விஜி ப்ரியா
Active member
- Joined
- May 31, 2025
- Messages
- 92
- Reaction score
- 64
- Points
- 43
கண்மணியின் காதல்
22
யுகேந்திரன், கருணாகரன் , ஆதித்யா மூவரும் சுரேந்திரனோடு மீனாட்சி பொங்கல் வைக்கும் இடத்திற்கு சென்றார்கள்.
அங்கே !!!! மீனாட்சி பொங்கல் வைத்துக்கொண்டிருந்தாள்.
மீனு !!!
பொங்கலை கரண்டியால் கிளறிக்கொண்டு இருந்த மீனாட்சி தன்னை அழைப்பது யுகேந்திரனின் குரல் போல் இருக்க நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கே , கருணாகரன் , யுகேந்திரன், ஆதித்யா , கூடவே சுரேந்திரன் நிற்பதை பார்த்து.
அட… அண்ணா ,,, வாங்க… வாங்க…. ஆதி அண்ணா வாங்க, முதலாளி வாங்க என வரவேற்றாள் எழுந்து நின்று.
ஹேய் அண்ணா
!!! நான் கூட எங்கே நீ வராமல் போய்டுவாயோனு நினைச்சேன்.
அது எப்படி டா நான் வராமல் இருப்பேன் , என்னுடைய செல்லமான பாசமான தங்கச்சி பொங்கல் வைக்கும் விழாவிற்கு வராமல் இருப்பேன்னா,,, நான் சொன்னது போல வந்துவிட்டேன் மீனாட்சி.
டேய் யுகா !!! உண்மையில் நாம் இங்கு வந்து இருக்கவே முடியாது டா
அந்த பெண் மட்டும் இல்லையென்றால்…… என யுகேந்திரனின் காதில் கிசுகிசுப்பாக.
அங்கே என்ன கிசுகிசுப்பு ???
ஒன்னும் இல்லை மா சும்மா பேசிக்கிட்டு இருக்கோம் என்றார்கள் இருவரும்.
ம்ம் , அது !!!!
சரி…சரி… வாங்க .
ம்ம்….
மாரிமுத்து,
கருணாகரனை மனோகரனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
சம்மந்தி,,, இவர் தான் எங்க முதலாளி , எங்கள் குடும்பம் இந்தளவுக்கு சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியான வாழ்க்கையை வாழ.. எங்களுக்கு படியளுக்கும் தெய்வம் , இவர் பெயரில் மட்டும் இல்லை குணத்திலும் கருணை உள்ளம் கொண்டவர் , யாராவது கஷ்டம் என சொன்னால் போதும் மனுசன் மனசு மெழுகு போல உருகிடும்.
மாரிமுத்து போதும்…. போதும்…. என்னைய பற்றி புகழ்ந்தது.
ஐயா வணக்கம் , என்றார் கருணாகரன்.
வணக்கம்…. வணக்கம் ஐயா !!
இப்படி ஒரு முதலாளியை எங்கும் பார்க்க முடியாது. பல தொழிலாளர்கள் தங்கள் முதலாளியை எவ்வளவு தரக்குறைவாக பேசுகிறார்கள். அவர்கள் மத்தியில் உங்களிடம் மாத சம்பளம் வாங்கும் ஒரு தொழிலார் உங்களை இந்தளவுக்கு பெருமையாக பேசுவார் . உங்களை சந்திச்சதில் எனக்கு ரொம்ப சந்தோசம்.
மீனாட்சியும் , என மகள் மாதிரி தான், என்னுடைய மகன் யுகேந்திரனும் மீனாட்சியும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக விளையாடி வளர்ந்தவர்கள் இருவருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருக்காங்க. மீனாட்சி, எங்க வீட்டு பொண்ணு , அவளுடைய திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் சந்தோஷமாக மகிழ்ச்சியாக வாழனும் , அதுக்கு உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க , அதை கொடுக்க நாங்கள் தயார் , எங்களுக்கு எங்க மீனாட்சி சந்தோஷமாக இருக்கனும்.
நீங்கள் கவலையேபடாதீங்க சார் , மீனாட்சியை நாங்கள் சந்தோஷமாக மகிழ்ச்சியாக வச்சுக்குவோம் என்றான் சுரேந்திரன்.
ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை, ஞாபகம் வச்சுக்கோங்க… என் தங்கச்சி கண்ணு கலங்கினா அவ்வளவு தான்…. யுகேந்திரன்.
சார் ,,, சமைக்கும் போது வெங்காயம் நறுக்கினால் கூட கண்ணு கலங்குமே !!! அப்படின்னா “உங்க தங்கச்சி சமைக்க கூடாதா சார் “ முகத்தை பாவமாக வைத்து கொண்டு சுரேந்திரன் கேட்க.
ஆதித்யாவும், யுகேந்திரனும் இதை கேட்டு சிரித்துவிட்டார்கள்.
மாப்பிள்ளை , நீங்கள் பிழைச்சுக்குவிங்க ,” மீனாட்சி சமைக்கும் போது வெங்காயம் நறுக்கும் போது அவள் கண்ணில் தண்ணீர் வருவது வேறு “ நீங்கள் அவளை அழ வைப்பது வேறு நான் இரண்டாவதாக உள்ளதை சொன்னேன்.
ஓஓஓ….. சரிங்க சார் !!! உங்களுடைய தங்கச்சியை கண் கலங்காமல் பத்திரமாக பார்க்கொள்கிறோம் சார் என்றான் சுரேந்திரன்.
சந்தோஷம் மாப்பிள்ளை.
மீனாட்சி , நீ போய் பொங்கலை வைத்து முடி முதலில் உன் அண்ணன் இங்கே தான் இருப்பான் மா .
ம்ம் , சரிங்க முதலாளி.
மீனாட்சி , மீண்டும் பொங்கல் வைக்க போனாள் ,
மங்களம் ,,,,,
சொல்லுங்க!!
முதலாளிக்கும் , சின்னவருக்கும் குடிக்க ஏதாவது கொண்டு வந்து கொடேன் மா .
சரிங்க ,
மங்களம் , தாங்கள் கொண்டு வந்திருந்த பையில் இருந்து பழ ரசத்தை எடுத்து மூன்று பேப்பர் கப்பில் ஊற்றி மூவருக்கும் கொடுத்தாள்.
முதலில் மாப்பிள்ளைக்கு கொடுங்க ஆன்டி.
நாங்கள் எல்லோரும் குடித்தாச்சு சார், நீங்கள் குடிங்க என்றான் சுரேந்திரன்.
சரிங்க மாப்பிள்ளை,
மூன்று பேரும் மங்களம் கொடுத்த பழ ரசத்தை வாங்கி பருகினார்கள்.
மாரிமுத்து , நீங்கள் பொங்கலை வைத்து முடிக்க ,,
நம்ம கம்பெனிக்காக பூஜை ஒன்னு செய்யனும், நாங்கள் அதை செய்துவிட்டு வந்துவிடுகிறோம் என்றார் கருணாகரன்.
சரிங்க முதலாளி.
ம்ம் ,,,
யுகா !!! வா நம்ம போய் பூஜையை முடித்துவிட்டு வரலாம்.
ம்ம் சரிங்க அப்பா.
கருணாகரன் , யுகேந்திரனுடன் ஆதித்யாவும் சென்றான்.
மீண்டும் மீனாட்சியை , ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.
டேய் அண்ணா!!!! போதும் அண்ணியை சைட் அடிச்சது.
ச்சீ கழுதை !!!! பேசாமல் இருக்க மாட்டியா!!!
மாட்டேன்…. மாட்டேன்….
போ….!!!!!
கண்மணி !!!!
சிந்தாமணி அழைக்க,,,
ஹான் , என்ன மா சொல்லுங்க.
இந்த பூவை கொண்டு போய் உன் வருங்கால அண்ணி தலையில் வச்சுட்டு வாடி. வந்ததும் கொடுக்கனும்னு நினைத்தேன் மறந்துட்டேன் டி .
ம்ம் , கொடு மா !!!! சிந்தாமணி கொடுத்த குண்டு குண்டான மல்லிகை பூவை வாங்கிக்கொண்டு மீனாட்சியிடம் போனாள்.
அண்ணி !!!!!.....
பொங்கல் வைத்து கொண்டு இருந்த மீனாட்சி கண்மணி அழைக்க திரும்பினாள்.
என்ன கண்மணி?
