- Joined
- Mar 8, 2026
- Messages
- 234
- Reaction score
- 169
- Points
- 43
கார்காலம் நீ தான் அன்பே
அத்தியாயம் 19
நிஷா ராஜன்
அதுவரை இருந்த ராகவின் மனநிலை இப்போது முற்றிலும் மாறி இருந்தது. அவளின் வேகத்தை பார்த்த மரியா, "கேப்டன் நில்லுங்க. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும். இது சாராவின் உயிரை பற்றிய விசயம்" என்றாள்.
சாராவை பார்க்க ஆர்வமாக ஓடி ராகவின் கால்கள் மரியா சொன்னதை கேட்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றது.
"ஏன் என்ன ஆச்சு சாராவுக்கு எதுவாயிருந்தாலும் உண்மையை சொல்லு" என்று சத்தமிட்டான். அதைக் கேட்டவள். "கேப்டன் இப்போ இருக்க சூழ்நிலையில சாரா கிட்ட அதிர்ச்சியான அவள் சந்தோஷ படக் கூடிய எந்த ஒரு செய்தியையும் சொல்லக்கூடாது.
அவள் கடல்ல குதிச்சதால அது மட்டும் இல்லாமல் டிப்ரஷன்ல இருந்திருப்பா போல, அதனால அவளின் மூளையில் சில அடைப்புகள் ஏற்பட்டிருக்கு அதை இப்போ எங்களால முடிஞ்ச அளவுக்கு மெடிசன்லயே கரைச்சிருக்கோம். மேற்கொண்டு ஏதாவது பிரச்சினை நாம வரவிடாம பாத்துக்கணும்" என்று சொன்னாள்.
அதைக் கேட்டவன் ராகவ் ஒரு கணம் திகைத்து போனான். "இப்போ அதுக்கு நான் என்ன பண்ணனும்." என்றான். அவனுடைய அழுத்தமான குரலில்,
"நீங்க எப்பவும் போல அவகிட்ட இருங்க. அது போதும் எங்களுக்கு தெரிஞ்சு நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறது எங்க யாருக்குமே தெரியாது" என்று மரியா சொல்ல,
'அவள் இந்த அளவுக்கு என் மேல பைத்தியமா இருக்கான்னு எனக்கு இப்போ தான் தெரியும்' என்று அவன் மனதில் நினைத்தான்.
"சரி வாங்க அவங்களை பாக்கலாம்" என்று மரியா அழைத்து சென்றாள்.
ஆனால் ராகவ்க்கு இப்போது உருவாகியுள்ள புது தோன்றல் அவன் இதற்கு முன் அனுபவித்திராத வலிகளையும் அவனுக்கு கொடுத்தது.
அந்த அறையில் அவள் படுக்கையில் கண் மூடி படுத்துக் கிடந்தாள். அவளை பார்த்த ராகவின் மனம் எப்போதும் இல்லாதது போல அலைபாய ஆரம்பித்தது.
அவளின் தெளிவான முகம் அவனுடைய மனகுழப்பத்தை குறைத்தது. அவன் வந்தும் அவள் கண் விழித்து பார்க்காமல் படுத்திருந்ததை பார்த்த ராகவ் அவன் அடிக்குரலில் இருந்து செருமினான். அவள் கண் விழித்து பார்க்கவில்லை. ராகவ் அதை கண்டவுடன் லீனாவிடம் "என்னாச்சு லீனா, லெப்டினென்ட் சாரா கண் விழிச்சிட்டாங்கன்னு சொன்னாங்க. ஆனா அவங்க இன்னும் மயக்கத்தில் இருக்கிற மாதிரி தான் இருக்கு" என்று அவன் சொல்லவும் அப்போதுதான் சாரா கண்விழித்து பார்த்தால் அருகில் இருந்த கேப்டன் ராகவை பார்த்து எதுவும் பேசாமல் அமைதியாக எழுந்து அமர்ந்தாள்.
அவளிடம் இப்போது அவனுக்கு என்ன பேச வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால் அவளின் அருகாமை அவனுக்கு ஒரு நிம்மதியை தந்தது. எதுவும் பேசாமல் அருகில் இருந்த நாற்காலியை அவளின் படுக்கையை புறம் எடுத்து வைத்து அமர்ந்தான்.
