தூரங்கள் 19 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூரங்கள் 19

New updates

LATEST
Joined
Jun 29, 2026
Messages
39
Reaction score
29
Points
18
Chapter 19
கேள்விகள் நிறைந்து கிடக்கிறது என்னிடம்
பதில்கள் எல்லாம் எதிர்பார்க்கவில்லை உன்னிடம்.
அதற்கான ஆறுதல் மட்டுமே
தேவையாய் இருக்கிறது
அதை மட்டும் கொடுத்து விடு போதும்.

“ரஞ்சனி மிஸ்”, ஓடோடி வந்து ரஞ்சனியை தொட்டு நிறுத்தினாள் சுதா.

மூச்சு வாங்க ஓடி வந்தவளை பார்த்து லேசான சிரிப்புடன் நின்றாள் ரஞ்சனி.

“ஹப்பாடா, என்ன மிஸ் உங்களை பார்க்கவே முடியலை”

“ஆமா சுதா மிஸ் அங்கே நிறைய வேலை. காலையிலே தலையை சிஸ்டம்குள்ள விட்டா ஈவினிங் தான் நிமிர்ந்தே பார்க்க முடியுது”

“அட நீங்க என்ன மிஸ், அங்கேயாவது ஏசி இருக்கு, இங்கே கிளாஸ் ரூம்ல ஏசி இல்லாம அதுவும் இந்த எல்நினோன்னு ஏதோ சொல்றாங்களே அதோட எஃபக்ட் ஒரே வெக்கையா இருக்கு. நீங்க தப்பிச்சிட்டீங்க போங்க” என்றாள்.

“இல்லை மிஸ், ஒரே இடத்திலே உட்கார்ந்து வேலை செய்யறது எனக்கு பிடிக்கலை. பிள்ளைகளோட இருக்கறப்ப மனசுக்கு கொஞ்சம் நல்லமாதிரி இருந்தது. இப்போ அது சுத்தமா இல்லை” என்றாள்.

“ஏன் மிஸ்”

“ஏன்னா அங்கே தான் நம்ம சேர்மன் சார் உட்கார்ந்து இவங்களையே பார்த்துக்கிட்டு இருப்பாரே” என்று பின்னால் இருந்து குரல் கேட்க இருவருமே யார் அது என்று திரும்பி பார்த்தனர். அவர்களுடன் வேலை செய்யும் கீதா எப்போதிருந்து பின்னால் இருந்து இவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லையே என்று நினைத்தவர்கள், லேசாக சிரித்து வைத்தனர்.

“என்ன ரஞ்சனி மிஸ் நான் சொல்றது சரிதானே”

“என்ன சரி”

“ஆமா சேர்மன் சார் எப்பவுமே உங்களை மட்டும் தானே பார்த்துகிட்டே இருக்காரு” என்றாள் பூடகமாக.

“அது வேலை ஒழுங்கா செய்யறேனான்னு பார்த்து இருப்பாரு. அவர் கொஞ்சம் பெர்பெக்ட்ஷன் பார்ப்பாரு” என்றாள் ரஞ்சனி கொஞ்சம் மெதுவாக.

“அட என்ன ரஞ்சனி மிஸ் இது கூடவா எங்களுக்கு தெரியாது. அவருக்கு உங்க மேலே தனி அக்கறை. அப்படி இல்லைன்னா எதுக்கு அடுத்தவங்க பொண்டாட்டியை..” என்று இழுத்தவள் உடனே மாற்றி, “அது ஹஸ்பண்ட் இல்லாத பொண்ணுக்கு உதவி செய்யறாரு” என்று முடித்தாள்.

“கீதா மிஸ் நீங்க என்ன சொல்ல வறீங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்க எனக்கு புரியலை”

“இதுல சொல்ல என்ன இருக்கு, நாங்க அத்தனை பேர் சுத்தி இருக்கும்போதே, அவரே உங்களை தூக்கிட்டு வந்து படுக்க வச்சாரே அதுலயே அவருக்கு உங்க மேலே எவ்வளவு அக்கறை இருக்குன்னு தெரியுதே” என்றாள் இழுவையாக.

