- Joined
- May 14, 2024
- Messages
- 225
- Reaction score
- 155
- Points
- 43
அத்தியாயம் 12
அபிநிதி காரிலிருந்து வெளிப்பட்டதும், நிஜந்தன் அவளை சுவாரசியத்துடன் பார்த்துவிட்டு, நிரஞ்சனை புருவம் சுருக்கி நோக்கினான்.
தம்பியின் மனதைப் படித்தவனோ, எரிச்சலுடன் அபிநிதியை உறுத்து விழித்தான்.
பிறகு ஆழ்ந்த மூச்செடுத்து, "லாவா" என்று அழைத்தவாறே தங்கையின் அருகில் சென்ற நிரஞ்சன், "உன் ஃப்ரெண்ட்டை காரில் ஏறி உட்கார சொல்லு. நானே கொண்டுப் போய் அவளோட வீட்டில் விட்டுடறேன்.." என்றான்.
அபிநிதி அவனை சட்டென்று ஏறிட்டுப் பார்த்து விட்டு, "இலாவி நான் கேப் புக் பண்ணி போயிடறேன். எனக்காக யாரும் இங்க மெனக்கெட வேணாம்." என்றாள்.
"இந்த நேரத்துல கேப் புக் பண்ண போறியா? சரி பரவாயில்ல. கேப் புக் பண்ண ஃபோன் வேணும். இருக்கா? உன்கிட்ட?!" என்று புருவம் உயர்த்தி வினவினான்.
கீழ் உதட்டை மெலிதாக கடித்தவள், "சரி லாவண்யா உன் அண்ணாவோட வீட்டுக்குப் போறேன். ஆனா கூட நீயும் வாயேன் பிளீஸ்"
அவள் வாயிலிருந்து உதித்த வார்த்தைகள் தன்னை கேவலப்படுத்தும் விதமாக தோன்றியது அவனுக்கு. "அப்படி என் மேல நம்பிக்கை இல்லாம ஒன்னும் என் கூட வர வேணாம்" என்று சரேலென்று தன் காரை நோக்கி சென்றவன், துளையில் சொருகி இருந்த சாவியை எடுத்துக் கொண்டு நேரே நிஜந்தனிடம், "டேய் போய் அவளை அவங்க வீட்டுல விட்டுட்டு வாடா. இலாவா நீயும் கூடப் போ அப்ப தான் இந்த இம்சை நிம்மதியா இருக்கும்" என்றவன் நிஜந்தன் இன்னமும் மகிழுந்தின் சாவியை வாங்காமல் நிற்பதைக் கண்டு, அவனை முறைத்தபடி, அவன் உள்ளங்கையை விரித்து சாவியை திணித்தான்.
மீண்டும் அபிநிதியை நேராக நோக்கியவனின் பார்வையில், சரவெடிகள் படபடவென்று வெடிப்பதுப் போல தோன்றியது அவளுக்கு.
அவனுக்கோ தன்னை, தன் குணத்தை சந்தேகபட்டுவிட்டாள் என்று மனதினுள் தீ கங்குகளாக கோப உஷ்ணம் எரிய தொடங்கியது.
அவள் பதில் பேசாமல் மௌனமாக நிற்க, அவனின் கோபம் பட்டவர்த்தனமாக அவளை சாடியது. அதற்கு மேல் அங்கே நிற்காமல் நேராக கதவைத் திறந்து வீட்டை நோக்கி நடந்தான்.
அபிநிதியின் மௌனம் அவளது சங்கடத்தினால் தான் என்று அவன் அறியவில்லை. சில மணிநேரங்கள் முன்னர், அவள் நடத்திய களேபரம், அவளை தடுமாறச் செய்தது.
நிஜந்தன், "என் அருமை தங்கையே! உன்னோட அண்ணனுக்கு அந்த பியூட்டியை அறிமுகம் செய்ய கூடாதா?" என தங்கையின் காதில் கிசுகிசுத்தான்.
"இப்ப அவங்களை பத்தி தெரிஞ்சுகிட்டு என்ன போற? அவங்க ஒரு டெரர் பீசு."
"ஏன்? பேர் கேட்டா அடிச்சிடுவாளா? அவ்வளவு மொக்கையான பேரா வெச்சிருக்காங்க.?"
"இப்ப கிளம்பலாமா சீனியர்?" என்று நிஜந்தன் கேட்டதற்கு பதில் சொல்லாமல், அபியிடம் திரும்பினாள் லாவண்யா.
