- Joined
- May 4, 2024
- Messages
- 5,406
- Reaction score
- 3,238
- Points
- 113
அந்தப் பிரபலமான மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு முன்பாகக் குடும்பமே நின்றுகொண்டிருக்க, உள்ளே சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருக்கும் விசாலாட்சிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற பதற்றத்துடனும் உதறலுடனும் காணப்பட்டான் மருதுவேல். சற்று நேரத்திற்கு முன்பு அவனது கைப்பேசிக்கு அழைத்து, அவருக்கு விபத்து நடந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வந்தது. செய்தி கேட்ட அடுத்த கணமே அவன் இங்கு விரைந்து வந்துவிட்டான்.
என்ன நடந்தது என்று தெரியாமல் மாமாவிடம் சென்று விசாரிக்க, “அந்த டாக்டர் பொண்ணு நம்ம வீட்டுப் பக்கம் வந்திருந்தது, அவளைப் பார்த்ததும் பொங்கலுக்கு புதுப் புடவை எடுத்து வச்சிருந்ததைக் கொடுக்கணும்னு உங்க அத்தை சொன்னது ஞாபகம் வந்தது. அதனால அவளைக் கூப்பிட்டுப் பேசிட்டு இருந்தோம். அதோட அந்தப் பொண்ணு இங்க வந்த பிறகு உங்க அத்தைக்கு நிறைய உதவி செய்தும் ஒரு பைசா கூட வாங்கவே இல்லைன்னு சொன்னா. அதனால அவளுக்குப் பரிசளிக்கும் விதமா ஊருக்குப் போகும் முன் ஒரு புதிய நெக்லஸைக் கொடுத்துட்டு வரணும்னு ஆசையோட வீட்டுக்கு வந்தா. அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியல, நம்ம டாக்டர் ரோட்ல போகுறப்போ விபத்தில் அடிபட்டுத் கிடந்ததாகவும், அவரோட ஆஸ்பிட்டலில் அனுமதிச்சிருப்பதாகவும் சொன்னார். உடனே உனக்குத் தகவல் தெரிவிச்சுட்டு நானும் வந்துட்டேன்” என்றார் கலங்கிய குரலில் ஜம்புலிங்கம்.
அவன் திடுக்கிட்டு விழித்தான். ‘அத்தை தன் வீட்டிற்கு வந்தார்களா? அங்கு வந்த நேரத்தில் தான் இந்த விபத்தும் நடந்ததா? வரும்போது நடந்ததா அல்லது அங்கிருந்து போகும்போது நிகழ்ந்ததா என்று தெரியவில்லையே!’
அவர் கண் விழித்தால் தான் உண்மை தெரியவரும்; என்ன நடந்தது என்று புரியவில்லையே என அவன் மனம் குழம்பிய குட்டையாய்த் தவித்தது. மருத்துவர் வெளியே வந்து என்ன சொல்வார் என்று அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க, அடிபட்ட இடங்களையெல்லாம் சுத்தம் செய்து, அறுவை சிகிச்சை மூலம் உடைந்த எலும்புகளைச் சீரமைத்து அவர் வெளியே வர நீண்ட நேரம் ஆகியிருந்தது. அதுவரை யாராலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
ஏற்கனவே மருத்துவமனையில் நடந்த சம்பவங்கள், தன் தாய் காவேரி கூறிய கடுஞ்சொற்கள், பெற்ற தகப்பன் கூறிய வார்த்தைகள் மற்றும் தாயார் நடந்துகொண்ட விதம் ஆகியவை பிரியம்பதாவைப் பெரிதும் காயப்படுத்தியிருக்க, அவனது தூய்மையான அன்பை உணர்ந்தும் அதை ஏற்கும் சூழல் இல்லாமல் புறக்கணித்து, அவள் இந்த ஊரே வேண்டாம் என்று சென்றுவிட்டாள் என்பது இப்போது அவனுக்கு நன்றாகப் புரிந்தது.
