- Joined
- May 4, 2024
- Messages
- 5,390
- Reaction score
- 3,231
- Points
- 113
அத்தியாயம் : 17
அறையில் சென்று படுத்திருந்த பிரியம்பதாவிற்கு சற்று நேரத்திற்கு முன்னர் விசாலாட்சி கூறிய வார்த்தைகள் மனதைப் பிசைந்து கொண்டிருந்தது. அவரை அப்படி ஒரு நிலையில் அவர்களால் பார்க்க முடியவில்லை; அவரும் அவர்களை இப்படி ஒரு நிலையில் எதிர்கொள்ள முடியாமல் திணறினார்.
அன்று இந்த வீட்டிற்கு வரும்போது சிறிய அளவிலான ஜரிகை உடைய பட்டுப்புடவை அணிந்து வந்திருந்தார். இன்று சாதாரண காட்டன் புடவையில் யாரோ ஒருவரைப் போல காட்சியளிக்கிறார்! இப்படித்தான் வெளியே போகும் நேரம் அடுத்தவரின் பார்வைக்கு அழகாகவும், வீட்டில் இருக்கும்போது மற்றொரு விதமாகவும் நடந்து கொள்கிறார் போலிருக்கிறது.
அவர்கள் இருவரையும் கண்டதும் அவரது கண்ணில் தெரிந்த உயிர்ப்பும் துடிப்பும் இன்னும் அவளை விட்டு அகலவில்லை.
“வா வா வாம்மா, வாப்பா!”
அவர்கள் அப்போது கூட இன்னும் கண் முன் நடந்ததை நம்ப முடியாமல் இருக்க, “அது அங்க வச்சிருந்த சமையல் இன்னைக்கு எனக்குப் பிடிக்கல. சாப்பிட முடியாம ஒரு மாதிரி குமட்டிட்டு இருந்தது, அதான் தயிரும் ஊறுகாயும் எடுத்துட்டு வந்தேன்” என்று ஏதோ ஒரு சாக்கு போக்கை சொன்னார். ஆனால் அதை ஏற்கத்தான் அவர்கள் இருவராலும் முடியவில்லை!
சற்று நேரத்துக்கு முன்பு சூடான பிரியாணியை உண்டவர்கள், அவருக்கும் கையோடு வாங்கி வந்திருந்தார்கள். அதை எடுத்து அங்கிருந்த மேஜையின் மீது வைத்தவள், கீழே சிதறி கிடந்த சாதத்தையும் தட்டையும் எடுத்து சுத்தப்படுத்த, ஒரு மருத்துவரான அவள் சாதாரணமாக நடந்து கொள்வதை கண்டு பதறிப் போய் தடுத்தார் விசாலாட்சி!
“எங்க அம்மாவா இருந்தா நான் செய்ய மாட்டேனா?” அவளது ஒற்றை வார்த்தை அவரை முடக்கி படுக்கையில் அமர வைத்து விட, அங்கிருந்து சுத்தம் செய்து மாற்றி விட்டு வந்து தாங்கள் வாங்கி வந்திருந்த உணவை எடுத்துக் கொடுத்தாள். அவர் தயங்கித் தயங்கி உண்ண மறுக்க, பிரியம்பதா ஒரு தட்டை எடுத்து வந்து அந்த உணவை அதில் வைத்து, ஒரு ஸ்பூனில் எடுத்து அவருக்கு ஊட்டி விட்டாள்.
அவரது கண்களில் இருந்து நீராக வடிந்தது! இதழ்கள் கோணி முகமெல்லாம் சிவந்து போனது.
“அத்தை, உணர்ச்சிவசப்படாம இருங்க!” என்ற மருதுவேல் அவர் அருகில் அமர்ந்து கொள்ள, அவரால் தாள முடியவில்லை.
எதிரில் இருந்த இருவரின் மனநிலையும் முற்றிலும் மாறி போயிருந்தது. “ஏன் மருது, நம்ம பிரது நம்மை விட்டுப் போயிட்டா? அவள் மட்டும் என்கூடவே இருந்திருந்தா நான் இப்படி இருந்திருக்க மாட்டேனே!” என்றவர்
“இல்லை இல்லை தப்பா சொல்லிட்டேனா! அவ எப்போ என் கூட இருந்தா? அவளைத்தான் இந்த வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க இல்லை” என்று குமுறினார்!
