- Joined
- May 4, 2024
- Messages
- 5,377
- Reaction score
- 3,223
- Points
- 113
அத்தியாயம் : 6
காலை நேரத்தில் எழுந்து தனது அன்றாடக் கடன்களை முடித்துவிட்டு, அம்மா, அப்பாவிடம் பேசியவள், தோழி விமலாவுக்கு ராத்திரி அனுப்பிய வாட்ஸ்அப் செய்திகளில் மீதமுள்ளவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது பிரதாப்பின் பெயர்தான் இருவருக்கும் இடையில் பிரதானமாக ஓடிக்கொண்டிருந்தது. அதேநேரம் விமலா, “அப்படின்னா உனக்கு ஆள் ரெடி பண்ணிட்டேன்னு சொல்லு! அப்ப அந்த டாக்டருக்கு நாமம்தானா?” என்று கேட்டாள்.
“நான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன், அவர் எனக்கு நண்பர் மட்டும்தான்! நீதான் நான் சொல்லச் சொல்லக் கேட்காம கிண்டல் பண்ணிட்டு இருந்தே…”
“அப்போ தம்பி எனக்குன்னா அண்ணன் உனக்குத்தானே! அது எப்படிடி போய் ஒரு வாரம் கூட ஆகல, அதுக்குள்ள முடிவு பண்ணிட்டே? அப்ப நீ அங்க போகக் காரணமே அவர்தானோ?” என்று விஷயத்தைச் சரியாகப் பிடித்துக்கொண்டாள் விமலா.
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை, இங்க வந்துதான் தெரியும்” என்று சொன்னாலும் அவள் கேட்க மறுக்க, “நிஷாந்த் அவரது ஊர் உறவினர்களைப் பற்றிப் பேசும்போதும், அவங்க அம்மா, அப்பாவைப் பற்றி வீடியோவில் காட்டும்போதும், உன்னோட ஆளும் அவங்க அண்ணன் எல்லாரையும் பற்றித் தெரிய வந்தது. சிட்டியில் எப்பவுமே கோட்டு, சூட்டில் டிப் டாப் ஆசாமிகளைப் பார்த்த எனக்கு, அந்தக் கிராமத்தில் உள்ளவர்களின் பழக்கவழக்கம் வித்தியாசமா தெரிஞ்சது. சரி, கொஞ்ச நாள் இங்கு வந்துட்டுப் போகலாம் அப்படின்னு நினைச்சுதான் வந்தேன்… உண்மையிலேயே அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா? அப்பா விட்டுட்டுப் போனதில் இருந்து இப்போது வரை அத்தனை கவனமா பார்த்துக்கிறார்! நம்முடைய வாழ்நாள் துணையா வர்றவர் இந்த மாதிரி இருக்கணும்னு தானே எந்த ஒரு பொண்ணா இருந்தாலும் ஆசைப்படுவாங்க? அதைத்தான் நானும் செய்ய நினைக்கிறேன். மத்தபடி நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை” என்றாள்.
“ஒருவேளை அவர் சம்மதிக்க மறுத்தா?”
“மறுத்தா… அதுக்காக தற்கொலை பண்ணிட்டுச் செத்துப் போயிடவா முடியும்? நான் பாக்குற வேலை கடைசி வரை எனக்குத் துணையா இருக்கும்” என்றாள் பிரியம்பதா.
'அப்படியானால் இவள் உண்மையாகத்தான் சொல்கிறாளோ?' என்ற சந்தேகம் புதிதாக முளைவிட்டது விமலாவிற்கு. தனக்குத் தெரியாமல் தோழி இதுவரை எதையும் செய்ததில்லை என்று நினைத்து வந்தவளுக்கு, தன்னிடம் இப்படி ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறாளே என்பது ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை இந்த விஷயத்தை முன் கூட்டியே அறிந்தால், அவளது பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என்று பயந்து வாயைத் திறக்காமல் இருந்தாளோ என்னவோ! ஏதோ ஒன்று... தோழிக்குப் பிடித்திருக்கிறது எனும்போது மறுத்துக் கூற மனம் வரவில்லை.
