நான் தேடும் காதல் நிலவே
Active member
- Joined
- Jun 15, 2026
- Messages
- 118
- Reaction score
- 97
- Points
- 28
காதல் நிலவே
11
"ம்.. சொல்லு."
"மாமு.. சின்னப் பிள்ளையில நல்லதம்பி அப்பா உன்னைக் கை காட்டும் போதே என் மனசுல ஆழமா பதிஞ்சிட்ட... நீ கேட்கலாம், 'அப்பா சொன்னதாலதானே காதல் வந்தது?'னு..."
"அப்படி இல்ல... நாங்க இங்க குடிவந்த நாள்ல இருந்தே.. அப்பாக்கு முன்ன உன்னைத்தான் முதல்ல பார்த்தேன். உன்னோட பேசணும், பழகணும், விளையாடணும்னு ஆசையா இருக்கும்.
ஆனா, உன்கிட்ட வர எனக்கு பயம்...
ஒருமுறை நாலு பசங்க என்னை அடிச்சப்போ நீ வந்துதானே அவங்களை அடிச்சு என்னைக் காப்பாத்துன! அப்பவே என்னைக் காப்பாத்த வந்த சூப்பர் ஹீரோ போலத்தான் தெரிஞ்ச. அப்போ எனக்கு அஞ்சு வயசு...தான்!!..
அப்போதான் நல்லதம்பி டாடி உன்னைப் புருஷனா கை காட்டினாரு... நானும் அதோடவே பிக்ஸ் ஆகிட்டேன் மாமு..."
"அப்புறம் உன் பக்கம் வந்தாலே என்னை அடிப்ப... இப்போவரை என்னை வெறுக்க மட்டும்தான் செய்ற... ஆனா, உன் மேல இருந்த காதல் இந்த நிமிஷம் வரை கொஞ்சமும் குறையல மாமு..."
"இதெல்லாம் ஏன் இப்போ சொல்றேன்னு கேக்குறீங்களா? ஈவினிங் என்னைப் பொண்ணு பார்க்க வராங்களாம் மாமு... நீ வந்து எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லு."
எதிரே கைகட்டி நின்றவன் புருவத்தை உயர்த்தினான்.
'15 வயதில் பட்டுப் பாவாடை தாவணியில், ரெட்டை ஜடை போட்ட முயல்குட்டியாக ஓடிவந்தவள்,
"நான் பெரிய பொண்ணாகிட்டேன்...மாமு என்னைக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்களாம்... முறுக்கு மீசை வச்ச பெரிய அத்தை பையனாம்.. என்னைக்காப்பாத்தி நீ கல்யாணம் பண்ணிக்கோ மாமு... அவங்க யாரும் எனக்கு வேணாம், நீதான் வேணும்... வா மாமு..."
அன்று பேசிய அதே டயலாக் தான்...
'நீயே பேசி முடி... பைனல் சான்ஸ் தானே.' என இவன் அமைதியாகத்தான் நின்றான்.
தியேட்டரில் நடந்ததையும், நேத்து இரவு முத்தக் காட்சி வரை நடந்ததை அப்படியே அச்சு பிசகாமல் ஒப்பித்தாள்...
"மனசு முழுக்க நீதான் மாமு இருக்க... சாமி சத்தியமா அந்த நிமிஷம் நான் நானாவே இல்லை மாமு..."
"ப்ளீஸ், என்னை தப்பா நினைக்காதீங்க... நா... நா தெரிஞ்சு பண்ணல... நா... நா தப்பு பண்ணல மாமு..." மனம் வலித்ததின் பிம்பமோ, கண்கள் எரிச்சலைக் கூட்டியது.
"ஏய் ஏய்... ரிலாக்ஸ், நான் உன்னைத் தப்பா நினைக்கல..." போதை தீண்டா செவ்விதழ்கள் மென் புன்னகை பூத்தது.
தன்னைப் பார்த்து முதன்முதலில் சிரித்த ஆணவனின் வசீகரத்தில் மயங்கி நின்றவள் மனதில், சத்தமில்லாமல் இடியை இறக்கினான்.
"என்னைக் காதலிக்கிற, ரைட்? அதெப்படி இன்னொருத்தன் முத்தம் கொடுக்க வந்தா விலகத் தெரியாதாடி?"
"அது... அது... எப்படி சொல்லுவேன்... சரி, வெட்கம் விட்டே சொல்றேன் மாமு... அவன் என்னைத் தொட்டு முத்தம் கொடுத்தது நீ எனக்குக் கொடுத்தது போலத்தான் இருந்தது!... அந்த நிமிஷம், அந்த நெருக்கம்... நீ மட்டும்தான் மாமு மைண்ட்ல இருந்த... சாரி மாமு..."