ம்ம் என்று வெறுமனே தலையாட்டியவள் மகிழுந்தின் பின் பக்க இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.
ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிஜந்தன், வண்டியை எடுப்பதற்கு முன், பின்பக்கம் திரும்பி அபியை நோட்டம் விட்டு, பின்பு பக்கவாட்டில் திரும்பி தன் அருகில் அமர்ந்திருந்த தங்கையை பார்த்தான்.
"இன்னும் என்ன பார்த்திட்டு இருக்க அண்ணா... வண்டியை எடு, நேரமாகுதுல்ல" என்று லாவண்யா ஈட்டியால் குத்தாத குறையாக இடிக்க, அதற்கு மேல், பின்பக்கம் பார்க்கும் கண்ணாடியால் அபிநிதியை அவதானித்துக் கொண்டே ஓட்டினான் நிஜந்தன்.
அபிநிதி கண்களை மூடியவாறு காரின் பக்கவாட்டு ஜன்னலில் சாய்ந்த வாக்கில் அமர்ந்து வந்தாலும், அவளது எண்ண ஓட்டங்கள் சொல்லின் வேகத்தை விட துரிதமாக பயணித்தது.
அவளின் எண்ணங்களில், எதுவும் எதோடவும் தொடர்பில்லாமல், எல்லாம் அந்தரத்தில் கொக்கியில் மாட்டிய துணிப் போல ஆடிக் கொண்டிருக்க, எண்ணங்களை முத்துக்களாக கோர்க்க முயற்சிக்கும் திறன் அவளுக்கு அப்போது இருக்கவில்லை.
லாவண்யா திரும்பித் திரும்பி அவளைப் பார்க்கவும், அவளின் அண்ணன் பின்னோக்கி கண்ணாடியில் காண, ஆனால் அவர்களின் பார்வையில் எத்தனை வேறுபாடு!. லாவண்யா அபியை யோசனையும் கவலையுமாக பார்க்க, அவனின் பார்வையில் சுவாரசியம் நிரம்பியது.
அன்றைய இரவு நேரம் வெகுவாக நெரிசல் குறைந்து காணப்பட, சீக்கிரமாக அபிநிதி வசிக்கும் பகுதியை நெருங்கினான் நிஜந்தன்.
லாவண்யா, "சீனியர் உங்க வீட்டுக்கு எப்படி போகனும்னு சொல்றீங்களா? உங்க பகுதிக்கு வந்துட்டோம். ஆனா உங்க முகவரி எனக்கு தெரியாது" என்று அபியை நோக்கி குரல் கொடுத்தாள்.
அபியும் தன் வீட்டிற்கு செல்லும் வழியைக் கூறவும், அடுத்த பத்து நிமிடத்தில் வீட்டை அடைந்தார்கள். அங்கே கோகிலா கவலையுடன் வீட்டிற்கும் வெளியே அமைந்திருந்த இரும்பு வாயிற் கதவுக்கும் இறுக்கமான முகத்துடன் நடைப் பயின்று கொண்டிருந்தார்.
கார் வந்து நிற்கும் ஓசை கேட்டதும், வாயில் புறம் திரும்பியவர், ஓட்டமும் நடையுமாக அவசரமாக வந்தார். காரிலிருந்து இறங்கிய தன் மகளை கண்டதும் ஒரு நொடி ஆசுவாச மூச்சை வெளியே விட்டார் கோகிலா.
"நல்லவேளை வந்து சேர்ந்துட்ட... உன்னை எங்கப் போய் தேடறதுன்னு முழிச்சிட்டு இருந்தேன். ஏன் டி எங்க போறன்னு சொல்லிட்டுப் போ மாட்டியா? உன் ஃபோனையும் வீட்டுல வெச்சிட்டு போயிட்டு, சாயந்திரம் வந்த தம்பியோட கால்ல வெந்நீர் தண்ணி கொட்டின கணக்கா ஓடிப் போயிட்ட. உன்னை எப்படி தொடர்பு கொண்டு பேசறது என்கிற ஒரு விஷயமும் தெரியாம அல்லாடிட்டு இருக்கேன்." என்று கோகிலா அபிநிதியின் முகத்தைக் கண்டதும் அதுவரை அவர் மனதில் தோன்றிய எண்ணங்களை கொட்டிவிட, அதன் பிறகு தான் தன் மகளோடு வந்த மீதி இருவரும் அவரின் கவனத்திற்கு வந்தார்கள்.
