திங்கள் கிழமை அன்று காலை நேரம், மைதானத்தில் நபர்கள் குவிந்திருந்தனர். காவலர்கள் அந்த இடத்தைச் சுற்றிலும் ஆக்கிரமித்து இருந்தனர். அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து விடும் முனைப்பில், திரண்டு நின்ற மக்கள் கூட்டம் தங்களுக்கிடையே கிசுகிசுத்துக் கொண்டனர்.
அங்கு நடப்பதை உடனடியாகத் தங்களது தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கையின் மூலம் ஒளிபரப்புவதற்காக ரிப்போர்ட்டர்கள் அவசரப்பட்டனர்.
அந்த நேரம் தன்னுடைய வாகனத்திலிருந்து வேகமாக இறங்கி, தொப்பியை எடுத்து அணிந்து கொண்டு, லேசாக வளைந்த மீசையை விரலால் தேய்த்து விட்டு, கையில் இருந்த லாட்டியை சுழற்றிக் கொண்டே வந்து, இன்ஸ்பெக்டரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தான் திவாகர்!
"சார்! ஒரு பொண்ணோட டெட் பாடி மைதானத்தில் கிடைச்சிருப்பதா தகவல் வந்திருக்கு. நமக்குத் தகவல் தந்தவர் அதோ பச்சை கலரில் சட்டை போட்டுட்டு நாயுடன் நிற்பவர் தான்" என்றான் காந்தன்.
அவர் தலையை அசைத்துக் கொண்டு நேராகப் பெண்ணின் அருகில் சென்று ஒருமுறை பார்த்து விட்டு, நாயுடன் நின்றவர் அருகில் சென்றான்.
"சொல்லுங்க நீங்க யாரு? எப்போ இந்தப் பெண்ணோட பாடியை பார்த்தீங்க?"
"சார், நான் இந்த ரூட்ல வாக்கிங் போறது வழக்கம். அப்படித்தான் இன்னைக்கும் என் டேமியையும் அழைத்து வந்துட்டு இருந்தேன். அந்த நேரம் மைதானத்திலிருந்து ரத்த வாடை வீசியது தெரிந்ததால், டேமி கத்திக்கிட்டே அதை நோக்கி ஓடிப் போகப் பார்த்தது. நான் அதைப் பிடித்து இழுத்து வச்சிட்டு, என்னன்னு எட்டிப் பார்த்தப்போ தான் ஒரு பெண்ணோட உடல் கிடப்பது தெரிஞ்சது. உடனே என் ஃபோனில் இருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தேன். இன்ஸ்பெக்டர் சார் 'நான் வரும் வரை இதே இடத்தில் இருங்க. எங்கேயும் போயிடாதீங்க'ன்னு சொன்னதால், அவர் வரும்வரை காத்திருந்தேன்" என்று எதையும் மறைக்காமல் கூறினார்.
"சரி, நீங்க எத்தனை மணிக்கு இந்தப் பக்கமா வந்தீங்க?"
"சரியாக ஆறு மணி இருக்கும் சார்"
"ம்ம்... நீங்க வந்த நேரம் யாராவது அந்தப் பக்கமாக நிற்பது போலவோ, வாகனம் ஏதாவது தெரிஞ்சதா?"
"இல்லை சார், என்னைக்கும் யாராவது வந்து மைதானத்தில் விளையாடுவது ஓடுவதுன்னு இருப்பாங்க. இன்னைக்கு எந்தச் சத்தமும் இல்லை. ஒருவேளை நேத்து ஞாயிற்றுக்கிழமையா இருப்பதால் கூட இருக்கலாம்"
அந்தப் பகுதியில் சி.சி.டிவி கேமரா பதிவுகள் ஏதேனும் வைக்கப்பட்டு இருக்கிறதா என்பதைக் காந்தனிடம் பார்க்கச் சொல்லிவிட்டு, அந்த நபரின் கைப்பேசி எண்ணையும் பெற்றுக் கொண்டான் திவாகர். மேலும் சில நிமிடங்கள் தனக்குதித்த கேள்விகளையும் முன் வைத்தான்.
அதன் பிறகு அங்கு நின்றவர்களிடம் சற்று நேரம் விசாரணை மேற்கொண்டான். எந்தத் தகவலும் கிடைக்காமல் போனதும், ஏற்கனவே வரவழைக்கப்பட்டு இருந்த தடயவியல் நிபுணர்களிடம் அப்பெண்ணின் இறப்பு, உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள், சந்தேகப்படும் விதமாக கிடைக்கப்பட்டு உள்ள தடயங்கள் ... குறித்துப் பேசிக்கொண்டு இருந்தான்.
பின்னர் அந்தப் பெண்ணின் உடல் போஸ்ட்மார்ட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
யாராக இருக்கும் அந்தப் பெண்? எப்படி இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டாள்? அவளது உடலில் இருக்கும் காயங்களுக்கான காரணம் பாலியல் வன்கொடுமையா? அல்லது வழிப்பறி திருடர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கிறாளா? என்று யோசித்துக் கொண்டு காந்தனிடம் பேசியவன், தங்களை சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்களிடம் இருந்து விடுபட்டு வெளியே வருவதற்குள் பெரும் பாடுபட்டான்.
அங்கிருந்து நேராகக் காவல் நிலையத்திற்கு சென்றவன், மேலதிகாரியிடம் நடந்த விசயத்தைச் சொல்லி விட்டு, உடற்கூறாய்வு அறிக்கை எப்போது கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளவும், பெண்ணின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்கவும், மருத்துவரின் உதவியை நாடி, அவளைக் கொண்டு சென்றிருக்கும் அரசாங்க மருத்துவமனைக்குச் சென்றான்.
அதே நேரத்தில் இரவு நேரம் படம் பார்த்து விட்டு வந்து, விடிந்தது கூடத் தெரியாமல் அடித்துப் போட்டார் போல உறங்கிக் கொண்டிருந்தார்கள் தீபாவும் அகிலாவும்.
பள்ளிக்குச் செல்ல நேரமாகி விட்டதை சுவர் கடிகாரத்தில் பார்த்து விட்டு, தனது தோழிகளாகிய இருவரையும் திட்டிக் கொண்டிருந்தாள் மாதுரி!
