Gayathri Senthil
New member
- Joined
- Jun 16, 2026
- Messages
- 19
- Reaction score
- 24
- Points
- 3
என் நிம்மதிக்கு என்ன வழி?
புக்கிட் ஜலில் நேஷனல் ஸ்டேடியத்தில் அந்தப் பிரம்மாண்டமான கான்சர்ட் நடந்து கொண்டிருந்தது.
மேடையின் நடுவே, ஸ்பாட்லைட் வெளிச்சத்தில் கௌதம் தன் முழு உணர்ச்சிகளையும் கொட்டிப் பாடிக்கொண்டிருந்தான்.
அது சாதாரணப் பாட்டு அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னால், இருவரும் காதலில் திளைத்திருந்த காலத்தில், சஹானாவின் பிறந்தநாளுக்காகக் கௌதம் தன் கைகளால் இசையமைத்து, அவளது விரல்களைப் பிடித்தபடி பாடிய அதே காதல் பாடல்!
கௌதமின் காந்தக் குரலில் இருந்து வெளியான ஒவ்வொரு வார்த்தையிலும் காதலும், பிரிவின் வலியும், ஆறாத ஏக்கமும், ஆத்திரமும் ஒன்றாகக் கலந்து வெளிப்பட்டன.
அவனது கண்கள் மேடையின் பின்புறம் திரைக்குப் பின்னால் நின்றிருந்த சஹானாவையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தன.
அரங்கம் முழுவதும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அந்தப் பாட்டின் வரிகளிலும், கௌதமின் உணர்ச்சிப்பூர்வமான குரலிலும் மெய்மறந்து, அமைதியாக இசையைக் ரசித்து கொண்டிருந்தனர்.
ஆனால், மேடையின் பின்புறம் நின்றிருந்த சஹானாவால் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை!
அவளது பிறந்தநாளில், அவள் தோள் மீது தலை சாய்த்து கௌதம் இந்த வரிகளைப் பாடிய பழைய நினைவுகள் அவளது மனக்கண்ணில் நிழலாடின.
நெஞ்சைப் பிளக்கும் அந்த வலியோடு, அவளது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கன்னங்களில் வழிந்து இறங்கியது. அழுகை தன் கட்டுப்பாட்டை மீறி வெளிப்பட்டுவிடும் என்பதால், அமைதியாகத் தலையைக் குனிந்து கொண்டு தன் கண்ணீரைத் துடைக்க முயன்றாள்.
அங்கிருந்த அனாமிகாவிற்கு இதையெல்லாம் பார்க்கப் பார்க்க வயிற்றெரிச்சலும் கடுப்பும் உச்சக்கட்டத்தை அடைந்தது.
சஹானாவின் கண்ணீரும், கௌதமின் பாடலில் இருந்த ஆழமான உணர்ச்சியும் அவர்களுக்குள் ஏதோ ஒரு பெரிய பிளாஷ் பேக் இருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்தியது.
'கௌதம்... நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? உங்க ரெண்டு பேர் பாஸ்ட் அது முடிஞ்சு போன விஷயம். இனி உன்னோட பிரஸண்ட், ஃபியூச்சர் எல்லாமே நான் மட்டும்தான்! யாரையும் அதுக்கு நடுவுல வர விடமாட்டேன்!' என்று மனதுக்குள் பல்லைக் கடித்தபடி, கடுப்புடன் ஆத்திரத்தை விழுங்கினாள் அனாமிகா.
உடனடியாகத் தன் மொபைல் போனை எடுத்து ஒரு நபருக்கு அழைத்தாள்.
"இங்க என்ன நடந்துட்டு இருக்கு தெரியுமா?" என்று ஆத்திரத்துடன் தொடங்கியவள், மறுமுனையில் பேசியவர் கூறியதைக் கேட்டு, "உடனே கிளம்பி வாங்க... இன்னும் ஒரு வாரத்துல இங்க நடக்குற ஃபங்ஷன் முடிஞ்சிடும். அதுக்குள்ள கௌதம்க்கும் எனக்கும் கல்யாணம் நடந்தாகணும்! இங்கிருந்து போனா அவன் கூட நான் மனைவியாத்தான் வருவேன்!" என்று கட்டளையிட்டு காலை கட் செய்தாள்.