“ஒரு தப்பும் செய்யாத பச்சைக் குழந்தையின் மீது வெறுப்பை கொட்ட யாராலும் முடியுமா? இவர்கள் ஏன் அப்படி ஆகிட்டாங்க? இவர்களால் தானே நான் பத்து மாசம் கஷ்டப்பட்டு சுமந்த என் பிள்ளையைப் பறிகொடுத்து அநாதையா தவிக்கிறேன்! இந்த வீட்டுல அவ இருந்தாலும் அவளை வாழவே விட்டு இருக்க மாட்டாங்க இல்லையா!” என்று தேம்பினார்.
“எனக்கு இந்த வீட்டுல வாங்கி தரும் சாதனங்களோ, வீட்டில் உள்ள வசதியோ கண்ணுக்குத் தெரியல. நான் இப்படியே இருக்கத்தான் ஆசைப்படுறேன்” என கூறினார்.
அவன் அத்தையின் தோளைத் தட்டிக் கொடுக்க, “ஆண்டவனின் படைப்புகள் விசித்திரமானவை! உங்களுக்கு கிடைக்கணும்னு இருந்தா மட்டும் தான் கிடைக்கும். கிடைக்காதவை கிடைக்காது. விட்டுப் போனதைப் பற்றி நினைச்சு உங்களை போட்டுக் கஷ்டப்படுத்தாம, இருக்கும் காலத்தையாவது பயனுள்ள வகையில் அமைக்க பாருங்க” என்றாள் பிரியம்பதா.
மருதுவேலிடம் எப்போதும் சொல்வது போல அவர் சொல்லிவிட்டார், அதன் பிறகு தங்கள் அருகில் அமர்ந்திருந்த பிரியம்பதாவும் நினைவுக்கு வந்தாள். அந்த அளவுக்கு அவர் மனம் உடைந்து போய் இருக்கிறது! அவர்கள் இருவருக்கும் முன்பு வேறு எதுவும் சொல்லாமல் அவர் அமைதியாகிவிட, “அத்தை உங்களை விட்டு எதுவும் போகாது. ‘கடவுள் நல்லவங்களை சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார்; கெட்டவங்களுக்கு வாரி கொடுப்பார் கைவிட்டுடுவார்’ உங்களையும் அது போல தான் கவலைப்படாம இருங்க அத்தை! கடவுள் உங்களுக்கு செய்கிறாரோ இல்லையோ உங்க மருமகன் நான் செய்து தருவேன்” என்று ஆறுதலாக கூறினான்.
“ஏதோ மருது நீ இப்ப கொஞ்ச நாளா இங்க வருவதிலும் பேசுவதிலும் தான் எனக்குன்னு ஒரு ஜீவன் இருப்பது மாதிரி உணர வைக்குது... உங்க அம்மா இந்த வீட்டுக்கு வந்த நாளில் இருந்து ஒரு நல்ல தோழியா நடந்துக்கிறாங்க. அவங்களும் போன பிறகு தனிமை என்னை ரொம்ப வாட்டுது. பேசாம நீ எனக்காக இதே வீட்டுக்கு வந்துடு மருது” என்றார் உள்ளார்ந்த அன்புடன் விசாலாட்சி.
அவனும் மிக விரைவில் வருவதாக சொல்லிவிட்டு, மருத்துவமனையில் அவருக்கு எதுவும் இல்லை என்ற அறிக்கையை காண்பித்து, “இதே மாதிரி தினமும் உண்பதால்தான் இப்படி இருக்கிறதா?” என்று கேட்டான். அவனுக்குப் பதில் கூறாமல் தலை குனிந்த நிலையில் இருப்பதைப் பார்த்ததும் புரிந்தது! ஏன் அப்படி அவர் நடந்து கொண்டார் என்பதற்கான காரணமும் தெரிந்தது.
அதற்கு மேலும் அவரை வருத்த மனமில்லாமல், உண்ண வைத்துவிட்டு அவருக்காக வாங்கி வந்த சாதனங்களை அதே அறையில் உள்ள கப்போரில் வைத்து பூட்டி சாவியை எடுக்க செய்தான். பின்னர் அதை அத்தையின் கையில் கொடுத்துவிட்டு, “நாங்க வாங்கி வந்திருப்பதில் ஒரு சாதனம் கூட வீணாக்காம நீங்க சாப்பிட்டு இருக்கணும்! நான் வேலைக்குப் போகும் முன் வந்துட்டு தான் போவேன்” என்றவன் உச்சரித்த அழுத்தமான வார்த்தைகள், இங்கு நடப்பதை அவனுக்குத் தெரியப்படுத்தி விட்டன என்பதை அறிவுறுத்தியது.