"ஒரு நாளாவது காலையில் எழுந்து நேரத்துக்குப் புறப்படச் சொன்னா கேட்டால் தானே! ராத்திரி பன்னிரெண்டு மணி வரைக்கும் குலை நடுங்க பேய் படம் பார்த்து அராஜகம் பண்ணி, என்னையும் தூங்க விடாமல் செய்துட்டு, இப்போ விடிஞ்சது கூடத் தெரியாம குறட்டை விட்டுத் தூங்குவதை பாரு. முதல்ல இவங்க ரெண்டு பேரையும் வீட்டை விட்டுத் துரத்தணும். அப்பதான் நிம்மதியாக இருக்க முடியும்" என்று புலம்பினாள்.
மெதுவாக உறக்கம் கலைந்து கண்களைத் திறந்த அகிலா, "என்ன மாதுரி கண்ணு! காலையிலேயே எங்களைப் பற்றி ரொம்பவும் புகழ்ந்து பேசிட்டு இருக்கே?" என்று கேட்டாள்.
"இவங்க செய்கிற வேலைக்குப் புகழ்ந்து பேசுறது ஒண்ணு தான் குறை. நேரமாகுது எழுந்து போயி ரெடியாகி வாங்கடி. ஸ்கூலுக்குப் போகணும்"
"ஏன் மாதுரி மூணு கிழடு வயசாகப் போகுது. இன்னும் பள்ளிக்கூடத்திற்கு போயி என்ன செய்யப் போறே?"
அவள் கூந்தலைத் துவட்டிக் கொண்டிருந்த ஈர துவாலையை தூக்கி, அவள் மீது வீசியதும், எழுந்து வந்து மாதுரியை தோளோடு சேர்த்துக் கட்டிக் கொண்டாள் அகிலா.
"ச்சீ... ச்சீ! என்ன கண்றாவி இது? எத்தனை நாள் இப்படி பண்ணாதேன்னு சொல்லி இருக்கேன்! நான் சொன்னா ஒரு வார்த்தையாவது கேக்குறியாடி?" என்று அதட்டிக்கொண்டு தள்ளிச் சென்றாள் மாதுரி.
உடனே தீபா போர்வையால் தன்னை மூடிக்கொண்டு படுத்துக்கொள்ள, மாதுரி சமையலறைக்குச் சென்று தண்ணீரை எடுத்து வந்தாள். அகிலா, அவள் என்ன செய்யப் போகிறாள் என்று தெரிந்ததால், சிரிப்பை அடக்கியவாறு நின்று கொள்ள, போர்வைக்குள் முகத்தை மறைத்திருந்த தீபாவின் முகத்தில் அபிஷேகம் செய்தாள் மாதுரி.
"அச்சச்சோ!! மழை என் முகத்துல வந்து பெய்திருச்சு"
அகிலா கலகலவென நகைத்தவாறு, "இப்ப நீ எழுந்து போகல, இன்னும் கொஞ்ச நேரத்தில் ஐஸ்கட்டி மழை உன்மேல வரப் போகுது" என்று சொன்னாள்.
"எதேய்! ஐஸ்கட்டி மழையா?"
அவள் கேட்டுக் கொண்டே மேல் நோக்கிப் பார்த்தாள். பின்னர், மாதுரியின் கையில் இருப்பதைக் கண்டதும், அசடு வழிய எழுந்து அமர்ந்தாள்.
"ஓ! எல்லாம் நம்ம ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர் வேலை தானா?"
மாதுரி பதில் கூறாமல், புடவையை அணிந்துகொண்டு, இறைவழிபாட்டையும் முடித்து விட்டு வந்தாள்.
குளியலை முடித்து வெளியே வந்த அகிலா, டவ்வலை தோள் மீது போட்டுக் கொண்டே வந்து, "காலையிலேயே எங்க ரெண்டு பேருக்கும் அர்ச்சனை பண்ணியாச்சு. அப்படியே, கொஞ்சம் விபூதியையும் பூசி விடுவது தானே! என்று கிண்டலடித்தாள்.
"விபூதி மட்டும் பூசுனா போதாதுடி. வேப்பிலையும் எடுத்துட்டு வந்து உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து அடிக்கணும். அப்பத்தான் உங்களைப் பிடிச்சிருக்கும் பிசாசு தொலைந்து போகும்"
அவள் கடுப்புடன் உரைத்ததும், "சொல்லவே இல்லை ..." என்று மீண்டும் அவளை வம்புக்கு இழுத்தாள் அகிலா.
"வேணாம்டி. ஏற்கனவே நான் செம கடுப்புல இருக்கேன். நீ வேற இன்னும் ஏத்தி விடாதே!" என்று முறைத்தாள்.
"ஆமாண்டி, இவளை ஏத்தி விடாதே! பிறகு சாமியாட்டம் ஆடிட போறா. அப்புறமா பக்கத்துல இருக்குறவங்க எல்லாரும் வரிசையா அவகிட்டே கணக்கு கேட்க வந்துட போறாங்க ... பிறகு நம்ம பட்டர்பிளைஸ் எல்லாம் பார்க்கப் போறதுக்கு ரொம்ப லேட் ஆகிடும்" என்று கண்சிமிட்டினாள் தீபா.
மாதுரி முறைத்தவாறு, "ஸ்கூல் டீச்சர்னா கொஞ்சம் பொறுப்பாக இருங்கடி. ஏதோ இப்பதான் காலேஜிற்கு படிக்கப் போற மாதிரி நினைச்சுட்டு, ரொம்ப ஓவரா ஆட்டம் போடாதீங்க" என்று எச்சரித்தாள்.
