விஜி ப்ரியா
Active member
- Joined
- May 31, 2025
- Messages
- 92
- Reaction score
- 64
- Points
- 43
கண்மணியின் காதல்
20
கருணாகரன் காரில் இருந்து பூஜை பொருள்களை எல்லாம் எடுக்கும் போது , கருப்பனுக்கு உகந்த சுருட்டு பாக்கெட் கீழே விழுந்துவிட்டது.
சார் !!! சார்….. சார்…. உங்களை தான் கார்ல இருந்து இறங்கி போறவரே ஐயா ,,, உங்களை தான்…. என கண்மணி கருணாகரனை அழைக்க.
திரும்பி பார்த்தார் கருணாகரன்.
கண்மணியை இதற்கு முன்பாக அவர் பார்த்ததில்லை என்பதால் , அழைப்பது தான் இல்லை என நினைத்து திரும்பி கோவிலை பார்க்க நடந்தார்.
சார்….. சார்….. உங்களை தான்… கொஞ்சம் நில்லுங்க…. என சொல்லிக்கொண்டே வேகமாக கருணாகரனை நோக்கி நடந்து வந்துக்கொண்டிருந்தாள் கண்மணி.
கண்மணி, தன்னை நோக்கி வருவதை பார்த்த கருணாகரன்.
என்ன மா ? யார் நீ ? உன்னை இதற்கு முன்பாக நான் பார்த்ததில்லையே , என்னைய எதற்காக அழைத்தாய் , ஏதாவது உதவி எதுவும் வேணுமா மா ?
நான் யாருனெல்லாம் இப்ப முக்கியம் இல்லை சார். உங்க கையில் இருக்கிற கருப்பனோட பூஜை பொருட்களில் முக்கியமான பொருள் ஒன்னு கீழே விழுந்துவிட்டது, அதை சொல்லத்தான் உங்களை கூப்பிட்டேன் . நீங்கள் என்னடான்னா, உதவி எதுவும் வேணுமானு கேட்குறீங்க , உங்களால் எனக்கு ஒரு உதவியும் வேணாம் சார். எனக்கு அம்மா, அப்பா , பாட்டி, எல்லோரும் இருக்கும் போது நான் எதுக்காக அடுத்தவங்க கிட்ட உதவி கேட்கனும்.
அய்யோ!!! நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை மா, பொதுவாக நான் வெளியில் வரும் போது சில பேர் என்னிடம் உதவி கேட்பது வழக்கம், அதனால் தான் மா உன்னிடம் நான் கேட்டேன் மா. தவறாக நினைக்க வேண்டாம்.
ம்… சரிங்க சார், மன்னிச்சிடுங்க என்னைய.
பரவாயில்லை மா ,
சரி மா , எதற்காக என்னை கூப்பிட்டாய். ஏதோ பூஜை பொருள் கீழே விழுந்துவிட்டது என்றாயே !! அது என்ன மா ?
கருப்பனுக்கு பிடித்த சுருட்டு பாக்கெட் தான் கீழே விழுந்துவிட்டது.
அச்சோ!!!! எங்கே மா ?
உங்க காருக்கு கீழேயே கிடக்கு பாருங்க சார்.
வாசு… நம்ம காருக்கு கீழே விழந்து கிடக்கும் சுருட்டை எடுத்துக்கிட்டு வா.
ம்ம் , சரிங்க ஐயா.
வாசுதேவன் காரை போக….
சார் , ஒரு நிமிசம் ,,,
என்ன மா ?
கீழே விழுந்த பூஜை பொருள்களை எடுத்து பூஜைக்கு வைக்க கூடாது , அதனால் அதை எடுக்காதீங்க !!!
இப்ப என்ன மா பண்றது !!!
கொஞ்சம் இருங்க, என எதிர்பக்கமாக ஓடினாள்.
அடுத்த சில நொடிகளில் கருணாகரன் முன்பாக நின்றாள்.
இந்தாங்க சார் , இப்ப இதை உங்க பூஜை தட்டிலில் வாங்கி கொண்டு வந்த சுருட்டை வைத்தாள்.
ரொம்ப நன்றி மா , வயதில் சின்ன பெண்ணாக இருந்தாலும், ரொம்ப பொறுப்பான பெண்ணாக இருக்கிறாயே!!!
