Sagee Elumalai
Member
- Joined
- Jun 29, 2026
- Messages
- 46
- Reaction score
- 34
- Points
- 18
Chapter 3
பார்க்கும்போதெல்லாம் பற்றி கொள்(ல்)கிறதே
இதென்ன கண்களா, இல்லை
தீ கங்குகளா...
கண்கள் இமைக்காமல் அவள் பார்த்து வைக்க, “இப்படி பார்த்து பார்த்து தானேடி என்னை மயக்கி வச்சிருக்க. அப்படி பார்க்காதடி” என்றான் கிறங்கிய குரலில்.
அப்போதும் அவள் பேசாமல் பார்வையை தொடர, சிவா என்றான் மிரட்டலாக.
கெஞ்சி பார்த்து விட்டான் கொஞ்சி பார்த்து விட்டான், இதோ மிரட்டியும் பார்க்கிறான் கொஞ்சமாவது மசிகிறாளா இந்த ராட்சசி. ஒரு வாரமாக மகளும் மனைவியும் காய்ச்சலில் கிடந்ததில் அவர்களை அருகில் இருந்து பார்த்து கொள்ள முடியாத வேதனை அவனுக்கும் நெஞ்சை அரித்து கொண்டு தான் இருக்கிறது. அதற்காக நினைத்த நேரமெல்லாம் வந்து போக அவன் என்ன பக்கத்து தெருவில் இருக்கிறானா, இல்லை பக்கத்து ஊரில் இருக்கிறானா. கடல் கடந்து வேலை செய்கிறான். அவனும் தான் அவர்கள் அருகாமை இல்லாததில் பாலை நிலத்து மண் போல வறண்டு கிடக்கிறான். ஏதோ இந்த தொழில் நுட்ப வசதியில் கொஞ்சம் முகத்தையாவது பார்க்க முடிந்ததே.
அது மட்டும் தான் எப்போதாவது பாலைவனத்தில் பெய்யும் மழை போல அவனுக்குள் தேங்கி நின்று வாழ்வை வாழ்வதற்கான உற்சாக ஊற்றாய் பொங்கிக்கொண்டு இருக்கிறது. இதெல்லாம் தெரியுதா இந்த கிறுக்கச்சிக்கு, ஒரு வாரமா மனுஷனை வச்சு செய்யுறா.
சரிதான் போடி என்று விட்டு விட்டு போகவும் முடியாது, அவன் உயிர் துடுப்பானவள், அவன் உயிரானவள், அவனின் உலகமானவள் அவள் தானே.
நேரில் இருந்திருந்தால் இந்நேரம் காலில் விழுந்தாவது பேச வைத்திருப்பான், ஆனால் இங்கே அதுவும் முடியாதே. சட்டென ஏதோ யோசனை வர, போனை சுவற்றில் சாய்த்து நிற்க வைத்து விட்டு எழுந்து நின்றான்.
என்ன செய்யறாரு இவரு என அவனையே பார்த்திருந்தவளுக்கு திக்கென ஆக நெடுஞ்சாண் கிடையாக தரையில் விழுந்து விட்டான். “முரளி என்ன பண்றீங்க” என்றிருந்தாள் பதட்டத்துடன்.
தலையை மட்டும் உயர்த்தி பார்த்தவன் “இதுக்கு மேலே முடியாதுடி” என்றான் முகத்தை பாவமாக வைத்து கொண்டு. அதை கண்டு பக்கென சிரித்தவள் அவன் கண்டு விட கூடாதே என்று சிரிப்பை அடக்க பார்க்க, “அடியே பொண்டாட்டி நல்லா சிரிடி, என் பொழைப்பு எப்படி சிரிப்பா சிரிக்குது பாரு, ஒரு வாரமாச்சுடி இந்த சிரிப்பை பார்க்க” என்றபடி எழுந்து அமர்ந்தான்.
குழந்தை உறங்கி இருக்க, அவள் உறக்கம் கேட்டு விடாதபடிக்கு சிரிப்பு சத்தத்தை இவள் அடக்க முயன்று கொண்டிருக்க, கூடவே சேர்ந்து அவள் கண்களும் சிரித்து அவனை மயக்கியது.