"ப்ச்... நிறுத்துடி! இதுவே ஒரு ஆண் சொல்லிருந்தா நம்புவீங்களாடி? இட்ஸ் ஓகே, இதெல்லாம் உன்னோட பர்சனல் விஷயம்... இவ்ளோதானா! சரி, இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லிட்டு இருக்க? நான்தான் உன்ன காதலிக்கலனு சொல்லிட்டேனே... உனக்கு புரோபோஸ் பண்றதுக்கு இருக்கிற உரிமை, எனக்கு அதை ரிஜெக்ட் பண்றதுக்கும் இருக்கு... அண்டர்ஸ்டாண்ட்?"
"மாமு, எனக்கு படிப்புதான் வராது... ஆனா நான் நல்லா சமைப்பேன்... உன்னை நல்லா பத்திரமா வச்சு பார்த்துப்பேன் மாமு..."
ஒரு கணம் அவளை ஆழ்ந்து பார்த்தவன், "என்னைப் பார்க்க பைத்தியக்காரன் போல இருக்கா? நீ வச்சுப் பார்க்க? இடியட் உன்னைப் பார்த்தாலே எனக்கு சுத்தமா பிடிக்கலடி!" கிட்டத்தட்ட கத்தியிருந்தான்.
"என் மேல அப்படி என்னதான் வெறுப்பு? நான் அப்படி என்ன செஞ்சேன்?" இவள் ஆற்றாமையில் கத்தினாள்.
"அப்படிக் கேளு! அப்படிக் கேளு, சொல்றேன்..."
"என் அப்பா என் உயிருடி!" நெஞ்சை ஓங்கித் தட்டிக் காட்டினான். கிட்டத்தட்ட சிங்கம் போல கர்ஜித்தான்.
அசையாமல் அவனைப் பார்த்தாள் நிலா.
"என் அப்பா மட்டும்தான் எனக்கு எல்லாமும்! எனக்கிருக்கிற ஒரே சந்தோஷம் என் அப்பாதான்டி. என்னோட குட் ஃபிரண்ட், கோச்... என்னோட எவ்ரிதிங்! என்னோட எல்லாத்தையும் அவர்கிட்டதான்டி ஷேர் பண்ணுவேன்.
என்னோட முரட்டு குணம்... என்கிட்ட எவனும் ஃபிரண்ட் ஆகல, நானும் யாருகிட்டயும் ஃபிரண்ட் ஆகமாட்டேன்..."
"என் உலகமே அப்பா... அப்பா... அப்பா மட்டும்தான்டி! என்னைக்கி நீயும் அவனும் அப்பாக்கூட குளோஸ் ஆனீங்களோ, அப்போவே அப்பா என்னைக் கண்டுக்கிறதே இல்லை...
சகல காலமும் உங்களோட அரட்டை...நீங்க இல்லாத மீதி நேரமும் உங்க புராணம் தான் ..."
"என் அப்பா உங்களைப் பெத்தாரா, தத்து எடுத்தாரா? அவரோடவே முழுநேரம் சுத்துனீங்க... என்னோட நேரத்தையும் நீங்களே எடுத்துக்கிட்டீங்க... உண்மையில் நான்தான்டி அனாதையா நின்னேன்..."
"உங்களுக்காக ஓடிவந்த என் தகப்பன் ஒருநாள்கூட எனக்காக ஸ்கூல் வரல...காலேஜ் வரல...
உனக்காக, அவனுக்காக அழுத என் தகப்பன்... அவர் பெத்த பையனுக்கு ஒரு சொட்டு கண்ணீர் விடல... உங்களைக் கொல்ற அளவுக்கு எனக்குள்ள ஆத்திரம் இருக்கு...
உயிரோட விட்டதுக்கு ஒரே காரணம் என் அப்பா சிரிக்கிறாரு!... உங்களோடதான் சந்தோஷமா இருக்காரு... என் அப்பாவுக்கு என்னை வில்லனா காட்டியும் நான் அமைதியா இருக்கக் காரணம் இதுதான்..."
"போதுமா? இந்த ஜென்மத்துல உன் மேல எனக்கு காதல் வராது!"
'இவன் மீது தனக்குக் காதல் வளர்ந்தது போல, இவனுக்குள் என்மீது குரோதமல்லவா வளர்ந்திருக்கிறது! தொண்டை வறண்டு என்ன பேசுவதென்று புரியவில்லை...' நமக்கு வலித்தது போலத்தானே அவனுக்கும் வலித்திருக்கும்!'