ம்ம்…
இந்தா மா , என தன் சட்டை பையில் இருந்து ஒரு நூறு ரூபாய் தாள் ஒன்றை எடுத்து கண்மணியிடம் கொடுத்தார்.
எதுக்காக சார், இந்த பணம் !!!
நீ , எனக்கு செய்த உதவிக்கு மா ,
சார் , இது நான் உங்களுக்காக செய்யவில்லை, எங்க காவல் தெய்வம் பாண்டி கருப்புக்காக செய்தேன் சார் , பணத்திற்காக உங்களுக்கு உதவி செய்யவில்லை என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் கண்மணி.
பார்க்க லட்சணமா இருக்கா வாசு ,
ஆமாங்க ஐயா ,,, சின்ன வயசுல எவ்வளவு தெளிவா பேசிட்டு போகுது பாருங்க.
ம்ம்…
சரி… சரி…. வா , நம்ம சீக்கிரம் கோவிலுக்குள்ள போகலாம் வாசு.
ம் , சரிங்க ஐயா , வாங்க.
ம்ம்…..
கருணாகரனும் , வாசுதேவனும் கோவிலுக்குள் சென்றார்கள்.
சுரேந்திரன் குடும்பம் வருவதற்கு முன்பே கோவிலுக்கு வந்திருந்த மீனாட்சி குடும்பத்தினர். கோவிலில் இருந்தார்கள்.
என்னங்க !!!
என்ன சிந்தாமணி ,
மாப்பிள்ளை வீட்டார் இன்னமும் கோவிலுக்கு வரவில்லையே , எங்கே வந்து இருக்காங்கன்னு ஒரு போன் செய்து கேளுங்களேன்.
வந்துடுவாங்க சிந்தாமணி , இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம்,
ம்ம் , சரிங்க .
அம்மா , நான் போய் வெளியே இருக்கும் பிள்ளையாருக்கு தெப்பக்குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து அபிசேகம் செய்துவிட்டு வருகிறேன்.
சரி , மீனாட்சி , நானும் கூட துணைக்கு வரட்டுமா?
இல்லை வேண்டாம் மா , நான் மட்டும் போய்ட்டு வந்துடுறேன்.
ம்ம் , சரி மா.
மீனாட்சி ,,,
என்ன பா?
சீக்கிரமாக வந்துடு மா ?
சரிங்க அப்பா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருவதற்கு முன் வந்துடுறேன்.
ம்ம் , சரி மா , பார்த்து போய்ட்டு வா , தெப்பக்குளத்தில் பார்த்து கீழே இறங்கு மா.
சரிங்க அப்பா.
ம்ம்….
மீனாட்சி கோவிலின் உள்ளே இருந்து வெளியே வந்தாள்.
கோவிலின் கிழக்கு பக்கத்தில் இருந்தது அந்த அரச மர பிள்ளையார் கோவில். அருகிலேயே தெப்பக்குளம். தெப்பக்குளத்தில் நடுவிலே ஒரு மண்டபம். பார்க்கவே தெப்பக்குளம் கண்களுக்கு குளிர்ச்சியளித்தது.
தான் கட்டி இருந்த புடவையின் முந்தானையை கொஞ்சம் மேலே சொருகி கொண்டு, தெப்பக்குளத்தில் இறங்கினாள் கையில் சிறிய பித்தளை குடத்தோடு.
முதல் குடம் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேலே வந்து பிள்ளையாருக்கு அந்த தண்ணீரால் அபிசேகம் செய்தாள்.
அடுத்த குடம் தண்ணீருக்காக தெப்பக்குளத்தில் இறங்கும் போது , ஏதேச்சையாக சுரேந்திரன் வருவதை பார்த்தாள்.
மீனாட்சி , பார்த்த அதே நேரம் சுரேந்திரனும் மீனாட்சியை பார்த்துவிட்டான்.
மீனாட்சி , கையை அசைக்க , சுரேந்திரனும் கையை அசைத்தான்.
மீனாட்சியிடம் வந்தான் சுரேந்திரன்.
வாங்க !!!
ம்ம்…
எப்படி இருக்கீங்க ? பயணம் எல்லாம் பிரச்சினை எதுவும் இல்லையே !!
ம்ம் , நான் நன்றாக இருக்கிறேன்.