இப்போது பேச்சற்று அவளை பார்ப்பது அவனது முறையாகி போனது. என்னதான் பேசவில்லை என்றாலும் கூட ஒரு வாரமாய் இப்படித்தான் அவன் முகத்தை இமைக்க மறுத்து பார்த்து கொண்டிருக்கிறாள். அவள் கண்களில் அவனுக்கான ஏக்கமும், காதலும் பொங்கி வழிவது அவனுக்கு தெரியாமல் இல்லை. அவள் இப்படி அவனையே அடித்து பார்க்கும் தருணங்களில் அந்த பெரிய கண்களில் முத்தமிட்டு அதை மூடி விட துடிக்கும் அவன் இதழ்கள். ஆனால் கானலாய் தோன்றும் இந்த காணொளியில் என்ன செய்வான். தவிப்பை எல்லாம் உள்ளே அடக்கி கொண்டு ஜடமாய் அவள் முகத்தை பார்ப்பான். சில நேரங்களில் என்ன வாழ்க்கை இது என்று தோன்றும். எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு இங்கிருந்து ஓடி விட மாட்டோமா, அவள் கைகளுக்குள் புகுந்து கொள்ள மாட்டோமா என்று அவன் உடலும் மனமும் பரபரக்கும். இடைவெளிகள் நீண்டு இருக்கையில் இதயங்கள் இணைய காத்திருக்க தான் வேண்டுமோ.
ஆண்மகன் தனக்கே இத்தனை வலியும் வேதனையும் உண்டென்றால் பெண் அவளுக்கு எப்படி இருக்கும். அதுவும் சுற்றிலும் அவளை சூழ்ந்து கொண்டு எப்போதும் கொத்தி கொண்டிருக்கும் பருந்துகளுக்கு மத்தியில் அல்லவா விட்டு விட்டு வந்திருக்கிறான், என்ன பாடுபடுகிறாளோ.
அவளுக்கு அவன் அருகில் வேண்டும், அவனுக்கோ அவள் நலமாய் நிம்மதியாய் அவன் அருகில் வேண்டும். அதற்காகத்தான் இத்தனை இடைவெளி கடந்து வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். உடல் மட்டும் தான் இங்கே உழைத்து கொண்டிருக்கிறது. மனம் எப்போதும் மனைவி காலடியிலேயே மண்டியிட்டு கிடக்கிறது.
சிரித்து முடித்தவள் கண்களின் ஓரம் கசிந்த நீரை ஒற்றை விரலால் சுண்டி விட்டு கொள்ள, “சரி சொல்லு எப்படி போச்சு இன்னைக்கு நாள், ஒரு வாரம் கழிச்சு வேலைக்கு போய் இருக்க, நிறைய வேலையா” என்றான் அக்கறையாக..
“அதெல்லாம் இல்லப்பா, எப்போதும் போலத்தான். வீட்டுல தான் கொஞ்சம் வேலை அதிகம்” என்றாள் சாதாரணமாக.
அவனுக்கும் தெரியும், வேலை செய்யும் இடத்தில் கூட அவளுக்கு ஓய்வு கிடைக்க வாய்ப்புண்டு, ஆனால் அவன் வீட்டில் அவள் ஒரு மனித இயந்திரம். அதை செய் இதை செய் என்று அவளை ஓட விட்டு கொண்டே இருப்பார்கள்.
இதெல்லாம் தெரிந்தும் கூட அங்கேயே அவளை விட்டு வைக்க காரணமும் இருக்கிறது, அது மஞ்சுளாதான். என்னதான் அவனின் குடும்பத்தினர் அவளை கொத்தும் வல்லூறாக இருந்தாலும் கூட, தனியாக இருக்கும் பெண்ணிடம் அத்து மீற நினைக்கும் சில நச்சு பாம்புகளிடம் இருந்து பாதுகாப்பதும் அந்த வல்லூறுகள் தான்.
அவனுக்கு அந்த ஏரியாவில் பலரை தெரியும், பிறந்து வளர்ந்த இடம் என்பதால் எல்லாருமே பழக்கம் தான். ஆனால் முன்பு போல அல்லாமல் இப்போதெல்லாம் அண்டை மாநிலத்தவர்கள் என புலம்பெயர்ந்தவர்களால் பழைய மக்கள் இருப்பே வற்றி போனது. தெரிந்த முகங்களே குறைந்து போனது. அதற்காக எல்லாரும் கெட்டவர்கள் என்று கூறி விட முடியாது. எல்லாரும் மனிதர்கள்தானே. நல்லதும் கெட்டதும் நிறைந்த மனிதர்கள். மக்களோடு மக்களாய் கலந்திருக்கும் நரிகளும் உண்டே. அதில் சில நரிகள் சீண்டி பார்க்க நினைக்கும், சந்தர்ப்பம் கிடைத்தால் வேட்டையாட துடிக்கும். அது போன்ற துயரம் தனது மனைவிக்கும் மகளுக்கும் நிகழ்ந்து விட கூடாது என்பதில் அவன் மிகவுமே உறுதியாக இருந்தான். அதனாலேயே இன்னும் தன் வீட்டினருடன் அவர்களை விட்டு வைத்திருக்கிறான். மஞ்சுளா கொஞ்சம் அடாவடியான ஆள் அவரிடம் நின்று பேசுவதற்கே பலரும் யோசிப்பார்கள். அய்யோ அவக்கிட்டே வாய் கொடுத்து மீள முடியாது என்று அஞ்சி ஒதுங்கி போவார்கள். அந்த குணமே அவனுக்கு இப்போது இங்கே வேலையை கவனிக்க தைரியம் தந்திருந்தது.
