காதலாகி காற்றாகி அத்தியாயம் 11 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

ஆனந்த ஜோதி நாவல்கள்

Where every page opens a new world
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதலாகி காற்றாகி அத்தியாயம் 11

New updates

LATEST

Mrithula Ashwin

Moderator
Staff member
Joined
May 14, 2024
Messages
225
Reaction score
155
Points
43
அத்தியாயம் 11

அபிநிதி தேறலைக் குடித்துவிட்டு, சாலையில் அவள் மனதில் தோன்றிய விஷயங்களை அரங்கேற்ற, கூடவே நின்று அவதிவடுவது என்னவோ நிரஞ்சன் தான்.!

அவளது அலப்பறையில், சாலையில் வருவோர் போவோர் நின்று வேடிக்கைப் பார்ப்பதும், அவனை சந்தேகமாக உருவாகிப்பதும், ஒரு பெண்ணும், ஆணும் தனியாக நிற்பதைக் கண்டதும் வரும் விமர்சன குரல்களும் கேட்டு நிரஞ்சனுக்கு எரிச்சல் வியாபித்தது.

இது போதாதென்று, அவள் கையிலிருந்து குடுவையை அவன் பிடுங்க, அவளோ அவனுக்குத் திருட்டுப் பட்டமே கட்டிவிட, கோபத்தில், அவளை தன்னிடமிருந்து சற்று தள்ளிவிட, அபிநிதி ஸ்திரமாக நிற்காமல் தொப்பென்று விழுந்தாள்.

அவனுக்கே அவன் மீது சந்தேகம் வந்துவிட்டது. நாம் என்ன அவ்வளவு வீரியமாகவா தள்ளி விட்டோம் என்று!. மணிக்கட்டில் கட்டியிருந்த வாட்சை பார்த்து மணி தற்போது எட்டரை என்று தெரிந்துக் கொண்டு, அவளருகே சென்று குத்துக் காலிட்டு அவள் கண்ணை நேராக நோக்கினான்.

அப்போதும் அவள் அழுதுபடியே, "அங்கிள் நான் அம்மாகிட்ட போகனும். என்னை அந்த ப்ளேயர் தான் கடத்திட்டு வந்துட்டான். அவனுக்கு மன்மதன்னு நினைப்பு மனசுல... என்னைக் காப்பாத்துங்க அங்கிள்" என்று கூறவும்,

தனது தலையில் கைவைத்து, 'சரியா போச்சு. எனக்கு எவ்வளவு பேர் வைக்கிறா! ஆனா என்னோட பேரை ஒழுங்கா கூப்பிட மாட்டா?! இவளுக்கு நான் அங்கிளாம்! இவளோட பிளசீபோ எஃபெக்ட் (placebo effect) எப்ப போகும்?.' என்று எண்ணினான்.

பிளசீபோ எஃபெக்ட் (placebo effect) என்றால் மருந்தில்லா மருந்து என மருத்துவத்தில் கூறுவதுண்டு. இது ஒரு மனமாயை. மனித மனம் உடலில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், மேலும் சில சந்தர்ப்பங்களில், அது உடலை குணப்படுத்தவும் உதவும். ஒரு போலி சிகிச்சை கூட சில உண்மையான சிகிச்சை முடிவுகளைக் கொண்டுள்ளது. மனம் சில சமயங்களில் நம்மை ஏமாற்றலாம். இது ஒரு நிகழ்வு ஆகும்

அபிநிதி ஒயின் அருந்தியதும் அவள் மனம் அது ஒரு போதை வஸ்து என்று கட்டளை பிறப்பிக்க, அதுவே அவளை, தான் போதையில் இருப்பதுப் போலவும் உணர்த்தி இவ்வாறு செய்ய வைக்கிறது. இதை உணர்ந்து தான் நிரஞ்சன் கூடுமான பொறுமையைக் கடைப்பிடித்து நின்றான்.

அவளை பற்றி தூக்கி நிறுத்தியவன், "வீட்டுக்குப் போகணுமா?"

"ம்ம்... ஊஹும்.. எனக்கு வீட்டுக்கு போக வேணாமே... எனக்கு... எனக்கு பட்டம் வேணும்... பட்டம் விட்டு அதுல உயர உயர பறக்கனும்... நான் ஊர் குருவி இல்ல... பேருந்து... ச்சே.. இல்ல இல்ல... அது என்ன... ஹான் பருந்து... பற... பற... அங்க பறந்துப் போகனும்." என வானத்தை சுட்டிக் காண்பித்தாள். "கொக்குப் பற பற, கோழி பற பற மைனா பற பற" என்று மீண்டும் தன் கைகளை விரித்து பறப்பதுப் போல சைகை செய்தாள்.

