Soujanya
Active member
- Joined
- Jun 1, 2024
- Messages
- 174
- Reaction score
- 45
- Points
- 43
நிழல் – 6
“நீ என்ன சொல்ற ஆரா? கேஸ்ல ஏதாவது லீட் கிடைச்சதா?” என்று மறுபுறம் பேசியவனிடம்,
“நீ முதல்ல நான் அனுப்பின ஃபோட்டோவைப் பாரு சமர்” என்றாள் ஆரபி.
அவள் சொன்னதை ஏற்று தனது அலைபேசியில் அவள் அனுப்பியிருந்த புகைப்படத்தைப் பார்த்த சமரனின் கண்கள் அகலமாக விரிந்தன.
மீண்டும் ஃபோனை காதில் வைத்தவன், “ஆரா! இவங்களும் மெர்குரி குளோரைட் சாப்பிட்ட மாதிரி தான் தெரியுது” என்றான்.
“நான் உடனே கிளம்பி அங்கே போறேன் சமர். நீயும் வர்றியா?” என்று கேட்டவளிடம்,
“ம்ம்ம்… நீ முதல்ல அங்கே போய் நியூஸ் கவர் பண்ணு. நான் ஸ்டேஷன் போயிட்டு அங்கிருந்துக் கிளம்பி வர்றேன்” என்றான்.
அதன் பிறகு, ஆரபி சற்றும் தாமதிக்காமல் கிளம்பி சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றாள். அந்த வீட்டிற்கு முன்னால் போலீசாரும், பொதுமக்களும், பத்திரிக்கையாளர்களும் கூடியிருந்தார்கள்.
ஆரபியுடன் பணிபுரியும் சில பத்திரிக்கையாளர்களும் அங்கே நின்றிருக்க, வேகமாக அவர்களிடம் சென்றவள், “இரண்டு பேரும் எப்படி இறந்தாங்கன்னு ஏதாவது தகவல் தெரிஞ்சுதா?” என்று கேட்டாள்.
“இரண்டு பேரும் விஷம் குடுச்சு தற்கொலை செஞ்சுகிட்டதா தான் போலீஸ்கிட்ட இருந்து ஃபர்ஸ்ட் ஹான்ட் தகவல் வந்திருக்கு. வயசாகி தனிமையில் இருந்ததால, விரக்தியில் தற்கொலை செஞ்சுகிட்டதா சொல்றாங்க” என்றான், அவளுடன் பணிபுரியும் ஜாண்.
“ஓ! ஓகே” என்றவள், ஓரமாக நின்று தனது டைரியில் சில விஷயங்களை எழுதி வைத்தாள்.
சிறிது நேரத்திலேயே அங்கு வந்து சேர்ந்த சமரன், “ஏதாவது தெரிஞ்சுதா?” என்று ஆரபியிடம் கேட்க, அவளும் தனக்குத் தெரிந்த தகவல்களைக் கூறினாள்.
“டெட் பாடிசை எடுத்துட்டுப் போயாச்சா?” என்று கேட்டவனிடம்,
“இன்னும் இல்லை!” என்று அவள் பதிலளிக்க,
“சரி! நான் உள்ளே போய் பார்த்துட்டு வர்றேன்” என்றவன், அந்த வீட்டிற்கு முன்னால் கூடியிருந்த கூட்டத்தையும் மீறி உள்ளே சென்றான்.
சமரன் போலீஸ் உடையணிந்து சென்றதால், அவனை யாரும் தடுக்கவில்லை. உள்ளே சென்றவன், தரையில் துணிகள் போர்த்தி படுக்க வைத்திருந்த உடல்களைப் பார்த்தான். பின்னர் மெதுவாக துணிகளை விலக்கி, இருவரின் முகத்தையும் பார்த்தவன், தாங்கள் நினைத்தது சரிதான் என்பதை ஊர்ஜிதப்படுத்தினான்.