அன்று அவள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு காவலர்கள் வந்து சொல்லிச் சென்ற பிறகு, நிஜமாகவே அவள் இறந்துவிட்டதாகக் கருதி வருடா வருடம் திவசம் செய்வது உண்டு. அதை அவளது தந்தையும் தன் மகள் என்று அறியாமலேயே சொல்லி இருக்கிறார். அவளது அம்மா வீட்டிற்குள் சென்று மகளுக்காகப் புதிய புடவையைத்தான் எடுத்து வந்திருந்தாரே தவிர, இங்கு கணவனும் அவளும் பேசியதை அறிந்திருக்கவில்லை. பிரியம்பதாவின் தந்தை கூறியதைப் போல அம்மாவும் தன்னை இறந்துவிட்டதாகத் தானே கருதிவிட்டார் என்று நினைத்து, இதற்குமேலும் இங்கு இருக்க வேண்டாம் என்று அவளும் ஊருக்குச் சென்றுவிட்டாள். அங்குச் சென்ற பிறகும் அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
கண்ணீர் வடிய சதா தன் படுக்கையிலேயே விழுந்துகிடந்தாள். மகளை அப்படி ஒரு நிலையில் பார்க்க முடியாமல் ஜெயப்பிரகாஷ் மடிதாங்கி ஆறுதல்படுத்தினார். அவளது அம்மா சிவப்பிரியா மகளை விட்டு அகலாமல் இருந்தார். தங்கை தேவியோ, “எங்களை விட்டு இனிமேல் எங்கேயும் போகாதீங்க அக்கா... நாம எல்லாரும் முன்ன மாதிரியே இருப்போம்” என்று சொல்லி, அவளுக்குத் தேவையானதைச் செய்து கொடுத்தாள்.
தோழி விமலா, பிரியம்பதா இங்கு வந்திருப்பதை அறிந்துகொண்டு ஓடோடி வந்து, நடந்ததை அறிந்து ஜீரணிக்க முடியாமல் நின்றாள். பிரகாஷ் கைப்பேசியில் அழைத்தபோது அவனைத் திட்டித் தீர்த்துவிட்டாள். “அவளுக்கும் உங்க அண்ணனுக்கும் கல்யாணம் நடக்காம நமக்கும் நடக்காது” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
தோழியின் கூடவே இருந்து ஆறுதலாகப் பேசி, அந்த மருத்துவமனையில் என்னென்ன நடந்தது, யார் இதற்கு காரணமாக இருக்கக்கூடும் என்பதைப் பற்றிப் பேசித் தெரிந்துகொண்டாள். அவள் எதிலுமே நாட்டம் இல்லாமல் இருப்பதைக் கண்டு, “எல்லாம் சரியாகப் போகும், மனசைக் கட்டுக்குள் வச்சுக்கோ! நீ ஒரு டாக்டர், இதெல்லாம் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை” என்று அன்பாக எடுத்துச் சொன்னாள்.
தோழியை முன்புபோல பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காக, தன் வேலை முடிந்த பிறகு மீதமுள்ள நேரத்தை இங்கேயே செலவிட்டாள்; அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே அழைத்துச் சென்றாள். முன்புபோல மாற்ற முயற்சிகளை மேற்கொண்டாள். என்னதான் மற்றவர்களுக்காக அவள் இயல்பாக நடந்து கொண்டாலும், தன்னுடைய அறைக்கு வந்த பிறகு மறுபடியும் பழையபடியே உடைந்துபோனாள். அதனால் அவளது அம்மா மகளைத் தனியாக விடாமல் கூடவே சென்று அணைத்துக்கொண்டு உறங்கினார். 'இந்த வளர்ப்புத் தாய்க்கு இருக்கும் பாசம் ஏன் பெற்ற தாய்க்கு இல்லாமல் போய்விட்டது?' என்று அவள் மனதிற்குள் கதற, மகளின் மனதைப் புரிந்துகொண்டது போல அவர் இதமாக வருடிக் கொடுத்தார்.
மருதுவேலைக் காண வேண்டும் போல ஆசையாக இருந்தது; அவனிடம் பேச வேண்டும், சிரிக்க வேண்டும், வம்பு செய்ய வேண்டும், அவன் கூடவே இருக்க வேண்டும் என்ற ஆசை நாளாக நாளாக அதிகரித்தது. அன்று ஒரு நாள் இரவில் அவனுடன் இருந்ததும், அவன் நடந்துகொண்ட விதமும் அவளால் மறக்க முடியாதவை. அதற்குப் பிறகு இப்படி நடக்கும் என்று அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. 'அவன் தனக்கென படைக்கப்பட்டவன் இல்லையா? அவனுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் தனக்குக் கிடையாதா?' என்று அழுதாள்.
