என்னை சர்டிபிகேட் பயோடேட்டா வெரிஃபை பண்ண வர சொன்னாங்க. அதான் நான் போய் பாத்துட்டு வர்றேன். இதை உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லை. நீ இந்த தாலி கட்டியிருக்க இல்ல. அதுக்கு மதிப்பு குடுத்து தான் சொன்னேன். என்னால வெளியே ஒரு மாதிரியும் உள்ளே ஒரு மாதிரியும் நடந்துக்க தெரியாது என்று ஃபைலையும் பேக்கையும் எடுத்து கொண்டு கிளம்பினாள் திவ்யா.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் வீரவர்மன். பாதிக்கப்பவளின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் வன்மையாக இல்லாமல் மென்மையாக சொன்னது. அவனுக்கு நேற்று தான் அவளிடம் நடந்துகொண்டதை நினைத்து அருவருப்பாக இருந்தது.
அவள் வெளியே போனபோது யாருக்கும் தெரியாமல் இருக்க சாதாரணமாக நடக்க மெதுவாக நடந்தாள்.
சிவகாமி அவளிடம் எங்கம்மா போற என்றதும். ஒரு இடத்துல என் வேலைக்காக சர்டிபிகேட் வெரிஃபை பண்ண போறேன் அம்மா. நான் போயிட்டு வர்றேன். இரும்மா சாப்பிட்டு போம்மா என்றதும். இல்லம்மா பசியில்ல நான் சீக்கிரம் போகணும் வர்றேன் என்று கிளம்பியவளையே பார்த்து கொண்டிருந்தாள் சிவகாமி.
இவ்வளவு நாள் அந்த பொண்ணு முகத்துல ஒரு சந்தோசம் இருந்தது. இன்னைக்கு இல்லை என்பதை கவனித்தாள். என்னாச்சி இந்த புள்ளைக்கு ராத்திரியும் சாப்பிடல. இப்பவும் சாப்பிடாம போகுது என்று நினைத்து கொண்டாள் சிவகாமி.
அவள் போனதும் வீரவர்மன் வர ஏம்பா அந்த பொண்ணுக்கு என்னாச்சி வந்து நாலஞ்சி நாள் நல்லதான இருந்துச்சி. இப்ப அது முகத்துல ஏதோ சோகமாக இருக்க மாதிரி தெரியுது.
அதை விடும்மா பசிக்கிது டிபன் எடுத்து வை என்றான் வீரவர்மன்.
அவனுக்கு டிபன் கொடுத்து சாப்பிட்டதும். எங்க நீயும் சாப்பிடாம விட்டுடுவியோன்னு பாத்தேன் .அந்த பொண்ணு நேத்து ராத்திரி கூட சாப்பிடல . இப்பவும் வேணாம்னு போயிடுச்சி என்றதும் . அவனுக்கு அவன் மீதே கோவம் வந்தது.
அந்த பொண்ணு பாவம் அது நேத்து கூட சாப்பிடல . என்ன மாதிரி மனுசன் நானு . திவ்யா சொன்ன மாதிரி அவங்கப்பனை போலவே ஆயிட்டேனா? எனக்கு இதுதான் நிஜமான முகமா? என்று அவனையே கேட்டு கொண்டான். லோகி கூட போனாளா? என்றதும். லோகியும் சரளாவும் ஏர்ப்போர்ட்ல உங்கப்பாவை பிக்கப் பண்ண போயிருக்காங்க.
திவ்யா மட்டும் தான் போயிருக்கு. சேகரும் சங்கரும் இங்க அப்பா யாரையோ அழைச்சிக்கிட்டு வர சொன்னதாக போயிருக்காங்க.
அப்ப திவ்யா கூட யாரும் போகலையா? என்றவனிடம் .இல்லப்பா திவ்யா தனியாகத்தான் போயிருக்கு.
அவன் அவ எந்த கம்பெனி பேரோ? சொன்னாளே என்று நினைத்தவன். ஆன் எப் சி கம்பெனி ஹைவேல என்று நினைத்து வேகமாக போய் வேறு உடை அணிந்து கொண்டு கிளம்பினான்.
அவன் வேகமாக போவதை பார்த்து அவளுக்கு பதட்டமாக இருந்தது. காலையில் சாமி கும்பிடும் போது விளக்கு அணைந்தது. கடவுளே யாருக்கும் எதுவும் ஆகாம நீதான் காப்பாத்தணும் என்று நினைத்து கொண்டே அமர்ந்திருந்தாள்.
திவ்யா போன போது அங்கு எந்த ஆபிசும் இல்லை .ஒரு பில்டிங்கில் கன்ஸ்டிரக்ஷன் வொர்க் நடந்து கொண்டிருந்தது. ஹாய் வாம்மா கல்யாண பொண்ணு உங்கப்பன் எவனோ ஒரு அனாதை பயலுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டானாமே. உன்னை எப்படியாவது பிடிக்கணும்னு பாத்தேன். உன் மெயில் ஐடியை வச்சி உன்னை பிடிச்சிட்டேன்.
அதாவது உங்கப்பனுக்கும் எனக்கும் பழைய கணக்கு ஒன்னு இருக்கு . அதை விட இப்ப புதுசாக உன் புருஷன் என் கணக்கை மறுபடியும் தூசி தட்டி எடுத்து என்னை மறுபடியும் மந்திரி பதவியில இருந்து கீழ இறக்கற எவிடென்ஸ் எல்லாம் கையில வச்சிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கான். அதான் என் சம்மந்தப்பட்ட எவிடென்ஸ் எல்லாம் வாங்கணும்னால் உன்னை தூக்கணும். உன்னை தூக்கினால் அவன் அந்த எவிடென்ஸை எடுத்து வந்து கொடுத்துடுவான்.
