என் காதல் அரக்கனோ? அழகனோ? அத்தியாயம் 22 | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் காதல் அரக்கனோ? அழகனோ? அத்தியாயம் 22

New updates

LATEST

பராசக்தி

Active member
Staff member
Joined
Oct 28, 2024
Messages
123
Reaction score
94
Points
43
அவனை விடாதீங்க வீரா அவனுக்கு தண்டனை கொடுக்கணும். அப்பதான் அவனை மாதிரி ஆளுங்க .இன்னொரு முறை உருவாக மாட்டாங்க. இன்னும் எப்படி இது போல ஆண்கள் கிட்ட பெண்கள் பயந்து பயந்து வாழனுமோ? தெரியல .அவனை வீடாதீங்க கடுமையான தண்டனை கொடுக்கணும்.

ஆசை வந்தால் எந்த பெண்ணை வேண்டுமானாலும் தொடுவானுங்களா? தொடற அந்த கையும் அவனோட கண்ணும் இருக்கக்கூடாது. அப்ப தான் எந்த பொண்ணும் பிரச்சினை இல்லாம வாழமுடியும்.

அவன் என் கஷ்ட்டடில தான் இருக்கான். நீ என்ன தண்டனை கொடுக்கணும்னு நினைக்கறியோ? அந்த தண்டனை கொடுக்கலாம்.

நீ இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடு என்று சொன்னான் வீரவர்மன்.

அவனுடைய அப்பாவும் அம்மாவும் வந்தார்கள்.

என்னப்பா ஆச்சி என்றவர்களிடம் நடந்ததை சொல்ல. அவனை மாதிரி ஆளை ஏன்தான் இந்த கடவுள் படைக்கிறானோ? என்று சிவகாமி புலம்பினாள்.

அவர்கள் போய் திவ்யாவை பார்க்க அவள் முகம் பிரகாசமானது. அப்பா அம்மா என்றவளை பார்த்து சிவகாமி கண்கலங்கினாள்.

எப்படி இருந்த பிள்ளையை இப்படி படுக்க வச்சிட்டாங்களே.

அம்மா நீங்க கவலைப்படாதிங்க வீரா இருக்கும் போது எனக்கு ஒன்னும் ஆகாது.

ஆன் அவன் இருந்தும் உனக்கு இப்படி ஆயிடுச்சே. அம்மாடி உனக்கு எவ்வளவு வலிக்கிதோ? என்று சொல்ல .வலி இருக்கும்மா எனக்காக நீங்க இருக்கும் போது அந்த வலி தெரியல என்று கண்கலங்கியவளை பார்த்து . அழாதம்மா உனக்கு இதுக்கு மேல எதுவும் ஆகாம வீரா பார்த்துப்பான். வீட்டுக்கு வந்தால் நான் பாத்துக்கறேன் என்றாள் சிவகாமி.

ஆமாம் எங்கம்மா அவனை கரண்டியாலையே அடிப்பாங்க என்ற வீராவை பார்த்து. ஆமாம் கரண்டி அருவாமனை கூட எந்த ஆயுதமும் போட்டி போட முடியாது.

அவளை பார்த்து நீ வந்ததும் சுத்தி போடணும். உன்மேல நிறைய கண் திருஷ்டி விழுந்திருக்கு.

சிவகாமி காட்டிய அன்பில் அவள் மெய்சிலிர்த்து போனாள். ருக்மணி அம்மாள் இந்த அளவுக்கு ஒட்டுதலாக அவளிடம் இருந்தது இல்லை. ஒருவேளை அப்பா மீது இருந்த பயம் கூட காரணமாக இருக்கலாம் என்று நினைத்து கொண்டாள்.அவளை இரண்டு நாளில் வீட்டுக்கு அழைத்து வந்தவன். சங்கருக்கு போன் பண்ணி கேட்டான்.

அவன் எதுவும் வாயை திறக்க மாட்டேங்கறான் அண்ணா. இப்படியே செத்தாலும் சாவான் போலிருக்கு. உண்மையை சொல்ல மாட்டேங்கறான்.

இவன் என்ன ஆளுன்னே தெரியல என்றான்.

சரி நான் வர்றேன் என்று சொல்லி விட்டு கிளம்பினான் வீரவர்மன்.

அவன் திவ்யாவிடம் நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன் என்று சொல்ல. அவனை பார்த்து சிறிய புன்னகையுடன் தலையசைத்தாள்.

அவன் அவனை அடைத்து வைத்திருக்கும் இடத்துக்கு சென்ற போது. அங்கு அவன் சோர்ந்து போயிருந்தான்.

எங்க நம்ம ஆயுதம் எடு என்று சொல்ல அவன் கையில் கத்தியை கொடுத்தான் சங்கர்.

அவன் தலையை பிடித்து கொண்டு அவன் நாக்கை இழுத்து நறுக்க போக அவன் ஆ சொல்லன் சொல்லன் என்றதும்.

ஆன் சொல்லு என்றான் கோவமாக.

திவ்யாவோட அப்பா தான் எனக்கு துப்பாக்கி கொடுத்தார். என்னை ஜாமின்ல எடுத்ததும் அவர் தான். அவரு உங்க ரெண்டு பேரையும் கொல்ல சொன்னாரு. நான் அவளை கொன்னுட்டு உன்னை போடலாம்னு பார்த்தேன். ஆனால் உங்க ஆளுங்க துரத்தினவுடன் நான் மாட்டிக்க கூடாது என்று ஓடினேன்.

ஆனால் உங்க ஆளுங்க பிடிச்சிட்டாங்க என்றவனை பார்த்து திவ்யாவையும் கொல்ல சொன்னானா? அந்த சிவராமன் .

