Soujanya
Active member
- Joined
- Jun 1, 2024
- Messages
- 172
- Reaction score
- 148
- Points
- 43
நிழல் – 21
வாகனங்கள் மோதிக் கொண்ட வேகத்தில் சஞ்சீவின் காரில் இருந்த ஏர் பேக் (Air bag) திறந்துக் கொண்டது. சற்று முன்னர் என்ன நடந்தது என்பதைப் புரிந்துக் கொள்வதற்கே அவனுக்கு ஓரிரு நிமிடங்கள் தேவைப்பட்டன.
பின்னர், மெதுவாகக் காரில் இருந்து இறங்கியவன், தனக்கு எதிரே நின்றிருந்தக் காரில் இருந்த ராஜேந்திரனைப் பார்த்தான். அவரது தலை காரின் ஸ்டியரிங்கில் மோதியிருக்க, நெற்றியில் இருந்து ரத்தம் கொட்டியது.
அதைப் பார்த்த சஞ்சீவ், தனது கார் ட்ரைவரைத் தேடினான். ஓட்டுநர் காரில் இருந்து இறங்கி சாலையின் ஓரமாக அமர்ந்திருக்க, “உனக்கு அடி எதுவும் படலை இல்ல?” என்று கேட்டான்.
“இல்ல சார்… ஆனா, லேசா தலை சுத்துது சார்! மயக்கமா வர்ற மாதிரி இருக்கு” என்றபடி அவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, சஞ்சீவிற்கு கட்டுக்கடங்காதக் கோபம் தலைக்கேறியது.
இரண்டு கார்களும் மோதியதால், வாகனங்களின் முன் பக்கம் நசுங்கிப் போயிருந்ததைக் கண்டவன், வேகமாகச் சென்று ராஜேந்திரனின் கார் கதவைத் திறந்தான்.
“ச்ச… என் துப்பாக்கியை வீட்டிலேயே வச்சுட்டு வந்துட்டேன். இல்லைன்னா… இவன் கதையை இங்கேயே முடிச்சிருக்கலாம்” என்றவன், ராஜேந்திரனின் சீட் பெல்டைக் கழற்றிவிட்டு, அவரது சட்டைக் காலரைப் பற்றி வெளியே இழுத்தான்.
லேசான மயக்கத்தில் இருந்தவர், முகத்தைச் சுழித்தபடியே காரில் இருந்துக் கீழே இறங்கி தடுமாற்றத்துடன் நின்றார்.
அவரது சட்டைக் காலரை கொத்தாகப் பற்றியவனோ, “அந்த மித்ராவைப் போட்டுத் தள்ளுன அன்னைக்கே உன்னையும் கொன்னு புதைச்சிருக்கணும். ச்ச… எங்க அப்பாவோட பேச்சைக் கேட்டு தப்பு பண்ணிட்டேன்” என்றவன்,
“ஆனா, இன்னைக்கு உன்னை நான் உயிரோட விடப் போறதில்ல. உன்னைக் இங்கேயே… இந்த நிமிஷமே… கொன்னு கூறு போட்டாத் தான் என் ஆத்திரம் அடங்கும்” என்று பற்களைக் கடிக்கவும், ராஜேந்திரன் மௌனமாக சிரித்தார்.
அதைக் கண்டு புருவம் சுருக்கியவன், “ஏய்… ஏய்…. ஏன் சிரிக்கிற நீ?” என்று சற்று பதட்டமாகவே கேட்க,
“இல்ல… நான் பேச வேண்டிய டயலாக்கை நீ பேசுறியே! அதை நினைச்சு தான் சிரிச்சேன்” என்றவர்,
“இந்த நாளுக்காகத் தான் நான் பல வருஷமா காத்துகிட்டு இருந்தேன் சஞ்சீவ்!” என்றபடி, அவன் சற்றும் எதிர்பாராத நேரத்தில், அவனது கையைத் தட்டிவிட்டு அவனது சட்டைக் காலரைப் பற்றித் தூக்கி அவனை அப்படியே தரையில் போட்டார்.
இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சீவின் கார் ஓட்டுநரை பயம் தழுவிக் கொள்ள, வேகமாக எழுந்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். கீழே விழுந்துக் கிடந்த சஞ்சீவ் வலியில் துடித்துக் கொண்டிருக்க, தனது காரில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்தார் ராஜேந்திரன்.
அந்த நேரத்தில் சுதாரித்து எழுந்தவனோ, சாலையில் இருந்து கீழே இறங்கி அங்கிருந்து தப்பி ஓட ஆரம்பித்தான். அதை கவனித்த ராஜேந்திரன், அவனை துரத்திக் கொண்டு பின்னாலேயே ஓடினார்.
அது ஒரு காலி இடம் என்பதாலும், இரவு நன்றாக இருட்டி இருந்ததாலும் எந்தப் பக்கம் சென்று தன்னை பாதுகாத்துக் கொள்வதென்று புரியாமல் விழித்தான் சஞ்சீவ்.