மனம் முழுவதும் வேதனை படர்ந்தாலும் அதை வெளியில் காட்ட முடியவில்லை. ஏனெனில் அவளது அம்மா, அப்பா, தங்கை மூவரும் அவள் படும் கஷ்டத்தைத் தாங்க முடியாமல் துயரப்படுவதைக் கண்டு, முடிந்த அளவுக்குத் தன்னை அடக்கவே முயற்சித்தாள். ஆனால், பலவீனமாகிப்போயிருந்த அவளது உள்ளம் அவளைச் சும்மா விடவில்லை.
அதேபோல மருதுவேலும் அவளது ஞாபகமாகவே இருந்தான். அவள் இங்கு வந்தபோது அவளா இல்லையா என்று முதலில் சந்தேகித்தாலும், அவனது பார்வை அவளை விட்டு அகலவில்லை. என்றைக்குத் தன்னை நம்பி அவள் இரவு நேரத்தில் தனியாக வந்தாளோ, அன்றே அவன் முடிவு செய்து விட்டான். ‘இது தன்னுடைய பாப்பா! அவள் மட்டும்தான் அழைத்த அடுத்த நிமிடம் காரணம் கேட்காமல் கூடவே வருவாள்’. ஆனாலும் அவள் வாய் மூலமாக கேட்பதற்காக எத்தனையோ முறை முயன்றும் அவள் அசையவே இல்லை. பெற்ற தாயின் முன்பு கூட உணர்வுகளைக் கட்டுப்படுத்த பழகியதில், அவளது படிப்பும் பார்க்கும் வேலையும், இத்தனை வருட இடைவெளியும் காரணமாக இருப்பது புரிந்தது!
அவளை உரிமையாய் அணைத்து முத்தமிட்டது, அவளது கழுத்தில் கிடந்த சங்கிலியை கண்டு மனம் மகிழ்ந்தது, அவளை விட்டு விலக முடியாமல் கூடவே இருந்தது என எதையும் அவனால் மறக்க முடியவில்லை. இப்போதும் அவளது அருகாமைக்கு ஏங்கிய அவன் உள்ளம், அவள் பட்ட கஷ்டங்களுக்கு சாமரம் வீச ஆசை கொண்டது. இத்தனை நாளாக அவளைப் பார்த்துவிட்டு இப்போது பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதற்காக ஏற்கனவே மனதளவில் பாதிக்கப்பட்டு, யாரையும் துணிச்சலாக எதிர்கொள்ள முடியாமல் இருப்பவளை, கட்டாயப்படுத்திக் கொண்டு வந்து துன்புறுத்தவும் மனம் வரவில்லை.
‘அவள் காலடி இந்த ஊரில் மீண்டும் பட வேண்டும்! இத்தனை வருடங்களாக அத்தை வீட்டில் நிலவிவரும் அசாதாரணமான சூழ்நிலைகள் அகல வேண்டும்! அவள் சுத்தத்தங்கம் என்பது ஊரறிய நிரூபணமாக வேண்டும்! அவளது காதலனாகவும், கணவனாகவும் இந்தச் சபதத்தை நான் நிறைவேற்றுவேன்!” என்று மனதிற்குள் சூளுரைத்தான் மருதுவேல்!
இப்படி இருவரும் மனதிற்குள் ஒருவரை ஒருவர் நினைத்துக்கொண்டிருக்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விசாலாட்சியின் உடல்நிலையில் முன்னேற்றமே வரவில்லை. அன்று முழுவதும் அவர் கண்களைத் திறக்காமல் இருந்து, மறுநாளும் அதேபோல இருக்கவே, மருத்துவரிடம் சென்று, “அத்தைக்கு நடந்தது ஒரு சாதாரண விபத்துதானே! பிறகும் ஏன் அவர் இவ்வளவு நேரமாகியும் சுய நினைவுக்கு வராமல் இருக்கிறார்? ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டான் மருதுவேல்.