“தூக்கிட்டு வந்தா” ரஞ்சனிக்கு குழப்பமாக இருந்தது.

“மிஸ் நீங்க பேசறது கொஞ்சம் கூட சரியில்லை, மனசாட்சி இருக்கிற எந்த மனுஷனும் அதை தான் செய்வாங்க. அப்புறம் நீங்க கண்ணு காது மூக்கு வச்சு பேசறது சேர்மன் சாரை பத்தி அது நியாபகத்திலே இருக்கட்டும். உங்களுக்கும் இந்த வேலை முக்கியம்னு நினைக்கிறேன். நீங்க வாங்க ரஞ்சனி மிஸ்” என ரஞ்சனியை இழுத்து கொண்டு சென்றாள் சுதா.

அலுவலக வாசலில் வந்ததும் ரஞ்சனியை விட்டவள், “அந்த லூசு ஏதோ பேசிட்டு போகுது, நீங்க போய் வேலையை பாருங்க மிஸ்” என்று அவள் நகர்ந்து போக, “சுதா மிஸ் கொஞ்சம் நில்லுங்க அன்னைக்கு நான் மயக்கம் போட்டு விழுந்தப்ப அவர் தான் என்னை தூக்கிட்டு வந்தாரா” என்று கேட்டாள்.

சுதா, சற்றே தயங்க, சொல்லுங்க சுதா மிஸ், எனக்கு நீங்க ஃப்ரெண்ட் அப்படித்தான் நான் நினைக்கிறேன், இல்லை நான் உங்களுக்கு ஒரு கலீக் (சக பணியாள்) மட்டும் தான்னு நினைச்சா சொல்ல வேண்டாம்.

“அய்யோ ரஞ்சனி என்ன இப்படி சொல்றீங்க. எனக்கு நீங்க ஃப்ரெண்ட் தான். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்”

“அப்போ சொல்லுங்க சுதா”

ஆமா மிஸ் அன்னைக்கு நீங்க மரத்தடியில மயங்கி விழுந்துட்டீங்க, அவர் தான் உங்களை தூக்கிட்டு வந்து ஸ்டாஃப் ரூம்ல படுக்க வைச்சாரு. இதுல என்ன தப்பு இருக்குன்னு அந்த லூசு தாந ஏதோ பேசுதுன்னா நீங்களும் கேட்கறீங்க”

ஓரு நொடி அமைதியாக இருந்த ரஞ்சனி, “நீங்க போங்க சுதா” என்றாள்.

“ரஞ்சனி இது”

“இல்லை சுதா, இதை பத்தி எதுவும் இல்லை. கிளாஸ்க்கு டைம் ஆகிடுச்சு நீங்க கிளம்புங்க. அப்புறமா நாம பேசலாம்” என்று அவளை அனுப்பி வைத்தாள்.

சுதா சென்று விட, வேகமாக புயல் போல அலுவலகத்தின் உள்ளே நுழைந்திருந்தாள். கதவை வேகமாய் திறந்து கொண்டு வந்தவள், கணினி முன்னே அமர்ந்திருந்தவன் முன்னே மூச்சு வாங்க நின்றாள். அவள் முகத்தை ஏறெடுத்து பார்த்தவன், இன்னைக்கு முடிக்க வேண்டிய ஃபைல் இதை எல்லாம் என எடுத்தவனிடம் இருந்து அந்த ஃபைல்கலை வெடுக்கென பிடிங்கியவள், “என்னை தொடற உரிமையை உங்களுக்கு யார் சார் கொடுத்தது” என்று கேட்டாள்.

அவளையும் அவன் கையையும் மாறி மாறி பார்த்தவன், அவளை பார்த்தான். அதாவது தொடவில்லையே என்று சொல்கிறானாம்.

“இப்போ இல்லை, அன்னைக்கு மயங்கி விழுந்தப்ப”

“மயக்கம் போட்டு விழுந்தா, தொட்டு தூக்காம, மந்திரம் போட்டு அப்படியே தரையோட பெயர்த்து தூக்கிட்டு போக நான் என்ன ராவணனா” என்றான்.

