Soujanya
Active member
- Joined
- Jun 1, 2024
- Messages
- 174
- Reaction score
- 45
- Points
- 43
நிழல் – 16
சமரனும், அந்தக் கறுப்பு உருவமும் எதிர் எதிரே நின்றிருந்தனர். கறுப்பு நிற மாஸ்கிற்குள் மறைந்திருப்பவன் யார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் அவனுக்கு இருந்தாலும், அந்த உருவத்திற்குப் பின்னால், தரையில் விழுந்து கிடந்த எம்.எல்.ஏ பரிதி மாணிக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் அவனுக்கு அந்த நேரத்தில் மிகவும் முக்கியமானதாகத் தோன்றியது.
“அவரை என்ன பண்ண?” என்று சமரன் கேட்க, அவனுக்கு எதிரில் நின்றவனோ தனது கழுத்திற்கு முன்னால் கை வைத்து, முடிந்தது என்று செய்கை செய்தான்.
“டேய்! யாருடா நீ? எதுக்காக இப்படி அநியாயமா எல்லாரையும் கொலை செஞ்சுட்டு இருக்க?” என்று அவன் கேட்க, தெரியவில்லை என்று செய்கை செய்தான் அவன்.
அதைக் கண்டு புருவம் சுருக்கிய சமரன், தனக்கெதிரே நின்றவனை நெருங்கிச் சென்றான். அவன் தன்னை நோக்கி வரவும், பின்னால் நகர்ந்து சென்றது அந்த உருவம்.
“நீ அடுத்ததா யாரையாவது கொலை செய்யுறதுக்குள்ள, உன்னை மொத்தமா முடிச்சுடறேன். இதனால, என் வேலை போனாக் கூடப் பரவாயில்ல!” என்றவன், தனது துப்பாக்கியின் விசையை அழுத்தச் செல்லவும், கண் இமைக்கும் நேரத்தில் தனது காலை உயர்த்தி அந்தத் துப்பாக்கியை சமரனின் கையில் இருந்து தட்டி விட்டான் அவன்.
சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவனது கையில் இருந்தத் துப்பாக்கி சமரனிடமிருந்து நான்கடிகள் தள்ளிச் சென்று தரையில் விழுந்தது. துப்பாக்கி கீழே விழுந்ததில் இருந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நின்றிருந்தவன், அடுத்ததாக தன்னிடம் வந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
சமரனின் தோளைப் பற்றி அவனைத் திருப்பித் தன் புறமாக இழுத்தவன், அவனைத் தூக்கி ஒரு சுழற்று சுழற்றி கீழே தரையில் போட்டான். கீழே விழுந்த வலியில் சமரன் அலறித் துடிக்க, வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேற நினைத்தான் அந்தக் கொலைகாரன்.
சட்டென அவன் எழுந்து, அங்கிருந்து தப்பிச் செல்ல நினைத்தவனின் கரம் பற்றி இழுக்க, அவனது கையுறை சமரனின் கையோடு வந்தது. கையுறை கழற்றப்பட்டதும் அந்தக் கொலைகாரனின் வலது கரம் அந்த அறையின் மங்கலான விளக்கொளியில் தெரிய, சமரன் புருவம் சுருக்கினான்.
ஆனால், அவன் சுதாரிப்பதற்குள் தனது கரத்தால் மீண்டும் அவனது முதுகில் ஓங்கி அடித்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றான் அந்தக் கொலைகாரன். சற்று முன்னர் தனக்கு நிகழ்ந்த தாக்குதலை சுதாரித்து, எழுந்து நிற்கவே சமரனுக்கு கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் ஆகின. ஒருவாறு தன் பலத்தைக் கூட்டி எழுந்தவன், அந்தக் கையுறையை தனது பேன்ட் பாக்கெட்டிற்குள் பத்திரப்படுத்திவிட்டு, மெல்ல அந்த அறையில் இருந்து வெளியே வந்தான்.
