர்றேன், ரெண்டு பேரும் சேர்த்து சாப்பிடலாம்!"
"எடு செருப்பை!"
"இந்தா..." என செருப்பை எடுத்துக்கொடுக்க வந்தவளை அடிக்கத் துரத்தினாள் மீனாட்சி , மாடிக்கு ஓடி கதவைச் சாத்திக் கொண்டாள்!
காதல் நிலாவுக்குக் கிடைக்குமா?