Sagee Elumalai
Member
- Joined
- Jun 29, 2026
- Messages
- 36
- Reaction score
- 27
- Points
- 18
Chapter 17
சொல்லி விடலாம் என்று
ஓராயிரம் ஆசைகள் தேக்கி வைத்தேன், ஆனால்
ஒன்றை கூட கேட்க விருப்பமின்றி
விலகி சென்று விடுவாய் என்று தெரியாதே.
தெரிந்திருந்தால் ஒன்றிரண்டையாவது
சொல்லி இருப்பேன்...
மறுநாளே ரஞ்சனி பள்ளிக்கு வந்து விட்டாள். அவளின் ஒரே புகலிடம் தாய்மடி எல்லாமே அந்த பள்ளி தானே.
“இப்போ எப்படி இருக்கு” எதிரே நின்றபடி தோரணையோடு கேட்டவனின் கேள்வியில் என்னது என்றபடி பார்த்தாள் சிவரஞ்சனி.
“உடம்புக்கு எப்படி இருக்குன்னு கேட்டேன்” குரலில் இரக்கம் என்பதே இல்லாமல் இப்படி ஒரு கேள்வியை எப்படி கேட்க முடிகிறது இவனால்.
ம்ம் என்று மட்டும் தலையசைத்தாள் பெண்.
“உங்க பிரெச்சனை எல்லாம் ஓரங்கட்டி வச்சுட்டு வேலைக்கு வரதுன்னா வாங்க, இங்கே வந்து சும்மா மயங்கி விழற வேலை எல்லாம் வேண்டாம். எல்லாருக்கும் கஷ்டம்”
வட்டிக்கு பணம் கொடுத்தவன் கூட இத்தனை கறாராக பேசுவானா என்று கேட்டால் நிச்சயம் மாட்டான் என்று தான் சொல்ல தோன்றும். யாராவது சும்மா மயங்கி விழுவாங்களா, இவன் என்ன சுத்த பைத்தியக்காரனா இருக்கானே என்று தான் நினைத்தாள் ரஞ்சனி. ஆனாலும் சரி என்று தலையசைத்து கொண்டாள்.
அடுத்தடுத்து வந்த நாட்களில் தாராள வள்ளலாக வேலைகளை வாரி வழங்கி கொண்டிருந்தான் அபிமன்யு. அவளை கொஞ்சம் நேரம் கூட வேறு நினைவுகளை நினைக்க விடாமல் இருக்க, அவன் கொடுத்த வேலைகளும் ஓரளவுக்கு வேலை செய்தது போலும். கையும் மூளையும் இடைவிடாது உழைத்து கொண்டே இருந்தது.
அவளை அவ்வப்போது பார்ப்பதும் தன் வேலையை செய்வதுமாக இருந்த அபிமன்யு அவளது மாற்றத்தில் கொஞ்சம் திருப்தி பட்டுக்கொண்டான்.
அவள் கொஞ்சம் சோர்ந்து போனாலும் கூட, “ஏற்கனவே மூணு மாசம் வேலையே செய்யாமாத்தான் உங்களுக்கு சம்பளம் கொடுத்திட்டு இருந்திருக்கோம் அதுக்கும் சேர்த்து தான் நீங்க வேலை செய்யணும். அதை நினைப்பில வச்சுகோங்க” என்று வேறு அடிக்கடி நினைவு படுத்தினான்.
ஆனால் அவளுக்கு தெரிந்து, ராதா மேடம் தான் அவள் வீட்டிற்கு வந்து, “சங்கரன் சார் உன்னை எவ்வளவு நாள் வேணுமோ லீவு எடுத்துக்க சொன்னாரு ரஞ்சனி. அதனால நீ பொறுமையா வேலைக்கு வந்தா போதும்” என்று சொன்னது போலத்தான் நினைவில் இருந்தது.
எது எப்படியோ வேலைக்கு என்று வந்தாயிற்றி, வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்யத்தானே வேண்டும். இப்படி அதிகப்படியாய் செய்யும் வேலை கூட கொஞ்சம் நன்றாகத்தான் இருக்கிறது. கணவனின் நினைப்பில் மூழ்கி கிடக்க முடியாமல், வேலை அவளை மூழ்கடித்து போகிறது. அதற்காக கணவனை முற்றிலுமாக மறந்து விடுவாளா என்ன. மறக்க கூடிய உறவா அது. ஒருவருக்காக ஒருவர் என்று உயிரும் உடலுமாக வாழ்ந்த உன்னத வாழ்வல்லவா.
