தலைப்பொங்கல் | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தலைப்பொங்கல்

New updates

LATEST

hema

Active member
Staff member
Joined
Jun 27, 2024
Messages
75
Reaction score
67
Points
43
தலைப்பொங்கல்

உடல் அடித்துப் போட்டது போல அலுப்பாக இருந்தாலும், மனது
உற்சாகமாய் ஊ… ல…லா பாடிக்கொண்டிருந்தது கீர்த்தனாவிற்கு.

“அத்தை கோலம் சும்மா சூப்பரா இருக்குல்ல?” எனத் தன்னைத் தானே மெச்சிக் கொண்டு பொங்கலுக்காக வாசலில் தான் போட்டக் கோலத்தை ரசித்தவாறே கேட்டாள், தன் மாமியார் பூங்கோதையிடம்.

“ம், ரொம்ப நல்லாயிருக்கு மா”

“சரி, நேரமாகுது போய் கொஞ்ச நேரம் தூங்கு. விடிகாலையில நிறைநாழி வெக்கணும் மா. நீயே வந்து வை.”

கொஞ்சம் சலிப்பாக இருந்தாலும் ஒன்றும் பேசுவதற்கில்லை, “சரிங்கத்தை” என்று தனது அறைக்குள்
புகுந்து கொண்டாள் கீர்த்தனா.

கோலம் எந்தளவு அழகாயிருந்ததோ அந்தளவு தொடை வலியும் பின்னியெடுத்தது.

படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை. அருகில் கணவன் ராஜேஷ் சலனமில்லாமல் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தான்.

விடிஞ்சா தலைப்பொங்கல், முதல் முதலாக பெற்றோர்களோடும், தங்கையோடும் அல்லாமல் கொண்டாடப்
போகிற பொங்கல்.

ஒரு பக்கம் அவர்களை, எது எக்கேடு கெட்டாலும் பொங்கலன்று ஒன்றாய்க் கூடிவிடுகிற பெரியப்பா, சித்தப்பா அவர்தம் குடும்பங்களை, அப்படி அனைவருமாகக் கூடி அதுவரை குலதெய்வக் கோயிலில் பொங்கல் கொண்டாடிய பூர்விக கிராமத்தைத் தேடி மனது அலைமோத,

இன்னொரு பக்கம் கணவனோடு கொண்டாடவிருக்கிற முதல் பொங்கலை நினைத்து மகிழ்வும், வித்தியாசமான குறுகுறுப்பும் எனக் கலவையான மனநிலையில் இருந்தது அவள் மனது.

‘சின்ன வயசுல, இல்ல இல்ல போன வருஷம் வரைக்கும் கூட தடிமாடு மாதிரி
ஜாலியா உக்காந்துட்டு இருந்தோம்.
ஏதாவது டவலை கையில் எடுத்துகிட்டு
சும்மா எதையாவது தொடச்சு தரேன்னு
உடம்பு குலுங்காம வேலை செய்கிறேன்னு கெடந்தோமே’ என்று இப்போது நினைக்கையில் கீர்த்தனாவிற்கு அது சற்றே உறுத்தலாக இருந்தது.

“சும்மா வீட்ல தானே இருக்க, காலேஜ் போயிட்டு வந்து டயர்டா இருக்கு மா. நீயே செய்” என்று பொங்கல் நேரத்தில் கூட அம்மாவிற்கு உதவாமல் போனது, திருமதி கீர்த்தனாவிற்கு எதுவோ செய்தது.

இதோ இங்கேயோ இன்று மாலை வேப்பிலை, பீளைப்பூ, மாவிலை, ஆவாரம்பூ என எல்லாம் வைத்து வீட்டு முற்றத்தில் காப்பு கட்டி முடிக்கும் வரையிலும் எத்தனை வேலைகள்.

“இந்தக் காப்பு கட்டுவது எதுக்காக தெரியுமா கீர்த்தனா?”

“அது… அது…சரியா தெரியலயே அத்தை”

“இது எல்லாமே அற்புதமான கிருமிநாசினி மா. வேப்பிலையை இயற்கையாகவே நாம் நிறைய விடயங்களுக்குப் பயன்படுத்துவோம்.

மார்கழி முடிந்து தை ஆரம்பிக்கையில வெயிலும் குளிரும் கலந்த நிலையா இருக்கும். அம்மை நோய் வராம தடுக்கும்.

இந்தப் பீளைப்பூ வீட்டுக்குள்ள விஷப் பூச்சி வராமல் தடுக்கும். பொதுவா தையில அறுவடை முடிஞ்சி இருக்கும் இல்லையா, அப்போ தேளு பாம்புன்னு ஏதாவது விஷ ஜந்துக்கள் வயலுக்குள்ள இருந்து வீட்டுக்குள்ள வருவதுக்கு வாய்ப்பு இருக்கு, அதைத் தடுக்கத் தான் இந்தப் பீளைப்பூ.

இந்த மாவிலையும், வேப்பிலையும் நிறைய ஆக்சிஜனை வெளியிடக் கூடியது. போகி நேரத்துல கண்டதைப் போட்டு எரிச்சிட்டு காத்துல கார்பன் டை ஆக்சைடு சுத்திட்டு கிடக்கும். அதை சுத்திகரிச்சு நமக்கு நிறைய ஆக்சிஜனை கொடுக்கிறதுக்கு தான் இதுங்க. இப்படி நிறைய காரணங்கள் இருக்குமா.

பெரியவங்க எதையும் காரணம் இல்லாம செய்யலை மா. நமக்குத் தான் அது புரியல”

“ஓ… சூப்பர், இதுல இவ்வளோ விஷயம் இருக்கா அத்தை.”

“உங்க ஃபோன்ல தான் எதைக் கேட்டாலும் பதில் சொல்லுமாமே. 24 மணி நேரமும் கையிலயே வெச்சுக்கிட்டு தேச்சுக்கிட்டே இருக்கீங்க. என்னத்த பார்ப்பீங்களோ? இந்த மாதிரி விசயத்தைலாம் தேட மாட்டீங்களே”

இது போலவே, எல்லாமும் ஆரம்பத்திலிருந்தே பழக்கிவிட வேண்டுமென, வீட்டையே தலைகீழாய் கவிழ்த்து மொத்த வேலைகளையும் பூங்கோதை அவளையே ஏவ, சொன்னதைச் செய்யும் வாயில்லாப் பூச்சியானாள்.

அவளின் அம்மா வீட்டில் பரணில் இருக்கிற சாமான்கள், பீரோவில் இருக்கிற துணிகளையெல்லாம் தரம் பிரித்து, கழித்து கட்டி விடுவதோடு சரி.
இங்கே எல்லாவற்றையும் கழுவி கவிழ்த்து, துவைத்து அலசியென
இடுப்பு ஒடிந்தது.

‘ஏற்கனவே துவைத்து மடித்து வைத்ததை திருப்பி எதுக்கு துவைக்கணும்?’ என நினைத்ததை கேட்க முடியவில்லை அவளுக்கு.

எதை எதையோ நினைத்தபடி ஒரு அரைமணி நேரம் தூங்கியிருப்பாள்.
கதவு தட்டும் ஓசை கேட்க, எழுந்து திறந்தாள்.

