Soujanya
Active member
- Joined
- Jun 1, 2024
- Messages
- 174
- Reaction score
- 45
- Points
- 43
நிழல் – 14
மறுநாள் காலையில், சமரன் பணிபுரியும் காவல் நிலையம் மிகவும் பரபரப்பாக இருந்தது.
அன்று, அங்கே புதிய ஆய்வாளர் பொறுப்பேற்க இருப்பதால், அனைத்துக் காவலர்களும் பரபரப்பாக காவல் நிலையத்தை தயார் செய்துக் கொண்டிருந்தனர்.
சரியாகக் காலை பதினோரு மணியளவில், அந்தக் காவல் நிலையத்திற்கு முன்பாக, காரில் வந்து இறங்கினார் ஆய்வாளர் சகாயராஜ். அவருக்கு முன்னால் சல்யூட் அடித்து நின்ற சமரன், அவருக்கு ஒரு பூங்கொத்தைக் கொடுத்து வரவேற்றான்.
“வெல்கம் சார்!” என்று சொல்லி அவனை அழைத்துச் சென்றவன், காவல் நிலையத்திற்குள் வரிசையாக நின்ற காவலர்களை ஒவ்வொருவராக அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
அனைவரும் அடித்த சல்யூட்டிற்கு தலையசைத்தபடி அவர்களைக் கடந்து சென்றவர், “ஸ்டேஷன்ல எனக்கு டிசிப்ளின் ரொம்ப முக்கியம். எல்லாரும் கரெக்டான நேரத்துக்கு டியூட்டிக்கு வரணும். ஸ்டேஷனுக்குள்ள வந்த பிறகு, பெர்சனல் விஷயங்களை இங்கே எடுத்துட்டு வரக் கூடாது. என்ன புரிஞ்சுதா?” என்று கூற,
அனைவரும், “யெஸ் சார்!” என்று ஒன்றாக பதிலளித்தனர்.
பின்னர் காவல் நிலையத்தை சுற்றிப் பார்த்தவர், “சமரன்! என் ரூமுக்கு வாங்க” என்றபடி, ஆய்வாளருக்கான அறைக்குச் சென்றார்.
அவரைப் பின் தொடர்ந்து சென்றவன் மேஜைக்கு முன்னால் நின்றிருக்க, தனது இருக்கையில் அமர்ந்த சகாயராஜ், “இந்த ஏரியா எப்படி?” என்று கேட்டார்.
“பெருசா பிரச்சனை வர்ற ஏரியா இல்ல சார். இங்கே இருக்கறது பெரும்பாலும் மிடில் க்ளாஸ், அப்பர் மிடில் க்ளாஸ் மக்கள் தான். ஒருநாளைக்கு நாலு கேஸ் வந்தாலே ஆச்சர்யம் சார்” என்றவனிடம்,
“மாமூல் எப்படி?” என்று இருக்கையில் சாய்ந்தபடியே அவர் கேட்க,
“சார்!” என்று விழித்தான் அவன்.
“மாசத்துக்கு ஒரு வாட்டியா? இல்லா வாரா வாரம் மாமூல் வசூல் பண்ணுவீங்களா? இது கொஞ்சம் பணம் புழங்குற ஏரியா தானே. இங்கே இருக்கற கடைகள்ல மாமூல் வசூலிச்சா மாசத்துக்கு நிறைய துட்டு பார்க்கலாமேய்யா” என்றார் சகாயராஜ்.
அதைக் கேட்டு பல்லைக் கடித்த சமரன், முடிந்த அளவிற்குத் தனது பொறுமையை இழுத்துப் பிடித்தபடி, “நான் இங்கே எஸ்.ஐ ஆஹ் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து, எந்த இன்ஸ்பெக்டரும் மாமூல் வாங்கி நான் பார்த்ததில்ல சார்” என்றான்.
அவனை சில நொடிகள் ஆராய்ச்சியாகப் பார்த்தவர், “ஏன்! இங்கே இருக்கற எல்லாரும் அம்புட்டு நல்லவங்களோ?!” என்றபடி,
“இதுவரைக்கும் எப்படின்னு எனக்குத் தெரியாது. ஆனா, இனிமே இந்த ஏரியா கடைக்காரங்க, சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கறவன், ரோட்டோரம் தட்டுக்கடை வச்சிருக்கறவன்னு எல்லார்கிட்ட இருந்தும் எனக்கு மாமூல் வந்தாகணும். என்ன புரியுதா?” என்று கூற, சமரனும் சரியென்று தலையசைத்தான்.