வேகமாக முதல் தளத்தின் எல்லைக்குச் சென்று அவன் கீழே பார்த்த பொழுது, கொலைகாரன் அந்தத் தொழிற்சாலையின் காம்பவுன்ட் சுவரை எகிறிக் குதித்து அங்கிருந்து தப்பிச் செல்வது தெரிந்தது.
உடனே, அவனைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டும் என்கிற உந்துதல் எழுந்தாலும், பரிதி மாணிக்கத்தின் நிலை என்னவானது என்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு இருந்தது.
வேகமாக ஓடிச் சென்றவன், அவர் விழுந்து கிடந்த அறைக்குச் சென்றான். அவரருகே சென்றுப் பார்த்தவன், “ச்ச…” என்று சொல்லி நெற்றியில் கை வைத்தான்.
ஏற்கனவே பரிதி மாணிக்கம் இறந்து விட்டார் என்பதற்கு அடையாளமாக, அவரது வாயில் நுரை தள்ளி, வாயோரம் பழுப்பேறிப் போய், முகம் கறுக்க ஆரம்பித்தது.
உடனே தனது அலைபேசியில் இருந்து குணாளனுக்கு அழைத்தவன், “குணா! உடனே ஃபேக்டரியில் இருக்கற முதல் தளத்துக்கு வாங்க” என்று அவன் கூற, அவரும் விரைவாக அங்கு வந்து சேர்ந்தார்.
தரையில் இறந்து கிடந்த எம்.எல்.ஏவைக் கண்ட குணாளன், “ஐயோ என்ன சார் ஆச்சு?” என்று கேட்க,
“எம்.எல்.ஏவை யாரோ கொலை பண்ணிட்டாங்க. கில்லர் ரொம்ப தூரம் போயிருக்க வாய்ப்பில்ல. நீங்க உடனே இந்த விஷயத்தை கமிஷனர் ஆஃபிசுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுங்க” என்றவன், நொடியும் தாமதிக்காமல், கொலைகாரனைத் தேடி ஓடினான்.
வெளியே சென்று காரில் ஏறியவன், வண்டியைக் கிளப்பி அந்தப் பகுதி முழுவதும் கொலைகாரனைத் தேடினான். அந்த ஏரியாவில் குறுகலாக நிறைய தெருக்கள் இருக்க, சமரனால் கொலைகாரனை கண்டுபிடிக்க முடியவில்லை.
கையெட்டும் தூரத்தில் இருந்தவனை கண நேரத்தில் தவற விட்ட தனது இயலாமையை எண்ணி, தன்னையே நொந்து கொண்டான் சமரன்.
மறுநாள் காலை…
‘இன்றைய முக்கியச் செய்திகள்…
எம்.எல்.ஏ பரிதி மாணிக்கம் அவரது ஐஸ் ஃபேக்டரியில் வைத்துக் கொலை!
நேற்றிரவு அவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற நபரை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரம்.
பரிதி மாணிக்கத்தின் மரணத்தைத் தொடர்ந்து எதிர்கட்சியினர் மாநிலம் தழுவிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறை உறங்குகிறதா என்று எதிர்கட்சித் தலைவர் காட்டம்!’
என்கிற செய்தி ஒளிபரப்பாக, அந்தச் செய்தியை அதிர்ச்சியுடன் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரபி.
அவளருகே காவேரியும் அமர்ந்திருக்க, “ச்ச… இந்த நாட்டுல எம்.எல்.ஏவுக்கே பாதுகாப்பில்ல. என்ன தான் தப்பான ஆளா இருந்தாலும், பார்க்கவே பாவமா இருக்கு” என்றார்.
ஆரபியோ தனது அலைபேசியை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தாள். உடனே சமரனின் அலைபேசிக்கு அவள் அழைக்க, இரண்டாவது ரிங்கிலேயே அழைப்பை ஏற்றான் அவன்.
“சொல்லு ஆரா!” என்றவனிடம்,
“இப்போ தான் டிவியில் நியூஸ் பார்த்தேன் சமர்! நாம நினைச்ச மாதிரியே கில்லர் அந்த எம்.எல்.ஏவை கொலை செஞ்சுட்டானே!” என்றாள் அவள்.
“ம்ம்ம்… அந்தக் கொலை நடந்த சமயத்துல நான் ஸ்பாட்டுல தான் இருந்தேன்” என்று அவன் கூற, அதிர்ச்சியில் வாயில் கை வைத்தாள் ஆரபி.
“என்ன சொல்ற சமர்? நீ கொலைகாரனைப் பார்த்தியா? அது யாருன்னு தெரிஞ்சுதா?” என்று கேட்டவளிடம்,
“அவன் முகத்தை மாஸ்க் போட்டு மறைச்சிருந்தான். அவனைப் பிடிக்கப் போன சமயத்துல, அவன் என்னையே அட்டாக் பண்ணிட்டு அங்கிருந்து தப்பிச்சு போயிட்டான்” என்றான்.
“ஐயோ! உனக்கு எதுவும் ஆகலையே” என்று பதறியவளிடம்,
“எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல ஆரா! ஆனா, கொலைகாரனை நெருங்கியும் அவனைப் பிடிக்க முடியலையேன்னு தான் வருத்தமா இருக்கு” என்றான்.
“சரி விடு! உன்னால முடிஞ்சதை நீ செஞ்சுட்ட. எது நடக்கணும்னு இருக்கோ அதுதானே நடக்கும்” என்றாள்.
“ஓகே ஆரா! நான் இப்போ கமிஷனர் ஆஃபிசில் இருக்கேன். உன்கிட்ட அப்புறமா பேசுறேன்” என்றவன் அழைப்பை துண்டித்தான்.
அப்பொழுது அவனைத் தேடி வந்த ஒரு காவல்துறை அதிகாரி, “கமிஷனர் சார் உங்களை உள்ளே கூப்பிடுறாங்க” என்று கூற, பெருமூச்சுவிட்டபடி அவரது அறைக்குச் சென்றான்.
காவல்துறை ஆணையருக்கு சல்யூட் அடித்து அவன் நிற்க, சமரனை கோபமாகப் பார்த்து நின்றார் செல்வேந்திரன்.
“எப்படி சரியா எம்.எல்.ஏவோட கொலை நடந்த சமயம் ஸ்பாட்டுல இருந்தீங்க சமரன்?” என்று அவர் கேட்க,
“சார் அது…” என்று தயங்கினான்.
“ஆன்சர் மீ!” என்று கூறி அவர் பல்லைக் கடிக்க, அவன் முன்தினம் நிகழ்ந்த அனைத்தையும் அவரிடம் மறைக்காமல் கூறினான்.
“சோ… கொலைகாரன் அடுத்து எம்.எல்.ஏவைத் தான் கொலை செய்யப் போறான் அப்படிங்கறது உங்களுக்கு முன்னாடியே தெரியும். ஆம் ஐ ரைட்?” என்று கேட்டவரிடம்,
“ம்ம்ம்… ஒரு கெஸ்ஸிங் இருந்தது சார்” என்றான்.
“ஏன், எனக்கு இன்ஃபார்ம் பண்ணல?” என்று கத்தியவரிடம்,
“வேணும்னே எதுவும் பண்ணல சார். போன முறை ஆதாரங்களோட நான் வந்தப்போ, ஏதாவது சாலிடான எவிடென்ஸ் கொண்டு வாங்கன்னு நீங்க சொன்னதால, இந்த விஷயத்தையும் அப்படி எடுத்துக்குவீங்களோன்னு நினைச்சேன் சார்” என்றான் அவன்.
“மை காட்! அவர் ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ சமரன். அவரோட விஷயத்துல டிபார்ட்மென்ட் மெத்தனமா இருக்கும்னு நீங்க எப்படி நினைக்கலாம்?!” என்று செல்வேந்திரன் கேட்க, அவனிடம் பதில் இல்லை.
“ஐ ஆம் சாரி சார். இந்த தவறுக்கான முழு பொறுப்பையும் நானே ஏத்துக்குறேன்” என்றபடி, தலைகுனிந்து நின்றவனிடம்,
“அஃப்கோர்ஸ் நீங்க தான் பொறுப்பேத்துக்கணும். உங்களுடைய மெத்தனத்தால தான் இன்னைக்கு எம்.எல்.ஏவோட உயிர் போயிருக்கு. வெளியே ரிப்போர்டர்ஸ் கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம், என்னால பதில் சொல்ல முடியல. ஸ்டேட் முழுக்க எதிர்கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்காங்க. சட்ட ஒழுங்கு சீர் கெட்டுட்டு இருக்கு” என்றார் கோபமாக.
பின்பு சில நொடிகள் மௌனம் காத்தவர், “உங்களை இரண்டு மாசத்துக்கு சஸ்பென்ட் பண்ணுறேன். இனிமே இந்தக் கேசில் நீங்க தலையிட வேண்டாம்” என்று கமிஷனர் கூற, சமரன் அவரிடம் மறுப்பாக எதுவும் கூறவில்லை.
அவர் அளித்த தண்டனையை தலை வணங்கி ஏற்றுக் கொண்டு அவன் அங்கிருந்து கிளம்ப எத்தனித்த வேளையில், “கொலைகாரனை பார்த்த சாட்சிங்கறதால, விசாரணைக்கு கோ ஆப்பரேட் பண்ணுங்க” என்று அவர் கூற,
“ஓகே சார்!” என்று பதிலளித்தவன், அவருக்கு சல்யூட் அடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
காலையில் இருந்து பலமுறை முயன்றும் சமரன் தனது அலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்றதும், அவனைத் தேடி வீட்டிற்குச் சென்றாள் ஆரபி.
ஹாலில் சந்திரா அமர்ந்திருக்க, “அத்தை சமர் வீட்டுக்கு வந்தானா?” என்று கேட்டாள்.
“ஆமாம்மா… அவன் ரூம்ல தான் இருக்கான். என்னன்னு தெரியல அவன் முகமே சரியில்ல. உங்க இரண்டு பேருக்கும் நடுவில ஏதாவது சண்டையா?” என்று சந்திரா கேட்க,
“அப்படி எதுவும் இல்ல அத்தை” என்று பதிலளித்தாள் அவள்.
“சரிம்மா! மேல அவன் ரூம்ல தான் இருக்கான். போய் பாரு” என்று அவர் கூற, ஆரபியும் தாமதிக்காமல் மேலே இருக்கும் அவனது அறைக்குச் சென்றாள்.
கட்டிலில் அமர்ந்தபடி அவன் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, “சமர்!” என்றபடியே உள்ளே சென்றவள், அவனுக்கு அருகில் அமர்ந்தாள்.
“என்னாச்சு சமர்? ஏன் ஒரு மாதிரி இருக்க?!” என்று அவள் கேட்க, அவனிடம் மௌனம்.
அவனது தோள் தொட்டவள், “கமிஷனர் ஆஃபிசுக்குப் போனதா சொன்னியே! அங்கே ஏதாவது பிரச்சனையா?” என்று ஆரபி கேட்க, சட்டென திரும்பி அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
அவனது அணைப்பின் இறுக்கம், சமரனின் மனநிலையை அவளுக்குத் தெளிவாக எடுத்துரைக்க, சில நிமிடங்கள் மௌனமாக அவனை அணைத்தபடியே அமர்ந்திருந்தாள் ஆரபி.
சிறிது நேரத்தில் அவனே அவளை விடுவிக்க, சமரனின் முகம் நோக்கியவள், அவனது கண்கள் கலங்கியிருப்பதைக் கண்டாள்.
அதைக் கண்டு அதிர்ந்தவளோ, “சமர்! ஏன் இவ்வளவு இமோஷனல் ஆகுற? ரிலாக்ஸ்!” என்று கூறி அவனது கரம் பற்றி, அவனது முதுகைத் தடவிக் கொடுத்தாள்.
பின்னர், அவனுக்கு நீரை அருந்தக் கொடுத்தவள், அவன் கொஞ்சம் நிதானமடைந்ததும், “நடந்த எந்த விஷயத்துக்கும் நீ காரணம் இல்ல. புரிஞ்சுதா?” என்று கூறினாள்.
“இல்ல ஆரா! நான் அந்தக் கொலையை தடுத்து நிறுத்தியிருக்கணும். எம்.எல்.ஏ அந்த இடத்துக்குத் தனியா போறாருன்னு தெரிஞ்சதும், உடனே நான் கமிஷனர் சாருக்கு விஷயத்தை தெரியப்படுத்தி இருக்கணும்” என்றான்.
“சமர்! இந்தக் கேஸ்ல உன்னால முடிஞ்சது எல்லாமே நீ செஞ்சுட்ட. இதுக்கு மேல நடக்குற விஷயங்கள் எதுவும் உன் கையில் இல்ல” என்றவளிடம்,
“கமிஷனர் என்னை சஸ்பென்ட் பண்ணிட்டார் ஆரா!” என்றான்.
அந்தச் செய்தி அவளுக்கு அதிர்ச்சியளிக்க, அதற்கு என்ன பதில் சொல்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை.
“எனக்கு புரியுது சமர்! இந்தப் போலீஸ் வேலையை நீ எவ்வளவு பெருசா மதிக்கிறேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. பட் ப்ளீஸ்… இப்போ நடக்கற எதையும் உன் மனசுக்கு எடுத்துட்டு போகாதே. இந்த சஸ்பென்ஷன் பிரியடை, நீ பட்ட கஷ்டங்களில் இருந்து மீண்டு வர்றதுக்கான நாட்களா நினைச்சுக்கோ” என்றாள் ஆரபி.
அதைக் கேட்டவனின் முகமும் சற்று தெளிவடைந்திருக்க, சரியென்று அவளிடம் தலையசைத்தான்.
“இனிமேலும் இந்தக் கேஸ் பத்தி நாம சிந்திக்க வேண்டாம். இனிமே போலீசே எல்லாத்தையும் பார்த்துக்கட்டும்” என்று ஆரபி கூற,
“இல்ல ஆரா… நான் தொடங்கின விஷயத்தை முடிக்காம விட மாட்டேன். நிச்சயமா, நடந்தக் கொலைகளுக்கான காரணங்களையும், கொலைகாரனையும் கண்டுபிடிப்பேன்” என்றான்.
கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏ பரிதி மாணிக்கத்திற்கு உடற்கூராய்வு நடந்துக் கொண்டிருக்க, மாநிலம் முழுவதும் அவரது கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவரது வீட்டிற்கு வெளியே செய்தி சேகரிப்பதற்காக நின்றிருந்தாள் ஆரபி. அங்கே கூட்டம் அதிகமாக இருக்க, போலீசார் கூட்டத்தை சமாளிக்க போராடிக் கொண்டிருந்தனர்.
மாலையில் உடற்கூராய்வு முடிந்து உடல் அவரது வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அலை அலையாக வந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்து சற்றே மிரட்சியுடன் நின்றிருந்தாள் ஆரபி
அவரது உடல் வீட்டிற்குள் எடுத்துச் செல்லப்பட, முதல் ஆளாக பரிதி மாணிக்கத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தான், சஞ்சீவனி மருத்துவ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ்.
அவனை அங்கே பார்த்ததில் ஆரபிக்கு ஒன்றும் ஆச்சர்யமாக இல்லை. கொலை செய்யப்பட்ட அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கிறது என்பதை அறிந்ததில் இருந்து, ஆச்சர்யங்கள் அவளுக்குப் பழகிப் போன ஒன்றாக இருந்தது.
ஆனால், மித்ராவைக் கொன்றவன் அனைவர் முன்னிலையிலும் சாதாரணமாக நடமாடுகிறான் என்பது தான் அவளுக்கு கோபத்தை வரவழைத்தது.
அஞ்சலி செலுத்திவிட்டு சஞ்சீவ் வெளியே வரவும், பத்திரிக்கையாளர்கள் அவனை சூழ்ந்துக் கொண்டு கேள்வி எழுப்பினர்.
