- Joined
- May 14, 2024
- Messages
- 225
- Reaction score
- 155
- Points
- 43
அத்தியாயம் 6
நிரஞ்சன் தன் தங்கை லாவண்யாவிடம், அபிநிதியை சந்தித்த தினத்தை கூறலானான்.
"உங்களுக்குள் என்ன பிரச்சனை? எவ்வளவு நாள் பழக்கம்?" என்று லாவண்யா ஆர்வத்துடன் கேட்க,
"பழக்கமா? அது மட்டும் என் வாழ்க்கையில் நடக்கவே கூடாது. உன் ஃப்ரெண்ட் கூட எனக்கு எந்த சந்தர்ப்பத்திலும் சுமூகமாக போக முடியாது... அவளால நான் ஜெயிலுக்கு போயிருப்பேன்." என்றான்.
"என்ன சொல்ற நீ?"
"ஒருநாள் நானும் என் பிரெண்ட்ஸ் ரெண்டு பேரும் சேர்ந்து படம் பார்க்க போயிருந்தோம். படம் பார்த்து முடிச்சிட்டு வெளியே வரும் போது, எவ்வளவு கூட்டமா இருக்கும்? என்னவோ மாரத்தான் போட்டியில் முதல் பரிசு வாங்க முந்திகிட்டு போற மாதிரி, மொத்த ஜனமும் கூட்டமா போவாங்களே. அப்படி தான் அன்னிக்கும் நடந்துச்சு. அப்படி நான் கதவை தாண்டி வெளியே வரும் போது, யாரோ ஒரு பொண்ணு, என் சட்டையைப் பிடிச்சு நிறுத்தி, நான் தப்பா அவ மேல கையை வெச்சதா சொல்லி கத்தினா! எனக்கு ஒன்னும் புரியல. கூட்டம் மொத்தமும் என்னையே லுக்கு விட்டாங்க. எனக்கு ஒரு நிமிஷம் பதட்டத்துல மூஞ்சி வேர்க்கவே ஆரம்பிச்சிடுச்சு. நான் என்ன பேச வந்தாலும், அதை மத்தவங்க காதுல வாங்கக் கூடாதுன்னு நினைச்சு அந்த பொண்ணு 'ஓ'ன்னு கத்தி ஒப்பாரி வெச்சிட்டு, கண்ணுல இருந்து தாரை தாரையா கண்ணீர் வடிக்குது. அப்ப எங்கிருந்து வந்தான்னு தெரியல உன் இத்துப் போன ப்ரெண்ட்.டு!!... வந்தவ, பளார்ன்னு ஒரு அறை வேற விட்டாள். என்னை பொம்பளை பொறுக்கி ரேஞ்சுக்கு பேசினா. நானும் கத்த, அவளும் கத்த, அந்த இடமே களேபரம் ஆகிடுச்சு. உடனே திரையரங்கம் மேனேஜர் சொல்லி போலீஸும் வந்துட்டாங்க. அதுக்குள்ள உன் ஃப்ரெண்ட் நான் தான் பிரச்சனைக்கு காரணம் சொல்லிட்டு போயிட்டா. என்னையும், நான் யாரை தப்பா தொட்டேன்னு சொல்லி பிரச்சனை நடந்துச்சோ, அந்த பொண்ணையும் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போயிட்டாங்க. அங்கிருந்து எல்லாத்தையும் விளக்கி சொல்லி புரிய வெச்சு வெளியே வர எனக்கு போதும் போதும்னு ஆகிடுச்சு."
"இப்படி ஒரு பழி உன் மேல ஏன் வந்துச்சு அண்ணா?"
"அது தான் கொடுமையிலும் கொடுமை. அது ஒரு யூடியூப் பிராங்க் ஷோக்காக அந்த பொண்ணு விளையாடி இருக்கு. போலீஸ் அந்த பொண்ணையும் அவளோட டீம்மையும் கண்டபடி திட்டி அனுப்பினாங்க. இப்ப சொல்லு, உன் ஃப்ரெண்ட் தானே இந்த பிரச்சனை பெரிசாக காரணம். அப்புறம் நான் எப்படி கோபப்படாமல் இருப்பேன்?!"