ஹீம் தப்பு கணக்கு போட்டிங்க சதாசிவம் அங்கிள். அவனும் உங்களை மாதிரி தான் எனக்கு என்ன ஆனாலும் கவலைப்படமாட்டான். அவன் என்னை நேத்து சாகடிக்க பார்த்தான். நீங்க என்னை என்ன பண்ணாலும் அவங்கிட்ட இருந்து எந்த எவிடென்ஸும் வாங்க முடியாது.
என்னை கடத்தி கொல்லணுமா? அவன் என்னை கொன்றாலும் அவன் உங்களுக்கு எந்த எவிடென்ஸும் தரமாட்டான் என்று சொன்னதை அங்கு வந்த வீரவர்மன் கேட்டான்.
உன்னை கொல்வது என் நோக்கம் இல்ல .அவன்கிட்ட எவிடென்ஸ் வாங்கணும். அடம்பிடிக்காம எங்கூட வா என்றவரை பார்த்து . நான் வர்றேன் என்று அவருடன் காரில் ஏறி அமர்ந்தாள்.
வீரவர்மனுக்கு அவளை எப்படி காப்பாத்துவது. எவிடென்ஸ் இல்ல இவனுங்க கிட்ட எதுவும் கொடுக்க மாட்டேன். அவளை காப்பாத்தனும். நேத்து நான் கொஞ்சம் அமைதியாக இருந்திருந்தால் இவள் இப்படி நடந்திருக்க மாட்டாள். நான் என்ன பண்றது என்று அங்கு வந்த ஆட்டோவில் ஏறி அந்த காரை பாலோ செய்தான் வீரவர்மன். அவன் யாருக்கோ? போன் செய்து கொண்டே போனான்.
அவருடைய பேக்டரியில் கொண்டு போய் அவருடைய ஆட்களை பார்த்து. இந்த பொண்ணை இங்க பாத்துக்கங்க. நான் இவ புருஷன்கிட்ட பேசிட்டு வர்றேன் என்று போனவர். வீரவர்மன் அந்த குடோனுக்கு வந்துகொண்டிருக்க. அவன் போன் ஒலிக்க ஹலோ என்றவனிடம் . நான் மந்திரி சதாசிவம் பேசறேன். என்னோட எவிடென்ஸ் எல்லாம் நீ வச்சிருக்கன்னு தெரியும். உன்னோட புது பொண்டாட்டி என்கிட்ட ஒழுங்காக உன்கிட்ட இருக்க அந்த எவிடென்ஸை கொடுத்துடு. இல்ல உன் பொண்டாட்டி நாளைக்கு காலையில பிணமாக இருப்பாள்.
சரி சரி இதை கேளு நானும் உன்னோட பொண்ணு ராகினி இல்ல. அவளை என் பசங்க தூங்கிட்டாங்க. நான் வீடியோ அனுப்பறேன் பாக்கறியா? அவன் அங்கு மந்திரி சதாசிவத்தை பார்த்தவுடன் குமாரிடமும் சபரியிடமும் மந்திரி பெண் படிக்கும் காலேஜிக்கு போய் மந்திரிக்கு ஆக்ஸிடென்ட் என்று அழைத்து வர வைத்து காரில் கைகால்களை கட்டி வைக்க சொல்லி இருந்தான். அந்த பொண்ணை வீடியோவில் காமிக்க இங்க பாரு என்றதும் . என் பொண்ணை விட்டுடு . நான் உன் மனைவியை விட்டுடறேன் என்றதும் . என் மனைவியை எங்கிருந்து அழைச்சிக்கிட்டு வந்தியோ? அங்க கொண்டு போய் விட்டு திரும்பி பாக்காம போய்க்கிட்டே இரு என்றதும்.
திவ்யாவை அழைத்து வந்து அந்த பில்டிங் வாசலில் விட்டுவிட்டு சென்றான் சதாசிவம்.
அந்த கார் மறைந்த பிறகு வீரவர்மன் ஜீப்பில் வந்து ஏறி உக்காரு என்றான்.
அவள் ஏறி அமர்ந்ததும் வீரவர்மன் போய் கொண்டிருக்கும் போதே அந்த பொண்ணை கொண்டு போய் விட்டுடுங்க என்றதும் .அந்த பெண்ணை அவர்கள் வீட்டு தெருவில் இறக்கி விட்டு போனார்கள்.
ராகினி வீட்டுக்கு போனதும் சதாசிவம் உனக்கு ஒன்னும் ஆகல இல்ல என்றவரிடம். ஒன்னும் ஆகல பயமாக இருந்தது. அப்புறம் அவங்க என்னை கட்டி போட்டிருந்தாங்க. வேற ஒன்னும் பண்ணல என்றாள் ராகினி.
வீரவர்மன் அவளை பார்த்து உனக்கு வேலைன்னு போனால் இப்படி தான் நடக்கும். நீ வீட்டுல இரு நானே நல்ல ஆபிசாக பார்த்து சொல்றேன் என்றதும். அவள் அவன் சொல்வதை எதுவும் கேக்காததுபோல் வந்தாள்.
தொடரும்...