தங்கராஜின் முகத்தைப் போலவே இவர்களின் முகமும் கறுத்துப் போய், வாயருகே பழுப்பேறி விகாரமாகக் காட்சியளித்தது.
பின்னர் அந்த வீட்டைச் சுற்றிலும் நோட்டம் விட்டான். அங்கே திருட்டு சம்பவத்திற்கான அடையாளம், கொலை நடந்ததிற்கான தடயம் என்று சந்தேகப்படும்படியாக எதுவுமே அவனது பார்வைக்குத் தென்படவில்லை.
அவன் யோசனையிலேயே நின்ற பொழுது, “சமரன்!” என்று ஒரு குரல் கேட்கவும், திரும்பிப் பார்த்தான்.
அந்தப் பகுதியின் காவல் ஆய்வாளர் பிரபாகரன் அங்கே நின்றிருக்க, “ஹலோ சார்” அவருடன் சிரித்தபடியே கைக்குலுக்கினான்.
“நீங்க எப்படி இங்கே?” என்று அவர் கேட்க,
“ஒரு கேஸ் விஷயமா பக்கத்துல ஒருத்தரை மீட் பண்ண வந்தேன். இங்கே கூட்டமா இருக்கவும் என்ன ஏதுன்னு பார்த்துட்டு போகலாமேன்னு வந்தேன் சார்” என்றான் அவன்.
“பாவம் சார்! வயசான காலத்துல தற்கொலை பண்ணிக்கற கொடுமையெல்லாம், யாருக்கும் வரவே கூடாது” என்ற பிரபாகரனிடம்,
“இரண்டு பேரும் விஷம் குடிச்சு தற்கொலை பண்ணதா சொல்றாங்களே! அவங்க குடிச்ச விஷ பாட்டில், தற்கொலை கடிதம்னு ஏதாவது ரெக்கவர் பண்ணீங்களா?” என்று அவன் கேட்க,
“அப்படி எதுவும் கிடைக்கல! இவங்களோட பசங்க இரண்டு பேரும் அமெரிக்காவுல இருக்காங்க. ரொம்ப நேரமா ட்ரை பண்ணியும் அப்பா, அம்மா ஃபோனை எடுக்கலைன்னு சொந்தக்காரங்களுக்குத் தகவல் சொல்லி இருக்காங்க. அவங்க வந்து வீட்டுக் கதவை உடைச்சு பார்த்த பிறகு தான் இரண்டு பேரும் விஷம் சாப்பிட்டு இறந்து போனது தெரிய வந்தது. என்ன தான் பிள்ளைங்களை படிக்க வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பி இருந்தாலும், தனிமை இவங்க இரண்டு பேரையும் ரொம்பவே பாதிச்சிருக்கும் போல!” என்றார் அவர்.
“சார்! நீங்க தப்பா நினைக்கலைன்னா, எனக்கு இந்தக் கேசோட அடுத்தடுத்த நடவடிக்கைகள் பற்றி கொஞ்சம் தகவல் சொல்ல முடியுமா? கேஸ் ஸ்டடிக்காகத் தேவைப்படுது” என்றவனிடம்,
“ஓ தாராளமா! ஆனா, வேலை பிசியில நான் மறக்க வாய்ப்பு இருக்கு. உங்களுக்கு என்ன தகவல் வேணும்னாலும் எனக்கு தாராளமா கால் பண்ணுங்க. என்னுடைய நம்பர் உங்ககிட்ட இருக்குல்ல” என்று பிரபாகரன் கேட்க, அவனும், ‘ஆம்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
வெளியே அவனுக்காக ஆரபி காத்து நிற்க, அவளிடம் சென்றான் சமரன்.
“என்னாச்சு சமர்! எனி யூஸ்ஃபுல் இன்ஃபர்மேஷன்?” என்று கேட்டவளிடம்,
“இல்ல ஆரா! இன்ஸ்பெக்டரைப் பார்த்தேன். அவரும் தற்கொலைன்னு தான் சந்தேகப்படுறாரு. அவர்கிட்ட நம்பர் வாங்கியிருக்கேன்” என்றான்.
