- Joined
- Mar 22, 2025
- Messages
- 839
- Reaction score
- 454
- Points
- 63
அத்தியாயம் 23
கிரிஷ் கேட்ட கேள்விக்கு மறுமொழியே இல்லாமல் உறைந்துபோன ராதாவை உலுக்கி,
"ராதா... என்ன ஆச்சு? ஏன் யோசனை பண்ணிட்டு இருக்க? சொல்லு!"
அவள் சொல்ல ஆரம்பித்து, தன் பள்ளி நினைவுகளுக்குச் சென்று விட்டாள்.
ஏழு வருடங்களுக்கு முன், ராதா படிப்பில் கெட்டிக்காரி. அதன் காரணமாக ரங்கநாதன் அவளை ஒரு தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்.
அன்று பன்னிரண்டாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு நடந்துகொண்டிருந்தது. ராதாவும் சாங்கீதாவும் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். மினாளியும் அதே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். மினாளி பணம் படைத்தவள்; தாயை இழந்தவள். அப்போதிலிருந்தே அவளுக்குப் போதை பழக்கம் இருந்தது. தாயில்லாப் பிள்ளைக்கு அரவணைத்து அறிவுரை சொல்லவும் யாரும் இல்லை. அவள் தந்தை மறுமணம் செய்துகொண்டதால், அவள் தந்தையை வெறுத்தாள். மனம் வெறுமையில் வாடியவளுக்குப் போதை துணையாகிப் போனது. சில பள்ளிகளில் அவளது நடவடிக்கை சரியில்லை என்ற காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்து அனுப்பினர். மினாளியின் அப்பா மகள் படித்தால் போதும் என்று பணத்தை கொட்டி இந்த பள்ளியில் சேர்த்தார். ஆனாலும் அவள் குணம் மாறவில்லை.
ராதா நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் பெறுவதால், அவள் மீது ஒரு காழ்ப்புணர்ச்சி கொண்டு, அவளை தினம் அவமானப் படுத்துவதே மினாளியின் வேலையாக இருந்தது.
ஒருநாள் ராதா தன் அம்மாவிடம், "அம்மா... நான்... இனி ஸ்கூல் போக மாட்டேன்," என்று அழுத கண்களோடு சொன்னாள்.
அன்னம் ரங்கநாதனிடம் சொல்ல, அவர் மகளிடம் கேட்க, அவள் அழுதுகொண்டே மினாளியை பற்றி சொல்ல, "நான் நாளைக்கு வந்து உன் பள்ளிகூடத்துல பேசுறேன் பேசுறேன், சரியா? இப்ப சாப்பிட்டுத் தூங்கு," என்று சொல்லி அவளைத் தூங்க வைத்தார்.
மறுநாள் டீச்சரிடம் மினாளியை பற்றி கூறி விசாரிக்க கேட்க, அந்த ஆசிரியர்கள் பள்ளியின் பெயர் கெட்டுவிட கூடாது என்று, ஏதோ சொல்லி மழுப்பி அனுப்பி வைத்துவிட்டனர்.
ஓர் நாள், பள்ளியில் ஆண்டு விழா நடந்துகொண்டிருந்தது. மினாளி நடனப் போட்டியில் கலந்துகொள்ள, ராதா பேச்சுப் போட்டிக்குப் தயாராக இருந்தாள். அன்னை தெரேசா பற்றிப் பேசத் தயாராகிக்கொண்டிருந்தாள். இதனைக் கண்ட மினாளி, ஒரு பையனிடம் கூல் ட்ரிங்ஸில் போதை மருந்தை கலந்து கொடுக்கச் சொல்லிப் பணம் கொடுத்தாள்.
அவனும் அதை ராதாவுக்குக் கொடுத்துவிட, அவளும் குடித்துவிட்டாள். சிறிது நேரத்தில் கண்ணை இருட்டிக்கொண்டு வந்து, அவளைத் தடுமாறச் செய்தது. இருந்தும் அவள் மேடை ஏறிவிட்டாள். பேசத் தொடங்கினாள்.
> அன்னை தெரேசா அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும், இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும், பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்...