சிறிது தூரம் வேகமாக ஓடியவன், மூச்சு வாங்க, நிலைத்தடுமாறி கீழே விழுந்தான். இதைப் பார்த்த ராஜேந்திரன், அவனுக்கு முன்னால் போய் நின்று, துப்பாக்கியை அவனை நோக்கி நீட்டவும், “ப்ளீஸ்! ப்ளீஸ் வேண்டாம். என்னை விட்டுடு. என் சொத்து மொத்தத்தையும் வேணும்னா கூட உனக்கு எழுதித் தர்றேன். ஆனா, தயவு செஞ்சு என்னை உயிரோட விட்டுடு” என்று அவரிடம் கைக் கூப்பி கெஞ்சினான்.
அதைக் கேட்டு கோணலாகச் சிரித்தவரோ, “ஹ்ம்ம்… யாருக்குடா வேணும் உன் பணமும் சொத்தும்?” என்றபடி, முட்டியை நிலத்தில் ஊன்றி அவனுக்கு முன்னால் அமர்ந்தபடி,
“வேணும்னா உனக்கோரு சான்ஸ் தர்றேன்” என்றார்.
என்னவென்று புரியாமல் விழித்தவனிடம், “நான் கேட்குறதை எனக்குத் திருப்பிக் கொடுத்துட்டேன்னா, உன்னை உயிரோட விட்டுடறேன்” என்று அவர் கூற,
“சொல்லு… என்ன வேணும் சொல்லு… இப்பவே அதை உன் முன்னாடி கொண்டு வந்து வைக்கச் சொல்றேன்” என்றான் சஞ்சீவ்.
“கடந்த நாற்பது வருஷமா ஆராய்ச்சிங்கற பேர்ல நீங்க எல்லாரும் சேர்ந்து கொன்னு குவிச்சீங்களே, சின்னச் சின்ன குழந்தைங்க… அவங்க எல்லாரும் மறுபடியும் உயிரோட வரணும். காப்பகம், அறக்கட்டளைன்னு தாய், தந்தை இல்லாம வளர்ந்த பெண் குழந்தைகளை பணத்துக்காக வடநாட்டுக்கும், வெளிநாடுகளுக்கும் வித்தீங்களே… அவங்க எல்லாரையும் தேடிக் கண்டுபிடிச்சு நீ இங்கே கூட்டிட்டு வரணும். அதுமட்டுமில்ல… நீங்க செஞ்ச அநியாயங்களையும், அக்கிரமங்களையும் கண்டுபிடிச்ச காரணத்துக்காக அந்த அப்பாவி பொண்ணு மித்ராவை இரக்கமே இல்லாம கொன்னியே! அவளை உயிரோட அவ அப்பா, அம்மாகிட்ட ஒப்படைக்கணும்” என்றவர்,
“உன்னால அது முடியுமா? சொல்லு… உன்னால அது முடியுமா?” என்று கத்தினார்.
அனைத்தையும் கேட்ட சஞ்சீவிற்கு பயம் வயிற்றை கவ்விக் கொண்டது.
“அ…அப்படின்னா… என் அப்பாவையும், மத்தவங்களையும் கொலை செஞ்சது…” என்று அதற்கு மேல் பேச முடியாமல் அவன் நிறுத்த,
“யெஸ்! அவங்க எல்லாரையும் கொலை செஞ்சது நான் தான். நாற்பது வருஷங்களுக்கு முன்னாடி எங்க காப்பகத்துல வாழ்ந்த குழந்தைகளுக்கு உன்னுடைய அப்பாவும், அவனோட கூட்டாளிகளும் செஞ்ச அநீதி தான் என்னை இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு” என்றார்.
சஞ்சீவிற்கு இப்போழுது என்ன சொல்வதேன்றே தெரியவில்லை. மித்ராவை தான் கொலை செய்தக் காரணத்திற்காகத் தான் ராஜேந்திரன் தன்னைப் பழிவாங்க நினைக்கிறார் என்று அவன் எண்ணியிருந்த வேளையில், அவர் சொன்ன இந்த நாற்பது வருடத்துக் கதை அவனை மலைக்க வைத்தது.
தன் தந்தை மற்றும் அவரது கூட்டாளிகளின் சாவிற்கு யார் காரணம் என்று புரியாமல் குழம்பிப் போயிருந்தவனுக்கு, இன்று விடைக் கிடைத்த பிறகு, தன்னால் இனி தப்பிக்கவே முடியாது என்று எண்ணினான்.
“என்னுடைய நாற்பது வருஷக் கோபத்தைக் கிட்டத்தட்ட முடிச்சுட்டேன். இனிமே, உன் அறக்கட்டளையை பயன்படுத்தி ஒரு குழந்தையோட உயிருக்குக் கூட ஆபத்து வரக் கூடதுன்னு தான் உன் அப்பன் உருவாக்கி வச்சிருந்த சாம்ராஜ்யத்தை வேரோட அழிச்சேன். அதுல மிச்சம் இருக்கறது நீ மட்டும் தான். உன்னையும் அழிச்சுட்டா, வேதாம்மாவுக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேத்திடுவேன்” என்றார்.
“இல்ல… ப்ளீஸ்! வேண்டாம். நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு. இனிமே நான் எந்த அறக்கட்டளையும் நடத்த மாட்டேன். என் மொத்த பிஸ்னசையும் குளோஸ் பண்ணிடுறேன். என்னை உயிரோட விட்டுடு ப்ளீஸ்” என்று அவன் கெஞ்சிய வேளையில், அங்கே வேகமாக சில வாகங்கள் வந்து நின்றன.