"அதுக்கு ஒரு பொண்ணை என்ன விவரம்னு தெரியாம தப்பா சொல்லிடுவியா?" என்றாள் கோபம் அடங்காமல்.
"அதுக்கு சாரி லாவா. அவ மேல உள்ள ஆத்திரம்... அதில் அப்படி சொல்லிட்டேன்." என்றான்.
லாவண்யா அத்துடன் அந்த பேச்சை விடுத்து, "அண்ணா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணேன் பிளீஸ். இன்னிக்கு அபி அரசு பரிட்சை எழுதறாங்க. ஹால் டிக்கெட் உன்கிட்ட இருக்கு. எப்படியாவது அவங்க கையில் இதை சேர்த்துடேன்" என்றாள்.
"அதெல்லாம் முடியாது" என்றான் உடனே.
"சரி... என்கிட்ட கொடு... நான் போய்க் கொடுத்துடறேன்" என்று அவனது கையிலிருந்து பிடுங்கிகொண்டு கிளம்பிய லாவண்யாவை நிறுத்தினான்.
"புரியாம பேசாத லாவா. மணி என்னன்னு பார்த்தியா? இந்நேரம் தேர்வு நேரம் முடிஞ்சிருக்கும்" என்றான் தன் மணிக்கட்டில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தபடி!.
"இரு அண்ணா அவங்களுக்கு ஃபோன் பண்றேன்" என்று தன் ஃபோனை எடுத்து அபிநிதிக்கு அழைப்பு விடுத்தாள்.
தொடர்ந்து இரண்டு முறை அழைப்பு விடுத்தும், அவள் எடுக்கவில்லை என்றதும் கவலையைத் தத்தெடுத்துக் கொண்டாள் லாவண்யா.
"ஃபோன் எடுக்கவில்லை அண்ணா. இப்ப என்ன பண்றது?!"
"ரிலாக்ஸ் லாவா. ஹால் டிக்கெட்டை தவறவிட்டது அவளோட தப்பு. அதுக்கு நாம என்ன பண்ண முடியும். மே பீ பரீட்சை எழுத அனுமதி கிடைச்சிருக்கும் அதான் ஃபோன் எடுத்திருக்க மாட்டா. நீ இப்ப ட்ரெஸ் வாங்கணும்னு சொன்னல்ல... வா போகலாம்" என்று தங்கையின் வாடிய முகம் அவனை தாக்க, அவளை சமாதானம் செய்து வெளியே அழைத்துச் சென்றான்.
முதல் தாள் பரீட்சை எழுதிய அபிநிதி, எப்படியும் அடுத்த தேர்வுக்கு முன், மதியம் ஹால் டிக்கெட்டை தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விடலாம் என்று நம்பிக்கையுடன் மிக நன்றாகவே முதல் பரீட்சையை எழுதியிருந்தாள். தேர்வை முடித்து வெளியே வந்தவளுக்கு, தொண்டை வறண்டு அவளுக்கு தாகம் எடுக்க, அங்கே வைக்கப்பட்டிருந்த தண்ணீரைப் பருகச் சென்றாள்.
அங்கே வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் நீர் பிடிக்கும் முன், தன் அலைபேசியை அக்குளில் சொருகினாள். பிறகு தண்ணிரை அருந்த அன்னாந்து பார்த்தவள் சட்டென கையில் வைத்திருந்த குவளையை தவறவிட்டாள். கூடவே அவளின் அலைபேசியும் கட்டுப்பாட்டை இழந்து அக்குளில் இருந்து நழுவி கீழே விழுந்தது. அவளின் அருகில் இருந்த ஒரு இளைஞன் கண்கள் இருட்டிக் கொண்டு வந்ததால் அபிநிதியின் இடது தோளை இறுக்கமாகப் பிடித்ததும் திடுக்கிட்டு திரும்பி கைகளால் அவனது கையை வேகமாக தட்டிவிட்டாள்.