>
என்று சொல்லிக் கொண்டே அவள் போதை மயக்கத்தில் தள்ளாடினாள். உடைகள் கலைந்தெறிய முற்பட்டாள். ஆசிரியர்கள் அவளைத் தடுக்க, அவள் உதறித் தள்ளிவிட்டு ஓட, யாரோ ஒருவன் மீது மோதி விழுந்தாள். அவன் இவள் கோலம் கண்டு தூக்க, ஆசிரியர்கள் வந்து அவளைக் கூட்டிச்சென்று ஒரு கிளினிக்கில் சேர்த்துவிட்டனர்.
ரங்கநாதன் வீட்டுக்கு போன் செய்து சொல்ல, அன்னமும் விஷயம் அறிந்து அலறித் துடித்துக்கொண்டு கிளினிக் வந்தனர். அவள் மயக்கத்தில் இருக்க,
டாக்டர் ரங்கநாதனிடம்,
"உங்க பொண்ணு ட்ரக்ஸ் யூஸ் பண்ணியிருக்கு. ஒரு மணி நேரம் ஆகும் மயக்கம் தெளிய," என்றார்.
அந்த டாக்டர் சொன்னது புரியாமல் நின்று இருந்த ரங்கநாதன், அங்கே சங்கீதா மூச்சிரைக்க ஓடி வந்தாள். கவலை ததும்பும் கண்களோடு வந்தவள் டாக்டரிடம் ராதவைப் பற்றி கேட்டாள். டாக்டர் சொன்னதைக் கேட்டவள், அதிர்ச்சியில் இருந்தாள். அவள் அப்படி செய்யக்கூடியவள் இல்லை என்று எவ்வளவோ சொன்னாள். ஆனால், டாக்டர் பொய் சொல்ல அவசியம் இல்லை என்று உணர்ந்து, என்ன நடந்திருக்கும் என்ற உண்மையை ராதா மயக்கத்தில் இருந்து தெளிந்த பிறகு தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தவிப்புடன் இருந்தாள் சங்கீதா.
நீண்ட நேரத்திற்குப் பிறகு ராதா கண் விழித்துப் பார்த்தாள். அவள் விழித்ததும், "நான் எப்படி இங்கே வந்தேன்?" என்று கேட்டு ஏதோ புலம்பிக்கொண்டிருந்தாள்.
சங்கீதாதான் பக்கத்தில் இருந்தாள். அவளைச் சமாதானப்படுத்தி, "ராதா அமைதியா இரு. உனக்கு ஒண்ணும் ஆகலை. கொஞ்சம் அமைதியா இரு."
ராதாவுக்கு என்ன நடந்திருக்கும் என்று நினைவில் இல்லை.
இன்னும் அவள் லேசான மயக்கத்தில் இருந்தாள். யோசிக்க யோசிக்க மண்டை வெடிக்கும் அளவுக்கு இருந்தது.
டாக்டர் செக்கப் செய்து பார்த்துவிட்டு, டெஸ்ட் ரிசல்ட்டைப் பார்த்து அதிர்ந்தார். ராதா குடித்த ஜூஸில் மறதியை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கான ஓர் போதை மருந்து இருந்தது.
அதற்கான சிகிச்சையை டாக்டர் செய்யலானார். ஆனால் மினாளி, டாக்டரிடம் பணம் கொடுத்து, சிகிச்சை செய்யக் கூடாது என்று சொல்ல,
“இங்க பாருங்க டாக்டர் அவளுக்கு நீங்க ட்ரீட்மென்ட் பண்ண கூடாது. அவளுக்கு எல்லாம் மறந்து போகனும். உங்களுக்கு வேணும்ங்குற பணம் நான் தரேன்” என்றாள்.
டாக்டர் அவளை முறைத்துவிட்டு.
அவளது கோரிக்கையை மறுத்துவிட்டு.
“மிஸ் மினாளி பண திமிரில் ஆடாத. உன்னை போல ஆளுக்கு அடிபணிந்து போற ஆள் நான் இல்ல. முதல்ல உன் பணத்தை எடுத்துகிட்டு போ” என டாக்டர் கூற.