“சார் அங்கே எத்தனை பேர் இருந்தாங்க, அவங்களை விட்டு தூக்க சொல்லிறுக்கலாம்ல, உங்களை யார் தொட சொன்னது”.

யாரை சொல்றீங்க, அங்கே இருந்த குட்டி பசங்களையா, உங்களை போல டீச்சர்ஸ்யா, பியூன் தாத்தாவா, அக்கவுண்டன்ட் கணபதி சாரையா. இல்லை ஆபீஸ் அசிஸ்டண்ட் ஜனாவையா யாரை விட்டு தூக்க சொல்லிறுக்கனும்”

அவன் கேட்ட கேள்வியில் இவளுக்கு முகம் சிவந்து போனது. சக ஆசிரியாகள் எல்லாருமே பெண்கள் தான். அவர்களால் அவளை எப்படி தூக்க முடியும். அதுவும் நான்கு பேர் சேர்ந்து தூக்கினால் கூட அது சரிவந்திருக்காது.

அவள் யோசிக்க, “என்ன யாரைன்னு முடிவு பண்ணிட்டியா, இப்பவே சொல்லிடு அப்போ தான் அடுத்த முறை நீ மயக்கம் போடும்போது அவங்களை தயாரா பக்கத்திலேயே வச்சுக்கிறேன்” என்றான் நக்கலாக.

அவனை கண்களில் கூர்மையுடன் இவள் பார்க்க, “பார்த்து முடிச்சுட்டா அடுத்த வேலையை பார்க்கலாமா” என்றான்.

“சார் இனி என்னை தொடற வேலை எல்லாம் வேண்டாம் அது நான் சாகவே கிடந்தாலும் சரி” என்று கூறி முடிக்கும் முன் நாற்காலியை பின்னுக்கு தள்ளியபடி எழுந்திருந்தவன் அவள் அருகே வந்தான்.

அவன் எழுந்த வேகத்தை பார்த்து இரண்டடி பின்னால் நகர்ந்திருந்தவள் அவனை பார்க்க, “என்ன சொன்ன சாக கிடந்தாவா, வாழ்க்கையிலே பிறந்தவங்க எல்லாருமே ஒரு நாள் சாக தான் போறோம். ஆனா அது எப்போ எங்கே எப்படின்னு நாம முடிவு செய்ய முடியாது. என்னோட வாழ்க்கை உன் கையிலே இருக்கா உன்னோட வாழ்க்கை என் கையிலே இருக்கா தெரியாது. ஆனா வாழ வந்த வாழ்க்கையை வாழ்ந்து முடிக்காம யாரும் போக முடியாது. அது தான் விதி” என்றான் கோபமாக.

இவளுக்கு எதுவுமே புரியவில்லை, எதற்காக இவன் சம்மந்தம் இல்லாமல் பேசுகிறான் எனஅ யோசித்தாள்.

“அதிகமா யோசிக்காம கொடுத்த வேலையை செய்ங்க” என்று விட்டு சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

இருக்கையில் அமர்ந்தவள் அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் தனது வேலையை செய்து கொண்டிருந்தாள். மதிய இடைவேளை ஒரே பள்ளி என்பதால் அடிக்கடி எல்லாம் அபியை பார்க்க செல்ல மாட்டாள். அதுவே மற்ற பிள்ளைகளுக்கு ஒரு வித ஏக்கத்தை தரும் என்று, ஆனால் என்னவோ இன்று அவளை பார்த்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவளை தேடி சென்றாள்.

அபி அவளது வகுப்பில் இல்லை, அவள் வகுப்பு ஆசிரியை இவளை பார்த்ததும் சினேகமாக சிரித்தாள். “என்ன மிஸ் அபியை பார்க்க வந்தீங்களா”

“ஆமா மிஸ் எங்கே அவ”

“அவ இப்போ எல்லாம் வெளியே தானே சாப்பிடரா உங்களுக்கு தெரியாதா” என்றாள் அவள்.

“வெளியேவா என்று யோசத்தவள் சரி மிஸ் நான் பார்த்துக்கிறேன்” என்று விட்டு பள்ளியை சுற்றிலும் வலம் வர துவங்கினாள்.