"சா... சாரி மாமு, இதை முன்னாடியே சொல்லிருந்தா நானும் ஆம்லெட்..."
"என்ன பண்ணிருப்பீங்க? செத்திருப்பீங்களா? அந்தப் பழியும் என்மேல விழுந்து, என்கிட்ட இருந்து என் அப்பாவை நிரந்தரமா பிரிக்கவா?"
"இல்ல மாமு, இனிமே..."
"நீங்க என்னடி விலகுறது? என் அப்பனை நானே ஃபாரின் கூட்டிட்டு போகப் போறேன்..."நக்கலாக சிரித்தான்..
"என்ன?!"
"நான் இந்த காலேஜ்ல வேலை பார்க்கிறதால தானே இந்த காலேஜ் சேர்ந்த? ஹாஹாஹா, முட்டாள்! நான் இங்க டெம்பரரியாத்தான் வேலைக்குச் சேர்ந்தேன்..."
"ஃபாரின்ல என்னோட ட்ரீம் புராஜெக்ட்... அதை இங்கிருந்தே ரன் பண்ணிட்டு இருந்தேன்... லாஸ்ட் வீக் தான் சக்சஸ் ஆச்சு. இனி ஃபாரின் தான் செட்டிலாக போறேன் ... அப்பாவையும் கூடவே கூட்டிட்டுதான் போகப்போறேன்... மூணு பேரா..."
"எஸ், கல்யாணம் முடிச்சுதான் பிளைட் ஏறுவேன். ஓ, உனக்கு தெரியாதுல்ல? 5 இயர்ஸ் பெஸ்ட் ஃபிரண்ட் அண்ட் மை காதலி... லைலா!
அவ உன்னை மாதிரி மக்கு இல்ல... நாங்க படிச்ச யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட்..."
"பேச வேண்டியதெல்லாம் பேசிட்டோம்னு நினைக்கிறேன்... உன்னை மாதிரி ஒருத்திய நான் காதலிக்கவே மாட்டேன். நீ புரிஞ்சுகிட்டு இருப்ப... சொன்ன வாக்கை காப்பாத்துவனு நினைக்கிறேன்... குட் பாய்!"
எதிரே நின்றவள் உயிரோடு இருக்கிறாளா என்று கூடப் பார்க்காமல், வார்த்தையை நெருப்பாக அள்ளி வீசிவிட்டுப் போய்விட்டான்.
நிற்க வலுவில்லாமல் தளர்ந்து விழுந்தவளை ஓடிவந்து தாங்கியிருந்தான் ஆம்லெட்.
'என்னை வந்து காப்பாத்த மாட்டியா மாமு?' – அடிமனதில் இருந்து வந்த வார்த்தை தொண்டையைத் தாண்டி வெளிவராமல் அப்படியே அடங்கிப்போனது.
"விடு நிலா... நேசம், பாசம் குப்பைக்குப் போகுதுனு தெரிஞ்சும் அங்கேயே கொட்டுன பாத்தியா... உன்னைத்தான்டி அடிக்கணும். எழுந்து வா..."
எப்படி வீடு வந்து சேர்ந்தாளோ... கீ கொடுத்த பொம்மை போல அவளை இழுத்து வைத்து அலங்காரம் பண்ணி அழைத்து வந்தார்கள்.
இந்த 24 வருட வாழ்க்கையில் ஒரு நிமிடம் கூட அவனை நினைக்காமல் அவள் இருந்ததில்லை... சுவாசிக்கும் மூச்சை விட்டுவிட்டு இரு என்றால் எப்படி வாழ்வது?
"ஊருக்குள்ள உங்க மகளைப் பத்தி விசாரிச்சோம்... எங்களுக்கு அவ்ளோ திருப்தியா இல்லை..." சோமசுந்தரம் கையைப் பிசைவதும் மீனாட்சியை முறைப்பதுமாக இருந்தார்.
'அதான் வெளியவே விசாரிச்சு பிடிக்கல இல்ல... குந்தாணி அப்படியே திரும்பிப் போக வேண்டியதுதானே? இங்கன வந்து ஓசியில் பஜ்ஜி சோஜ்ஜி தின்னுக்கிட்டு...' வழக்கம்போல மீனாட்சி மைண்ட் வாய்ஸில் தான் திட்டினாள்.
"நாங்க ஆச்சாரமான குடும்பம்..."