“ஆனா, எனக்கு ஷ்யூரா தெரியும் சமர். இது தற்கொலை இல்ல. கொலைதான்னு” என்றவளிடம்,
“அட்டாப்சி ரிப்போர்ட் வராம, நம்மளால எதையும் கன்ஃபார்மா சொல்ல முடியாது ஆரா” என்றான் அவன்.
“சரி! நான் கிளம்புறேன் சமர். ஆஃபீஸ்ல நிறைய வேலை இருக்கு” என்றவளின் முகத்தை ஆராய்ச்சியாக அவன் பார்த்து நிற்க,
“எ…என்ன அப்படி பார்க்கிற?” என்று கேட்டாள்.
“நீ ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா? வேலை பிசியில ஹெல்த்தை கவனிக்காம இருக்காதே” என்று அவன் கூற, அவளுக்கு உள்ளே பரவசமாக இருந்தது.
சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கவனித்து தன்னைக் குறித்து நலம் விசாரிக்கும் அவனது அக்கறை அவளுக்குப் பிடித்திருந்தது.
தன்னுள் எழுந்த வெட்கத்தை மறைத்தபடி, “அ…அதெல்லாம் ஒழுங்கா தான் சப்பிடுறேன்” என்று அவள் பதிலளிக்க,
“ம்ம்ம்… அப்படியா? சரி காலையில சாப்பிட்டு தானே வீட்டிலிருந்து கிளம்பி வந்த?” என்றவனிடம்,
“அது… அது…” என்று மழுப்பினாள் ஆரபி.
“உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது. இன்னும் எதுவும் சாப்பிடலைன்னு” என்றவன், அவளை அருகில் இருக்கும் உணவகத்திற்கு அழைத்துச் சென்று காலை டிபன் வாங்கிக் கொடுத்தான்.
இப்படியே சில தினங்கள் கடந்திருக்க, ஆரபி மற்றும் சமரனின் நிச்சயதார்த்ததிற்கு நாள் குறிக்க, தனது கணவரை அவசரப்படுத்திக் கொண்டிருந்தார் காவேரி.
“இப்போ என்ன அவசரம் காவேரி? கொஞ்ச நாள் போகட்டுமே!” என்று பூபாலன் சொன்னதை அவர் கேட்பதாக இல்லை.
“முடியாதுங்க. இந்த விஷயத்துல நான் யாரோட பேச்சையும் கேட்க மாட்டேன். நான் என்ன இப்பவே இரண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைங்கன்னா சொல்றேன். ஒரு நிச்சயதார்த்தம் தானே! அதை செய்யுறதுக்கு ஏன் நீங்க இவ்வளவு தடை போடுறீங்க?” என்றவர்,
தனது அலைபேசியை எடுத்து, “ராஜேந்திரன் அண்ணன்கிட்ட நீங்களே பேசுறீங்களா? இல்ல நான் பேசட்டுமா?” என்றார்.
“இல்ல வேண்டாம். நானே பேசுறேன். ராஜன் இன்னைக்கு நம்ம குடோனுக்கு வர்றதா சொல்லி இருக்கான். அப்போ, அவன்கிட்ட இந்த விஷயத்தைப் பற்றி பேசுறேன்” என்று பூபாலன் சொன்ன பிறகே காவேரி அமைதியானார்.
அன்று பூபாலனின் மரக் குடோனுக்கு ராஜேந்திரன் வருகை தந்திருந்தார்.
“வா ராஜன்! ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னியே” என்றவரிடம்,
“எல்லாம் நம்ம பிள்ளைங்க கல்யாணத்தைப் பற்றி தான் பாலன். இரண்டு பேருக்கும் சீக்கிரமா கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு நான் விருப்பப்படுறேன்!” என்றார் ராஜேந்திரன்.