"இவங்க... உன் ஃப்ரெண்ட்ஸா?" என வினவ, அதுவரை அமைதியின் திருவுருவாக நின்ற அபி, "இவ லாவண்யா என் ஃப்ரெண்ட், அது அவளோட அண்ணன்." என்றதும், லாவண்யா, "வணக்கம் ஆன்ட்டி." என்க, நிஜந்தன் தலையை மேலும் கீழுமாக ஒருமுறை மரியாதைக்காக ஆட்டிவிட்டு அமைதியாக முகமலர்ச்சியுடன் நின்றான்.
"என்னை கொண்டு வந்து விட வந்தாங்க. அதான் நான் வந்துட்டேனே. இன்னும் வெளியே ஏன் நின்னுட்டு இருக்கணும். உள்ளே போ நான் இவங்களை அனுப்பிட்டு வரேன்" என்றாள் அபிநிதி.
"வீட்டுக்குள்ள வா உனக்கு இருக்கு கச்சேரி" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக உரைத்தார் கோகிலா. வீட்டுக்குள் செல்ல திரும்பியவர் கண்ணில், அவர்கள் வந்த கார் தென்பட, "இந்த காரு... சாயந்திரம் வந்த அந்த தம்பி... பேர் என்னவோ... நல்ல பேரு... ஹான் நிரஞ்சன்... அவரோட கார் தானே! இந்த கார்ல இவங்க ரெண்டு பேரும் எப்படி? எல்லாரும் ஒன்னா வெளியே போனீங்களா?" என்று விசாரித்தார்.
அபிநிதி மலைத்துப் போனாள். ஒருமுறை பார்த்த நிரஞ்சனின் கார், தன் அம்மாவுக்கு எப்படி துல்லியமாக நினைவு இருக்கிறது என்று!
"எங்க அண்ணனை உங்களுக்கு தெரியுமா?" என்று நிஜந்தன் கேட்க,
"ஓஹோ... அவர் உங்க அண்ணா தானா. சாயந்திரம் தான் வந்தாரு. அவர் தானே என் பொண்ணை கூட்டிட்டுப் போனாரு" என்றதும், அபி திருதிருவென விழிக்க, லாவண்யா கேள்வி தொக்கும் விதமாக அபியை நோக்க, நிஜந்தன் ஆச்சரியமாக, "என்னது, எங்க அண்ணன் உங்க பொண்ணை கூட்டிட்டு போனானா?"
"என்ன தெரியாத மாதிரி கேள்வி கேட்கறீங்க? அவர் தான் என் பொண்ணு தொலைச்ச தேர்வு அனுமதி சீட்டைக் கொடுத்துட்டு போனார். அதுமட்டுமல்ல ஒரு இக்கட்டுலிருந்து காப்பத்தினதும் உங்க அண்ணன் தான். நல்ல பையன் பா" என்று கோகிலா கூற, கதை அப்படி போகுதா என்பது போல நிஜந்தன் பார்த்திருந்தான். இதற்கிடையில் பலமுறை தன் தாயை இடையிட்டு நிறுத்த முயற்சித்த அபியை கிஞ்சித்தும் சட்டை செய்யவில்லை கோகிலா.
"அப்ப நாங்க போயிட்டு வரோம் ஆண்ட்டி" என்று கரம் குவித்த லாவண்யா, அபியை பார்த்து தலையசைத்தாள்.
அப்போது, "ஒரு நிமிஷம் லாவி" என்று நிறுத்தி அவளை இரண்டடி தனியே அழைத்துச் சென்று, "உன் அண்ணா உண்மையாவே என்னோட ஹால் டிக்கெட்டை கொடுக்க தான் வந்திருக்கார். அப்ப நான் வீட்டுல இல்ல. ஆனா அந்த அரவிந்த் எப்படியோ என் வீட்டை தேடி கண்டுபிடிச்சு இங்க வந்து பிரச்சனை பண்ணியிருக்கான். அதே நேரம் இங்க வந்த உன்னோட அண்ணன், அவனை பத்தி தெரிஞ்சதால, பிரச்சனையை சமாளிச்சு, அவனை விரட்டி விட்டிருக்காரு. ஆனா உன்னோட மக்கு அண்ணா கூடவே எனக்கும் அந்த அரவிந்துக்கும் இடையே காதல் இருக்குன்னு என் அம்மாகிட்ட சொல்லி, எனக்கு செம்ம அறையை கொடுக்க வெச்சிட்டான். அதிலிருந்து தப்பிக்க தான் உன் அண்ணா கூட நான் வெளியே போனது; அப்புறம் என்னவெல்லாமோ நடந்திருச்சு" என்று விளக்கம் அளித்தாள்.
"அந்த அரவிந்தால நீங்க அம்மாகிட்ட அடி வாங்கிட்டீங்களா?! சாரி என்னால தான் நீங்க இந்த விசயத்தில் மாட்டிகிட்டீங்க. நான் வேணா உங்க அம்மாகிட்ட பேசட்டுமா?"
"அதெல்லாம் வேணாம். என் அம்மா புரிஞ்சுகிட்டாங்க. ஆனா அவங்க சொன்னதும் தான் நானும் யோசிச்சேன். இந்த விஷயத்தை வேற விதமாக டீல் பண்ணியிருக்கலாமோ!. என்ன இருந்தாலும் அவங்க கவலையும் பயமும் நியாயம் தானே!"
"சாரி சீனியர்."
"ச்சே... அதெல்லாம் விடு. இப்ப நான் உன்கிட்ட சொன்னதுக்கு கூட காரணம் உன் மக்கு மந்தாரை அண்ணன் தான். தேவையில்லாம பிரச்சனையை பெரிசாக்கி.... ஓகே முடிஞ்சு போன விஷயத்தை கிளற வேணாம். பத்திரமா வீடு போய் சேருங்க. அண்ட் தேங்க்ஸ்"
"ஆனாலும் என் அண்ணன் மக்கு கிடையாது." என்று சிறு கோபத்துடன் மொழிந்தாள் லாவண்யா.
"ஆஹான். இதை நான் ஒத்துக்க மாட்டேன் ப்பா..." என்று இடவலமாக தலையாட்டினாள்.
"ஆனாலும் தப்பு யார் பண்ணாலும் தப்பு தான் சீனியர். எதுக்கு தேறல் நாடகம். நீங்க போதையில இருக்கிறதா நினைச்சு வாந்தி எடுத்தீங்களா இல்ல என் அண்ணாவை பழிவாங்க நினைச்சு நடிச்சீங்களா" என்று புருவம் உயர்த்தி வினவினாள்.
"சத்தியமா அப்ப எனக்கு அந்த எண்ணம் இல்ல. ஆனா இப்ப எனக்கு தோணுது. உன் அண்ணனை வெச்சு செய்ய வாய்ப்புக் கிடைச்சும் தவற விட்டுட்டேன். கடையில அந்த ஒயின் பாட்டிலை பார்த்ததும் குடிச்சு எப்படி இருக்குனு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். ஒருவேளை ஒயின் அப்படின்னாலே போதை தரும் நினைச்சு என் மூளை விளையாடிடுச்சோ என்னவோ! யாருக்குத் தெரியும்!.?" என்று மேலே கைகளை உயர்த்திக் காட்டினாள்.
"லாவா வா போகலாம். நேரம் ஆகிடுச்சு" என்று அதே நேரம் குரல் கொடுத்தான் நிஜந்தன்.
லாவண்யா மற்றும் நிஜந்தன் இருவரும் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு புறப்பட்டனர்.
செல்லும் வழி யாவும், நிஜந்தன் விசில் அடித்துக் கொண்டே மகிழுந்தை ஓட்டினான்.
"என்ன அண்ணா, பயங்கர குஷில இருக்கப் போல. என்ன விஷயம்னு சொன்னா, நானும் சேர்ந்து என்ஜாய் பண்ணுவேன்ல"
"நம்ம வீட்டுல கூடிய சீக்கிரம் கெட்டிமேளம் கொட்டப் போவதை நினைச்சதும் தன்னால மனசுக்குள்ள சந்தோஷம் பரவிடுச்சு."
"அண்ணா. உனக்கு முன்னாடி நிரு அண்ணா லைன்ல இருக்கான் அதை மறந்துடாத. அதுவுமில்லாம நீ என்னோட சீனியர் அபியை நினைச்சு சொல்லியிருந்தா, இப்பவே உன் மனசை மாத்திக்கோ."
"ஹே என்ன இது ஓவரா இருக்கு.? நான் அந்த பொண்ணா மனசில் வெச்சு தான் அப்படி சொன்னேன் அப்படின்னு வெச்சுக்கலாம். நீயும் நிருவும் மாத்தி மாத்தி இதையே சொல்றீங்க? நீ ஆனாலும் ரொம்ப பாரபட்சம் பார்க்கிற லாவா. நானும் உனக்கு அண்ணன் தானே. ஆனா நீ எப்பவும் அவனுக்கு தான் சப்போட் பண்ற. இது நியாயமே இல்ல." என்று முகத்தை சுழித்தான் நிஜந்தன்.