அந்த பள்ளியில் எல்லாருமே வகுப்பறையில் அமர்ந்து உண்பது தாந வழக்கம் அப்படியிருக்கையில் “எங்கே போனா இந்த பொண்ணு” என்று அவள் பார்த்து கொண்டிருக்க, யாருக்கோ கையசைத்து விட்டு நடந்து வந்து கொண்டிருந்தாள் அபர்நதி.

மகளை நெருங்கியவள், “அபி எங்கே போய்ட்டு வர, கிளாஸ் ரூம்ல தானே சாப்பிடனும். எதுக்கு வெளியே வந்த, யாருக்கு பை சொல்லிட்டு வர” என வரிசையாக கேள்வியை அடுக்கினாள்.

திடீரென அம்மாவை பார்த்ததும் சற்றே திகைத்த அபி, “அம்மா என்னோட ஃபிரண்ட் கூட சாப்பிட்டேன்” என்றாள்.

“ஃப்ரெண்ட்டா எனக்கு தெரியாம யாரு அது ஃப்ரெண்ட்” என சற்றே அதட்டி கேட்டாள். அங்கே கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் நிறைய ஆட்கள் அங்கும் இங்கும் நடமாடிகொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கையில் இவள் எங்கே யாரிடம் பழகுகிறாள் என்று பயம் வந்தது.

“வா வந்து, உன்னோட ஃப்ரெண்ட்ட எனக்கு காட்டு” என்றாள்.

“அம்மா அது வேண்டாம்மா”

“ஏன் வேண்டாம்”

“என் ஃப்ரெண்ட் யாருகிட்டேயும் சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்காங்க”

அதை கேட்டதும் மனதிற்குள் ஒரு வித பயம் சூழ்ந்து கொண்டது ரஞ்சனியை. என்ன சொல்கிறாள் இவள் யார் இவளிடம் உண்மையை மறைக்க சொல்லி இருப்பார்கள். சின்ன பெண்ணின் மனதில் நஞ்சை விதைக்க முயற்ச்சி செய்கிறார்களா. நினைக்கும்போதே கண்ணை இருட்டி கொண்டு வந்தது. தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவள், “அபி நீ அம்மா செல்லம் தானே. அம்மாகிட்டே எப்பவுமே எதுவுமே மறைக்க கூடாது சொல்லிறுக்கேன் தானே, சொல்லு யார் உன்னோட ஃப்ரெண்ட். எனக்கும் அவங்களை ஃப்ரெண்ட்டாக்கி விட மாட்டியா” என்று நயமாக பேசினாள்.

நாடியை தட்டி யோசித்த அபி, “அம்மா என் ஃப்ரெண்ட் உன்கிட்டே சொல்ல வேண்டாம்ணு சொல்லலை, வேற யார்க்கிட்டேயும் சொல்ல வேண்டாம்னு தான் சொன்னாங்க. வா உனக்கு அவங்களை காட்டறேன்” என அவள் கைபற்றி அழைத்து கொண்டு போனாள்.

அய்யோ இந்த பெண் என்ன சொல்கிறாள் என்று இருந்த போதும் அவள் கைபற்றி நடந்தவளுக்கு வேறு யோசிக்க முடியாத நிலை. அபி அவளை அழைத்து சென்று நின்ற இடம் அவளது அலுவலக அறை வாசல், பள்ளியின் அலுவலக அறை. இங்கேயா என்று அவள் பார்த்திருக்க, அம்மாவின் கையை விட்டு விட்டு சாதாரணமாக உள்ளே நுழைந்தவள், அபி என்று அழைத்திருந்தாள்.

அவள் அழைத்த அந்த அபியானவன், இந்த பள்ளியின் கரஸ்பாண்டென்ட் அபிமன்யு”

“என்ன அபி, உங்க அம்மா வந்திட போறாங்க இப்போ வந்திருக்க” என்றான் அவன் அவசரமாக, ஆனால் குழைந்து வந்த குரலில்.

அபர்நதி பின்னால் திரும்பி பார்க்க அவர்கள் எதிரே கை கட்டிகொண்டு நின்று இருந்தாள் சிவரஞ்சனி.