அதை பார்த்துக்கொண்டிருந்த சாரவிற்கோ அவனுடைய நடத்தையில் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தாள் ஆனால் அதை அவனிடம் அப்போது காட்டிக் கொள்ளவில்லை.
அருகில் இருந்து லீனாவையும் மரியாவையும் திரும்பிப் பார்த்த கேப்டன் ராகவ் மீண்டும் சாராவைப் பார்த்து "ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா?" என்று அதட்டலாக கேட்டான்.
கேப்டனின் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட மரியா லீனா இருவரும் அந்த அறையை விட்டு வெளியேறினார்கள்.
அது ஒன்றும் சாராவிற்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. "நான் சாப்பிட்டா என்ன சாப்பிடாட்டி போனா உங்களுக்கு என்ன கேப்டன் ராகவ்!" என்றாள் அழுத்தமாக,
"அதுவா! நா இந்த கப்பலோட கேப்டன் இங்க இருக்க ஒவ்வொரு ஆட்களும் எனக்கு ரொம்ப முக்கியமானவங்க அதே மாதிரி தான் நீயும். ஆனா உங்க கிட்ட இருக்கு ஸ்பெஷல் ஒன்னு என்ன தெரியுமா! உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் கவர்மெண்ட் கிட்ட மட்டும் இல்ல நம்மளோட வீட்டுலயும் நான்தான் பதில் சொல்லணும். அதை புரிஞ்சுக்கோ! மத்தபடி உன் மேல எனக்கு எந்த ஒரு சாஃப்ட் கார்னரும் இல்ல," என்று சொன்னவனை முறைத்தாள் சாரா.
'அப்படியே சாஃப்ட் கார்னர் இருந்துட்டாலும்' என்று மனதில் நினைத்துக் கொண்ட சாராவிற்கு தெரியாது. அவனுக்குள் இப்போது அவள் மட்டும் தான் மனம் நிறைய நிறைந்து இருக்கிறார் என்று,
அவள் அப்படி முகத்தை வேறு புறம் திருப்பிக் கொள்ள அதைப் பார்த்து ராகவின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.
"இங்க பாரு என் மேல கோபப்படுறன்னு தேவையில்லாம உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத என்று சொன்ன ராகவ் அவளின் அருகில் வந்து அவளின் கேஸ் ரிப்போர்ட்டை எடுத்து பார்த்தான். அதில் முக்கியமான எந்த விவரங்களும் எழுதப்படவில்லை.
அதைப் பார்த்தவன் நன்றாக புரிந்து கொண்டான். 'எல்லாம் இந்த ராட்சசிக்கு கீழே தானே இருக்குங்க. இவ கண்டு பிடிச்சிடுவான்னு எதையும் எழுதாம வச்சிருக்காங்க.' என்று நினைத்து சிரித்தான்.
அவன் மௌனமாக சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்த சாராவிற்கு கோபம் தலைக்கேறியது.
"என்ன கேப்டன் சார்! இங்க வந்து என் ரிப்போர்டை பார்த்து எதுக்கு சிரிச்சுட்டு இருக்கீங்க" என்று கோபமாக கேட்டாள்.
அவள் கேட்டதை பார்த்த ராகவ் மீண்டும் நன்றாக சிரிக்க ஆரம்பித்தான். "இல்ல ஒரு வேளை சாப்பிடாம இருந்ததுக்கே கோழிக்குஞ்சு மாதிரி கீழ சிதறி விழுந்துட்ட, இதுல வாய பாரு காது வரைக்கும்" என்று சொல்லி மீண்டும் சிரித்தான்.
"கேப்டன் எதுக்கு இப்போ இப்படி சிரிச்சு என்ன கடுப்பாக்குறீங்க. போய் ஏதாவது முக்கியமான வேலை இருந்தா பாருங்க" என்று அவள் கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"இன்னும் நாம் இருக்கிற இடத்துக்கு சிக்னல் சரியா கிடைக்கல, கிடைச்சதுக்கப்புறம் இருக்குது உனக்கு.
