என்ன மாயம் செய்தாயோ | ஆனந்த ஜோதி நாவல்கள்
What's new

xentr_guest_message_title ஆனந்த ஜோதி நாவல்கள்

xentr_guest_message_description
ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் ananthajothi2244@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்ன மாயம் செய்தாயோ

New updates

LATEST

santhi nagaraj

Active member
Joined
Jun 17, 2024
Messages
287
Reaction score
201
Points
43
#ஜோதிதமிழ்_குறுநாவல்ஸ்_போட்டி

#என்ன_மாயம்_செய்தாயோ

#விமர்சனம்

நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த நாயகி யாழினி.அவளுடைய பெற்றோர் படிப்பு முடித்தவுடன் அவளுக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்ய யாழினி வேலைக்கு சென்று கொண்டே மேற்படிப்பு படிக்க ஆசைப்படுகிறாள் அதன்படி பெற்றோரிடம் அனுமதி வாங்கி வேலைக்கும் செல்கிறாள்.

எதிர்பாராத விதமாக யாழினி வேலை இடத்தில் நாயகன் கவினை சந்திக்க முதல் பார்வையிலேயே கவினுக்கு அவளின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்படுகிறான் உடனே மனதில் இருப்பதை அவளிடம் தெரிவிக்கவும் செய்கிறான். காதலில் தனது விருப்பமின்மையை அவனை காயப்படுத்தும் விதமாக தெரியப்படுத்துகிறாள் நாயகி.

இந்நிலையில் சில எதிர்பாராத சூழ்நிலையினால் பெற்றோரின் கட்டாயத்தில் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை யார் என்றே தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறாள் யாழினி.

கவின் வீட்டிலும் அவனின் பெற்றோர்கள் அவனுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்கின்றார்கள்.

இருவரின் திருமணம் யாரோடு?
இவர்களின் திருமண வாழ்க்கை எவ்வாறு அமைகிறது என்று கதை ரொம்ப சுவாரசியமாக நகர்கிறது.

படிப்பில் பின் தங்கிய பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு அவர்களை தத்தி தத்தி என்று மட்டம் தட்டாமல் உங்களால் முடியும் என்று ஊக்கப்படுத்தி பயிற்றுவித்தால் நல்ல முன்னேற்றத்தை அவர்களிடம் கொண்டு வரலாம் என்ற கருத்தை ரொம்ப நல்லா எடுத்து சொல்லி இருக்காங்க.

வாழ்க்கையின் இன்பம் அழகிலோ பணத்திலோ இல்லை நல்ல குணத்தில் இருக்கு.
எல்லா இடத்திலும் அடங்கிப் போகாமல் நமக்கான தேவைகளை நாமே பேசி பெற்றுக்கொண்டு நம்ம தன்மானத்தை காத்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல கருத்தையும் எடுத்துச் சொல்லி இருக்கிறார் எழுத்தாளர்.

புரிதலற்ற வாழ்க்கை இணைவில் இருவரும் கோபத்தோடு பேசி மண முறிவை நோக்கி போகாமல், தங்களுடைய பிரச்சனைகளை மன உணர்வுகளை பேசி தீர்த்து காதலுடன் வாழ்வது அருமை 👌👌👌

நல்ல தெளிவான எழுத்து நடையுடன் கதை ரொம்ப நல்லா இருந்தது சூப்பர்👌👌
வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top Bottom