வாகனங்களில் இருந்த போலீசார் தட தடவென இறங்கி வந்து அவர்களை சுற்றி வளைத்து நிற்க, நொடியும் தாமதிக்காமல் சஞ்சீவிற்குப் பின்னால் போய் நின்று, அவனைத் தூக்கி நிறுத்தி அவனது நெற்றியோரம் தனது துப்பாக்கியை வைத்து நின்றார் ராஜேந்திரன்.
அப்பொழுது கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்த காவல் ஆணையர் செல்வேந்திரனோ, “ராஜேந்திரன்! துப்பாக்கியை கீழே போட்டுட்டு ஒழுங்கா எங்ககிட்ட சரணைஞ்சுடுங்க. இதுவரைக்கும் நீங்க செஞ்ச கொலைகளை ஒத்துகிட்டு ஜெயிலுக்குப் போனா, குறைந்தபட்ச தண்டனை வாங்கித் தந்து உங்களை காப்பாற்ற முயற்சி செய்வோம்” என்றார்.
அதைக் கேட்டு கோணலாக சிரித்தவர், “யாருக்கு சார் வேணும் உங்க சட்டமும் நீதியும்?! இது எனக்கும் இந்த சமூகத்தை பதவி, பண பலத்தால ஆட்டிப்படைச்சுட்டு இருக்கற துர்சக்திகளுக்கும் நடக்குற யுத்தம். என்னுடைய யுத்தத்தை எப்படி முடிக்கணும்னு எனக்குத் தெரியும்” என்று பேசிய வேளையில், அந்த இடத்தில் ஆரபியுடன் பைக்கில் வந்து இறங்கினான் சமரன்.
வாகனங்களின் விளக்கொளியில் தெரிந்த தன் தந்தையைக் கண்டவன் வேகமாக அவரை நோக்கி ஓடிச் செல்ல, “அங்கேயே நில்லு சமர்!” என்றார் அவர்.
அவனோ தன் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அப்படியே நிற்க, வேகமாக வந்த ஆரபி அவனுக்கு அருகே நின்றாள்.
“அப்பா… ப்ளீஸ்! அவரை விட்டுருங்க. எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம்” என்று சமரன் கலக்கத்துடன் கூற,
“இனிமே பேசுறதுக்கு எதுவும் இல்ல சமர். முடிக்க வேண்டிய வேலை மட்டும் தான் மிச்சம் இருக்கு” என்றபடி பெருமூச்சு விட்டபடி, “சந்திராவை நல்லா பார்த்துக்கோ. என்னுடைய ரூம்ல அவளுக்காக நான் எழுதி வச்ச லெட்டர் இருக்கு. அதை எடுத்து அவகிட்ட கொடுத்துரு!” என்று அவர் கூறவும்,
“அப்பா…” என்றபடி கண்கள் கலங்கினான் சமரன்.
“அங்கிள்… தயவு செஞ்சு போலீஸ்கிட்ட சரண்டர் ஆயிடுங்க. இந்த சஞ்சீவோட ஆட்களால நடந்த அநீதிகளை நான் இந்த உலகத்துக்குத் தெரியப்படுத்துறேன்” என்று ஆரபி கூற,
“அதெல்லாம் இனிமே நடக்க வாய்ப்பில்லம்மா” என்றவர், “என்ன… உங்க கல்யாணத்தைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அது மட்டும் முடியாம போச்சு” என்றார்.
அப்பொழுது அங்கே காரில் வந்திறங்கிய பூபாலன், பதட்டத்துடன் ஓடி வந்தார். ஆரபி தான், சமரனின் வீட்டில் இருந்து கிளம்பும் போதே தன் தந்தைக்கு அழைத்து அவரை அங்கே வரச் சொல்லியிருந்தாள். அவர் சொன்னால் ராஜேந்திரன் நிச்சயமாகக் கேட்பார் என்று அவளுக்கு நம்பிக்கை இருந்தது.
சஞ்சீவின் நெற்றியோரம் துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு நிற்கும் தனது நண்பனைக் கண்ட பூபாலனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“ராஜன்…” என்று கலக்கத்துடன் அவர் தனது நண்பரை அழைக்க,
“பாலன்!” என்று சொல்லி கண்கள் கலங்கினார் ராஜேந்திரன்.
“என்ன ராஜன் இதெல்லாம்?” என்று அதிர்ச்சி மாறாக் குரலில் கேட்டவரிடம்,
“நம்ம காப்பகக் குழந்தைகளுக்கு நடந்த அநியாயங்களுக்கு நீதிக் கிடைக்கப் போகுது பாலன். நம்ம வேதாம்மாவோட ஆத்மாவுக்கு நிம்மதி கிடைக்கப் போகுது” என்றார் அவர்.
“என்ன உளறல் இது ராஜன்? நாற்பது வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவத்துக்காக உன் வாழ்க்கையையும் குடும்பத்தையும் இழக்கப் போறியா? எங்களைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட நீ நினைச்சுப் பார்க்கவே இல்லையா?” என்று அவர் கேட்க,
விரக்தியாகச் சிரித்த ராஜேந்திரன், “உங்களைப் பற்றி எல்லாம் யோசிச்சு தான் இத்தனை வருஷமா நான் சும்மா இருந்தேன் பாலன். கசப்பா போயிட்டு இருந்த என் வாழ்க்கையில, கடவுள் எனக்கொரு நல்ல நண்பனையும், அன்பான குடும்பத்தையும் கொடுத்தாரு. என்னுடைய இத்தனை வருஷப் போராட்டத்துல, என்னால உங்களுக்கெல்லாம் எந்த ஆபத்தும் வந்துடக் கூடாதுன்னு தான் பொறுமையா இருந்தேன். எனக்குத் தெரிஞ்சு என்னுடைய கடமைகளை எல்லாம் சரியா செஞ்சு முடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்” என்றார்.