ஏனெனில் அவளும் இத்தனை நாட்களில் எந்த ஒரு ஆணையும் அந்த மாதிரி நோக்கத்தில் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. நிஷாந்த் அப்படி ஒரு அழகுடன் அவளிடம் நகைச்சுவை கலந்து பேசுபவன்; அப்படிப்பட்டவனையே வேண்டாம் என்று தூக்கி எறிந்தவள், திடீரென்று ஒருவனை பிடித்திருக்கிறது என்று சொல்வதை நம்ப தான் முடியவில்லை. நேரில் இருந்தால் தூண்டித் துருவி அவளது வாயில் இருந்து விஷயத்தை வர வைத்து இருப்பாள். இப்போது அவள் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டி இருந்தது.
“சரி, நீ பாக்குற ஆளைப் பற்றியே முதல்ல உனக்குத் தெரியாது. இதுல அவங்க தம்பியைப் பற்றி என்ன தெரியும்? எந்த நம்பிக்கையில் நம்ம ரெண்டு பேரும் அந்த வீட்டுக்கு மருமகளா போவது?” என்றாள் விமலா. உடனே நேற்று காலையில் பேசிய ஞாபகத்தில் அதை அப்படியே சொல்ல, இருவரும் கொஞ்ச நேரம் மனம் விட்டுச் சிரித்தார்கள்.
அந்த நேரம் வெளியே சென்றுவிட்டு வந்துகொண்டிருந்த பிரதாப், கலகலவென்ற சிரிப்புச் சத்தத்துடன் யாருடனோ பேசிக்கொண்டிருக்கும் பிரியம்பதாவைப் பார்த்ததும் அவளை நோக்கி வந்தான்.
“குட்மார்னிங்! யாருகிட்ட பேசிட்டு இருக்கீங்க அண்ணியாரே! காலையில ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல இருக்கு” என்க, அவள் 'வாயைத் திறக்காதே' என்று ஜாடை காட்டினாள்.
“என்னடி திடீர்னு ஆண் குரலில் பேசுற? தொண்டைக்குள் எலி புகுந்துருச்சா?” என்ற விமலாவின் குரலில் கண்கள் பளிச்சிடப் பிரியம்பதாவைப் பார்த்தான் பிரதாப். அவள் ஆமாம் என்பதாய்த் தலையசைக்க, அவளது கைப்பேசியைச் சற்று நகர்த்தித் தனக்குத் தெரியுமாறு வைத்துக்கொண்டான் அவன்.
“ஆமாம், நேற்றிலிருந்து தம்பி புராணமா பாடிட்டு இருக்கிறியே! அந்த ஆளு நிஜமாவே எனக்குப் பொருத்தமா இருப்பாரா?” என்று விமலா கேட்க, அவனது உதடுகளில் புன்னகை மலர்ந்தது.
பிரியம்பதா தோழி வசமாக மாட்டிக்கொண்டிருப்பதை நினைத்துச் சிரிப்பை அடக்க முடியாமல் இருக்க, “அது என்னடி, உன் ஆளு மட்டும் வாட்டசாட்டமா கம்பீரமா தெரிகிறாரு? எனக்கு மட்டும் ஒரு வெள்ளைக் கொக்கைப் பார்த்து வச்சிருக்கே? கொஞ்சம் புஷ்டியான ஆளா பார்த்து இருக்கக்கூடாதா?” என்றாள் விமலா.