இரவுகளின் நிசப்தத்தில் அவன் குரலும் முகமும் அலைபேசி மூலம் அவளை கட்டிபோட்டு கொண்டிருக்குமே. அந்த நிமிடங்களை எப்படி கடந்து செல்வது. பேசி பேசி களைத்தபடி இருவரும் உறங்கிபோவார்களே அதை எப்படி மறப்பது.
பகல் பொழுதுகள் எப்படியோ வேலை வேலை என்று தன்னை மூழ்கடித்து கொண்டுவிடுகிறாள். ஆனால் இரவானதும் கணவனின் எண்ணில் இருந்து வராத, இனி வரவே வராது என தெரிந்த அந்த அழைப்பிற்காக நடுநிசி வரையில் காத்து கிடக்கிறாள். எப்படியோ வேலை பளுவின் காரணமாக உடல் உறங்கினாலும் கூட உள்ளம் அது விழித்து கொண்டு, பழைய நினைவுகளை அசை போட்டு கொண்டே இருக்கிறது.
இதனால் போதிய உறக்கமின்றி மறுநாள் கடமையே என எழுந்து வருபவளின் கண்கள் இரண்டும் சிவந்து, அழுததில் இமைகள் வீங்கி தடித்து பார்க்கவே பாவமாக இருக்கும். ஆனால் அவள் ஒன்றும் வேண்டுமென்று எதையும் செய்வதில்லையே. அவளின் சோகங்கள் எல்லாம் அவள் தலையணையும், அந்த இரவுகளும் மட்டுமே அறியுமல்லவா.
அவள் முகம் பொலிவில்லாமல் இருப்பதை வைத்தே, “இப்படி அழுது வடிஞ்சுகிட்டே வந்து வேலை பார்த்தா எப்படி. கடமைக்காக வேலை செய்ய வெளியே ஆயிரம் பேர் இருப்பாங்க. உண்மையா மனசாட்சியோட வேலை செய்ய முடிஞ்சா செய்ங்க இல்லையா கிளம்பி போய்ட்டே இருங்க” என்று கத்துவான் அந்த அபிமன்யு.
இவளுக்கு தான் தலையை எதிலாவது கொண்டு சென்று முட்டி கொள்ளலாம் என்று இருக்கும். ‘நான் எப்படி வந்தா இந்த ஆளுக்கு என்ன.. வேலை ஒழுங்கா தப்பு இல்லாம நடக்குதா அதை தானே பார்க்கனும். சும்மா எல்லாத்துக்கும் குறை கண்டுபிடிச்சுகிட்டு. அப்படி குறை இருக்குன்னு நினைக்கிறவார் எதுக்கு என்னை இங்கே வச்சி உயிரை எடுக்கணும். வேற நல்லா வேலை செய்யற ஈன்னு இளிச்சுட்டு இருக்கிற ஒரு ஆளை பார்த்து வேலைக்கு வச்சுக்க வேண்டியது தானே.
முனுமுனுத்து கொண்டே வேலை பார்த்தவள், மதிய இடைவேளையில் தன்னையும் மீறி சோர்வாக உணர்ந்ததால், ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவி கொண்டு வரலாம் என்று சென்றிருந்தாள்.
“அம்மா, அம்மா” மெல்லிய அழைப்பு அறை வாசலில் கேட்டது.
முதலில் சாதாரணமாக இருந்த அபிமன்யு, பிறகு படக்கென எழுந்து வெளியே வந்தான். நீண்ட உருவமும் திடகாத்திரமான அவன் உடலும் கண்டால் பெரியவர்களே கொஞ்சம் நடுங்கி தான் போவார்கள். அம்மாவை தேடி வந்த சின்ன குட்டி சட்டென அவன் கதவை திறந்து கொண்டு வந்து நிற்கவும் பயந்து போனது. படக்கென அது திரும்பி ஓட முயற்ச்சிக்க, எட்டி பிடித்து நிறுத்தி இருந்தான் அவன்.
அந்த பள்ளியில் எல்லா ஆசியர்களுமே அபிக்கு பழக்கம் தான், தலைமை ஆசிரியர் கூட அபி என்று கன்னம் தட்டி பேசுவார். அதனால் எல்லாரிடமும் சகஜமாக பேசும் அபிக்கு பலமுறை பார்த்தும் கூட இவனின் தோற்றத்தில் கொஞ்சம் பயம் இருந்தது. அதுவும் அவன் அன்று அவனது வீட்டில் வைத்து கோபமாக பேசியதில் இருந்தே அதீத பயம் தான்.
