What's new

ஆனந்த ஜோதி நாவல்கள்

Where every page opens a new world
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சிருங்கார கீர்த்தனம் அப்சரஸ் பீனா லோகநாதன் (விமர்சனம் )

New updates

LATEST

Administrator

Administrator
Staff member
Joined
May 4, 2024
Messages
5,585
Reaction score
2,943
Points
113
Location
Chennai
Website
jothinovels.com
#கதை_சிருங்கார கீர்த்தனம்

#கதை_ஆசிரியர்_ஆனந்தஜோதி

#திருமதி_அப்சரஸ்பீனா _லோகநாதன்
#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்

💕முகுந்தனின் 💘மீரா💖


தாயின் கோபம் தந்தையின் பாசம்
துணையாய் மாமன் பேச்சு
தன் வீட்டிற்குள்ளே சிறையாக
தனக்குள்ளே புதைந்து தவித்து வாழும் மீரா....

அன்னையின் பணத்தாசை
அப்பாவின் பரிதவிப்பு
அன்பு தங்கையின் படிப்பு அவர்களிடமிருந்து ஒதுங்கி
அவனுக்கென்று ஓர் தனி அடையாளமாய் உயர்ந்து நிற்கும் முகுந்தன்..


தந்தையின்
தோழரின் மகளாக மீரா வரவு
திவ்யாவும் நேசமாக பழக தோழியாக தோழமையுடன் ஓர் பந்தம்
தோன்றியது...

தொடர முடியாத நேசமாக
தந்தையிடமிருந்தும் தங்கையிடமிருந்தும் பிரித்து
தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற முகுந்தன்...


தனிமையை மீண்டும் தத்தெடுத்தாள் மீரா...
தன்னுடனே வைத்துக் கொண்டு
தொலைந்த உலகை
தன்னவளுக்கு காட்டிட...

தடைகள் மெதுவாக தகர்த்து
துடித்த மனதில்
தெரியாமலே நிறைந்தது இருவரிடமும் காதல்....

கடல் போல
கோபம் கொண்ட முகுந்தனின் மனதில் காற்று போல
பயம் கொண்ட
மீராவின் அமைதி
கடல் அலையை அரவணைத்துச் செல்லும் கரை போல
அவளை அணைத்து சென்று
அவளுள் மூழ்கும் காதல் முகுந்தன்🤩மீரா காதல்

முரடனுக்கும் மென்மைக்கும் அதிரடிக்கும்
அமைதிக்கும்
உருவான
காதல் அழகு...

சொல்ல முடியாத பயம் சூழ்நிலையால்
சோகமாய் உருவாகும் மீரா
சொல்லாத கதையும்
சேர்த்து வைத்த சோகத்தையும் தீர்த்து சுகமாய் மாற்றும் முகுந்தனின் அரட்டல் மிரட்டல் காதல்....


தந்தையின் உறவு தெளிவாக,
தாயின் கோபம் அடங்க,
தனயனாக கடமையை நிறைவேற்ற
தங்கைக்கு உகந்த வாழ்வு தந்து
தமையனாக
துணை நின்று
துடிப்பாய் வாழ வைக்கும் முகுந்தன் அருமை....

அமைதியான சந்தங்கள் அவள்
அதிரடியான சங்கீதம் அவன்....
அவர்கள் இருவரும் மீட்டும் அழகிய காதல் தான்
சிருங்கார கீர்த்தனை...

அருமை மச்சி வாழ்த்துக்கள் 👍🏻 👏🏻👏🏻👏🏻👏🏻❤️💐🤩🙏🏻
 
Top Bottom