மணியைப் பார்த்தாள் அதிகாலை 3.30ல் நேரங்காட்டியின் முட்கள் ஒய்யாரமாய் படுத்திருந்தது. ‘நடுராத்திரி… ஆண்டவா’
என நினைத்துக்கொண்டு நிற்கையில்,

“குளிச்சிட்டு வந்து நிறைநாழி வை கீர்த்தனா.” என்று பூங்கோதை உத்தரவிட
கண்ணில் தூக்கம் வழிய, கால் தொடைகளோ வலிக்கிறது கொஞ்சம் உட்காரேன் எனக் கெஞ்சியது.
அச்சோ வருசா வருசம் சும்மா கலரடிச்சு
அம்மாவை தனியா தவிக்க விட்டேனே பொங்கலுக்கு.

அப்போது தான் ஒன்று நினைவுக்கு வந்தது அவளுக்கு. “போற வீட்ல செய்யணும்ல, என் மானத்தை வாங்கிடாதடி” என மற்ற அம்மாக்களைப் போல அவர் என்றுமே ஒருமுறை கூடச் சொல்லியதில்லை.

“கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடி”ன்னு தான் கேப்பாங்க. ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக் கொண்டால் தானே.

ஒரு வழியாய்க் குளித்து முடித்து, கீழே போய் குத்துவிளக்கை எடுத்து எண்ணெய் ஊற்றி, ஒரே ஒரு திரியிட்டு
நிலைவாசல் பக்கத்தில் வைத்துவிட்டு, இரண்டு வாழைப்பழமும் அதில் இரண்டு பத்திகளும் செருகி, வெற்றிலைப் பாக்கையும் விளக்கின் அடியில் வைத்துவிட்டு,

பெரிய பித்தளை படியில் பொங்கல் வைக்கும் பச்சரிசியை நிரப்பி, அதில் சிறுக்குணிக்கியைச் செருகி தேங்காயை அதன் மீது சாய்த்து வைத்து, அதையும் நிலை வாசலில் வைத்து, பூங்கோதை ஒவ்வொன்றாய்ச் சொல்ல எல்லாம் செய்து முடித்து விளக்கை ஏற்றினாள்.

“சரி அத்தை, அவ்ளோ தானே கொஞ்ச நேரம் தூங்கிட்டு அப்புறமா பொங்கல் வைக்கலாம்” என்றபடியே அகலப் போனவளை,

“கீர்த்தனா எங்க போற, நான் இப்போவே பொங்கலுக்கு உலை வச்சிடுவேன்.”

“எது இப்பவே வா?” என்று மலைத்தவளை

“ஆமா, இருட்டுலயே அடுப்பு பத்த வச்சுட்டா நல்ல நேரம் பாக்கணும்னு அவசியம் இல்லை‌, அதான்” என்றபடியே அடுப்படிக்குள் போனதும்,

‘இது என்ன புதுக்கதையா இருக்கு?’ என நினைத்தவளுக்கு, எப்போதோ எதிலோ படித்த ஒரு விடயம் நினைவுக்கு வந்தது.

அதாவது திருமணம் என்பது ஒரே சமூகத்தில் செய்யப்படுவதன் காரணம், பெண்களுக்கு போகும் வீட்டில் பழக்கவழக்கங்கள், சாத்திர, சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதில்
சிக்கல்கள் தவிர்ப்பதற்காகவே என்பது தான் அது.

‘ஒரே சமூகம் தான் என்றாலும், நம்ம பிறந்தவீட்டு வழக்கமும், புகுந்த வீட்டு வழக்கமும் வேறு வேறாகத் தானே இருக்கிறது’ எனக் குழம்பினாள்.

“ஓ… சரிங்கத்தை எனக்குத் தெரியாது.
சரி சொல்லுங்க என்ன செய்யணும்” என்று மாமியாரோடு பொங்கல் வைப்பதற்குக் களமிறங்கினாள்.

அப்படியே “இந்த நிறைநாழி எதுக்கு வைக்கிறோம்? அதுக்கு என்ன காரணம் அத்தை?” என்ற கேட்டுக் கொண்டே வேலைகளை ஆரம்பித்தாள்.

“அதுவா அறுவடை முடிஞ்சவுடனே நெல்லை அல்லது அரிசியை முதல்ல நாழியில தான் நிறைய கொட்டி வைப்பாங்க. தானியம் நல்ல திரட்சியா இருந்தா சரிஞ்சு விழாதுன்னு எங்க பாட்டி சொல்லும். அப்புறம் காத்துல இருக்க ஈரப்பதத்தை இந்த அரிசி எவ்ளோ கிரகிக்குதுன்னு பார்ப்பாங்களாம். அதை வெச்சு இந்த அரிசியை நீண்ட காலம் சேமிச்சு வைக்க முடியுமான்னு கண்டுபிடிப்பாங்களாம். இது அந்தத் தானியங்களோட தரத்தை கண்டுபிடிக்கிறதுக்கான ஒரு டெக்னிக்கா இருந்திருக்கு”

“நம்ம வீட்டுல இப்படி வாசலில் வைக்கிறது, உள்ள நுழைஞ்சவுடனே ஒரு பாத்திரம் நிறைய நம்மக்கிட்ட அரிசி இருக்கு, நமக்கு இந்த வருசம் பஞ்சம் இல்லை, நல்லா இருப்போம்னு ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தத் தான்.
நிறை அப்படினாலே முழுமையை குறிக்கிறது தானே”

இப்படி நிறைய விடயங்களைப் பேசிக்கொண்டே, அவர்கள்
எல்லாம் செய்து முடிக்க மணி பத்தாகி இருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது, “அத்தை பசிக்குது” எனவும்

“இதோ 12மணிக்கு சாமி கும்பிட்டு, சாப்பிடலாம் மா” என்றதும்

“எதே?” என்று கத்தியே விட்டாள்.

“கீர்த்தனா நீ இன்னும் சின்னப் பிள்ளை கிடையாது. கல்யாணம் ஆகிடுச்சு, பொறுப்பா இரு” என்றதும்,

அவள் அடுத்து வாயே திறக்கவில்லை.

ராஜேஷ் குளித்து முடித்து கீழே வந்து “ஹாப்பி தலைப்பொங்கல் பொண்டாட்டி” என்று கை நீட்டினான்.

“சேம் டூ யூ” என்று மென்மையாகச் சிரித்தாள்.

“டேய் ராஜேஷ், மேல பரண்ல கரும்பு போட்டு வச்சோம்ல, அதை எடுடா.” என்றதும்

“சரிம்மா” என்று அவன் கரும்பு கட்டை
இறக்கினான்.

தை மாதம் வந்தாலே அவளுக்கு கரும்பு தான் முதலில் நினைவு வரும். ஒரு நேர உணவுக்குப் பதில் கொள்ளைப் பிரியமாய் கரும்பையே சாப்பிடுபவள் அவள்.

ஆனால் இங்கு இப்போது வரையும், கரும்பைப் பார்க்கவேயில்லை.
சென்ற வாரத்தில் அவளின் பிறந்தகத்தில் இருந்து வைத்த பொங்கல் சீரில் கரும்பை ஆசையாய் எடுக்கப் போனவளிடம் இதைக் கொண்டு தான் சாமி கும்பிடணும் என
அவளின் மாமனார் கூறிவிட, சிறுபிள்ளையாய் கூம்பிவிட்டாள்.

“சரி, வேற வாங்கியாவது தரலாம்ல?” என ராஜேஷைக் கேட்டாள்.

வாங்கித் தரேன் என வாய் தான் சொன்னது, வெளியே போனவன் திரும்பி வருகையில் மறந்து விட்டேன் என்பான்.

கீர்த்தனாவிற்கு கோவமாகத் தான் வரும். ‘ச்சீ கரும்பு திங்கற ஆசையே குடும்பமா சேர்ந்து அழிச்சிடுவாங்க போல’ என்று சத்தமாக சண்டையிட்டாள்,
கணவனிடம் அல்ல தனக்குள்ளாகவே…

அந்தக் கரும்புக் கட்டைப் பார்த்து விட்டு ராஜேஷையும் ஒரு பார்வை பார்க்க, அசடு வழிந்தான்.

