என் காதல் அரக்கனோ? அழகனோ?அத்தியாயம் 26 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் காதல் அரக்கனோ? அழகனோ?அத்தியாயம் 26

New updates

LATEST

பராசக்தி

Active member
Staff member
Joined
Oct 28, 2024
Messages
123
Reaction score
94
Points
43
திவ்யாவை அழைத்து கொண்டு வீரவர்மன் கோயிலுக்கு சென்றபோது அங்கு அவனுடைய அப்பா தேவேந்திரன் சிவகாமி சரளா லோகி சங்கர் ராஜா செந்தில் எல்லோரும் வந்திருந்தார்கள்.

சிவகாமி அவளை அழைத்து போய் இன்னும் கொஞ்சம் பூ வைத்து விட்டாள்.

வீரவர்மன் சாமி கும்பிட்டு கொண்டிருக்க திவ்யாவை அழைத்து வந்து அவள் பக்கத்தில் நிற்க வைத்தாள் சிவகாமி.

பூசாரி வீரவர்மனிடம் மாலையை கொடுக்க அவன் திவ்யா கழுத்தில் போட்டுவிட்டான். திவ்யாவிடம் ஒரு மாலை கொடுக்க அவள் கைகளால் அவன் கழுத்தில் போட்டு கொண்டான்.

அவள் அவளுடைய கழுத்தில் தாலியை தேடினாள்.

வீரவர்மன் கைகளை பிரித்து பார்த்தாள். தாலி எங்க என்றவளிடம் அதோ ஐயர் மந்திரம் சொல்லி குடுப்பாரு பயப்படாத திவி என்றான் வீரவர்மன்.

அவள் அந்த பூசாரியை பார்த்து கொண்டிருந்தாள்.

அவர் அந்த தாலியை அம்பாள் கழுத்தில் காமித்து விட்டு எடுத்து வந்து மந்திரம் சொல்லி கொண்டே வீரவர்மனிடம் தாலியை கொடுக்க எல்லோரிடமும் லோகி அட்சதை அரிசியை கொடுத்து விட்டு வந்தாள்.

வீரவர்மன் அவள் கழுத்தில் மங்கள நான் சூட்ட அவள் அவன் கைகளில் தலையை சாய்த்து கொண்டு சிரித்தாள் .

அவளை பார்த்த வீரவர்மன் அவளை அணைத்து கொண்டு நின்றான்.

ஐயர் குங்குமம் கொடுக்க அவள் நெற்றியில் அவளை அணைத்தவாறு வைத்தான்.

அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் அவள் கைகளை பிடித்து கொண்டு பிரகாரம் சுற்றி வந்து அவளை உக்காரவைத்து அவனும் உட்கார்ந்தான்.

அவள் அவன் கட்டிய தாலியை பார்த்து கொண்டிருந்தாள்.

திவி என்ன தாலியையே பார்த்துக்கிட்டு இருக்க. நல்லாயிருக்கா? என்றவனிடம் . நல்லாயிருக்கு என்று சொன்னவளை பார்த்து சிரித்தான் வீரவர்மன்.

அவளுக்கு அவர்கள் செய்து எடுத்து சாப்பாட்டை எல்லோருக்கும் அவள் கையால் அன்னதானம் கொடுக்க வைத்ததும் .அவள் எல்லோருக்கும் கொடுத்து விட்டு அவன் மீது சாய்ந்து கொண்டவளை பார்த்து என்னாச்சி திவி

தூக்கம் வருது என்றவளை அழைத்து கொண்டு போய் சாப்பிட வைத்து கோயிலில் அவளை பெட்சீட் விரித்து படுக்க வைத்தான்.

சிவகாமி அவள் பக்கத்தில் வந்து உக்கார அவள் தூங்க ஆரம்பித்தாள்.

சிவகாமி எல்லோரையும் அழைத்து சாப்பிட சொன்னாள். சிவகாமியை ஐயர் கூப்பிட அவள் சென்றாள்.

திரும்பி வந்து பார்த்த போது திவ்யா அங்கு இல்லை.