எங்க அக்கா அதாவது உன்னோட அம்மா கவிதா கிட்ட சொல்லி நல்ல வாங்கி வைக்கிறேன்" என்று சொன்னவன்.
"முதல்ல வாய தொற ஒழுங்கா சாப்பிடு" என்று அவன் ஏற்கனவே அவளுக்காக எடுத்து வைத்திருந்தார் பிரட்டில் ஜாமை தடவி ஊட்டி விட்டான்.
தன் தாயின் பெயரை கேட்டதும் அவளுக்கு பயம் உள்ளுக்குள் ஒட்டிக்கொண்டது. "மாமா அம்மாகிட்ட மட்டும் எதுவும் சொல்லிறாதீங்க. அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க" என்று அழுவது போல் சொன்னாள்.
"ஓ உங்க அம்மா கஷ்டப்படுவாங்களா, நீ பண்றத பாத்தா அப்படி எனக்கு தெரியலையே அப்போ நாங்க எல்லாம் எதையும் நினைச்சு கஷ்டப்பட மாட்டேன்னு நினைக்கிறாயா?" என்று அவன் சொல்ல,
அவள் வேகமாக சிரித்துக் கொண்டு "என்னது எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீங்க கஷ்டப்பட போறீங்களா? ஐயோ! அப்பப்பா! போங்க மாமா முக்கியமா ஏதாவது வேலை இருந்துச்சுன்னா அதை போய் பாருங்க இப்படி உட்கார்ந்து காமெடி பண்ணிட்டு இருக்காதீங்க" என்று சொல்லி அவனை முறைத்தாள்.
"உனக்கு அந்த அளவுக்கு தைரியம் ஆயிடுச்சா, இரு நிச்சயமா எங்க அக்கா கிட்ட உன்ன நான் போட்டு விடுறேனா? இல்லையா பாரு?" என்று அவன் முகத்தை கோபமாக வைத்திருப்பது போல் சொல்லவும்.
அதைக் கேட்டவள் பயத்தில் "அய்யோ மாமா தயவு செஞ்சு எதையும் சொல்லிடாதீங்க" என்று அழாத குறையாக கெஞ்சினாள்.
"சரி! சரி! உன்ன பாத்தாலும் எனக்கு பாவமா தான் இருக்கு, அதனால இன்னைல இருந்து நாம இந்த கப்பலை விட்டு தரையில இறங்குற வரையும் நான் என்ன சொல்றேன்னோ அதை நீ கேட்கணும். டீலா" என்றான் ராகவ்.
முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சரி என்று தலையாட்டினாள். "தட்ஸ் மை கேர்ள்" என்று சொன்னவன்.
"பாப்பா!" என்று வாயெடுக்க அவனை முறைத்தாள் சாரா.
"ஓ நீ இப்ப பாப்பா இல்லல்ல. சரி லெப்டினென்ட் சாரா" என்று அவன் கிண்டலாக அவளின் பெயரை உச்சரிக்க அவளுக்கு கோபம் தலைக்கேறி நின்றது.
ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் "சொல்லுங்க கேப்டன்!" என்று அவளும் பதிலுக்கு கிண்டல் செய்வது போல அவனிடம் சொல்ல அதைக் கேட்டு சிரித்தவன்.
"உன்னோட முதல் வேலை என்ன தெரியுமா" என்றவனை பார்த்து "சொல்லுங்க கேப்டன்!" என்றால் ஏதோ இரும்பு மனிதன் போல,
அதைப் பார்த்து சிரித்தாலும் "ஆனால் உனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான் டி ராட்சசி" என்று சொன்னவன் "முதல்ல நல்லா ரெஸ்ட் எடு அடுத்த டைம் நான் வரும் போது தூங்கிட்டு இருக்கல, உனக்கு பனிஸ்மெண்ட் கன்பார்ம். என்கிட்டயும் கூடவே, என் அக்கா கிட்டயும்" என்று சொன்னவன் அறையில் இருந்து வெளியே சென்றான்.