அண்ணி , கொஞ்சம் திரும்புங்க ,,,
எதுக்காக கண்மணி !!!!
திரும்புங்க அண்ணினா,,,,
சரி … சரி…. திரும்புறேன்…. திரும்புறேன் … திரும்பினாள் மீனாட்சி.
திரும்பிய மீனாட்சியின் தலையில் தான் கொண்டு வந்த குண்டு குண்டான மல்லிகை சூடினாள் கண்மணி.
ம்ம் ,,,, சூப்பரா இருக்கீங்க அண்ணி !
ம்ம்… ரொம்ப தேங்க்ஸ் கண்மணி.
எதுக்காக அண்ணி தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க?
சும்மா தான் கண்மணி.
ஒருவழியாக பொங்கல் வைத்து முடித்து , மாவிளக்கும் போட்டாச்சு,
சரிங்க , எல்லாம் முடிந்தது , இனி பூஜை செய்வது மட்டும் தான்ங்க என்றாள் சிந்தாமணி.
ம்ம் , சரி சிந்தாமணி , பூஜை பொருள்கள் எல்லாத்தையும் தாம்பூலத்தில் எடுத்து வை.
சரிங்க ,
சிந்தாமணியும் , மீனாட்சியும் ,,, கொண்டு வந்து இருந்த பூஜை பொருள்களை தாம்பூலத்தில் எடுத்து வைத்துக்கொண்டு இருக்க.
நான் ஏதாவது உதவி செய்யட்டுமா அண்ணி ?
இல்லை பரவாயில்லை கண்மணி , அவ்வளவு தான் முடிந்தது.
ம்ம் சரிங்க அண்ணி.
மீனாட்சி , இந்த புள்ளை உன்னைய அண்ணி , அண்ணின்னு இவ்வளவு பாசமா உரிமையோடு கலகலனு பேசி பழகுறத பார்க்கும் போது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா ? அவ்வளவு தூரத்தில் உன்னைய கல்யாணம் செய்துக்கொடுக்க போறோம்மேனு அதை நினைத்து ரொம்பவும் கவலைப்பட்டேன் மீனாட்சி. ஆனால்!!! இப்ப இந்த கண்மணியை பார்க்கும் போது மனசுக்கு கொஞ்சம் நிறைவா இருக்கு . அந்த புள்ளை உனக்கு ஆதரவாக இருக்கும் அங்கே உனக்கு
ம்ம் , ஆமாம் அம்மா !! எனக்கும் கூட கண்மணியை ரொம்ப பிடிச்சிருக்கு மா , எப்பவும் கலகலனு சிரிச்சிட்டே இருக்கா , ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா மா. பார்க்க அழகாகவும் இருக்கா.
ம்ம் , ஆமாம் டி மீனாட்சி.
ம்ம்…
அம்மா !!!
ம் , சொல்லு மீனாட்சி.
எனக்கு ஒன்னு தோனுது மா ,
என்ன தோணுது டி , சொல்லு.
நம்ம…. நம்ம…. !!!
ம் , சொல்லு நம்ம ????
அப்புறம் என்ன டி சொல்லு.
நம்ம … யுகேந்திரன் அண்ணனுக்கு இந்த கண்மணி பொருத்தமா இருப்பா தானே !!!
சரி டி , பொருத்தமா தான் இருப்பா இந்த கண்மணி , அதற்கு இப்ப என்ன டி.
நம்ம யுகேந்திரன் அண்ணனுக்கு இந்த கண்மணியை திருமணம் செய்து வைத்தால் என்ன?
என்ன டி சொல்ற நீ !!!??
ஆமாம் மா , இரண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கும் மா.
ஜோடி பொருத்தம் மட்டும் போதுமா மீனாட்சி கல்யாணத்திற்கு?
அப்புறம் வேற என்ன மா வேணும்.
அந்தஸ்து , பார்க்கமாட்டாங்களாடி யுகேந்திரன் வீட்டில்.
முதலாளி எவ்வளவு பெரிய பணக்காரர் மதுரையில். அவங்க போய் இப்படி ஒரு சாதாரண குடும்பத்தில் போய் பெண் எடுக்க சம்மதிப்பங்காளாடி,,, நடக்கின்ற காரியத்தை பற்றி பேசுடி.