“ராஜன்! ப்ளீஸ்… இப்படி எல்லாம் பேசாதே. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று சொல்லி பூபாலன் கண் கலங்க,
“அப்பா!” என்றபடி அவரது தோள்களைப் பற்றிக் கொண்டாள் ஆரபி.
இவ்வாறு அங்கே நின்றிருந்த ஒவ்வொருவரும், ராஜேந்திரனை அமைதிப்படுத்தி அவரை நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தில் இருந்து காப்பாற்ற போராடிக் கொண்டிருக்க, அவர் அதைக் கேட்பதாகத் தெரியவில்லை.
“சமர்!” என்று தன் மகனை அழைத்தவர்,
“எல்லா விஷத்தையும் சரியா செஞ்ச என்னால, நடக்கப் போற ஒரு விஷயத்தை மட்டும் தடுக்க முடியாது” என்று கூறவும், புரியாமல் விழித்தான் அவன்.
“இங்கே என்ன வேணாலும் நடக்கலாம். நான் செஞ்ச குற்றங்களுக்காக இந்த உலகம் உன்னையும், நம்ம குடும்பத்தையும் எப்படி பார்க்கும்னு எனக்கு நல்லா தெரியும். அதுக்காக, இந்த அப்பாவை மன்னிச்சிரு கண்ணா!” என்று அவர் கூற,
“அப்பா! ப்ளீஸ்… இப்படியெல்லாம் பேசாதீங்க” என்றான் சமரன்.
அப்பொழுது, “ராஜேந்திரன்! உங்களுக்கு கடைசியா ஒரு வாய்ப்பு தர்றோம். சஞ்சீவை எங்ககிட்ட ஒப்படைச்சுட்டு, சரண்டர் ஆகிடுங்க” என்று செல்வேந்திரன் குரல் உயர்த்திக் கத்த, விரக்தியாகச் சிரித்தார் அவர்.
“இவனை உயிரோட விட்டா… என்ன நடக்கும்னு புரியாம இருக்க நான் ஒண்ணும் முட்டாள் இல்ல சார்! என்றைக்கு இருந்தாலும், இவன் சாவு என் கையில தான்” என்றவர், பட்டென துப்பாக்கியின் விசையை அழுத்தவும், சஞ்சீவின் நெற்றியைத் துளைத்துச் சென்றது அந்தத் துப்பாக்கி குண்டு.
உடனேயே, “கமான் ஷூட்!” என்று செல்வேந்திரன் கட்டளை பிறப்பிக்க, அவருடன் நின்றிருந்தக் காவலர்கள் சிலர், ராஜேந்திரனை குறிப் பார்த்து சுட்டனர்.
அதைக் கண்ட சமரன், “அப்பா….” என்று கதறியபடி, அவரை நோக்கிச் செல்ல எண்ணிய வேளையில், ஆரபியும் பூபாலனும் அவனைப் பிடித்து தடுத்து நிறுத்தினர்.
கண் இமைக்கும் நேரத்திற்குள் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.
சஞ்சீவும், அவனுக்கு அருகிலேயே ராஜேந்திரனும் இரத்த வெள்ளத்தில் சாய்ந்து கிடந்தனர். அனைத்தும் நடந்து முடிந்த பிறகு, அந்த இடமே மயான அமைதியுடன் இருக்க, சமரன் கீழே விழுந்து கதறி அழுதான்.
பூபாலனோ அந்த நிலையை எப்படி எதிர்கொள்வதென்று புரியாமல், உயிரற்று கிடக்கும் தன் நண்பனின் உடலைப் பார்த்து கண்ணீர் சிந்தினார்.
ஆரபியோ சமரனைத் தேற்ற போராடிக் கொண்டிருந்த வேளையில், ராஜேந்திரனின் உடலைப் பார்த்து, ‘யூ டோன்ட் டிசர்வ் திஸ் அங்கிள்!’ என்றெண்ணி அழுதாள்.
அடுத்தடுத்து சட்டபடி நடக்க வேண்டிய அனைத்துக் காரியங்களும், வரிசையாக நடந்துக் கொண்டிருக்க, இறுதியாக ராஜேந்திரனின் மனதில் எரிந்துக் கொண்டிருந்த நாற்பது ஆண்டு கால நெருப்பு அணைந்து அமைதியாகிப் போனது.
ஆனால், என்ன தான் அவரது மனதில் எரிந்த நெருப்பு அணைந்து ஓய்ந்திருந்தாலும், அவரது குடும்பத்திற்கு அவர் விட்டுச் சென்ற காயங்கள், காலத்திற்கும் ஆறாத ரணமாக இருக்கப் போகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது!
ஒன்றரை வருடத்திற்குப் பிறகு…
ராஜேந்திரனின் நினைவிடத்தில் நின்றிருந்தனர் சமரனும் ஆரபியும்!
