விஜி ப்ரியா
Active member
- Joined
- May 31, 2025
- Messages
- 74
- Reaction score
- 48
- Points
- 43
கண்மணியின் காதல்
15
யுகா !!! யுகா !!!!,,,
தன் அறையில் கணிணியோடு போராடிக் கொண்டு இருந்தான் யுகேந்திரன்.
தன் அப்பாவின் குரல் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்து எட்டி பார்த்தான் கீழே கருணாகரன் நின்று கொண்டு இருந்தார்.
யுகா ,,
என்ன அப்பா ?
முக்கியமான வேலையாக இருக்கீயா?
இல்லை அப்பா ,
சரி , அப்படின்னா கொஞ்சம் கீழே வா ,
ம்ம் , சரி அப்பா வருகிறேன் இருங்க.
மீண்டும் அறைக்கு சென்று கணிணியை அணைத்து வைத்து விட்டு கீழே வந்தான்.
வா , யுகா !!! இப்படி வந்து உட்காரு .
கருணாகரன் பக்கத்தில் போய் உட்கார்ந்தான் யுகேந்திரன்.
ம் , சொல்லுங்க அப்பா , என்ன விசயம். ஆனால் ,, ஒன்று “என் கல்யாணத்தை பற்றி மட்டும் இப்ப பேசாதீங்க “ ஏன்னா !!! “கொஞ்ச நாள் நான் ரொம்ப பிசி “ சிங்கப்பூரில் இருந்து நாம் ஆர்டர் செய்த “ பேபி மில்க் பவுடர் மெஷின் “ நாளைக்கு வந்திடும், வந்ததும் அதை சரியாக பேபி மில்க் பவுடர் மெஷினை பற்றி செட் செய்யனும் ஆட்களை வரவழைத்து , நிறைய வேலைகள் இருக்கிறது அப்பா , அதனால் என்னுடைய கல்யாணத்தை பத்தி பேசுவதாக இருந்தால் இன்னும் ஒரு வாரம் கழித்து பேசலாம்.
யுகா !!! நான் இப்ப உன் கல்யாணத்தை பத்தி பேச வரச்சொல்லவில்லை யுகா , நீ சொன்ன அதே பேபி மில்க் பவுடர் மெஷினை பற்றி பேசத்தான் வரச்சொன்னேன்.
அப்படியா அப்பா !!!
ஆமாம் யுகா ,
சரி சொல்லுங்க அப்பா ,
அது ஒன்னும் இல்லை யுகா , நம்ம கம்பெனிக்காக எந்த ஒரு புதிய மெஷின் வாங்கினாலும் முதலில் நம்மை காக்கும் நம்ம பாண்டி கருப்பச்சாமி கோவிலுக்கு போய் பூஜை போடுவது வழக்கம்.
ஆமாம் அப்பா அது எனக்கும் தெரியுமே !!!
ம்ம்….
வெள்ளிக்கிழமை ரெண்டு பேரும் பாண்டி கருப்பு கோவிலுக்கு போய் பூஜை செய்து விட்டு வரலாமானு கேட்க தான் வரச்சொன்னேன்.
ம்ம் , போகலாம் அப்பா,
ம்ம் சரி யுகா ,
அப்பா ,,,
சொல்லு யுகா !!!
அன்னைக்கு தானே நம்ம மீனாட்சி குடும்பமும் அதே பாண்டி கருப்பு கோவிலுக்கு பொங்கல் வைக்க போறாங்க.
அட ஆமாம்ல,,,
நேற்று தான் மாரிமுத்து வீட்டிற்கு வந்து சொல்லிட்டு போனான்.
ம்ம் , ஆமாம் அப்பா.
அப்பா , மீனாட்சிக்கே தெரியாமல் நாம் அங்கு போய் அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தா என்ன?
ம்ம்… நல்ல ஐடியா தான் யுகா ,
நம்மள கோவிலில் பார்த்தால் ரொம்ப சந்தோஷப்படுவா,
ம்ம்…. ஆமாம் அப்பா.
சரி , நீ போய் உன் வேலையை பாரு.
ம்ம் , சரிங்க அப்பா.
எழுந்து தன் அறைக்கு சென்று மீண்டும் கணிணியை உயிர்ப்பித்து அதோடு தன் விரல்களால் போராடினான்.
ஐயா ,
வீட்டு வேலைக்காரன் வாசுதேவன் கருணாகரனை அழைத்தான்.
என்ன வாசு?
உங்களை தேடி தரகர் வந்து இருக்கிறார்.
ம்ம் , அவரை உள்ளே வரச் சொல்லு.
ம்ம் , சரிங்க ஐயா !
வெளியே வந்த வாசுதேவன்
உள்ளே போங்க தரகரே ஐயா, உங்களை வரச்சொல்கிறார்.
ம்ம்…
தரகர் உள்ளே சென்றார்.
ஐயா , வணக்கம்ங்க…
ம்ம்…. வணக்கம்… வணக்கம் தரகரே!!
உன் கிட்ட எங்க குடும்பத்திற்கு , என் மகனுக்கு ஏற்ற ஒரு நல்ல குடும்பத்து பெண்ணாக ஒரு வரனை பார்க்க சொல்லி இருந்தேனே நினைவில் இருக்கிறதா ?
நினைவில் இருக்கிறது ஐயா !!! அப்படி நினைவில் இருப்பதால் தான் இப்போது உங்களை தேடி வந்திருக்கிறேன்.
ம்ம்…. நினைவில் இருந்து என்ன பயன், ஒரு வரன் கூட இது வரை உருப்படியாக எதுவும் கொண்டு வரவில்லையே !!!
ஐயா !!! அதற்கு நான் என்ன செய்ய?
நானும் எத்தனையோ வரன்களை கொண்டு வந்தேன், ஆனால்…. அதில் ஒரு வரனை கூட உங்களுக்கும் சரி , உங்களோட மகனுக்கும் சரி எதுவுமே பிடிக்கவில்லைனு சொல்லிட்டிங்க நான் என்ன செய்ய முடியும் ஐயா.
நல்ல வரன்களை நீ கொண்டு வந்திருந்தால், நாங்கள் ஏன் பிடிக்கவில்லைனு சொல்ல போறோம்.
சரி விடுங்க ஐயா , இப்போது ஒரு நாலைந்து வரன்கள் வந்து இருக்கிறது , அதை பார்த்து சொல்லுங்க.
ம்ம் , சரி காட்டு பார்க்கலாம்.
ம்ம்…
தான் கொண்டு வந்திருந்த தோல் பையை மேஜை மீது வைத்து பையை திறந்து அதில் இருந்து ஒரு நாலைந்து கவர்களை வெளியே எடுத்தார்.
ஐயா !!! இந்த பெண்ணின் பெயர் “அறிவுமதி” பிசினஸ் பற்றி படித்து அதில் கோல்ட் மெடலிஸிட். அப்பா ரியல் எஸ்டேட், கூட பிறந்தவங்க மூன்று பேர் இந்த பெண் தான் மூத்த பெண் , இதுக்கு அடுத்து ஒரு தம்பி , அவன் கல்லூரி முதல் வருடம் படித்துக்கொண்டு இருக்கிறான். தங்கை பதினொராம் வகுப்பு படிக்கிது . அம்மா வீட்டோட இருக்காங்க.
ம்ம் …..
இந்தாங்க ஐயா , இது தான் “அறிவுமதி” பெண்ணின் புகைப்படத்தை தரகர் கருணாகரனிடம் காண்பித்தார்.
பெண்ணின் புகைப்படத்தை வாங்கி பார்த்தார் கருணாகரன்.
மாநிறமாக இருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தான் இருந்தாள் அறிவுமதி.
பார்க்க நல்லா தான் இருக்கு இந்த பெண்.
ம்ம்….
சரிங்க ஐயா , அடுத்த வரன் இதோ !!!
இந்த பெண்ணின் பெயர் “ உஷா” கோயமுத்தூர், இவங்க அப்பாவுக்கு நாலஞ்சு மில் இருக்கு கோயம்புத்தூரில். கூட பிறந்தவங்க ஒருத்தர் மட்டும் தான் அண்ணன் ஒருத்தன் மட்டும் தான். அம்மா கவர்மென்ட் பள்ளிக்கூட ஆசிரியர்.