“சார்! எம்.எல்.ஏ கொலை செய்யப்பட்டிருக்கார். இது பற்றி உங்க கருத்து என்னெ?” என்று ஒரு பத்திரிக்கை நிருபர் கேட்க,
“இது அநியாயம்… அக்கிரமம். ஒரு சிட்டிங்க் எம்.எல்.ஏவுக்கே நம்ம நாட்டுல பாதுகாப்பு இல்லைன்னா, சாதாரண மக்களோட உயிருக்கு இங்கே என்ன உத்தரவாதம் இருக்கு?” என்றான் சஞ்சீவ்.
“சார்! உங்க அப்பா… அதாவது டாக்டர் கோபாலன் இறப்புல சந்தேகம் இருக்குன்னு சொல்லி போலீஸ்ல புகார் கொடுத்த நீங்க, நேத்து அந்தப் புகாரை வாபஸ் வாங்கினதா போலீஸ் தரப்பில் இருந்து சொல்லப்படுது. இதுக்கு என்ன காரணம் சார்?” என்று ஒரு கேள்வி வரவும், கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரின் முகத்தை கூர்ந்து பார்த்தான் சஞ்சீவ்.
அவனுக்கு எதிரே துளைக்கும் பார்வையுடன் மைக்கை நீட்டியபடி கேள்விக் கணைகளை வீசிவிட்டு ஆரபி நின்றிருக்க, கோபத்தில் பற்களைக் கடித்தவன், அவளுக்கு பதிலளிக்காமல் அங்கிருந்துக் கிளம்பிச் சென்று விட்டான்.
‘டாக்டர் கோபாலன் மரணத்துல சந்தேகம் இருக்குன்னு கொடுத்தப் புகாரை இந்த சஞ்சீவ் எதுக்காக வாபஸ் வாங்கணும்?’ என்று நினைத்தவள்,
‘ரோஜாவனம் அறக்கட்டளைக்கு சம்பந்தப்பட்ட எல்லாருமே ஒருத்தர் பின் ஒருத்தரா கொலை செய்யபட்டதால, தனக்கும் ஆபத்து வரலாம்னு அந்த சஞ்சீவ் பயந்திருக்கலாம். கோபாலனோட கொலைக்கான காரணம் தெரிய வந்தா, தானும் மாட்டிப்போம்னு நினைச்சிருப்பான்’ என்று எண்ணினாள்.
நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் நிச்சயமாக ஏதோ ஒரு மன்னிக்க முடியாத குற்றத்தை செய்திருக்கிறார்கள் என்றே அவளுக்குத் தோன்றியது.
பின்னர், அங்கிருந்துக் கிளம்பிய ஆரபி, அந்த ஏரியாவிற்கு அருகிலேயே இருந்த தன் தந்தையின் மரக் குடோனுக்குச் சென்றாள். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் பழமையான மரங்களைக் கூட சேமித்து வைக்கும் அளவிலான பெரிய மரக் குடோன் அது.
அவள் உள்ளே சென்றதும் அங்கு நின்றிருந்த, குடோனின் மேற்பார்வையாளர் சண்முகம் அவளிடம் வந்தார்.
“அடடே! பாப்பா என்ன இந்தப் பக்கம்?” என்று அவர் கேட்க,
“பக்கத்துல ஒரு வேலையா வந்தேன் அங்கிள். அதான் அப்படியே அப்பாவையும் பார்த்துட்டு போலாம்னு நம்ம குடோனுக்கு வந்தேன்” என்றாள் ஆரபி.
“ஓஹ்… சரி சரி!” என்றவர்,
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சார் ஒரு வேலை விஷயமா வெளியே கிளம்பிப் போனாங்க. நான் வேணும்னா ஃபோன் பண்ணி சாரை வரச் சொல்லட்டுமா?” என்று கேட்க,
“ஐயோ! வேண்டாம் அங்கிள். அப்பா வேலையைப் பார்க்கட்டும். நான் வீட்டுக்கு போய் பார்த்துக்குறேன்” என்றாள் அவள்.