“இன்னிக்கு சாப்பிடலாம்” என்றான்.

எங்கிருந்தோ அவளின் அலைபேசி இசைத்து அவளை அழைக்க, போய் எடுத்தாள்.

அவளின் தாய் தான்.

“ஹலோ அம்மா!”

ஏனோ அவளின் குரல் தழுதழுப்பது போல் இருந்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

“ஹாப்பி தலைப் பொங்கல்டி தங்கம்”

“தாங்க்ஸ் மா.”

“என்ன வேலையெல்லாம் முடிஞ்சுதா?
சாமி எப்போ கும்பிடுவீங்க?”

“வேலை முடிஞ்சுதும்மா. 12 மணிக்கு கும்பிடுவாங்களாம். நீ என்ன பண்ற?
கோயிலுக்குப் போயிட்டியா?”

“ம் முன்னாடியே வந்துட்டோம். நம்ம வீட்டுல எல்லா பொம்பளை பிள்ளைங்களும் கல்யாணம் ஆகிப் போயிட்டீங்க. கொஞ்சம் வெறிச்சுன்னு தோணுது.”

“மிஸ் யூ மா” என்றவள், தன் தாயை நலம் விசாரித்தாள்.

“ம்மா, உடம்புலாம் நல்லாயிருக்கா? வேலை நிறைய இருந்திருக்கும்ல?”

“அட வாடி என் குடும்ப இஸ்திரி. வேலை நிறைய இருக்கும்னு தெரிஞ்சு வச்சிருக்கியா? பரவாயில்லையே” என்று அவரோ அவளைச் சீண்டினார்.

“போம்மா, அங்கே கோயில்ல ஊரே சேர்ந்து ஒரே பானையில செய்யும் பொங்கல், எல்லாரும் உறவுகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து சிரிச்சு பேசி, நாங்கலாம் அங்க வயல்ல ஓடி ஆடி விளையாடி, கரும்பு சாப்பிட்டு, நிறைய பாட்டெல்லாம் மைக் செட் போட்டு ஓடவிட, அதுக்கும் தோப்புக்குள்ள நாங்க டான்ஸ் ஆடி அது ஒரு மாதிரி போகும்.”

“இங்க யாருமே இல்ல. நாங்க மட்டும் தான், வேற என்ன எப்படின்னு இனி தான் பார்க்கப் போறேன்.” என்று பேசிக்கொண்டிருந்தவளை, பூங்கோதையின் குரல் அழைக்கவும்

“சரிம்மா பார்க்கலாம்” என்று வைத்து விட்டாள்.

“சாமிக்கிட்ட எல்லாம் ரெடி பண்ணணும். சொல்லச் சொல்ல செய்மா” எனக் கட்டளைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

புதிதாக குடும்பப் பொறுப்பில் இறங்கியவளுக்கு கொஞ்சம் சோர்வாகவே இருந்தது. பசி பசி… என
வயிறு கத்திக் கொண்டிருந்ததை உதாசினம் செய்துவிட்டு ஓடுவதற்கு சிரமப்பட்டுத் தான் போனாள்.

ஒரு தாம்பாளத்தில் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், கரும்பு, தேங்காய், பழம், இத்யாதி இத்யாதிகளை நிரப்பி
மொட்டை மாடிக்குப் போகும்படி அறிவுறுத்த, போனவளின் பின்னாலயே
பூஜைக்குத் தேவையான மற்ற பொருட்களை எடுத்துக் கொண்டு குடும்பத்தினரும் மொட்டை மாடிக்கு
வந்தனர்.

அங்கு அவர்கள் நால்வர் மட்டும், அனைத்தையும் வைத்து சூரியனை
நோக்கி வழிபடத் தொடங்கினர்.

‘இனி இது தான், இப்படித் தான் நமது பொங்கலா’ என நினைத்தவளுக்கு
ஊரில் ஒன்றுகூடி கொண்டாடும் அந்தப்
பொங்கல் தூரமாய் இவளைப் பார்த்து சிரித்தது.

“ஏன் அத்தை, இங்க நம்ம வீட்டுல குலதெய்வக் கோயிலுக்குப் போய்லாம் பொங்கல் கொண்டாட மாட்டோமா?”

“இல்ல மா. அப்படி இங்கு வழக்கம் கிடையாது. மாடியில கும்பிட்டு, கீழ நம்ம முன்னோர்களுக்குத் துணி எடுத்து வெச்சு படையல் போடுவோம்‌” என்றார் பூங்கோதை.

“ஓ… சரி”

“சரி கீழே போய் கும்பிடணும், எல்லாம் எடுத்துட்டு போலாம் வாங்க” என்றபடியே
சாமான்களை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினர்.

கீழேயும் சாமி கும்பிட்டு முடித்ததும், நால்வரும் சாப்பிட அமர்ந்தனர்.
மிகுந்த பசியினாலோ என்னவோ அவளால் மிகுதியாய் சாப்பிட இயலவில்லை. கொஞ்சம் சாப்பிட்டு எழுந்து விட்டாள்.

பூங்கோதைக்கே கொஞ்சம் பாவமாக போய்விட்டது. அவரும் பின்னாடியே எழுந்து போனார்.

“என்ன கீர்த்தனா, இங்க நம்ம வீட்டுப் பொங்கல் எப்படி?”

“ஆங், நல்லா இருந்துச்சு அத்தை. முக்கியமா எது செய்தாலும் அதை ஏன் செய்யறோம்ணு உங்களுக்குத் தெரிஞ்ச விவரங்களை சொல்லிக் கொடுத்து, நானும் அதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்.”

“ஆனா…” என அவள் இழுக்க, இத்தனை வருசமும் திருவிழா மாதிரி எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கூட்டமா பொங்கல் கொண்டாடினோமா, இங்கு யாரும் இல்லாம நம்ம நாலு பேரு மட்டும் இருக்கறது தான் ஒரு மாதிரி வித்தியாசமா தெரியிது”

“என்ன பண்றது? இங்க இதான் வழக்கம்.
நம்ம பொம்பளைங்களுக்கு ஆரம்பத்துல இது ஒரு பெரிய போராட்டாமாவே இருக்கும். பிறந்த வீட்டு வழக்கத்தை விடவும் முடியாம, இங்க ஒட்டவும் முடியாமன்னு. ஆனால் பெண்கள் நாம ஏத்துக்கத் தானே வேணும். போகப் போக சரியாயிடும் கீர்த்தனா.”

“சரி, சாமி தான் கும்பிட்டோமே, நீ வேணும்னா ராஜேஷோட கெளம்பி
உங்க வீட்டுக்குப் போயி ரெண்டு நாள் எல்லாரோடையும் இருந்திட்டு வரியா?”
எனக் கேட்கவும்,

“ப்ச், அத்தை உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? சொன்னா அடிச்சிடாதீங்க
தலை தீபாவளி மாதிரியே தலைப்பொங்கலுக்கும் அம்மா வீட்டுல தான் ஜாலியா இருப்போம்னு நெனச்சேன். பட் இட்ஸ் சோ சேட்” என வருத்தமாய் அவள் நெற்றியில் கை வைத்துக் கொள்வது போல பாவனை செய்தாள்.

“ஓஹோ! பட் இட்ஸ் யுவர் மிஸ்டேக் மருமகளே” எனச் சிரித்தார்.