அவளோ சத்தமாகச் சிரித்துக்கொண்டே, “நம்ம எதிர்த்த வீட்டு தாத்தா நல்லா புஷ்டியாதாண்டி இப்பவும் இருக்கிறார். பாவம் பாட்டி கூட இல்லாம தனி ஒருவரா எதையும் செய்ய முடியாம கஷ்டப்படுறார்... பேசாம நீயே அவரைக் கட்டிக்கோயேன்!” என்றதும் இருவரும் சிரித்தனர்.
விமலாவையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த பிரதாப், தோழிகள் இருவருக்கும் இடையில் உள்ள பிணைப்பையும் அவர்களின் ஒற்றுமையையும் புரிந்துகொண்டான். விமலாவின் மீது உள்ள நம்பிக்கையில்தான் அவள் நேற்று அப்படிப் பேசியிருக்கிறாள் என்பதையும் தெரிந்துகொண்டான். தான் இவளை மணந்துகொண்டால், அண்ணன் பிரியம்பதாவை மணப்பதற்குத் தடை வராது; நாளைக்கு அண்ணன் தம்பியின் மனைவிகளால் வீட்டில் பிரச்சனையும் எழாது என்று திட்டமிட்டான்.
அத்தனை நாளும் திருமணம் என்ற ஒன்றைப் பற்றி நினைத்திராமல் இருந்தவன், இன்று எங்கெங்கோ கனவுக் கோட்டையைக் கட்டி எழுப்பினான். தோழிகள் இருவரின் கலகலப்பான பேச்சு, ஒருவரை ஒருவர் கேலி செய்வது அவனது முகத்திலும் புன்னகையை உறையச் செய்திருந்தது.
“சரி, எப்ப வர்ற? உனக்கு என் கொழுந்தனாரைப் பார்க்க ஆசை இல்லையா?” என்றாள் பிரியம்பதா.
“அதான் நேத்து நைட்டு ஃபுல்லா அவரைப் பத்திப் பேசிப் பேசியே ராத்திரி தூக்கத்தைக் கெடுத்துட்டியே! அதிலும் இப்போ நீகூட அவங்க அண்ணனைக் கட்டிக்க சம்மதிப்பதா சொல்றப்போ, எப்படி என்னால் வராம இருக்க முடியும்? இன்னைக்கு ஆஸ்பிட்டலுக்குப் போய் லீவுக்கு அப்ளை பண்றேன். ரெண்டு நாள் லீவு எடுத்துட்டு பறந்தோடி வர்றேன். அதுவரைக்கும் பத்திரமா இருந்துக்கோ!” என்றாள் விமலா.
அவள் சரி என்று ஏற்றுக்கொண்டதும், இருவரும் வழக்கம் போலப் பேசிக்கொண்டிருந்தனர். அவளிடம் பேச வேண்டும் என்று அவனுக்கும் ஆசையாக இருந்தது. ஆனாலும் அறிமுகமில்லாத பெண்ணிடம் சென்று எப்படிப் பேசுவது என்ற தயக்கமும் தடையாக அமைந்தது. அண்ணன் தூரத்தில் வருவது தெரிந்ததும், அதற்குமேல் அங்கிருந்தால் திட்டத் தொடங்கிவிடுவார் என்று புரிந்ததால், “உங்களைச் சாப்பிடக் கூப்பிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று பேச்சை மாற்றினான்.
பிரியம்பதா கைப்பேசியிலிருந்து முகத்தைத் திருப்பி, “நான் வீட்டுல ஏற்கனவே எல்லாம் ரெடி பண்ணிட்டேன், எனக்கு எதுவும் வேண்டாம்... நீங்க போய்ச் சாப்பிடுங்க” என்று சொல்ல, அருகில் கேட்ட ஆண் குரலில் அங்கும் இங்குமாகப் பார்த்தாள் விமலா.
தோழியின் குறுகுறுப்பான பார்வையைப் புரிந்துகொண்ட பிரியம்பதா மெல்ல கைப்பேசியை அவன் புறம் திருப்ப, கைப்பேசித் திரை முழுவதும் நின்றுகொண்டிருந்தான் பிரதாப்.