"ஸ்கூல் டீச்சராக இருந்தாலும் நாங்களும் இன்னும் சிங்கிள் தான்பா. அதுக்குள்ளே எல்லாமே முடிஞ்சுட்ட மாதிரி ஃபீல் பண்ண வைக்காதே"
அவள் இதழ்களை வளைத்துக் கொண்டு, "சொல்லிட்டாலும் கேட்டுட்டு தானே மறுவேலை பார்ப்பீங்க ..." என்று விட்டு, "நான் எவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் கேட்காம, நேத்து என்னைத் தியேட்டருக்குப் படம் பார்க்க இழுத்துட்டு போயிட்டீங்க. அங்கிருந்து வீட்டுக்கு வந்து சேரும்போது பன்னிரெண்டு மணிக்கு மேல ஆகிருச்சு. வயசு பொண்ணுங்க இப்படித்தான் தனியா ராத்திரி நேரம் வெளியே போறதா? அந்த நேரம் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தா என்ன செய்றது? ஒரு வார்த்தை சொன்னாலும் கேட்கக் கூடாதுன்னு முடிவோடவே இருக்கீங்க" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் உரைத்தாள் மாதுரி.
"புதுசா ஒரு பேய் படம் தியேட்டருக்கு வந்தது. அதை ஈவினிங் ஷோவில் பார்த்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும் டிக்கெட் கிடைக்கல. சரி நைட்டாவது பார்த்துடணும். தியேட்டர்ல இருந்து மாறிட கூடாதுன்னு கஷ்டப்பட்டு கால் கடுக்க காத்திருந்து பார்த்துட்டு வந்தால், அதுக்குப் போயி இப்படி கோவிச்சுக்கிறியே?"
தனது பதிலும், முறைப்பான பார்வையும் இவர்களிடம் செல்லாது என்று புரியவும், அவள் பேசாமல் திரும்பிக்கொண்டாள்.
"ஆமாம். காலையில் என்ன டிபன் பண்ணி இருக்கே?"
தீபா கேட்டதும் மாதுரியின் அக்னி பார்வை அவளை எரித்து விடுவது போலப் பாய்ந்தது.
"நீங்க நேத்து ராத்திரி அடிச்ச கலாட்டாவில் என்னையும் தூங்க விடல. நானும் லேட்டா தான் எழுந்து புறப்பட்டேன். இதில் சமையல் செய்கிறதாவது... வேணுமா போயி சூடா செய்து சாப்பிட்டு வாங்க. இல்லையா, அதுவரை பட்டினி கிடந்துட்டு மதியம் கேண்டீன்ல சாப்பிடுங்க" என்று வீம்புடன் உரைத்தாள் மாதுரி.
மதியம் வரை பட்டினி கிடக்க வேண்டும் என்றதும் இருவரும் ஜகா வாங்கினார்கள்.
"மாதுரி! சாப்பாடு இல்லாமல் என்னால் இருக்க முடியாது மாதிரி... இப்பவே விரல் எல்லாம் நடுங்குது. கையெல்லாம் கிடுகிடுன்னு ஆடுது. கால் நிற்க முடியாமல் தள்ளாடுது. ஐயகோ! தலை எல்லாம் பாரமாக வலிக்குது மாதிரி..." என்று நடித்தாள் அகிலா.
"அடச்சீ போதும் நிறுத்து! எங்கப்பா எவ்வளவு ஆசையா மாதுரின்னு பெயர் வச்சா, அதை 'மாதிரி, மாதிரி!'ன்னு சொல்லி ஏலம் போடாதே?" என்று வசை பாடியதும், "நான் அப்பவே சொல்லலை. நம்ம மாதிரி ரொம்ப நல்லவள்! அவளுக்கு நம்ம மேல அம்புட்டு பாசம். பட்டினி எல்லாம் போட்டுக் கஷ்டப்படுத்த மாட்டா..." என்று பேச்சை மாற்றி ஐஸ் வைத்தாள் அகிலா.
இதழ்களுக்குள் சிரிப்பை மறைத்துக் கொண்டு, மதிய உணவை டிபன் பாக்ஸில் எடுத்துப் பேக்கிற்குள் வைத்த பின்பு, காலை உணவுடன் சென்று நாற்காலியில் அமர்ந்தாள் மாதுரி.
காலை உணவின் வாசனை உடைமாற்றிக் கொண்டிருந்த இருவரின் நாசியையும் சென்றடைந்தது. வயிறு கபகப எனப் பற்றி எரிந்தது. இதற்கு மேலும் முடியாது என்பது போல் டவ்வலை மேலே தூக்கிப் போட்டுக் கொண்டு ஓடிச் சென்றார்கள் இருவரும்.
அவர்களைப் பார்த்து நமட்டு சிரிப்புடன் அமர்ந்திருந்தாள் மாதுரி!
சற்று நேரத்தில் உணவை முடித்து வாய் அடித்தவாறு கீழே இறங்கி வந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வெளிப்பகுதியில் உள்ள மதில் சுவருக்கு அருகில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து இருந்தார் கைலாசம்.
அறுபதுகளை கடந்தும் வீட்டிலேயே சும்மா அடைந்து கிடக்க தோன்றாமல், வாட்ச்மேன் பணிபுரிந்து வருகின்ற மனிதர்!
பெண்கள் இருவரும் அவரைக் கண்டதும் வழக்கமாக வாயடிப்பது போல் அருகில் சென்றார்கள். ஆனால், பள்ளிக்குச் செல்ல நேரமாகிவிட்டதை அறிவுறுத்தி, அவர்களைப் பிடித்து இழுத்துக்கொண்டு செல்ல முயன்றாள் மாதுரி.
அவர்கள் விடாமல் அவரிடம் சென்று வம்பளந்து விட்டு வந்து, தங்களது ஸ்கூட்டியில் சென்று அமர்ந்தார்கள்.
போகும்போதும் சலசலத்துக் கொண்டே இருந்தார்கள். மாதுரி எதன் மீதும் நாட்டம் இல்லாமல் சாலையைப் பார்த்தவாறு இருந்தாள். அவளது குணாதிசயம் அவர்களுக்கும் தெரிந்ததால், அதை எல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள்.
மாதுரி அமைதியான குணமுடையவள். யாரிடமும் சென்று வலிய நட்பு பாராட்டமாட்டாள். கேட்பவரிடம் தேவைக்கு மீறிப் பேசவும் மாட்டாள்.
அகிலா, தீபா இருவரும் அவளுக்கு நேர் எதிர்ப்பதம் ஆனவர்கள். வாயைத் திறந்தால் மூடவே மாட்டார்கள். அவர்களுடன் தங்கி இருப்பதால்தானோ என்னவோ, மாதுரியும் இந்த அளவிற்கு மாறி இருக்கிறாள்.