ஏன் மா நடக்காது ?
எனக்கு மனசுக்குள் தோனுது இந்த கண்மணி தான் யுகேந்திரன் அண்ணனுக்கு சரியான ஜோடின்னு.
சரி டி , அதை பற்றி அப்புறமாக பேசலாம். இப்ப முதலில் நாம் வந்த வேலையை பார்க்கலாம்.
ம்ம் சரி மா.
பூஜை ஆரம்பிக்க எல்லோரும் கண்மூடி சாமியை கும்பிட்டார்கள்.
இங்கே கருணாகரனும் தங்கள் கம்பெனியின் பெயரில் அர்ச்சனை அபிஷேகம் செய்து முடித்து பூஜை தொடங்கியது.
கோவில் பூசாரி வந்து கருணாகரனுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார்.
இதெல்லாம் எதற்காக பூசாரி.
ஐயா !!! நீங்கள் இந்த கோவிலுக்கு எவ்வளவு உதவி செய்து இருக்கீங்க. எங்களால் ஆனது உங்களுக்கு இந்த பரிவட்ட மரியாதை தானே ஐயா .
கடவுள் முன்னாடி எதற்காக இந்த மரியாதை எல்லாம் பூசாரி, இதில் எல்லாம் எனக்கு விருப்பம் இல்லை.
பரவாயில்லை ஐயா !!! எங்கள் மனத்திருப்திக்காக ஐயா ,
ம்ம் , சரி பூஜையை ஆரம்பிங்க.
ம்ம்…
கருப்பனுக்கு பூஜை தொடங்கியது. சங்கு ஒலி ஒலிக்க….
கருப்பா !!!! நான் உன்னிடம் கேட்பது எல்லாம் ஒன்று தான் ஐயா , பெண்களை கண்டாலே வெறுத்து ஒதுங்குகிறான் என் மகன். இத்தனை சொத்து வசதி இருந்தும், என்னுடைய ஒரே மகனுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க முடியவில்லையே!!! கருப்பா !!!! நான் என்ன பாவம் செய்தேன்!! அறியாமல் நான் ஏதும் செய்த பாவத்திற்காக தான் என்னுடைய மகனை தண்டிக்கிறாயா!!!! அப்படி நான் ஏதும் பாவம் செய்திருந்தால் அதற்குண்டான தண்டனையை எனக்கே கொடுத்துடு கருப்பா , சந்தோஷமாக அதை நான் ஏற்கிறேன். ஆனால்…. என் மகனுக்கு மட்டும் ஒரு கல்யாணத்தை செய்து பார்க்க நீ தான் வழிவகுக்கனும் கருப்பா !!!!! அவனுடைய மனதை மாற்ற நீ தான் எப்படியாவது அருள்புரியனும் கருப்பா……
மனமுருகி கருப்பனிடம் தனது வேண்டுதலை கண்ணீரோடு கருப்பனின் காலடியில் வைத்தார் கருணாகரன்.
ஐயா !!! நீங்கள் எதற்காகவும் கலங்காதீங்க… எத்தனை பேர் குடும்பம் நல்லா வாழ வழி செஞ்சு கொடுத்து இருக்கீங்க , அப்படி இருக்க இந்த “ கருப்பன்” உங்களை கண்டுக்காம விட்டுடுவானா என்ன? என்றார் பூசாரி.
அட போங்க பூசாரி !!!
ஐயா !!! ரொம்ப சலிச்சுக்காதீங்க நல்லதே நடக்கும்.
நானும் அப்படி தான் நினைத்து ஒவ்வொரு நாளையும் காலம் கடத்துறேன் பூசாரி. என்றாவது ஒரு நாள் இந்த கருப்பன் என்னுடைய மகனின் வாழ்க்கை
யிலும் கண் திறந்து கருணைக்காட்டுவான்னு.
உங்கள் வேண்டுதலை கண்டிப்பாக கருப்பன் நிறைவேற்றுவான் ஐயா.
ம்ம்….
அப்பொழுது கோவில் இருந்த ஒருவருக்கு அருள் வந்தது.
எல்லோரும் அருள் வந்த அவரை பார்க்க…
அருள் வந்தவரோ !!!!!!
யாரை பார்க்கிறாரோ….
காதல் தொடரும்.