அரங்கத்தில் மேலும் சில பாடல்களைப் பாடி முடித்தான் கௌதம். கான்சர்ட் முடிந்து அரங்கம் முழுவதும் "கிரிஷ்... கிரிஷ்..." என்ற ரசிகர்களின் ஆரவாரக் குரல்கள் விண்னைப் பிளந்தன.
கான்சர்ட் முடிந்ததும் அவனால் சஹானாவை உடனடியாக நெருங்க முடியவில்லை. ரசிகர்களின் கூட்டமும், ஸ்பாட்லைட் வெளிச்சங்களும் அவளுக்கு மிகவும் புதிதாகவும் தர்மசங்கடமாகவும் இருந்தன.
கௌதம் உடனே தீபக்கிடம் சொல்லி, சஹானாவைப் பேக்ஸ்டேஜிற்கு அழைத்துச் செல்லப் பணித்தான்.
பேக்ஸ்டேஜில் லிசாவும், தீபக்கும் சஹானாவுடன் இருந்தனர்.
அங்கேயும் அனாமிகாவிடமும், கௌதமிடமும் ரசிகர்கள் ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டிருந்தனர். அந்த பிரம்மாண்டமான ஸ்பாட்லைட் சூழலிலிருந்து தப்பிக்க நினைத்த சஹானா, தூங்கிக் கொண்டிருந்த தன் மகன் ஸ்வரனைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தாள்.
"லிசா... நாம இங்கிருந்து போயிடலாம்," என்றாள் சஹானா.
"ஏன் சஹானா? நீ அவர் கூட போகலையா?" என்று லிசா குழப்பத்துடன் கேட்க,
"இல்ல நான் போல... இங்க இருக்கிறது எனக்கும் என் பையனுக்கும் சேஃப் கிடையாது," என்று உறுதியாகச் சொன்னவள், கௌதம் கவனிக்காத நேரமாகப் பார்த்து, பின்பக்க வழியிலேயே எஸ்கேப் ஆனாள்.
ஒருவழியாகக் கேப் புக் செய்து லிசாவை அவளது ஹாஸ்டலில் இறக்கிவிட்டு, டிராஃபிக்கில் மாட்டி அவஸ்தைப்பட்டுத் தன் அப்பார்ட்மெண்டிற்கு வந்து சேர்ந்தாள் சஹானா.
ஆனால், தன் வீட்டின் வாசலுக்கு வந்தவளுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது! கதவு ஏற்கனவே திறந்திருந்தது.
'என்னடா இது... பூட்டிய கதவு திறந்திருக்கு? ஏதாவது திருடன் உள்ள வந்துட்டானா?' என்ற பயத்துடன் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அங்கே... வரவேற்பறை சோபாவில் கால் மேல் கால் போட்டு கம்பீரமாக உட்கார்ந்திருந்தான் கௌதம்!
டிராஃபிக்கில் மாட்டி அவஸ்தைப்பட்டு வந்தவளுக்கு முன்பாகவே அவன் அங்கு வந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்து சஹானா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
அவளைப் பார்த்ததும் கௌதமன் கோபத்துடன் எழுந்தான்.
"என்ன மேடம்? என்கிட்ட இருந்து திரும்பவும் அவ்வளவு சீக்கிரம் தப்பிச்சிரலாம்னு நினைச்சீங்களா? ஒரே தப்ப திரும்பத் திரும்ப பண்ணா நான் என்ன அப்படியேவா இருப்பேன்? திரும்பவும் என்னை ஏமாத்த முடியாது சஹானா!" என்று கர்ஜித்தபடி அவளை நோக்கி வந்தான்.
அவன் கோபத்தைக் கண்டு சஹானா இரண்டடி பின் நகர, அவள் கையில் உறங்கிக் கொண்டிருந்த ஸ்வரனை சட்டென்று வாங்கினான்.
அருகில் இருந்த சோபாவில் குழந்தையை ஜாக்கிரதையாகப் படுக்க வைத்தவன், அடுத்த கணமே சஹானாவின் கழுத்தைப் பிடித்து நெரித்தான்!