அவளை காணோம் என்று வீரவர்மனிடம் சொல்ல ஆளுக்கொரு மூளையாக அனைவரும் தேடி கொண்டிருந்தார்கள்.

அவள் அப்படி எங்க போயிருப்பாள் என்று வீரவர்மன் பதட்டத்துடன் தேடி கொண்டிருந்தான்.

அவள் கோயில் பிரகாரத்தில் ஒரு கோயில் உள்ளாக அமர்ந்து பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் தாலியை பார்த்து கொண்டு அந்த சாமியை பார்த்தாள்.

அவளை அந்த கோயில் பக்கமாக வந்த லோகி பார்த்துவிட்டு திவ்யா என்று கூப்பிட எனக்கு இங்க நல்லாயிருக்கு நான் இங்க இருக்கேன் என்றவளை பார்த்து லோகி எல்லாரிடமும் சொல்லி அழைத்து வர அவள் அந்த சாமி பக்கத்தில் படுத்து கொண்டாள்.

வீரவர்மன் திவி வாம்மா வெளிய என்றதும் .இங்க சில்லுனு இருக்கு நான் இங்கயே படுத்துக்கறேன்.

அப்படியில்லை அங்க வேணாம் நாம இதை விட ஜீல்லுனு இருக்க இடத்துக்கு போகலாம் வாம்மா என்றான் வீரவர்மன்.

அவள் இதை விட ஜில்லுனு இருக்குமா ? ஆமாம் இதை விட ஜில்லுனு இருக்கும் வாம்மா என்றதும் .அவள் வெளியே வந்தாள்.

என்னப்பா இது இப்படி இருக்கு இந்த பொண்ணு இதை வச்சிக்கிட்டு எப்படி சமாளிக்கறீங்க. பைத்தியம் போலிருக்கு அதை எங்காவது மென்டல் ஆஸ்பிடல்ல சேர்க்காம இப்படி அழைச்சிக்கிட்டு வந்திருக்கீங்க என்றார்கள் கோயிலுக்கு வந்த சிலர்.

ஏம்மா வேலையை பாத்துக்கிட்டு போங்க அந்த பொண்ணை நாங்க பாத்துக்க போறோம். உங்களை பாத்துக்க சொன்ன மாதிரி இப்படி பேசறீங்க . போங்க உங்க வேலையை பாத்துக்கிட்டு என்றான் சங்கர்.

அவளை அந்த சாமிகோயிலில் இருந்து இறக்கி அவளை அழைத்து கொண்டு வந்து சாமி முன் உக்கார வைத்தான்.

நான் என்ன பண்றது இவ இப்படி ஆயிட்டாளே. நான் எப்படி இவளை பாத்துக்க போறேன் என்று நினைத்து கண்கலங்கினான் வீரவர்மன்.

டாக்டரிடம் மறுபடியும் அழைத்து போய் பார்க்க .நான் தான் சொன்னேனே அவங்க முன்பு மாதிரி இருக்க மாட்டாங்க என்று .அவங்களுக்கு அந்த விஷம் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தைத்தான் பாதிச்சிருக்கு. அவங்களுக்கு இங்க வச்சி டிரிட்மென்ட் குடுக்கறதாக இருந்தாலும் கொடுங்க. இல்ல கவர்மென்ட் ஆஸ்பிடல்ல வேணும்னாலும் சேர்த்து விடுங்க . அவங்களுக்கு உயிர் போக வேண்டியது காப்பாத்திட்டோம் . அவங்களுக்கு சரியாக நாளாகும்.

சிவகாமி அவனிடம் இங்கயே வச்சி பாத்துக்கட்டும் லோகியாவது சரளாவாவது கூட இருந்து பார்த்துக்கட்டும் வீரா என்றதும் .நான் பாத்துக்கறேன் அண்ணா நீங்க கவலைப்படாதிங்க என்றாள் லோகி.

வீரவர்மனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளுக்கு இப்படி ஆகும் என்று எதிர்ப்பார்க்க வில்லை.

அவன் அவனுடைய அதிகாரி அழைக்க அங்கு போக வேண்டியிருந்தது. எப்படி அவளை விட்டு போவது என்று கஷ்ட்டமாக இருந்தது.