ஆமாம் கொல்ல சொன்னாரு . உன்னை முதல்ல கொல்ல சொன்னாரு . அதுக்கப்புறம் அவங்க பொண்ணை கொல்ல சொல்லல .நீ எது வேணாலும் பண்ணிக்கன்னு சொன்னாரு. ஆனால் அவளை கொலை செய்யற அளவுக்கு வெறி இருந்ததால அவளை சுட்டேன் என்றான் சுரேஷ்.

அந்த சிவராமன் இந்தளவுக்கு போயிட்டானா? அப்ப இதுக்கு மேல அவனை சும்மா விட கூடாது.

இவனை இங்கயே அம்மணமாக கட்டி போட்டு நம்ம தொட்டியில போடுங்க . ஆளு கரைஞ்சி போகட்டும்.

இந்த வீராவோட கோர்ட்ல என்னைக்கும் யாராலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.

போ போய் அவனை அந்த தொட்டியில போடுங்க என்றான்.

அவன் அலறும் சத்தம் கேட்டது. திவ்யா அவன் சுட்டபோது ரத்தம் பெருக்கெடுத்து சரிந்ததும். அவளுடைய அம்மா தூக்கில் தொங்கியதும் .இன்னும் அவன் மனதில் ஆராத ரணமாய் பிற சம்பவங்களும் ஞாபகம் வர அவன் அங்கிருந்து கிளம்பினான்.

வீட்டுக்கு வந்த போது லோகி ஏதோ ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருக்க . திவ்யா அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு ஒரு கையை பேக் போல் கட்டியிருந்தார்கள்.

அவள் அவனை பார்த்து சிரிப்பதை நிறுத்தினாள் .

வீரவர்மன் அவளை தூக்கி கொண்டு டேன்ஸ் ஆடினான்.

அவனை பார்க்க திவ்யாவுக்கு சந்தோசமாக இருந்தது.

அவன் இல்லையென்றால் மனம் அவன் எப்போது வருவான் என்று தேட ஆரம்பித்தது. அவனை பார்த்ததும் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க அவனை பார்த்தாள்.

அவளை பார்த்தவன் அவளை தூக்கி கொண்டு ஆடினான் .

அவளை தூக்கி கொண்டு ஆடிக்கொண்டே உள்ளே போனான். அவளை படுக்கையில் படுக்க வைத்தான் வீரவர்மன்.

திவ்யா என்னை மன்னிச்சிட்டியா? என்றவனை பார்த்து ஹீம் என்றவள் .வீரா நான் உன்னை லவ் பண்றேன் என்று நினைக்கிறேன். எனக்கு உன்னை பிடிச்சத விட உங்க அப்பா அம்மாவை பிடிச்சிருக்கு. அவங்க என்னை எவ்வளவு அன்பாக பாத்துக்கறாங்க. என் அம்மா எப்படின்னு தெரியல .அப்பாவோட அன்பு கிடைக்கல . ஆனால் இவங்களை பாக்கும் போது எனக்கு இவங்ககூடவே இருக்கணும்னு தோணுது.

அவங்களோட மகன் உன்னை அவங்களுக்காக ஏத்துக்கறேன் என்றவள் இதழில் இதழ் பதித்தான் வீரா.

அவளிடம் நான் யாருக்காகவும் இல்ல. உன்னோட நல்ல மனசுக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

எல்லாரும் எனக்கென்ன என்று போய்க்கிட்டு இருந்தப்ப ஒரு பாட்டியம்மா கீழ விழுந்து கிடந்தவங்களை தூக்கி உக்கார வச்சி அவங்களை ஆட்டோவுல ஆஸ்பிடலுக்கு அழைச்சிக்கிட்டு போய் டிரிட்மென்ட் பாக்க வச்ச . அவங்க மகன் வந்ததும் .அவனை சரமாரியாக திட்டின திவ்யாவை பார்த்தேன்.

நான் அந்த பாட்டியம்மாவை தூக்க வந்தப்ப நீ வந்து அவங்களுக்கு செய்ததை பார்த்தேன். உன்னோட குணத்தை பார்த்தேன் . உன்னை பிடிக்க ஆரம்பிச்சது. அதுக்கப்புறம் குழந்தை போல அம்மா போட்டோவை வைத்து கொண்டு கோயில் குளத்தில் அழுது கொண்டிருந்ததை பார்த்தேன்.

உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதான் உன்னை கல்யாணம் பண்ணி அழைச்சிக்கிட்டு வந்துட்டேன்.

அவள் அவனிடம் அப்ப இருந்து என்னை பாலோ பண்றியா? என்றவளை பார்த்து ஆமாம் என்று அவள் மூக்கை தன் கைகளால் பிடித்து ஆட்டி என் திவ்வி குட்டி என்று அவள் இரு கன்னங்களிலும் முத்தமிட்டான் வீரவர்மன்.

ஆன் சார் என்னை பத்தி தெரிஞ்ச பிறகு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா? என்றதும் . ஆமாம் இனிமேல் உன்னை நான் எப்பவும் கஷ்ட்டப்படுத்த மாட்டேன்.

அவள் சரி பசிக்கிது ஏதாவது சாப்பிடணும் போல இருக்கு. செஸ்வான் பிரைட் ரைஸ் என்றான் வீரவர்மன்.

ஆன் சரி என்று சொல்லி விட்டு அப்புறம் அன்னைக்கு ஐஸ்கிரீம் சாப்பிடவே இல்லை என்றவளை பார்த்து சிரித்தான் வீரவர்மன்.

தொடரும்....
 
Top Bottom