“என்னடி இது, நேத்து பாக்குறப்போ வெள்ளைக் கொக்கு மாதிரி இருந்தது, இப்ப பாக்குறப்போ வெண்பன்றி போல இருக்கு! இங்கதான் பூரா வெள்ளையா இருக்காங்கன்னு பார்த்தா, அங்கேயும் வெளிநாட்டுக்காரங்களைக் கொண்டுவந்துதான் இறக்குமதி செய்து இருக்காங்களா? எனக்கும் உன் ஆளு மாதிரி கலர் கம்மியா இருப்பவர்தான் வேணும்” என்றாள் விமலா.
உடனே அவன், “உனக்காக நான் என்ன கரியைப் பூசிகிட்டா வர முடியும்?” என்றான்.
விமலா அவனது அசையாத தோற்றத்தைக் கண்டு முதலில் புகைப்படம் என்று நினைத்து இப்போது நிஜமாகவே இருப்பது கண்டதும், திருடிக் கொண்டு அகப்பட்டது போல முழித்தாள்.
“அடியேய், ஓலை படக்கு திரி படக்கு! நீ மட்டும் என்ன எங்க அண்ணியை மாதிரி அழகாவா இருக்கே? இருந்தாலும் எங்க அண்ணி மேலுள்ள பாசத்தில் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கலயா?” என்றானே பார்க்கலாம், அவளுக்குப் பொத்துக்கொண்டு வந்துவிட்டது கோபம்!
“நான் இப்பவே ஆஸ்பிட்டலுக்கு போய் லீவு எடுத்துட்டு ரெண்டு நாளில் உங்க வீட்டுக்கு வர்றேன்டி, இந்த வெள்ளைப் பன்றியை என்ன செய்றேன் பாரு!” என்று கொக்கரித்தாள்.
“வாடி, வாடி! நானும் உன்னை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்க ரெடியா தான் இருக்கேன், சீக்கிரம் வாடி!” என்று அவனும் அவளை உசுப்பேத்தி விட்டான். இருவரும் கைப்பேசியில் மாறி மாறிச் சண்டையிட, பிரியம்பதாவினால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
நிறைய நேரமாக தம்பி அங்கே நின்று வாயடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த மருதுவேல், “வேலைக்குப் போக நேரம் ஆகலையா?” என்று குரல் கொடுத்தான்.
அவ்வளவுதான், இருவரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். பிரதாப் அண்ணனின் முறைப்பில் அப்படியே தேங்கினான்.
“அண்ணியைச் சாப்பிடக் கூப்பிடப் போனேன். அப்போ அவங்க உங்களைப் பற்றி ரொம்பவும் பெருமையா பேசிட்டு இருந்தாங்க. அதைக் கேட்டுட்டு இருந்ததில் இவ்வளவு நேரம் ஆயிடுச்சு” என்று பச்சையாகப் புளுகினான். அது தெரிந்தாலும், “ஆமாம்! உங்க அண்ணியார் சாப்பிட வரலையா?” என்று கேட்டான் மருது.
அண்ணனின் கிண்டலில் அவன் முகம் மாறியது. சிரிப்பை அடக்கிக்கொண்டு, “அண்ணே எனக்கு அந்த அண்ணியை ரொம்ப பிடிச்சிருக்கு! உங்களுக்குப் பொருத்தமாகவும், நம்ம வீட்டுக்கு ஏத்த விதமாகவும் இருக்காங்க. நீங்க மனசு வச்சா எல்லாம் நல்லவிதமா நடக்கும். இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே இருக்கலாம்னு பார்க்கிறீங்க?” என்றான் பிரதாப்.
பால்கனியின் உட்பக்கமாக நின்று அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள் பிரியம்பதா. மருதுவேலின் கண்கள் அவளைக் கண்டும் காணாதது போல இருந்தன.