மருமகனின் முகத்தையே பார்த்தவர், இவனுக்குத்தான் தன் மீது எத்தனைப் பாசம் அக்கறை! அந்த அளவுக்குத் தான் என்ன செய்து விட்டோம்! என்று மனம் கலங்கினார்.
அத்தையிடம் சற்று நேரம் பேசியவன் பிரியம்பதா அமைதியாகவே இருப்பதைக் கண்டு, எதுவும் சொல்லத் தோன்றாமல் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான். அவள் வாய் திறந்து எதுவும் கேட்கவில்லை அவனும் சொல்லவில்லை. இதோ அறைக்குள் வந்து நேரமாகியும் அவளிடம் எந்த அசைவும் இருக்கவும் இல்லை.
மாலை நேரத்தில் அவள் மருத்துவமனைக்கு சென்று விட, அவன் தனது அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தான்.
“நான் உங்க கிட்ட பேசணும்”
“சொல்லு மருது! ஏன் யாரோ ஒருத்தர் கிட்ட கேட்பது மாதிரி கேட்டுட்டு இருக்கே?”
“அத்தை வீட்டுல இத்தனை நாள் தங்கியிருந்தீங்களே! அத்தை கிட்ட அந்த வீட்டில் உள்ள எல்லோரும் நல்ல மாதிரி நடந்துக்கிறார்களா? நாங்க வாங்கி தந்தது எல்லாமே அவங்கதானே சாப்பிட்டாங்க”
திடீரென மகன் இப்படி கேட்பான் என்று அறியாமல் அவர் திடுக்கிட, “அத்தைக்கு உடம்புக்கு முடியாததில் இருந்து சரியா வேலைக்குப் போகல. அடிக்கடி லீவ் போட்டது முக்கியமான வேலைகளை செய்ய விடாம, மேனேஜருக்கும் எனக்கும் கொஞ்சம் ப்ராப்ளம் ஆகிடுச்சு. இனி வேறு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்யணும்னு முடிவு பண்ணி இருக்கேன். அடுத்தவர் கீழே வேலை பார்த்தா இதுதான் நிலைமை, அதனால சொந்தமா ஏதாவது தொழில் செய்யலாம்னு பார்க்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று மெல்ல தூண்டில் வீசினான்.
அவர் மகன் மனதில் இருப்பதை அறியாமல், “மருது நான் உன்கிட்டே ஆரம்பத்தில் இருந்து சொல்லிட்டு இருக்கேன், அண்ணனோட தொழிலை பாக்குறதுக்கு ஒரு ஆளுமையான நபர் வேணும்! மித்ரா பொம்பளை. அவளாலே உன்னை மாதிரி திறமையா நடந்துக்க முடியாது. உங்க மாமா தான் எங்க அப்பா காலத்துல இருந்து இப்ப வரைக்கும் பாத்துட்டு இருக்கான்.
அவனுக்கும் வயசாகுது, ஏதாவது ஆகும் முன் உங்கிட்ட ஒப்படைக்கணும்னு எத்தனையோ முறை ஆசைப்பட்டு என்கிட்டே சொல்லி சொல்லிவிட்டான். நீதான் விசாலாட்சிக்கு மேல உள்ள பாசத்துல சொந்த தாய் மாமனையே யாரோ மாதிரி வெறுத்து ஒதுக்கி வச்சிருக்கே!
எங்க அம்மா கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க, அவங்களுக்காக யாராவது வராம இருப்பாங்களா? நீ வந்து போன நாளில் விசாலாட்சி எவ்வளவு சந்தோஷமா இருந்தா, உங்க மாமா நீ வீட்டுக்கு வருவதை நினைத்து சந்தோஷப்பட்டு, அவன்கிட்ட பேச மாட்டியான்னு ஏகத்தோடு இருக்கான்! நீ மட்டும் சரின்னு சொன்னா உடனே அவன், அவனுக்கு அடுத்த இடத்தில் உன்னை அமர வச்சுடுவான். நீ என்னப்பா சொல்ற?” என்று ஆவலாக கேட்டார்.
