- Joined
- Aug 24, 2025
- Messages
- 664
- Reaction score
- 462
- Points
- 63
- Age
- 44
சொல்லாழி வெண்சங்கே —5
காலை எட்டு மணி அடித்திருந்தது. படுக்கையிலிருந்து சோம்பல் முறித்தெழுந்த ரஞ்சன், தரைத்தளத்தில் இருக்கும் சமையலறைக்குத் தன் தாயைத் தேடி வந்தான்.
"ஹாய் மாம், குட் மார்னிங்!" என்று வழக்கமான உற்சாகத்தோடு குரல் கொடுத்தான்.
"வெல்கம் மை டியர்... முத்தச்சன் விளிக்குன்னு (தாத்தா கூப்பிடுகிறார்)," என்றார் பிரேமா அடுப்படியிலிருந்து வெளியே வந்தபடி.
"முத்தச்சன் என்னை எந்துக்காயிட்டு விளிச்சது? (தாத்தா என்னை எதுக்காகக் கூப்பிட்டார்?)" என்று சற்று சலிப்புடன் கேட்டான் ரஞ்சன்.
"ஐ டோன்ட் நோ! இந்தா, காபியைக் குடிச்சிட்டுப் போ," என்றபடி புகையும் காபி கப்பை ரஞ்சனிடம் நீட்டினார்.
சமீபகாலமாக ரஞ்சனுக்கும் அவன் தாத்தா பத்மநாபனுக்கும் இடையே ஒரு மெல்லிய இடைவெளி இருந்து வந்தது. தாத்தா ஆசைப்பட்டபடி அவன் மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுக்காமல், தன் விருப்பப்படி விஷுவல் கம்யூனிகேஷன் படித்துக் கொண்டிருப்பதுதான் அந்த விரிசலுக்குக் காரணம். தன் பேச்சைக் கேட்காத பேரனை அவராக வற்புறுத்துவதில்லை என்று ஒதுக்கியே வைத்திருந்தார். அப்படிப்பட்டவர் இப்போது எதற்காகத் தன்னை அழைக்கிறார் என்று புரியாமல், புலம்பியபடியே காபியைப் பருகத் தொடங்கினான் ரஞ்சன்.
அப்போது பிரேமாவின் மொபைல் போன் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. திரையில் பத்மநாபனின் எண் மின்னுவதைக் கண்டதும் பிரேமா படபடப்பானார். "தாத்தா உன்னைத்தான் கூப்பிடுறார். சீக்கிரமா போய் என்னன்னு கேட்டுட்டு வா," என்று ரஞ்சன் கையில் வைத்திருந்த கப்பை பிடுங்கிக்கொண்டு அவனை மாடிக்கு அவசரப்படுத்தினார்.
வேறு வழியின்றி, ரஞ்சன் வேண்டா வெறுப்பாக மாடிப் படிகளில் ஏறினான்.
மகன் செல்வதைப் பார்த்த புன்னகையோடு போனை அட்டென்ட் செய்த பிரேமா, "ரஞ்சன் இப்போ உங்களைப் பார்க்கத்தான் மாமா மேலே வந்துகிட்டிருக்கான்," என்று தகவலைச் சொன்னார்.
"ஓகேம்மா, ஓகே..." என்றபடி இணைப்பைத் துண்டித்துக் கொண்டார் பத்மநாபன். படுக்கையிலிருந்து எழுந்து நிமிர்ந்து அமர்ந்து, பேரனின் வரவுக்காகக் காத்திருந்தார்.
அறைக் கதவை மெல்லத் தள்ளி எட்டிப் பார்த்த ரஞ்சனை, "வா கண்ணா, உள்ளே வா!" என்று அன்போடு வரவேற்றார் பத்மநாபன்.
"என்னை எந்துக்கா முத்தச்சா விளிச்சது?" (என்னை எதுக்காகத் தாத்தா கூப்பிட்டீங்க?) - நேராக விஷயத்திற்கு வந்தான் ரஞ்சன்.