தன் தந்தையை நினைத்துக் கண்கள் கலங்கிப் போய் நின்ற சமரனின் கரத்தை ஆறுதலாகப் பற்றினாள் அவனது மனைவி ஆரபி.
கடந்து சென்ற ஒரு வருடத்தில் அவர்கள் கடந்து வந்த இன்னல்களும், உணர்வலைகளும் ஏராளம். நியாயத்திற்காக கொலைகள் செய்து, தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட ராஜேந்திரன் இச்சமூகத்தின் பார்வையில் ஒரு கொலைகாரனாகத் தான் பார்க்கப்பட்டார்.
சமரன் வேலையில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட பிறகு, அவனை மீண்டும் பணியில் வந்து சேரச் சொல்லி எந்த அழைப்பும் வரவில்லை. ஒரு கொலைகாரனின் மகனை காவல்துறையில் சேர்த்துக் கொள்ள அதிகாரிகள் விரும்புவார்களா என்ன?!
ஆனால், சமரன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை. தன் தந்தை எந்தக் காரணத்திற்காக கொலைகள் செய்தார் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தில் பார்வையிலும் அது தவறாக இருந்தாலும், அவனது மனதில் இன்றளவும் அவர் வானளவிற்கு உயர்ந்து தான் நிற்கிறார்.
ராஜேந்திரனின் மறைவிற்குப் பிறகு சந்திரா மிகவும் உடைந்து போய்விட்டார். கணவரின் சாவு அவரது தலையில் இடியாக வந்திறங்கியது. அதிலும், ஆறு பேரை கொலை செய்தவர் என்கிற அவப்பெயரை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
விஷயம் கேள்விபட்ட மறுநாளே ராஜேந்திரனின் மூத்த மகள் மதுமிதாவும் லண்டலனின் இருந்து பதறியடித்துக் கொண்டி ஓடோடி வந்தாள். தன் தந்தைக்கு இந்த நிலையா ஏற்பட வேண்டும் என்றெண்ணி கதறி அழுதவளை, ஆரபி தான் ஒருவாறு தேற்றி ஆறுதல்படுத்தினாள்.
சில மாதங்கள் கழித்து, ராஜேந்திரன் தன் மனைவிக்காக எழுதி வைத்திருந்தக் கடிதத்தை சமரன் தன் அன்னையிடம் கொடுக்க, அதை வாங்கிப் படித்தவர் இரண்டு நாட்கள் தனது அறையை விட்டு வெளியே வரவே இல்லை. இப்படியே போனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிவிடும் என்று சமரன் வருத்தப்பட, அந்த நேரத்தில் பூபாலன் ஒரு முடிவை எடுத்தார்.
ராஜேந்திரனின் ஆசைப்படியே சமரனுக்கும் ஆரபிக்கும் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தார். ராஜேந்திரன் இறந்து சில மாதங்களே ஆகியிருந்த போதிலும், ஆரபியின் வரவு, சந்திராவின் மனநிலையை மாற்றும் என்றெண்ணியே அந்த முடிவை எடுத்தார் அவர்.
பூபாலனின் முடிவிற்கு இரு குடும்பத்தாரும் கட்டுப்பட்டார்கள்!
ஆனால், திருமணத்தை ஆடம்பரமின்றி நடத்த வேண்டும் என்று சமரன் கூறிவிட, அவனது விருப்பப்படியே பெரிதாக சொந்த பந்தங்கள் இன்றி கோவிலில் இருவரின் திருமணமும் நடைபெற்றது.
பூபாலன் கணித்தது போலவே, திருமணம் முடித்து ஆரபி, சமரனின் வீட்டிற்குச் சென்ற பிறகு, சந்திராவிடம் சில மாற்றங்கள் தென்பட்டன. அடுத்த ஆறு மாதங்களில் சகஜ நிலைக்குத் திரும்பியவர், வீட்டை பழையபடி கவனிக்க ஆரம்பித்தார்.
தன் அன்னையை இவ்வாறு பார்த்த பிறகே, சமரனுக்கு சற்று மன நிம்மதி கிடைத்தது. இருந்தாலும், அவனது மனதில் ஒரு நெருடல் இருப்பதை ஆரபி கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.
ஒருநாள் மாலை வேளையில் மொட்டை மாடியில் வெகு நேரமாக ஏதோ யோசனையிலேயே தன் கணவன் நின்றிருப்பதைப் பார்த்தவள், அவனது தோள் தொட்டு, “என்னாச்சு சமர்? இப்போ எல்லாம் அடிக்கடி ஏதோ யோசிச்சுட்டே இருக்கியே!” என்றாள்.
பெருமூச்சை வெளியிட்டவன், “வேறென்ன ஆரா! அப்பாவை பற்றி தான் யோசிச்சுட்டு இருந்தேன். எப்படி வாழந்த மனுஷன்?! கடைசியில கொலைகாரன்ங்கற பெயரோட நம்மளை விட்டுப் போயிட்டாரே!” என்று சொல்லி அவன் கண்கள் கலங்க, அவனை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள் ஆரபி.
சிறிது நேரம் அவனது முதுகை வருடிக் கொடுத்து, அவனை ஆறுதல்படுத்தியவள், “காம் டவுன் சமர்! அங்கிள் ஒரு நல்ல காரணத்துக்காகத் தான் இதையெல்லாம் செஞ்சாங்கன்னு நமக்குத் தெரியும் தானே! இந்த உலகம் ஆயிரம் பேசட்டும். ஆனா, நம்ம மனசுல, அங்கிள் எப்பவும் உயர்ந்த இடத்துல தான் இருப்பாங்க” என்றாள்.