“கிளாஸ்க்கு போகாம இங்கே என்ன செய்யற” மெதுவாகத்தான் கேட்டான். எத்தனை மெதுவாக கேட்க முயன்றும் அவன் சீற்றமான குரல் அதட்டலாகவே வெளியே வந்திருந்தது.
அதில் “அம்மா அம்மா வை பார்க்கணும்” என்று உதடு பிதுக்க துவங்கினாள் அபி.
“ஹே நான் இப்போ உன்னை என்ன கேட்டேன் எதுக்கு இப்படி சிணுங்குற” அவன் கேட்டுக்கொண்டிருக்க, ரெஸ்ட் ரூமில் இருந்து முகம் துடைத்து கொண்டே வெளியே வந்த ரஞ்சனி அபியை பார்த்து விட்டு ஓடி வந்திருந்தாள்.
“சார் எதுக்கு குழந்தையை மிரட்டறீங்க” ஓடி வந்தவள் அவன் கைப்பிடியில் இருந்த அபியை கிட்டதட்ட பறித்து கொண்டாள்.
“எது மிரட்டறேனா, இங்கே என்ன பண்றன்னு தான் கேட்டுகிட்டு இருந்தேன்”
“சின்ன குழந்தைங்ககிட்டே இப்படித்தான் ஹார்ஷா, பேசுவாங்களா”
“நான் சாதாரணமா தான் பேசினேன்” அவன் தன்னை குற்றம் சாட்டுபவளை தானும் குற்றம் சாட்டும் தோரணையில் கூறினான்.
“ஆமா ஸ்பீக்கரை முழுங்கின மாதிரி ஒரு குரல் அதுக்கு குழந்தைங்க பயப்படாம என்ன செய்வாங்க”, என்று முனகியவள் “அபி என்னடா எதுக்கு இங்கே வந்த” என்று கேட்டாள்.
“அம்மா உங்க சாப்பாடு என்னோட லஞ்ச் பாக்ல இருக்கு அதான் நீங்க சாப்பிட கூப்பிட வந்தேன்” என்றாள் எதிரே நின்று அவளையே உறுத்து விழித்து கொண்டிருந்தவனை கீழ் கண்ணால் பார்த்தபடி.
“சரிடா அம்மா வந்து எடுத்துக்கிறேன், நீ கிளாஸ்க்கு போ” என்று அவளை அனுப்பி வைத்தாள் ரஞ்சனி.
அவள் அந்த நெடியவனை பார்த்து கொண்டே அங்கிருந்து வேகமாக ஓட, “குழந்தைங்களை எல்லாத்துக்கும் செல்லம் கொடுத்து வளர்த்தா இப்படித்தான் எதுக்கெடுத்தாலும் பயப்படுவாங்க. நல்லா தைரியமா வளர்க்கணும், அதுவும் பெண் குழந்தைங்க எதுக்கும் பயப்பட கூடாது. எதிர்காலத்திலே அந்த தைரியம் தான் அவங்களுக்கு பயன்படும். எப்போ பாரு செல்லம் கொஞ்சிக்கிட்டு திரியறது” என்று அவளுக்கு நன்கு கேட்கும்படி சொல்லிவிட்டே அங்கிருந்து அகன்றிருந்தான் அவன்.
“ஆமா இவர் அப்படியே நாளு பிள்ளை பெத்து வளர்த்தவரு சொல்லிட்டு போராரு என்று அவனை பின் தொடர்ந்தே சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
அது சரி அவனுக்கு பிள்ளை இருக்கிறதா பொண்டாட்டி இருக்கிறதா என்று உனக்கெப்படி தெரியும் என்று அவள் மனசாட்சி கேள்வி கேட்கும்போதே, “சமூகத்திலே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரா நடக்கிற அவலங்களை பார்த்து எதுவும் செய்ய முடியாம வெட்கப்பட்டுகிட்டு இருக்கிற சராசரி ஆண் நான். இதுக்கு பிள்ளை குட்டி பெத்து இருக்கணும்னு அவசியம் இல்லை. இந்த ஸ்கூல்ல இருக்கிற எல்லா குழந்தைங்களும், உங்க பொண்ணு உட்பட எல்லாருமே என்னோட பிள்ளைங்க தான்” என்றான் அழுத்தமாக.
அவள் சிறு சலிப்பான தலையசைப்புடன், வேலையை துவங்க “போய் சாப்பிட்டு வந்து வேலையை பாருங்க, அப்புறம் அன்னைக்கு மாதிரி மயங்கி விழுந்து என்னை தூக்கிட்டு போக வச்சிடாதீங்க” என்றான் கணினியில் கண்ணை பதித்து கொண்டே.