அகிலா மற்றும் தீபாவின் பட்டர்பிளை இருவரும், சாலையில் அவர்களின் வரவை நோக்கிக் காத்திருந்து, இவர்களைக் கண்டவுடன் பின்னோக்கி வந்து அவர்களிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
மாதுரிக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லாவிட்டாலும், அவர்களின் தனிப்பட்ட விசயத்தில் தலையிடக் கூடாது என்பதால், அமைதியாகக் காட்டிக் கொண்டாள். காதலும் திருமணமும் அவரவர் வசதிக்கேற்ப செய்வது. அதில் சென்று தலையிடத் தனக்கு உரிமை இல்லை என்று திடமாகக் கருதினாள். அதேநேரம் தன் பின்னே யாராவது இதே நோக்கத்துடன் வருவது தெரிந்தால், அடுத்த கணமே சுட்டெரித்து விடுவாள்.
ஒன்பதரை மணியளவில் பள்ளி வளாகத்திற்குள் வந்து சேர்ந்தார்கள். அப்போது பள்ளி வளாகம் சுறுசுறுப்பாகக் காணப்பட்டது. என்னவாக இருக்கும் என்று தெரியாமல் விசாரித்தார்கள். அப்போது, பள்ளிக்குச் சிறப்பு விருந்தினர் வரப் போவது தெரிய வந்தது.
பள்ளிக்கூடமே பரபரப்பாக இருக்கும் அளவிற்கு, யார் வரப் போகிறார்கள்? என்று வியப்புடன் நோக்கினார்கள்.
எதிர்ப்பட்ட ஆசிரியரிடம் விசாரித்ததில், "நம்ம பள்ளிக்கூடம் கட்டி இருபத்து ஐந்து வருடம் ஆகிறதாம். அதைக் கொண்டாடும் விதமாக நடக்க போகும் விழாவில் பங்கேற்க, சீப் கெஸ்ட்டாக யாரோ வரப் போவதாகத் தகவல்" என்று தனக்குத் தெரிந்ததைக் கூறி விட்டுச் சென்றான்.
அப்படி யார் வரப் போகிறார்கள்? என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவர்களை உந்தியது. மேலும் அவனிடம் அது பற்றிக் கேட்கலாம் என்றால் அவன் சென்று விடவே, எப்படியும் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவான். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டார்கள்.
ஆசிரியர்களுக்குரிய ஓய்வு அறைக்குச் சென்று பேக்கை வைத்து விட்டு, வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு, சிறு முறுவலுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
சரியாகப் பத்து மணியளவில் வெளிநாட்டுக் கார் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது. அதிலிருந்து வாட்டசாட்டமாக இறங்கினான் சசிதரன்.
தலைமை ஆசிரியர் இராமமூர்த்தியை கண்டதும் இரு கரம் குவித்து வணங்கினான். அவரிடம் சற்று நேரம் பேசியவன், தனது கைகளைப் பேன்ட் பாக்கெட்டிற்குள் நுழைத்துக் கொண்டு வேகமாக நடந்து சென்றான்.
இறைவணக்கம் முடிந்ததும், ஆசிரிய ஆசிரியைகளிடம் அவனை அறிமுகப்படுத்தி வைத்தார்.
பெண்கள் இருவரும் அப்படி என்ன பெரிய அப்பா டக்கரா? வந்து விடப் போகிறார். இல்லை, டாட்டா பிர்லா வந்து விட்டாரா? என்று முனங்கிக் கொண்டே இருக்க, அவர்கள் முன்பு வந்து நின்றான் ஆறடி உயர ஆடவன்!
தங்கள் முன்பு தெரிந்தவனின் முகத்தைக் காணாததும், அவர்கள் தலையை உயர்த்திப் பார்க்க, சிரிப்பு என்றால் என்ன என்று தெரியாதது போல் அவன் நின்றான்.
பெண்கள் இருவரையும் அறிமுகப்படுத்தியதும் நகர்ந்து சென்றவன், "இவ்வளவு பேரும் தானா?" என்று கேட்டான்.
"இல்லை, இன்னும் ஒருவர் உண்டு"
"ஓ! அவங்க இன்னைக்கு ஆப்சென்டா?"
"நோ, நோ! மாதுரியை பற்றித் தெரியாம பேசுறீங்க. அவங்க டுயூட்டியில் சின்சியாரிட்டியாக உள்ளவர். விடுமுறை எல்லாம் எடுக்கவே மாட்டார்" என்று பெருமிதமாகச் சொன்னார் அவளை அந்தப் பள்ளிக் கூடத்தில் வேலைக்கு அமர்த்திய சாலமன்.
"சரிங்க சார். அப்போ ஏதாவது வேலையா போயிருக்கலாம். பிறகு, பார்த்துக்கலாம் ஒண்ணும் அவசரமில்லை" என்று சொல்லி விட்டு, புன் முகத்துடன் தலைமை ஆசிரியர் செங்கோடனின் அறைக்குள் புகுந்து நாற்காலியில் அமர்ந்தான்.
இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது, கதவைத் தட்டி அனுமதி கேட்ட பின், உள்ளே வந்தாள் மாதுரி.
"குட் மார்னிங் சார்! நீங்க வரச் சொன்னதா தீபா டீச்சர் சொன்னாங்க. என்ன விசயமா கூப்பிட்டீங்க தெரிஞ்சுக்கலாமா சார்?" என்று பணிவுடன் வினவினாள்.
"வாம்மா, நம்ம ஸ்கூலுக்கு ஒரு முக்கியமான நபர் வந்திருக்காங்க. அவங்களை உனக்கு அறிமுகப்படுத்தத்தான் வரச் சொன்னேன்" என்றார்.
அவள் வியப்புடன் பார்த்ததும், "இவர் தான் மிஸ்டர். சசிதரன்! நம்ம பள்ளி கூடத்தைக் கட்ட உதவிய ஆச்சாரியாரின் பேரன்" என்று சொன்னார்.