ஏற்கனவே பலவீனமாகிப் போய் இருந்த உடம்பு, இப்படி விபத்து நேர்ந்ததில் மேலும் சீர்குலைந்துவிட்டதோ என்ற பயம் அவனுக்கு!
“நீங்க சொல்வது ரொம்ப சரி! விபத்தில் அடிபட்டதில் மூளைக்குச் செல்லக்கூடிய ரத்த நரம்புகள் முன்ன மாதிரி இயல்பா செயல்படல. அதோட அவங்களுக்குப் பழைய நினைவும் வராமல் கோமா ஸ்டேஜுக்கு போயிட்டாங்க. முழுவதும் அப்படியே ஆகிட கூடாதுன்னு, நாங்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம். எப்படியும் ரெண்டு மூணு நாளைக்குள் சுயநினைவு வரலாம், இல்லை ஒரு வாரம் கூட ஆகலாம்” என்றான் சபரீசன்.
இதுபோல விபத்து நடந்து நிறைய பேருக்கு ஆகியிருப்பது தெரிந்ததால் அவனும் அதிர்ந்தாலும், அத்தையின் உடல்நிலை சரியாக வேண்டும் என்று மட்டுமே நினைத்துக் கொண்டான்.
ஜம்புலிங்கம் மருத்துவமனையே கதியென்று கிடக்க, மித்ராவும் அப்பாவை விட்டு அகலாமல் கூடவே இருந்தாள். சிறு வயது முதல் அவரைத்தான் தாயாக நினைத்து வளர்ந்துவந்தவளுக்குச் சாந்தகுமாரியைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை; அவளிடம் யாரும் இதுவரை கூறவும் இல்லை. அப்பாவிற்கும் அம்மாவிற்கும் இடையில் சரியில்லை, அதனால் தான் இப்படி இருக்கிறார்கள் என்று மட்டுமே நினைத்திருந்தாள். அதற்கு முத்தாய்ப்பு வைப்பது போல “ஜம்புலிங்கம் தான் உன் அப்பா” என்று சொல்லிச் சொல்லியே சுந்தராம்பாளும் வளர்த்திருந்தார்.
இப்போது அவர் முன்புபோல பேசி அவளிடம் நன்றாக நடந்துகொண்டதில், மித்ராவும் விசாலாட்சியிடம் அதிகமாகப் பாசத்தைக் காட்டினாள். அம்மா, அப்பா, அத்தான் மூவரும் அவளிடம் இணக்கமாக நடந்துகொள்ள, அவளும் அவர்களை விட்டு விலகாமல் இருந்தாள். அம்மாவுக்கு எதுவும் ஆகாமல் விரைவில் குணமாகி வந்துவிட வேண்டும் என்று அவளும் அவர் கண்களைத் திறக்கும் நாழிகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
குடும்பமே இங்கேயே இருந்தால் தொழில் நிறுவனத்தின் முக்கியமான பொறுப்புகளைப் பார்ப்பது யார்? அதனால் நிஷாந்தையும் சௌந்தரையும் மருத்துவமனையில் அமரவைத்து, அவர்களுக்குத் தேவையானதை கவனிக்கச் சொல்லிவிட்டு, இவன் வேலைக்குச் சென்றுவிட்டான். காலையில் வந்து அத்தையைப் பார்த்துவிட்டு அங்கிருப்பவர்களிடம் பேசிவிட்டுப் போகிறவன், மதிய உணவு நேரத்தில் வந்து இரண்டு மணி அளவில் சென்று, மீண்டும் இரவு நேரத்தில் வருவான். இத்தனைக்கும் காவேரியின் முகத்தை அவன் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. அவர் மகனிடம் பேச வந்தபோது கூட ஒரு வார்த்தை பதில் கூறவில்லை. மகன் எதனால் இப்படி இருக்கிறான்? விசாலாட்சிக்கு விபத்து நேர்ந்ததாலா? என்று அவர் புரியாமல் இருந்தார்.
அதே நேரம் தன்னிடம் பேசாமல் இருக்கும் நிஷாந்தைப் பார்த்ததால், 'இவன் ஒருவேளை அன்று தான் பேசியதை மகனிடம் சொல்லிவிட்டானோ?' என்ற பயமும் எழுந்தது.