“எப்போ, யாரை” இவள் தான் புருவம் சுருங்க கேட்டாள்.
“யாரையா, நான் என்ன ரோட்டுல போற நாளு பேரை யார் மயக்கம் போட்டு விழுவான்னு பார்த்து தூக்கிட்டு திரியறேனா” என்றான் கடுப்புடன்.
இவன் என்ன பேசுகிறான் என்று புரியாதவள், அதற்கும் மேலே அவனிடம் பேச்சு கொடுக்க விரும்பாமல் சாப்பிட வெளியே சென்று விட்டாள்.
அவள் அவனிடம் இதுவரையில் சாதாரணமாக பேசிய வார்த்தைகளை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால் தர்க்கம் செய்த வார்த்தைகளுக்கு கணக்கே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வேலை விஷயத்தில் மட்டும் தான் சரி என்று அவனோடு ஆமோதித்து செல்வாள். மற்ற விஷயங்களில் எல்லாம் தர்க்கம் மட்டுமே இருக்கும் அவர்களுக்கு இடையில்.
நாட்கள் நகர்ந்திருந்தன, பாதி கட்டிட வேலைகள் முடிந்திருந்தன. கட்டிடம் கட்ட வந்த காண்ட்ராக்டரிடம், இவன் வகுப்பறைகளில் டைல்ஸ் பதிக்க சொல்ல, இவளோ அது சரி வராது என்றாள்.
“ஏன் சரியா வராது, நம்ம ஸ்கூல்க்கு ஒரு ஸ்டாண்டர்ட் இருக்கு, அதை அதிகமாக்கனும்னா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நல்லா இருக்கணும்” என்றான்.
“சார் இது ஸ்கூல், ஷாப்பிங் மால் கிடையாது, படிக்கிறவங்க எல்லாம் சின்ன பிள்ளைங்க, எல்லாரும் ஷூ போட்டுட்டு வர்றவங்க, டைல்ஸ் போட்டு வச்சா லேசா தண்ணி கீழே சிந்தினா கூட வழுக்கும். அது பிள்ளைங்களுக்கு நல்லது இல்லை. ஸ்டாண்டர்ட்டை படிப்போட தரத்திலே காட்டனும், தரையிலே காட்ட கூடாது” என்று கூறி விட்டு சென்று விட்டாள்.
இவனுக்கு தான் கோபமாக வந்தது, மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டு நின்றவனை பார்த்த காண்ட்ராக்டர், “சார் மேடம் சொல்றது சரி தான்” என்றார்.
“அப்போ நான் சொல்றது தப்பா” என்றான் அவரிடம் முறைத்து கொண்டே.
“சார் வேணும்னா நாம ஒண்ணு செய்யலாம் தரைக்கு நல்ல பினிஷிங் கொடுக்கலாம், பார்க்க ஸ்மூத்தா, நான் ஸ்கிட்டா போடலாம்” “smooth and non skid” என்றார் அனுபவமிக்கவாராக.
“எப்படி பாத்ரூம் டைல்ஸ் மாதிரியா” என்றான் இவன் கோபம் குறையாமல்.
“அப்படி இல்லை சார்” என்று அவர் சொல்லிகொண்டிருக்கும்போதே, திரும்பி வந்திருந்த ரஞ்சனி, அவள் மொபைல் போனை அவனிடம் காட்டி, “இதை பாருங்க” என்று விட்டு கொடுத்து விட்டு சென்று விட்டாள்.
இவன் வாங்கி பார்க்க, அதில் பிள்ளைகளுக்கு வகுப்பறை அமைக்க ஏற்ற தரைதளம் எது என்று சில ஐடியாக்கள் இருந்தன. அதை எல்லாம் பார்வையிட்டவன் காண்ட்ராக்டரிடமும் அதை காட்டினான். அவரும் வாங்கி பார்க்க தனக்கு தோன்றிய ஐடியாக்களை கொடுத்தான். இருவரும் பேசி ஒரு சிறந்த முடிவை எடுத்த பின் அவர் சென்று விட்டார்.
அலுவலக அறைக்கு வந்தவனுக்கு அவன் தேர்வு சோடை போகவில்லை என்று இப்போதும் கொஞ்சம் பெருமையாகவே இருந்தது. அவள் எதிரே வந்து நின்றவன் “தாங்க்ஸ் போர் தி ஐடியா” என்றான்.
அவள் கண்டும் காணாமல் தன் வேலையை தொடர, “தாங்க்ஸ் சொன்னா பதில் சொல்லணும்ற மேனர்ஸ் கிடையாதா” என்றான் கோபமாக.
