நான் தேடும் காதல் நிலவே
Active member
- Joined
- Jun 15, 2026
- Messages
- 112
- Reaction score
- 96
- Points
- 28
காதல் நிலவே
17
"என்னாச்சு?" அவரைப் போட்டுக் குலுக்க..
ஓடி வந்தவள், ஒன்றும் சொல்லவில்லை போல..
"ம்"..உதட்டைக் கோணி அந்தப் பயம் இருக்கட்டும் என அலட்சியமாக நடந்து வந்தாள் லைலா.
"என்னாச்சு டார்லிங்?"
"நத்திங் லைலா..."
"என்னாச்சுன்னு கேட்கிறேன் இல்ல?"
"ஒ... ஒண்ணுமில்லப்பா..."
"உடம்பு முடியலைனா சொல்லுங்க, ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போறேன்."
"இல்லப்பா , எனக்கு ஒண்ணுமில்ல..."
"அதான் அவர் ஒண்ணும் இல்லன்னு சொல்றாரு இல்ல டார்லிங் , ஏன் அங்கிளைக் கஷ்டப்படுத்துறீங்க? அவர் டயர்டா இருக்காரு, போய் தூங்கட்டும் விடுங்க. நீங்க வாங்க, நம்ம மண்டபத்துக்குப் போகலாம். காலையில் வந்து விடுவீங்க தானே?"
"ஹா... வந்துடுறேன்..." தளர்ந்த நடையோடு உள்ளே எழுந்து போய்விட்டார் நல்லதம்பி .
"ஏன் டார்லிங், பர்சேஸ் முடிஞ்சதா?"
"அது... இன்னும் டிரஸ் வாங்கல... அதுக்குள்ள..."
"ப்ச்... இப்படிக் காரணம் சொல்லுவீங்கனு தெரியும் , ஒரு சின்சியாரிட்டி இல்ல. அதான் உங்களுக்கும் சேர்த்து நானே வாங்கிட்டேன்."
ஆண் என்ற கர்வத்தோடு திரிந்தவன், முதல் முறையாக அவன் ஆண்மை அடிவாங்கியது.
"வாங்க என் கார்லயே போகலாம்."
அந்த நேரம் ஆம்லெட் வந்துவிட... அவனைத் தனியாக அழைத்து, "அவர் கூடவே இரு... ஏதோ போல இருக்காரு. பாத்துக்க, காலையில கரெக்டா கல்யாணத்துக்குக் கூட்டிட்டு வந்துடு..." அவனது பதிலை எதிர்பார்க்காது கிளம்பிவிட்டான் அழகர் .
'நல்லா வசதியான ஃபிகரைக் கட்டினா இப்படித்தான் நாய்ப்பாடு படனும் போல. கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த நிலைமை. தாலி ஏறிட்டா, மேடம் பிளைன்ல தான் குடும்பம் நடத்துவாங்க போல! இதுல வாத்தி எங்க தொத்திக்கிக் கிடக்குமோ? அது சரி, இது அவங்க குடும்ப மேட்டர், நமக்கு எதுக்கு? வாத்தி நிலைமையைப் பார்க்கும்போது நல்லா குளுகுளுன்னு இருக்கே. அதான் வேணும்!'
"எங்க இந்தத் தம்பி?" என்று கத்திக்கொண்டே, எடுத்து வந்த எல்லாவற்றையும் உள்ளே வைத்துவிட்டு, நல்லதம்பியின் அறைக்குள் போனான் ஆம்லெட்.
விடியற்காலை முகூர்த்த நேரம் ஆறு டூ எட்டு... அழகர் தூங்காமல் முகத்தை மூடியபடி அமர்ந்திருந்தான். ஏன் அப்பா முகம் ஒரு மாதிரி இருந்தது? ஏதோ சொல்ல வந்தது போல இருந்ததே?... இந்த ஆம்லெட் கிட்ட போன் போட்டுக் கேட்டாலும் ஒண்ணும் இல்லன்னு சொல்றான்.
'ஏதோ மறைக்கிறான்... போய் நேர்ல கேட்போமா...' நிமிர்ந்து நேரத்தைப் பார்த்தான், மணி 3:32. எழுந்தவன் கதவைத் திறந்த நேரம், வேகமாக உள்ளே வந்தாள் லைலா.
"என்னாச்சு லைலா?"
"நேத்து மார்னிங் வரவேண்டிய கிளைண்ட், நேத்து ஈவினிங் வரச் சொல்லியிருந்தாங்க. பட், பிளைட் ப்ராப்ளமாகி இப்போ ஆபீஸ்க்கு வந்துட்டு இருக்காங்களாம் சோ, நான் வெல்கம் பண்ணப் போகணும். ஓகே நீ இங்க எல்லாத்தையும் பாத்துக்க."
"நான் வர லேட்டாச்சுன்னா, முகூர்த்த நேரத்தைத் தள்ளி வெச்சு வெயிட் பண்ணு ஓகே?"
அவள் பேச ஆரம்பிக்கும்போதே கைகட்டி அவளைப் பார்த்தான். "உன்னைப் பொருத்தவரைக்கும் கல்யாணம்னா என்ன லைலா?"
"ப்ச்... இப்போ அதைப் பத்தி லெக்சர் எடுக்க எனக்கு நேரமில்லை..."
'ஓஹோ... தகவல் சொல்ல வந்தீயா? இல்ல, ஆர்டர் போட வந்தீயா?' ஏற்கனவே இவள் பேசுவதெல்லாம் தன்னை அடிமைப்படுத்துவது போலத்தான் இருக்கிறது என்று தெரிந்தே எதற்கு இவளிடம் சிக்கினான்?
'வேறு எதற்கு? யாரிடமும் தோற்கக் கூடாது. இந்தக் கல்யாணம் நடந்தே தீரும். ஆனால் இவள்... ச்சீ!' என மனம் காரித் துப்பியது.'நீ யாருக்காகக் கல்யாணம் பண்றியோ, அவளே கல்யாணத்துக்கு வர மாட்டா, பிறகு எதுக்குடா இந்த வீம்பு?'
"ஹலோ மிஸ்டர் அழகர்... உங்களோட அலைவரிசையும் என்னோட அலைவரிசையும் ஒண்ணுபோல இருந்ததால, உங்ககிட்ட ஐ லவ் யூ சொன்னேன். ஆனா நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன், எனக்கு பிசினஸ் தான் முதல்ல ... முடிஞ்சா வெயிட் பண்ணுங்க, இல்லாட்டி உங்க விருப்பம். நான் எனக்குத் தோணும் நேரம்தான் வருவேன். பை தி பை... இந்தக் கல்யாணத்தோட மொத்த செலவும் என் அப்பாவோடது. சோ, எத்தனை மணி நேரமானாலும் இந்தக் கல்யாணம் நடக்கும். உனக்கு இருக்கிற டர்னிங் பாயிண்ட் எனக்கும் இருக்கு டார்லிங்."
'நீ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது டார்லிங்' எனச் சொல்லாமல் சொல்லிட்டுப் போனாள்.
இவள் என்ன நிலாவா? போடி எனத் துரத்திவிட்டால், மாமு என ஓடி வந்து ஒட்டிக்கொள்ள...
மெத்தையில் பொத்தென அமர்ந்தவனுக்குக் கோபம் தாண்டி ஏதோ வலித்தது. எல்லாம் இவளால... ஷிட்...
உள்ளே இருக்க முடியாமல் வெளியே காற்றோட்டமாக வந்தவன், அப்பாவுக்கு போன் பண்ண எடுத்தான்...
"வாங்க சம்பந்தி... இது யாரு, ஓசியில சோறு திங்க ஆள் கூட்டிட்டு வந்திருக்கீங்களா?" அழகர் கையை முறுக்கிக்கொண்டு இவர்களை நோக்கி வருவதற்குள்...
"பார்த்தா வி.ஐ.பி. வீட்டு கல்யாணம் போல இருக்கு. ஆனா துட்டு செலவு பண்ண மூக்கால அழுற கஞ்சப் பிசினாரி போலப் பேசுறீங்களே சார்?"
"ஏய்!"
"அட இருங்க சார், ஓசியில திங்கிற பழக்கமெல்லாம் எங்களுக்குக் கிடையாது. பாக்கெட்ல, திங்கப் போறதுக்கு பில் கொடுக்க மொய் இருக்கு," என மொய்க் கவரைத் தூக்கிக் காட்டினான்.
"என்ன சம்பந்தீ, இந்தப் பையன் ஓவரா பேசுறான்?"
"நீங்க பேசுறதுக்குத்தான் என் புள்ளை பதில் சொல்றான்."
"புள்ளையா?"
"ம், என் புள்ளைதான்..."
"சரிங்க சம்பந்தீ, ஆளுங்க வர்றாங்க, நீங்க போய் ஓரமா உட்காருங்க..." இவ்வளவுதான் உங்களுக்கு மரியாதை எனப் போகப்போனவரை,
"நீங்க யாரு, பொண்ணோட அப்பாவா?"