நீ எப்படி இருக்க மீனாட்சி ?
ம்ம் , நானும் நல்லா இருக்கேன்ங்க.
நீங்கள் மட்டும் தான் வந்து இருக்கீங்களா ? அத்தை, மாமா, வரவில்லையா ?
எல்லோரும் வந்து இருக்காங்க , எல்லோரும் வெளியே இருக்காங்க. இப்ப தான் வந்தோம்.
ம்ம் , சரிங்க, கொஞ்சம் இருங்க.
பிள்ளையாருக்கு தண்ணீர் அபிசேகம் செய்துவிட்டு வந்துடுறேன்.
நான் வேணும்னா உனக்கு உதவி செய்யட்டுமா மீனாட்சி.
இல்லைங்க பரவாயில்லை , நானே செய்திடுறேன். நீங்கள் கொஞ்ச நேரம் அந்த படிக்கட்டில் உட்காருங்க.
ம்ம் , சரி மீனாட்சி , நீ போய் உன்னுடைய வேண்டுதலை செய்து முடி நான் காத்திருக்கிறேன்.
ம்ம்…
மீனாட்சி , மீண்டும் தெப்பக்குளத்தில் இறங்கினாள்.
தெப்பக்குளத்தின் படிக்கட்டில் உட்கார்ந்தான் சுரேந்திரன்.
தண்ணீர் ஊற்றி முடித்த மீனாட்சி , சுரேந்திரன் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு வந்தாள்.
நான் போய் , அப்பா கிட்ட சொல்லிட்டு வாறேன் என சொல்லி கோவிலின் உள்ளே ஓடினாள்.
அப்பா !!! அப்பா !!!!...
அம்மா…. அம்மா……
ஏய் , மீனாட்சி….. எதுக்காக இப்படி ஓடி வாற? என்ன ஆச்சு ?
அப்பா , அவங்க வந்துட்டாங்க அப்பா.
யாரு வந்துட்டாங்க?
அவங்க தான் மா ,
எவங்க…
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மா ,
எங்கே மா ? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்களா?
ஆமாம் , அப்பா , வெளியே இருக்காங்க எல்லோரும்.
சிந்தாமணி , சீக்கிரம் வா போய் அவங்களை அழைப்போம்.
ம்ம் , சரிங்க வாங்க போகலாம்.
மாரிமுத்துவும், சிந்தாமணியும் கோவிலுக்கு வெளியே வந்தார்கள் , சுரேந்திரன் குடும்பத்தை வரவேற்க.
தெப்பக்குளத்தின் அருகில் சுரேந்திரனை பார்த்த மாரிமுத்து,
வாங்க மாப்பிள்ளை , வாங்க !!! என இரு கரம் கூப்பி வரவேற்றார்.
ம்ம் , எப்படி இருக்கீங்க மாமா ?
நான் நல்லா இருக்கேன் மாப்பிள்ளை, எங்கே சம்மந்தியை காணோம் மாப்பிள்ளை!!
அவங்க எல்லோரும் வெளியே இருக்காங்க மாமா.
அட ஏன் மாப்பிள்ளை !! அவங்களை வெளியே நிற்க வச்சு இருக்கீங்க!! என சொல்லிக்கொண்டே வாசலை நோக்கி ஓடினார் மாரிமுத்து.
வெளியே நின்று கொண்டு இருந்தவர்களை போய் வரவேற்றார் மாரிமுத்து.
வாங்க…. வாங்க சம்மந்தி , வாங்க… எல்லோரும் வாங்க !!! மன்னிக்கவும் நீங்கள் வந்து ரொம்ப நேரமாச்சு போல , உங்களை வெளியே காக்க வைத்ததற்கு மன்னித்துவிடுங்கள் சம்மந்தி.
அய்யோ !!! எதுக்காக மன்னிப்பு எல்லாம் பரவாயில்லை விடுங்க சம்மந்தி.
வாங்க , எல்லோரும் வாங்க , கோவிலுக்கு உள்ளே போகலாம்.
ம்ம் , வாங்க போகலாம் சம்மந்தி.
எல்லோரும் கோவிலுக்குள் சென்றார்கள்.
கோவிலின் உள்ளே இருந்தாள் மீனாட்சி.
வாங்க , மாமா, வாங்க அத்தே !! என கரம் கூப்பி வணங்கினாள்.