“நானும் இது பற்றி உன்கிட்ட பேசணும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். காவேரியும் சீக்கிரமா நிச்சயதார்த்தத்தை நடத்தணும்னு பிரியப்படுறா” என்றவரிடம்,
“நம்ம ஆரு, சமரனை கட்டிக்க சம்மதம் சொல்லிட்டாளா? எனக்கு அவளோட சம்மதம் ரொம்ப முக்கியம்” என்று ராஜேந்திரன் கேட்க,
“ஓப்பனா சொல்லலைன்னாலும், ஜாடை மாடையா சம்மதம்னு சொல்லிட்டா. அவளுக்குத் தான் நம்ம சமரனை ரொம்ப பிடிக்குமே” என்றார்.
“கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு பாலன். அடுத்து வர்ற நல்ல நாளிலேயே நிச்சயதார்த்தத்தை வச்சுக்கலாம்” என்றார் அவர்.
குடும்ப விஷயம் பேசி முடித்ததும், “கடைக்கு கொஞ்சம் மர சாமான் தேவைப்படுது. அதையும் கையோட வாங்கிட்டு போயிடுறேன்” என்றவர், தனது நண்பருடன் சேர்ந்து அடுத்து பிஸ்னஸ் விஷயமாகப் பேசத் தொடங்கினார்.
அன்று ஞாயிற்றுக்கிழமை!
ஆரபி வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் மகளிர் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது தான் உறங்கி விழித்து வந்து சோஃபாவில் அமர்ந்த அபிமன்யுவோ, “ரிமோட் குடு” என்று அவளிடம் கேட்க,
“பார்த்தா தெரில? கிரிக்கெட் பார்த்துட்டு இருக்கேன்” என்றாள்.
“பொம்பளை கிரிக்கெட் எல்லாம் பார்க்க சுவாரஸ்யமா இருக்காது. நீ ரிமோட்டை குடு. நான் மென்ஸ் கிரிக்கெட் மேட்ச் பார்க்கணும்” என்று அவன் கூற, அவளுக்கு கோபம் வந்து விட்டது.
“என்னது பொம்பளை கிரிக்கெட்டா? டேய் மரியாதையா பேசு. இல்லைனா பல்லைப் பேத்துருவேன். நம்ம வுமன்ஸ் கிரிக்கெட் டீம் சமீபத்துல செஞ்ச சாதனைகளை எல்லாம் பட்டியல் போடவா?” என்றாள்.
அக்காவின் உக்கிரமான முகத்தைக் கண்டு சற்று பயந்த அபிமன்யுவோ, “வேண்டாம் நீயே டிவி பாரு. நான் பல் தேய்க்கப் போறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட்டான்.
அப்பொழுது ஆரபியின் அலைபேசிக்கு அழைப்பு வரவும், எடுத்துப் பார்த்தாள். சமரன் தான் அழைத்திருந்தான்.
அழைப்பை ஏற்றவள், “சொல்லு சமர்!” என்று பதிலளிக்க,
“ஆரா! வீட்டில் தானே இருக்க?” என்று கேட்டான்.
“ஆமா சமர்! என்ன விஷயம். கேஸ் விஷயமா ஏதாவது லீட் கிடைச்சுதா?” என்று அவள் ஆர்வமாகக் கேட்கவும், காதில் இருந்த ஃபோனை எடுத்துப் பார்த்தவனோ, ‘எப்போ பாரு கேசு, லீடுன்னு இதே நினைப்பு தான்’ என்று புலம்பினான்.
அவன் மறுபுறம் புலம்பியது அவளுக்குக் கேட்க, வாய் மூடி சிரித்துக் கொண்டாள்.
“ஆ…ஆமா ஆரா! கேஸ் விஷயமா தான் பேசணும். நீ பக்கத்துல இருக்கற காஃபி ஷப்புக்கு வாயேன்” என்றவனிடம்,
“காஃபி ஷாப்புக்கு எதுக்கு சமர். பேசாம நீ வீட்டுக்கு வா” என்றாள் ஆரபி.
