சிறு ஊற்றாக நேசம் விமர்சனம் | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சிறு ஊற்றாக நேசம் விமர்சனம்

New updates

LATEST

ஆஷா சாரா

Active member
Staff member
Joined
Oct 22, 2024
Messages
284
Reaction score
241
Points
43
சிறுஊற்றாக நேசம் விமர்சனம்

மில்கி பார் ❤️கண்ணம்மா

ஒரு அழகான உணர்ச்சி பூர்வமான உறவுகளுக்கான கதை🥰🥰

முதல்ல நம்ம மகிழ்..
சமூக வரையறை கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட பொண்ணு, தனக்கான உலகத்துல தனக்கான கூட்டுக்குள்ள வாழுற பொண்ணு, அவ வாழ்க்கைல கடந்து வந்த இன்ப துன்பம் தான் இந்த கதை..

என்ன நம்ம ரைட்டர் கொஞ்சம் அதிகமாவே அந்த பொண்ண படுத்திடாங்க.. அதுல கொஞ்சம் கோபம் தான் 😏😏.. இருந்தாலும் முடிவுல சேர்த்து வெச்சதால தப்பிடீங்க.. இல்ல கொலை தான்💪💪💪

அடுத்து 'மில்கி பார்' இந்த பெயர் தான் கதை பூராவும் ஹீரோ. அவன் மீதான அவனோட கண்ணம்மாவோட காதல் கதை முழுக்க நிறைஞ்சி இருந்திச்சு..
லேட்டா வந்தாலும் எங்க தலை லேடஸ்ட்டா தான் வருவாரு🤭🤭🤭

சொன்னா தான் காதலா சொல்லாம உணர்வால புரிஞ்சிக்கிற காதல் இன்னும் ஸ்ட்ரோங் இல்லையா அதான் நம்ம ஆளுங்க காதல்❤️❤️❤️🥰🥰🥰

இன்னும் கொஞ்சம் அவங்களுக்கான காட்சிகள் அதிகமா கொடுத்திருக்கலாம்... இன்னும் கொஞ்சம் அவங்கள சேர்ந்து பார்த்திருக்கலாம்னு தோணிச்சு.. மத்தபடி காதல் அமோகம்🥰🥰🥰

என்னதான் மில்கி பார் தான் ஹீரோவா இருந்தாலும் எனன பொறுத்த வரை அன்பு தான் இந்த கதையோட ரியல் ஹீரோ.. மாஸ்டர் பீஸ். ஒரு அப்பாவா கணவனா, ஒரு நல்ல மனிசனா கதை பூராவும் இவரோட நகர்வு இருந்திச்சு.. இவருதான் இந்த கதையோட சுவாசம்னு கூட சொல்லலாம்.. இவரோட காதல் அது👌👌🥰🥰🥰🥰 முதுமையில் முதிர்ச்சியான நிமிர்வான காதல்.. அவருக்கு ஏத்த மனைவி அவரோட அறிவுப் பொண்டாட்டி.. என்னதான் சண்டை போட்டுக்கிட்டாலும் அந்த புரிதல் இருந்தால் காதல் முதுமையிலையும் இனிக்கும் என்கிறதுக்கு இவங்க உதாரணம்.

'குறுக்க இந்த கௌஷிக் வந்தான்னு' நாம திரைப்பட பாணியில சிலரை கலாய்கிறதுக்காக சொல்லி கேட்டிருப்போம். ஆனா இங்க இந்த கௌஷிக் குறுக்க வரலைனா தான் அதிசயம்😁😁😁 நண்பன்னா இப்படி இருக்கணும்னு நாம சொல்லுற வரைமுறைகள் எல்லாம் பக்காவா நம்ம சார் கிட்ட இருக்கு.. நட்புக்கு நான் கேரண்டி மேட்டரியல் நம்ம கௌஷிக்..

அப்பறம் அப்பப்ப நம்ம ஹரிணியோட கியூட் ப்ரெசென்ஸ்.. எல்லாம் சேர்த்து அழகான அழுத்தமான வலி நிறைந்த காதல் கதை..

அவங்க சேர குறுக்க இருந்த தடைகள் எல்லாம் நீங்கி எப்படி சேர்ந்தாங்க என்கிறத நீங்களும் படிச்சி தெரிஞ்சிக்கோங்க

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் எழுத்தாளரே❤️❤️🥰🥰🥰
 

MRS BEENA LOGANATHAN

Well-known member
Staff member
Joined
May 14, 2024
Messages
1,035
Reaction score
710
Points
113
நன்றி மா.... இப்ப தான் நான் பார்க்கிறேன்....👏🏻👏🏻👏🏻👍🏻❤️😘💐👌🏻👌🏻👌🏻
 
Top Bottom