மீண்டும் பாட்டிலை வாய்க்குள் விட்டு கடகடவென குடித்தாள் அபிநிதி. "எம்மா தாயே... சரக்கு அடிக்காம சரக்கு அடிச்ச மாதிரி பாவலா பண்றியே... எப்படிம்மா எப்படி?!" என்று நிரஞ்சன் அவன் பக்கம் குடுவையை இழுக்க,

அவள் அவனை பார்த்து, "உனக்கு வேணுமா? தர முடியாது போ... சொந்த காசுல வாங்கிக் குடிக்கணும். அடுத்தவன் காசுல அதுவும் ஒரு பொண்ணுகிட்ட பிடுங்கி குடிக்கப் பார்க்கிற... உனக்கு வெக்கமா இல்ல?"

"எனக்கு இது தேவை தான்..." என்று தலையில் அடித்துக் கொண்டான் நிரஞ்சன்.

"சரி பிழைச்சுப் போ... சரி எனக்கும் உன்னை பார்த்தா பாவமா தான் இருக்கு... இந்தா" என்று தன் கையில் கொஞ்சம் ஊற்றி அதனை அவன் மேல் தெளித்தாள்.

அதற்கு மேல் பொறுக்க முடியாமல், வேகமாக பிடித்து பாட்டிலை பிடுங்கியவன், தூக்கி தூர எறிந்தான். அவளை பிடித்து தன் தோளில் தூக்கி போட்டு, காருக்கு கொண்டுப் போனான். அவன் கார் கதவை திறந்ததும், அவளை கிழே சாய்த்து படுக்க வைக்க நினைத்தவன் மேலேயே, அன்று மதியம் முதல் அவள் சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்தாள் அபிநிதி.

அவளை தன் மீதிருந்து தள்ளினான். அவளோ பாதி நின்ற வாக்கில் சார் சீட்டில் மேல் பாக உடலை மட்டும் சாய்த்து உறங்கியே போனாள். தன் பரிதாப நிலையை ஒருமுறை மேலிருந்து கீழ் பார்த்துக் கொண்டான் நிரஞ்சன்.

"ராட்சசி என்ன வேலைப் பண்ணி வெச்சிருக்கா? ஐயோ நாறுதே!" என்று புலம்பினான். உண்மையிலேயே அவனுக்கு குமட்டியது

காரிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தன் ஆடைகளை மேலோட்டமாக சுத்தப் படுத்தினான்.

பிறகு அவளை சரியாக கார் பின் சீட்டில் படுக்க வைத்து கதவை மூடினான். தானும் காரில் ஏறி வேகமாக கிளப்பினான்.

செல்லும் வழியிலேயே, தங்கைக்கு அழைத்து, "லாவா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணேன். உன்னோட ப்ரெண்ட் அபிநிதி ட்ரெஸ் அளவு உனக்கு தெரியுமா?" என்று வினவினான்.

"என்னன்னா திடீர்னு கேட்கிற? அவங்க அளவு உனக்கு எதுக்கு?" என்று வினவினாள். சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் பெற்றவர்கள், பாட்டி சகிதம் இரவு உணவை உட்கொள்ள மேஜை முன் அமர்ந்தபடி லாவண்யா சத்தமாக வினவ,.

"யாரோட அளவு வேணுமாம் உன் அண்ணனுக்கு? நிஜந்தன் தானே பேசறான்?" என்று மாயா கேட்கவும்,

"இல்லம்மா இது நிரு அண்ணா" என்று பேச்சுவாக்கில் லாவண்யா கூற,

"என்ன? நிரஞ்சனா? நிஜந்தன் தான் பொண்ணுங்க பின்னாடி சுத்துவான்னு நினைச்சா, இப்ப இவனும் ஆரம்பிச்சுட்டானா?" என்று மாயா சிறு கோபத்துடன் வினவ,

உடனே பாட்டி லீலாவதி அவசரமாக சாப்பாட்டை விட்டு எழுந்தார்.