உஷாவின் புகைப்படத்தை வாங்கி பார்த்தார் ,,
ம்ம்….. இதுவும் பரவாயில்லை!!!
இந்த பெண்ணின் பெயர் “ரூபினி” வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் அப்பாவின் செல்லம் அதிகம், டிரான்ஸ்ப்போர்ட் கம்பெனி வைத்திருக்கிறார், பத்து டுரீஸ்ட் பஸ், இருபது ஆம்னி வேன் , பத்து லாரி ஓடுது , இது போக இன்னும் சில்லறை வணிகம் வேறு , அம்மா இல்லத்தரசி, இந்த பெண் உங்க குடும்பத்திற்கு மருமகளாக வந்தால் உங்கள் மகனுடைய தொழிலிலும் உற்ற துணையாக இருக்கும்.
ம்ம்….
ரூபினியின், புகைப்படத்தை வாங்கி பார்த்தார் கருணாகரனுக்கு பிடித்துவிட்டது ரூபினை.
இந்த ரூபினி, மற்ற பெண்களை விட பார்க்க அழகாகவும் இருக்கா , நல்லா படித்த பெண்ணாகவும் இருக்கா தரகரே !!!
ம்ம் , அப்புறம் என்ன ஐயா !! இந்த வரனையே பேசி முடிச்சிடலாம், நான் போய் பொண்ணு வீட்டில் சொல்றேன். ஒரு நல்ல நாள் பார்த்து பெண்ணை பார்க்க அவங்க வீட்டுக்கு போகலாம் , நேரில் பார்த்து இரண்டு குடும்பமும் பரஸ்பரம் பேசி ஒரு முடிவுக்கு வாங்க.
நான் மட்டும் முடிவு செய்தால் போதுமா தரகரே !!! மேலே இருப்பவனின் முடிவு என்னவோ !! அவன் தானே முடிவு செய்யனும், ஏன்னா வாழ போறது அவன் தானே தரகரே !!!
ஐயா !!! நீங்க என்ன சொல்றீங்க ? மேலே இருப்பவனா ? எனக்கு புரியவில்லை.
மேலே இருப்பவன்னு நான் சொன்னது “ மேலே மாடியில் இருக்கும் என் மகன் யுகேந்திரனை தான்” சொன்னேன்.
ம்ம் , …
சரிங்க ஐயா , இந்த மூன்று வரன்களையுமே உங்க மகனிடம் காட்டி எந்த பெண்ணை பிடித்திருக்கிறதோ, அதை மட்டும் சொல்ல சொல்லுங்க, மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.
ம்ம் , சரி தரகரே!!
அவன் கீழே வரும் நேரம் தான் , அவன் வந்ததும் அவனிடம் காண்பிக்கிறேன்.
சரிங்க ஐயா ,
அப்போ நான் வரட்டுமா ?
சரிங்க தரகரே , போய்ட்டு வாங்க.
ஐயா !!! நான் போய்ட்டு வரேனுங்க !!! என தலையை சொரிந்துக்கொண்டே நின்றார் தரகர்.
என்ன ஓய் !!!
ஐயா !!!
ம் சொல்லு என்ன வேணும்.
ஐயா !!!! உங்களுக்கு தெரியாததா!!!
ஓஓஓ…… பணம் வேணுமா ?
ம்ம்…. ஆமாங்க ஐயா !!!
இது வரை ஒரு பெண்ணை கூட உருப்படியாக காண்பிக்கவில்லை ஆனால் ,,, உமக்கு வருமானம் மட்டும் தடையில்லாம வேணும் அப்படித்தானே !!!