ம்ம்… எப்படி இருக்க மருமகளே !!!!
ம்ம் , நல்லா இருக்கேன் மாமா.
சந்தோஷம் மா.
மங்களம் , அந்த பூவை எடுத்து மருமகள் தலையில் வைத்துவிடு.
ம்ம் , சரிங்க.
இப்படி வா மா மீனாட்சி.
மீனாட்சி , மங்களத்தின் அருகில் வர.
மங்களம் தான் கொண்டு வந்திருந்த தொடுத்து வைத்திருந்த குண்டு குண்டு மல்லிகை பூவை எடுத்து மீனாட்சியின் தலையில் வைத்துவிட்டாள்.
ம்ம் , அழகா இருக்க மீனாட்சி !! என நெட்டி முறித்தாள் மங்களம்.
என்னங்க !!!!
என்ன சிந்தாமணி….
பொங்கல் வைக்க நேரமாச்சுங்க.
ம்ம்…. சரி சிந்தாமணி.
சரிங்க சம்மந்தி,,, பொங்கல் வைக்க ஆரம்பிக்கலாமா? நேரமாச்சு.
ம்ம் , ஆரம்பிக்கலாம் சம்மந்தி ,
ம்ம்….
பொங்கல் வைப்பதற்காக கோவிலில் போடப்பட்டிருந்த கல் அடுப்பில் கற்பூரத்தை வைத்து விறகை வைத்தாள் மீனாட்சி.
சிந்தாமணி , பொங்கல் வைக்க கொண்டு வந்திருந்த பித்தளை பானையில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்தாள்.
ம்ம் , மீனாட்சி , அடுப்பை பற்ற வை மா.
சரிங்க அப்பா.
கண் மூடி , கருப்பனை மனதில் நினைத்து , கற்பூரத்தை பற்ற வைக்க , அது கொஞ்சம் கொஞ்சமாக ஜோதியாகி விறகும் சேர்ந்து எரிந்தது.
பெண்கள் பொங்கல் வைப்பதில் மூழ்க , ஆண்கள் அப்படியே கோவிலை சுற்றி பார்க்க சென்றார்கள்.
கண்மணியும்,கனிமொழியும், என்ன செய்யலாம் என யோசிக்க.
சுரேந்திரன் , பொங்கல் வைக்கும் மீனாட்சியையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
க்கும்…. என தொண்டையை கரக்கரத்தாள் கண்மணி.
அண்ணா….. அண்ணா….. போதும்… போதும் !!! அண்ணியை பார்த்து ஜொள்ளுவிட்டது போதும் என சொல்ல.
அசடு வழிந்தான் சுரேந்திரன்.
என்ன அண்ணா !!! இன்னும் கொஞ்ச நாளில் உங்க மனைவியாகிட போறாங்க…. அப்புறம் பார்க்கவும் கொஞ்சம் மிச்சம் வைங்க.
ஏய் ,,, வாலு… சும்மா இரு.
சரி , நான் எதுவும் பேசாமல் வெளியே போயிடுறேன், ஆனால்… எனக்கு ஐஸ்கிரீம் வாங்க பணம் கொடு .
சரியான ஐஸ்கிரீம் பைத்தியம் , இந்தா !!! போதுமா ? போ , போய் சாப்பிடு , ஆனால்… நாளைக்கு சளி பிடித்தால் எனக்கு தெரியாது கண்மணி.
ம்ம்…. அதை அப்புறமாக பார்த்துக்கலாம்.
ஏய் , கனிமொழி வா டி , நம்ம ஐஸ்கிரீம் சாப்பிட போகலாம் என கண்மணி, கனிமொழியை அழைக்க.
ஏய் !!! எங்கே டி போக போ
றீங்க ரெண்டு பேரும்?
என்ன கிழவி , நாங்க எங்கேயும் போகல , நீ போய் அப்படி உட்காரு வயசான காலத்துல இப்படி வழியில் நிற்காதே !! யாராவது இடித்துவிட போகிறார்கள் கிழவி.
ஏய்…. நில்லுங்க டி !!!
நிற்கமாட்டேன் போ கிழவி ,
ஓடியவள் சடாரென்று எதன் மீதோ இடித்தது போல் இருந்தது.
எதன் மீது ??
காதல் தொடரும்…