ஆனது இன்னும் கொஞ்சம் காலம் தான், அவன் நினைத்ததை முடித்து கொண்டு இங்கிருந்து பறந்து சென்று விடுவான். தன்னுடைய கை சிறைக்குள் மனைவியையும் மகளையும் வைத்து பாதுகாத்து கொள்வான். அதுவரையில் இந்த சிரமங்களை தாங்கிக்கொள்ளும் திடத்தை அவள் பெற்றிருக்க வேண்டும்.
அதனாலேயே அவள் ஏதாவது கஷ்டம் கவலை என்று சொல்லுகையில், இவன் இங்கே படும் துன்பம் எல்லாவற்றையும் மறைத்து கொண்டு அவளுக்கு திடத்தை கொடுத்து பேசுவான்.
“உன்னால முடியலைன்னா, முடியாதுன்னு சொல்லிடுடி, எதுக்காக உன்னை வருத்திக்கிட்டு செஞ்சுகிட்டு இருக்க” உடனடியாக கோபம் எட்டிபார்க்க கேட்டான்.
“அதை விடுங்க, சாப்பிட்டீங்களா” அன்பும் காதலுமாக குழைந்து வந்தது அவள் குரல்.
“இனி தான் சாப்பிடனும் இங்கே இன்னும் நேரம் ஆகலையே” என்றான்.
“சமைக்கனுமா”
“ம்ம்”
“எப்போங்க வருவீங்க” என்ன இன்னும் இந்த கேள்வியை தொடங்கவில்லையே என்று நினைத்து கொண்டிருக்க அவள் கேட்டிருந்தாள்.
அவளை ஆழ்ந்து பார்த்து கொண்டிருந்தவன், “எனக்கு மட்டும் உன்னையும் அபி குட்டியையும் விட்டுட்டு தனியா இருக்க ஆசையாடி. வந்தது வந்தாச்சு கொஞ்சம் தேவையானதை முடிச்சுக்கிட்டு வந்திருவேன்டி” என்றான்.
“தேவைகள் எப்போவும் தீராது முரளி, ஒண்ணு முடிஞ்சா இன்னொன்னு வரும். ஆனா காலம் அப்படியே நிக்காதே” என்றாள் அவள்.
“எனக்கும் நீ சொல்றது புரியாம இல்லைடி, நான் என்ன காரு பங்களாவீடுன்னு வாழவா அசைப்படறேன். இப்போ தான் நித்யா காவ்யா கல்யாண கடனை அடைச்சி முடிச்சோம். வீடு கட்டிருக்கோம். கொஞ்சம் பேலன்ஸ் இருக்கு, இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்துகிட்டு நமக்குன்னு ஒரு வீடு கட்டிகிட்டு, அங்கே வந்தா தொழில் பண்றதுக்கு ஏதாவது சேர்த்து வச்சுகிட்டு தானே வர முடியும்” என்றான் நீளமாக.
இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அவள் அமைதியாக இருக்க, “சிவா என்னடி ஒண்ணுமே சொல்ல மாட்டேன்கிற” என்றான்.
“என்ன சொல்ல சொல்றீங்க”
“ஏதாவது சொல்லுடி”
“ஏன் நாம இப்போ இருக்கிற வீட்டுக்கு என்ன குறை”
“சிவா அது நம்ம வீடு கிடையாதுடி”
“என்னங்க இப்படி சொல்றீங்க, நாம தானே கஷ்டப்பட்டு கட்டினோம்”
“நாம வீடு தான் கட்டினோம், ஆனா இடம் அம்மா பேர்ல இருக்கு. அது நமக்கு சொந்தமாகாது. எப்போ வேணும்னாலும் நம்மளை வெளியே போன்னு அவங்க சொல்லலாம். அவங்க சொல்றாங்க சொல்லலை அது விஷயம் இல்லை. ஆனா நமக்குன்னு ஏதாவது இருக்கனும். கஷ்ட காலத்திலே நிம்மதியா படுத்து தூங்க ஒரு இடம் இருக்கனும். அது கூட இல்லாம உன்னையும் என் பொண்ணையும் நடுதெருவில நிக்க வைக்க என்னால முடியாது” என்றான் உறுதியாக.