அவள் சிரித்த முகத்துடன் திரும்பிப் பார்த்து, தன்னையே நோக்கியவாறு இருக்கும் ஆடவனைக் கண்டதும் அதிர்ச்சியில் மூழ்கினாள்.
திங்கள் கிழமை அன்று காலை நேரம், மைதானத்தில் நபர்கள் குவிந்திருந்தனர். காவலர்கள் அந்த இடத்தைச் சுற்றிலும் ஆக்கிரமித்து இருந்தனர். அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து விடும் முனைப்பில், திரண்டு நின்ற மக்கள் கூட்டம் தங்களுக்கிடையே கிசுகிசுத்து கொண்டனர்.
அங்கு நடப்பதை உடனடியாகத் தங்களது தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கையின் மூலம் ஒளிபரப்புவதற்காக ரிப்போர்ட்டர்கள் அவசரப்பட்டனர்.
அந்த நேரம் தன்னுடைய வாகனத்திலிருந்து வேகமாக இறங்கி, தொப்பியை எடுத்து அணிந்து கொண்டு, லேசாக வளைந்த மீசையை விரலால் தேய்த்து விட்டு, கையில் இருந்த லாட்டியை சுழற்றிக் கொண்டே வந்து, இன்ஸ்பெக்டரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தான் திவாகர்!
"சார்! ஒரு பொண்ணோட டெட் பாடி மைதானத்தில் கிடைச்சிருப்பதா தகவல் வந்திருக்கு. நமக்குத் தகவல் தந்தவர் அதோ பச்சை கலரில் சட்டை போட்டுட்டு நாயுடன் நிற்பவர் தான்" என்றான் காந்தன்.
அவர் தலையை அசைத்துக் கொண்டு நேராகப் பெண்ணின் அருகில் சென்று ஒருமுறை பார்த்து விட்டு, நாயுடன் நின்றவர் அருகில் சென்றான்.
"சொல்லுங்க நீங்க யாரு? எப்போ இந்தப் பெண்ணோட பாடியை பார்த்தீங்க?"
"சார், நான் இந்த ரூட்ல வாக்கிங் போறது வழக்கம். அப்படித்தான் இன்னைக்கும் என் டேமியையும் அழைத்து வந்துட்டு இருந்தேன். அந்த நேரம் மைதானத்திலிருந்து ரத்த வாடை வீசியது தெரிந்ததால், டேமி கத்திக்கிட்டே அதை நோக்கி ஓடிப் போகப் பார்த்தது. நான் அதைப் பிடித்து இழுத்து வச்சிட்டு, என்னன்னு எட்டிப் பார்த்தப்போ தான் ஒரு பெண்ணோட உடல் கிடப்பது தெரிஞ்சுது. உடனே என் ஃபோனில் இருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தேன். இன்ஸ்பெக்டர் சார் 'நான் வரும் வரை இதே இடத்தில் இருங்க. எங்கேயும் போயிடாதீங்க'ன்னு சொன்னதால், அவர் வரும்வரை காத்திருந்தேன்" என்று எதையும் மறைக்காமல் கூறினார்.
"சரி, நீங்க எத்தனை மணிக்கு இந்தப் பக்கமா வந்தீங்க?"
"சரியாக ஆறு மணி இருக்கும் சார்"
"ம்ம்... நீங்க வந்த நேரம் யாராவது அந்தப் பக்கமாக நிற்பது போலவோ, வாகனம் ஏதாவது தெரிஞ்சதா?"
"இல்லை சார், என்னைக்கும் யாராவது வந்து மைதானத்தில் விளையாடுவது ஓடுவதுன்னு இருப்பாங்க. இன்னைக்கு எந்தச் சத்தமும் இல்லை. ஒருவேளை நேத்து ஞாயிற்றுக்கிழமையா இருப்பதால் கூட இருக்கலாம்"
அந்தப் பகுதியில் சி.சி.டிவி கேமரா பதிவுகள் ஏதேனும் வைக்கப்பட்டு இருக்கிறதா என்பதைக் காந்தனிடம் பார்க்கச் சொல்லிவிட்டு, அந்த நபரின் கைப்பேசி எண்ணையும் பெற்றுக் கொண்டான் திவாகர். மேலும் சில நிமிடங்கள் தனக்குதித்த கேள்விகளையும் முன் வைத்தான்.
அதன் பிறகு அங்கு நின்றவர்களிடம் சற்று நேரம் விசாரணை மேற்கொண்டான். எந்தத் தகவலும் கிடைக்காமல் போனதும், ஏற்கனவே வரவழைக்கப்பட்டு இருந்த தடயவியல் நிபுணர்களிடம் அப்பெண்ணின் இறப்பு, உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள், சந்தேகப்படும் விதமாக கிடைக்கப்பட்டு உள்ள தடயங்கள் ... குறித்துப் பேசிக்கொண்டு இருந்தான்.
பின்னர் அந்தப் பெண்ணின் உடல் போஸ்ட்மார்ட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
யாராக இருக்கும் அந்தப் பெண்? எப்படி இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டாள்? அவளது உடலில் இருக்கும் காயங்களுக்கான காரணம் பாலியல் வன்கொடுமையா? அல்லது வழிப்பறி திருடர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கிறாளா? என்று யோசித்துக் கொண்டு காந்தனிடம் பேசியவன், தங்களை சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்களிடம் இருந்து விடுபட்டு வெளியே வருவதற்குள் பெரும் பாடுபட்டான்.
அங்கிருந்து நேராகக் காவல் நிலையத்திற்கு சென்றவன், மேலதிகாரியிடம் நடந்த விசயத்தைச் சொல்லி விட்டு, உடற்கூறாய்வு அறிக்கை எப்போது கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளவும், பெண்ணின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்கவும், மருத்துவரின் உதவியை நாடி, அவளைக் கொண்டு சென்றிருக்கும் அரசாங்க மருத்துவமனைக்குச் சென்றான்.
அதே நேரத்தில் இரவு நேரம் படம் பார்த்து விட்டு வந்து, விடிந்தது கூடத் தெரியாமல் அடித்துப் போட்டார் போல உறங்கிக் கொண்டிருந்தார்கள் தீபாவும் அகிலாவும்.