"உனக்கு நான் திரும்பத் திரும்ப வார்ன் பண்ணிக்கிட்டு இருக்க மாட்டேன்! ஓஹோ... அந்த சாங் பாடின உடனே பழைய காதல் அப்படியே உன்மேல பொங்கி வழியுது... என்ன பண்ணினாலும் நான் அப்படியே இருந்துருவேன்னு நினைச்சியா? அது கனவுலதான் நடக்கும்!
நான் எந்த அளவுக்கு அந்த காதலை மறக்கலையோ... அதே அளவுக்கு நீ எனக்கு கொடுத்துட்டு போன வலிகளையும் நான் மறக்க மாட்டேன்! புரிஞ்சுதா?"
அவன் பிடியில் திணறியவளை விட்டு விலகியவன்,
"இங்க வேற ரூம் இருக்கா?" என்று கேட்டான்.
எதற்கு கேட்கிறான் என்று புரியாமல், "இருக்கு..." என்று மெதுவாக முணுமுணுத்தாள்.
"ஸ்வரன் எங்க படுப்பான்?"
"நானும் ஸ்வரனும் உள்ளதான் படுப்போம்..." என்று குழப்பத்துடன் சொன்னவள், குழந்தையைத் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றாள்.
அந்த அப்பார்ட்மெண்டில் இரண்டு பெட்ரூம்கள் இருந்தன. ஒரு கட்டிலில் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தவளை, அடுத்த அறைக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான் கௌதம்.
"இதெல்லாம் சரி... பட் எனக்கு இடம் எதுவா இருந்தாலும் ஓகேதான். இன்னைக்கு மார்னிங் உன்கிட்ட ஒரு டீலிங் பேசினேனே... மறந்துட்டியா?"
அவள் என்னவென்று புரியாமல் விழிக்க, அவனது அடுத்த வார்த்தை அவளை உலுக்கியது.
"டுநைட் ஐ நீட் யூ!"
அவள் அதிர்ந்து போய் விழிகளை விரித்தாள். இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
"என்ன... சாஸர் மாதிரி கண்ணை விரிக்கிற? ஓஹோ... மறந்திருப்பேன்னு நினைச்சியா? உன் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் என்னால மறக்க முடியல..." என்று கூறியவன், அவளை இழுத்துக்கொண்டு கட்டிலில் தள்ளினான்.
"கௌதம்... வேணாம் ப்ளீஸ்..." என்று அவனிடமிருந்து விடுபடப் போராடினாள் சஹானா.
ஆனால், இப்போது கௌதம் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை. இத்தனை வருடங்களாகத் தன் மனதிற்குள் பூட்டி வைத்திருந்த கோபத்தையும், ஏமாற்றத்தையும், வேறெந்தப் பெண்ணாலும் தூண்ட முடியாத தன் அடக்கப்பட்ட உணர்ச்சிகளையும் வேட்கையாகவும், ஆத்திரமாகவும் அவளிடம் மட்டுமே காட்டினான்.
அந்த அறை முழுவதும் அவர்களின் கூடல் சத்தங்களே நிறைந்திருந்தது... ஆனால் அது காதலால் அல்ல! வெறும் கோபத்தாலும், மிருகத்தனமான காமத்தாலும் மட்டுமே நிறைந்திருந்தது.
தன் கோபத்தையும் ஆசையையும் அவளிடம் தீர்த்துக் கொண்டவன், ஆடை அணிந்து எழுந்து சென்று குளியலறைக்குள் நுழைந்தான். குளித்து முடித்து வெளியே வந்தவன், ஸ்வரன் படுத்திருந்த அறைக்குச் சென்று அவன் அருகில் படுத்துக் கொண்டான்.
அங்கே... உடல் முழுவதும் கடுமையான வலியுடனும், மன உளைச்சலுடனும் அழுது கொண்டே படுத்திருந்தாள் சஹானா. வெறித்த பார்வையுடன் விட்டத்தைப் பார்த்தபடி கிடந்தவளுக்குப் பழைய நினைவுகள் நிழலாடின.