அவனும் அதற்கு ஆமோதிப்பாகத் தலையசைக்க, “வா! கீழே போகலாம். அத்தை தனியா இருக்காங்க” என்றபடி, அவனை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.
ஆனால், என்ன தான் அவள் தன் கணவனுக்கு ஆறுதல் சொல்லியிருந்தாலும், ராஜேந்திரனை இந்த ஊர் ஒரு கொலைகாரனாகப் பார்ப்பது அவளுக்கும் வருத்தமாகத் தான் இருந்தது.
ராஜேந்திரனைப் பற்றிய உண்மைகளை இந்த உலகத்திற்குத் தெரியப்படுத்தியே ஆக வேண்டும் என்று நினைத்தவள், ஒரு முடிவிற்கு வந்தவளாகத் தான் பணிபுரியும் பத்திரிக்கையின் தலைமை தொகுப்பாசிரியர் மார்டினை சந்தித்துப் பேசினாள்.
“சொல்லுங்க ஆரபி. ஏதோ ஆர்டிகிள் பப்ளிஷ் பண்ணணும்னு சொன்னீங்களே! என்ன மாதிரி கன்டென்ட்?” என்று அவர் கேட்க,
“சார்! என்னுடைய மாமனார் விஷயம் பத்தி உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். அதைப் பற்றி டீட்டெயிலா இரு ஆர்ட்டிக்கிள் பப்ளிஷ் பண்ணணும்” என்றவளிடம்,
“இல்ல… புரியல. உங்க மாமனார் ஒரு கொலைகாரன் தானே? அவரை பற்றி என்ன எழுதப் போறீங்க?” என்று கேட்டார்.
அதைக் கேட்டு பற்களைக் கடித்தவள், “உண்மைதான் சார். அங்கிள் ஆறு பேரை கொலை செஞ்சது உண்மை தான். ஆனா, அதுக்குப் பின்னாடி ஒரு பெரிய காரணம் இருக்கு. அந்தக் காரணம் தெரிஞ்சா நிச்சயமா இந்த சொசைட்டிக்கு அங்கிள் மேல இருக்கற பார்வை மாறும்” என்றவள், தான் எழுத விரும்பும் விஷயத்தைப் பற்றி மேலோட்டமாக அவரிடம் கூறினாள்.
அனைத்தையும் கேட்டு முடித்து சில நொடிகள் அமைதி காத்தவர், “உங்க கன்டென்ட் சினிமாவுக்கு வேணும்னா நல்லா இருக்கும் ஆரபி. ஆனா, நம்ம பத்திரிக்கைக்கு இதெல்லாம் ஒத்து வராது. ஒரு கொலைகாரனை நல்லவனா காட்ட நினைக்குறீங்க. இதுக்கு நம்ம பாஸ் நிச்சயமா ஒத்துக்க மாட்டார். அதுமட்டும் இல்ல… இந்த ஆர்டிக்கிளை நாம பப்ளிஷ் பண்ணா, லீகலா நமக்கு நிறைய பிரச்சனைகள் வரும். அதனால, இந்த யோசனையை இதோட விட்டுடுங்க” என்றார்.
அவர் சொன்ன பதில் ஆரபிக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், தான் நினைத்ததை நடத்தி முடிக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவளிடம் ஆழமாக வேரூன்றிப் போனது.
அதன் பிறகு, தன் கணவனிடம் கலந்து பேசியவள், அவன் அளித்த தைரியத்தில், தனது வேலையை ராஜினாமா செய்தாள்.
அடுத்ததாக, ‘ஆராவின் குரல்’ என்கிற யூட்டியூப் சேனலைத் தொடங்கியவள், அதில் ‘ஏழாம் நிழல்’ என்னும் நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்ப ஆரம்பித்தாள்.
ராஜேந்திரனின் வழக்கை விசாரிக்கும் விதமாக ஆரம்பித்த அந்த நிகழ்ச்சியில், மெல்ல மெல்ல அந்த ஆறு பேரின் கொலைகளுக்கான காரணங்கள் ஒளிபரப்பப்பட, ஏழாம் நிழல் நிகழ்ச்சியும், ஆரபியின் யூட்டியூப் சேனலும் மக்களிடம் கவனம் பெற ஆரம்பித்தது.
மருத்துவர் கோபாலன் மற்றும் அவரது கூட்டாளிகளைப் பற்றி மித்ரா சேகரித்து வைத்திருந்த ஆதாரங்களை ஒவ்வொன்றாக அவள் வெளியிட ஆரம்பிக்கவும், சஞ்சீவின் குடும்பத்தாரிடம் இருந்தும் பரிதி மாணிக்கத்தின் கட்சிக்காரர்களிடம் இருந்தும் அவளுக்கு மிரட்டல்கள் வர ஆரம்பித்தன.
ஆனால், ஆரபி அதற்கெல்லாம் அஞ்சவே இல்லை. அவளுக்குத் துணையாக அவளது கணவன் இருக்கும் பொழுது, தான் எதற்கும் பயப்பட தேவையில்லை என்று நினைத்தவள், ரோஜாவனம் அறக்கட்டளை பற்றிய அனைத்து ஆதாரங்களையும் தனது சேனலில் காணொலியாக வெளியிட்டாள்.