“இல்ல ஆரா! அது சரியா வராது. நான் லொக்கேஷன் அனுப்புறேன். நீ சீக்கிரமா கிளம்பி வா” என்றான் அவன்.
அவளும் அதற்கு சம்மதித்து, விரைவாகத் தயாராகி தனது அன்னையிடமும் தெரிவித்துவிட்டு சமரனை சந்திக்கச் சென்றாள்.
கஃபேவிற்குச் சென்றவள், அங்கு ஏற்கனவே தனக்காகக் காத்திருந்தவனுக்கு எதிர்புறமாக அமர்ந்தாள்.
“சொல்லு சமர்! என்ன விஷயம்?” என்று கேட்டவளிடம்,
“அப்பா சொன்னாங்க!” என்று தயக்கத்துடனே பதிலளித்தான் அவன்.
அவளோ புரியாமல் விழித்தபடி, “அங்கிள் என்ன சொன்னாங்க?” என்று கேட்க,
“நீ, நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டியாமே” என்று அவன் பட்டென கேட்டுவிட,
“அது… நான்… நான்…” என்று திணறினாள் அவள்.
அவளது எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டவனோ, “புரியுது ஆரா! இந்த விஷயத்தைப் பற்றி பேச பொண்ணுங்களுக்கு கொஞ்சம் வெட்கமா தான் இருக்கும்” என்று கூற,
“ஹலோ! எனக்கென்ன வெட்கம். அப்பா, சமரை பிடிக்குமான்னு கேட்டாங்க. நான் பிடிக்கும்னு சொன்னேன். அவ்வளவு தான்” என்றாள்.
சமரனுக்கோ அவள் சொன்னதைக் கேட்டு புஸ்ஸென்று ஆகிவிட்டது.
“என்ன ஆரா! இது எவ்வளவு பெரிய விஷயம்? இவ்வளவு சாதாரணமா சொல்லிட்ட!” என்றான்.
“வேற எப்படி சொல்றது! வேணும்னா ஊருக்கெல்லாம் மைக் போட்டு சொல்லட்டுமா?” என்றவளிடம்,
“வேண்டாம்… அந்த சீனை ஏற்கனவே மௌன ராகம் படத்துல கார்த்திக் பண்ணிட்டார்” என்றான் அவன்.
அதைக் கேட்டதும் அவளுக்கு சிரிப்பு வந்துவிட, சற்று முன்னர் இருந்த இறுக்கம் தளர்ந்து இருவரும் சிரித்தனர்.
“ம்ம்ம்… சம்மதம் சொல்லிட்ட. ஆனா, நான் கொடுத்த மோதிரத்தை உன் கையில காணோமே” என்றவனிடம்,
“சமர்! அதைக் கண்டிப்பா போட்டே ஆகணுமா? அம்மா பார்த்தா ஆயிரம் கேள்வி கேட்பாங்க” என்றாள் ஆரபி.
“அஃப்கோர்ஸ்! நீ அந்த மோதிரத்தைக் கண்டிப்பா போட்டு தான் ஆகணும். ஆன்டி கேட்டா, உங்க வருங்கால மாப்பிள்ளை வாங்கிக் கொடுத்தாருன்னு சொல்லு” என்றான்.
“க்கும்… ரொம்ப தான்” என்றவள், தனது கைப்பையில் இருந்த மோதிரத்தை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
“இந்தா நீயே போட்டு விடு!” என்றவளிடமிருந்த மோதிரத்தை புன்னகையுடனே வாங்கிக் கொண்டவன்,
“ஹ்ம்ம்… நான் போட்ட விதை முளைச்சு, பூ பூத்து, காயாகி, கனியாகிருச்சு போல இருக்கே” என்று அவள் அன்று சொன்னதைச் சுட்டிக் காட்டி அவன் பேச,
“போடா! ரொம்ப தான் என்னை கிண்டல் பண்ணுற! நீ மோதிரம் எல்லாம் போட வேண்டாம்” என்றபடி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“ஹேய்! சாரி ஆரா. விளையாட்டுக்கு சொன்னதுக்குப் போய் கோவிச்சுக்குற பார்த்தியா?” என்றவன், ஒருவழியாக அவளை சமாதானப்படுத்தி மோதிரத்தை ஆரபியின் விரலில் அணிவித்து விட்டான்.