அவனது இந்த கருத்தில் அவளுக்கு ஆட்சேபம் இருக்கவில்லை தான். அவர்களுக்கென ஒரு வீடு வேண்டும் என அவன் நினைப்பதிலும் தவறில்லை. அதற்காக இன்னும் எத்தனை காலங்கள் தான் தனி தனியே கிடப்பது. அது தான் அவளுக்கு பெருங்குறையாக இருக்கிறது.
“நம்மகிட்டே தான் இப்போ கொஞ்சம் பணம் இருக்கே முரளி, அதை வச்சு வீடு கட்டிக்கலாமே. பத்தலைன்னா நகைகள் இருக்கு” என்று அவள் முடிக்கும் முன்னே, “கொஞ்சம் நிறுத்தறியா” என்று சீறி இருந்தான் அவன்.
“என்னடி நகை இருக்கு ஒரு ஐநூறு பவுன் வச்சிருக்கியா, இல்லை ஆயிரம் பவுன் வச்சிருக்கியா. பொம்பளை பிள்ளை பெத்து வச்சிருக்கோம். நாளைக்கு அதுக்கு கல்யாணம்னு வரும்போது என் தங்கச்சிங்களுக்கு செஞ்சதை போல ரெண்டு மடங்கா செய்யலைன்னா நான் எதுக்கு அப்பன்னு இருக்கனும். அப்புறம் நகை வச்சிருக்கோம் அது இதுன்னு வெளியே சொல்லிக்கிட்டு திறியாத. அது உன்னோட சம்பளத்திலே மாசம் மாசம் ரெண்டு ரெண்டு கிராம்னு வாங்கி குருவி போல நீ சேமிச்சது. அதையும் என்னவோ நான் தான் துபாய்ல இருந்து கட்டி கட்டியா வாங்கி அனுப்பினேன்னு நினைக்க போறாங்க. சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ சிவா, இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு இருந்துட்டோம் இன்னும் ரெண்டு வருஷம், குறைஞ்ச பட்சம் ஒரு வருஷம் எப்படியாவது வீடு கட்டி முடிச்சிடலாம். அப்புறம் உன் கிட்டே ஓடி வந்திருவேன்” என்றான் கணிவாக.
இதற்கு எதுவும் பதில் சொல்லாமல் அவள் அமைதியாக இருக்க, “இல்லை இதை தவிர உனக்கு வேற ஏதாவது டவுட் இருக்கா” என்று கேட்டான்.
என்னவென அவள் புரியாமல் பார்க்க, “இல்லை நான் இங்கே வேற யாரையாவது கரெக்ட் பண்ணிட போறேன்னு பயத்திலே வாவான்னு கூப்பிடறியா” என்று கேட்டவனை தன்னால் முடிந்தவரை முறைத்தாள்.
“என்னடி, அமைதியா இருக்கிறதை பார்த்தா அது தான் காரணம் போல” அடக்கப்பட்ட சிரிப்பு இழையோடியது அவன் குரலில்.
“அந்த விஷயத்துக்கு எல்லாம் நீங்க சரிபட்டு வர மாட்டீங்கன்னு தான் எனக்கு தெரியுமே” என்றாள் அவள் சீரியசாக.
“என்னடி இப்படி அசிங்கப்படுத்தற”
“உண்மையை தானே சொன்னேன், நானே வந்து உங்ககிட்டே பேசறவரைக்கும் சிவரஞ்சனின்னு ஒருத்தி உங்க பக்கத்திலேயே இருந்ததே உங்களுக்கு தெரியாது. இதோ இப்பவும் கூட பொண்டாட்டி நினைப்பே இல்லாம எங்கேயோ ஏசியையும் லைட்டையும் ரிப்பேர் செஞ்சுகிட்டு இருக்கீங்க. நீங்க எங்கே இன்னொரு ஆளை எல்லாம் செட் பண்றது வாய்ப்பில்லை ராஜா” என்றாள் உதடு பிதுக்கி.
“அடியே என்னடி, இங்கே உன் புருஷனை எப்படி எல்லாம் நல்லவன்னு சொல்லி புகழ்ந்துட்டு இருக்காங்க தெரியுமா” என்றான் சட்டையின் காலரை உயர்த்தி விட்டு கொண்டு.