'அதுக்கு குக்கர்ல போட்டு மீனை வருக்கவா முடியும்?'
"பொண்ணுக்கு படிப்புதான் சுத்தம்... பக்கத்து ஆத்துக்கு அடிக்கடி போக்குவரத்து இருக்குமாமே?... இங்க பாருங்கோ, எல்லாத்தையும் தெளிவா கேட்டுண்டுதான் நாங்க வந்திருக்கோம்..."
சோமசுந்தரம் எதுவும் பேசவில்லை. நெருப்பின் மீது தம் கட்டி உட்கார்ந்திருப்பவர் போலத்தான் அமர்ந்திருந்தார்.
"ஆனா என் பிள்ளையைப் பாருங்கோ... கைநிறைய சம்பளம், அழகு, லட்சணம், ஒழுக்கசீலன், ரொம்ப ரொம்ப குணமானவன்... இப்படி நல்லவனா இருக்கிறதை வச்சுதான் நீ நானுனு என் ஆத்துப்படி ஏறி வந்து மாப்பிள்ளை கேட்டாங்க..."
'அக்ரகாரத்து ஆடு இங்கே எதுக்கு வந்து கசாப்பு போடுது?' மீனாட்சி கூர்ந்து கவனித்தாள்.
"ஆனா பாருங்கோ, இந்த லோகத்துல நல்லவாளுக்கு அந்த ஆண்டவன் கஷ்டத்தைக் கொட்டி கொடுப்பான்... கட்டிண்டு வந்த ரெண்டு மாட்டுப்பொண்ணும் சரியில்லை, அத்துண்டு போயிடுச்சுங்க..."
"என்ன என் பொண்ணை மூணாம் தரமா கேட்டு வந்திருக்கீங்களா?" பொங்கிய மீனாட்சியைப் பார்வையால் அடக்கப் பார்த்தார்.
கோபத்தைக் கட்டுப்படுத்தி அமைதியாக, 'இந்த சம்மந்தம் மட்டும் கூடி வரட்டும்... உன் அப்பனையும் சேர்த்து அம்புட்டு பேருக்கும் சோத்துல விஷத்தை வச்சு கொன்னுபுடுவேன்...
டேய் பச்சா, தனியா நின்னு படிச்சுக்கோடா...'
ஆத்தாளுக்கு ஏத்த பிள்ளையாக, 'சரிம்மா' என்றானே... வந்தவர்களை முறைத்தபடி!
"என்ன சம்பந்தி? உங்க பொண்ணு மட்டும் ஊரு மேயுறது இல்லமா... அடுத்த ஆத்து அம்படையான் கூட வீதியில... கருமம் கருமம், அதை எப்படி என் வாய்ல சொல்லுவேன்?"
"எதுக்குமா அதெல்லாம் பேசிக்கிட்டு?" சோமசுந்தரம் விட்டால் காலில் விழுந்தே விடுவேன் என்பது போல அத்தனை பணிவாக பேசினார். பின்னால் இரண்டு ஜீவனுக்கு மாரடைப்பே வந்தது.
"டேய் பச்சா, உங்கப்பனாடா இது?"
"ஆமாம்மா... இந்தாளுக்கு இவ்வளவு பணிவா பேச வருமா? விட்டா அந்தப் பொம்பளை காலுக் தண்ணி ஊத்தி, பொட்டு வச்சு, விழுந்து கும்பிடுவாரு போல!"
"ஊரார் பொம்பளைக்கு பாலிஷ் போடத் தெரியுமடா உங்கப்பனுக்கு... என்கிட்டதான் எரிஞ்சு விழுவான், பனங்கொட்டை மண்டையன்!"
"ஏ ஆத்துக்காரரு நேக்கு உங்களைப் பத்தி சொல்லும்போது நேக்கு நம்பத் தோணல... இப்போ நேர்ல பார்க்கும்போது... இத்தனை கனிவான மனுஷனைப் பார்த்ததும் நேக்கு உங்க ஆத்துல மாட்டுப்பொண்ணு எடுக்க பிடிக்கலனுதான் சொல்ல வந்தேன்... உங்க கனிவையும் பணிவையும் பார்த்து ரொம்ப பிடிச்சு போச்சு... நேக்கு உங்க ஆத்துல கைய நனைக்க முடிவு பண்ணிட்டோம்..."
' என்னாம்மா இந்த கிழவி அப்பாவைப் போய் பிடிச்சிருக்குனு சொல்லுது?'
காதல் நிலாவுக்கு கிடைக்குமா