பள்ளிக்குச் செல்ல நேரமாகி விட்டதை சுவர் கடிகாரத்தில் பார்த்து விட்டு, தனது தோழிகளாகிய இருவரையும் திட்டிக் கொண்டிருந்தாள் மாதுரி!
"ஒரு நாளாவது காலையில் எழுந்து நேரத்துக்குப் புறப்படச் சொன்னா கேட்டால் தானே! ராத்திரி பன்னிரெண்டு மணி வரைக்கும் குலை நடுங்க பேய் படம் பார்த்து அராஜகம் பண்ணி, என்னையும் தூங்க விடாமல் செய்துட்டு, இப்போ விடிஞ்சது கூடத் தெரியாம குறட்டை விட்டுத் தூங்குவதை பாரு. முதல்ல இவங்க ரெண்டு பேரையும் வீட்டை விட்டுத் துரத்தணும். அப்பதான் நிம்மதியாக இருக்க முடியும்" என்று புலம்பினாள்.
மெதுவாக உறக்கம் கலைந்து கண்களைத் திறந்த அகிலா, "என்ன மாதுரி கண்ணு! காலையிலேயே எங்களைப் பற்றி ரொம்பவும் புகழ்ந்து பேசிட்டு இருக்கே?" என்று கேட்டாள்.
"இவங்க செய்கிற வேலைக்குப் புகழ்ந்து பேசுறது ஒண்ணு தான் குறை. நேரமாகுது எழுந்து போயி ரெடியாகி வாங்கடி. ஸ்கூலுக்குப் போகணும்"
"ஏன் மாதுரி மூணு கிழடு வயசாகப் போகுது. இன்னும் பள்ளிக்கூடத்திற்கு போயி என்ன செய்யப் போறே?"
அவள் கூந்தலைத் துவட்டிக் கொண்டிருந்த ஈர துவாலையை தூக்கி, அவள் மீது வீசியதும், எழுந்து வந்து மாதுரியை தோளோடு சேர்த்துக் கட்டிக் கொண்டாள் அகிலா.
"ச்சீ... ச்சீ! என்ன கண்றாவி இது? எத்தனை நாள் இப்படி பண்ணாதேன்னு சொல்லி இருக்கேன்! நான் சொன்னா ஒரு வார்த்தையாவது கேக்குறியாடி?" என்று அதட்டிக்கொண்டு தள்ளிச் சென்றாள் மாதுரி.
உடனே தீபா போர்வையால் தன்னை மூடிக்கொண்டு படுத்துக்கொள்ள, மாதுரி சமையலறைக்குச் சென்று தண்ணீரை எடுத்து வந்தாள். அகிலா, அவள் என்ன செய்யப் போகிறாள் என்று தெரிந்ததால், சிரிப்பை அடக்கியவாறு நின்று கொள்ள, போர்வைக்குள் முகத்தை மறைத்திருந்த தீபாவின் முகத்தில் அபிஷேகம் செய்தாள் மாதுரி.
"அச்சச்சோ!! மழை என் முகத்துல வந்து பெய்திருச்சு"
அகிலா கலகலவென நகைத்தவாறு, "இப்ப நீ எழுந்து போகல, இன்னும் கொஞ்ச நேரத்தில் ஐஸ்கட்டி மழை உன்மேல வரப் போகுது" என்று சொன்னாள்.
"எதேய்! ஐஸ்கட்டி மழையா?"
அவள் கேட்டுக் கொண்டே மேல் நோக்கிப் பார்த்தாள். பின்னர், மாதுரியின் கையில் இருப்பதைக் கண்டதும், அசடு வழிய எழுந்து அமர்ந்தாள்.
"ஓ! எல்லாம் நம்ம ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர் வேலை தானா?"
மாதுரி பதில் கூறாமல், புடவையை அணிந்துகொண்டு, இறைவழிபாட்டையும் முடித்து விட்டு வந்தாள்.
குளியலை முடித்து வெளியே வந்த அகிலா, டவ்வலை தோள் மீது போட்டுக் கொண்டே வந்து, "காலையிலேயே எங்க ரெண்டு பேருக்கும் அர்ச்சனை பண்ணியாச்சு. அப்படியே, கொஞ்சம் விபூதியையும் பூசி விடுவது தானே! என்று கிண்டலடித்தாள்.
"விபூதி மட்டும் பூசுனா போதாதுடி. வேப்பிலையும் எடுத்துட்டு வந்து உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து அடிக்கணும். அப்பத்தான் உங்களைப் பிடிச்சிருக்கும் பிசாசு தொலைந்து போகும்"
அவள் கடுப்புடன் உரைத்ததும், "சொல்லவே இல்லை ..." என்று மீண்டும் அவளை வம்புக்கு இழுத்தாள் அகிலா.
"வேணாம்டி. ஏற்கனவே நான் செம கடுப்புல இருக்கேன். நீ வேற இன்னும் ஏத்தி விடாதே!" என்று முறைத்தாள்.
"ஆமாண்டி, இவளை ஏத்தி விடாதே! பிறகு சாமியாட்டம் ஆடிட போறா. அப்புறமா பக்கத்துல இருக்குறவங்க எல்லாரும் வரிசையா அவகிட்டே கணக்கு கேட்க வந்துட போறாங்க ... பிறகு நம்ம பட்டர்பிளைஸ் எல்லாம் பார்க்கப் போறதுக்கு ரொம்ப லேட் ஆகிடும்" என்று கண்சிமிட்டினாள் தீபா.
மாதுரி முறைத்தவாறு, "ஸ்கூல் டீச்சர்னா கொஞ்சம் பொறுப்பாக இருங்கடி. ஏதோ இப்பதான் காலேஜிற்கு படிக்கப் போற மாதிரி நினைச்சுட்டு, ரொம்ப ஓவரா ஆட்டம் போடாதீங்க" என்று எச்சரித்தாள்.