“ஆமா ஆமா, நல்லவன் பட்டம் எல்லாம் அடுத்தவங்ககிட்டே வாங்க வேண்டியது தான். ஆனா பொண்டாட்டிக்கிட்டே அந்த பட்டம் எல்லாம் செல்லுபடி ஆகாது தலைவா” என அவள் கண்ணடிக்க, சிவா என உருகினான் செல்போன் வழியாக.
தலை சாய்த்து கண்கள் சுருக்கி ஒரு மார்க்கமாக அவள் பார்க்க, ஒரு நொடி அவளை முழுதாக தனக்குள் வரித்து கொண்டவன் கண்ணை மூடி தன்னை சமன் செய்து கொள்ள போராடினான்.
இவளுக்கு இங்கே சிரிப்பு வந்தது, உதட்டை மடித்து சிரிப்பை அடக்கியபடி, “என்னங்க பேச்சையே காணோம்” என்றாள் ஒன்றும் அறியாதவள் போல.
அவள் பார்வை உள்ளே சென்று உணர்ச்சி முடிச்சுகளை அவிழ்த்தெரிய பார்க்க, அவனுக்கோ நெருப்பில் நிற்பதை போல தேகம் பற்றி எரிந்தது. உதடுகள் உலர்ந்து போனது, சிரமத்துடன் எச்சில் கூட்டி விழுங்கியவன் “சிவா ஏண்டி இப்படி பண்ற” என்றான் பாவமாக.
“நான் என்ன பண்ணேன்” தோள் குலுக்களோடு கண்ணை சுருக்கி அவள் கேட்க, “போடி ராட்சசி” என்று போனை வைத்து விட்டான்.
இங்கே சிரித்துகொண்டே போனை வைத்தவளுக்கும் அவன் நெருக்கமும், நேசமும் வேண்டுமாக இருக்க கண்ணை கரித்து கொண்டு வந்தது. காலை குறுக்கி நெஞ்சோடு அணைத்தபடி, முட்டியில் கன்னத்தை பதித்து கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள்.
கணவன் வெளியூரில் வேலை பார்க்கும் எத்தனையோ மனைவிகள் இங்கேயும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருமே இப்படித்தான் வருந்தி கொண்டு இருப்பார்களா. இல்லை அவள் தான் அதிகமாக அவனை தேடுகிறாளா தெரியவில்லை.
அப்படியா உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறாள். இது வெறும் உடல் சார்ந்த உணர்வு போராட்டம் மட்டும் இல்லை. அவன் காதல் அவளுக்கு வேண்டும், அவன் அணைப்பு வேண்டும், எலும்புகள் உடைபடுவது போல இழுத்து அணைக்கும் சுகம் வேண்டும். அவனிடம் கிறங்கி மயங்கும் பொழுதுகள் வேண்டும். அவன் மடியில் இளைப்பாறும் ஆறுதல் நிமிடங்கள் வேண்டும். இப்படி ஆயிரம் வேண்டும், அதை தாண்டியும் கணக்கில் சொல்ல முடியாத வார்த்தைகளில் வரிக்க முடியாத எத்தனையோ வேண்டும்.
பெரிய பெரிய மூச்சுகளாக இழுத்து விட்டாள். அவளுக்கே இப்படி என்றால் அருகில் இருக்கும் போது ஒரு நாள் கூட அவளை விலகி இருந்திடாத அவனுக்கு எப்படி இருக்கும். அவளின் ஒரு பார்வைக்கே உருகி தவிப்பவன் ஆயிற்றே. அவனும் அங்கே தனியே தானே கிடக்கிறான். அவளுக்காவது இங்கே மகள் இருக்கிறாள் வருத்தமோ சங்கடமோ மகள் முகத்தை பார்த்து தன்னை தேற்றி கொள்கிறாள். அவனுக்கு அங்கே யார் இருக்கிறார்கள். இப்படி பேசும்போதெல்லாம் அவளிடம் தன் உணர்வுகளை காட்டாது இருக்க அவன் படும் பாடு அவளுக்கும் தெரியும் தானே. இருந்தும் இன்று அவளே அவனை தூண்டி விடுவது போல பேசி விட்டாளே, என்ன மடத்தனம் செய்து விட்டாய் என்று தன்னை தானே தலையில் தட்டிக்கொண்டாள்.
இனி இப்படி எல்லாம் பேச கூடாது, பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். சும்மா இருப்பவனின் உணர்வுகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது போல அவள் செய்த செயலை எண்ணி தனக்கு தானே அறிவுரை சொல்லி கொண்டவள் பள்ளியில் இருந்து திருத்துவதற்காக எடுத்து வந்த தினசரி பரீட்சை தாள்களை கையில் எடுத்து கொண்டு அமர்ந்தாள்.