ஏதேன் தோட்டத்து முல்லை டீசர் | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஏதேன் தோட்டத்து முல்லை டீசர்

New updates

LATEST

ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
844
Reaction score
456
Points
63
டீசர்



மதிய நேரம் பள்ளியில் உணவு இடைவேளை மணி ஒலித்தது. ஆங்காங்கே மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வட்டமாக அமர்ந்து, மதிய உணவை பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மட்டும் தனியாக அமர்ந்து, பள்ளி நுழைவு வாயிலை வெறித்துக் கொண்டிருந்தான். அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருத்தி அவன் தனியாக அமர்ந்து இருப்பதையும், அவன் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து அவன் அருகில் சென்றாள்.

“ஏய் ஏன் நீ சாப்பிடாம இருக்க?” என்று கேட்டாள், அவன் காதில் வாங்காது வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அங்கு இன்னொரு மாணவி வந்து,

“ஏய் பூஜ்ஜி… அந்த பையனோட அம்மா இறந்து ரெண்டு நாள் ஆச்சு, இன்னைக்குத்தான் ஸ்கூல் வந்திருக்கான். ரொம்ப முரடன், வா போயிடலாம்” என்று புஜ்ஜியின் கையைப் பிடித்து இழுத்தாள்.

“ச்சீ! விடு.. அவனே பாவம் சாப்பிடமா உட்கார்ந்து இருக்கான்… அவன போய் முரடன்னு சொல்ற.”

“உனக்கு தெரியாது புஜ்ஜி, அவன் இதுவரைக்கும் எட்டு ஸ்கூல் மாறி வந்திருக்கான. எல்லா ஸ்கூல்லயும் ஏதாவது பிரச்சனை பண்ணுவானாம்.”

“சும்மா பயமுறுத்தாத போ” என அவள் தோழியை விரட்டிவிட்டு, அவன் அருகில் அமர்ந்து அவன்‌‌‌ எடுத்து வந்த சாப்பாடு பையை திறந்து முகர்ந்து பார்த்து.

“அட… வாசனை தூக்குதே! இந்த வாசனையில் எனக்கு திரும்ப பசி எடுக்குது.” என்று கூறியபடி டிஃபன் பாக்ஸ்சை திறந்து, கையில் ஒரு பிடி எடுத்து அவன் வாயருகே நீட்டினாள்.

அவன் திரும்பி அவளைப் பார்க்க அவன் அம்மாவின் முகம் தெரிந்தது. அவள் ஊட்டிய சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அந்த மாணவன். சட்டேன உணவு இடைவேளை நேரம் முடிந்து மணி ஒலிக்க, அவன் சுயநினைவு திரும்பி அவளைப் பார்த்தான்.

“சரி எனக்கு கிளாசுக்கு டைம் ஆச்சு நான் போறேன் மீதிய நீயே சாப்பிடு சரியா, சாப்பாடு வீணாக்க கூடாது சரியா” என்று கூறிவிட்டு அவள் சென்றுவிட, அவன் சாப்பிட மனம் இல்லாமல் அப்படியே எழுந்து சென்றுவிடான்.

அவன் இப்படி ஜடமாக இருந்தாலும் அவளின் கவனிப்பு அவனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. அந்த பள்ளியில் அவளைத் தவிர வேறு யாரிடமும் அதிகம் பேசாமல், அவளுடன் மட்டும் அதிக நட்புடன் பாசமாக இருந்தான்.

சிலநாட்கள் இப்படியே நகர, தாயின் பிரிவை மறந்து சகஜமாக வாழ்ந்து வந்தவன், ஒருநாள் கார் ஓட்டும் ஆசையில் தன் சித்தப்பா மகனுடன் ஓட்டிச் சென்றனர். எதிரில் ஒருவர் வர பிரேக் பிடிக்காமல் அவர் மீது மோதியது.

“நோஓஓஓஓ….!” என்ற பெரும் சத்தத்தோடு, ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரத்தின், பெரிய அடுக்கு மாடி குடியிருப்பின் படுக்கையறையில் முகமெல்லாம் வியர்வை வழிய நெஞ்சம் படபடக்க எழுந்து அமர்ந்தான்.

“சர், உங்க ஃபியான்சி வந்திருக்காங்க” என்று ஒருவன் பணிவுடன் வந்து அழைத்தான்,

“அகஸ்டீன். நேத்து டாக்டர் வரலயா. எனக்கு இந்த கனவு ரொம்ப தொல்லையா இருக்கு அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிக்கச் சொன்னேனே என்னாச்சு.” என மிரட்டலாகக் கேட்டான்.

“சர், நீங்க நேத்து அதிகமா லிக்கர் எடுத்துகிட்டதால, டாக்டர கூப்பிடல சாரி சர்! நீங்க சொன்னத் தகவலை வச்சி தேடச் சொல்லி இருக்கேன். சர் கடைசியா நீங்க ருத்ரபுரியில் படிச்ச ஸ்கூல்ல விசாரிக்க போய் இருக்காங்க, நாளைக்கு தகவல் தெரிஞ்சிடும்.”