"எனக்கு நீ ஒரு உதவி செய்யணும். நான் என் கனவுல ஒரு இடத்தைப் பார்த்தேன். அந்த இடம் நம்ம மாநிலத்துல எங்கே இருக்குன்னு உன்னால கண்டுபிடிச்சுச் சொல்ல முடியுமா?"
ரஞ்சன் இதை எதிர்பார்க்கவில்லை. அவன் வாய்விட்டுப் பலமாகச் சிரித்தான். "கனவுல பார்த்த இடத்தை எப்படி தாத்தா கண்டுபிடிக்க முடியும்? எனக்குப் புரியல. மேப்பப் பார்த்து வழி தேடுறவங்க கடைசியில சகாரா பாலைவனத்துக்கே போனதாச் சொல்லுவாங்க... அது மாதிரியா இது?" என்று கேலியாகக் கேட்டான்.
"நான் உனக்கு அந்த இடத்தோட அடையாளங்களைச் சொல்றேன்," என்றார் பத்மநாபன் சற்றே கடுமையான குரலில். பேரனின் கேலி அவருக்குப் பிடிக்கவில்லை.
"நீங்க சொல்ற அடையாளத்தை வச்சு மட்டும் ஒரு இடத்தை அடையாளம் காண்றது ரொம்பக் கஷ்டம் தாத்தா!"
"பரவாயில்லை, நான் உனக்கு அதை ஒரு ஓவியமா வரைஞ்சு கொடுக்கிறேன். அந்த மாதிரி இடத்தை நீ எங்கே பார்த்திருக்கேன்னு எனக்குச் சொன்னா மட்டும் போதும்."
"சரி, நான் இப்போ காலேஜுக்குக் கிளம்புறேன். ஈவினிங்குள்ள நீங்க டிராயிங் பண்ணி வைங்க," என்று சொல்லிவிட்டு, அவர் அடுத்த வார்த்தை பேசுவதற்குக் கூடக் காத்திராமல் அறையை விட்டு வேகமாய் வெளியேறினான் ரஞ்சன்.
அந்தப் பின்தங்கிய கிராமத்துத் தெருவில், ஆனந்தியின் வீட்டு வாசலில் வந்து நின்றது ஒரு பழைய மாடல் அம்பாசிடர் கார். அந்தப் பட்டிக்காட்டில் அத்தனை பெரிய காரில் வரும் அளவுக்குப் பணக்காரர்கள் யாரும் இல்லை. அதனால், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், கார் சத்தம் கேட்டு ஆர்வத்தோடு ஓடிவந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
காரின் முன்புறக் கதவைத் திறந்து கொண்டு, பட்டு வேஷ்டி சட்டை அணிந்த முதியவர் பூமிநாதன் முதலில் இறங்கினார். அவர் காரின் பின்புறக் கதவைத் திறந்துவிட, பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க சிறுமி கீர்த்தி மௌனமாக இறங்கி ஒருபுறம் ஒதுங்கி நின்றாள். அவளைத் தொடர்ந்து, பட்டுச் சேலையின் ஜரிகை சரசரக்க கம்பீரமாக இறங்கினார் மகாராணி அம்மையார். காரை ஓட்டிக்கொண்டு வந்திருந்த இளைஞனோ, இறங்க மனமில்லாமல் ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி உள்ளேயே அமர்ந்திருந்தான்.
"கண்ணா, இறங்குப்பா..." என்று அன்போடு, அதே சமயம் கட்டளையிடும் தொனியில் அழைத்தார் மகாராணி.
அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு, கண்ணன் காரில் இருந்து இறங்கி வந்தான். வாசலில் நின்றிருந்த கந்தசாமியும் பாக்கியமும் ஒருசேரக் கைகளைக் குவித்து, "உள்ளே வாங்க..." என்று அந்த நால்வரையும் இன்முகத்தோடு வரவேற்றார்கள்.