“நேரமாகுது வா, சாப்பிட்டு வேலைக்குக் கிளம்பலாம்.”
“அண்ணா, நான் கேட்டதுக்கு பதில்?” என்று அவன் தயங்க, “நான் இதுவரைக்கும் அதைப் பற்றி நினைக்கல. திடீர்னு கேட்டதும் தூக்கித் தர பொம்மையும் இல்லை! கொஞ்ச நாள் போகட்டும் பார்க்கலாம்” என்றதும் அவன் அண்ணனின் கன்னத்தைப் பற்றி முத்தமிட்டுச் செல்ல, பால்கனியில் நின்று கேட்டிருந்தவளின் கால்கள் வானத்தில் மிதந்தன!
அவன் மெல்ல கண்களைத் திருப்பி அவளை ஓரக்கண்ணால் நோக்க, அவளது முகத்தில் இருந்த மலர்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது. கை வைத்து கழுத்துப் பகுதியை விரலால் தேய்த்துக்கொண்டவன், “சாப்டியா?” என்றான்.
“இனிமேதான் சாப்பிடணும்.”
“வா!” என்றதும், “இல்லை, நான் வீட்டிலேயே சமைச்சு சாப்பிடுறேன்” என்றாள் பிரியம்பதா.
“ஏன், எங்க கூட வந்து சாப்பிட்டா என்னவாம்? உன்னை யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்க, நேற்றைக்கு ஒரு அவசரத்திற்கு அழைத்தார்கள் என்று சென்றாள், ஆனால் இன்று செல்வதற்கு ஏனோ மனம் வரமறுக்கிறது. அதோடு இத்தனை பேருக்குக் காலையில் எழுந்தது முதல் தனியாகவே கஷ்டப்பட்டுச் சமையல் செய்யும் காவேரியைச் சிரமப்படுத்தவும் மனம் வரவில்லை.
“இல்லை, வீட்டில் ஏற்கனவே எல்லாம் செய்துட்டேன். இன்னொரு முறை வர்றேனே… ஆஸ்பிட்டலுக்குப் போக நேரம் ஆகும். வரட்டுமா?”
அவன் எதுவுமே சொல்லாமல் அமைதியாகவே நிற்க, “நீங்க போய்ச் சாப்பிட்டு வேலைக்குக் கிளம்புங்க, நேரமாகுது” என்று அறிவுறுத்தினாள் பிரியம்பதா. நேற்றைக்குக் காலையில் ஒரே சிரிப்பும் கலாட்டாவுமாக இருந்தது; அதன் பிறகு அவள் வீட்டிற்கு வரவே இல்லை. இப்போதும் வேலைக்குச் சென்றால் இன்று முழுவதும் வரமாட்டாள் என்று அவனுக்கும் தெரியும்.
“ராத்திரி நல்லா தூக்கம் வந்துச்சா? தனியா இருக்க கஷ்டமா இருக்கா?”
இரண்டே வார்த்தையில் அவன் தன் அக்கறையைக் கொட்டிவிட, பெண் அவளுக்குள் சிலிர்த்துத்தான் போனது. அவனையே பார்த்தவள், 'அருகில் நீ இருக்க எனக்கு என்ன கவலை?' என்பதாகத் தலையசைத்தாள்.
“டாக்டர் நிஷாந்த் வருவாரா, இல்லை நீ தனியாகவே போறியா?”
“இல்லை, நான் அவரை வர வேண்டாம்னு சொல்லியிருக்கேன்.”
“ம்ம்… நான் வேணா உன்னைக் கொண்டுபோய் விட்டு வரவா? உன்னால் தனியா கார்ல போயிட்டு வர முடியுமா?”