"ஐயோ இல்லம்மா இது வேற விஷயம். ஹா...ன் அது வந்து என் காலேஜ் ஃபேர்வெல் விஷயமா பேசிட்டு இருக்கேன்" என்று அப்போதைக்கு மனதில் தோன்றிய காரணத்தை கூறிய லாவண்யா, தட்டிலிருந்த மீதமிருந்த உணவை வாயில் திணித்து கொண்டு எழுந்தாள்.

"லாவா ஒழுங்கா சாப்பிட்டுப் போடி" என்று மாயா உரக்க கத்த,

"எனக்கு போதும்மா." என்றவள், சற்று தள்ளி வந்து, "இப்ப சொல்லு அண்ணா. என்ன விஷயம்?"

ஃபோனில் அதுவரை காத்துக் கொண்டிருந்த நிரஞ்சன், "எந்த காரணமும் கேட்காம, உன்னோட ட்ரெஸ் ஒரு செட்டை எடுத்துகிட்டு நம்ம வீட்டுக்கு வெளியே வந்து நில்லு... இன்னொரு அரைமணி நேரம் கழிச்சு வா." இவ்வாறு கூறிவிட்டு லாவண்யாவின் பதில் பேச்சைக் காதில் வாங்காமல் ஃபோனை அணைத்தான்.

"ஐயோ நாத்தம் குடலைப் பிடுங்கித் தொலையுதே... காலையிலிருந்து என்ன கருமத்தை தின்னாளோ... கடவுளே... இவளை சந்திச்சதிலிருந்தே எனக்கு இம்சையரசியா இருக்காளே... இதுக்கு ஒரு எண்டே கிடையாதா?" என்று தனக்குத் தானே பேசிக் கொண்டு, பின்னால் கிடத்தப் பட்டிருந்த அபிநிதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு வண்டியைக் கிளப்பினான்.

சரியாக தன் வீட்டை நெருங்கும் சமயம், லாவண்யாவின் எண்ணிற்கு தொடர்பு கொண்டான்.

லாவண்யாவும் அண்ணன் கேட்டுக் கொண்டதுப் போலவே அவளின் உடை ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

"என்னாச்சு அண்ணா. எதுக்கு அபிநிதி பத்தி கேட்டீங்க.?"

வண்டியிலிருந்து கிழே இறங்கியவன் நீயே போய் பின்னாடி சீட்டுல பாரு. இம்சை... இவளோட நீ சகவாசம் வெச்சிருக்கப் பார்த்தியா... உன்னை சொல்லணும்... முடிஞ்சா எழுப்பி உட்கார வைக்கப் பாரு" என்று எரிச்சலுடன் மொழிந்தான் நிரஞ்சன்.

அவன் பேசியது எதுவும் சரியாக புரியாமல், காரின் பின்பக்க கதவை திறந்தவளின் கண்கள் விரிந்தது.

"என்ன அண்ணா இது! இவங்க எப்படி உன் கார்ல...? அண்ணா ஏதோ ஒன்னு நடந்திருக்கு போலயே... சிக்கிட்டியா? அதனால தான் பாட்டி சொன்ன பொண்ணு வேணாம்னு சொன்னியா? ஆமா உனக்கும் இவங்களுக்கும் எப்படி பழக்கம்?" என்று வினவினாள் கிண்டல் நிறைந்த குரலில்.

"லாவா... அதெல்லாம் இப்ப பேச வேணாம்... எனக்கும் இவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இப்ப நீ என்கூட வண்டியில ஏறு..." என்றவனை காரை விட்டு தள்ளி அழைத்துச் சென்று கேட்டாள்.

"நான் வண்டியில ஏறுவது இருக்கட்டும்... இப்ப இவங்களை என்ன பண்ண போற?"

"எனக்கு தெரியல... ஒருவேளை. இப்படியே அவங்க வீட்டுல கொண்டுப் போய் விட்டுடலாம்... அவங்களும் தேடுவாங்க தானே."

"ஆனா சீனியர் இருக்கிற நிலைமையை பார்த்தா... ஐ மீன் அவங்க ட்ரெஸ், முடி எல்லாம் கலைஞ்சு இருக்கு. அவங்க உன்னையும் சேர்த்து சந்தேகப்பட சான்ஸ் இருக்கே... நீ ஏதோ கெடுதல் பண்ணிட்டதா நினைச்சா?"