இதைப் பார்த்துக் கொதித்துப் போன மக்கள், அந்த வீடியோவை அதிகமாகப் பகிர ஆரம்பிக்க, அது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சில சமூக இயக்கங்கள் ஒன்றிணைந்து ரோஜாவனம் அறக்கட்டளைக்கு எதிராகப் போராட்டங்களையும் நடத்தினர்.
இது அரசின் கவனத்திற்குச் செல்லவும், ரோஜாவனம் அறக்கட்டளையின் செயல்பாடுகள் மீது விரிவான விசரணை நடத்தப்பட வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
ஆரபி வெளியிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ரோஜாவனம் அறக்கட்டளைக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய, அடுத்த இரண்டு மாதங்களிலேயே அந்த அறக்கட்டளைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும், பூபாலன் உட்பட அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். தன் கணவர் உயிர் விட்டதற்கு கடைசியாக பலன் கிடைத்திருப்பதை எண்ணி சந்திராவும் சற்று நிம்மதியை உணர்ந்தார்.
ராஜேந்திரனின் வழக்கில் ஆரபி வெளியிட்ட கடைசி வீடியோவில் இவ்வாறு பேசியிருந்தாள்.
“கொலை செய்றது மாபெரும் குற்றம். இந்தக் கேஸ்ல ராஜேந்திரன் ஆறு கொலைகள் செய்தது பெரிய குற்றம் தான். ஆனா, அவர் அப்படி செஞ்சதுக்கான காரணம், இந்த சட்டமும் சமுதாயமும் அவருடைய குரலை கேட்காமல் போனது தான்னு இந்த நேரத்துல உங்க எல்லார்கிட்டேயும் சொல்லிக்க விரும்புறேன்”
“ராஜேந்திரன் போலீஸ் அதிகாரியாகி, நேர்மையா… சட்டப்படி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரணும்னு நினைச்சார். ஆனா, பாழாய் போன இந்தப் பண பலமும், பதவி பலமும் அவரோட வேலையை செய்ய அனுமதிக்கல. வேற வழியே இல்லாம, கடைசி ஆப்ஷனா தான் அவர் சட்டத்தை தன் கையிலேயே எடுத்துகிட்டாரு”
“அவர் செஞ்சது சரின்னு நான் சொல்ல வரல. ஆனா, தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடந்த இந்தப் போர்ல, எதிரிகளை எதிர்த்து போராடி தர்மத்தை நிலைநாட்டுறதுக்காக, துர்சக்திகளை அழிச்சது மட்டும் இல்லாம, நீதிக்காகத் தன் உயிரையே விட்டிருக்காரு. அவரை யாரும் பாராட்டலைன்னாலும் பரவாயில்ல… ஆனா, தயவு செஞ்சு, அவரையும் அவரோட குடும்பத்தையும் யாரும் அவதூறா மட்டும் பேசாதீங்க!”
என்று உருக்கமாகப் பேசியவள், இறுதியாக,
“கடைசியா ஒரு திருக்குறள் சொல்லி இந்த ஏழாம் நிழல் சீரீசை முடிக்கிறேன்…”
‘புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து’ (குறள் 277) என்றவள்,
“இந்தக் குறளோட பொருள் என்னன்னா… இந்த உலகத்துல, வெளியே நல்லவங்களாகத் தெரியுற பலரும், உள்ளத்து அளவுல ரொம்ப அரக்கத்தனமான, தீய எண்ணங்களை கொண்டவங்களா இருப்பாங்க. இது, இந்த வழக்குல இறந்து போன அந்த ஆறு பேருக்குமே பொருந்தும்!” என்று கூறி பெருமூச்சு விட்டபடி,
“இந்த சீரீசை என்னுடைய மாமா திரு.ராஜேந்திரன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவருடைய ஆத்மா சாந்தியடைய கடவுளை பிராத்திக்கிறேன்! நன்றி…”
என்று கூறி, அந்தக் காணொலியை நிறைவு செய்தாள்.
இப்பொழுது தன் கணவனுடன் சேர்ந்து ராஜேந்திரனின் நினைவிடத்தில் நின்றிருந்தவளுக்கு அனைத்தையும் நினைத்து மலைப்பாக இருந்தது. அந்த வேளையில், சமரனுக்கு அலைபேசியில் ஒரு அழைப்பு வரவும், அதை ஏற்று பேசினான்.
“ஆமாம்மா… அப்பாவோட சமாதி பக்கத்துல தான் நிக்கிறோம். நீங்க எப்படி இருக்கீங்க? அக்கா எப்படி இருக்கா?” என்று பேசியவன், ஃபோனை ஆரபியிடம் கொடுக்க, அவளும் சந்திராவிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
சமரனின் அக்கா இப்பொழுது நிறைமாத கர்பிணியாக இருப்பதால், தன் மகளை கவனித்துக் கொள்வதற்காக சந்திரா லண்டன் சென்றிருக்கிறார். ஆனால், தினமும் தவறாமல் தன் மகனுக்கும், மருமகளுக்கும் அழைத்துப் பேசிவிடுவார்.