அதன் பிறகு, சிறிது நேரம் அங்கே மௌனம் நிலவ, “அந்தப் பொண்ணு… பெயர் என்ன?” என்று கூறி சகயராஜ் யோசிக்க,
“எந்தப் பொண்ணு சார்?” என்று புரியாமல் கேட்டான் சமரன்.
“அதான்யா… கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு எலும்பு கூடு கிடைச்சுதே. அந்தப் பத்திரிக்கை நிருபர். அதோட பெயர் தான்” என்று அவர் கூற,
“மித்ரா சார்!” என்றான்.
“ஆங்… மித்ரா. அந்தப் பொண்ணோட கேஸ் ஃபைலை எடுத்துட்டு வாங்க” என்று அவர் கூற, தனது அறைக்குச் சென்று அவர் கேட்ட கோப்பினை எடுத்து வந்தான் அவன்.
கோப்பை சமரன் அவரிடம் கொடுக்க, அதை வாங்கிப் படித்துப் பார்த்தவர், “இனிமே இந்தக் கேசை நானே பார்த்துக்குறேன்” என்றார்.
“ஆனா, சார். கடந்த ஒரு மாசமா நான் இந்தக் கேஸ்ல வொர்க் பண்ணிட்டு இருக்கேன்” என்று அவன் கூற,
“இருந்துட்டு போகட்டும். அதான் இப்போ நான் வந்துட்டேன்ல. இனிமே நானே அந்த மித்ராவோட கேசைப் பார்த்துக்குறேன்” என்றவர்,
“இந்தக் கேஸ்ல எவிட்டென்ஸ் ஏதாவது கிடைச்சுதா? என்று கேட்டார்.
அதைக் கேட்ட சமரன் தயங்கி நிற்க, “என்னய்யா… எவிடென்ஸ் ஏதாவது இருக்கா இல்லையா?” என்று அழுத்திக் கேட்டார் அவர்.
“இருக்கு சார்!” என்று அதற்கு அவன் பதிலளிக்க,
“போய் எடுத்துட்டு வாங்க” என்றார்.
சமரனும் வேறு வழியின்றி, பக்கத்து அறையில் இருந்த இரும்பு பீரோவில் பத்திரமாக இருந்த, அந்த ஏழாம் எண் வடிவிலான மோதிம் இருந்த நெகிழிப் பையை அவரிடம் எடுத்து வந்துக் கொடுத்தான்.
அதை வாங்கிப் பார்த்தவர், “ம்ம்ம்… மோதிரம் நல்லா வெயிட்டா தான் இருக்கு” என்றபடி,
“சரி! இனிமே இந்தக் கேசை நானே பார்த்துக்குறேன். நீங்க போய் வேலையைப் பாருங்க” என்றார்.
சமரனும் தன்னுள் எழுந்தக் கோபத்தை அடக்கியபடி அந்த அறையில் இருந்து வெளியே வந்து, தன்னுடைய தனியறைக்குச் சென்றான்.
அவனைத் தேடி வந்த தலைமைக் காவலர் முருகன், “சார்! இன்ஸ்பெக்டர் ரொம்ப ஸ்ரிக்டா தெரியுறாருல்ல” என்று கூற,
“அதெல்லாம் ஒண்ணுமில்ல ஏட்டய்யா! வந்தும் வராததுமா ஏரியாவுல மாமூல் வசூலிக்க சொல்றாரு. ரொம்ப பணத்தாசை புடிச்ச போலீசா இருப்பாரு போல இருக்கு. நம்ம பாடு இனிமே திண்டாட்டம் தான்” என்றான்.
“கவலைப்படாதீங்க சார்! உங்களுக்கு எப்பவும் நம்ம டீம் சப்போர்ட்டா இருப்போம்” என்றார் முருகன்.
அன்று மாலை டியூட்டி முடிந்து, சீக்கிரமாகவே வீட்டிற்குக் கிளம்பினான் சமரன்.
சகாயராஜை தேடிச் சென்றவன், “சார்! நான் கிளம்புறேன்” என்று கூற,
“அதுக்குள்ளேயா?” என்றார் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தபடி.
“முக்கியமான வேலை எதுவும் இல்ல சார்! அதான் கிளம்புறேன்” என்றவனிடம்,
“இன்னைக்கு நைட் ரவுண்ட்ஸ் நான் தான் போகப் போறேன். நீங்களும் கிளம்பிட்டா, ஸ்டேஷனை யாரு பார்த்துப்பாங்க?” என்று கேட்டார் சகாயராஜ்.
“நைட் டியூட்டிக்கு எஸ்.எஸ்.ஐயும் (Special Sub Inspector), நைட் டியூட்டி பார்க்குற போலீசும் இருக்காங்களே சார்” என்றவனிடம்,
“அதெல்லாம் சரியா வராது. இன்னைக்கு நைட் டியூட்டி நீங்களே பாருங்க. வேணும்னா நாளைக்கு ஒரு நாள் லீவ் எடுத்துக்கோங்க” என்று சகாயராஜ் கூற, சமரன் புருவங்கள் சுருக்கினான்.
வந்த முதல் நாளில், வேண்டுமென்றே சகாயராஜ் தனது பொறுமையை சோதித்துப் பார்ப்பது போல அவனுக்குத் தோன்றியது.
முடிந்தவரை தனது பொறுமையை இழுத்துப் பிடித்தவன், “சரி சார்! இன்னைக்கு நைட் டியூட்டி நானே பார்க்கிறேன். ஆனா, எனக்கொரு இரண்டு மணிநேரம் மட்டும் பெர்மிஷன் வேணும்” என்றான்.
சகாயராஜூம் அதற்கு சம்மதிக்க, காவல் நிலையத்தில் இருந்துக் கிளம்பியவன் நேராக ஆரபியை சந்திக்கச் சென்றான்.
அவளது அலுவலகத்தில் இருந்து ஆரபியை அழைத்துக் கொண்டு அவளை வீட்டில் அவன் ட்ராப் செய்ய, “சமர்! நேத்து சொன்ன மாதிரி அந்தப் பிளானை இன்னைக்கு நைட் எக்சிகியூட் பண்ணிடலாமா?” என்று கேட்டாள் அவள்.
“இல்ல ஆரா! இன்னைக்கு என்னை நைட் டியூட்டி பார்க்கச் சொல்லி இன்ஸ்பெக்டர் சொல்லியிருக்கார். அதனால, அந்தப் பிளானை கேன்சல் பண்ணிடலாம்” என்று அவன் கூற,
“என்ன சமர் இப்படி சொல்லிட்ட! நான் எவ்வளவு எதிர்பார்ப்போட இருந்தேன் தெரியுமா?” என்றவளின் கரம் பற்றியவன்,
“ஆரா! இந்தக் கேசை இனிமே நானே பார்த்துக்குறேன். நீ ஸ்ட்ரெஸ் எடுத்துக்காம நல்லா தூங்கி ரெஸ்ட் எடு. சரியா” என்றான்.
அவளும் சரியென்று யோசனையுடனே தலையசைத்துவிட்டு வீட்டிற்குள் திரும்பிச் சென்றாள்.
அன்றிரவு மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருக்க, உடைமாற்றி தயாராகி ஹாலுக்கு வந்தாள் ஆரபி. அப்பொழுது சமையலறையில் தண்ணீர் எடுக்க வந்த காவேரி மகளைக் கண்டு குழப்பமடைந்தார்.
“இந்நேரத்துக்கு எங்கே கிளம்பிட்ட ஆரா?” என்று அவர் கேட்க,
“அம்மா… அது… இன்னைக்கு நைட் எனக்கு ஆஃபிசில் ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதான் கிளம்பிட்டு இருக்கேன்” என்று அவள் கூற,
“இந்த ராத்திரி நேரத்துல அப்படி என்ன வேலை இருக்கு உனக்கு?” என்று அவர் புரியாமல் கேட்க,
“ஒரு முக்கியமான ஆர்டிளை சரி பார்த்து நைட் பிரின்டிங்குக்கு அனுப்பணும்மா. ரொம்ப அவசரமான வேலை” என்றாள்.
“சரி! ஒரு நிமிஷம் இரு. அப்பாவை வரச் சொல்லுறேன். அவரே உன்னை ஆஃபிசில் ட்ராப் பண்ணிடுவார். இந்த நேரத்தில் நீ தனியா போக வேண்டாம்” என்று அவர் கூற,
‘ஐயோ… அம்மா காரியத்தையே கெடுத்துருவாங்க போல இருக்கே!’ என்று நினைத்தவள்,
“அ…அம்மா… நான் தனியா போகலை. சமர் வர்றேன்னு சொல்லியிருக்கான். அவனே என்னை ஆஃபிசில் ட்ராப் பண்ணிடுவான்” என்றாள்.
காவேரிக்கும் அவளது பதில் திருப்தியளிக்க, “சரி! இரண்டு பேரும் பத்திரமா போயிட்டு வாங்க” என்றவர், உறங்கச் சென்று விட்டார்.
அவர் சென்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டவள், மெதுவாக வீட்டில் இருந்து வெளியே வந்தாள். தனது இருச்சகர வாகனத்தை உருட்டிக் கொண்டு வெளியே எடுத்து வந்தவள், கேட்டை பூட்டிவிட்டு வண்டியைக் கிளப்பி அங்கிருந்துக் கிளம்பினாள்.
சுமார் நாற்பது நிமிடங்கள் பயணம் செய்தவள், அரவம் இல்லாத சாலையின் ஓரத்தில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, அந்தப் பகுதியின் சிறிய தெரு ஒன்றிற்குள் நுழைந்தாள்.
தொப்பி அணிந்து, முகத்தை மாஸ்கால் மறைத்திருந்தவள், யாராவது தன்னைப் பார்க்கிறார்களா என்று, திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்து சென்றாள்.
இரண்டு குறுக்கு சந்துகளைக் கடந்து வந்தவள், அங்கிருந்த ஒரு வீட்டிற்கு முன்பாக நின்றாள். அவள் நின்றது, மூன்றாவதாக கொலை செய்யப்பட்ட அந்த வயதான தம்பதியரின் வீட்டிற்கு முன்னால் தான்.
‘சரியான வீட்டுக்கு தான் வந்திருகோமா?’ என்று யோசித்தவள், தனது அலைபேசியில் இருந்த வீட்டின் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள்.
முதல் நாள் சமரனும் அவளும் இங்கு சேர்ந்து வருவதாகத் திட்டமிட்டிருந்த பொழுது, அவ்வீட்டின் முகவரியையும், புகைப்படத்தையும் அவளுக்கு அனுப்பி வைத்திருந்தான்.
அதை வைத்து தான், இப்பொழுது ஆரபி அந்த இடத்திற்கு வந்திருந்தாள்!
‘நாம தனியா வந்தது தெரிஞ்சா சமர் திட்டித் தீர்த்துடுவான். சரி! எதுவா இருந்தாலும் நாளைக்குப் பார்த்துக்கலாம். ஆனா, வந்த வேலையை மட்டும் முடிக்காமல் போகக் கூடாது’ என்று நினைத்தவள், வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே சென்றாள்.
அந்த வீட்டில், கொலை வழக்கிற்கு உதவியாக ஏதாவது ஆதாரங்கள் கிடைக்குமா என்பதை தேடிப் பார்ப்பதற்காகத் தான் சமரனும், ஆரபியும் அங்கே ஒன்றாக வருவதற்கு திட்டமிட்டிருந்தார்கள்.
ஆனால், சமரன் வரவில்லை என்றாலும், அந்த வேலையை முடிக்க வேண்டும் என்கிற உறுதியுடன் தான் இப்பொழுது ஆரபி அங்கே நின்றிருந்தாள்!
தோள்களில் மாட்டியிருந்தப் பையில் இருந்து கையுறைகளை எடுத்து அணிந்து கொண்டவள், வீட்டைச் சுற்றி வந்தாள். தலைவாசலும், பின் வாசலும் பூட்டியிருக்க, எப்படி அந்த வீட்டிற்குள் செல்வது என்று யோசித்தவள், அங்கிருந்த மாடிப்படி வழியாக ஏறி மொட்டை மாடிக்குச் சென்றாள்.
மொட்டை மாடியில் ஒரு கதவு பூட்டில்லாமல் மூடியிருப்பதைக் கண்டதும் சத்தம் வராமல் அதைத் திறந்தாள் ஆரபி.
அந்தக் கதவு, வீட்டிற்குள் செல்வதற்கு வழியாக இருக்கலாம் என்று அவள் யூகித்தது முற்றிலும் சரியாக இருந்தது. பையில் இருந்த டார்ச் லைட்டை வெளியே எடுத்தவள், அதன் வெளிச்சத்தின் உதவியோடு உள்ளே சென்றாள்.
அந்தக் கதவின் வழியாக கீழே இறங்கியப் படிக்கட்டு, அவளை அவ்வீட்டின் தரைத் தளத்திற்கு அழைத்துச் சென்றது.
அந்த நேரத்தில் தனது திறமையை எண்ணி பெருமை கொண்டவள், டார்ச் வெளிச்சத்தின் உதவியுடன் வீடு முழுவதும் தனக்கு உபயோகமாக ஏதாவது ஆதாரங்கள் கிடைக்கிறதா என்று தேடிப் பார்க்க ஆரம்பித்தாள்.
சுவற்றில் சில புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்க, அதில் அந்த வயதான தம்பதியரின் அறுபதாம் கல்யாணத்திற்கு யாரோ பரிசாகக் கொடுத்த வாழ்த்து மடல் ஒன்றும் இருந்தது.
அந்த வாழ்த்து மடலை கையில் எடுத்தவள், அதில் படிந்திருந்த தூசியைத் துடைத்தாள்.
அதில்,
‘இன்று போல் என்றும் அன்போடும், அரவணைப்போடும் இணைபிரியாத வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்!’ என்கிற எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருக்க, அதற்கு கீழே அந்தத் தம்பதியரின் பெயரும் இருந்தது.
‘ராமச்சந்திரன் – குளோரியா’ என்ற பெயரை பார்த்ததும்,
‘ஓஹ்… இரண்டு பேரும் வேற வேற மதத்தைச் சேர்ந்தவங்களா?! லவ் மேரேஜ் பண்ணியிருப்பாங்க போல இருக்கு!’ என்று நினைத்துக் கொண்டாள்.
அதில் பெரிதாக எதுவும் இல்லை என்று நினைத்து, அந்த வாழ்த்து மடலை அவள் கீழே வைக்கப் போன நேரத்தில், அந்த மடலின் ஓரமாக இருந்தப் பெயர் ஒன்று அவளது கவனத்தை ஈர்த்தது.
வாழ்த்துரை எழுதி முடித்துவிட்டு கீழே, ‘இவண் – உங்கள் அன்பு நண்பன் தங்கராஜ்’ என்று எழுதப்பட்டிருக்க, அவளுள் சட்டென மின்னல் வெட்டியது.
‘இது… இது ஒருவேளை இவங்களுக்கு முன்னாடி இறந்து போன அந்தத் தங்கராஜா இருக்குமோ?’ என்று நினைத்தவள், தனது அலைபேசியில் அந்த வாழ்த்து மடலை புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.
அதன் பிறகு, அங்கிருந்த அலமாரியில் வேறு ஏதாவது ஆதாரங்கள் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தாள் ஆரபி.
டார்ச்சை கையில் பிடித்துக் கொண்டு, அது தந்த வெளிச்சத்தின் உதவியோடு அவள் தேடிக் கொண்டிருந்த வேளையில், திடீரென அவளுக்குப் பக்கவாட்டில் இருந்த ஜன்னலுக்குப் பின்னால் ஏதோ ஒன்று அசைவது போலத் தோன்றியது.
சட்டென பயத்துடன் ஆரபி திரும்பிப் பார்த்த வேளையில், ஜன்னலுக்கு வெளியே நிலா வெளிச்சத்தில் மரம் அசையும் நிழல் தெரிய, அதன் பிறகே நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
அவள் தேடிய அலமாரியில் எதுவும் கிடைக்காமல் போகவும், பக்கத்து அறைக்குச் சென்று தேட ஆரம்பித்தாள்.
அங்கிருந்த பீரோ ஒன்று பூட்டப்படாமல் திறந்தே இருக்க, அதிலிருந்த ரகசிய அறையில் தேட ஆரம்பித்தாள் ஆரபி. அந்த அறையில் சில கோப்புகள் இருக்கவும், அதை ஒவ்வொன்றாகத் திறந்துப் பார்த்தாள்.
அதிகமாக அதில் இருந்தது ராமச்சந்திரனின் மருத்துவக் கோப்புகள் தான்.
‘இதுல எதுவும் உருப்படியா இருக்கற மாதிரி தெரியல!’ என்று நினைத்தபடி, அவள் அந்தக் கோப்புகளை மீண்டும் அதன் இடத்திலேயே வைக்கச் சென்ற பொழுது, அதிலிருந்து ஒரு புத்தகம் நழுவி கீழே விழுந்தது.
மற்ற கோப்புகளை பீரோவிற்குள் வைத்தவள், கீழே விழுந்தப் புத்தகத்தை கையில் எடுத்துப் பார்த்தாள்.
அதன் முன்பக்க அட்டையில், ‘ரோஜாவனம் அறக்கட்டளை’ என்று அச்சிடப்பட்டிருந்தது.
அதை அவள் திறந்து பார்க்க எண்ணிய வேளையில், வெளியே நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்க, வேகமாக அந்தப் புத்தகத்தை மூடியவள், அதை தனது தோள் பைக்குள் பத்திரப்படுத்தினாள்.
‘இதுக்கு மேல இந்த வீட்டுக்குள்ள இருக்கறது ஆபத்து!’ என்று நினைத்தவள், அரவம் எழுப்பாமல், மெதுவாக வந்த வழியே அந்த வீட்டை விட்டு வெளியேறினாள்.
நிழல் தொடரும்…