அதன் பிறகு, இரு வீட்டாரும் கலந்து பேசி இருவரின் நிச்சயதார்த்தத்திற்கான நாளும் குறிக்கப்பட்டது.
அடுத்து வந்த தினத்தில், சமரனும் ஆரபியும், ஒரு வாரத்திற்கு முன்னால் இறந்து போன தம்பதியரின் உடற்கூராய்வு அறிக்கையுடன் டாக்டர் பிரகாஷை சந்தித்தனர்.
ரிப்போர்டை முழுமையாக வாசித்தவரோ, “அன்பிலீவபில் சமர். இந்த ரிப்போர்ட்லேயும் மெர்குரி குளோரைட் பாய்சனிங்கால தான் இரண்டு பேரும் இறந்து போனதா சொல்லியிருக்காங்க” என்றார்.
“விக்டிம்சோட உடம்புல வேற ஏதாவது காயங்கள், இல்ல ஃபிசிக்கல் அட்டாக் நடந்ததா ரிப்போர்ட்ல இருக்கா டாக்டர்?” என்று சமரன் கேட்க,
“அப்படி எந்தத் தகவலும் இல்ல. டைம் ஆஃப் டெத் நைட் பதினோரு மணிங்கற தகவல் மட்டும் தான் இருக்கு” என்றார் அவர்.
அதன் பிறகு, சமரனும் ஆரபியும் அங்கிருந்து வெளியே வந்தனர்.
“என்ன சமர்! இதுவரைக்கும் நாலு பேரு ஒரே பேட்டர்ன்ல செத்துப் போயிருக்காங்க. ஆனா, நம்மளால கில்லர் பத்தி ஒரு சின்ன க்ளூவைக் கூட கண்டுபிடிக்க முடியலையே” என்ற ஆரபியிடம்,
“எனக்கும் அதுதான் புரியல ஆரா! யார் அந்தக் கில்லர். ஏன் இத்தனை பேரை விஷம் கொடுத்து கொன்னுட்டு இருக்கான்?” என்றான் குழப்பமாக.
“இவங்க இறந்துப் போன இடத்துல இருக்கற சிசிடிவி ஃபூட்டேஜை செக் பண்ணா, ஏதாவது க்ளூ கிடைக்கும்ல” என்றவளிடம்,
“அதெல்லாம் நான் ஏற்கனவே செக் பண்ணிட்டேன்! தங்கராஜோட பாடி கிடைச்ச ஏரி பக்கமும் சரி, அந்த வயசான தமபதியோட வீட்டு பக்கமும் சரி! எந்த சிசிடிவியும் இல்ல” என்றான் சமரன்.
“ச்ச… அமெரிக்காவுல வேலை பார்த்து என்ன பிரயோஜனம்? வயசான அம்மா அப்பா தனியா இருக்காங்களே! வீட்டுல பாதுகாப்புக்காக ஒரு சிசிடிவி மாட்டி வைப்போம்னு அவங்க பசங்களுக்கு தோணவே இல்லையா?” என்று ஆரபியால் வருத்தப்பட மட்டுமே முடிந்தது.