அவன் அமைதியாகவே இருந்தான். “நான் இன்னைக்கு சாயந்திரமே அண்ணனைப் போய் பார்த்துப் பேசுறேன். நீ சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பிச்சாலும் இப்ப லட்சக்கணக்கா பணம் போடணும், அதுக்கு எங்கப்பா போறது? அதோடு நம்ம தொழிலை நீ பார்த்தா அவனும் நம்பிக்கையான ஒரு நபரை நம்பி ஒப்படைச்ச திருப்தியில் நிம்மதியா இருப்பான். எனக்கும் உங்களைப் பத்தின கவலை இல்லை” என மெல்ல மெல்ல மகன் மனதை மாற்ற முயன்றார்.
“எனக்கு அங்கு போறதில் கொஞ்சமும் விருப்பமில்லை. அவருக்கு கீழே அடிபணிந்து நடக்க முடியாது. அதிலும் அந்த மித்ரா வந்து அடுத்தவர் முன் என்னை அதிகாரம் செய்தால் அது எல்லாம் பார்க்கும் அளவுக்கு நான் இல்லை. ஏற்கனவே பிரதாப்பை அவள் அப்படித்தானே உதாசினப்படுத்தி நடத்துறாளாம்…”
“அவள் ஏதோ சின்ன பொண்ணு. தெரிஞ்சி தெரியாம சொந்த அத்தை பசங்க தானேன்னு உரிமையோடு பேசுவா! அதை எல்லாம் நீ ஏன்பா பெருசு படுத்துற? உங்க மாமாவை போல உன்னைத் தவிர வேறு யாராலும் அவனோட தொழிலை நிர்வகிக்க முடியாது. எதிரியாக இருந்தாலும் மித்ராவாக இருந்தாலும், அவர்களை அடக்கி வைக்கும் சாமர்த்தியம் உனக்கும் மட்டும் தான் இருக்கு. அது எங்க தாத்தா அப்பா காலத்துல சம்பாதிச்சு வச்ச சொத்து. அதை அழிஞ்சு போகாம பார்க்க வேண்டியது நம்ம கடமையும் கூடதான்” என்று விளக்கினார்.
அவன் யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டு சென்றுவிட, இதை இப்படியே விடக்கூடாது என்று நினைத்தவர், அன்று மாலையில் மகன் வெளியே சென்றிருக்கும் நேரத்தில் அண்ணன் வீட்டிற்கு போய்விட்டார்.
ஜம்புலிங்கம் விஷயத்தை அறிந்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
“நாளைக்கு காலையில் நம்ம மருதுவை வரச் சொல்லு! மற்ற விஷயங்களை நான் பார்த்துக்கிறேன்” என்று ஒரே வார்த்தையில் சம்மதம் தெரிவித்து விட்டார்.
உடன் பிறந்தவரைப் பற்றி தெரியாதவர் ஒன்றும் இல்லை காவேரி. தமையனின் வார்த்தையில் அத்தனை மகிழ்ச்சி அடைந்தவர், “முதல்ல கொஞ்ச நாள் அவன் வேலைக்குப் போகட்டும், பிறகு நம்ம மித்ராவுக்கும் அவனுக்கும் கல்யாணம் நடக்கும் விஷயமா பேசலாம். அப்புறமா அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை நடத்தி இந்த வீட்டுக்கு அவனை வர வச்சுடலாம்” என்று இன்னும் தமையன் மனதை மாற்றும் செயலில் ஈடுபட்டார்.
“நல்லது. கேட்கவே சந்தோஷமா இருக்கு!” என்றவர் “அம்மாடி மித்ரா! உங்க அத்தை சொல்வது கேக்குதாடா?” என்று உள்நோக்கி குரல் கொடுக்க, அத்தனை நேரமாக அவர்கள் பேசுவதை கேட்டு இருந்தவளுக்கு மகிழ்ச்சியில் உள்ளமெல்லாம் பூரித்துப் போனது! வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ள, வெளியில் சென்று அவர் முன்பு நிற்க கூச்சமாக இருந்தது. அதைப் புரிந்து கொண்டது போல ஜம்புலிங்கம் சத்தமாக சிரித்தார். அந்த வீடு சில மாதங்களுக்குப் பிறகு சில வருடங்களுக்கு பிறகு இப்போது தான் நிறைவாக மகிழ்வாக உணர்ந்தது. ஆனால் அவர்களின் பேச்சுகளை பக்கத்து அறையில் இருந்து கேட்டு இருந்த விசாலாட்சிக்கு இது எதுவும் மருமகனுக்கு தெரியாமல் நடப்பதில்லை. அவன் ஏதோ திட்டம் தீட்டுகிறான் என்று நன்கு புரிந்தது. அவன் வரவேண்டும் என்று எத்தனையோ நாள் நினைத்திருக்க வராமல் போய்விட்டான், இப்போது வருபவனின் நல்வரவால் மீண்டும் மாளிகையில் நல்ல சம்பவங்கள் நிகழட்டும் என்று உளமாற எண்ணினார்.