மினாளி கோபத்துடன் 'டமால்' என்று அந்த அறைக் கதவைச் சாத்திவிட்டுச் சென்றாள்.
ராதா இரண்டு நாள் மருத்துவமனையில் இருந்தாள். பின் வீட்டிற்குச் சென்றாள். ரங்கநாதன் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு போட, அது பூதாகரமாக வெடித்தது.
மினாளி தன் பணத்தால் தவறை ராதா மேல் திருப்பி விட்டாள். கிராமத்தில் சிறிய விஷயமாக இருந்தாலும், அதை பெரிதுபடுத்துவது இயற்கை. அப்படித்தான் ராதாவைப் பற்றிய போதை மருந்து விவகாரம் தீயாகப் பரவி, அனைவரது வாயிலும் பேசப்பட்டு, ராதாவைத் தவறாகப் பேசியது.
ராதா, அவள் அம்மா, அப்பா, தம்பி என்று எல்லோரும் மனதளவில் உடைந்து போனார்கள். அன்றிலிருந்து அவள் பள்ளிப் படிப்பு நின்றுபோனது.
ரங்கநாதன், மகள் படிக்கவிட்டாலும் பரவாயில்லை என்று வீட்டிலேயே வைத்துக்கொண்டார். அவளின் இந்தத் தனிமை வருத்தம் தந்தது. அதற்காகத்தான் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டாள். இன்று இந்தக்கோவிலில் கிருஷ்ணனின் ராதையாக மாறிப் போனாள்…
இவ்வளவும் கேட்டுக்கொண்டிருந்த கிருஷ்ணன், கோபம் கொண்டு எழ, ராதா கிருஷ்ணன் கையைப் பிடித்து, "எங்க போறீங்க மாமா?" என்று கேட்டாள்.
கிருஷ்ணன் கோபமாக, "அவளை ஏதாவது பண்ணனும். விடு ராதா!" என பொங்கி எழுந்தான்.
"அது முடிஞ்சுபோன கதை. விடுங்க. இப்ப அவள் என்ன பண்ணிடுவா? அவ நினைச்சது நடந்துடுச்சு! இனி என்ன பண்ணப் போறா? விடுங்க," என்று அவள் அவனிடம் கெஞ்சிக்கொண்டிருந்த நேரம், கிருஷ்ணன் போன் அலறியது.
போனில் மினாளி சத்தமாகச் சிரிக்க, இவனுக்கு எரிச்சலும் கோபமும் கூடியது. அவள் சிரித்துவிட்டு,
"ஹலோ மிஸ்டர் கிருஷ்ணன்! எல்லாம் தெரிஞ்சிகிட்டிங்க போல. இப்போ உன் ஃபேமிலி என் கஸ்டடியில. பாவம் உன் தங்கச்சி நாலு ஆம்பளைங்க நடுவுல மாட்டித் தவிச்சிட்டு இருக்கா. ஒரு சொடக்கு போட்டா போதும், பசங்க பாய்ஞ்சிடுவாங்க. நீ இப்போ இன்னும் ஹாப் அன் ஹவர்ல இங்க இருக்கணும். லொக்கேஷன் அனுப்பி இருக்கேன். வந்துடு கண்ணா. அப்படியே உன் காதலியையும் கூட்டிட்டு வா..."
அவள் அதிகாரமாகச் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.
கிரிஷ் கோபத்தில், "ச்சே... இவளை...?" என்றவன், ராதாவிடம் ஏதும் சொல்லாமல் புறப்பட, ராதா பின்னால் ஓடி,
"மாமா, நில்லுங்க! எங்க போறீங்க?" அவள் கேட்க, அவன் வண்டியை ஸ்டார்ட் செய்துகொண்டு,
"நான் கொஞ்ச நேரத்துல வந்திடுவேன். நீ சேஃபா இரு," என்று சொல்லிவிட்டுப் போக, இவள் இருக்க மாட்டாது, வீட்டிற்குச் சென்று தன் தம்பியை அழைத்துக்கொண்டு கிருஷ்ணன் போன திசையில் போய்க்கொண்டிருக்கிறாள்.
தொடரும்