சிறிது நேரம் எதையோ யோசித்தவள், “ஒருவேளை கொலைகாரன் சீரியல் கில்லரா இருப்பானோ! ஏன்னா சீரியல் கில்லர்ஸ் தான் இந்த மாதிரி ஒரே பேட்டர்ன்ல கொலை செய்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்” என்று ஆரபி கூற,
“அப்படி இருக்கும்னு எனக்குத் தோணல ஆரா! பொதுவா சீரியல் கில்லர்ஸ், அவங்க செஞ்ச கொலைகள் ஃபேமஸ் ஆகணும், மக்கள்கிட்ட பரபரப்பா இந்த விஷயம் பேசப்படணும்னு எதிர்பார்ப்பாங்க. ஆனா, இந்த இறப்புகள் எல்லாமே தற்கொலை மாதிரி தெரியணும்னு தான் கில்லர் நினைச்சிருக்கான்”
“முதல்ல கிடைச்ச ஸ்கெலிட்டனைத் தவிர, வேற யாருக்கும் பெருசா உடம்பில் ஒரு சின்ன கீறல் கூட இல்ல. சோ… கில்லர் ஒரு வழக்கமான கொலையாளி இல்ல. அவனோட மோட்டிவ் வேற ஏதோ இருக்கு!” என்றான் சமரன்.
“ஆனா, இந்த நாலு பேரோட சாவையும் இணைக்கிறது மெர்குரி குளோரைட். எல்லாரும் ஒரே மாதிரியான விஷத்தைக் குடிச்சு தற்கொலை பண்ணா, சந்தேகம் வரும்னு அவனுக்குத் தெரியும் தானே!” என்றவளிடம்,
“நீ சொல்றது சரிதான் ஆரா! ஆனா, இந்த விஷயத்தை நாம மட்டும் தானே இதுவரைக்கும் சரியா கண்டுபிடிச்சிருக்கோம். இன்னும் சட்டத்துக்கும் மக்களுக்கும் விவரம் எதுவும் தெரிய வரல. ஒருவேளை இதுப்பற்றி எல்லாருக்கும் தெரிய வந்தா… கில்லர் பயப்படுவான். நாம செய்யுற தப்பு வெளியே தெரிய வந்துருச்சுன்னு நினைச்சு பதுங்குவான். அதனால, இந்த விஷயத்தை நாம வெளியே கசிய விடாம, ரகசியமா கில்லரை நெருங்க முயற்சிக்கணும். நம்மளை யாரும் தேடலைங்கற தைரியத்தோட, அவன் அடுத்த தப்பை செய்ய முயற்சிக்கும் போது, நாம அவனை பிடிச்சுடலாம்” என்றான் சமரன்.
“ஆனா, இதை நம்ம இரண்டு பேரால மட்டும் தனியா செய்ய முடியும்னு நினைக்குறியா சமர்? கில்லர் ரொம்ப புத்திசாலியா, ஒரு சின்ன எவிடென்ஸ் கூட கிடைக்காத அளவுக்கு கொலைகளை செஞ்சுட்டு இருக்கறப்போ, நாம அவனை நெருங்க எக்ஸ்ட்ரா ஃபோர்ஸ் தேவைப்படுமே” என்றவளிடம்,
“யூ ஆர் ரைட். அதனால தான் நான் இந்தக் கொலைகள் பத்தின முழு தகவல்களையும் கமிஷனர் சார்கிட்ட விளக்கமா சொல்லப் போறேன். அவர்கிட்ட போனா, டிபார்ட்மென்ட் சைட்ல இருந்து நமக்கு இந்தக் கேசுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். அடுத்ததா என்ன செய்யலாம்னு ஒரு ஐடியா கிடைக்கும்” என்றவன்,
“நான் ஏற்கனவே கமிஷனர் சாரை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டிருக்கேன் ஆரா. அப்பாயின்மென்ட் கிடைச்சதும் உன்கிட்ட சொல்றேன்” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட ஆரபிக்கு, புதிதாக ஒரு நம்பிக்கை பிறந்தது. விரைவில் தாங்கள் அந்தக் கொலைகாரனை நெருங்கி விடுவோம் என்று முழுமையாக நம்பினாள்.
நிழல் தொடரும்…