அன்றைய சம்பவத்திற்குப் பிறகு இதுவரை பிரியம்பதாவை அவர் பார்க்கவே இல்லை; அவள் எங்கிருக்கிறாள் என்றும் தெரியவில்லை. வாய் திறந்து மகனிடம் கேட்கவும் பயமாக இருந்தது.
பெற்றோரின் மூலம் நடந்த விஷயங்களைத் தெரிந்துகொண்டு, சோஷியல் மீடியாவிலும் பரவிய தவறான செய்திகளை அறிந்த சௌந்தர், தனக்குத் தெரிந்த காவல் அதிகாரி மூலம் உடனடியாக அவற்றைத் தடை செய்ய உத்தரவிட்டு, தங்கையின் மீது தவறான செய்தியைப் பரப்பிய ஊடகங்களையும் மறுப்பு செய்தி பதிவிட கட்டளை பிறப்பித்தான்.
அத்துடன் தங்கையை நேரில் சந்திக்க வந்திருக்க, அவளோ சென்னைக்குச் சென்றுவிட்டாள். இங்கு வந்த பிறகு மருதுவேல் மற்றும் நிஷாந்துடன் பேசி அத்தனை விஷயங்களையும் தெரிந்துகொண்டவன், தன் உடன்பிறவாச் சகோதரிக்காக வருத்தப்படவே செய்தான். அவள் மீது யார் இப்படி ஒரு பழியைச் சுமத்தி, இந்த ஊரை விட்டு துரத்தியடித்தது என்று தெரிந்துகொள்ள நிஷாந்திடம் விசாரித்தான்.
இரவு நேரத்தில் மூன்று ஆண்களும் அது குறித்துப் பேசினார்கள். அதோடு பிரியம்பதா எப்படி அவர்கள் வீட்டிற்குச் சென்று சேர்ந்தாள் என்ற விஷயமும், பிரியம்பதாவின் பிறப்பு ரகசியமும், இப்போது நடந்தவையும் அவர்கள் மூவருக்கும் தெரியவந்தது. நிஷாந்த் வாய் திறக்க முடியாமல் உறைந்துபோயிருந்தான்; இப்போது கூட அவனால் நம்பவே முடியவில்லை. அதே நேரம் தன் கைப்பேசியில் பார்த்த மருதுவேலின் புகைப்படத்தைக் கண்ட நேரத்திலிருந்து, அவனைப் பற்றி முழுவதும் விசாரித்து இந்த ஊருக்கு வர அவள் எடுத்த முயற்சியும், பரபரப்பும் கண்ணை விட்டு அகல மறுத்தன. அவளது எல்லையில்லாத நேசத்தைக் கண்டு மலைத்துப் போனான். இதை அவர்கள் இருவரின் முன்பும் சொன்னபோது அவர்களாலும் நம்பத்தான் முடியவில்லை.
‘என்னே ஒரு பெண் இவள்! எத்தனை உன்னதமான நேசத்தை அவன் மீது கொட்டியிருக்கிறாள்! அப்படிப்பட்ட ஒரு அன்பான பெண்ணை விதி இந்த அளவிற்கு காயப்படுத்திவிட்டதே!’ என்று மூவரும் அவளுக்காகப் பரிதாபப்பட்டார்கள்.
‘எப்படியாவது அவள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று நிரூபிக்க வேண்டும்! அவள் மறுபடியும் இதே ஊருக்குத் திரும்பி வந்து தலைநிமிர்ந்து கம்பீரமாக நடக்க வேண்டும்! குடும்பச் சூழ்நிலைகள் முற்றிலும் மாறுபட்டு அவளைச் சுற்றியே வருமாறு அமைய வேண்டும்!’ என்று மருதுவேல் தீர்மானித்தான்.
அதனால் சௌந்தரையும் நிஷாந்தையும் மறுநாள் அதே மருத்துவமனைக்குச் சென்று அந்த வழக்கு குறித்து விசாரிக்கச் சொன்னான். அதுபோலவே அவர்கள் இருவரும் அங்குச் சென்று விசாரித்தும் ஒரு சிறு தடயம் கூடக் கிடைக்கவில்லை. அந்தப் பெண் விடுமுறை முடிந்து வராமல் நீடித்து இருப்பதுடன், அலைபேசியையும் அணைத்து வைத்திருக்கிறாள். அவளது வீட்டிலும் இல்லாமல் வெளியூருக்கு எங்கேயோ சென்றிருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவர்கள் சொன்னது உண்மைதானா என்று கண்டுபிடிக்கச் சௌந்தரும் நிஷாந்தும் அவளது முகவரியை பெற்றுக் கொண்டு அங்குச் சென்று விசாரிக்க, அவர்கள் சொன்னது உண்மை என்று தெரிந்தது.
