- Joined
- May 4, 2024
- Messages
- 5,345
- Reaction score
- 3,210
- Points
- 113
#ஜோதி_ரிவ்யு
எழுத்தாள் : Shri Vijay
படைப்பின் பெயர் : சீதையின் பூக்காடு
வெளியீடு : பிரதிலிபி
லிங் :
பெற்றோர் வெளியூரில் இருக்கும் உறவினரின் திருமணத்திற்கு சென்றிருக்கும் போது, எழுத்தாளராக வருகின்ற நாயகி ஆரவி, தனக்கு வருகின்ற ஒரு போன் காலை உண்மை என்று நம்பி உடனே புறப்பட்டு வருகிறாள். அங்கு அவள் எதிர்பாராத விதமாக காட்டு பங்களாவில் மாட்டிக் கொள்ள, அதே வீட்டில் ஏற்கனவே வாலிபன் ஒருவனும் அவளைப் போல வந்து இருப்பது தெரிய வருகிறது. இருவரும் அந்த வீட்டிலிருந்து எப்படி தப்பித்து வெளியே வருகிறார்கள்? திடீர் திடீர் என்று கேட்கும் சிரிப்பும் பேச்சும் அமானுஷ்யமும் எதனால் ஏற்படுகிறது? காட்டு பங்களாவில் உள்ள மர்மம் மற்றும் அவர்களின் குடும்பம்… என்று கதை சுவாரஸ்யமாக நகர்கிறது.
ஆரவி அந்த பங்களாவுக்குள் மாட்டியிருக்கும் போது, அங்கு வேறு ஒருவரும் இருப்பதை அறிந்து அவனிடம் சென்று பேச்சு கொடுக்க, “நான் எங்க இருக்கேன்? நீங்க யாரு?” என்று கேட்டு அப்பாவியாக அறிமுகமாகுகிறான் நாயகன் விபு நந்தன்.
“ம்ம்… இந்திரலோகத்தில் ரொமான்ஸ் பண்ணின்ட்டு இருக்கேள்”
அந்த மாதிரியான ஒரு இடத்தில் கூட ஆரவி பேசிய வசனம் சிரிப்பை வர வைத்தது. அவன் சிரிப்பை அடக்குவது நமக்குமே தெரிகிறது.
அப்படி ஒரு காட்டு பங்களாவிற்குள் இரண்டு பேரும் இருப்பதும் பேசுவதும், அவனையே சமையல்காரனாக மாற்றி விடுவதும், அவன் செய்து கொண்டு வந்திருந்த உணவை உண்ண முடியாமல் எதிர்மறையாக பேசி அவன் கோபத்திற்கு உள்ளாவதும், மாடியில் உள்ள பூந்தோட்டமும், மலையில் நனையும் போது உள்ள உற்சாகமும், அவ்வப்போது அமானுஷ்யத்தை கண்டு மயங்கி மயங்கி விழுமிடமும் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்து கதை நகர்வு விறுவிறுப்பாக சென்று பிளாஷ்பேக் வரும் இடத்தில் சற்று நிதானிக்கிறது. குழந்தைகளைக் கடத்தல், செலின், பெர்னென்டர்ஸ், தன்யாவின் வாசிப்பு அனுபவம், பிள்ளைகள் மீது பாசத்தை கொட்டும் பெற்றோர், சீதா லக்ஷ்மியின் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்கள் …. கதை நகர்வுக்கு மிகவும் முக்கியமானதாக அமைகிறது.
விபுவின் குறும்புத்தனமான பேச்சும், சமையல் கலையும் அவன் மீது ஒரு சில கேள்விகளையும் சந்தேகங்களையும் வர வைக்கிறது.
கவிதை நடையுடன் கூடிய எழுத்துக்கள், காட்சி அமைப்புகளில் வரும் வசன உச்சரிப்புகள், மாடியில் உள்ள தோட்டத்தை ரசித்து அவள் பேசும் இடங்கள், பேபி மாமியின் அழகான பேச்சுக்கள் எல்லாம் மனதைக் கொள்ளை கொள்கின்றன...
சொல்ல போனால் எழுத்தாளர் ஸ்ரீவிஜய் அவர்களின் இப்படிப்பட்ட எழுத்துக்கள் தான், என்னை மீண்டும் மீண்டும் அவரது படைப்புகளை தேடி வாசிக்க தூண்டுகோலாக அமைந்தது.
தொடர்கதை வாசிக்க அருமையாகவும் அழகாகவும் உள்ளது, நீங்களும் வாசித்துப் பாருங்கள்; எப்படி இருக்கிறது என்பதையும் மறக்காமல் தெரிவியுங்கள்.
முடிவு அருமை. எழுத்தாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Last edited: