கிருஷ்ணனின் ராதை ❤️‍🩹❤️ 3 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கிருஷ்ணனின் ராதை ❤️‍🩹❤️ 3

New updates

LATEST

ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
844
Reaction score
456
Points
63
அத்தியாயம்-3


(மாயக் கண்ணன் சொய்யும் மந்திரத்தில் மயங்கிய ராதை அவள்)


ரங்கநாதன் பூக்களை பறித்து எடுத்துக்கொண்டு பூ விற்கும் சந்தைக்குச் சென்றுவிட்டார்.


வாயல் வேளை முடிந்து களைப்பாக வந்த அன்னலட்சுமி திண்ணையில் அமர்ந்தார்.. ராதா முகம் கழுவி உடை மாறிக் கொண்டு தன் தோழியுடன் நேரத்தைக் கழிக்கச் செல்ல,
"இப்ப தானேடி வந்த எங்கடி போற நீ?" என்று அவள் அம்மா கேட்டாள்.

"அம்மா..! போகும்போது எங்கே போறேன்னு கேட்கக் கூடாதுன்னு நீதானேம்மா சொல்லுவ? இப்ப நீயே கேட்குற?" என்றாள் ராதா.

"ம்ம்ம்... நீ என்னத்த அப்டி‌ பெருசா வெட்டி முறிக்கப் போற? உன்ன எங்க போறன்னு கேட்டதுக்கு இப்ப குத்தமாகிடுச்சி..!"

"கழுதை கெட்டா குட்டிச்சுவரு வேற எங்க போவேன், முனியா சித்தப்பா வீட்டுக்குப் போயிட்டு வரேன். சங்கீதாவ பார்த்துட்டு வரேன்..!”

"ம்ம்..! சரி நீ சீக்கிரம் போயிட்டு வா..."

"ம்ம்ம்... சரிம்மா." என்றவள் வாசல் கேட்டை நெருங்கினாள்..

மீண்டும் அன்னலட்சுமி அழைத்து.

“ராதா..! அடி... நில்லுடி! போற வழியில உங்க பெரிய அத்தை வீட்டுக்கு போய் இந்த மல்லிப்பூவ கொடுத்துட்டு போடி. சாரதா வந்துருக்கா. அவளுக்குப் பூ வச்சிக்க ரொம்பப் பிடிக்கும்டி..!”


"அப்படியா...! அண்ணி எப்போ வந்தாங்க...! ஆனா அங்க நா போனா அப்பா திட்டுவாரே..!”

"நேத்து வந்தா. உங்கப்பா வரதுக்குள்ள போயிட்டு வா..! பாவம்டி அவ... புள்ளை இல்லாதவ... பாத்துட்டு நலம் விசாரிச்சிட்டு அப்புறம் சங்கீதா வீட்டுக்குப் போ..." என்றார் அன்னலட்சுமி..

"சரிம்மா...!" என்றவள் குதித்துக் கொண்டு ஓடினாள்.

ராதாவின் அத்தை வீடு..

வாசலில் ராதாவின் அத்தையின் மாமியார் கிழவி, திண்ணையில் அமர்ந்து. வெற்றிலையை வாயில் போட்டு குதப்பிக் கொண்டு, ராதா வருவதை பார்த்து..

"ஆரு அது...!" என கன்னம் சுருக்கம் விழுந்த முகத்துல இருக்க ரெண்டு கண்ணையும் இன்னும் நல்லா சுருக்கி கேட்க…

"பாட்டி, அத்தை இல்லையா...‍!" என ராதா அவள் அருகே சென்று கேட்க்க..

"ஓ... அன்னம் மவளா...!"

"ஆமா பாட்டி. அண்ணி வந்துருக்காங்கன்னு அம்மா சொல்லுச்சு. பூ குடுத்து விட்டாங்க. அண்ணி எங்கே? அண்ணாவும் இருக்காங்களா?"

"இல்லடி. அவன், இவளை ஆட்டோவுல அனுப்பி வச்சிட்டு வேலை இருக்குன்னு போய்ட்டான்..." என்று
சொல்லிவிட்டு கிழவி பெருமூச்சு விட்டு சாரதாவை நினைத்து கவலைப்பட்டு கண்கலங்கிப் போனார்.

ராதாவும் வருத்தத்துடன் உள்ளே எட்டிப் பார்த்து,

"ஏன் பாட்டி... இந்த வீட்டுப் பெரிய காளை மாடு வீட்டுல இருக்கா...!"

"யாரைடி, கேக்குறவ!"

"அதான் உம்ம பெரிய பேரன்... !"

"அடி இவளே! உலகையே கொண்டு வெளுக்கப் போறேன் உன்னை. என் பேரன் உனக்கு மாடா? ஒரு நாளாச்சும் மாமான்னு கூப்பிடுறியா? வாயிலேயே குத்தப் போறேன் போடி..."

"அந்தத் தடி மாட்டை மாமான்னு வேற கூப்பிடுவாங்களா பே..."
என ராதா உள்ளே சென்றாள்.. சாரதா பிள்ளை இல்லா ஏக்கத்துடன் கவலை தோய்ந்த முகத்துடன் சமையல் செய்து கொண்டு இருக்க,

உள்ளே வந்த ராதா.."அண்ணி எப்ப வந்தீங்க? எப்படி இருக்கீங்க...!" என்று‌கேட்டாள்..

சாரதா சிறு புன்னகையுடன்... "நல்லா இருக்கேன் ராதா. நீ எப்படி இருக்க... !"

"நான் நல்லா இருக்கேன்... அம்மா பூ கொடுத்தாங்க... சரி ஏன் இப்டி முகம் வாடி போய் இருக்கு..!”

“என்னன்னு சொல்ல.. என் நாத்தனார்க்கு இன்னைக்கு வளைகாப்பு.. நா அங்க இருந்தா விஷேசம் கெட்டுப்போகுமாம்..‌அதான் நேத்தைக்கு கூட்டிடு வந்து விட்டுட்டு போறாருடி.. நா யாருக்கு என்ன பாவம் பண்ண அந்த கடவுள் ஏன் இப்டி என்ன கஷ்ட்டப்படுத்துறாரு..!” சாரதா கண்கள் கலங்கியது..!”


“ ஏன் அண்ணி நீங்க ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்க்கலாமே?"

"போயிட்டுத்தான் இருக்கேன் ராதா. ஒரு பலனும் இல்லடி. ஒரு கல்யாணம், வளைகாப்புன்னு போக முடியல. மனசு ரொம்பக் கஷ்டமா இருக்கு.” என சாரதா அழ ஆரம்பிக்க..

"அழாதீங்க அண்ணி. நல்ல டாக்டரா போய்ப் பாருங்க. நான் சங்கீதா வீடு வரைக்கும் போயிட்டு வரேன் அண்ணி..."

"ம்ம் சரிடி ராதா, தம்பிக்கு நாளைக்குப் பொண்ணு பார்க்கப் போறாங்க. மாமாவும், மாமியும் வரணும்னு சொல்றியாடி..! உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லுடி! நடந்தத மனசுல வச்சிட்டு அப்டியே இருந்துட போறாங்க..!"

"நான் சொல்றேன். இருந்தாலும் அத்தைய வந்து சொல்லச் சொல்லுங்க அண்ணி. அப்பா கோவிச்சுக்குவாங்க..."

"சாயங்காலம் வருவாங்க. அம்மா வந்தா அனுப்புறேன்..."

"ம்ம்ம்... நான் போயிட்டு வரேன்..."

என்றவள் வெளியே வர. அவள் கிழவியிடம் சொன்ன தடி மாடு வீட்டுக்குள்ள வந்துக் கொண்டு இருக்க, இவள் வாய்க்குள்ளேயே முணுங்கினாள்,

‘ஐயோ, கிழவி ஏதும் போட்டு குடுத்துடுச்சோ? கையை வேற முறுக்கு புழியுறாப்ல முறுக்கிட்டு வருதே...!" என்று முணங்கிக் கொண்டு அவனை தாண்டி போக. அவன் அவளை இழுத்து..

"ஏய் நில்லுடி! எங்கடி வந்த...?"

என சுருளிராஜன் அவளை மிரட்டிக் கேட்க,
இவள் முறைப்புடன்..
"ஆஆ… வலிக்கிது கைய விடு..!”

“நீ எதுக்குடி எங்க வீட்டுக்கு வந்த..! அத முதல்ல சொல்லு..!”

“அது எங்கம்மா பூ கொடுத்தாங்க. அதான் குடுத்துட்டுப் போக வந்தேன்..."

"பொண்ணு குடுக்க மாட்டேன்னு சொன்னாரு. பூ மட்டும் குடுப்பாரா? அன்னைக்கு அந்த பேச்சு பேசுனாரு"

"அது... அது... அண்ணிக்கு அம்மா கொடுத்தாங்க..."

"குடுத்துட்டியா...?"

"ம்ம்ம்..."

"ஆமா... காளை மாடுன்னு சொன்னியாமே...?"

"விடு, நான் போகணும்..."

“கேட்டதுக்கு பதில் சொல்லுடி..!”

“ஆமா சொன்னே..! நல்லா கருப்பு காளை மாடு மாதிரி தான் இருக்க..!”

“திமிரா உனக்கு அப்டியே உன்ன..!” என சுருளிராஜன் அவள் கன்னத்தை அழுத்தி பிடித்து இழுத்தான்.. அவள் கத்தினாள்..

“அண்ணி..! அண்ணி..! அண்ணி..!”

ராதா சத்தம் கேட்டு சாரதா பதறிக் கொண்டு வந்து..
“என்ன ராதா..! என்னாச்சு..!”

சுருளியை முறைத்தபடி..
“மாடு, முட்ட வருது..!”

“ஏன்டா சுருளி, அத பிடிச்சி கட்டாம என்னடா பண்ற..! போ மாட்ட புடிச்சி கட்டு.. போற வரவங்கள இடிச்சி தொலைய போவுது. வம்பு எப்ப வரும்ன்னு பார்த்துட்டு இருப்பாங்க இந்த ஊர்ல..!” என்று சாரதா சொல்ல ராதா சுருளியை முறைத்துவிட்டு ஓடினாள்..

ராதா சங்கீதா வீட்டு கேட்டைத் தட்டி

"அடியே சங்கீ, இருக்கியா...?"

"ம்ம் இருக்கேன். வாடி..."

"என்ன மேடம் எப்டி இருக்கீங்க..?"

"நல்லா இருக்கேன்.. காலையில தான் வீட்டு வந்தேன்.. நானே உன்ன பார்க்க வரலாம்ன்னு இருந்தேன் நீயே வந்துட்ட. அப்புறம் வேற என்ன விசேஷம்...?"

"என் அத்தை பெத்த அந்தத் தடி மாட்டுக்குப் பொண்ணு பார்க்கப் போறாங்களாம்..."

"உங்க வீட்டுலதான் பேச மாட்டீங்களே? அப்புறம் எப்படிப் போன..?"

“நான் சாரதா அண்ணியைப் பார்க்கப் போனே. அப்போ தான் அண்ணி சொல்லுச்சி..! சரியான குடிகாரன் எவ வந்து இது கிட்ட சிக்க போறாலோ..!”

“ஆமா ராதா ரொம்ப பாவம்..! உன் அப்பா மட்டும் அன்னைக்கு அப்டி பண்ணாம இருந்து இருந்தா..! உனக்கும் கல்யாணம் ஆகி இருக்கும்..!”

"இனி பேசி என்ன ஆக போகுது..!”

“இருந்தாலும் இவ்ளோ கல் நெஞ்சமா இருக்க கூடாது..! உன்ன சுத்தி சுத்தி வந்தாரு..! ரெண்டு வருஷம் ஆக போகுது அவருக்கு உன்ன பத்தி நினைவு இருக்கோ இல்லையோ..!”

“அப்டி மட்டும் அவரு என்ன மறந்தாரோ இந்த ராதாவ ராட்ச்சசியா தான் பார்ப்பாரு..!”
என்று கூறிய ராதா கண்கள் கலங்கியது..

***********

"ஏண்டி அன்னம், எங்கே இருக்கவ?" என்று குரல் கொடுத்தபடி உள்ளே வந்து நுழைந்தார் சந்திரவதி. ரங்கநாதன் மூத்த அக்காள்.

"ஆத்தா, எப்படி இருக்கே?" என கோதையம்மாள் பாட்டியை நலம் விசாரித்தார்..

"நல்லா இருக்கேன்டி. இப்படி உட்காரு. என்ன விஷயம்? காரணம் இல்லாம வர மாட்டியே..!"

"பெரியவனுக்கு கல்யாணம் பண்ணிடணும்ன்னு பார்க்குறேன். இந்த ஊர்ல எவன் பொண்ணு தரேங்கிறான்? தோ ரங்கன் கூட குடிகாரன்னு சொல்லி பொண்ணு தர முடியாதுன்னுட்டான். என் பொண்ணுக்குத்தான் குழந்தை குட்டின்னு இல்ல. இவனுக்குக் கல்யாணம் பண்ணி பேரன் பேத்தி பார்த்துட்டு கண்ணை மூடலாம்ன்னு பார்க்குறேன்.”


"இந்த மதிணி மோர் குடிங்க." என அன்னலட்சுமி சந்திரவதியை உபசரித்து, அருகில் அமர்ந்தார்..

"அன்னம், பையனுக்குப் பொண்ணு பார்க்கப் போகணும். நாளைக்கு காலையில பத்து மணிக்கு. ரங்கன் வந்தா சொல்லு..! குடும்பம்ன்னா எல்லாம் இருக்கும் தான்..! சுருளி ராதாவ கட்டிக்க தான் ஆசைப்பட்டான்..! அவன் இந்த ஊருக்குள்ள வரமா இருந்து இருந்தா..! இந்நேரம் சுருளி ராதா கல்யாணம் முடிஞ்சி இருக்கும். பேரனோ பேத்தியோ பார்த்து இருப்பேன்..!" சந்திரவதி புலம்பலை சலிப்புடன் கேட்டுக் கொண்டு இருந்தார் அன்னலட்சுமி..

"எதுக்கு அண்ணி போன கதைய பேசிட்டு..! அவர் வந்தா சொல்றேன் அண்ணி. ஆனா உங்க புள்ள நடந்துக்குறதுதான் கொஞ்சம் கூட சரியில்ல. எப்ப எங்கே பார்த்தாலும் வம்பிழுக்குறான்..! வரவ கிட்டையாச்சும் நல்லபடியா நடந்துக்க சொல்லுங்க..!"

"நான் என்னடி பண்ணுவேன் அன்னம்? அவன் அப்படியே அவங்கப்பன் குணம்... அவன் பேசுனதெல்லாம் நினைச்சுட்டு நின்னுடாத அன்னம். தம்பியை கூட்டிட்டு வா..! தாய்மாமன்னு பேருகாச்சும் வந்த நிற்க சொல்லுடி"

"சரிங்க அண்ணி சொல்றேன்..!"

"நான் சின்னவளைப் பார்த்துட்டு வரேன்.!”

என்று சொல்லி அவர் கிளம்பிவிட்டார்.

அன்னலட்சுமி மகள் வாழ்க்கையை நினைத்துக் கவலைக் கொண்டார்..

தொடரும் ✍️
 
Top Bottom