"ஸ்கூல் டீச்சராக இருந்தாலும் நாங்களும் இன்னும் சிங்கிள் தான்பா. அதுக்குள்ளே எல்லாமே முடிஞ்சுட்ட மாதிரி ஃபீல் பண்ண வைக்காதே"
அவள் இதழ்களை வளைத்துக் கொண்டு, "சொல்லிட்டாலும் கேட்டுட்டு தானே மறுவேலை பார்ப்பீங்க ..." என்று விட்டு, "நான் எவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் கேட்காம, நேத்து என்னைத் தியேட்டருக்குப் படம் பார்க்க இழுத்துட்டு போயிட்டீங்க. அங்கிருந்து வீட்டுக்கு வந்து சேரும்போது பன்னிரெண்டு மணிக்கு மேல ஆகிருச்சு. வயசு பொண்ணுங்க இப்படித்தான் தனியா ராத்திரி நேரம் வெளியே போறதா? அந்த நேரம் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தா என்ன செய்றது? ஒரு வார்த்தை சொன்னாலும் கேட்கக் கூடாதுன்னு முடிவோடவே இருக்கீங்க" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் உரைத்தாள் மாதுரி.
"புதுசா ஒரு பேய் படம் தியேட்டருக்கு வந்தது. அதை ஈவினிங் ஷோவில் பார்த்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும் டிக்கெட் கிடைக்கல. சரி நைட்டாவது பார்த்துடணும். தியேட்டர்ல இருந்து மாறிட கூடாதுன்னு கஷ்டப்பட்டு கால் கடுக்க காத்திருந்து பார்த்துட்டு வந்தால், அதுக்குப் போயி இப்படி கோவிச்சுக்கிறியே?"
தனது பதிலும், முறைப்பான பார்வையும் இவர்களிடம் செல்லாது என்று புரியவும், அவள் பேசாமல் திரும்பிக்கொண்டாள்.
"ஆமாம். காலையில் என்ன டிபன் பண்ணி இருக்கே?"
தீபா கேட்டதும் மாதுரியின் அக்னி பார்வை அவளை எரித்து விடுவது போலப் பாய்ந்தது.
"நீங்க நேத்து ராத்திரி அடிச்ச கலாட்டாவில் என்னையும் தூங்க விடல. நானும் லேட்டா தான் எழுந்து புறப்பட்டேன். இதில் சமையல் செய்கிறதாவது... வேணுமா போயி சூடா செய்து சாப்பிட்டு வாங்க. இல்லையா, அதுவரை பட்டினி கிடந்துட்டு மதியம் கேண்டீன்ல சாப்பிடுங்க" என்று வீம்புடன் உரைத்தாள் மாதுரி.
மதியம் வரை பட்டினி கிடக்க வேண்டும் என்றதும் இருவரும் ஜகா வாங்கினார்கள்.
"மாதுரி! சாப்பாடு இல்லாமல் என்னால் இருக்க முடியாது மாதிரி... இப்பவே விரல் எல்லாம் நடுங்குது. கையெல்லாம் கிடுகிடுன்னு ஆடுது. கால் நிற்க முடியாமல் தள்ளாடுது. ஐயகோ! தலை எல்லாம் பாரமாக வலிக்குது மாதிரி..." என்று நடித்தாள் அகிலா.
"அடச்சீ போதும் நிறுத்து! எங்கப்பா எவ்வளவு ஆசையா மாதுரின்னு பெயர் வச்சா, அதை 'மாதிரி, மாதிரி!'ன்னு சொல்லி ஏலம் போடாதே?" என்று வசை பாடியதும், "நான் அப்பவே சொல்லலை. நம்ம மாதிரி ரொம்ப நல்லவள்! அவளுக்கு நம்ம மேல அம்புட்டு பாசம். பட்டினி எல்லாம் போட்டுக் கஷ்டப்படுத்த மாட்டா..." என்று பேச்சை மாற்றி ஐஸ் வைத்தாள் அகிலா.
இதழ்களுக்குள் சிரிப்பை மறைத்துக் கொண்டு, மதிய உணவை டிபன் பாக்ஸில் எடுத்துப் பேக்கிற்குள் வைத்த பின்பு, காலை உணவுடன் சென்று நாற்காலியில் அமர்ந்தாள் மாதுரி.
காலை உணவின் வாசனை உடைமாற்றிக் கொண்டிருந்த இருவரின் நாசியையும் சென்றடைந்தது. வயிறு கபகப எனப் பற்றி எரிந்தது. இதற்கு மேலும் முடியாது என்பது போல் டவ்வலை மேலே தூக்கிப் போட்டுக் கொண்டு ஓடிச் சென்றார்கள் இருவரும்.
அவர்களைப் பார்த்து நமட்டு சிரிப்புடன் அமர்ந்திருந்தாள் மாதுரி!
சற்று நேரத்தில் உணவை முடித்து வாய் அடித்தவாறு கீழே இறங்கி வந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வெளிப்பகுதியில் உள்ள மதில் சுவருக்கு அருகில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து இருந்தார் கைலாசம்.
அறுபதுகளை கடந்தும் வீட்டிலேயே சும்மா அடைந்து கிடக்க தோன்றாமல், வாட்ச்மேன் பணிபுரிந்து வருகின்ற மனிதர்!
பெண்கள் இருவரும் அவரைக் கண்டதும் வழக்கமாக வாயடிப்பது போல் அருகில் சென்றார்கள். ஆனால், பள்ளிக்குச் செல்ல நேரமாகிவிட்டதை அறிவுறுத்தி, அவர்களைப் பிடித்து இழுத்துக்கொண்டு செல்ல முயன்றாள் மாதுரி.
அவர்கள் விடாமல் அவரிடம் சென்று வம்பளந்து விட்டு வந்து, தங்களது ஸ்கூட்டியில் சென்று அமர்ந்தார்கள்.
போகும்போதும் சலசலத்துக் கொண்டே இருந்தார்கள். மாதுரி எதன் மீதும் நாட்டம் இல்லாமல் சாலையைப் பார்த்தவாறு இருந்தாள். அவளது குணாதிசயம் அவர்களுக்கும் தெரிந்ததால், அதை எல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள்.
மாதுரி அமைதியான குணமுடையவள். யாரிடமும் சென்று வலிய நட்பு பாராட்டமாட்டாள். கேட்பவரிடம் தேவைக்கு மீறிப் பேசவும் மாட்டாள்.