மகாராணியும் பூமிநாதனும் மலர்ந்த முகத்தோடு வீட்டிற்குள் நுழைய, அவர்களைத் தொடர்ந்து கண்ணனும் கீர்த்தியும் அமைதியாக உள்ளே சென்றனர்.
கந்தசாமி நாற்காலிகள் நான்கினை வரிசையாகப் போட்டு வைத்திருந்தார். "உட்காருங்க," என்று பாக்கியமும் உபசரிக்க, அவர்கள் தங்களுக்குரிய நாற்காலிகளில் அமர்ந்தனர். முதல் நாற்காலியில் மகாராணியும், அடுத்த நாற்காலியில் கண்ணனும், மூன்றாவது நாற்காலியில் கீர்த்தியும், கடைசி நாற்காலியில் பூமிநாதனும் அமர்ந்தார்கள்.
பூமிநாதன் மெல்லப் பேச்சைத் தொடங்கினார். "பொண்ணு பார்க்கிறதுக்குச் சொந்த பந்தங்களை நாங்க யாரும் கூப்பிட்டுக்கல. கல்யாணத்துக்கு எல்லாருக்கும் சொல்லிடுவோம், நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க," என்றார்.
"அதனால் என்னங்க, இருக்கட்டும்... எல்லாரையும் கல்யாணத்துக்கே அழைச்சிடுவோம்," என்று கந்தசாமி பக்குவமாகப் பதிலளித்தார்.
வந்திருப்பவர்களுக்குக் காபி போடுவதற்காகப் பாக்கியம் பரபரப்பாக சமையலறைக்குள் சென்றார்.
கந்தசாமியின் தங்கைகளான சரஸ்வதியும் லட்சுமியும், தம்பி ரவியோடு சேர்ந்து அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள்.
மகாராணி கந்தசாமியைப் பார்த்து, "தம்பி, நீங்களும் உட்காருங்க... எதுக்காக நின்னுட்டே இருக்கீங்க?" என்று கேட்டவாறு, தான் எழுந்து தன் நாற்காலியைக் கொடுக்க முன்வந்தார்.
"இருக்கட்டும்மா... நீங்க உட்காருங்க," என்று அவரை வற்புறுத்தி அமரச் செய்த கந்தசாமி, வெளியில் சென்று பக்கத்து வீட்டில் ஒரு நாற்காலியைக் கடன் வாங்கி வந்து போட்டு அமர்ந்தார்.
பெஞ்சில் அமர்ந்திருந்த ரவிக்கு இப்போது ஓரளவுக்கு விஷயம் விளங்கியது. கார் ஓட்டிக்கொண்டு வந்திருந்தவன்தான் மாப்பிள்ளை என்று புரிந்து கொண்டான். அவனது சிறிய தொப்பையும், முன் மண்டையில் தெரிந்த ஆரம்பகால வழுக்கையும் அவனுக்கு இது இரண்டாவது திருமணம் என்பதை உணர்த்தின. அவனருகே ஒட்டி அமர்ந்திருக்கும் பெண் குழந்தை, அவனது முதல் மனைவியின் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்றும் யூகித்துக் கொண்டான்.
மகாராணி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார். "எங்க வீட்டுல நாங்க நாலு பேருதான். இவன்தான் என்னோட பையன் கண்ணன். இவனுக்குத்தான் பொண்ணு பார்க்க வந்திருக்கோம். அவன் பக்கத்துல உட்கார்ந்திருக்கிறது என்னோட பேத்தி கீர்த்தி."
அப்போது கண்ணன் இடையிட்டு, "என்னோட பொண்ணு கீர்த்தி," என்று சற்றே அழுத்தமாகத் தெளிவுபடுத்தினான்.
கண்ணன் இன்னும் தன் கோபத்தை மறக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்ட பூமிநாதன், பேச்சை மாற்றும் பொருட்டு, "உங்க குடும்பத்து ஆளுங்களை அறிமுகப்படுத்துங்க," என்றார் கந்தசாமியிடம்.
கந்தசாமி தன் குடும்பத்தினரைச் சுட்டிக்காட்டினார். "வாசல்ல உங்களை வரவேற்றது என்னோட பெண்சாதி பாக்கியம். இதோ பெஞ்சில் அமர்ந்திருக்கும் ரவி... என்னோட இளைய மகன், ஊமைப் பையன். வலது பக்கம் உட்கார்ந்திருக்கிறது என்னோட மூத்த தங்கச்சி லட்சுமி, இடது பக்கம் இருக்கிறது இளைய தங்கச்சி சரஸ்வதி. எங்க குடும்பம் ரொம்பச் சின்னதுதான். தங்கச்சிங்க வீட்டு மாப்பிள்ளைங்க கல்யாணத்துக்கு வர்றதாச் சொல்லி இருக்காங்க."
"சரி, பொண்ணைக் கூப்பிடுங்க... நல்ல நேரம் போறதுக்கு முன்னாடி பார்த்துடலாம்," என்றார் மகாராணி அவசரமாக.
"இதோ அழைச்சிட்டு வாரேன்மா..." என்று சமையலறையிலிருந்து சத்தம் கொடுத்தார் பாக்கியம்.
ஆனந்தியின் கையில் காபி தம்பளர்கள் இருந்த தட்டைக் கொடுத்து, அவளை முன்னால் நடத்தி அழைத்து வந்தார் பாக்கியம்.
தலை குனிந்து வந்த ஆனந்தி, பூமிநாதன் குடும்பத்தினரிடம் காபியை நீட்டினாள். மகாராணியும் பூமிநாதனும் பெற்றுக் கொண்டார்கள். ஆனால், கண்ணனும் கீர்த்தியும் காபியை எடுக்கவும் இல்லை, வேண்டாம் என்று மறுக்கவும் இல்லை. அவர்களின் கண்கள் ஆனந்தியின் முகத்தையே குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்தன.
அவர்கள் நடந்து கொள்ளும் விதம் மகாராணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. "அவங்க இப்போ காபி குடிக்க மாட்டாங்கம்மா, நீ தட்டைக் கொண்டுட்டுப் போ," என்று ஆனந்தியை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
'ஆள விடுங்கடா சாமி!' என்பது போல ஆனந்தி வேகமாகச் சென்று சமையற்கட்டுக்குள் ஒடுங்கிக் கொண்டாள்.
பாக்கியம் தன் மகளைப் பற்றிப் பெருமையாகப் பேசத் தொடங்கினார். "எங்க பொண்ணு ரொம்பப் பொறுப்பானவ. சின்னப் பிள்ளைங்க மேல ரொம்ப அன்பா இருப்பா, பாகுபாடே பார்க்கத் தெரியாது. நானே கோபத்துல கடிந்து பேசினாலும் அமைதியா போயிடுவா. ரொம்பப் பக்குவமான பிள்ளை."
மகாராணி அதை ஆமோதிப்பது போல, "பார்க்கும்போதே தெரியுது, ரொம்ப அமைதியான பொண்ணா இருக்கா, அழகாகவும் இருக்கா. எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு. என் பையனுக்கும் பிடிக்கும், நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க," என்றார்.
அப்போது பூமிநாதன், அமைதியாக இருந்த சரஸ்வதியையும் லட்சுமியையும் பார்த்து, "பொண்ணோட அத்தைங்க ஒரு வார்த்தைகூடப் பேசாம அமைதியாவே இருக்கீங்க?" என்று கேட்டார்.