அப்போது ராஜேஷ் கரும்பை துண்டுகளாக்கி எடுத்து வந்து கீர்த்தனாவிடம் தர,

“கேட்டப்பலாம் நீங்க வாங்கி தந்தீங்களா?” அவள் கோபமாய்
அந்தக் கரும்பாலயே அவனை அடிக்க ஓங்க, அவன் ஓட, இவள் துரத்த
கால்கள் ஒத்துழைக்கவில்லை. தொடையைப் பிடித்து அமர்ந்து விட்டாள்.

மீண்டும் திரும்பி வந்தவன், “சாரிடி நிஜமாகவே மறந்து தொலைச்சிடுவேன். இங்க யாரும் விரும்பி சாப்பிட மாட்டோமா. பொங்கல் நேரத்துல மட்டும் வாங்குவோம். அதான் நெனப்பே வரலை. இனிமே நெனப்பு வச்சுக்கிறேன்” என்றவன் ஒரு சிறிய கப்பை நீட்டினான்.

அதில் சட்டென்று எடுத்து வாயில் போட்டு எடுத்து உண்ணும் விதமாக, குட்டிக் குட்டி துண்டுகளாய் கரும்பு வெட்டி வைக்கப்பட்டிருந்தது.

“ஹாப்பி ஹாப்பி தலைப்பொங்கல்” என
ஒரு துண்டை வாயில் ஊட்டிவிட, பதிலுக்கு இவளும் ஊட்டிவிட, கீர்த்தனாவின் தலைப்பொங்கல்
நிறைந்திருந்தது.

அதே மகிழ்வோடு “அம்மா வீட்டுக்கு கூட்டிட்டுப் போறீங்களா?” என் அவள் கேட்க,

“ஓ, போகலாமே” என்றான் ராஜேஷ். இருவருமாய் கீர்த்தனாவின் அம்மா வீட்டுக்குப் புறப்படத் தயாராகினர்.

*****
 
MRS BEENA LOGANATHAN

Well-known member
Staff member
Joined
May 14, 2024
Messages
1,035
Reaction score
710
Points
113
பிறந்த வீட்டில்
பாதி பெண்கள்
பெற்றவர்களுக்கு உதவி
செய்வது இல்லை
புகுந்த வீட்டில்
பறந்து பறந்து
வேலை செய்கிறோம்....

பொங்கல் விழா கொண்டாட்டத்தை
பிரமாதமாக கூறிவிட்டீர்கள்.....
அருமை 👏🏻👏🏻👍🏻💐🤩🤩
 
Banurekabaskar

New member
Joined
Jan 27, 2026
Messages
25
Reaction score
22
Points
3
பிறந்த வீடு இளவரசிகள் புகுந்த வீட்டில் மகாராணிகளாக ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்
 
ராஜேஷ்கருப்பையா

Well-known member
Staff member
Joined
Aug 24, 2025
Messages
664
Reaction score
462
Points
63
Age
44
நல்ல கதை முன்னாள் மாமியார்கள் அவர்கள் குடும்ப வழக்கத்தை சொல்லிக் கொடுத்த விதம் வேலை வாங்கிய விதம் என்று அழகாக இருந்தது ஆயிரம் தான் பொங்கல் எவ்வளவு கிராண்டா கொண்டாடினாலும் அவங்க அவங்க தாய் வீட்டுல கொண்டாடுதல் பொங்கல மறக்க முடியாமல் தவிக்கிறார் பொண்ணு சூப்பர்
 
Joined
Jun 8, 2024
Messages
253
Reaction score
123

👌👌👌👌
 
hema

Active member
Staff member
Joined
Jun 27, 2024
Messages
75
Reaction score
67
Points
43
நல்ல கதை முன்னாள் மாமியார்கள் அவர்கள் குடும்ப வழக்கத்தை சொல்லிக் கொடுத்த விதம் வேலை வாங்கிய விதம் என்று அழகாக இருந்தது ஆயிரம் தான் பொங்கல் எவ்வளவு கிராண்டா கொண்டாடினாலும் அவங்க அவங்க தாய் வீட்டுல கொண்டாடுதல் பொங்கல மறக்க முடியாமல் தவிக்கிறார் பொண்ணு சூப்பர்
மிக்க மகிழ்ச்சி நன்றிங்க சகோ🥰
பிறந்த வீடு இளவரசிகள் புகுந்த வீட்டில் மகாராணிகளாக ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்
ஆமாம், மிக்க நன்றிங்க சகோதரி 🥰
 
Samundeeswari

New member
Joined
Jun 27, 2024
Messages
9
Reaction score
5

புதிதாக குடும்பப் பொறுப்பில் இறங்கியவளுக்கு கொஞ்சம் சோர்வாகவே இருந்தது. பசி பசி... என
வயிறு கத்திக் கொண்டிருந்ததை உதாசினம் செய்துவிட்டு ஓடுவதற்கு சிரமப்பட்டுத் தான் போனாள்.

ஒரு தாம்பாளத்தில் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், கரும்பு, தேங்காய், பழம், இத்யாதி இத்யாதிகளை நிரப்பி
மொட்டை மாடிக்குப் போகும்படி அறிவுறுத்த, போனவளின் பின்னாலயே
பூஜைக்குத் தேவையான மற்ற பொருட்களை எடுத்துக் கொண்டு குடும்பத்தினரும் மொட்டை மாடிக்கு
வந்தனர்.

அங்கு அவர்கள் நால்வர் மட்டும், அனைத்தையும் வைத்து சூரியனை
நோக்கி வழிபடத் தொடங்கினர்.

'இனி இது தான், இப்படித் தான் நமது பொங்கலா' என நினைத்தவளுக்கு
ஊரில் ஒன்றுகூடி கொண்டாடும் அந்தப்
பொங்கல் தூரமாய் இவளைப் பார்த்து சிரித்தது.

“ஏன் அத்தை, இங்க நம்ம வீட்டுல குலதெய்வக் கோயிலுக்குப் போய்லாம் பொங்கல் கொண்டாட மாட்டோமா?”

“இல்ல மா. அப்படி இங்கு வழக்கம் கிடையாது. மாடியில கும்பிட்டு, கீழ நம்ம முன்னோர்களுக்குத் துணி எடுத்து வெச்சு படையல் போடுவோம்” என்றார் பூங்கோதை.

“ஓ… சரி”

“சரி கீழே போய் கும்பிடணும், எல்லாம் எடுத்துட்டு போலாம் வாங்க” என்றபடியே
சாமான்களை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினர்.

கீழேயும் சாமி கும்பிட்டு முடித்ததும், நால்வரும் சாப்பிட அமர்ந்தனர்.
மிகுந்த பசியினாலோ என்னவோ அவளால் மிகுதியாய் சாப்பிட இயலவில்லை. கொஞ்சம் சாப்பிட்டு எழுந்து விட்டாள்.

பூங்கோதைக்கே கொஞ்சம் பாவமாக போய்விட்டது. அவரும் பின்னாடியே எழுந்து போனார்.

“என்ன கீர்த்தனா, இங்க நம்ம வீட்டுப் பொங்கல் எப்படி?”

“ஆங், நல்லா இருந்துச்சு அத்தை.முக்கியமா எது செய்தாலும் அதை ஏன் செய்யறோம்னு உங்களுக்கு தெரிஞ்ச விவரங்களை சொல்லிக் கொடுங்க, நானும் அதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்.”