இரவு காவேரி வீட்டிற்கு வந்ததும் மகனிடம் விஷயத்தை தெரியப்படுத்த, அவனும் விருப்பமே இல்லாதது போல தலையை அசைத்து விட்டு போய்விட்டான். அவனது தம்பி பிரதாப்பிற்கு இது பிடிக்காமல் அம்மாவிடம் சண்டையிட்டான். அவரோ, “நானே எவ்வளவு நாளா ஆசைப்பட்டு இப்பதான் அது நடக்குது. நீ கெடுத்து விட்டுருவ போல இருக்குதே! பேசாம இரு, இல்லையா நாளைக்கு யாரையாவது ஒருத்தரை பார்த்து அவளுக்கு கல்யாணம் செய்து வச்சுடுவாங்க. பிறகு அந்த வீட்டு பக்கம் கூட காலை தூக்கி வைக்க முடியாது” என்றார் காவேரி.
“அந்த வீடு சொத்து பணத்துக்காக அண்ணனோட வாழ்க்கையை அழிக்க பாக்கறீங்களா? ஒருபோதும் அண்ணன் இந்த திட்டத்திற்கு சம்மதிக்க மாட்டார்” என்று அவன் கத்தினான்!
“அதுதான் உனக்கும் விமலாவுக்கும் கல்யாணம் செய்து தர சம்மதிச்சாச்சு இல்லையா! உன் வாழ்க்கையில் எந்த இடையூறும் நாங்க செய்யலை! அதுபோல உன் அண்ணன் வாழ்க்கையும் அழிந்து போக நான் விடமாட்டேன். இப்போ அங்கு வேலைக்குப் போகும் போதும் அண்ணனிடம் நல்ல விதமாக நடந்து பொறுப்பை ஏற்பதும் எல்லா வகையிலும் நல்லது. உனக்கு இப்ப புரியாது நான் ஏன் சொல்றேன்னு…” என்றவருக்கு பழைய சம்பவங்கள் கண் முன் வந்து போனது.
மறுநாள் அதிகாலையில் அவன் எழுந்து பால்கனியில் தேவி தரிசனத்திற்கு நிற்க, அவளும் வழக்கம் போல வந்து தரையில் கோலமிடுவதாக வரைந்து அவன் மனதிலும் அழியாத வண்ண கோலத்தைப் பதிய வைத்தாள். பின்னர், மாடியில் இருவரது பார்வையும் பால்கனி சுவரை தாண்டி ஒன்றிணைந்தது.
“நான் இன்னைக்கு அங்க கிளம்புறேன், இனிமேல் என்னால முன்ன மாதிரி வர முடியுமா தெரியல. கவனமாய் இரு! எதுவாயிருந்தாலும் எனக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்ப தயங்காதே! நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடணும் சரியா?” என்று கூற, அவள் கண் கலங்க தலையசைத்தாள்.
அவள் சரியாக வேலைக்குப் போவதற்கு தயாராகி நிற்கும் நேரம் வீட்டிற்கு வந்தான். அவள் அப்போதுதான் சாமியை வழிபட்டு நெற்றியில் சந்தனம் கீற்றாக வைத்துவிட்டு நிற்க, புடவையில் அவள் நிற்கும் தோற்றம் அவன் மனதிற்குள் சம்மணமிட்டு அமர வைத்தது.
சந்தனத்தில் சிறிதளவு எடுத்து வந்து அவனது நெற்றியிலும் கழுத்திலும் வைத்து விட்டவள், “இதன் குளிர்ச்சி உங்கள் உடம்பிலும் பரவி மனதில் உள்ள கோபங்களை அழித்து, நம் ஆசைகளை நிறைவேற்றி தரணும். யார் என்ன சொன்னாலும் எதிர்த்துப் போகாம பொறுமையைக் கையாண்டு, மிக விரைவில் உங்க மாமாவை உங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் விதமாய் செய்யணும். மித்ரா என்ன சொன்னாலும் கண்டுக்க வேண்டாம்! ஒருவேளை அவளைக் கல்யாணம் செய்யும் விஷயமா பேசினால் கூட நீங்க சம்மதம் சொல்வது போல் இருக்கணும்! உங்கள் ஆசைகள் ஈடேற எல்லாம் வல்ல ஈசன் அருள் பாலிக்கட்டும்!” என்று வாழ்த்தினாள் பிரியம்பதா.