அதில் அவன் தள்ளாடி விழப் போகவும், பதறிப் போய் மீண்டும் அவளே அவனது கையைப் பிடித்து இருவரையும் ஸ்திரமாக நிறுத்தப் போராடினாள். ஆனாலும் ஒரு ஆடவனின் உடல் பலமும் சில பெண்களின் உடல் பலமும் வேறாக இருப்பதும் இயல்பு தானே. அந்த சில பெண்களின் வரிசையில் அபிநிதியின் உடல் பலமும் சேர்ந்துக் கொண்டது அவளின் தவறல்ல. அவளின் சத்தம் கேட்டு அருகில் இருந்த சிலர் அவளுக்கு உதவி செய்ய ஓடி வந்தார்கள். அவர்கள் ஓடி வருவதற்குள், அவளும் அந்த இளைஞன் உடன் சேர்ந்து அப்படியே குப்புற விழுந்தாள். அந்த நொடி அவன் மேல் விழுந்து விடக் கூடாது என்று மட்டும் தான் அவளின் மனதில் ஓடியது. சட்டென அவனின் கையை விடுத்து அவனுக்கு அருகில் விழுந்து இடதுக் கையை தரையில் வேகமாக ஊன்றியவள், வலதுக் கையை பின்னால் திருப்பி கொண்டு போன அதே நேரம், தரையில் மோதியதில், அவளின் வலது புஜத்தில் சுருக்கென்று வலி தோன்றியது.
மயக்கம் தெளிவிக்க, உதவிக்கு வந்த சிலரில், ஓரிருவர் அபியை எழுப்பி விட, மற்றவர்கள் தண்ணியை இளைஞனின் முகத்தில் தெளித்து எழுப்பினார்கள். ஒரு பெண் சட்டென அவன் வாயில் இன்னட்டை தள்ளினாள். இன்னட்டு அவன் வாயில் கரைந்து உள்ளுக்குள் மாச்சீனியாக மாறி, சிறிது நிமிடங்களில் சற்றே அவனுக்கு உடலில் ஆற்றல் பிறந்து கண்கள் தெளிந்தன.
அபிநிதி தன் கைவலியை மறைத்து அவனிடம் நலம் விசாரித்தாள். மற்ற அனைவரும் சில பல உபசார வார்த்தைகளுக்கு பிறகு நகர்ந்து விட, அபி, "நீங்க நல்லா இருக்கீங்க தானே... இல்ல மருத்துவமனை போகலாமே." என்றாள் சக மனிதன் மேல் கொண்ட பரிவு மற்றும் இரக்கத்தில்.
"ஐயோ இல்லைங்க. காலையில இருந்து எதுவும் சரியா சாப்பிடாம, பரீட்சைக்கு வந்ததால் தான் இருக்கும். இப்ப நல்லா தான் இருக்கேன். இந்த தேர்வு எனக்கு ரொம்பவே முக்கியம். எப்படியாவது தேர்ச்சி பெறனும்." என்றான்.
"சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். அப்படித்தானே நம்ம மனுஷங்க உடம்பும். இனிமேலாவது கவனமா இருங்க" என்றாள்.
"தேங்க்ஸ்-ங்க" என்று கூறிவிட்டு நகர்ந்தான்.
அதுவரை பொருத்திருந்தவள் அவன் சென்றதும், தன்னை சுற்றி நெருக்கத்தில் யாருமில்லை என்று நிச்சயமாக அறிந்ததும், கண்களில் இருந்து உப்பு நீர் பெருகி கரையைக் கடந்து கன்னத்தைத் தொட்டது.
அவளால் கை வலியைப் பொறுக்க முடியவில்லை. தன்னால் இரண்டாம் பரீட்சையை எழுத முடியுமா? என்ற நடுக்கம் அவளுள் எழுந்தது.
'ஒருவேளை எலும்பு முறிவு ஆகிடுச்சோ... எழுத முடியுமா?'
'ஹுகும்... எப்படியாவது எழுதிடனும் அபி. நீ செஞ்சுக் கொடுத்த சத்தியத்தை காப்பாற்றியே ஆகனும். எழுதி முடிச்சிட்டு அம்மாவை கூட்டிட்டு மருத்துவமனை போயிடலாம்' என்று தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டாள்.