என்ன என்று அபியை புருவம் உயர்த்தி கேட்டான். “அவளோ அபி அம்மா உன்னை பார்க்கணும்னு சொன்னாங்க” என்றாள்.

“ஏன் உன் அம்மாவுக்கு தான் என்னை தெரியுமே” என்றான் இவன் கெத்தாக.

“ஏம்மா அபியை உனக்கு தான் தெரியுமே, அப்போ ஏன் என்கிட்டே கேட்டுகிட்டே இருந்த” என்றாள்.

ம்ம், ஆமோதிப்பாக தலையசைத்தவள், “கிளாஸ்க்கு போடி” என்றாள் மகளிடம்.

“பை அபி” என அவனுக்கு கையைசைத்து செல்ல போக ஓய் என்று அவளை அழைத்து நிறுத்தியவன், டேபிள் டிராவில் இருந்து ஒரு பெரிய சாக்லேட் எடுத்து அவளிடம் கொடுத்தான். ஓடி வந்து அவனிடம் இருந்து வாங்கி கொண்டவள், வெளியே போக, அவளிடம் இருந்து அதை பறித்திருந்தாள் ரஞ்சனி.

“அம்மா என்று மகள் சிணுங்க, ஈவினிங் தரேன்” என்றாள்.

இவள் அபிமன்யுவை திரும்பி பார்க்க, அவன் தோள் குலுக்கினான். சரிதான் என்பது போல இவளும் அவனை போலவே தோளை குலுக்கி விட்டு ஓடிவிட்டாள்.

அவள் போனதும் அவன் கணினியின் பக்கம் திரும்ப, “எதுக்காக சார் என் பொண்ணுகிட்டே பழகறீங்க” என்றாள்.

“இது என்ன கேள்வி குழந்தகிட்டே எதுக்கு பழகுவாங்க”

“ஏன் இந்த ஸ்கூல்ல ஆயிரத்துக்கு மேலே பிள்ளைங்க இருக்காங்க, அவங்களோட எல்லாம் பழக வேண்டியது தானே. எதுக்கு என் பொண்ணு” அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, இடையிட்டவன், “உங்களுக்கு என்ன பிரெச்சனை சிவரஞ்சனி” என்றான்.

“எல்லா பிள்ளைகளும் கிளாஸ் ரூம்ல சாப்பிட்டு இருக்காங்க, இவ மட்டும் தனியா வெளியே வந்து சாப்பிடறா. அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா”

“என்ன நடக்கும்” என்றான் கையில் இருந்த பேனாவை கீழே வைத்து விட்டு.

“பொம்பளை பிள்ளைங்க அருமை தெரிஞ்சிருந்தா இப்படி பேச மாட்டீங்க” என்றாள் கோபமாக.

“என்ன நடக்கும்னு கேட்டேன்”

“யாராவது என் பிள்ளைக்கிட்டே தப்பா” அவள் சொல்லி முடிக்கும் முன்னே “வெட்டி கூறு போட்டுடுவேன்” என்றான் அவன்.

இவள் திகைத்து பார்க்க, “அபி மட்டுமில்லை, இந்த ஸ்கூல்ல இருக்கிற எந்த பிள்ளைக்கும் எந்த ஒரு பிரெச்சனையும் பண்ணனும் எவனாவது நினைச்சா அவனை வெட்டி கூறு போட்டுடுவேன்” என்றான் அழுத்தமாக.

அவள் அப்படியே பார்க்க, “அதுல அபி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல், அவ மேலே ஒரு தூசி கூட விழ விட மாட்டேன், தப்பா எவனாவது பார்த்தான்” என இதழ் மடித்து கண்களில் கூர்மையுடன் கூறியவன் வித்யாசமாக தெரிந்தான்.
அவனை புரியாது பார்த்து கொண்டிருந்தாள் சிவரஞ்சனி.
 

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,377
Reaction score
3,223
Points
113
விஷயம் விவகாரம் ஆகிப் போச்சுதே

😂😂😂😂

அடப்பாவி கீதா சொன்னது சரி

மகளை வச்சு அம்மாவை பிடிக்க பார்க்குறான்
 
Top Bottom