"டேய் லூசு அண்ணா. நான் உன்னை என் அண்ணாவா நினைக்கவே இல்ல"
"என்னது?!"
"அடச்சே... உனக்கும் எனக்கும் நாலு வயசு தானே வித்தியாசம். ஆனா நிரு அண்ணாக்கும் எனக்கும் எட்டு வயசு வித்தியாசம். சோ எனக்கு நீ என்னோட செட்டுன்னு தோணும்... பார்ட்னர் இன் க்ரைம் அந்த மாதிரி உன்னை நினைச்சா... நீ என்னடான்னா பொறாமை கஞ்சி குடிக்கிற. ரைட்டு விடு. இனிமே உன்னை நான் நிரு அண்ணா மாதிரியே நடத்தறேன்" என்று ஓரக் கண்ணால் அவனை நோட்டம் விட்டபடிக் கூறினாள்.
"ஓஹோ அவ்வளவு பாசக்கார புள்ளையா என் தங்கச்சி. அவசரபட்டுட்டேன் தங்கச்சி. உன்னை இனிமே எப்படி தாங்கறேன்னு பாரேன்." என்று விளையாட்டாக அதீத நடிப்பை தன் உடல்மொழியின் காண்பித்தான்.
"அது இருக்கட்டும். அதென்ன கெட்டிமேளம் சத்தம் சொல்லிட்டு இருந்த.?".
"அதுவா" என்று லேசாக சிரித்தான், பின்பு, "அந்த பொண்ணு பேர் என்ன?"
"அபி... அபிநிதி"
"அபிநிதி அம்மாகிட்ட பேசிட்டு இருந்தேன் அப்ப அவங்க ஹால் டிக்கெட் விஷயம் சொன்னாங்க. கூடவே 'என் பொண்ணு, எனக்கு தெரிஞ்சு எந்த பையனோடவும் சமீபத்தில் வெளியே போனதே இல்ல. உங்க அண்ணன் தான் விதிவிலக்கு. இன்னும் சொல்ல போனால், என் பொண்ணு குறிப்பிட்ட ரெண்டு பேரை தவிர வேற எந்த பசங்களோடும் அளவு மீறி பேச்சு வார்த்தையே வெச்சுக்க மாட்டா. பசங்கன்னு சொன்னாலே அலர்ஜி வந்த மாதிரி குதிப்பா. ஆனா உங்க அண்ணன் கூட பேசறா, ரெண்டு பேரும் சண்டை போடறாங்க, இவ அவர் கூடவே வெளியே போறா. எனக்கு புரியல. அவளோட எதிர்காலத்தைப் பத்தி என் மனசில் இருக்கும் ஆசையில் நானா கற்பனை பண்றேனா இல்ல உண்மையா நடக்குதா என்பதே எனக்கு புரியல' அப்படின்னாங்க. நானும் யோசிச்சேன் ஒருவேளை இருக்குமான்னு. அதான் அப்படி சொன்னேன்' இவ்வளவு யோசிக்கிறாங்க. அப்ப விஷயம் இல்லாம இருக்குமா?"
"அட நீ வேற அண்ணா. அவங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. ஆரம்பமே சண்டை தான் அவங்களுக்குள்ள.
"அப்ப கண்டிப்பா சொல்றேன். அவங்க செம்ம ஜோடி. யோசிச்சுப் பாரேன். நம்ம அண்ணங்காரன் அமைதியோ அமைதின்னு இருக்கிற ஆளு. ஆளு வளர்ந்த அளவுக்கு மனசு இன்னும் வளரல. இன்னும் சின்ன சின்ன குழந்தைங்க கூட நேரத்தைப் போக்கிட்டு இருக்கான். இதுவே அந்த பொண்ண பத்தி யோசிச்சா; கொஞ்சம் அதிரடி சரவெடி டைப்பு. சரியா என் கணிப்பு? அமைதிக்கும் ஆரவாரத்துக்கும் பொருத்தம் நல்லாவே இருக்கும். இப்படியே அடிக்கடி சந்திப்பு அவர்களுக்குள் நிகழ்ந்தால் நிச்சயம் பொறி கிளம்பும். உனக்கு இன்னொரு பிளஸ் பாயின்ட் இருக்கு. உன்னோட பிரெண்டுக்கே நீ நாத்தனார் ஆகும் தருணம் வரும். எப்படி?!."
"நீ சொல்றது புரியுது ஆனா புரியல" என்று காதை சொரிந்தாள் லாவண்யா.