“ஆனா...” என அவள் இழுக்க, இத்தனை வருசமும் திருவிழா மாதிரி எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கூட்டமா பொங்கல் கொண்டாடினோமா, இங்க யாரும் இல்லாம நம்ம நாலு பேரு மட்டும் இருக்கறது தான் ஒரு மாதிரி வித்தியாசமா தெரியிது”

“என்ன பண்றது?இங்க இதுதான் வழக்கம்.
நம்ம பொம்பளைங்களுக்கு ஆரம்பத்துல இது ஒரு பெரிய போராட்டமாவே இருக்கும். பிறந்த வீட்டு வழக்கத்தை விடவும் முடியாம, இங்க ஓட்டவும் முடியாமன்னு. ஆனால் பெண்கள் நாம ஏத்துக்கத் தானே வேணும். போகப் போக சரியாயிடும் கீர்த்தனா.”

“சரி, சாமி தான் கும்பிட்டோமே, நீ வேணும்னா ராஜேஷோட கெளம்பி
உங்க வீட்டுக்குப் போயி ரெண்டு நாள் எல்லாரோடையும் இருந்துட்டு வரியா?”
எனக் கேட்கவும்,

“ப்ச், அத்தை உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?சொன்னா அடிச்சிடாதீங்க
தலை தீபாவளி மாதிரியே தலைப்பொங்கலுக்கும் அம்மா வீட்டுல தான் ஜாலியா இருப்போம்னு நெனச்சேன். பட் இட்ஸ் சோ சேட்” என வருத்தமாய் அவள் நெற்றியில் கை வைத்து கொள்வது போல பாவனை செய்தாள்.

“ஓஹோ! பட் இட்ஸ் யுவர் மிஸ்டேக் மருமகளே” எனச் சிரித்தார்.

அப்போது ராஜேஷ் கரும்பை துண்டுகளாக்கி எடுத்து வந்து கீர்த்தனாவிடம் தர,

“கேட்டப்பலாம் நீங்க வாங்கி தந்தீங்களா?” அவள் கோபமாய்
அந்தக் கரும்பாலையே அவனை அடிக்க ஓங்க, அவன் ஓட, இவள் துரத்த
கால்கள் ஒத்துழைக்கவில்லை. தொடையைப் பிடித்து அமர்ந்து விட்டாள்.

மீண்டும் திரும்பி வந்தவன், “சாரிடி நிஜமாகவே மறந்து தொலைச்சிடுவேன். இங்க யாரும் விரும்பி சாப்பிட மாட்டோமா. பொங்கல் நேரத்துல மட்டும் வாங்குவோம். நெனப்பே வரலை. இனிமே நெனப்பு வச்சுக்கிறேன்” என்றவன் ஒரு சிறிய கப்பை நீட்டினான்.

அதில் சட்டென்று எடுத்து வாயில் போட்டு எடுத்து உண்ணும் விதமாக, குட்டிக் குட்டி துண்டுகளாய் கரும்பு வெட்டி வைக்கப்பட்டிருந்தது.

“ஹாப்பி ஹாப்பி தலைப்பொங்கல்” என
ஒரு துண்டை வாயில் ஊட்டிவிட, பதிலுக்கு இவ்வளவு ஊட்டிவிட, கீர்த்தனாவின் தலைப்பொங்கல்
நிறைந்திருந்தது.

அதே மகிழ்வோடு “அம்மா வீட்டுக்கு கூட்டிட்டுப் போறீங்களா?” என் அவள் கேட்க,

“ஓ, போகலாமே” என்றான் ராஜேஷ். இருவருமாய் கீர்த்தனாவின் அம்மா வீட்டுக்குப் புறப்படத் தயாராகினர்.

******
 
Samundeeswari

New member
Joined
Jun 27, 2024
Messages
9
Reaction score
5
Points
3
தலைப்பொங்கல்

உடல் அடித்துப் போட்டது போல அலுப்பாக இருந்தாலும், மனது
உற்சாகமாய் ஊ… ல…லா பாடிக்கொண்டிருந்தது கீர்த்தனாவிற்கு.

“அத்தை கோலம் சும்மா சூப்பரா இருக்குல்ல?” எனத் தன்னைத் தானே மெச்சிக் கொண்டு பொங்கலுக்காக வாசலில் தான் போட்டக் கோலத்தை ரசித்தவாறே கேட்டாள், தன் மாமியார் பூங்கோதையிடம்.

“ம், ரொம்ப நல்லாயிருக்கு மா”

“சரி, நேரமாகுது போய் கொஞ்ச நேரம் தூங்கு. விடிகாலையில நிறைநாழி வெக்கணும் மா. நீயே வந்து வை.”

கொஞ்சம் சலிப்பாக இருந்தாலும் ஒன்றும் பேசுவதற்கில்லை, “சரிங்கத்தை” என்று தனது அறைக்குள்
புகுந்து கொண்டாள் கீர்த்தனா.

கோலம் எந்தளவு அழகாயிருந்ததோ அந்தளவு தொடை வலியும் பின்னியெடுத்தது.

படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை. அருகில் கணவன் ராஜேஷ் சலனமில்லாமல் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தான்.

விடிஞ்சா தலைப்பொங்கல், முதல் முதலாக பெற்றோர்களோடும், தங்கையோடும் அல்லாமல் கொண்டாடப்
போகிற பொங்கல்.

ஒரு பக்கம் அவர்களை, எது எக்கேடு கெட்டாலும் பொங்கலன்று ஒன்றாய்க் கூடிவிடுகிற பெரியப்பா, சித்தப்பா அவர்தம் குடும்பங்களை, அப்படி அனைவருமாகக் கூடி அதுவரை குலதெய்வக் கோயிலில் பொங்கல் கொண்டாடிய பூர்விக கிராமத்தைத் தேடி மனது அலைமோத,

இன்னொரு பக்கம் கணவனோடு கொண்டாடவிருக்கிற முதல் பொங்கலை நினைத்து மகிழ்வும், வித்தியாசமான குறுகுறுப்பும் எனக் கலவையான மனநிலையில் இருந்தது அவள் மனது.

‘சின்ன வயசுல, இல்ல இல்ல போன வருஷம் வரைக்கும் கூட தடிமாடு மாதிரி
ஜாலியா உக்காந்துட்டு இருந்தோம்.
ஏதாவது டவலை கையில் எடுத்துகிட்டு
சும்மா எதையாவது தொடச்சு தரேன்னு
உடம்பு குலுங்காம வேலை செய்கிறேன்னு கெடந்தோமே’ என்று இப்போது நினைக்கையில் கீர்த்தனாவிற்கு அது சற்றே உறுத்தலாக இருந்தது.

“சும்மா வீட்ல தானே இருக்க, காலேஜ் போயிட்டு வந்து டயர்டா இருக்கு மா. நீயே செய்” என்று பொங்கல் நேரத்தில் கூட அம்மாவிற்கு உதவாமல் போனது, திருமதி கீர்த்தனாவிற்கு எதுவோ செய்தது.

இதோ இங்கேயோ இன்று மாலை வேப்பிலை, பீளைப்பூ, மாவிலை, ஆவாரம்பூ என எல்லாம் வைத்து வீட்டு முற்றத்தில் காப்பு கட்டி முடிக்கும் வரையிலும் எத்தனை வேலைகள்.

“இந்தக் காப்பு கட்டுவது எதுக்காக தெரியுமா கீர்த்தனா?”

“அது… அது…சரியா தெரியலயே அத்தை”

“இது எல்லாமே அற்புதமான கிருமிநாசினி மா. வேப்பிலையை இயற்கையாகவே நாம் நிறைய விடயங்களுக்குப் பயன்படுத்துவோம்.

மார்கழி முடிந்து தை ஆரம்பிக்கையில வெயிலும் குளிரும் கலந்த நிலையா இருக்கும். அம்மை நோய் வராம தடுக்கும்.

இந்தப் பீளைப்பூ வீட்டுக்குள்ள விஷப் பூச்சி வராமல் தடுக்கும். பொதுவா தையில அறுவடை முடிஞ்சி இருக்கும் இல்லையா, அப்போ தேளு பாம்புன்னு ஏதாவது விஷ ஜந்துக்கள் வயலுக்குள்ள இருந்து வீட்டுக்குள்ள வருவதுக்கு வாய்ப்பு இருக்கு, அதைத் தடுக்கத் தான் இந்தப் பீளைப்பூ.

இந்த மாவிலையும், வேப்பிலையும் நிறைய ஆக்சிஜனை வெளியிடக் கூடியது. போகி நேரத்துல கண்டதைப் போட்டு எரிச்சிட்டு காத்துல கார்பன் டை ஆக்சைடு சுத்திட்டு கிடக்கும். அதை சுத்திகரிச்சு நமக்கு நிறைய ஆக்சிஜனை கொடுக்கிறதுக்கு தான் இதுங்க. இப்படி நிறைய காரணங்கள் இருக்குமா.

பெரியவங்க எதையும் காரணம் இல்லாம செய்யலை மா. நமக்குத் தான் அது புரியல”

“ஓ… சூப்பர், இதுல இவ்வளோ விஷயம் இருக்கா அத்தை.”

“உங்க ஃபோன்ல தான் எதைக் கேட்டாலும் பதில் சொல்லுமாமே. 24 மணி நேரமும் கையிலயே வெச்சுக்கிட்டு தேச்சுக்கிட்டே இருக்கீங்க. என்னத்த பார்ப்பீங்களோ? இந்த மாதிரி விசயத்தைலாம் தேட மாட்டீங்களே”

இது போலவே, எல்லாமும் ஆரம்பத்திலிருந்தே பழக்கிவிட வேண்டுமென, வீட்டையே தலைகீழாய் கவிழ்த்து மொத்த வேலைகளையும் பூங்கோதை அவளையே ஏவ, சொன்னதைச் செய்யும் வாயில்லாப் பூச்சியானாள்.

அவளின் அம்மா வீட்டில் பரணில் இருக்கிற சாமான்கள், பீரோவில் இருக்கிற துணிகளையெல்லாம் தரம் பிரித்து, கழித்து கட்டி விடுவதோடு சரி.
இங்கே எல்லாவற்றையும் கழுவி கவிழ்த்து, துவைத்து அலசியென
இடுப்பு ஒடிந்தது.

‘ஏற்கனவே துவைத்து மடித்து வைத்ததை திருப்பி எதுக்கு துவைக்கணும்?’ என நினைத்ததை கேட்க முடியவில்லை அவளுக்கு.

எதை எதையோ நினைத்தபடி ஒரு அரைமணி நேரம் தூங்கியிருப்பாள்.
கதவு தட்டும் ஓசை கேட்க, எழுந்து திறந்தாள்.

மணியைப் பார்த்தாள் அதிகாலை 3.30ல் நேரங்காட்டியின் முட்கள் ஒய்யாரமாய் படுத்திருந்தது. ‘நடுராத்திரி… ஆண்டவா’
என நினைத்துக்கொண்டு நிற்கையில்,

“குளிச்சிட்டு வந்து நிறைநாழி வை கீர்த்தனா.” என்று பூங்கோதை உத்தரவிட
கண்ணில் தூக்கம் வழிய, கால் தொடைகளோ வலிக்கிறது கொஞ்சம் உட்காரேன் எனக் கெஞ்சியது.
அச்சோ வருசா வருசம் சும்மா கலரடிச்சு
அம்மாவை தனியா தவிக்க விட்டேனே பொங்கலுக்கு.

அப்போது தான் ஒன்று நினைவுக்கு வந்தது அவளுக்கு. “போற வீட்ல செய்யணும்ல, என் மானத்தை வாங்கிடாதடி” என மற்ற அம்மாக்களைப் போல அவர் என்றுமே ஒருமுறை கூடச் சொல்லியதில்லை.

“கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடி”ன்னு தான் கேப்பாங்க. ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக் கொண்டால் தானே.

ஒரு வழியாய்க் குளித்து முடித்து, கீழே போய் குத்துவிளக்கை எடுத்து எண்ணெய் ஊற்றி, ஒரே ஒரு திரியிட்டு
நிலைவாசல் பக்கத்தில் வைத்துவிட்டு, இரண்டு வாழைப்பழமும் அதில் இரண்டு பத்திகளும் செருகி, வெற்றிலைப் பாக்கையும் விளக்கின் அடியில் வைத்துவிட்டு,

பெரிய பித்தளை படியில் பொங்கல் வைக்கும் பச்சரிசியை நிரப்பி, அதில் சிறுக்குணிக்கியைச் செருகி தேங்காயை அதன் மீது சாய்த்து வைத்து, அதையும் நிலை வாசலில் வைத்து, பூங்கோதை ஒவ்வொன்றாய்ச் சொல்ல எல்லாம் செய்து முடித்து விளக்கை ஏற்றினாள்.

“சரி அத்தை, அவ்ளோ தானே கொஞ்ச நேரம் தூங்கிட்டு அப்புறமா பொங்கல் வைக்கலாம்” என்றபடியே அகலப் போனவளை,

“கீர்த்தனா எங்க போற, நான் இப்போவே பொங்கலுக்கு உலை வச்சிடுவேன்.”

“எது இப்பவே வா?” என்று மலைத்தவளை

“ஆமா, இருட்டுலயே அடுப்பு பத்த வச்சுட்டா நல்ல நேரம் பாக்கணும்னு அவசியம் இல்லை‌, அதான்” என்றபடியே அடுப்படிக்குள் போனதும்,

‘இது என்ன புதுக்கதையா இருக்கு?’ என நினைத்தவளுக்கு, எப்போதோ எதிலோ படித்த ஒரு விடயம் நினைவுக்கு வந்தது.

அதாவது திருமணம் என்பது ஒரே சமூகத்தில் செய்யப்படுவதன் காரணம், பெண்களுக்கு போகும் வீட்டில் பழக்கவழக்கங்கள், சாத்திர, சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதில்
சிக்கல்கள் தவிர்ப்பதற்காகவே என்பது தான் அது.

‘ஒரே சமூகம் தான் என்றாலும், நம்ம பிறந்தவீட்டு வழக்கமும், புகுந்த வீட்டு வழக்கமும் வேறு வேறாகத் தானே இருக்கிறது’ எனக் குழம்பினாள்.

“ஓ… சரிங்கத்தை எனக்குத் தெரியாது.
சரி சொல்லுங்க என்ன செய்யணும்” என்று மாமியாரோடு பொங்கல் வைப்பதற்குக் களமிறங்கினாள்.

அப்படியே “இந்த நிறைநாழி எதுக்கு வைக்கிறோம்? அதுக்கு என்ன காரணம் அத்தை?” என்ற கேட்டுக் கொண்டே வேலைகளை ஆரம்பித்தாள்.

“அதுவா அறுவடை முடிஞ்சவுடனே நெல்லை அல்லது அரிசியை முதல்ல நாழியில தான் நிறைய கொட்டி வைப்பாங்க. தானியம் நல்ல திரட்சியா இருந்தா சரிஞ்சு விழாதுன்னு எங்க பாட்டி சொல்லும். அப்புறம் காத்துல இருக்க ஈரப்பதத்தை இந்த அரிசி எவ்ளோ கிரகிக்குதுன்னு பார்ப்பாங்களாம். அதை வெச்சு இந்த அரிசியை நீண்ட காலம் சேமிச்சு வைக்க முடியுமான்னு கண்டுபிடிப்பாங்களாம். இது அந்தத் தானியங்களோட தரத்தை கண்டுபிடிக்கிறதுக்கான ஒரு டெக்னிக்கா இருந்திருக்கு”

“நம்ம வீட்டுல இப்படி வாசலில் வைக்கிறது, உள்ள நுழைஞ்சவுடனே ஒரு பாத்திரம் நிறைய நம்மக்கிட்ட அரிசி இருக்கு, நமக்கு இந்த வருசம் பஞ்சம் இல்லை, நல்லா இருப்போம்னு ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தத் தான்.
நிறை அப்படினாலே முழுமையை குறிக்கிறது தானே”

இப்படி நிறைய விடயங்களைப் பேசிக்கொண்டே, அவர்கள்
எல்லாம் செய்து முடிக்க மணி பத்தாகி இருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது, “அத்தை பசிக்குது” எனவும்

“இதோ 12மணிக்கு சாமி கும்பிட்டு, சாப்பிடலாம் மா” என்றதும்

“எதே?” என்று கத்தியே விட்டாள்.

“கீர்த்தனா நீ இன்னும் சின்னப் பிள்ளை கிடையாது. கல்யாணம் ஆகிடுச்சு, பொறுப்பா இரு” என்றதும்,

அவள் அடுத்து வாயே திறக்கவில்லை.

ராஜேஷ் குளித்து முடித்து கீழே வந்து “ஹாப்பி தலைப்பொங்கல் பொண்டாட்டி” என்று கை நீட்டினான்.

“சேம் டூ யூ” என்று மென்மையாகச் சிரித்தாள்.

“டேய் ராஜேஷ், மேல பரண்ல கரும்பு போட்டு வச்சோம்ல, அதை எடுடா.” என்றதும்

“சரிம்மா” என்று அவன் கரும்பு கட்டை
இறக்கினான்.

தை மாதம் வந்தாலே அவளுக்கு கரும்பு தான் முதலில் நினைவு வரும். ஒரு நேர உணவுக்குப் பதில் கொள்ளைப் பிரியமாய் கரும்பையே சாப்பிடுபவள் அவள்.

ஆனால் இங்கு இப்போது வரையும், கரும்பைப் பார்க்கவேயில்லை.
சென்ற வாரத்தில் அவளின் பிறந்தகத்தில் இருந்து வைத்த பொங்கல் சீரில் கரும்பை ஆசையாய் எடுக்கப் போனவளிடம் இதைக் கொண்டு தான் சாமி கும்பிடணும் என
அவளின் மாமனார் கூறிவிட, சிறுபிள்ளையாய் கூம்பிவிட்டாள்.

“சரி, வேற வாங்கியாவது தரலாம்ல?” என ராஜேஷைக் கேட்டாள்.

வாங்கித் தரேன் என வாய் தான் சொன்னது, வெளியே போனவன் திரும்பி வருகையில் மறந்து விட்டேன் என்பான்.

கீர்த்தனாவிற்கு கோவமாகத் தான் வரும். ‘ச்சீ கரும்பு திங்கற ஆசையே குடும்பமா சேர்ந்து அழிச்சிடுவாங்க போல’ என்று சத்தமாக சண்டையிட்டாள்,
கணவனிடம் அல்ல தனக்குள்ளாகவே…

அந்தக் கரும்புக் கட்டைப் பார்த்து விட்டு ராஜேஷையும் ஒரு பார்வை பார்க்க, அசடு வழிந்தான்.

“இன்னிக்கு சாப்பிடலாம்” என்றான்.

எங்கிருந்தோ அவளின் அலைபேசி இசைத்து அவளை அழைக்க, போய் எடுத்தாள்.

அவளின் தாய் தான்.

“ஹலோ அம்மா!”

ஏனோ அவளின் குரல் தழுதழுப்பது போல் இருந்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

“ஹாப்பி தலைப் பொங்கல்டி தங்கம்”

“தாங்க்ஸ் மா.”

“என்ன வேலையெல்லாம் முடிஞ்சுதா?
சாமி எப்போ கும்பிடுவீங்க?”

“வேலை முடிஞ்சுதும்மா. 12 மணிக்கு கும்பிடுவாங்களாம். நீ என்ன பண்ற?
கோயிலுக்குப் போயிட்டியா?”

“ம் முன்னாடியே வந்துட்டோம். நம்ம வீட்டுல எல்லா பொம்பளை பிள்ளைங்களும் கல்யாணம் ஆகிப் போயிட்டீங்க. கொஞ்சம் வெறிச்சுன்னு தோணுது.”

“மிஸ் யூ மா” என்றவள், தன் தாயை நலம் விசாரித்தாள்.

“ம்மா, உடம்புலாம் நல்லாயிருக்கா? வேலை நிறைய இருந்திருக்கும்ல?”

“அட வாடி என் குடும்ப இஸ்திரி. வேலை நிறைய இருக்கும்னு தெரிஞ்சு வச்சிருக்கியா? பரவாயில்லையே” என்று அவரோ அவளைச் சீண்டினார்.

“போம்மா, அங்கே கோயில்ல ஊரே சேர்ந்து ஒரே பானையில செய்யும் பொங்கல், எல்லாரும் உறவுகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து சிரிச்சு பேசி, நாங்கலாம் அங்க வயல்ல ஓடி ஆடி விளையாடி, கரும்பு சாப்பிட்டு, நிறைய பாட்டெல்லாம் மைக் செட் போட்டு ஓடவிட, அதுக்கும் தோப்புக்குள்ள நாங்க டான்ஸ் ஆடி அது ஒரு மாதிரி போகும்.”

“இங்க யாருமே இல்ல. நாங்க மட்டும் தான், வேற என்ன எப்படின்னு இனி தான் பார்க்கப் போறேன்.” என்று பேசிக்கொண்டிருந்தவளை, பூங்கோதையின் குரல் அழைக்கவும்

“சரிம்மா பார்க்கலாம்” என்று வைத்து விட்டாள்.

“சாமிக்கிட்ட எல்லாம் ரெடி பண்ணணும். சொல்லச் சொல்ல செய்மா” எனக் கட்டளைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

புதிதாக குடும்பப் பொறுப்பில் இறங்கியவளுக்கு கொஞ்சம் சோர்வாகவே இருந்தது. பசி பசி… என
வயிறு கத்திக் கொண்டிருந்ததை உதாசினம் செய்துவிட்டு ஓடுவதற்கு சிரமப்பட்டுத் தான் போனாள்.

ஒரு தாம்பாளத்தில் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், கரும்பு, தேங்காய், பழம், இத்யாதி இத்யாதிகளை நிரப்பி
மொட்டை மாடிக்குப் போகும்படி அறிவுறுத்த, போனவளின் பின்னாலயே
பூஜைக்குத் தேவையான மற்ற பொருட்களை எடுத்துக் கொண்டு குடும்பத்தினரும் மொட்டை மாடிக்கு
வந்தனர்.

அங்கு அவர்கள் நால்வர் மட்டும், அனைத்தையும் வைத்து சூரியனை
நோக்கி வழிபடத் தொடங்கினர்.

‘இனி இது தான், இப்படித் தான் நமது பொங்கலா’ என நினைத்தவளுக்கு
ஊரில் ஒன்றுகூடி கொண்டாடும் அந்தப்
பொங்கல் தூரமாய் இவளைப் பார்த்து சிரித்தது.

“ஏன் அத்தை, இங்க நம்ம வீட்டுல குலதெய்வக் கோயிலுக்குப் போய்லாம் பொங்கல் கொண்டாட மாட்டோமா?”

“இல்ல மா. அப்படி இங்கு வழக்கம் கிடையாது. மாடியில கும்பிட்டு, கீழ நம்ம முன்னோர்களுக்குத் துணி எடுத்து வெச்சு படையல் போடுவோம்‌” என்றார் பூங்கோதை.

“ஓ… சரி”

“சரி கீழே போய் கும்பிடணும், எல்லாம் எடுத்துட்டு போலாம் வாங்க” என்றபடியே
சாமான்களை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினர்.

கீழேயும் சாமி கும்பிட்டு முடித்ததும், நால்வரும் சாப்பிட அமர்ந்தனர்.
மிகுந்த பசியினாலோ என்னவோ அவளால் மிகுதியாய் சாப்பிட இயலவில்லை. கொஞ்சம் சாப்பிட்டு எழுந்து விட்டாள்.

பூங்கோதைக்கே கொஞ்சம் பாவமாக போய்விட்டது. அவரும் பின்னாடியே எழுந்து போனார்.

“என்ன கீர்த்தனா, இங்க நம்ம வீட்டுப் பொங்கல் எப்படி?”

“ஆங், நல்லா இருந்துச்சு அத்தை. முக்கியமா எது செய்தாலும் அதை ஏன் செய்யறோம்ணு உங்களுக்குத் தெரிஞ்ச விவரங்களை சொல்லிக் கொடுத்து, நானும் அதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்.”

“ஆனா…” என அவள் இழுக்க, இத்தனை வருசமும் திருவிழா மாதிரி எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கூட்டமா பொங்கல் கொண்டாடினோமா, இங்கு யாரும் இல்லாம நம்ம நாலு பேரு மட்டும் இருக்கறது தான் ஒரு மாதிரி வித்தியாசமா தெரியிது”

“என்ன பண்றது? இங்க இதான் வழக்கம்.
நம்ம பொம்பளைங்களுக்கு ஆரம்பத்துல இது ஒரு பெரிய போராட்டாமாவே இருக்கும். பிறந்த வீட்டு வழக்கத்தை விடவும் முடியாம, இங்க ஒட்டவும் முடியாமன்னு. ஆனால் பெண்கள் நாம ஏத்துக்கத் தானே வேணும். போகப் போக சரியாயிடும் கீர்த்தனா.”

“சரி, சாமி தான் கும்பிட்டோமே, நீ வேணும்னா ராஜேஷோட கெளம்பி
உங்க வீட்டுக்குப் போயி ரெண்டு நாள் எல்லாரோடையும் இருந்திட்டு வரியா?”
எனக் கேட்கவும்,

“ப்ச், அத்தை உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? சொன்னா அடிச்சிடாதீங்க
தலை தீபாவளி மாதிரியே தலைப்பொங்கலுக்கும் அம்மா வீட்டுல தான் ஜாலியா இருப்போம்னு நெனச்சேன். பட் இட்ஸ் சோ சேட்” என வருத்தமாய் அவள் நெற்றியில் கை வைத்துக் கொள்வது போல பாவனை செய்தாள்.

“ஓஹோ! பட் இட்ஸ் யுவர் மிஸ்டேக் மருமகளே” எனச் சிரித்தார்.

அப்போது ராஜேஷ் கரும்பை துண்டுகளாக்கி எடுத்து வந்து கீர்த்தனாவிடம் தர,

“கேட்டப்பலாம் நீங்க வாங்கி தந்தீங்களா?” அவள் கோபமாய்
அந்தக் கரும்பாலயே அவனை அடிக்க ஓங்க, அவன் ஓட, இவள் துரத்த
கால்கள் ஒத்துழைக்கவில்லை. தொடையைப் பிடித்து அமர்ந்து விட்டாள்.

மீண்டும் திரும்பி வந்தவன், “சாரிடி நிஜமாகவே மறந்து தொலைச்சிடுவேன். இங்க யாரும் விரும்பி சாப்பிட மாட்டோமா. பொங்கல் நேரத்துல மட்டும் வாங்குவோம். அதான் நெனப்பே வரலை. இனிமே நெனப்பு வச்சுக்கிறேன்” என்றவன் ஒரு சிறிய கப்பை நீட்டினான்.

அதில் சட்டென்று எடுத்து வாயில் போட்டு எடுத்து உண்ணும் விதமாக, குட்டிக் குட்டி துண்டுகளாய் கரும்பு வெட்டி வைக்கப்பட்டிருந்தது.

“ஹாப்பி ஹாப்பி தலைப்பொங்கல்” என
ஒரு துண்டை வாயில் ஊட்டிவிட, பதிலுக்கு இவளும் ஊட்டிவிட, கீர்த்தனாவின் தலைப்பொங்கல்
நிறைந்திருந்தது.

அதே மகிழ்வோடு “அம்மா வீட்டுக்கு கூட்டிட்டுப் போறீங்களா?” என் அவள் கேட்க,

“ஓ, போகலாமே” என்றான் ராஜேஷ். இருவருமாய் கீர்த்தனாவின் அம்மா வீட்டுக்குப் புறப்படத் தயாராகினர்.

*****
சிறப்பான கதை மா, வாழ்த்துக்கள்.
 
hema

Active member
Staff member
Joined
Jun 27, 2024
Messages
75
Reaction score
67
Points
43
மிக்க நன்றிங்க மா
 
Sivagnanalakshmi

Active member
Joined
Jul 6, 2025
Messages
220
Reaction score
144
Points
43
தலைப்பொங்கல் அருமை. கல்யாணம் ஆனவுடன் வீட்டின் ஞாபகம் அருமை எல்லாம் தெரியவருகிறது. அத்தை 👍தான். 12மணிக்கு கும்பிட அவளை அதிகாலையில் பொங்கல் வைக்க சொன்னது டூ மச். அம்மா எப்போதும் சூப்பர் தான். ராஜேஷ் கரும்பு மறந்ததை அவளுக்கு சிறுசிறு துண்டாக கொண்டு வந்து கொடுத்தது அம்மா வீட்டிற்கு போகலாம் சொன்னது சூப்பர். மாமியும் அம்மா வீட்டிற்கு போய் வா சொன்னது சூப்பர். தலை பொங்கல் பழைய புதிய எண்ணத்தோடு சூப்பர். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
 
hema

Active member
Staff member
Joined
Jun 27, 2024
Messages
75
Reaction score
67
Points
43
மிக்க நன்றிங்க சகோதரி
 
ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
842
Reaction score
456
Points
63
உண்மை தான் பிறந்த வீடு தனி சுகம் தான் 🥰🥰 சிறப்பு வாழ்த்துக்கள் 💐💐💐
 
ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,390
Reaction score
3,231
Points
113
இந்த கதை வாசிக்கும் போது எனக்கு எங்க வீட்டு ஞாபகம் தான்.

அருமை அழகாக இருந்தது.

வாழ்த்துக்கள் சகோதரி
 
Mrithula Ashwin

Moderator
Staff member
Joined
May 14, 2024
Messages
225
Reaction score
155
Points
43
அருமை. புது பொண்ணுக்கு, அம்மா வீட்டில் இருந்த செல்லத்தை, மகிழ்ச்சியை புகுந்த் வீட்டில் ஒப்பீட்டு பார்ப்பது இயல்பு அதை அழகாக காட்டியிருப்பது நன்று. மாமியார் வேலைகளை கற்றுக் கொடுத்து, கடைசியில் அம்மா வீட்டுக்கு போய் வா என்று சொன்னதும் அழகு.
 
Top Bottom