"அதுக்கு தான் உன்னையும் வர சொல்லி கால் பண்ணேன்."

"ஹே... என்ன ரெண்டு பேரும் இங்க நின்னுட்டு இருக்கீங்க?" என்று நிஜந்தன் அவ்விடம் வர, இருவரும் திகைத்தார்கள்.

நிஜந்தனுக்கு விஷயம் தெரிந்தால், அது வீட்டில் எக்குத்தப்பாக பரவிவிடும் என்று அஞ்சினார்கள்.

"ஒன்னுமில்லை... நானும் லாவாவும் கடைக்குப் போறோம்... நீ என்ன சீக்கிரம் வந்துட்ட? உனக்கு இன்னிக்கு எதுவும் வேலை இல்லையா என்ன?" என்று வினவினான் நக்கல் தொனியில்.

"ஹாஹா... அதிசயமா இருக்கே.... விவேகானந்தர் ஒன்னு விட்ட கொள்ளு பேரன் மாதிரி, நமக்குன்னு ஒரு கொள்கை இருக்கணும், கோட்பாடு இருக்கணும்.. கோடுப் போட்டு அது மேல ரோட்டை போட்டு கமுக்கமா வாழனும்னு கருத்தூசிப் போடுவே... இன்னிக்கு என்ன ஆச்சு? வேதாளத்துக்கு பதிலா விக்கிரமாதித்தன் மரம் ஏறிட்டாரா?" என்று நிஜந்தன் தன் அண்ணனின் காலை வார,

"எல்லாம் நேரம்.... நீ வா லாவா... நாம போகலாம்" என்று அவளின் கையைப் பிடித்து காருக்கு அழைத்துக் கொண்டுப் போனான்.

நாலு எட்டுக் கூட அவர்கள் நடக்கவில்லை... அதற்குள், "ஏதோ சரியில்லையே... என்னமோ ஒரு திருகுதாளம் இருக்கு... கண்டுப்பிடிக்கிறேன்..." என்றான் நிஜந்தன்.

"இவன் பெரிய துப்பறியும் சீனு.... கண்டுபிடிக்க வந்துட்டான்... மொதல்ல வேலையை ஒழுங்கா செய் டா... புராஜக்ட் ப்ரோபோசல் நாளைக்கு காலையில எனக்கு வேணும்..."

"கரெக்ட்டா இத சொல்லியே என்னை ஆஃப் பண்ண பார்க்கிற"

அதே நேரம், காரில் படுத்திருந்த அபிநிதிக்கு தூக்கம் சற்று கலைந்து எழுந்து அமர்ந்தாள்.

தான் எங்கு இருக்கிறோம் என்றே அவளுக்கு சட்டென்று புலப்படவில்லை. காரில் இருக்கிறோம் என்று உணர்ந்தவள், உடனடியாக மனதில் தோன்றிய சந்தேகம், தன்னை யாரோ கடத்திவிட்டார்கள் என்று தான்!.

"ஐயையோ எக்குத்தப்பாக யார்கிட்டயோ மாட்டிக்கிட்டேன் போலயே..." என்று பதட்டத்துடன் காரிலிருந்து இறங்கினாள்.

இறங்கியவளைக் கண்டு நிரஞ்சன் மற்றும் லாவண்யா அச்சத்துடன் ஒருவரை ஒருவர் பார்க்க, நிஜந்தனோ அபிநிதியை ஸ்வாரசியமாக ஏறிட்டுப் பார்த்தவன், தன் உடன்பிறப்புகள் இருவரையும் ஆராயும் கண்களோடு நோக்கினான்.


தலையைப் பிடித்துக் கொண்டு சுற்றி முற்றி கண்களை சுழலவிட்டு கடைசியாக நிரஞ்சனிடம் வந்து, "ஹே... என்னை எங்க கூட்டிட்டு வந்திருக்க... ஒருவேளை கடத்திட்டு வந்துட்டியா..." என்று அவன் அருகில் சென்று கேட்டுவிட்டு இன்னும் காதருகில் சென்று "என்கிட்ட வம்பு வெச்சுகிட்டா, தொலைச்சிடுவேன்... தெரியும்ல" என்றாள்.

"கஷ்ட காலம் டா சாமி" என்று தலையில் தட்டிக் கொண்டான் நிரஞ்சன்.