அகிலா, தீபா இருவரும் அவளுக்கு நேர் எதிர்ப்பதம் ஆனவர்கள். வாயைத் திறந்தால் மூடவே மாட்டார்கள். அவர்களுடன் தங்கி இருப்பதால்தானோ என்னவோ, மாதுரியும் இந்த அளவிற்கு மாறி இருக்கிறாள்.
அகிலா மற்றும் தீபாவின் பட்டர்பிளை இருவரும், சாலையில் அவர்களின் வரவை நோக்கிக் காத்திருந்து, இவர்களைக் கண்டவுடன் பின்னோக்கி வந்து அவர்களிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
மாதுரிக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லாவிட்டாலும், அவர்களின் தனிப்பட்ட விசயத்தில் தலையிடக் கூடாது என்பதால், அமைதியாகக் காட்டிக் கொண்டாள். காதலும் திருமணமும் அவரவர் வசதிக்கேற்ப செய்வது. அதில் சென்று தலையிடத் தனக்கு உரிமை இல்லை என்று திடமாகக் கருதினாள். அதேநேரம் தன் பின்னே யாராவது இதே நோக்கத்துடன் வருவது தெரிந்தால், அடுத்த கணமே சுட்டெரித்து விடுவாள்.
ஒன்பதே முக்கால் மணி அளவில் சரியாகப் பள்ளி வளாகத்திற்குள் வந்தார்கள். அங்கிருந்த உடற்கல்வி ஆசிரியர் அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டான்.
"இவரைச் சைட் அடிச்சு பின்னாடியே அலைய விட்டுருக்கணும்டி. அதை விட்டு விலகிப் போனால் அவர் நம்மைப் பார்த்து முறைச்சுட்டு இருக்கார்"
தீபா கூறியதும், "உடற்கல்வி ஆசிரியராக இருந்தால், உடம்பு முழுக்க கொழுப்பும், முரட்டுத்தனமும் இருக்கணுமாடி? எப்போ பாரு விரைப்பாகவே இருக்கார்" என்று அகிலா சொன்னாள்.
அவர்கள் இருவரையும் பேசாமல் இருங்கள் என்று அடக்கினாள் மாதுரி.
"உன்னை மாதிரி சைலன்டா இருக்க முடியாது. நீ தான் எதிலுமே நாட்டம் இல்லாத சாமியார் ஆகிடுச்சே!"
அகிலா கூறியதும், தீபா சாமியாரைப் போல நடித்துக் காட்ட, உடற்கல்வி ஆசிரியர் இவர்கள் திருந்தமாட்டார்கள் என்பது போல ஒதுங்கிச் சென்று விட்டான்.
அதைக் கண்டு மாதவிக்கு சிரிப்பே வந்துவிட்டது. அவன் சடாரென்று திரும்பிப் பார்த்தான். அவள் தெரியாதது போல அலுவலக அறையை நோக்கி நடந்தாள்.
"நான் ஒரு பட்டர்பிளையை பார்க்குறேன். தீபா ஒரு பட்டர்பிளையை பார்க்குறா... அப்படின்னா போலீஸ்மேன் மாதிரி கம்பை கையில் தூக்கிட்டு சுத்தும் இந்த மேன், எதுக்கு இப்படி அடிக்கடி உத்து உத்து பார்க்குது? சம்திங்... சம்திங்!" என்று நெற்றியை தட்டினாள்.
அகிலா கூறியதும், "அவர் ஒண்ணும் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லையாம். இந்தப் பள்ளிக்கூடத்தை உருவாக்கியவரின் உறவினராம். ஏதோ வேலை விசயமா இங்கு வந்திருப்பதா, பிரின்ஸிபால் சொன்னார்" என்றாள் தீபா.
மாதுரி அவர்களின் பேச்சு காதில் விழாதது போல சென்று விட்டாள்.
அதன் பிறகு காலை நேரம் அனைவரும் இறை வணக்கத்தை முடித்துவிட்டு, தங்களது வகுப்பறைக்குச் சென்றார்கள்.
அப்போது தூரத்திலிருந்த அவனது பார்வை அவர்கள் மீதிலேயே இருந்தது.
மதிய உணவு நேரம் மூவருமாக அமர்ந்து கேண்டினில் உண்டு கொண்டிருந்தார்கள். பின்னர் மாலை நேரம் வழக்கம் போல, அவர்கள் மூவரும் வசித்து வரும் வீட்டிற்குச் சென்றார்கள்.
இரவு நேரம் பால்கனி வழியாக வந்த புகையிலை வாசனை நாசியை துளைத்தது. கைலாசம் புகைப்பிடிப்பாராக இருக்கும் என்று அவர்கள் கருதினார்கள். அகிலாவும், தீபாவும் உணவை முடித்துத் தொலைக்காட்சியில் மூழ்கி இருக்க, மாதுரி கைப்பேசியுடன் வெளியே வந்து, யாருக்கோ அழைப்பு விடுத்தாள்.
கண்களில் நீர் வழிய அமர்ந்து இருந்தவள், எதிர்பக்கம் கேட்ட குரலிலும், அதன் மென்மையிலும் தனது உணர்வுகளை அடக்க முடியாமல் திண்டாடினாள்.
அரை மணி நேரத்திற்கு மேலாகப் பேசிவிட்டு, மனமற்று அழைப்பைத் துண்டித்தாள். கைப்பேசியை மார்பில் வைத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்லவும் தோன்றாமல், ஓசையற்று விம்மினாள்.
நேரம் செல்லச் செல்ல அழுகை அதிகரித்ததே அன்றி குறையவில்லை. 'தனக்கு மட்டும் ஏன் இப்படியொரு பிறவியை ஆண்டவர் தந்தார்? அந்த அளவிற்குத் தான் செய்த பாவமென்ன? எதுவுமே இல்லாமல் தனி மரமாக இருக்கும் விதமாகி விட்டதே!' என்று தேம்பினாள்.
அப்போது இரு வலிய கரங்கள், அவளது தோள் மீது படிந்தன. அழுகையினூடு நிமிர்ந்து பார்த்த மாதுரி, விரல்களுக்கு சொந்தக்காரனை கண்டதும், ஆத்திரம் தாளாமல் பார்வையால் அவனை எரித்தாள்.