'ஹலோ மேடம்... எப்படி எழுதுவீங்க? முதல்ல ஹால் டிக்கெட்டை எடுக்கும் வழியைப் பாருங்க. மறதி மன்னாரு... ஒன்னாவது மறக்காம இருக்கியா. தப்பான நேரத்தில் சரியான விஷயத்தை மறந்திடு.' என்று அவளின் மனமே அவளை எள்ளி நகையாடியது.
உடனே பதட்டத்துடன் கை நழுவிய ஃபோனை தேடினாள். தண்ணீர் குவளைக்கு அருகாமையில் ஆதரவின்றி கிடந்தது அவளின் அலைபேசி.
ஓடிச்சென்று எடுத்தவள், உதட்டை பிதுக்கியபடி பரிதாபமாக பார்த்தாள். அவளின் ஃபோன் திரை விரிசல் விழுந்திருந்தது.
ஃபோனை கடவுச்சொல் குறியீட்டை கொடுத்து இயக்கினாள். ஆனால் அதுவோ அவள் செயல் பேச்சைக் கேட்காமல், இவள் ஒன்றை தட்டினால், அது ஒன்றை திறந்தது. இப்போது என்ன செய்வது என்று ஒரு நொடி முழித்தாள். அலைபேசியை அனைத்து மீண்டும் உயிர்ப்பித்தாள்.
அதே நேரம் அவளின் அலைபேசியை உயிர்ப்பிக்க வந்த தேவதையாக, லாவண்யா அழைப்பது பாதியாக, ஃபோன் திரையில் ஒளிர்ந்தது. ஆனால் அவளின் அழைப்பை ஏற்கப் போராடினாள்.
ஆனால் அதற்குள் வந்த அழைப்பு தானாகவே துண்டித்தும் போனது. அடுத்த தேர்வுக்கு நேரமாக, அவளுக்கு சாப்பிடக் கூட மனமில்லை. எப்படியாவது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து விட வேண்டும். யாரிடமாவது அலைபேசி வாங்கி வேலையை பார்க்கலாம். என்றால், அவளுக்கு அதற்கும் அவளின் ஃபோன் எண்ணில் இருக்கும் கடவுச்சொல் வேண்டும். ஆனால் அலைபேசி மக்கர் செய்கிறது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அதே சமயம், ஆபத்பாந்தவியாக லாவண்யாவின் குறுஞ்செய்தி கொஞ்சமாக திரையில் ஒளிர்ந்தது. தெரிந்த வரை வாசித்தவளுக்கு, மனதிலும், முகத்திலும் சந்தோஷம் பிரவாகம் எடுத்தது.
லாவண்யா, "சீனியர், இன்னிக்கு உங்களுக்கு upsc அரசு தேர்வு இருக்குன்னு கேள்விப்பட்டேன். ஆனால் ஹால் டிக்கெட் உங்களிடம் இல்லைன்னும் எனக்குத் தெரியும். எப்படியோ ரோட்டில் தவற விட்டுட்டீங்க போல... இப்ப அது என் அண்ணாவிடம் இருக்கு. ஹால் டிக்கெட் இல்லாம தேர்வு எழுத முடியுமா? சமாளிச்சுட்டீங்களா?" என்று குறுஞ்செய்தியுள் வினவியிருந்தாள்.
அதனை வாசித்ததும் தான் அபியின் மனதில் நம்பிக்கை துளிர்த்தது. உடனே, யாரிடமாவது ஃபோனை வாங்கி, லாவண்யாவின் நம்பருக்கு அழைக்க முற்பட்டாள். அவளுக்கு எதிரே மயங்கி விழுந்த அதே இளைஞன் நடந்து வர, அவளை கண்டதும் சிறு புன்னகையை முகத்தில் படரவிட்டான்.
"எக்ஸ்கியூஸ் மீ... உங்க ஃபோனை கொஞ்சம் தர முடியுமா? நான் ஒரு ஃபோன் கால் பண்ணிட்டு தரேன். என் ஃபோன் கிழே விழுந்து உடைஞ்சிருச்சு." என்றாள்.
"ஓகே. இந்தாங்க" என்று தன் அலைபேசியை அவளிடம் கொடுத்தான்.