தங்கக் கண்ணாடி, பழுப்பு மீசை, கழுத்தில் தடிமனாகப் போட்டிருந்த தங்கச் சங்கிலி, ஒரு விரல் விடாமல் தங்க மோதிரம் போட்டிருந்தவர் வாய்பிளந்து சிரித்தார்.
"ஆமா, லைலாவோட அப்பா நான்தான். இதுகூடத் தெரியாதா சம்பந்தீ? என் மக ஒரு வருஷத்துக்கு முன்னாடியே இந்தக் காதல் விவரம் சொல்லிட்டா. எனக்குத்தான் உங்க வீட்டுல வந்து சம்பந்தம் பேச நேரமில்ல."
"ஓஹோ... ஒரு வருஷத்துக்கு முன்னாடியே தெரியுமா?" உடைந்து வந்த அந்த வார்த்தைக்குப் பின்னால் இருந்த வலியை இருவரும் உணரத்தான் செய்தனர்.
"ம்... ஒரு வருஷத்துக்கு முன்னாடி சொன்னதாலதான் இவ்வளவு கிராண்டா ஏற்பாடு பண்ண முடிஞ்சது. இல்லன்னா, ஒண்ணுமில்லாத இடத்துல எதுக்கு சம்பந்தம் வைக்கப் போறேன்? பையன் திறமையானவன்... வீட்டோட மாப்பிள்ளையா இந்தக்காலத்துல எவன் வர்றான்? ஆமா, நீங்க முதியோர் இல்லத்துல சேரப்போறதா என் மக சொன்னா. நல்ல முடிவு!"
"சரி சரி, கேள்வி கேட்காம ஓரமா உட்காருங்க. கவர்னர், எம்.பி.-லாம் வருவாங்க, முதல் சீட்டை ரெடி பண்ணி வைடா," எனக் குரல் கொடுத்துக்கொண்டே போய்விட, தளர்ந்து தடுமாறப் போனவரைத் தாங்கிப் பிடிக்க ஓடிவந்த மகனைப் பார்த்துச் சிரித்தார். தாங்கிப் பிடித்த ஆம்லெட்டின் கையைப் பற்றிப் பிடித்து நின்றவர்,
"ஏன் சாமி, நான் உன் அப்பாதானய்யா...?"
ஆம்லெட்டுக்கு அவ்வார்த்தையில் கண்ணே கலங்கிவிட்டது. "யப்பா... கொஞ்சம் அமைதியா இரு," பிடித்திருந்த அவர் உடல் நடுங்குவதில் இவன்தான் பதறினான்.
"இருடா, கடைசியா என் புள்ளைகிட்ட பேசிக்கிறேன்..."
"ப்பாஆ..."இது ஆம்லெட்டின் குரல்
"இப்போ எதுக்கு இப்படியெல்லாம் பேசுறீங்க?"
"பாத்தியா என் பிள்ளையோட கெத்த... இப்போகூட நீ கூப்பிட்டது போல அப்பான்னு கூப்பிட்டானா பாரு..."
"ஏன்யா, உனக்கு என்ன சாமி குறை வெச்சேன்? இந்தப் புள்ளைகளை வளர்த்தது குத்தமாயா? இதுங்களும் உன்னைப் போலத்தானேயா... இவனுக்குப் பெத்தவங்க கிடையாது, நிலாவுக்குப் பெத்தவங்க இருந்தும் இல்லாதது போலத்தான். கொஞ்சோண்டுதான் பாசம் காட்டினேன், இதோ தாங்கிப் புடிக்கிறாங்கயா... உனக்கு நான் பாசம் காட்டலையா? உண்மையைச் சொல்லு சாமி, இந்த அப்பன் வாழுறதே உனக்காகத்தான்னு தெரியாதா?"
"நான் பாடம் எடுத்த புள்ளைங்களக் கூட என் புள்ளையாத்தானயா பாத்தேன்... என்னால இந்தக் குணத்தை மாத்த முடியலையே. எனக்காக அரைமணி நேரம் காத்திருந்த உன் கோபம் உனக்கு பெருசு, நான் நாள் முழுக்க உனக்காகக் காத்திருந்ததை மறந்துட்டீயே சாமி... இந்த அப்பன் உனக்குப் பிடிச்சதைத்தான் இதுவரை செஞ்சிருக்கேன். இந்தக் கல்யாணம் உனக்கு வேண்டாம்யா. தெரிஞ்சே உன்னை நரகத்துல தள்ள நான் விரும்பல... நேத்து என்ன நடந்துச்சுன்னு உனக்குத் தெரியுமா..."
"ஹாய் டார்லிங் நான் வந்துட்டேன்! கிளைண்ட் இங்க மேரேஜ் பார்க்க வர்றாங்களாம். சோ, மீட்டிங்கை ஈவினிங் மாத்திட்டேன். வாங்க நாம ரெடியாகப் போகலாம்," அழகர் கையைப் பிடித்து இழுக்க, சிலையாகத் தகப்பனைப் பார்த்து நின்றவன், அவள் இழுப்புக்குப் போனான்.
"விடுப்பா... உன் புள்ளைக்குப் பட்டால்தான் உறைக்கும்."
"அவனுக்கு வலிக்குமேடா..."
"வலியைத் தேடிப்போய் 'இந்தா குத்து, இந்தா குத்து'னு காட்டினா, வாழ்க்கை ஊமைக்குத்தாத்தான் குத்திவிடும்."
"நீ உட்காரு யப்பா..."
"ஏன்டா, நிலாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாமோ...?"
"எதுக்கு? உன் புள்ளைகிட்ட ஹார்ட் அட்டாக் வருதுன்னு சென்டிமென்ட்டா நடிச்சுக் கல்யாணம் கட்டிவைக்கலாம்னு நினைக்கிறியோ..."
'பாவிப் பய கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டானே!' இவர் பிடிபட்ட திருடன் போல கீழ்க்கண்ணை உருட்ட,
"கும்மிருவேன் கும்மி... கல்யாணம் நடக்குற வரைக்கும் வாயைத் திறக்கக் கூடாது!"
"அதுக்கு இல்லடா... நிலா இருந்தா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்குமே... மனசுக்குப் பாரமா இருக்கு. போவோமா?"
"சரி, எனக்கும் இங்க இருக்கப் புடிக்கல... அப்போ சரி கிளம்புவோம்..."
"ஆஆஆ... அசக்..." குப்பென்று வந்து குதித்தாள் நிலா.
"ஏய் பிசாசுக்குப் பொறந்தவளே, இங்க எதுக்குடி வந்த...?"
நிலாவை இங்கே பார்த்ததும் ஆம்லெட் கோபத்தில் கத்த, நல்லதம்பி வாயெல்லாம் பல்லாகச் சிரித்தார்.
"டேய் எருமை, எங்க அம்மாவையா பிசாசுங்குற?"
"நான் உங்க அப்பனைச் சொன்னேன்டி..."
"அப்போ கரெக்ட்."
"இங்க எதுக்குடி வந்த?"
"ப்ச்... மதியாதார் தலையில மிதியாதார்னு.. அவ்வை சண்முகி சொன்னதை நான் தீவிரமா ஃபாலோ பண்ணி சிவனேனுதான் தூங்கிட்டு இருந்தேன். இந்த மாமன்காரன், ஓசியில வடகறி தின்னலாம் வா-னு கூட்டிட்டு வந்துட்டான்."
"ஐயோ இந்த சைத்தானோட.. மதியாதார் தலையில இல்லடி... மதியாதார் தலைவாசல் மிதியாதார்னு சொன்னது ஔவையார் டி அவ்வை சண்முகி இல்ல ..தலையிலடித்தான்.. ஆம்லெட்..
"சரி நீயும் அவரும் மட்டும்தான் வந்திருக்கீங்களா?
"இல்ல குடும்பமே வந்திருக்கு தூரத்தில் சோமசுந்தரம் தன் அக்காளுங்களோடு நிற்க,
"அப்போ சரிதான்... ஏய் நிலா என்னோட கொஞ்சம் வா..." எனத் தனியே இழுத்து வந்தான்,
"இங்க பாரு நிலா... நீயும் நானும் சேர்ந்து ஏகப்பட்ட சீரியல் பார்த்திருக்கோம்."
"ஆமா, தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கொரியன், தாய்லாந்து, சீனா, ஜப்பான், இங்கிலீஷ், துருக்கி சீரியல் வரை பார்த்திருக்கோம். இந்த நேரத்துல அந்த சீரியல்ல உனக்கு என்னடா டவுட்?" இப்போதுதான் உள்ளே வந்தாள், அதற்குள் எப்படி வடையைச் சுட்டாள் என்று தெரியவில்லை... அதைத் தின்றபடியே இவளும் ரகசியக் குரலில் கேட்டாள்.
"பிசாசு... பிசாசு..." என நங்கென அவள் தலையில் கொட்ட,
காதல் நிலாவுக்குக் கிடைக்குமா?