அவன் அருகில் சென்று அவளது இரு கைகளையும் பற்றிக் கொண்டான். “நான் இப்ப போறது உனக்காகவும் என் அத்தைக்காகவும்! விரைவில் நல்ல செய்தியுடன் வருவேன். இடைப்பட்ட நாட்களில் ஏதாவது கசப்பான சம்பவங்கள் நடந்தா கூட நீ அதைப் பெரிது படுத்தாம இருக்கணும்! என் மனம் என்னும் கோட்டையில் வீற்றிருக்கும் மகாராணி நீ! உன்னைத் தவிர வேறு யாருக்கும் அங்கு இடம் இல்லை என்பதைப் பூரணமாக உணரணும்! எந்த சூழ்நிலையிலும் நீ என்னைப் பகடையாய் பயன்படுத்தி விலகிப் போகக்கூடாது!” என்றவன் அவளை ஆரத்தழுவி அழுத்தமாக முத்தமிட்டான்!
அவனிட்ட முத்த சந்தங்கள் அவளுக்குள் சென்று இதய வாசலை திறந்து விட, இருவரின் அணைப்பும் முத்தமும் அவர்களை விட்டு விலக விடாமல் செய்தது.
அவன் நெற்றியில் முத்தமிட்டவள், அவன் நினைத்தது போல் நடக்க வேண்டும் என்று மனம் உருக இறைவனிடம் கோரிக்கை விடுக்க, அவளது கன்னத்தில் முத்தமிட்டவன், இதேபோல் அவள் கடைசி வரை தன்னுடனே இருக்க வேண்டும் என்று ஆண்டவனிடம் கேட்டுக் கொண்டான்.
அவளை விட்டுச் செல்ல மனமில்லாமல் அவனது கைகள் அவள் இடையையும் கழுத்தையும் சுற்றி அணைத்திருக்க, அவனை விட்டு விலகத் தோன்றாமல் அவளும் அவனது தேக்கு போன்ற மார்பில் கொடியெனப் படர்ந்திருந்தாள்!
நேரம் சென்று கொண்டே இருந்தது, இன்னும் சற்று நேரத்தில் அவன் போக வேண்டும். அவளை விட்டு பிரிந்து செல்ல மனம் வரவே இல்லை. அதே நேரம் கூடவே அழைத்துச் செல்லவும் முடியாது.
காலையில் எட்டு முப்பது மணி அளவில் வீட்டிலிருந்து வெளியேறினால், திரும்ப வருவதற்கு எத்தனை மணி ஆகும் என்று அவனுக்கே தெரியாது. அவளும் தன் வேலைகளை முடித்து இரவு நேரத்தில்தான் வீடு திரும்புவாள். அதற்குப் பிறகு அவளைப் பார்ப்பதே அரிதான ஒன்று. இதுவரை அவன் இரவு நேரத்தில் அவளது அறைக்குப் போனதில்லை. அவர்கள் இருவரும் பார்த்துக்கொள்ளும் அந்தச் சில நிமிடங்கள் மட்டுமே அவர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதாக இருந்தது. இனியும் அதுதான் அவனது காதலைக் கண்கள் வழியே அவளிடம் கடத்திச் செல்ல உதவும்.
அவன் அவளை விட்டு மெல்ல விலகினான். அவளது விழிகள் அவன் மீதிலேயே இருப்பதைக் கண்டதும், தன் மீதான அவளது நேசத்தில் கனிந்த பார்வையை அவளை நோக்கி வீசினான் மருதுவேல். அவளது இதழ்கள் எதையோ சொல்ல நினைத்து முடியாமல் துடிப்பதை கண்டு அதை நோக்கி மெல்ல குனிந்தான். அந்த அறையே இருவரின் காதல் மோகத்தில் மூழ்கி முக்குளித்தது! அதிலிருந்து விலக தோன்றாமல் இருவரும் வீழ்ந்து கிடந்தார்கள்…