உடனே தன் ஃபோனில் லாவண்யாவின் நம்பரை கண்களால் சுருக்கி சுருக்கி கண்டும், ஃபோனை உள்ளங்கையில் தட்டியும், பின்பு ஒரு அனுமானத்தில் அவளாக ஊகித்த எண்களையும் கொண்டு லாவண்யாவிற்கு அழைத்தாள்.
மறுபக்கம் அழைப்பை ஏற்றதும், "ஹலோ" என்று குரல் கொடுத்துக் காத்திருந்தாள் அபிநிதி.
"ஹலோ. யாரு?'
"லாவண்யா நான் அபிநிதி." என்றதும்,
"என்ன சீனியர் எக்ஸாம் முடிஞ்சிருச்சா. சக்சஸ் தானே?"
"லாவி இப்பவே உன் அண்ணனுக்கு ஃபோன் பண்ணி என் ஹால் டிக்கெட்டை இந்த அட்ரஸ்-க்கு எடுத்துட்டு வர சொல்லு. ரொம்ப அவசரம்." என்றாள்.
"சீனியர். இருங்க நான் அண்ணா கூடத் தான் இருக்கேன். அவர் கிட்டயே கொடுக்கிறேன். நீங்க அட்ரஸ் சொல்லிடுங்க"
"ஹலோ" என்று நிரஞ்சனின் குரல் எதிர்முனையில் கேட்டதும், பழைய சந்திப்புகளை முயன்று ஒதுக்கி தள்ளிவிட்டு, அவன் பெயர் எல்லாம் கூறாமல், "பிளீஸ் எனக்கு இந்த ஹால் டிக்கெட் ரொம்ப முக்கியம். கொஞ்சம் சீக்கிரம் எடுத்துட்டு வந்து தர முடியுமா? அப்ப தான் நான் என்னோட எக்சாம் எழுத முடியும்"
"நான் ஏன் உனக்கு ஹெல்ப் பண்ணனும்?"
"பிளீஸ்..."
"ம். எனக்கு இன்னும் கோபம் குறையல; ஒருவேளை உனக்கு ஹெல்ப் பண்ணனும்னா நீ என் பெயரை ஒழுங்கா கூப்பிட்டு, மரியாதையா கேளு. அப்ப நான் சமாதானம் ஆகி எனக்கு விருப்பம் இருந்தா ஹெல்ப் பண்றேன்." என்றான் விளையாட்டாக.
அது விளையாட்டு என்று அவளுக்கு புரிவதற்கு அவளின் சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை.
"என்னை பழிவாங்க இது தான் நேரமா நிரஞ்சன்.?"
"எல்லாருக்கும் எல்லா வாய்ப்பும் சரியா அமையறதில்லை. எனக்கு அமையுது நான் யூஸ் பண்ணிக்கிறேன். ஒழுங்கா மிஸ்டர் நிரஞ்சன் விஷ்வேஸ்வர்-ன்னு கூப்பிட்டு ஐம் சாரி சொல்லு. எனக்கு நிறைய டைம் இருக்கு ஆனா உனக்கு நேரம் இருக்க சான்ஸ் இல்ல. சீக்கிரம்.
"ஜகஜ்ஜால மன்மதனே..."
"ஏய்"
"ஓகே ஓகே... மிஸ்டர் நிரஞ்சன் விஷ்வேஸ்வர். பிளீஸ் எனக்கு ஹால் டிக்கெட் இப்ப அவசரம். கொண்டு வந்து தரீங்களா?" என்றாள் குரலில் ஆத்திரமும் பதட்டமும் ஒருசேர!. ஆனால் அவளுக்கு வேறு வழியும் இருக்கவில்லை.
"இதுல சாரியே வரலையே?!"
"பழிவாங்க இதுவா நேரம் மேன்? நம்ம பிரச்சனையை அப்புறமா பேசி தீர்த்துக் கொள்ளலாம். இப்ப நான் டென்ஷனில் வெடிக்கிற நிலைமையில் இருக்கேன்" என்றாள் கண்ணின் ஓரம் துளிர்த்த சிறு கண்ணீர் துளிகளோடு.