சரஸ்வதி அதற்குப் பதிலளித்தார். "நீங்க ரெண்டு பேரும் சம்பந்தம் பேசிக்கிட்டு இருக்கும்போது நாங்க எதுக்கு இடையில பேசணும்னுதான் அமைதியா இருந்தோம். எங்களுக்கும் மாப்பிள்ளையை ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனந்தி தாய் இல்லாத பிள்ளை, சின்ன வயசுல இருந்து ரொம்பக் கஷ்டப்பட்டுட்டா. நீங்க அவளுக்கு ஒரு நல்ல தாய் தகப்பனா இருக்கணும், மாப்பிள்ளை அவளை நல்லா பார்த்துக்கணும். உங்க பேத்தியும் அவளை விரோதமா நினைக்காம நல்லபடியா பழகிப் போகணும்னுதான் எங்களோட ஆசை."
லட்சுமியும் அதை ஆமோதிப்பது போலத் தலையை அசைத்து, சிறு புன்னகையோடு அமர்ந்திருந்தார்.
ரவிக்கு அவர்கள் பேசிக் கொள்வது காதில் விழவில்லை என்றாலும், அங்கிருந்த மனிதர்களின் முகபாவனைகளை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். இந்தத் திருமணத்தில் ஆனந்திக்கும் விருப்பமில்லை, அவர்கள் அழைத்து வந்த மாப்பிள்ளைக்கும் விருப்பம் இல்லாதது போல அவனுக்குத் தோன்றியது. 'இப்படி விருப்பமில்லாத இருவரைத் திருமணம் செய்து வைத்தால் எப்படி அவர்கள் ஒற்றுமையாக வாழ்வார்கள்?' என்ற கவலை அவனுக்குள் எழுந்தது.
சரஸ்வதி சொன்னதற்குப் பதிலாக மகாராணி, "எங்களுக்கு இந்தப் பொண்ணு மருமகள் இல்லைம்மா... மகள்! நாங்க அப்படித்தான் கீர்த்தியோட அம்மாவையும் வச்சிருந்தோம், ஆனா அவ எங்களுக்குக் கொடுத்து வைக்கல. என் மகன் எங்களோட பிடிவாதத்தால்தான் இந்தத் கல்யாணத்துக்கே சம்மதிச்சிருக்கான். ஆனந்தி எங்க வீட்டுக்கு வந்து நடந்துக்கிற முறையைப் பார்த்து அவன் மனசு மாறும்னு நம்புறோம். ஆனந்தியும் கீர்த்தியைப் போலச் சின்ன வயசுலேயே தாயை இழந்தவள், அதனால அவளுக்கு அந்தத் தாய்மையின் ஏக்கம் என்னன்னு தெரியும். அதுக்காகத்தான் அவளை நாங்க தேர்ந்தெடுத்தோம்," என்று தன் உள்ளக் கிடக்கையை விளக்கினார்.
"அப்போ நாங்க கிளம்புறோம்," என்று பூமிநாதன் எழுந்து நின்று கும்பிடு போட்டார்.
கீர்த்தியும் கண்ணனும் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் முதல் ஆளாக வெளியேறிச் சென்று காரில் அமர்ந்து கொண்டார்கள். மகாராணி பாக்கியத்தின் கைகளைப் பற்றிக் கொண்டார். "நீ பொண்ணை நல்லா வளர்த்திருக்கம்மா... நீ கேட்டபடி எல்லாவற்றையும் நாங்க கொடுத்திடுறோம்," என்று புன்னகையோடு, பாக்கியத்தின் காதுகளில் மட்டும் கேட்கும்படி ரகசியமாகக் கூறிவிட்டு நகர்ந்தார்.
ரவி பிறவி ஊமை என்பதால், பிறரின் உதட்டசைவை வைத்தே அவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளும் திறன் பெற்றிருந்தான். பாக்கியத்தின் காதுகளில் மகாராணி கிசுகிசுத்த அந்த வார்த்தைகளை அவன் கூர்ந்து கவனித்து, அவரது உதட்டசைவை அப்படியே தன் மனதிற்குள் பதிய வைத்துக் கொண்டான்.
(தொடரும்...)