“சரி பாப்பா… ரொம்ப நாள் கழிச்சு நம்ம குடோனுக்கு வந்திருக்கீங்க. உட்காருங்க. நான் கடைக்குப் போய் ஜூஸ் வாங்கிட்டு வர்றேன்” என்ற சண்முகத்திடம்,
“இல்ல வேண்டாம் அங்கிள். நான் வீட்டுக்குக் கிளம்புறேன்” என்றாள் அவள்.
“அதெல்லாம் முடியாது. எங்க குட்டி எஜமானி நீங்க. உங்களை எப்படி கவனிக்காம அனுப்புறது?” என்றவர், பழச்சாறு வாங்கி வருவதற்காக அங்கிருந்துக் கிளம்பிச் சென்றார்.
ஆரபியும் சிரித்தபடியே உள்ளே சென்று, அந்த மரக் குடோனைப் பார்வையிட்டாள். அவள் சென்ற முறை வந்த போது இருந்ததை விட, இப்பொழுது அங்கே பெரியப் பெரிய மரங்களை அவளது தந்தை வாங்கி வைத்திருந்தார்.
அவள் குடோனை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், பழச்சாறு வாங்கி வந்த சண்முகம் அவளிடம் அதைக் கொடுத்து குடிக்கச் சொல்ல, ஜூசை ஒரு மிடறு பருகியவள், “அங்கிள்! முன்னாடி பார்த்ததை விட இப்போ நிறைய மரங்கள் இருக்கே” என்று கேட்டாள்.
“சமீப காலமா சார் பிஸ்னசை டெவலப் பண்ணுறதுக்காக அதிகமா உழைக்கிறார் மா. பேங்க்ல கூட லோன் போட்டு வட மாநிலத்துல இருந்து மரங்களை வாங்கி அடுக்கியிருக்கார்” என்று சண்முகம் கூற, தன் தந்தையை நினைத்து உள்ளுக்குள் பெருமைப்பட்டாள் ஆரபி.
“இதோ இந்த மாஹாகனி மரம் கிட்டத்தட்ட இருபது வருஷ பழைய மரம்” என்றவர்,
அடுத்ததாக இருந்த மரத்தைச் சுட்டிக் காட்டி, “இது மலேசியன் வேங்கை. இதுக்கு மார்க்கெட்ல நல்ல டிமான்ட்மா” என்றார்.
அதை எல்லாம் கவனமாகக் கேட்டவள், “குடோன் முழுக்க நல்ல காஸ்ட்லியான மரங்களா அடுக்கி வச்சிருக்கீங்களே. ஒருவேளை கரையான் அரிச்சு இதெல்லாம் வீணாப் போயிடாதா?” என்று அவள் கேட்க, அவளை அங்கிருந்த ஒரு சிறிய அறைக்குள் அழைத்துச் சென்றார் சண்முகம்.
“மரத்தை பூச்சி, கரையான் எதுவும் அரிக்காம இருக்கறதுக்காக இந்த ரசாயனப் பூச்சுக்களை பயன்படுத்துறோம்மா” என்று அங்கே அடுக்கி வைத்திருந்த சில ரசாயனங்களை அவர் காண்பிக்க, அருகில் சென்று அனைத்தையும் பார்வையிட்டாள் ஆரபி.
“இது போரேட் மிக்ஸ், இது காப்பர் நாப்தனேட், இது மெர்குரி குளோரைட்…” என்று அவர் வரிசையாகச் சொல்லிக் கொண்டே போக, ஆரபி கடைசியாக அவர் சொன்னப் பெயரைக் கேட்டு அதிர்ந்து விழித்தாள்.
“என்ன… இந்தக் கெமிக்கலோட பெயர் என்ன சொன்னீங்க?” என்று கேட்க,
“மெகுரி குளோரைட் மா. இது… ஏதோ மார்க்கெட்ல வந்திருக்கற புது ப்ரிசர்வேட்டிவாம். போன மாசம் தான் சார் இதை வாங்கிட்டு வந்தார்” என்றார் அவர்.