“சரி! லேட் ஆச்சு… கிளம்பலாமா ஆரா?” என்று அவன் கேட்க,
“சமர்! உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள் ஆரபி.
“ம்ம்ம்… சொல்லு” என்றவனிடம்,
“உனக்கு எவ்ரிடே இந்தியா பத்திரிக்கை பற்றி தெரியும்ல?” என்று கேட்டவளிடம்,
“ஆமா! நீ கூட அடிக்கடி அந்தப் பத்திரிக்கையில வேலைக்கு சேரணும்னு சொல்லிட்டே இருப்பியே” என்றான் சமரன்.
“ம்ம்ம்… அந்தப் பத்திரிக்கையை ‘எவ்ரிடே இந்தியா தமிழ்’ அப்படிங்கற பேர்ல, நம்ம ஸ்டேட்லேயும் தொடங்கப் போறாங்களாம். அதுல எனக்கு வேலை கிடைச்சிருக்கு” என்று அவள் கூற,
“வாவ்… ஆரா. நிஜமாவா சொல்ற?” என்றவன், தன் மனைவியைத் தூக்கி ஒரு சுற்று சுற்றி கீழே இறக்கி விட்டான்.
“இதெல்லாம் எப்போ நடந்தது?” என்று கேட்டவனிடம்,
“இன்னைக்கு காலையில தான் மெயில் வந்தது சமர். இந்த இடத்தில் வச்சு தான் உன்கிட்ட அந்த விஷயத்தைப் பற்றி சொல்லணும்னு நினைச்சேன்” என்றாள்.
“நிஜமாவே நீ பெரிய ஆளா வருவ ஆரா. உனக்கு எப்பவுமே உன் புருஷன் சப்போர்டா இருப்பேன் ஓகேவா?” என்று அவன் கூற, அவளும் சிரித்தபடியே சரியென்று தலையசைத்தாள்.
பின்னர், சில நொடிகள் யோசித்தவள், “சமர்! உனக்கு மறுபடியும் டிபார்ட்மென்ட்ல சேரணும்னு ஆசை இருக்கா? வேணும்னா நம்ம கமிஷ்னர் சார்கிட்ட பேசிப் பார்க்கலாம்” என்று கேட்க,
விரக்தியாகச் சிரித்தவன், “இல்ல ஆரா! எப்போ, நேர்மையா வேலை செஞ்ச எங்க அப்பாவை இந்த டிபார்ட்மென்ட் மதிக்கலையோ, அந்த டிபார்மென்ட்ல நானும் வேலை செய்யுறதில்லைன்னு முடிவு செஞ்சுட்டேன். டாக்டர் கோபாலன் பத்தி அப்பா விசாரிக்கணும்னு சொன்னப்போ, அவங்க மேலதிகாரிகள் மட்டும் அனுமதி கொடுத்திருந்தாங்கன்னா, இன்னைக்கு அப்பா உயிரோட நம்ம கூட இருந்திருப்பாங்க” என்றான்.
அவனது பேச்சில் தெரிந்த வேதனையை உணர்ந்தவள், “உன் மனநிலை புரியாம நான் அப்படி கேட்டிருக்க கூடாது சமர். ஐ ஆம் சாரி!” என்றாள்.
“நோ… நோ… நீ கேட்டதுல எந்தத் தப்பும் இல்ல ஆரா. நீ மட்டும் அப்பாவை பத்தி அந்த வீடியோஸ் போடாம இருந்திருந்தா, சஞ்சீவோட அடுத்த தலைமுறை, அவங்க பண்ணிட்டிருந்தக் குற்றங்களை மறுபடியும் செய்ய ஆரம்பிச்சிருக்கும். உனக்கு நான் தான் தேங்க்ஸ் சொல்லணும் ஆரா!” என்றவன், அவளது நெற்றியில் முத்தம் பதித்தான்.
பின்னர், அவளது கரம் பற்றியவன், அங்கிருந்து நடந்து சென்று தன் மனைவியுடன் சேர்ந்துக் காரில் ஏறி அங்கிருந்துக் கிளம்பிச் சென்றான்.
காரில் அமர்ந்து ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தபடியே பயணித்துக் கொண்டிருந்த ஆரபிக்கு, ராஜேந்திரனின் ஆன்மா எப்பொழுதும் தங்களுக்கு அரணாய் இருந்து கொண்டிருப்பதாகவே தோன்றியது.
ஏழாம் நிழல் கதையின் வாயிலாக இத்தனை நாட்களாக, உங்கள் அனைவருடனும் பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி. திரில்லர் பிரிவில் முதல் முறையாக ஒரு கதையை எழுதி இருக்கிறேன். எனக்கு இது ரொம்பவே சவாலான கதைக்களமாக இருந்தது. கதையைப் படித்துவிட்டு ஓரிரு வார்த்தைகள் என்னுடன் பகிர்ந்து கொண்டால், மிக்க மகிழ்ச்சியடைவேன்.
அடுத்ததாக, நல்லதொரு வாய்ப்பளித்த ஜோதி சிஸ்டருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து கதையைப் படித்துக் கருத்து பகிர்ந்த வாசகத் தோழமைகளுக்கும், சைலன்ட் ரீடர்சுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
மீண்டும் சந்திப்போம்...
பிரியமுடன்,
சௌஜன்யா...

***சுபம்***
வணக்கம் தோழமைகளே!