இதற்கு முன் அவர்களின் காதல் தேடல்களும், அணு அணுவாய் அவளைக் காதலோடு அரவணைத்த அவர்களின் கூடல்களும் நினைவில் வந்து போயின. இன்றோ... அது வெறும் உடல் தேவைக்காக மட்டுமே நிகழ்ந்திருக்கிறது என்பதை நினைத்து அவளது இதயம் வெடித்துச் சிதறியது.
'இந்த வேதனைகள் எல்லாம் என்றுதான் நீங்குமோ?' என்று தனக்குத்தானே நொந்து கொண்டவள், மெதுவாக எழுந்து சென்று குளித்துவிட்டு, உடைகளை மாற்றிக் கொண்டு ஸ்வரன் படுத்திருந்த அறைக்கு வந்தாள்.
அங்கே உடைகளை சீர்செய்து கொண்டிருந்த கௌதம், அவளைப் பார்த்ததும் கட்டளையிடும் குரலில் சொன்னான், "சீக்கிரம் ரெடியாகு. நாளைக்கு எனக்கு வேற கான்செர்ட் இருக்கு, நான் போகணும். நீயும் என்கூட வர... இல்லைனா அவனைத் தூக்கிட்டுப் போவேன்! குழந்தை வேணும்னா ஒழுங்கா வா..."
அவன் மிரட்டல் அவளுக்கு கடும் எரிச்சலைத் தந்தது.
ஆனால், இப்போது அவனிடம் கோபத்தைக் காட்ட முடியாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள்.
தன் குரலைத் தாழ்த்தி, கெஞ்சும் குரலில், "ப்ளீஸ் கௌதம்... எங்களை விட்டுடுங்க. நான் ஒரு நிம்மதியான வாழ்க்கையைதான் விரும்புறேன். எனக்கு எதுவும் வேண்டாம், யாரும் வேண்டாம். என் பையனும் நானும் இப்படியே இருந்துடுறோம்... ப்ளீஸ்!" என்று கண்ணீருடன் கேட்டுக்கொண்டாள்.
அதைக் கேட்ட கௌதம் அவளைப் பார்த்த பார்வையில் சஹானாவின் வார்த்தைகள் தொண்டையிலேயே அடைத்துக் கொண்டன.
அவளை நோக்கி அடிமேல் அடிவைத்து நெருங்கி வந்தவன், அவள் முகத்தருகே குனிந்து, ஆழமானக் குரலில் கேட்டான்.
"நீ நிம்மதியா வாழ விரும்புறியா? சரி... இத்தனை வருஷம் உன்னால நான் தொலைச்ச நிம்மதிக்கு என்ன பதில்? அந்த நிம்மதியை என்ன பண்றது? நான் எங்க போறது?!"
அவன் கேட்ட அந்தக் கேள்வியின் கனத்திலும், அவனது உடைந்த கோபக்குரலிலும் உறைந்து போய் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சஹானா.
அவனால் ஏற்பட்ட காயங்களை விட, அவன் கேட்ட இந்தக் கேள்வி அவளது இதயத்தை ஆழமாகப் பிளந்தது.
அதே நேரத்தில்...
மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் ஒரு புதிய காரின் கதவு திறக்கப்பட்டது.
அனாமிகா அவசர அவசரமாக போன் போட்டுக் கூப்பிட்ட அந்த நபர், கௌதமின் தாய் மீனாட்சிம்மா!
தன் கையில் சிறிய பயணப் பையுடன், முகத்தில் தீவிரமான சிந்தனையோடு ஃப்ளைட்டிலிருந்து இறங்கி வெளியே வந்தார் மீனாட்சி
"அனாமிகா... நான் மலேசியா வந்துட்டேன். கௌதம் எங்க இருக்கான்? நீ சொன்னது உண்மையா?" என்று போனில் அதிகாரமான குரலில் கேட்டபடி, ஹோட்டல் நோக்கிப் புறப்பட்ட காரில் ஏறினார்.
அனாமிகாவின் முகத்தில் சதிப் புன்னகை பூத்தது. 'இனிமேல் ஆட்டம் என் கைக்கு வரும் சஹானா!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
தொடரும்.