ஒரு விசாரணை இருப்பதால் உடனடியாக அவர் இங்கு வர வேண்டும். இல்லையென்றால் போலீஸ் தேடி வரும்!” என்று எச்சரித்துவிட்டு அவர்கள் கிளம்பும்போது, புத்தம் புதிய பச்சையும் வெள்ளையும் கலந்த கல் நெக்லஸ் அணிந்து வந்த பெண் நிஷாந்தின் பார்வையில் பட்டு உறுத்தியது. 'இதை எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே!' என்று யோசித்தபடி தன் நெற்றியைத் தேய்த்து விட்டுக்கொண்டான்.
விஷயத்தைத் தெரிந்துகொண்ட மருதுவேல் அவர்களைச் சும்மா விடக் கூடாது என்பதற்காக, அந்த நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தான். பின்னர், மருத்துவமனையிலேயே இரவு நேரத்தைக் கழிக்க, மூன்று நாட்களாகியும் விசாலாட்சியிடம் சிறு அசைவு கூடத் தென்படவில்லை.
இந்நிலையில் ஒரு நாள் இரவு நேரம் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்களுக்குப் பின்புறமுள்ள பெரிய மரத்தின் பின்னால் யாரோ ஒருவன் மறைந்திருந்து இவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்பது தெரிந்தது. ஒருவருக்கொருவர் சைகை காட்டிக்கொண்டு, மூவரும் மெல்லப் பேசுவது போலவே பேசிக்கொண்டே கூர்மையாகக் கவனித்தார்கள். உண்மைதான், தங்களை யாரோ கண்காணிக்கிறார்கள் என்பது தெரிந்தது. ஒருவன் எழுந்து மருத்துவமனைக்குள் செல்வது போல நடந்து செல்ல, மற்றொருவன் சாலைக்குச் சென்றான். மருதுவேல் மட்டும் அதே இடத்தில் எழுந்து நின்று இரண்டு கைகளையும் உயர்த்திச் சொடக்கு விட்டான்; அப்படியே இரு கைகளையும் பின்னாடி கொண்டு சென்று வளைந்து நெளிந்து குனிந்தான். அப்போது அந்த மரத்திற்குப் பின்புறம் நிற்பவன் தன்னை யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்று தரையில் படுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வது தெரிந்தது. ஒரே நேரத்தில் மூன்று ஆண்களும் மூன்று பகுதிகளிலிருந்து தன்னைக் குறிவைப்பது தெரியாமல் அவன் சென்று கொண்டிருக்க, திடீரென ஒரே பாய்ச்சலில் தன் மீது வந்து விழுந்த மருதுவேலைக் கண்டவன் அதிர்ச்சியில் திகைத்தான்.
அடுத்த நிமிடம் மரண அடி என்றால் என்ன என்பதை அவனுக்குக் காட்டியவன், எதற்காகத் தங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தாய் என்று கேட்டான். அவன் இல்லை என்று மழுப்பியதும், “நீதானடா அன்னைக்கு பிரியம்பதாவை ஆஸ்பிட்டலில் வச்சு தப்பு தப்பா பேசனது?” என்று நிஷாந்த் கேட்டான்.
இவன் மாற்றிப் பேசினால் அடி பலமாக விழுமோ என்று பயந்து பின்வாங்க, தொண்டைக்குழியில் தன் வலது கால் பெருவிரலை வைத்து அழுத்தியவன், “இப்ப மட்டும் நீ உண்மைய சொல்லலை... அடுத்த நிமிஷம் சொர்க்கத்துக்கு இல்லை இல்லை, நரகம்னா எப்படி இருக்குமுன்னு இங்கேயே பார்க்க வைப்பேன்!” என்றான் மருதுவேல்!