'இவனையா அதிகம் பேசாமல் இருக்கிறான்; அமைதியானவன்’ என்று நினைத்தோம்? பிரதாப்பை விட இவன் அல்லவா அக்கறையுடன் பேசுகிறான்! கண்கலங்கியது... நெஞ்சுக்குள் ஏதோ பிசைந்தது. காலமெல்லாம் அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் போல ஆசையாக இருந்தது. வாய் திறந்து பேச முடியாமல் தலை மட்டுமே அசைந்து பதில்களை வழங்கியது. அவனது தோற்றத்தைப் பார்த்தவாறே இருக்கலாம் போல் ஆசையாக உள்ளது. அனைத்தையும் மனதுக்குள் போட்டு அடக்கிக்கொண்டவள், “எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை, நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று கூறினாள்.
“உனக்கு ஏதாவது சிரமம் இருந்தா தயங்காம என்கிட்டே சொல்லு! நான் உடனே வந்து உனக்கு செய்து தர்றேன். சும்மா சும்மா டாக்டரை அழைக்கும் அவசியமில்லை. அவருக்கும் ஆயிரம் வேலை இருக்கும் இல்லையா!” என்றான்.
எத்தனை நாசூக்காக அவனைத் தவிர்க்க பார்க்கிறான் என்று வியந்தவள் மறுபேச்சின்றித் தலையசைக்க, அவளும் நேரமாவதை உணர்ந்து உள்ளே சென்றுவிட்டாள்.
நேற்று காலையில் தான் பேசிய கடுமையான வார்த்தைகளால்தான் அவள் ஒருவேளை இங்கு வராமல் இருக்கிறாளோ என்று நினைத்தவன், அதனால்தான் இத்தனை நேரம் அவளிடம் பேசினான். அவளது பதில் அப்படி எதுவும் இல்லை என்று தெரிந்ததாலும், தனக்கும் வேலைக்குப் போக வேண்டியிருந்ததாலும் வீட்டிற்குள் வந்தான் மருதுவேல்.
அவனது அம்மா மூவருக்கும் உணவை எடுத்து வைத்திருக்க, “டாக்டர் அம்மா வரலைனு சொல்லிட்டாங்க. நீங்க எங்களுக்கு மட்டும் எடுத்து வைங்க” என்று சொன்னான் மருதுவேல்.
அவர் அது தொடர்பாகப் பேசிவிட்டுப் பின்னர் மகன்கள் இருவரும் உண்பதைப் பார்த்தவாறு, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அவர்களைப் பார்ப்பதும் தட்டைப் பார்ப்பதுமாக இருந்தார்.
“என்னம்மா, ஏதாவது பேசணுமா?” என்று அவனே ஆரம்பித்துவிட, ஆமாம் என்பது போல் தலையாட்டினார் காவேரி.
அவன் “சொல்லுங்க!” என்றதும், “உங்க பெரிய மாமா வரச் சொல்லியிருந்ததால் நேத்து போய்ப் பார்த்துட்டு வந்தேன் ...” என்று ஆரம்பித்து, மகனின் முகம் இறுகிப்போய் இருப்பதைக் கண்டதும் பேச்சை நிறுத்திவிட்டார்.
பிரதாப் அம்மாவை நோக்கிக் கடிந்துகொண்டான், “சாப்பிடுறப்போ எதுக்காக கண்டவங்களைப் பற்றியும் பேசிட்டு இருக்கீங்க? உங்க அண்ணன் புராணத்தைப் பேசுறதுக்கு நேரம் கிடையாதா?”
“இல்லைப்பா, கோவில்ல மாலை கொடுத்ததையும் சாமி கணக்கு சொன்னதையும் அண்ணனும் நேர்ல பார்த்துட்டுதானே இருந்தார்? அதான் நாமளே அவங்க வீட்டுக்குப் பெண் கேட்கப் போவோம்னு நினைச்சுட்டு இருந்தாங்க போல… நாம எதுவும் கேட்காம இருந்ததால் நேத்து பார்த்ததும் அதைப்பற்றிப் பேசினார். நானும்…” என்று இழுக்க, “நீங்க என்ன செய்திருப்பீங்க? உடனே சரின்னு சொல்லியிருப்பீங்க! அண்ணனோட மனசையும் அவர் வாழ்க்கையைப் பற்றியும் நினைக்க மாட்டீங்க…” என்று முறைத்தான் பிரதாப்.