“ஓகே அகஸ்டின்… நான் குளிச்சிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு அவன் குளியல் அறை நுழைந்து, ஷவரைத் திறந்தான். தண்ணீர் தலையில் கொட்ட கண்கள் மூடி நிம்மதியா உணர்ந்தான். ஆனாலும் அந்த கனவில் வந்த சிறு வயது பெண் முகம் மட்டும் அவன் நினைவடுக்குகளை தொல்லை செய்துகொண்டு தான் இருந்தது.

யார் அவள்? இந்த கார்ப்பரேட் அரக்கன் கனவின் மர்மம் என்ன? அவன் தேடும் பெண் கிடைப்பாளா? பழியா, பாசமா? காதலா, மோதலா?

காத்திருந்து தெரிந்துக் கொள்வோம்..

ஏதேன் தோட்டத்து முல்லை
 
Last edited:

⚜️Nisha Rajan🗡️

Active member
Staff member
Joined
Mar 8, 2026
Messages
234
Reaction score
171
Points
43
ப்பா... சூப்பர் ஆ இருக்கு தோழி... ஆனால் அதில் இருக்கும் சிறு எழுத்துப் பிழைகளை கவனித்தால் நிச்சயம் செம மாஸ் மற்றும் படிக்க சீராக இருக்கும் . ஐ லவ் இட் திஸ் ஸ்டோரி பிளாட்❤️❤️❤️❤️❤️❤️❤️
 

ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
844
Reaction score
456
Points
63
ப்பா... சூப்பர் ஆ இருக்கு தோழி... ஆனால் அதில் இருக்கும் சிறு எழுத்துப் பிழைகளை கவனித்தால் நிச்சயம் செம மாஸ் மற்றும் படிக்க சீராக இருக்கும் . ஐ லவ் இட் திஸ் ஸ்டோரி பிளாட்❤️❤️❤️❤️❤️❤️❤️
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🥰🥰🙏
 

MRS BEENA LOGANATHAN

Well-known member
Staff member
Joined
May 14, 2024
Messages
1,035
Reaction score
710
Points
113
உன்னை என் அம்மா
உருவில் பார்த்தது
உள்ளத்தில் நிறைந்து
உறுத்துது நிதம் எனை
உன் உருவம் கனவில்
உன்னை நான் தேடி வருவேன் புஜ்ஜி.......
 

ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
844
Reaction score
456
Points
63
உன்னை என் அம்மா
உருவில் பார்த்தது
உள்ளத்தில் நிறைந்து
உறுத்துது நிதம் எனை
உன் உருவம் கனவில்
உன்னை நான் தேடி வருவேன் புஜ்ஜி.......

கவிகுயில் அக்கா 🥰🥰 கவித் தாரகையே மிக்க நன்றி 🙏😍😍
 
Joined
Jun 24, 2026
Messages
36
Reaction score
29
Points
18
மிக அருமையாக உள்ளது. நாவலை படிக்க ஆர்வமாக உள்ளேன். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்♥️
 

ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
844
Reaction score
456
Points
63
மிக அருமையாக உள்ளது. நாவலை படிக்க ஆர்வமாக உள்ளேன். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்♥️
மிக்க நன்றி 🙏🥰💐
 

senduran

Active member
Joined
Jan 17, 2026
Messages
104
Reaction score
122
Points
43
டீசர்



மதிய நேரம் பள்ளியில் உணவு இடைவேளை மணி ஒலித்தது. ஆங்காங்கே மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வட்டமாக அமர்ந்து, மதிய உணவை பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மட்டும் தனியாக அமர்ந்து, பள்ளி நுழைவு வாயிலை வெறித்துக் கொண்டிருந்தான். அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருத்தி அவன் தனியாக அமர்ந்து இருப்பதையும், அவன் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்து அவன் அருகில் சென்றாள்.

“ஏய் ஏன் நீ சாப்பிடாம இருக்க?” என்று கேட்டாள், அவன் காதில் வாங்காது வாசலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அங்கு இன்னொரு மாணவி வந்து,

“ஏய் பூஜ்ஜி… அந்த பையனோட அம்மா இறந்து ரெண்டு நாள் ஆச்சு, இன்னைக்குத்தான் ஸ்கூல் வந்திருக்கான். ரொம்ப முரடன், வா போயிடலாம்” என்று புஜ்ஜியின் கையைப் பிடித்து இழுத்தாள்.

“ச்சீ! விடு.. அவனே பாவம் சாப்பிடமா உட்கார்ந்து இருக்கான்… அவன போய் முரடன்னு சொல்ற.”

“உனக்கு தெரியாது புஜ்ஜி, அவன் இதுவரைக்கும் எட்டு ஸ்கூல் மாறி வந்திருக்கான. எல்லா ஸ்கூல்லயும் ஏதாவது பிரச்சனை பண்ணுவானாம்.”

“சும்மா பயமுறுத்தாத போ” என அவள் தோழியை விரட்டிவிட்டு, அவன் அருகில் அமர்ந்து அவன்‌‌‌ எடுத்து வந்த சாப்பாடு பையை திறந்து முகர்ந்து பார்த்து.

“அட… வாசனை தூக்குதே! இந்த வாசனையில் எனக்கு திரும்ப பசி எடுக்குது.” என்று கூறியபடி டிஃபன் பாக்ஸ்சை திறந்து, கையில் ஒரு பிடி எடுத்து அவன் வாயருகே நீட்டினாள்.

அவன் திரும்பி அவளைப் பார்க்க அவன் அம்மாவின் முகம் தெரிந்தது. அவள் ஊட்டிய சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அந்த மாணவன். சட்டேன உணவு இடைவேளை நேரம் முடிந்து மணி ஒலிக்க, அவன் சுயநினைவு திரும்பி அவளைப் பார்த்தான்.

“சரி எனக்கு கிளாசுக்கு டைம் ஆச்சு நான் போறேன் மீதிய நீயே சாப்பிடு சரியா, சாப்பாடு வீணாக்க கூடாது சரியா” என்று கூறிவிட்டு அவள் சென்றுவிட, அவன் சாப்பிட மனம் இல்லாமல் அப்படியே எழுந்து சென்றுவிடான்.

அவன் இப்படி ஜடமாக இருந்தாலும் அவளின் கவனிப்பு அவனை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. அந்த பள்ளியில் அவளைத் தவிர வேறு யாரிடமும் அதிகம் பேசாமல், அவளுடன் மட்டும் அதிக நட்புடன் பாசமாக இருந்தான்.

சிலநாட்கள் இப்படியே நகர, தாயின் பிரிவை மறந்து சகஜமாக வாழ்ந்து வந்தவன், ஒருநாள் கார் ஓட்டும் ஆசையில் தன் சித்தப்பா மகனுடன் ஓட்டிச் சென்றனர். எதிரில் ஒருவர் வர பிரேக் பிடிக்காமல் அவர் மீது மோதியது.

“நோஓஓஓஓ….!” என்ற பெரும் சத்தத்தோடு, ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரத்தின், பெரிய அடுக்கு மாடி குடியிருப்பின் படுக்கையறையில் முகமெல்லாம் வியர்வை வழிய நெஞ்சம் படபடக்க எழுந்து அமர்ந்தான்.

“சர், உங்க ஃபியான்சி வந்திருக்காங்க” என்று ஒருவன் பணிவுடன் வந்து அழைத்தான்,

“அகஸ்டீன். நேத்து டாக்டர் வரலயா. எனக்கு இந்த கனவு ரொம்ப தொல்லையா இருக்கு அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிக்கச் சொன்னேனே என்னாச்சு.” என மிரட்டலாகக் கேட்டான்.

“சர், நீங்க நேத்து அதிகமா லிக்கர் எடுத்துகிட்டதால, டாக்டர கூப்பிடல சாரி சர்! நீங்க சொன்னத் தகவலை வச்சி தேடச் சொல்லி இருக்கேன். சர் கடைசியா நீங்க ருத்ரபுரியில் படிச்ச ஸ்கூல்ல விசாரிக்க போய் இருக்காங்க, நாளைக்கு தகவல் தெரிஞ்சிடும்.”

“ஓகே அகஸ்டின்… நான் குளிச்சிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு அவன் குளியல் அறை நுழைந்து, ஷவரைத் திறந்தான். தண்ணீர் தலையில் கொட்ட கண்கள் மூடி நிம்மதியா உணர்ந்தான். ஆனாலும் அந்த கனவில் வந்த சிறு வயது பெண் முகம் மட்டும் அவன் நினைவடுக்குகளை தொல்லை செய்துகொண்டு தான் இருந்தது.

யார் அவள்? இந்த கார்ப்பரேட் அரக்கன் கனவின் மர்மம் என்ன? அவன் தேடும் பெண் கிடைப்பாளா? பழியா, பாசமா? காதலா, மோதலா?

காத்திருந்து தெரிந்துக் கொள்வோம்..

ஏதேன் தோட்டத்து முல்லை
பதிவு சின்னதா இருக்குன்னு நினைச்சா டீசர் என்று போட்டுட்டீங்க சரி ஓகே செம்மையா இருக்கு...
 

kumarsaranya

Well-known member
Joined
Oct 3, 2024
Messages
1,474
Reaction score
927
Points
113
அவனை போல நாங்களும் கனவுக்கு காரணம் யார் அந்த பொண்ணுன்னு தெரிய காத்திருக்கோம் சிஸ்?
 

ramya ammu crazy kirukkal

Moderator
Staff member
Joined
Mar 22, 2025
Messages
844
Reaction score
456
Points
63
அவனை போல நாங்களும் கனவுக்கு காரணம் யார் அந்த பொண்ணுன்னு தெரிய காத்திருக்கோம் சிஸ்?
மிக்க நன்றி சிஸ் 🥰
 
Top Bottom