“நீங்க கொடுக்கிற சம்பளத்துக்கு, வேலை செய்யறேன் அதுக்கு தான் ஐடியா கொடுத்தேன், நீங்க சொல்ற தாங்க்ஸ் எனக்கு தேவையில்லை” என்றாள் வெடுக்கென்று.
“அதுவும் சரிதான், கடமையை செய்யறதுக்கு நன்றி எதுக்கு” என்று விட்டு சென்று விட்டான். அவளும் அவன் போனால் போதும் என்று வேலையை பார்க்க துவங்கினாள்.
பள்ளியில் புதிதாக கட்டிட வேலைகள் ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருந்தன. மறு பக்கம் அடுத்த கல்வி ஆண்டில் இருந்தே புதிதாக வகுப்புகள் இணைக்கப்படும் என்று அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட்டது. அது தொடர்பாக, தனி தனி பிரிவுகளில் ஆசிரியர்கள் தேர்வு, எங்கே புத்தகங்கள் வாங்குவது, எப்படி மாணவர்கள் சேர்க்கையை நடத்துவது என்றெல்லாம் பல வேலைகள் இருந்தன. இதில் தலைமை ஆசிரியை ராதாவையும் அவன் இணைத்து கொள்ள, பெரும்பாலும் இவள் கருத்தை கேட்கவும் செய்தான்.
பள்ளிக்கு புதிதாக கராத்தே, மார்ஷல் ஆர்ட் சொல்லிகொடுக்க மாஸ்டர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆண் பெண் பிள்ளைகள் யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம், இலவசமாக என்று அறிவித்தான். ஆனால் பள்ளி நேரம் முடிந்து பிறகு அரைமணி நேரம்.
பள்ளி நேரம் முடிந்து ஒரு மணி நேரம் என்றால் வீடு செல்ல தாமதமாகும் என்பதால் இவள் அபியை அந்த வகுப்பிற்கு அனுப்பவில்லை. அதற்கு நேரடியாகவே வந்து இவளிடம் சண்டையிட்டான்.
“ஏன் அபியை கராத்தே கிளாஸ்க்கு அனுப்பலை”
“எனக்கு விருப்பமில்லை சார்”
“உங்க விருப்பத்துக்கு தான் பிள்ளையை வளர்ப்பீங்களா, அவங்களுக்குன்னு ஒரு விருப்பம் இருக்க கூடாதா”
அவன் அப்படி கேட்டதும் வெடுக்கென நிமிர்ந்தவள், “என் பொண்ணுக்கு எது தேவைன்னு எனக்கு தெரியும் சார்” என்றாள்.
“ஆமா அப்படியே எல்லாம் தெரிஞ்ச மாதிரி தான்” அவன் நக்கலாக சொல்ல, இப்போ என்ன சார் சொல்ல வர்றீங்க” என்றாள் இவள்.
“ம்ம் குழந்தையை தைரியமா வளர்க்கணும், இப்படி பூட்டி பூட்டி வச்சா யாரை பார்த்தாலும் பயப்படத்தான் செய்வா, அம்மா போ” என்றான் இதழ் வளைத்து.
அவன் அப்படி கூறியதும் இவளுக்கு உள்ளே உறங்கும் எரிமலை வெடிக்க தயாரானது. “சார் நான் யாருக்கும் பயப்படலை. அதே போல நீங்க சொல்றதுக்கு எல்லாம் ஆடணும்னு எங்களுக்கு அவசியம் இல்லை. எங்களுக்கு சொந்த விருப்பு வெறுப்பு இருக்கு. வேண்டாம்னா விட்டுடுங்களேன்” என்றாள் முடிவாக.
அவள் அப்படி சொன்னதும் ஒரு நொடி அவளை நின்று பார்த்தவன், தோளை குலுக்கி விட்டு சென்று விட்டான்.
எத்தனை பேருக்கு தான் அவளும் பதில் சொல்வாள். ஏற்கனவே சிறிது நேரம் தாமதமாக வந்தாலும் மேலும் கீழுமாக அளந்து பார்த்து விட்டு முகத்தை திருப்பும் மாமியார், இப்போதெல்லாம் நொடிகள் தாமதத்திற்கு கூட எட்டு முழத்திற்கு முகத்தை நீட்டி கொள்கிறார். இதில் இவர் வேற ஒரு மணி நேரம் தாமதமாக போக வேண்டும் என்று கடுப்பேற்றிக்கொண்டு என்று தான் இருந்தது.