ஐயா !!! என்ன வார்த்தை சொல்லிட்டிங்க !!! நான் என்ன உங்களுக்கு எந்த வரனுமே கொண்டு வராமலா பணம் வாங்குறேன் , நானும் இது வரை எத்தனையோ வரன்களை கொண்டு வந்திருக்கிறேன். அத்தனையும் அருமையான வரன்கள். ஆனால்!!!! உங்கள் மகனுக்கு எதுவும் பிடிக்காமல் போனதுக்கு நான் என்னங்க ஐயா , செய்ய முடியும். இப்ப கூட பாருங்க நான் கொண்டு வந்த வரன்களில் ஒரு வரனை உங்களுக்கு பிடித்திருக்கிறது. ஆனால்,,, உங்கள் மகனுக்கு பிடித்திருந்தால் தானே மற்ற விசயங்களை பேச முடியும்.
ம்ம்….. சரி….. சரி !!!! இந்தா இந்த பணத்தை வைத்துக்கொள் என தன் சட்டை பையில் இருந்து ஐந்நூறு ரூபாய் தாள்கள் பத்தினை எடுத்து தரகரின் கையில் வைத்தார்.
ம்ம்…
ரொம்ப நன்றிங்க ஐயா !!! அப்போ நான் வரட்டுமா?
ம்ம்…. இன்னும் என்ன யா வேணும் உமக்கு ?
ஒன்னும் வேணாம்ங்க ஐயா !!!
ம்ம் சரி.
தரகர் வெளியே செல்ல.
யுகேந்திரன் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான்.
தரகர் செல்வதை பார்த்த யுகேந்திரன் , என்ன அப்பா மறுபடியும் உங்கள் வேலையை ஆரம்பித்தாச்சா?
என்ன சொல்ற யுகா !!!
அதான் தரகர் வந்துட்டு போறாரே, பழையபடி பொண்ணுங்க போட்டோ கொடுத்திட்டு போறாரா?
ம்ம் , ஆமாம் யுகா , அது தானே அவருடைய தொழில். இப்ப கூட ஒரு மூன்று வரன்கள் கொடுத்துவிட்டு போய் இருக்கிறார் .அதில் ஒரு வரன் எனக்கு பிடித்திருக்கிறது நீயும் அந்த பெண்ணை பார்த்து பிடித்திருக்கிறதா? என்று சொன்னால் நாம் நேரில் பெண் வீட்டிற்கு சென்று மற்ற விவரங்களை பேசி முடிவு செய்துவிடலாம். இந்தா, இதுதான் அந்த பெண்ணின் புகைப்படம் என ரூபினியின் புகைப்படத்தை யுகாவிடம் காண்பித்தார்.
ம்ம் , சரி கொடுங்க உங்கள் விருப்பத்தை எதற்காக தடுக்க வேண்டும் !! கொடுங்கள் பார்க்கிறேன் என ரூபினியின் புகைப்படத்தை கையில் வாங்கே பிரித்துப் பார்த்தான்.
கோதுமை நிறத்தில் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருந்தாள் ரூபினி. அவளின் கண்களை பார்க்கும்போதே அவளின் அறிவு கூர்மையை அறிந்து கொள்ள முடிந்தது யுகேந்திரனால்.
என்ன யுகா !!! புகைப்படத்தையே இவ்வளவு நேரம் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு இருக்க , அப்படின்னா இந்த பெண்ணை உனக்கு பிடித்திருக்கிறதா? என ஆர்வமாக கேட்டார் கருணாகரன் யுகேந்திரனிடம்.
அப்பா கொஞ்சம் அமைதியாக இருங்கள் . நான் இன்னும் என்னுடைய முடிவை சொல்லவில்லை அதற்குள் எதற்கு இவ்வளவு சந்தோசம்?
இல்லை யுகா !!! நீ … இதுவரை எந்த பெண்ணுடைய புகைப்படத்தையும் இவ்வளவு நேரம் பார்த்ததில்லை பார்த்தவுடனே கீழே வைத்துவிட்டு பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவாய்
ஆனால் ,,, இந்த பெண்ணின் புகைப்படத்தை மட்டும் இவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறாயே அதனால்தான் கேட்டேன்.
அப்பா , நீங்கள் நினைப்பது போல எனக்கும் இந்த பெண்ணை பிடித்திருக்கிறது.
ஆனால்….. !!!?
ஆனால்….. என்ன யுகா ?
காதல் தொடரும் ….