கிருஷ்ணனின் ராதை 12 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கிருஷ்ணனின் ராதை 12

New updates

LATEST

ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
845
Reaction score
456
Points
63
அத்தியாயம் 12

இனி

கிரிஷ், ராஜேஷ் திருமணத்துக்குக் கிளம்ப, அவனது அப்பாவும் கூட வருவதாகச் சொன்னதால் இருவரும் சேர்ந்து புறப்பட்டனர்.

காரை கிரிஷ் ஓட்ட, அவன் அப்பா பேசத் தொடங்கினார்.

“கிரிஷ், கல்யாணம் எங்க?”

“ஆர்.கே. மஹால்பா.”

“ம்ம்… போய்ட்டு ஒரு இடத்துக்குப் போகணும்.”

“எங்க பா?”

“முதல்ல கல்யாணத்துக்குப் போவோம், அப்புறம் சொல்றேன்.” என்றார்

கிரிஷ் எதுவும் பேசாமல் அமைதியாகக் காரை ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

மண்டபத்தில்…

ராஜேஷின் அப்பா சங்கரலிங்கம், தேவேந்திரனைக் கண்டதும், “அடடே, ரியல் எஸ்டேட்! வாப்பா, வா! உன்னை பார்த்து எவ்வளவு நாளாச்சு? எப்படி இருக்க? பிஸ்னஸ் எப்படிப் போகுது?” என்றார்.

“எல்லாரும் நல்லா இருக்காங்கையா. நீங்க எப்படி இருக்கீங்க?” தேவேந்திரன் பதிலளித்தார்.

“வாப்பா, உள்ளே! இங்கயே நின்னுட்டு…”
இருவரும் நண்பர்கள். தேவேந்திரன் எம்.எல்.ஏ. சங்கரலிங்கத்தின் பிஸ்னஸ் விஷயங்களில் உதவியாக இருப்பவர். இருவரும் பேசிக்கொண்டே உள்ளே சென்றனர்.

கிரிஷ், ராஜேஷைப் பார்க்கச் சென்றான். ராஜேஷ் கண்ணாடியில் தன் முகத்தை நூறு விதமான எக்ஸ்பிரஷன்களில் பார்த்து, தலையை வாரிக்கொண்டிருந்தான். கிரிஷைப் பார்த்ததும், “வா மாப்ள!” என்றான்.

“நீதானே மாப்ள!”

“ஆமாண்டா… ஆனா…” அவன் ஏதோ சொல்ல வருவதற்குள் ஒரு பையன் வந்து கதவைத் தட்ட, மகி கதவை திறந்து.

“என்ன தம்பி, என்ன வேணும்?”

“இங்கே கிருஷ்ணகுமார் யாரு? அவரை அவங்க அப்பா வரச் சொன்னார்.”

“டேய், எம்டன் கூப்பிடுறாராம்டா!”

“சரிடா, நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன்.”

கீழே, அவன் அப்பா ஒருவரிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, ராஜேஷ் யோசனையுடன் நின்றான்.

“வா கிருஷ்ணா, இவர் மூர்த்தி, பெரிய வி.ஐ.பி… நீ படிச்ச மெடிக்கல் காலேஜ் இவரோடதுதான். மேரேஜ் முடிஞ்சதும் இவரு கூடதான் வெளிய போகப் போறோம். இவருடன் பேசிட்டு இரு, நான் சங்கரைப் பார்த்துட்டு வந்துடுறேன்,” என்று சொல்லிவிட்டுச் சென்றார் தேவேந்திரன்.

மூர்த்தி, கிரிஷிடம் தன் பெருமைகளைப் பேச, பாவம் கிரிஷ் சிரிக்க கண்ட்ரோல் செய்துகொண்டிருந்தான்.


சங்கரலிங்கம் தேவேந்திரனைப் பார்த்து, “யோவ் ரியல் எஸ்டேட் கில்லாடி! பெரிய இடத்தைப் பிடிச்சிட்டியே!” என்றார்.

“எல்லாம் உன் தயவால்தானே. நீதான் ஹாஸ்பிடல் கான்ட்ராக்ட் எடுத்து அறிமுகப்படுத்தின. அவரும் அடிக்கடி வீட்டுக்கு வரும்போது கிருஷ்ணனப் பார்த்துப் பிடிச்சிப் போச்சு. வர மகாலட்சுமியை ஏன் வேண்டாம்னு சொல்லணும்?” என்றார் தேவேந்திரன்.

“சரி, வா! கல்யாணத்துக்கு நேரமாச்சு,” என்றார் சங்கரலிங்கம்.

மணமேடையில் ராஜேஷ், காயத்ரி அமர்ந்திருக்க, ஐயர் மாங்கல்யத்தைத் எடுத்து மாப்பிள்ளை கையில் கொடுத்து, “மாங்கல்யத்தைப் பூட்டுங்கோ!” என்றார். ராஜேஷ் கை நடுங்கத் தாலியைக் கட்ட, கெட்டிமேளம் கொட்ட, காயத்ரி ஆனந்தக் கண்ணீருடன் ராஜேஷ் மனைவியானாள்.

***********

கார்த்திக் வீடு

கோகுலபுரத்திலிருந்து கிளம்பிய சுருளியும் அவன் குடும்பத்தினரும் பெண் பார்க்க, கார்த்திக் வீட்டுக்கு வந்து இறங்கினர். கார்த்திக் இன்னும் கல்யாண மண்டபத்திலிருந்து வரவில்லை. கார்த்திக்கின் அம்மா தனலட்சுமி, வந்தவர்களைத் தண்ணீர் கொடுத்து உபசரித்து அமர வைத்தார். கார்த்திக்கின் அக்கா சித்ரா, கண்ணாடி முன் உட்கார்ந்து அலங்கரித்துக்கொண்டிருக்க, கார்த்திக்கின் தங்கை அமிர்தா ஓடிவந்து,

“அக்கா… அக்கா… மாப்பிள்ளை வீட்ல எல்லாரும் வந்துட்டாங்க, பெரிய பட்டாளமே வந்திருக்குக்கா…” என்றாள்.

“ம்ம்… என்னடி சொல்ற? பட்டாளமே வந்திருக்கா?”

“ஆமாக்கா!”

கார்த்திக்கின் அம்மா, காபி தட்டைக் கொண்டு வந்து, கொடுத்துவிட்டு.

“சீக்கிரம் சித்ரா” என்றார்.

“அம்மா, அந்தக் கூட்டத்தைப் பார்த்தாலே பயமா இருக்கு. இந்தச் சம்பந்தமே வேண்டாம்னு இப்பவே சொல்லிடுமா!” என்றாள் சித்ரா.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. அவங்க மாப்பிள்ளைக்குச் சித்தி மாமாதான். அவங்க எல்லாரும் தனித்தனி வீட்லதான் இருக்காங்க. எல்லாம் அப்புறம் சொல்றேன். இதைப் பிடி, போய்க் கொடுத்துட்டு வா. ‘பிடிச்சிருக்கு’னு சொன்னா அப்புறம் பார்த்துக்கலாம், சரியா?”

“அம்மா…”

“போடி!”

சித்ரா காபி தட்டுடன், இமைகள் தாழ்த்தி, தலை குனிந்து வந்தாள். சுருளி முகத்தில் புன்னகை. “காபி எடுத்துக்கோங்க” என அவன் முன் நீட்டினாள். அவன் எடுத்துக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டே காபி குடிக்க, அவன் கடைசி சித்தி,

“டேய் சுருளி பொண்ணைப் பிடிச்சிருக்காடா?” என்று கேட்டாள்.
அவன் மாடு மாதிரித் தலையை அசைத்து,

“பிடிச்சிருக்கு” என்று சொல்ல, சித்ராவுக்கு அதிர்ச்சி.
காபி கொடுத்துவிட்டு நின்றுகொண்டிருந்த சித்ரா, தன் அம்மாவைப் பார்த்து முறைத்துக்கொண்டே உள்ளே போனாள்.

சித்ராவின் அம்மா தனம் பாவம், விழித்துக்கொண்டிருந்தார்.

சுருளியின் அம்மா,
“பொண்ணுக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கான்னு கேட்டு சொல்லுங்க” என்று கேட்க,

சுருளியின் இரண்டாவது சித்தி, “அதான் பொண்ணு வெட்கப்பட்டு உள்ளே போறதப் பார்த்தாலே பிடிச்சிருக்குதான் போல. மேற்கொண்டு பேச வேண்டியதைப் பேசுவோம்,” என்றாள்.

“இல்லை, என் பையன் வந்து சொன்னால்தான் எதுவும் சொல்ல முடியும். அவன் அவனோட ஃப்ரண்ட் கல்யாணத்துக்குப் போயிருக்கான். ‘வந்துடுறேன்’னு சொன்னான், இன்னும் வரலை. கொஞ்சம் பொறுங்க, இப்ப வந்துடுவான்,” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று,

“ஏய் அமிர்தா, உங்க அண்ணாவுக்கு போன் போட்டு வரச் சொல்லுடி. எங்க போனா?” என தனம் தனது இரண்டாவது மகளிடம் சொல்ல,

அமிர்தா பின் பக்கம் வந்து, அவளா அண்ணனுக்கு போன் செய்தாள். சுருளியின் தம்பி தேவா, அமிர்தாவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, கைகட்டி ஓர் ஓரமாக நின்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அமிர்தா போனில், “டேய் டாக்டர் எருமை! இன்னும் என்ன பண்ற? மாப்பிள்ளைன்னு இங்கே ஒரு கழுதை வந்திருக்கு! இன்னுமா அந்தக் பன்னி கல்யாணம் முடியலை?” என்றாள்.

“ஏய், வாயடி குள்ளக்கத்திரி! வரக் கொஞ்சம் லேட் ஆகும். இவன் வேற வேட்டியைப் பிடிச்சு இழுக்கிறான், அவிழ்த்துடுவான்போல! வர்றேன், வை!” என்றான் கார்த்திக்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த தேவா, அவன் சிங்கப்பல் தெரியச் சிரிக்க, “ஹலோ! என்ன சிரிப்பு? Manners இல்லையா? போன் பேசுறதை ஒட்டுக் கேட்கிறீங்க!” என்றாள் அமிர்தா.

அப்போதும் அவன் சிரிக்க, அவள் தலையில் அடித்துக்கொண்டே உள்ளே போனாள்.

இங்கு கல்யாணம் முடிந்து, கிரிஷ் அவன் அப்பாவும் அந்த வி.ஐ.பி.யுடன் கிளம்ப, கார்த்திக் எப்படியோ ராஜேஷிடம் இருந்து நழுவி, பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

சித்ராவை பெண் கேட்டு வந்தது, ராதாவின் முறைமாமன் சுருளி எனத் தெரிந்தால் என்னவாகும்..?

தொடரும் ✍️
 
Top Bottom