அதற்கு மேல் அவர் சொன்னது எதுவும் அவளது செவிகளை எட்டவே இல்லை. கடந்த ஒரு மாதக் காலமாக நடந்தக் கொலை சம்பவங்களுக்குக் காரணமான அந்த மெர்குரி குளோரைட் எப்படி தன் தந்தையின் மரக் குடோனுக்குள் வந்தது என்பதை நினைத்து அவள் குழம்பிப் போய் நின்றிருந்தாள்.
“இ…து இந்த மெர்குரி குளோரைட் ரொம்ப ஆபத்தான கெமிக்கல்னு கேள்விப்பட்டிருக்கேன். இதை எதுக்காக அப்பா பயன்படுத்துறாங்க?” என்று ஆரபி கேட்க,
“யாரோ சொன்னங்கன்னு சார் வாங்கிட்டு வந்தாங்க. இதை நாங்க அப்படியே பயன்படுத்துறதில்ல பாப்பா. இன்னும் சில ரசாயனங்கள் கூட சேர்த்து தான் பயன்படுத்துறோம்” என்றார் சண்முகம்.
அவர் சொன்னதைக் கேட்க கேட்க, ஆரபிக்கு தலையே சுற்றுவது போல இருந்தது.
“சரி அங்கிள்! நேரமாச்சு. நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு கேட்டை நோக்கி நடந்து சென்றவளுள் ஆயிரம் எண்ணங்கள்.
‘அந்த மெர்குரி குளோரைட்… அதை எதுக்காக அப்பா திடீர்னு குடோன்ல வாங்கி வைக்கணும்? ஒருவேளை… ஒருவேளை அப்பா தான் அந்த கொலைகளை எல்லாம் செஞ்சதா? இல்லை… இருக்காது… அப்படி இருக்க வாய்ப்பே இல்ல!’ என்றவளுக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது.
குடோனில் இருந்து வெளியே வந்தவள், வேகமாக தனது அலைபேசியில் இருந்து சமரனுக்கு அழைத்தாள்.
மறுபுறம் அழைப்பை ஏற்றவனிடம், “சமர்! சமர்…” என்று அவளால் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் அவனிடம் பேச முடியவில்லை.
“ஆரா! என்னாச்சு? ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு?” என்று அவன் கேட்க,
“சமர்… இப்போ தான் அப்பாவோட குடோனுக்குப் போயிட்டு வந்தேன்” என்றவள், அங்கே அவர் மெர்குரி குளோரைடை பயன்படுத்தி வருவதைப் பற்றியும் அவனிடம் விளக்கமாகக் கூறினாள்.
“எதுக்காக சம்பந்தமே இல்லாம, ஒரு மாசத்துக்கு முன்னாடி அப்பா அந்த மெர்குரி குளோரைடை குடோன்ல வாங்கி வைக்கணும்? இத்தனை வருஷம் இல்லாம இப்போ எதுக்காக அந்தக் கெமிக்கலை அவர் பயன்படுத்தணும்?’ என்றவள்,
“எனக்கு… ரொம்ப பயமா இருக்கு சமர்! ஒருவேளை அப்பா… அப்பா தான் நடந்த எல்லா கொலைகளுக்கும் காரணமா?!” என்று அழுத குரலில் பேச,
“ஆரா! ஆரா ரிலாக்ஸ்… நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளு” என்று அவளை சற்று அமைதிப்படுத்தினான் சமரன்.
அதன் பிறகே சற்று ஆசுவாசப்பட்டவள், “ம்ம்ம்… சொல்லு சமர்!” என்று கூற,
“நாம தேடிட்டு இருக்கற அந்தக் கில்லர் உன்னுடைய அப்பா இல்ல… அது… என் அப்பா மிஸ்டர். ராஜேந்திரன்!” என்றான் அவன்.
அதைக் கேட்ட ஆரபி தன் காதுகளையே நம்ப முடியாமல் அதிர்ந்து போய் நின்றிருந்தாள்.
நிழல் தொடரும்…