“நீ ஏன்டா இடையில வந்து குதிக்கிறே? அவனே பேசாம கேட்டுட்டுதானே இருக்கான்? மித்ராவைக் கல்யாணம் பண்ணச் சம்மதமா இல்லையான்னு அவனே சொல்லட்டும், அப்பதானே பேசி ஒரு முடிவுக்கு வர முடியும்? அவளுக்கும் வயசாகிட்டே போகுது, குடும்பத்துக்கு ஒரே பெண் வாரிசு! அவளோட கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு ஆசைப்பட மாட்டாங்களா என்ன?”
சாப்பாட்டைத் தள்ளி வைத்துவிட்டு எழுந்துவிட்டான் மருதுவேல்!
“அப்பவே சொன்னேன், கேட்டாத்தானே! பெத்த பிள்ளைகளை விடக் கூடப் பிறந்த அண்ணன் பாசம்தான் பெருசா போயிடுச்சா?” என்று வெடித்தான் பிரதாப்.
காவேரி அதற்குமேல் எதுவும் பேசவில்லை. பெரிய மகனின் குணத்தை அவர் நன்கு அறிவார். முன்பு முகம் கொள்ளாச் சிரிப்பும் கிண்டல் கேலியுமாக வலம் வந்தவன், கடந்த சில வருடங்களாக எப்போதும் இறுக்கத்துடனே காணப்படுகிறான். அவனை முன்புபோலக் கொண்டுவரத்தான் அவரும் முயற்சிக்கிறார். எங்கே, அவன் வாய் திறக்கிறான்? மனதில் இருக்கும் அத்தனை சுமைகளையும் உள்ளே அழுத்தி வைத்துக்கொண்டு, அதேபோல முகத்தையும் வைத்திருக்கிறான்.
மித்ரா அவனது தாய்மாமன் மகள்! அவளை மணந்தால் அவனது எதிர்கால வாழ்க்கையும் நன்றாக இருக்கும் என்று எல்லோரும் நினைக்க, இவனோ திருமண வாழ்க்கையில் விருப்பமில்லாமல் இருக்கிறான். மகனை நினைத்துக் கண்கலங்கியவர், ஆறு மாதத்திற்குள் அவனது திருமணம் நடக்கும் என்று சுவாமி அருள்வாக்கு சொன்னதால், அதற்குள் எப்படியாவது நல்லது நடந்துவிட வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டார்.
அண்ணன் உண்ணாமல் மாடிக்குச் சென்றுவிட, “அண்ணன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்காம, நீங்க ஏன் எப்பவும் இந்த மாதிரி எதையாவது பேசி அவரைக் கஷ்டப்படுத்துறீங்க? நானே அவரை முன்ன மாதிரி கொண்டு வந்துடணும்னு தானே இந்த அளவுக்கு முயற்சி பண்றேன்? வயசான காலத்தில் வாயை வச்சுட்டு சும்மா இருக்கணும், அதை விட்டு நீங்களாவே எல்லாத்தையும் முடிவு பண்ணி எங்களையும் பிரச்சனையில் இழுத்து விடாதீங்க! அண்ணனுக்குப் பிறந்தவ மித்ரா இல்லை, அவர் மனசை நீங்க போகப் போகத் தான் புரிஞ்சிக்குவீங்க” என்று சொல்லி அவனும் உண்ணாமல் எழுந்து சென்றுவிட்டான்.
மனம் முழுவதும் கவலையின் ரேகைகள் படிந்திருக்க, பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை குறித்த அச்சத்தில் காவேரி காணப்பட்டார்!

Last edited: