செல்வா செல்வசங்கரி அவர்களின் கருத்துக்கள் | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

செல்வா செல்வசங்கரி அவர்களின் கருத்துக்கள்

New updates

LATEST

ஆனந்த ஜோதி

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,406
Reaction score
3,238
Points
113
புரூப் ரீடர் செல்வா செல்வசங்கரி அவர்களின் கருத்துக்கள் :

• நிறுத்தற் குறிகளை சரியாக உபயோகப் படுத்துவது நாவலை வாசிக்கும் போது உள்ளார்ந்து வாசிக்க உதவும்.

நிறுத்தற் குறிகள் இல்லாத நாவல் சுவையேதுமற்ற வெற்று சோறை உண்பது போல... சுவைக்காது...

• (…) தொடர்ச்சியான மூன்று புள்ளி… இந்தக் குறியீடு பத்தி நிறைவு பெறாமல் தொடரும் போது பயன்படுத்துவோம்.
• (…) மூன்று புள்ளிகள்தான் வரும். இரண்டு அல்லது நான்கு ஐந்து என வரிசையாக நம் இஷ்டத்துக்கு வைப்பது தவறு.
• தொடர்ச்சியாக வரும் மூன்று புள்ளிகள் (…) பயன்படுத்துவதை கூடிய மட்டும் தவிர்த்துவிடுதல் நலம்.
• நிறுத்தற் குறிகளை வரிசையாக இரண்டு மூன்று அடுக்கி எழுதுவதை பார்க்கிறேன். அது தவறு. ஒரு குறியைதான் ஒரு இடத்தில் பயன்படுத்தலாம்
• ( எகா) !!!!!!!, !?. !!, ??, ?????? இப்படி எழுதுவது தவறு.
• …! இப்படி மூன்று புள்ளிகளுக்கு அடுத்து ஆச்சர்யக்குறி வினாக்குறி பயன்படுத்துவதையும் பார்க்கிறேன். அதுவும் தவறு.
• வினாக்குறி, ஆச்சரியக்குறி, முற்றுப்புள்ளி ஆகியவைக்குப் பிறகுதான் இரட்டை மேற்கோள் முடிவுக்குறி வரவேண்டும். (எகா) “நீ இன்று வருவாயா?” , “உன்னை மிகவும் பிடிக்கும்.” , “ஐயோ! எனக்கு பயமாய் இருக்கிறது!”
• வசனங்களோ வாக்கியங்களோ நீளமாக இல்லாமல் சிறு சிறு வாக்கியங்களாக இருத்தல் நலம்.
• சற்று பெரிய அளவிலான வசனமாக இருந்தால் இரண்டு மூன்று முறை வாசித்துப் பார்த்து, சற்று நிறுத்தி படிக்க வேண்டிய இடத்தில் கமா பயன்படுத்தலாம்.
• வட்டார வழக்கு சொற்களோ, கொச்சையான பேச்சு வழக்கு சொற்களோ வசனங்களில் மட்டும் வருவதே நலம்.
• ஆசிரியர் கதையை விளக்கும் பகுதிகள் நல்ல தமிழில் இருத்தல் அவசியம்.
• அடைப்புக் குறிகள் (…) வார்த்தைகளுக்கோ வாக்கியத்துக்கோ விளக்கம் அளிக்கையில் பயன்படுத்த வேண்டும்.
• (எகா) “துட்டு (காசு) செலவு பண்ணும்போது பார்த்து பண்ணு”
• ஆசிரியரின் மைண்ட் வாய்சாக சில வாக்கியங்கள் அடைப்புக் குறிக்குள் காமெடிக்காக எழுதுவதைப் பார்க்கிறேன். ஆனால் அவை புக் பப்ளிஷிங்கில் வரக்கூடாது.
• (எ.கா) (டேய் நீ ஹீரோடா…) (உன்னைப் போய் ஹீரோவா போட்டிருக்கேனே) இது போன்ற வசனங்கள் எழுத்தாளரால் இடைச்செருகப் பட்டிருக்கும். இவை ஆன்லைனில் படிக்கும்போது பிழையாய் தெரிவதில்லை. புக்காக வரும் போது நீக்க வேண்டும்.

மேற் கூறியவற்றில் ஏதேனும் பிழைகளோ… சந்தேகங்களோ இருப்பின் கமெண்ட்டில் சொல்லவும்… மிக்க நன்றி.
 
Last edited:
ச

சிறு ஊற்றாக நேசம்

Guest
அருமை மா 💐 👍🏻
 
Top Bottom