"டேய் அண்ணா... எனக்கு ஒரு சந்தேகம்! இந்த பொண்ண உனக்கு ஏற்கனவே தெரியுமா?" என்று கேள்வித் தொக்கியது நிஜந்தனிடம்.

குரல் வந்த திசையை நோக்கிய அபிநிதி, "நீ யாரு டா சின்ன பையா?... நான்..." என்று பேச வந்தவளை இடையிட்டாள் லாவண்யா.

"நிஜூ அண்ணா. இவங்க என் ஃப்ரெண்ட் தான். என்னை பார்க்க வந்திருக்காங்க. என்னை பார்க்க வர வழில அவங்களுக்கு உடம்புக்கு முடியாம வாந்தி வந்திடுச்சு. உடனே எனக்கு ஃபோன் பண்ணி, வேற ஒரு டிரஸும் எடுத்துட்டு வர சொன்னாங்க. இதோ இங்க இருக்கு பாரு. அப்போ தான் நிரு அண்ணா வந்தான். அப்படியே பேசிட்டு இருந்தோம்."

"சரி ட்ரெஸ் மாத்த வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கலாமே டா... இங்க ஏன் நிக்கனும்? அதுவும் இல்லாம உன் ஃப்ரெண்ட் இன்னும் நீ கொண்டு வந்த டிரெஸ்ஸை மாத்தவே இல்லையே. ஆனா அவனோட காரிலிருந்து இறங்கி வந்தாங்களே... டேய் நிரு! என்னோட கெஸ் கரெக்ட்டா? நம்ம லாவா தோழிக்கும் உனக்கும் கஜகஜாவா" என்று கேட்டு கண்ணடித்து இதழ்களை விரித்தான் நிஜந்தன்.

"டேய் எதுக்கு டா நீ இவ்வளவு கேள்வி கேட்கிற? சும்மா இருக்க முடியாதா உன்னால? அது என்னடா கெட்ட வார்த்தைக் கணக்கா கஜகஜா?" என்று எரிச்சலாக வார்த்தைகளைக் கொட்டினான்.

"சரி லவாங்கின்னு சொல்லட்டுமா!"

"ஹே லாவி நீயும் இங்க தான் இருக்கியா?" என்று அபஸ்வரமாக தப்பான நேரத்தில் கேட்டாள் அபிநிதி. அவளின் பிளேசீபோ எஃபெக்ட் எல்லாம் வடிந்து விட, உடனே லாவண்யா அவளை தனியாக நிரஞ்சன் கார் பக்கமாக அழைத்துச் சென்றாள்.

"என்ன சீனியர் இது? என்னாச்சு? மத்தியானம் சாப்பிட்டது உங்களுக்கு ஒத்துக்கல தானே? அதான் வாந்தி எடுத்திருக்கீங்க! இந்தாங்க என் ட்ரெஸ். கொஞ்சம் லூஸ் ஃபிட் தான் இது. அண்ணா காருக்குள்ளேயே மாத்துங்க. பிடிங்க" என்று கார் கதவையும் திறந்து விட்டு அவளை உள்ளே தள்ளி பின் கதவையும் மூடினாள். லாவண்யா பேசப்பேச தன்னையே மேலும் கீழும் ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.

இன்னொரு பக்கம் நிரஞ்சனிடம் அவனது தம்பி அபிநிதியை பற்றிக் கேட்டு குடைந்தெடுத்தான்.

"உண்மையை சொல்லு. அவ உன் ஆளு தானே..."

"அந்த வைல்ட் லைஃபா.?! ஐயோ எனக்கு வேணாம்..." என்று தலைக்கு மேல் கும்பிடுப் போட்டான்.

"பார்க்க நல்லா அம்சமா இருக்கா! உனக்கு வேணாமா? அப்ப நான் ட்ரை பண்றேன்"

"உனக்கும் அவளுக்கும் ஒத்தே வராது... சொன்னா கேளு. என்னையே பிடிச்சு ஜெயில்ல போட்டவடா... ஒதுங்கிப் போயிட்டா உனக்கு நல்லது" என்று எச்சரித்தான்.

"என்னது நீ ஜெயிலுக்குப் போனியா? இது எப்ப நடந்துச்சு?" என்று அதிர்ச்சியான நிஜந்தன், அவனது அண்ணனை உலுக்கினான்.

அதற்குள் காரிலிருந்து வெளியே வந்த அபிநிதியை பார்த்தார்கள்.
​
 
Top Bottom