"அய்யோ எங்க போனாலும் நான் இந்த கேப்டன் கிட்ட வசமா மாட்டிக்கிறேனே நான் பாவம் இல்லையா கடவுளே என்னை காப்பாத்து" என்று அவள் அந்த அறையில் கேட்கும் படி சத்தமாக சொல்ல,
"அப்படியா அப்போ இப்போதைக்கு உனக்கு கடவுள் நான் தான்" என்று புருவத்தை மேலே உயர்த்தி அவளை சீண்ட,
"என்ன கேப்டன் சார்! உங்க நடவடிக்கையே சரியில்லாத மாதிரி இருக்கு" என்று அவன் முகத்தை பார்த்து எதையோ துப்பறிவது போல ஆராய துவங்கினாள்.
"அப்படியா என் முகத்துல தாடி, மீசை கண்ணு, மூக்கு எல்லாம் இருக்க வேண்டிய இடத்துல கரெக்ட்டாதானே இருக்கு, என்ன சரியில்லாமல் போச்சு" என்று அவன், அவன் முகத்தை அருகில் இருந்த கண்ணாடியில் பார்த்து ஒவ்வொன்றும் சரியாக இருக்கிறதா என்பது போல் தேடிப் பார்க்கிறேன் என்ற பெயரில் அஷ்ட கோணலாய் கண்ணாடியை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதை பார்த்து சிரித்த சாராவிற்கு "முடிவே ஆயிடுச்சு உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சின்னு" என்று சத்தமாக சிரித்தாள்.
அதைப் பார்த்த அவன் "நீ ரொம்ப சிரிக்காத, முதல்ல டேப்லட்டை போடு. டேப்லெட் கொடுக்க மறந்துட்டேன்" என்று அவளின் அருகில் வைத்திருந்த மாத்திரைகளை எடுத்து அவளின் வாயில் திணித்தான்.
"ஏன் எல்லா கவரும் பிரிஞ்சு இருக்கு. டேப்லட்ஸோட அட்டை எங்க" என்று சாரா அவனை கேள்வியாக பார்க்க, ஒரு கணம் அவன் திகைத்துப் போய் நின்றான்...
"ஓ அதுவா மேடம் என்ன மாத்திரை சாப்பிடுறன்னு கண்டு பிடிச்சிட்டா, அதனால தான் மாத்திரை அட்டையை பிரிச்சு வச்சேன்." என்று உள்ளே வந்தாள் லீனா.
அவள் உள்ளே வரவும் அப்போது ராகவிற்கு சற்று இதயத்துடிப்பு நிதானம் ஆனது போல் ஆனான்.
"இது ஜஸ்ட் ப்ரஷர் அண்ட் மைகிரைன்க்கு (ஒற்றை தலைவலி) போடுற மாத்திரை தான். உனக்கு பிரசர் லோ ஆகவும் தான் இப்படி மயங்கிருக்க காரணம். மாத்திரையை போடு டி. அட்டை பார்த்து மயக்கம் வந்திரும்னு தான். கேப்டன் சொல்லி இந்த வேலையை பார்த்தோம்" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் லீனா.
"அது சரி என்னை ஒருவழி பண்ணாம விட மாட்டிங்க போலயே" என்று சொன்னவள் எதுவும் பேசாமல் ராகவ் கையில் இருந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டாள்.
அவள் அப்படியே உறங்கி விட, வெளியே வந்த ராகவ் "தேங்க்ஸ் லீனா!" என்று அவளிடம் சொல்ல,
"உங்க இரண்டு பேருக்கும் இடையில் என்ன இருக்குன்னு எங்களுக்கு தெரியாது. ஆனால் உங்கள் காதல் உன்னதமானது அது மட்டும் நல்லா தெரியும்." என்று அவனிடம் சொல்ல, கண்கலங்கி நின்றான் ராகவ்.
முதன் முதலாக அவன் இன்று தான் அவளிடம் காதலை சொல்லி இருக்கிறான். "சாரா ஐ லவ் யு" என்று அவன் சொல்ல, அவனின் காதுகளில் ஒலித்தது. "ஐ லவ் யு ராகவ்" என்ற லயாவின் குரல்...