வேறுவழியில்லாமல் அவன் அவளை விட்டு டெல்லிக்கு சென்றான்.

அவனை அவனுடைய மூத்த அதிகாரி வரவேற்றார். குட் ஜாப் வீரவர்மன். உங்களோட மிஷனை வெற்றிகரமாக கம்ப்ளிட் பண்ணிட்டிங்க. நீங்க அங்க ஏற்படுத்தின தாக்கம் .இப்ப அவங்க ஆட்சி கலையற நிலைமைல மேலிடம் சொல்றதை செய்ய காத்துக்கிட்டு இருக்காங்க அந்த கவர்மென்ட்.

இனிமேல் உங்க வேலையை நீங்க எந்த தடையும் இல்லாமல் செய்யலாம். நீங்க யாரை வேணாலும் எதுவேணாலும் செய்யலாம் .உங்களுக்கு மேலிடம் பர்மிஷன் கொடுத்தாச்சு.

ரொம்ப தேங்க்ஸ் சார் என்ற வீரவர்மனிடம் யுவார் சக்ஸஸ் புல் மேன் . நீங்க இப்பவும் ஆன் டூட்டில தான் இருக்கீங்க என்றவருக்கு சல்யூட் அடித்து விட்டு நின்றான் .நாங்க இன்னொரு மிஷன் செய்ய ஏற்பாடு செய்திருக்கோம். அங்க இருக்க அரசியல்வாதிங்களோட சீக்ரெட் சொன்ன மாதிரி . ஒவ்வொருத்தரும் எவ்வளவு சொத்து சேர்த்து வச்சிருக்காங்க என்று கண்டுபிடிச்சி சொல்லணும்.

இல்ல சார் இது அவங்க சீக்ரெட் கண்டுபிடிச்சிட்டோம். ஆனால் அவங்க சொத்து விவரம் எப்படி அவங்க நிறைய பினாமி பேர்ல தான சேர்த்து வச்சிருப்பாங்க. அது உங்களுக்கு தெரியாதா? மிஸ்டர் வீரவர்மன்.

இல்ல இந்த மிஷனால என் இழப்பு ஜாஸ்தியாயிடுச்சி. என் மனைவிக்கு யாரோ விஷம் கொடுத்து இப்ப மூளை பாதிக்கப்பட்டிருக்கு. அவ நல்லாயிருந்தாள். அவளை இப்படி ஆக்கிட்டாங்க. அவளை பக்கத்துல இருந்து கூட பாத்துக்க முடியாத சூழ்நிலையில இருக்கேன்.

கொஞ்சம் நாளைக்கு நான் அவ கூட இருந்து சரிபண்ணிட்டு அதுக்கப்புறம் இந்த வேலையை பாக்கறேன் சார் பிளிஸ் என்றான் வீரவர்மன்.

சரி கொஞ்சநாள் உங்களுக்கு டைம் கொடுக்கறேன். அதுக்கு முன்னாடி நீங்க முக்கியமான விஐபியை சந்திக்கணும். அவங்க தான் அடுத்து நீங்க என்ன செய்யணும்னு சொல்லுவாங்க என்றார் அவனுடைய மூத்த அதிகாரி.

இது கவர்ன்மென்ட் ஃபோர்ஸ் உருவாக்கற மிஷன் .இதோட உங்களை அனுப்பியிருக்கலாம். ஆனால் உங்களோட முந்தைய வேலை நீங்க நல்லா செய்திருக்கீங்க. அதனால மேலிடம் இந்த வேலையை உங்க கிட்ட ஒப்படைக்க சொல்லியிருக்காங்க.

உங்களுக்கு உங்க குடும்பத்துக்கு எதுவும் ஆகாம நீங்க உங்களை காத்துக்க எதுவேணாலும் பண்ணிக்கலாம். யாரும் நடவடிக்கை எடுக்காம நாங்க பாத்துக்கறோம் என்றார் அந்த மூத்த அதிகாரி.

தொடரும்.....
 
Top Bottom